உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நினைவில் கொள்!
by M.M.SENTHIL Yesterday at 11:14 pm

» சினிமா பாடல் வரிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:57 pm

» போர் விமானத்தில் சிந்து பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:23 pm

» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:21 pm

» அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:19 pm

» முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:18 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» நீதி மன்ற துளிகள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:11 pm

» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:30 pm

» எந்த கோயிலில், என்ன பலன்?! -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:25 pm

» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்! பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» மோக முள்
by Monumonu Yesterday at 10:56 am

» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Yesterday at 9:10 am

» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 am

» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Yesterday at 7:22 am

» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:47 pm

» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:29 pm

» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:18 pm

» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Fri Feb 22, 2019 8:55 pm

» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Fri Feb 22, 2019 8:36 pm

» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 8:15 pm

» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 8:11 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 7:59 pm

» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Fri Feb 22, 2019 7:38 pm

» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Fri Feb 22, 2019 7:29 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 6:48 pm

» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 3:23 pm

» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:12 pm

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Fri Feb 22, 2019 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Fri Feb 22, 2019 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Fri Feb 22, 2019 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Fri Feb 22, 2019 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm

Admins Online

மடோனா

மடோனா

Post by Admin on Mon Feb 23, 2009 1:51 am


மடோனா

1958, ஆகஸ்டு 16-ம் தேதி அமெரிக்காவின் மிச்சிகன்; மாகாணத்தில் ரோசெஸ்டர் என்கிற ஊரில் ஒரு குழந்தை பிறந்தது. பெண் குழந்தை. சுண்டி இழுக்கிற அழகும் சொக்க வைக்கிற புன்ன கையுமாக அந்தக் குழந்தையைப் பார்த்த அத்தனை பேரும் அப்போதே கிறுகிறுத்து நின்றார்கள். பதினாறு வயதில் அவள் நிச்சயம் ஒரு நடிகையாகி விடுவாள் என்று சொன்னார்கள்.

அந்தப் பெண் பின்னாளில் பெரிய பாடகி யானாள். சிறந்த நடிகை என்றும் பேர் எடுத்தாள். அமெரிக்காவையல்ல ஒட்டுமொத்த உலகையே தன் கவர்ச்சியால் கட்டிப் போட்டாள். தானே ஒரு மீடியா கம்பெனியையும் ஆரம்பித்து திரைப் படங்களும் தயாரித்தாள். நாற்பது வயது நிறை வதற்குள் சில கணவர்கள், இரண்டு குழந்தைகள் என்று ஒரு ரவுண்டு அடித்துவிட்டு இன்றைக்குத் தன் புகழின் அதிகபட்ச சாத்தியத்தைப் பார்த்து விட்ட திருப்தியுடன் சௌக்கியமாக செட்டில் ஆகிவிட்டார். அவர் பேர் மடோனா. மடோனா லூயிஸ் சிக்கோன் என்பது முழுப் பெயர்.

இந்தியாவுக்கு எம் டி.வி வந்த புதுசில் இளசுகள் அத்தனை பேரும் மடோனா பைத்தியம் பிடித்து அலைந்தது நினைவுக்கு வருகிறதா? அந்த ஆட்டமும், பாட்டும், கவர்ச்சியும் சுண்டி இழுக்காத ஆட்களே இல்லை.

ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் மடோனாவின் ரசிகர்களில் சரி பாதி பேர் பெண்கள்! துளி பொறாமை யும் படாமல் மடோ னாவை ஒரு நடமாடும் தேவதையாக எல்லா பெண்களாலும் ஏற்க முடிந்தது ஆச்சர்யம்தான். அவரது திறமை அப்படிப்பட்டது.

சாதாரணமானதொரு நடுத்தரக் குடும்பத்தின் மூத்த மகளாகப் பிறந்த மடோனாவுக்கு மொத்தம் எட்டு சகோதர, சகோதரிகள். அவரது ஐந்தாவது வயதிலேயே மார்பகப் புற்றுநோய் காரணமாக மடோனாவின் தாயார் இறந்துவிட, குழந்தை களை கவனிப்பதற்காக அவரது தந்தை, ஜோன் என்கிற பெண்மணியை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டார். மடோனாவுக்கு அப்பாவை ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது. ரொம்பக் கண்டிப்பானவர் அவர்.

இந்த லட்சணத்தில் ஒரு சித்தியை வேறு கூட்டிக் கொண்டு வந்தால் எந்தப் பெண்ணுக்கு வீடு பிடிக்கும்?
பொறுப்பாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு, ஓய்ந்த நேரத் தில் படித்து, கிடைத்த நேரத்தில் நடன வகுப்புக்குப் போய்க்கொண்டு எப்படியோ தன் காலத்தை ஓட்டினாள்.

ஆனால் நடனமும், பாட்டும் அவளையறியாமல் அவளை உள்ளுக்கு இழுக்கத் தொடங்கின. மடோனாவிடம் அசாத்தியமானதொரு திறமை இருந்தது. சுண்டியிழுக்கும் அழகு வேறு. அதற்கு மேல் என்ன வேண்டும்?
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மடோனா

Post by Admin on Mon Feb 23, 2009 1:52 am

மடோனா, நீ மட்டும் நியூயார்க்குக்குப் போய் தியேட்டர்களில் வாய்ப்புப் பிடித்து விட்டால் ரொம்ப சீக்கிரம் மிகப்பெரிய பாடகி ஆகி விடுவாய் என்று நண்பர்கள் அவளை ஊக்கு வித்தார்கள்.மடோனாவுக்கும் ஆசைதான். ஆனால் அவளால் அப்போது உள்ளூரில் இருந்த ஒரு கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்துக்கு மட்டுமே போக முடிந்தது.
ஆனால் மடோனாவின் நடன ஆசிரியை மட் டும் உறுதியாகச் சொன்னாள் உனக்குப் போக வேண்டும் என்று விருப்பமிருக்கிறதல்லவா? போனால் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறதல்லவா? வாய்ப்புக் கிடைத்தால் ஜெயிக்க முடியும் என்கிற உறுதி இருக்கிறதல் லவா? பிறகு யார் சொல்லுவதையும் பொருட் படுத்தாதே. நியூயார்க் புறப்படுகிற வழியைப் பார்.

ஆகவே மடோனா ஒரு முடிவுக்கு வந்து நியூயார்க் புறப்பட்டார். வீட்டில் சொல்லிக் கொள்ள வில்லை. தனது எளிமையான நடன உடைகளையும் முப்பத்தஞ்சு டாலர் பணத்தையும் எடுத்துக் கொண் டாள். முன்னதாக நடன ஆசிரியையின் உதவியால் விமான டிக்கெட் மட்டும் எப்படியோ கிடைத்து விட்டது.

இந்த லட்சியத்துடன் நியூயார்க் வந்திறங்கிய மடோனாவை அந்நகரின் ஒதுக்குப்புறமான சேரிப்பகுதி அன்புடன் வரவேற்றது. பின்னே? அவரிடம் இருந்த காசுக்கு வேறெங்கு அறை கிடைக்கும்? படு மட்டமானதொரு ஒற்றை அறையை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு, ஆல் வின் எய்லி என்கிற நடன-நாடக நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு ஒரு ஆடிஷனுக்கு அப்ளை செய்தார்.

அதிர்ஷடவசமாக மடோனாவுக்கு உடனேயே அந்த தியேட்டரின் மாதாந்திர ஸ்காலர்ஷிப் கிடைத்து விட்டது. ஆகவே நியூயார்க்கில் தங்கு வதற்குப் பிரச்சினையில்லை என்றானது. ஒரு நாளைக்குப் பதினெட்டு மணி நேரம் அங்கே கடுமையான நடனப் பயிற்சிகள் மேற்கொண்டு, மிஞ்சிய நேரத்தில் பார்ட்; டைமாக ரெஸ்டாரண்டு
களில் பாத்திரம் கழுவி சம்பாதித்து, கிட்டத்தட்ட ஓர் இயந்திரம் போலவே உழைத்தார் மடோனா. மிக அரிதான நேரங்களில் ப்ளூ ஃப்ராகி என்கிற இரவு கிளப்புக்குப் போவார். பாட்டும், நடனமும் தூள் கிளப்பும் அந்த கிளப்பில்தான் முதல் முதலாக ஸ்டீவ் ப்ரே என்கிற இசைக் கலைஞனைச் சந்தித்தார்.

அப்புறமென்ன? கண்டதும் காதல்தான். ஆனால் அதெல்லாம் ரொம்ப நாள் நீடிக்க வில்லை. ஸ்டீவ் ஒரு இசைக்கலைஞன். மடோனா ஒரு பாடகி ஆன போதும் அந்தக் காதல் கலையினால் உருவாகவில்லை. மாறாக, மடோனாவின் கவர்ச்சியை மட்டுமே ஸ்டீவ் விரும்பினான். மடோனாவுக்கும் இதெல்லாம் சரிப்படாது என்று தோன்றி விட்டது. ஆகவே இரண்டு வருட நியூயார்க் வாசத்தை முறித்துக்கொண்டு பாரிசுக்கு ஃப்ளைட் பிடித்தார் மடோனா. அங்கே பாட்ரிக் ஹெமடெஸ் என்கிற மேதை இருந்தார்.

பாட்ரிக்குக்கு மடோனாவின் இயல்பான திறமை வெகு சீக்கிரத்திலேயே புரிந்து விட்டது. அவரது இசைக்குழுவில் மடோனாவுக்குப் பாட வாய்ப்பளித்தார். என்ன பிரச்சினை என்றால் அது மிகப்பெரிய சோம்பேறிக் கூட்டமாக இருந்தது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மடோனா

Post by Admin on Mon Feb 23, 2009 1:52 am

ஆகவே என்னதான் பாட்ரிக் ஒரு மேதையாக இருந்தாலும் அவரோடு குப்பை கொட்டினால் தனக்குக் கட்டுப்படியாகாது என்று தோன்றி, உடனே மீண்டும் நியூயார்க்குக்கே வந்துவிட்டார்.நான்கு வருடங்கள் வெட்டியாக கழித்து, ஒரு வழியாக கோதம்; ரெக்கார்ட்ஸ் என்கிற நிறுவனம் அவரை அங்கீகரித்து, தனியே ஒரு பாடலை இசைத் தட்டாக வெளியிட்டபோதுதான் அவரது பூங்கதவு தாழ்திறந்தது. அமெரிக்க வானொலி அப்பாடலை ஒலிபரப்பியது. உடனே டீக்கடைத் தலைகள் எழுந்துகொண்டன. யார், யார் இது? யாருடைய குரல் இது? என்று ஆளுக்கு ஆள் கேட்க ஆரம்பித் தார்கள். அப்படியொரு சுண்டியிழுக்கும் குரலாக இருந்தது அது. அடிக்குரலில் ஆரம்பித்து உச்சஸ் தாயிக்கு அநாயாசமாகப் பயணம் செய்த அந்தக் குரலைக்கேட்ட பலபேர், யாரோ புதிய ஆப்பிரிக் கப் பாடகி வந்திருக்கிறார் போலிருக்கிறது என்றே நினைத்துவிட்டார்கள். ஏனெனில் அன்றைய தேதி யில் அமெரிக்கப் பாடகர்கள் யாருமே அத்தனை அநாயாசமாகக் குரலை ஏற்றி இறக்கக் கூடியவர் களாக இல்லை!

மடோனாவுக்குப் பாட அழைப்பு அனுப்பிய கம்பெனிகள் கூட அவரை ஒரு ஆப்பிரிக்க- அமெரிக்கப் பாடகி என்று சொல்லி விளம்பரப்படுத்தவே விரும்பின. என்னவோ, அப்படிச் சொன்னால் நன்றாக விற்கும் என்கிற நினைப்பு! அந்த எவ்ரி படி இசைத்தட்டு இரண்டரை லட்சம் பிரதிகள் விற்றன.

மேற்கத்திய சங்கீதம் என்பது இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நடனத்தோடு இணைந்த ஒன்றாகவே ஆகிவிட்டது. வெறும் பாடகர்கள் பிரபலமடைய முடியாது அங்கே. அதேமாதிரி வெறும் டான்ஸர்களுக்கும் வாய்ப்பில்லை. பாடிக் கொண்டே ஆடவேண்டும். ஆடிக்கொண்டே பாட வேண்டும்! அதுதான் எடுபடும். மடோனாவுக்கு அந்த இரண்டு சங்கதிகளுமே அத்துபடி என்பதால் துளி பிரச்சினையும் ஏற் படவில்லை.

நூற்றுக்கணக்கான பாடல்கள், ஆயிரக்கணக்கான நடன விதங்கள். ஊர் ஊராக அவர் போனார். அப்படியொரு பிசியான பாடகி யாகிவிட்டிருந்தார் அப்போது. அந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது இசை ஆல்பம் வெளியாகி, உலகெங்கும் தீமாதிரி பரவி அல றியது. அடுத்தமாதமே அவரது திரைப்படம் வெளியாகி சக்கைப் போடு போட் டது. ஒரே மாத இடைவெளியில் மீண்டும் இன்னொரு திரைப்படம் வெளியாகி, அவரை மூவுலகிலும் பிரபலப்படுத்தியது! உலகமே அப்போது மடோனா, மடோனா என்று என்னமோ ஸ்ரீராம ஜெயம் மாதிரி உச்சரித்துக் கொண்டிருந்தது! இளைஞர்களின் நிரந்தரக் கனவுக்கன்னி ஆகிப் போனார் மடோனா.

1985- ஆகஸ்டு 16-ந்தேதி மடோனா - சீன்பென் திருமணம் நடந்தபோது அந்த இடத்தைச் சுற்றி மேலே 13 ஹெலிகாப்டர்களில் போட்டோ கிராபர் கள் படமெடுக்க வட்டமிட்டுக் கொண்டிருந்தார் கள்! அப்படியொரு புகழ், அப்படியொரு பிரபலம். ஆனாலும் நாலு வருஷங்களுக்கு மேல் அந்தத் திருமணம் நீடிக்கவில்லை. இரண்டு பிரபலங் களுக்கு எப்போதுதான் ஒத்துப் போயிருக்கிறது? ஆகவே விவாகரத்து செய்ய வேண்டியதாகி விட்டது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மடோனா

Post by Admin on Mon Feb 23, 2009 1:52 am

சீன்பென்னுக்கு அது எத்தனாவது விவாக ரத்து என்று தெரியவில்லை. மடோனாவுக்கு இரண்டாவது. அது நிச்சயம்!
அதன் பிறகு சமீபத்தில் ஒரு நாலைந்து வருஷங்களுக்கு முன்னால் அவர் கை ரிச்சியைக் கல்யாணம் செய்து கொண்டதற்கு முன் வரை நடுவில் வேறு யாரை யும் மணக்கவில்லை. என்பது இங்கே ஒரு பெட்டிச் செய்தி!

மடோனாவுக்கு இன் றைக்கு நாற்பத்தியாறு வயது. இப்போதெல்லாம் அவர் நிறைய கச்சேரிகளுக்குப் போவதில்லை. தான் உண்டு. தன் இரு குழந்தைகள் உண்டு என்று வீட்டோடுதான் இருக் கிறார். ஆனாலும் எப்போதாவது மேடைக் கச்சேரி களை ஒப்புக்கொள்ளத் தயங்குவதில்லை. வரு ஷத்துக்கு ஒரு ஆல்பமாவது வெளியிடப் பார்க் கிறார்.

ஆனால் ஒன்று நிச்சயம். எந்தப் பாடகியும் மடோனா அளவுக்கு இதுவரை புகழ்பெற்ற தில்லை. அவரளவுக்குத் திறமையாகப் பாடக் கூடியவர்களும் இல்லை. ஆபாசத்தின் விளிம்பு வரை போன அவரது சில கவர்ச்சி போஸ்கள் முகச்சுளிப்பை ஏற்படுத்தினாலும் அவரை ஒரு இசைத் தேவதையாக மட்டுமே ரசிகர்களால் எண்ணிப் பார்க்க முடிகிறது.

கடைசியாக வெளிவந்த அவரது ஆல்பம் விற்பனையில் உலக சாதனையை உண்டு பண்ணியிருக்கிறது என்கிற ஒரு புள்ளி விவரம் போதாது? சந்தேகமேயில்லை. பாப் இசை இருக் கிற வரைக்கும் மடோனாவின் பெயர் நிலைத்திருக்கத்தான் போகிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2964
இணைந்தது : 23/09/2008
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மடோனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை