ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

சிந்து இலக்கியம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:29 am


1. பழனியாண்டவன் காவடிச் சிந்து

நூலாசிரியர்: முத்துக் கறுப்பணன்


பழனிப்பதி வாழும் - வேலர்
பாதம்தனை நாளும்
உளமேதினம் துதிக்க - வினை
ஒடுக்கும் கதிகொடுக்கும்
வளமேவிய பரனே - சுத்த
மடவாழு தந்திமுகனே
அழகாகிய குருவாய் - எனக்
கருள்வாய் முன்பு வருவாய்
1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர் 1

சிவகிரியில் வாழ்வோன் - எனைத்
தினமும் குடி ஆழ்வோன்
தவமேவிய குமரன் - புகழ்
தானே அடியேனே
நவமீறிய காவடிச் - சிந்து
நாடத் தினம் பாட
புவனச் சரசுவதியே - சிந்து
புகல வருவாயே
2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது.
நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம் 2

கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி
கானத் தினைப் புனத்தில்
உள்ளமே மகிழ்வாகிக் - கிழ
உருவாய்ப் பரண் ஏகி
தெள்ளிய தினை மாவை - பொசித்
திலகும் அண்டர் கோவை
வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும் 3

துண்ட வெண்பிறை அணிவோன் - அருள்
சுத்தனைப் பரிசுத்தனை
அண்டர் கோன் பயம் - தீர்ப்போன்
அடியாரைத் தினம்காப்போன்
எண்டிசை பணி நேசன் - தவம்
இலகும் கிரிவாசன்
வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு
வருவாய் தோகைமயிலே
4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன்
துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன்
அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன் 4

செய்ய தாண்டவ ராயன் - அருள்
சேயனைக் கார்த்தி கேயனை
துய்ய குஞ்சரி பங்கனை - அயில்
துலங்கும் கர துங்கனை
உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர்
உளத்தில் குடி இருப்போன்
வையகம் புகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான்
சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன்
குஞ்சரி - தெய்வயானை 5

ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக்
கழகாகிய கண்ணன்
ஞானதே சிக போதன் - நவ
வீரரும் பணி நீதன்
தேனுலா விய கடப்ப - மலர்
செறிவோன் அருள் புரிவோன்
வானவர் பணி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன்
நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்
நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன் 6

திங்கள் சேர் நுதல் - மீனாள்
தருதேனை முருகோனை
எங்கள் நாயகப் பொருளை - பணிந்
தேற்றார் மனத் திருளைத்
துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத்
தொழுதே நிதம் கும்பிட்டேன்
மங்களம் உயர் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி
ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன் 7

இச்செகம் தனில் அடியேன் - உனை
ஏற்ற தினம் போற்ற
மிச்சமாய்க் கலிவருத்த - நான்
மெலிவேனோ அலைவேனோ
அச்சமாய்த் துயர் ஓட - அருள்
நாடகக் கவி பாட
வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை
வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல் 8

பூசுரர் வெகுமானி - சிவப்
பொருப்பில் வளர் ஞானி
தேச மேழும் புகழ் - காவடிப்
பூசை சிறக்கும் தமிழ்புரக்கும்
$........ ......... ......... ........
........ ......... ......... ........
வாசனை வடி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும்.
பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும் 9

படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும்
மான புகழ் குமரன்
துடிமீறு மும்முரசன் - தெய்வம்
தொழுவாழ் கொலு வாசன்
வடிவேல் முருகனையே - கொண்டு
வருவாய் தோகை மயிலே
10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன்
பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ்
துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த
மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு 10

கர்த்தனாகிய முருகன் - அருள்
கனியும் திரு மருகன்
பத்தர்கள் மிக வாழி! - நிதம்
படிப்போர் தினம் வாழி!
சுத்தமா நகர் வாழும் - முத்துக்
கறுப்பணன் சொல் நாளும்
சித்தமேவிய பெரியோர் - தினம்
செழித்து மிக வாழி!
11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள்
முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம் 11

பழனியாண்டவன் காவடிச் சிந்து முற்றும்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:31 am

2. கந்தன் மணம்புரி சிந்து

நூலாசிரியர்: சண்முக தாசன்


வாழ்த்து

கங்கா தரனற் கருணையா லீன்றெடுத்த
சிங்கார ஆனைமுகத் தேசிகனே-மங்காத
கந்தன் மணம் புரியக் காதல்தனை மாநிலத்தில்
சிந்துகவி யானுரைக்கச் செய்

கங்காதரன் - கங்கையை முடியில் தரித்தவன்

தூம்பினில் வீழுஞ் சலந்தனைச் சாகரஞ் சூழ்ந்து கொண்டால்
வீம்பனென் றெண்ணி வெறுப்பதுண் டோயிந்த மேதினியில்
கூம்பலில் லாத தமியே னுரைத்த குழறு புன்சொல்
தாம்புக ழாகவாழ் வார்பெரி யோர்தடை வேறுள்ளதே

தூம்பு - சலதாரை
சாகரம் - கடல்
வீம்பன் - வம்பு வார்த்தை சொல்வோன்
கூம்பல் - ஒடுங்கல்
(மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - குறள்
கூம்பாத மெய்ந்நெறியோர் - திருவருட்பா)

சீருடன் வள்ளியைச் சேரும்வடி வேலன்
சேவடியைப் போற்றி - கந்தன்
சிந்துநான் சொல்ல எந்தனக்கருள்
செல்வவி நாயகனே
சிறிய(ன்)னுரை மொழியுந் தமிழ்
குறமா தையே மணஞ் செய்திடும்
செந்தூ ரதனில் மேவியே
சேர்ந்து வாழ்ந்து சாந்த முடனே (சீருடன் வள்ளியைச்)
1. செந்தூர் - திருச்செந்தூர்; குறமாது - வள்ளி 1

பேரு பெரிய நம்பி மகரா சேந்திரன்
பெண்ணாக வந்துதித்துத் - தாதிப்
பெண்க ளுடன் தினைக் கங்காணங் காத்திடப்
பேசியே காக்க வைத்தார்
பிரியா மலே புனமே விய
பரண்மீ தினில் கவணோ சையால்
பலமாய்த் தினை விளை காத்து
உணங்கிப் பிணங்கி இருக்கப் (பேருபெரிய)
2. நம்பிமகராசேந்திரன்- நம்பிராசன் - வள்ளியின்தந்தை
கங்காணம் - கண்காணம்; கவணோ சை-கவண்கல் எழுப்பும் ஒலி
விளை - விளைபுலம் (ஆகுபெயர்)
உணங்கி - வாட்டம் அடைந்து 2

குன்றக் குருபரன் கோதையாள் வள்ளியைக்
கோரி வழி நடந்து - கந்தன்
குளறிக் குளறிப் புனத்தைத் தேடிக்
கொண்டான் வணிக னைப்போல்
குருநா ரத னுவந் தோதிய
உரைகேட் டிட வரு வேலவர்
குயிலோசையு மயில் பாசையும்
குறித்துத் தரித்துச் சிரித்து நின்று (குன்றக்குரு)
3. மயில் பாசை - குயில் ஓசைக்கு ஏற்பத் திரிந்து வந்தது
கோரி - விரும்பி; குருநாரதர் - நாரதர் 3

மன்றினி லுள்ள காலிகள் மாடுகள்
வளருந் தினைப்புனத்தில் - வள்ளி
மங்கையர் களுடன் செந்தினை காக்கவும்
மாது தலை விதியோ
மங்கைக் கிளி மொழியா ளென
தங்கப் பிர காச(ம்) மென
மருக இது சமய மென
மயங்கித் தியங்கிச் செயஞ்செ யமென்று (மன்றினி)
4. காலிகள் - பசுக்கள்; மாது - வள்ளி ; மருக - நெருங்க 4

கானக் குறக்குல மானே உனைத்தேடி
காவின் வழியே வந்தேன்
கைக்கு வளையலு மிக்கணமே தாரேன்
காசு கொடுத் திடு வாய்
காசி வட காசிப் பணி
ஆசை மிக வேகொண் டிடும்
கன்னடியன் சென்னை நகர்
கடந்து கடந்து தொடர்ந்து வந்தேனே (கானக்)
5. கா - சோலை; கணமே - நேரத்திலே
வட காசிப் பணி - வட காசியில் செய்த
செயல்திரம் உடைய அணிகலன்
கன்னடியன் - ஒரு சாதியான். 5

சீனா வேலையிது தானே மலையாளம்
செஞ்சிக் கோட்டை நகரம் - அதில்
சீமான் மெச்சிய கோம ளப்பணி
செங்கை நீ தருவாய்
செக மொய்த்திடு வளை ரத்தினத்
தொகை செப்பிட முகநட் பிலை
திருமங்கை யாள்குல நங்கையே
சிரித்து விரித்துப் பரிக்கும் குறப்பெண் (சீனா)
6. சீனா வேலை - சீனர்களால் செய்யப் பெற்ற வளையல்
சீமான் - ஸரீமான் - திருமகள் கேள்வன் - இங்கு செல்வரைக் குறித்தது
கோமளப்பணி - அழகு மிகுந்த அணிகலன்
முகநட்பிலை - விரும்பவில்லை 6

கண்டி கதிர்காமம் காஞ்சி கொழும்புவங்
காளதே சப்பணி யே-புனக்
காவிற் கிளிகளைக் கூவிவி ரட்டிடும்
கன்னியே பெண்மயிலே
கவி வாணர்கள் அடி போற்றிடும்
துதி பெறுமான் இசை பெற்றிடும்
கலை மான துனை யீன்றதும்
கலங்கி யிலங்கி அலங்கா ரத்துடன் (கண்டி)
7. கண்டி, கதிர்காமம்-இலங்கையிலுள்ள முருகன்திருப்பதிகள்
புனக்கா - புனம்; இசை - புகழ்
கலைமான் - வள்ளியையீன்ற மான். (சிவமுனியின்
காமநோக்கால் கருவுற்றது என்பது புராணவரலாறு) 7

எண் டிசை போற்றிடும் யாழ்ப்பாண
தேசத்தி லிருந்து வருகிறேனடி - மன
திசைந்து யிசைந்து நடந்து வந்ததால்
இளைப்பும் கொண்டே னடி
இருநீ பரண் அடி கீழினில்
கரநீட் டிடு அணிவேன் வளை
இதுவே நல்ல சமய மல்லவோ
இகனை முகனை தகையுந் தீர்ந்தேனடி (எண்டிசை)
8. யாழ்ப்பாணம் - இலங்கைத் தலம்
மன திசைந்து - மனம் விரும்பி; இளைப்பு - சோர்வு
பரண் - காவல் மேடை
இகனை முகனை - எதுகை மோனை
இங்கே இடம்பப் பேச்சைக் குறிக்க வந்தது 8

ஆயிரங் கோடி திரவியந் தந்தால்
அதன்விலை மேலாகும் - வளை மேல்
ஆசை கொள்ளுவார் நேச மாகுவார்
அனாதியென் றெண்ணாதே
அடரும் தினை படரும் விளை
அதிலே கிளி களு மேயுது
அழகா கவும் மழமா கவும்
அறிந்து தெரிந்து மிருந்து மாவதென் (ஆயிரங்)
9. வளை - வளையல் ; அனாதி - திக்கற்றவன்
விளை - விளைபுலன் - ஆகுபெயர்
மழமாகவும்- இளமையாகவும் எனலாம். 9

சேயிழை யேகொங்கு தேசம் திருப்பேட்டை
ஸரீரங்கப் பட்டணமாம் - (அதில்)
சிறந்த மனித ருறவுண் டாகும்
சித்திரப் பணியாம்
திரு வாவினன் குடி மேவியே
ஒரு மாதமும் அதில் தங்கியே
திடமாகவும் நடையாகவும்
சிகப்பு தரிப்பு முகப்புங் காற்குமே (சேயிழை)
10. சித்திரப்பணி - அழகுடன் விளங்கும் வளையல் 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:31 amமக்கந் துலுக்காண மராட்டிய தேசமும்
வந்து பணியெடுத் தேன் - சிறு
மங்கையர்க் கேற்ற இங்கித முள்ள
வளைய லுங் கொடுத்தேன்
*ம(ய)லுற் றிடு காருண் ணிய
நகர்முற் றிலும் விலை கூறியே
வரும் பாதையில் குறியாச்சுது
மகிழ்ந்து புகழ்ந்து விருந்துவந் தேனடி (மக்கந்)
11. மக்கம், துலுக்காணம், மராட்டியம்- தேசங்கள்
பணி எடுத்தேன்- வளை கொடுத்தேன்
இங்கிதமுள்ள - இனிமையான - விரும்பதக்க
மயலுற்றிடு - ஆசை ஏற்படுத்தும்; காருண்ணிய - கிருபையுள்ள
குறியாச்சுது - நற்சகுனம் ஏற்பட்டது
விருந்து வந்தேன் - விருந்தாக வந்தேன்
*அயலுற்றிடு என்றும் பாடம் 11

துக்காணிப் பாளையப் பட்டு கல்கத்தா
கருதியே வந்தெடுத்தேன் - சேலம்
சுத்தியே வந்து மஞ்சள்குப்ப மதனில்
சில தோகையர்க் குங்கொடுத்தேன்
தொலையா வழி கடவாம லே
விலைமாதர்கள் குடி மேவிய
சுருக்காய்த் தரிக்கப் பரிக்கக் கொடாமலே (துக்காணி)
12. துக்காணி, பாளையப்பட்டு, கல்கத்தா - தேசங்கள்
தோகையர் - மகளிர்; தொலையாவழி - நெடுவழி
விலைமாதர்கள் - பரத்தையர்கள் 12

செஞ்சிக் கோட்டைவிட்டு சீனாக்கப்பல் ஏறித்
தென்தேசம் நாடி வந்தேன் - (வழி)
திகைத்துத் திகைத்துப் புனத்தி லோசையும்
செப்பிட வும் கண்டேன்
சிந்தை தௌி வாகியே நான்
வந்து னையுங் கண்டவு டன்
செயல் பெற்றனன் பயமற்றனன்
ஜெக மோகன புகழுண்டாகிய (செஞ்சிக்)
13. ஜெக மோகன புகழ் - உலகினை மயக்கும் புகழ் 13

வஞ்சிஎன் தாய்பேர் மீனாட்சி அல்லோ
பெற்ற மக்க ளிருவரடி - பெரு
வயிற்றன் கணேசன் இளைய செட்டிக்கு
வடிவேல் பட்டமடி
மாது தெய் வானை யல்லோ
ஏது மறி யாள் சிறியாள்
மணமுஞ் செய்தேன் துணை யாகவே
மறித்துக் குறித்து வெறுத்து வந்தேனே (வஞ்சிஎன்)
14. மீனாட்சி-பார்வதி தேவி; இளைய செட்டி - முருகன் 14

கந்தன் செட்டியென்று யித்தலைக் கெல்லாம்
கண்டவர் சொல்வகேள்-என்னைக்
காண வென்றாலுமே தோணாமல் போகுமே
காரணம் நீ யறியாய்
கர நீட்டிடு ரதம் போலவே
வளை மாட்டு வேன் இளையாமலே
கனி வாயினால் பணம் ஓதடி
கலங்கி யிலங்கு அலங்கிக் கொண்டானடி (கந்தன்)
15. இத்தலை - இக்காலம்; காண வென்றாலும் - காணவேண்டுமென்றாலும்
தோணாமல் - தோன்றமாட்டேன்
கனிவாய் - கனிபோன்ற வாய்; பணம் ஓது - விலை கூறு
அலங்கி - இரங்கி 15

சந்திர வட்டமொரு கண்ணாடி ஆயிரம்
பொண் பெருந் தையலரே - அது
தானும் போதா தொரு
சூரிய வட்டத்தின் மேல் விலை
சற்குணமே சமய மிது
தமையன் மார்கள் வருவாரடி
தருவாய் திரவியம் ஓதடி
தடித்துப் புடைத்துக் குடத்தி லடைக்க (சந்திர)
16. சந்திர வட்டம், சூரிய வட்டம் - வளையல் வகைகள்
சற்குணம் - நற்குணம் உடையவள்
திரவியம் - பொருள் - விலை 16

வள்ளி:-

ஆயிரம் பொன்பொருள் தாரே னுனக்கு
வரகு கூவரகு தனபடியாய் விளைந்த(து)
தானே இருக்கு தவிட்டரிசி புல்என்
தாய் தந்தைக் கோர் குழந்தை
தாதிகளுஞ் சகியார் நீ வந்ததுமே அறியார்
தருநிதி கள் வேறே இல்லை
தருவாய் பெறுவாய் குறைசொல் லாமல்தானே (ஆயிரம்)
17. தாரேன் - தரமாட்டேன்; கூவரகு - வரகின் ஒருவகை (வழக்கு)
சகியார் - விரும்பார்; தருநிதிகள் - வேறு செல்வங்கள்
தனபடியாய் - தானப்படிஎன்ற வழக்குச்சொல் -
அதிகமாய் எனப்பொருள் தரும் 17

முருகன்:-

ஆருக்கு வேணும் தவிட்டரிசி புல்
அசலார் வசை சொல்லுவார் - இதை
அப்புறஞ் சொன்னாலுமே என் குலப்
பழிப்பாக எனை வெல்லுவார்
ஆதி நேரமும் ஆச்சே தினைப்
பதிதா னிருப் பாச்சே
அகங் காரமோ பகை நேரமோ
அலைச்சல் உளைச்சல் விளைச்சல் இருந்தும் (ஆருக்கு)
18. ஆருக்கு - யாருக்கு; அசலார் - அயலார் - அடுத்தவர் - இங்கே இனத்தவர்
அதிநேரம் -அதிக நேரம்; இருப்பு - தங்குமிடம்
அகங்காரமோ - உன் ஆணவமோ
பகை நேரமோ - என் கெட்ட நேரமோ 18

வள்ளி:-

ஆனா லுனக்குத் தரவொரு காசில்லை
அண்ணே யென் செய்வேன் - முள்
ளடர்வனந் தனில் விளைதினை யல்லாமல்
ஆர் கொடுப் பார் காசு
அச்சமான தில்லாமலே
இச்சணமே யேகிவிடு
அறிந்து தெரிந்தும் இருந்தும் ஆவதென் (ஆனாலுனக்கு)
19. முள்ளடர் வனம் - முள்ளடர்ந்த காடு
இச்சணம்-இந்தக்ஷணம் - எதுகை நோக்கித் திரிந்தது 19


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:32 amமுருகன்:-

கானக் குறத்தியே நான் சொல்லும் வார்த்தை கேள்
கைக்கு வளையிடு வேன்
கட்டி யணைந்திடு முத்தங் கொடுத்திங்கு
காமனையுஞ் செயிப்பாய்
கலையைத் திற துடை தட்டியே
சிலையைக் கனை மூட்டியே
கனக ஸ்தனமும் நெருடியே
கருத்தில் நினைத்த படிக்கு முடிப்பேன் (கானக்)
20. காமனை - காமத்தைக் குறித்து வந்தது; கலை - ஆடை 20

வள்ளி:-

போங்காணும் பித்தப் பயித்தியங் கொண்டிடும்
போதங் கெட்ட செட்டியே-(இந்தப்)
புத்தி நீ எங்குப் படித்தாயிது
போதுமோ சொல் மட்டியே
பொறுக்க முடி யாதே யினி
முறுக்கும் மீசைக் கார ருனைப்
பொருவார் எதிர்வார் மனம்
பொறுத்தேன் உரைத்தேன் குறத்தி நானல்லவோ(போங்காணும்)
21. பித்தப் பயித்தியம் - ஒருபொருட் பன்மொழி
போதங் கெட்ட - அறிவு கெட்ட; மட்டி - மடையன்
முறுக்கும் மீசைக்காரர் - தமையன் மார் 21

பாங்காக நெத்தியில் பட்டமுஞ் சாத்தி என்
பக்கத்தில் வந்தா(ய்) - எந்தன்
பாங்கிமார் காணாமல் போங்காணுஞ் செட்டியே
பட்டப் பக லல்ல வோ
பல பேருட மகனே குற
குல மென்றெனை அறியாயோ நீ
பகவான் விதிப் படியோ இது
பகரும் விகடம் குகனுக் கேற்குமோ (பாங்காக)
22. பாங்காக - அழகாக; பட்டமும் - திருநீறும்
பாங்கிமார் - தோழியர்; பலபேருட மகன் - இழிவுரை
பகவான்- இறைவன்; விகடம் - கேலிப் பேச்சு
குகன் - முருகன் 22

செட்டி மகன்செட்டி போலே யெனதுட்
சிந்தையில் தோணவில்லை - கள்ளர்
சில்லாக்கு வந்த கள்ளரே அல்லாது
தெய்வ வணக்க மில்லை
செங்கைவடி வேலனே எங்கள்குல தெய்வமே
சின்னஞ்சிறு பெண்ணல்லவோ
சிவனார் மகன் அடியாள் எனை
தீங்காகவே நினையாம லேபோம் (செட்டிமகன்)
23. சில்லாக்கு- வழக்குச்சொல்
கள்ளரே - திருடர்போல்
சிவனார் மகன் - முருகன் 23

பட்டப் பகலில் பறிகொடுத்தவன் போல்
பார்த்து விழிக்கிறாய் - உன்னைப்
பார்க்கிலுங் கெட்டிக் காரன்போல்
தோன்றுதென் பரணி லொளிக்கிறாய்
பரிகாச மோயிரு உந்தனை ஒருபோதும்
விடார் கந்தனே
பயமில்லையோ அயில் கொண்டுனை
பறித்துக் குறித்துத் தரித்து விடுவார் (பட்டப் பகலில்)
24. ஒளிக்கிறாய் - ஒளிகிறாய்
பரிகாசமோ - கேலி செய்கிறாயோ; அயில் - வேல் 24

முருகன்:-

ஆதர வாகவுன் ஆலோலச் சத்தங்கேட்
டன்புட னிங்கு வந்தேன் - இங்கே
ஆண்துணை இல்லையே நாம்போவோ மென்றெண்ணி
அயர்ந்து நா னிங்கு வந்தேன்
அழகு வடி வான பொருள்
வளைய லிது கிடையா திது
அறி ஒருப கார மிது
அணிவாய் பணிவாய் துணிவா யிப்போது (ஆதரவாக)
25. ஆதர வாக - அன்பாக; ஆலோலம் - ஒலி
உபகாரம் - உதவி 25

வள்ளி:-

ஏதுமறி யாத போதங்கெட்ட செட்டி
ஏகும் வழி பாரு - இங்கு
எந்தனண் ணன்மார்கள் வந்து விடுவார்கள்
ஏசல் புரி யாதே
இண்டஞ்செடி யல்லோதலை கண்டுமவர் கொய்துவிட
ஏகும் வழி யறியாமலே - நீ
போகுந் தடந் தெரியாமலே
இச்சணமே ஏகிவிடு (ஏதுமறி)
26. ஏகும் வழி பாரு - தப்பிப் போக வழிபார்; ஏசல் - இகழ்ச்சி
இண்டஞ்செடியல்லோ - இண்டஞ்செடியைக் கொய்வதுபோல்
தடம் - பாதை; இச்சணம் - இ-க்ஷணம் - இப்பொழுதே 26


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:32 amமுருகன்:-

மாது குறவள்ளி மங்கையே நான்கொண்ட
மய்யலைத் தீராயோ - மோக
மாகினே னுந்தன்மேல் தாகமுங் கொண்டேன்
காமன் றனை வெல்லுவாய்
மலை யுற்றிடுங் குமரேசனும்
வரமுற்றிலும் அருள் செய்குவார்
மனதில் குறை நினையா மலே
மருவி செருவி உருவிப் புணர்வோம் (மாது)
27. மய்யல் - மையல்; மோகம் - காதல்
மருவி - கலந்து; செருவி - ஊடி 27

கோதை குழல்வள்ளி நாயகி யேஎன்னைக்
கூடி மருவிடு வாய்
கோமா னிருக்கும் கொலுவுக்கும் பாதை
கொண்டுமே காட்டிடு வாய்
குலவித்தைகளோ ஸ்தம்பனத்தில்
வித்தைகளோ செப்படி குறி
காரணமோ அறியேன்
குறத்தி சமர்த்தி நிறுத்தி வையாதே (கோதைகுழல்)
28. கோதை - மாலை
கோமான் - அரசன் - இங்கே மன்மதனைக் குறிக்க வந்தது
தம்பன வித்தை - உடலை அசைவற நிறுத்தும் வித்தை
செப்படி - செப்பிடுவித்தை - தந்திரவித்தை - செப்பில்
பந்தினை இட்டு மறைத்துக் காட்டும் வித்தை
சமர்த்தி - கெட்டிக்காரி;
குறி - ஒருவகைச் சாத்திரம் சொல்லுதல் 28

வள்ளி:-

செட்டி வெகு கெட்டிக்கார நீயல்லது
கேலிக ளின்ன முண்டோ - புனக்
கிள்ளைகளும் வனத்துள்ள பக்ஷிகளும்
கிளைகள் கூட்டும் உண்டோ
கிளையின் முறை உளதாயின
குளவின்தகு வளை கழனியில்
கெச கரணம் போட்டுவிடும்
கிறுக்கோ திருக்கோ யிதுக்கோ வந்தாய்நீ (செட்டிவெகு)
29. கெச கரணம் - யானை காதை அசைப்பது போல்
அசைக்கும் வித்தை; திருக்கு - வஞ்சகம் 29

ஒட்டாத வார்த்தையை நெட்டூர மாகவே
முன்னே யுரைத்தாயே நீயும்
ஓடிப்போ நில்லாத நானும் வேள்விமலைக்
குகந்த குறத்தி யல்லோ
உள்ளபடி சொல்லுகி றேன்
வள்ளியெனும் பெயரானதும்
உலகந் தனிலே கேட்டிடு
ஒளியின்ற வெகு பலன் சொல் (ஒட்டாத)
30. ஒட்டாத வார்த்தை - பொருந்தாத சொல்
நெட்டூரம் - நிட்டூரம் - கொடுமை
வேள்விமலை - வள்ளிக்குரிய மலை 30

மேவுங் குணவிதரண வள்ளி யெனவடி
வேலனுமே நினைந்தான் - குற
வேடங்கொண் டாப ரணங்களை
சூட்டினார் மெல்லியாள் என்றணைந்தார்
வேறே கதையாச்சே முதற்
சீரானதி லவன் போந்து
விபதை மகளான தினால் விடுமா
விரும்பி விரும்பிப் புகழ்ந்து (மேவும்)
31. குணவிதரண - குணச்சிறப்பு மிகுந்த (விதரணம் - அறிவு)
விபதை - தேவமகள் - திருமகள் 31

நாவலர் போற்றும் கவிவாணர் களுக்கும்
நாட்டி லனை வோர்க்கும்
நாடரிய வேலவர் தாசனடி யவர்
நண்பர்க்கும் வாழியதே
பலமாக சண்முக தாசனும்
கலைவாணி தனைப் போற்றியே
நல்கு தமிழ்ச் செல்வ மிது
நாளும் வாழ வாழி தாமே (நாவலர் போற்றும்)
32. நாடரிய - அருமையான - உயர்ந்த
(தேடக் கிடைக்காத செல்வம் என்பது போல)
சண்முக தாசன் - ஆசிரியர் பெயர் 32

கந்தன் மணம்புரி சிந்து முற்றும்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:33 am

3. சுப்பிரமணியர் பேரில் சிந்து

(ஆசிரியர் பெயர் தெரியவில்லை)


ஆனந்தக் களிப்பு
சீர்பெருகு சந்தவரை மேவும் பழனிச்
சேவற் கொடியோன்மேல் சிந்துபோல் பாடக்
1. சந்தவரை - அழகு பொருந்திய மலை 1

கார்பெருகு தந்திமுகத் தையன் - செந்தில்
கடற்கரை ஆண்டிமேல் தமிழை நான் பாட
2. கார்பெருகு - கருணை மதம் பெருகு
தந்திமுகம் - அத்திமுகம் - ஆனைமுகம்
செந்தில் கடற்கரை - திருச்செந்தூர் 2

தார்பெருகும் அபிராமி சொல்வாள் - அருமைச்
சந்தக் களிப்பை யான் தத்திமொழி குளற
3. தார் - மாலை 3

ஏர்பெருகும் ஆறுமுகத் தையன் - நாளும்
என்னாவில் அனுதினமும் ஆனந்த மயமாய்
4. ஏர் - அழகு 4

அத்திமுக (வேல)வனை நித்தம் தொழுவேன் - நான்முகன்
நாவுடைய மாதே மனமேவி இப்போது
5. நான்முகன் நாவுடைய மாது - நாமகள் 5

புத்திவித்தை சவுபாக்கியம் தருவாள் - நாமும்
பூலோக நாயகன் குமரன்மேல் பாட
6. புத்தி - அறிவு; வித்தை - கல்வி; சவுபாக்கியம் - மிகுந்த செல்வம் 6

சத்திஉயர் அருள் பெற்ற வேலா - என்னைத்
தயங்காமல் காக்கிறது நின்கட னய்யா 7

வெற்றி மயில் ஏறி விளையாடும் - அய்யன்
வேலவ னய்ங்கரன் பாதமலர் துணையே 8. அய்ங்கரன் - விநாயகன் 8

குற்றங்குறை தெரியாது எனத் தமிழைக்
குமரன்என் நாவில்வந் தொழுங்காகச் சொல்வாயே 9

பத்தனைக் காக்கும் குறவள்ளி - ஏழையேன்
பாடுதற் கருள்தல் நின்கடன் தாயே 10

ஆறுகுற்றம் நூறுபிழை செய்யும் - அடிமை
யறியாக் குழந்தைமேல் அன்புசெய் தருள்வாய் 11

தேறுவேன் அபிராமி செயலால் - ஒரு
சிங்கார மாலைபோல் ஆனந்தக் களிப்பை*
12. தேறுவேன் - தௌிவேன்
*ஆனந்தக் களிப்பை - ஆனந்தக் களிப்பாய் எனவும்படும் 12


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:34 amகூறுவேன் உனதுடைய நாமம் - எனக்குக்
குறையொன்று வாராமல் குமரநீ காப்பாய் 13

ஏறுமயில் மீதேறி மாலைக் கிப்போ
யிதுவேளை காப்பது நின்கட னய்யா 14

சூராதி சூரனை வெறுத்த - சிவ
சுப்பிரமணியர் அருள்பெற்று நான்தொழுவேன் 15

ஆராத கானங் கடந்தய்யன்* - ஞான
ஆறுமுகத் தையன்உன் தரிசனம் பெறவே
16. ஆராத கானம் கடந்து - அரிய வழி கடந்து
`ஆறாறு காதம் கடந்து' எனவும் பொருந்தும்
* ஆறாத நாமம் கடந்தய்யன் என்பது மூல வடிவம் 16

உபாங்கமுடன் காவடி எடுத்து அன்பர்
போற்றியே வேலருட* பாதமே துதித்து
17. உபாங்கம் - துணை (பக்க வாத்தியம்)
* வேலருடைய என்பதன் சிதைந்த வடிவம் 17

கைவேலு வட்டமிட் டாடச் - செந்தூர்க்
காவடிகள் இருகோடி சூழ்ந்து விளையாட 18

குயில்கூவ மயிலும் கூத்தாட - சாமி
குமரகுரு பரமுருக அரகர என்றாட 19

ஆண்டிமக னாண்டிகும ராண்டி - எங்கள்
ஆறுமுக வேலரென வந்த குமராண்டி
20. ஆண்டிமகன் - பிட்சாடனப் பெருமானாகிய சிவன்மகன்
குமராண்டி - ஆண்டிக் கோலம் கொண்ட முருகன் 20

தாண்டி மயி லேறிவரு வாண்டி - கிழவன்
தானாவே உருவெடுத்து வருவாண்டி 21

வேண்டிய கானவர்கள் வரவே - குமரன்
வேங்கைமர மாகவே நின்றவடி வாண்டி
22. கானவர்கள் - குறவர் 22

பாண்டிக் குறவருட மகளை - நித்தம்
பட்சமுட னிச்சித்து வந்தகும ராண்டி
23. பாண்டிக்குறவர் - பாண்டிய நாட்டுக் குறவர்
பட்சம் - அன்பு; இச்சித்து - விரும்பி 23

கைதனில்வே லாயுத மெடுத்து - நல்ல
கனகமணி ரத்தினத் தேரின்மே லேறி 24

எய்ததொரு சூரனையும் குத்தி - அவனை
இருபிளவு செய்துமே வாகனம தாக்கி 25

செய்ததவ முனிவோர்கள் தேவர் - தம்மைச்
சிறைவிடுத் தேதெய்வ லோகமீ தேற்றி
26. செய்ததவ முனிவோர்கள் - தவம் செய்த முனிவர்கள் 26

அய்வர் சகாயன் மருகன் - அனங்கர்*
ஆறுமுக வேலவரை வந்து தொழு தேத்தி
27. அய்வர் சகாயன் மருகன் - மால் மருகன்
அனங்கர் - கடவுள்
* அணங்கார் எனவும் பாடம் ஆயின் 'விழா அயரும்',
'வெறியாடுகின்ற' என்பது பொருளாகக் கொள்ளலாம் 27

பாருங்கோ பூலோகம் வாழும் - இந்தப்
பார்புகழும் வேந்தரே செந்தூர் நகரில் 28

வாருங்கோ ஒருமனது கொண்டு எங்கள்
வடிவேலர் பாதமதை வாழ்த்துங்கோ நின்று
29. ஒரு மனது - அலையாத ஒரு முகமான நினைவு 29

கலகலென வருதண்டைக் காலா - உக்கிர
காளிதிரி சூலிகவு மாரிபெறு பாலா
30. கலகலென - தண்டையின் ஒலிக் குறிப்பு
உக்கிரகாளி - கோபமிகுந்த காளி
திரிசூலி - சூலப்படையுடையாள்; கவுமாரி - பார்வதி 30


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:34 am


பலபல யோசனைசெய் யாமல் - எந்தன்
பவ வினையைத் தீர்ப்பதுவும் பழனிமலை யானே 31

ஆங்கார ஓங்கார சக்தியம்மாள் - தேவி
அம்மையுமை பங்கில்வளர் சிவனுடைய சத்தி
32. ஆங்கார ஒங்கார சத்தி - வெற்றிப் பெருமிதம் உடைய
ஒங்கார வடிவினளான சத்தி 32

வாங்காத காவடிகள் கட்டி - நல்
வையாபுரி சுற்றி வாரா னிடும்பன்
33. வாங்காத - வளையாத
வையாபுரி - பழனி 33

மருவும் மருக்கொழுந்தும் - வகையாய்
மாலை புனைந்து மரகதரூப மயி லேறியே
34. மரு, மருக்கொழுந்து - நறுமணப்பூண்டு
மரகத ரூப மயில் - பச்சை வண்ணம் உடைய மயில் 34

பயின்றரக்கன் சூரர் பகை தீரவே
திருவும் நிறைந்த தலம் திருப்பரங் குன்றில் மாடத்
தெருவில் பவனி வார தாரய்யா 35

அறுமுகன் பன்னிருகை அயில் கொண்டு
அசுரரைமுன் சமர்செயும் குமரரிவர் தானடி 36

சோலைகளும் கன ஆலயமும் திகழ்
சோபித சம்பிரமம் மீறிய செந்தினில் வேலன்மேல்*
37. சோபித சம்பிரமம் மீறிய - அழகும் களிப்பும் மிகுந்த
* இத்தொடர் அமைப்பு பொருள் விளங்கவில்லை 37

வாலிபர் அன்பொடு பாடிய சிந்தையில் ஆசைகள்
சிந்துகளவே மனதின்புற நானுமே 38

உத்தள வெண்ணீறணிந்து எத்திசை எங்கும் விளங்க
வித்தார பவனி வந்த தாரய்யா
39. உத்தள வெண்ணீறு - நீரில் குழையாது
உத்தூளனமாகப் பூசப்பட்ட வெண்ணீறு
வித்தாரப்பவனி - வித்தாரம் - விரிவு - பெரும்பவனி 39

சத்திவே லெடுத்துரண சுத்தவீரரைச் செயித்த
சண்முக முத்தையர் இவர் தாண்டி 40

சுத்தி விளையாட வென்றே இத்திசை தனிலே வந்து
அத்திதட மத்தகமீ தேறியே
41. அத்தி - யானை 41

சித்து விளையாட என்றே இத்திசை தனிலே வந்த
சேவகப் பெருமாள் இவர் தாண்டி
42. சேவகப் பெருமாள் - வீரனாகிய குமரன்
விசாகன் - குமரன் (திவாகரம் 1- 4) 42

சூரர்முகங் கிரியூடுருவும் படி வேல்விடு செங்கை விசாகன் அலங்
காரத் தோகை யிலங்கு மயூர துரங்கை வேலனே
43. மயூரதுரங்கன் - மயிலூர்தி (துரங்கம் - குதிரை - இது
ஆகுபெயராய் ஊர்தியைக் குறித்தது) 43

பதக்கஞ் சரப்பணியோன் பணிகள்
பருதிஒளி போல வாரதிவ ராரய்யா 44

கதிக்குங் கதலிகன்னல் நிறுத்தி மலர்தூக்கி
கனகரதம் ஏறியவர் தாண்டி 45

தாளந் தவில்முரசு தம்பட்ட மேளமொடு
சங்கீத ராகமுடன் வாரதிவ ராரய்யா
46. தாளம், தவில், முரசு, தம்பட்டம் - இசைக்கருவிகள் 46

வேழஞ் சரவணைகள் கண்டு பயின்றதொரு
வேலேறும் பவனி இவர் தானடி
47. வேழஞ் சரவணை - நானல் சூழ்ந்த சரவணப் பொய்கை
வேழஞ் சருளணைகள் - என்பது மூல வடிவம் 47


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:34 am


வள்ளிக் குறமக ளுள்ளபடி தினை
தெள்ளிச் சிறுதேனை வெல்லப் பொடிதனை
வாங்கியுண்ட காங்கையன் விசாகனே
கள்ளத் தனமுட னுள்ளத் தினில்மிகு
48. காங்கேயன் - முருகன் (கங்கை...கொண்டு சென்று
சரவணத்திடுதலால் பெற்ற பெயர். கந்த-திரு-16)
விசாகன் - குமரன் (கந்த-திருவிளை-60) 48

வள்ளிப் பெண்தனை மெள்ளத் திருடின
காங்கையன் சுப்பிரமணியர் தானடி 49

உத்த(ர) சிவகிரியில் நித்தம் குழந்தை வடி
வுகந்து குடியிருப்ப தாரய்யா
50. உத்தசிவகிரி - புகழுரை மிகுந்த சிவகிரி
உத்தரசிவகிரி - வடக்கில் உள்ள சிவகிரி எனலுமாம் 50

சுத்தி உலகமெங்கும் வெற்றிமயி லேறிவரும்
சுப்பிர மணிய வேலரிவர் தானடி 51

சென்னியில் கிரீடமின்ன செங்கையில் வேலிலங்க
திட்டமுடன் வார துரை ஆரய்யா
52. சென்னி - திருமுடி 52

சொன்னவடி வேலெடுத்து சூரனைச் சங்காரம் செய்யும்
சுப்பிர மணிய வேலரிவர் தாண்டி - எங்கள்
53. சொன்ன - சொர்ண - பொன் 53

திங்கள் துலங்கு முகத்தில் சேர்ந்த கத்தூரித்
திலகம் தீட்டிமிக வாரதுரை ஆரய்யா 54

மையல்கொண்டு வேலர்குற மாதைத் தேடியே - கந்தன்
மானிடர் வடிவு கொண்டு பாதை கூடியே - தெய்வ
55. மையல் - மயக்கம் 55

நாரதனே கூடச்சேர்ந்து வாவென்றே - கந்தன்
சீக்கிரம் குறப்பென்னாளைப் பார்க்கவே சென்று 56

வில்லெடுத்து அம்புதொட்டு வேடர் போலவே - கந்த
வேலவர் வனத்தைத் தேடி மிஞ்சி ஏலவே
57. மிஞ்சி - மிக, கடந்து; ஏல - பொருந்த 57

செல்லவழி கேட்டுத் திசை நாடியே - கந்தன்
சீக்கிரம் குறப்பெண்ணாளைப் பார்க்கவே - சென்று 58

கண்களுக் கெட்டாத தினைக் காடு தூரமோ - மெய்யா
கந்தன் வள்ளியைக் காண்ப தெந்த நேரமோ 59


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:35 am


தன்தினைப் புனமும் வள்ளித் தலமு மெதுவோ - வள்ளி
தன்னைக் காண்ப தெக்காலமோ சமயம் என்றைக்கோ 60

தூரவோ கிட்டவோ லக்குச் சொல்லு மெனக்கே - அந்தத்
தோகைதன்னைக் காண்பித்தால் சுகிர்த முண்டுனக்கு நாரதா
61. லக்கு - திசை, நெல்லை வட்டார வழக்கு
தோகை - மயில் போன்றவர்; சுகிர்தம் - நன்மை 61

வாவென்றே வேலா நண்ணி நடந்தார் - அந்த
நாகமலைக் கப்புறத்தில் நண்ணி நடந்தார் 62

வெள்ளிமலை தங்கமலை விந்தைமலை உண்டு - அங்கே
விரைகமழும் சந்தனச்சோலை வேலரது கண்டு
63. விரை - நறுமணம் 63

கிள்ளையும் குயிலன்னமும் கிளைபெருக்கவே - வேலர்
கேள்வியால் வள்ளிஎன்றதைக் கேட்டுக் கூவவே 64

தோகை வள்ளி கவணோசை தொடர்ந்துள்ளங் குளிர்ந்தார்-வேலர்
சோலைப் பெண்ணா ளோல மென்றது தோணிச்சே 65

வியாயந்தார் வாசாயத் தினைப்புனமும் வளமும் காண்கின்றார்-வேலர்
வள்ளியின் வடிவு கண்டு வந்தெதிர் நின்றார் 66

எந்தஊர் காணீர் எந்தத் தேசம் இப்பம்*
எனக் கறிய வகை வகையாய் விள்ளுவீரே நேசம்
67. விள்ளுவீர் - சொல்லுவீர்
*இப்பம் - இப்பவும் என்பதன் குமரி மாவட்டப் பேச்சு வழக்கு 67

தென்கழுகு மாமலை எந்த னூரு - யானும்
சிவலிங்கச் செட்டி மகன் கந்தனெனப் பேரு 68

சொந்தமுடன் இந்தவழி வந்து யானும்
தோகைமயில் கொண்டு இந்தப் பூமியில் வந்தேன் 69

வந்தவகை எந்தனுடன் சொல்லும் - நீரும்
வம்பு தும்பு பேசாமல் மரத்தடியில் நில்லும்
70. வம்பு - வம்புத்தனம், நேரின்மை, வஞ்சனை
தும்பு - அநாகரிக வார்த்தை 70

கண்டு கொண்டார் வேலவரும் - வள்ளி
கட்டழகி தன்னழகி செண்டுமுகில் மாதரசே வள்ளி
71. செண்டு - பூச்செண்டு 71

எந்தவூரு தேசமெதோ நாமறியோம் - இவள்
எவருபெற்ற பெண்மயிலோ நாமறியோம் 72

அந்தரமாய் வனந்தனிலே ஒரு ஆளுமில்லாக் கானகத்தின்
சுந்தரியோ லட்சுமியோ தோகையிள மாமயிலோ
மந்திரஞ்சேர் கயிலைமலை யிவள் வாழும் பரமீசுவரியோ
73. பரமீசுவரி - பரமேஸ்வரி 73

தெள்ளுபுகழ் மானவடிவு கண்டுசிந்தை மிகவே மயங்கி
வள்ளியரைத் தானெடுக்க என்ன வடிவெடுப்போம் வேலவரும் 74

குறவேஷமொடு வருவோம் வள்ளி தையலரைத் தானெடுக்க
பரதேசி வேடங் கொண்டு வள்ளிப் பாவையரை நாமெடுப்போம் 75

வளவிச்செட்டி வேடங்கொண்டு வள்ளிமாதரைக் கைப்பிடிப்போம்
இளகிமனம் வாடியதால் சுப்பிரமணியர் என்னவேடம் போடுவோம்
76. வளவி - வளையல் (பேச்சு வழக்கு) 76

வேடர்வேடம் போடுறதைக் கண்டு
மெல்லி நல்லா ளேது சொல்லுவாள்
77. மெல்லி - பெண் 77

வேறு

அன்னமே மாங்குயிலே - சின்ன
அஞ்சுகமே தேன்மொழியே
78. அஞ்சுகம் - கிளி 78[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:36 am


உன்னையல்லோ நானினைந்து - (இப்)பம்
உருகிமனம் வாடுகிறேன் 79

கன்னல் மொழி மின்னரசே - உந்தன்
கமலமுகம் காண்பதற்கு 80

என்னேனெஞ் சுருகு திப்போ - வள்ளி
ஏந்திழையே வாராயோ
81. ஏந்திழை - பெண் (அழகிய அணிகலன் அணிந்தவள்) 81

பட்டுடையும் தானிலங்கப்
பணிகள் மிகத் தான் துலங்க 82

இட்டமுடன் வந்துநின்று - இப்பம்
என் மயக்கம் தீராயோ
83. இட்டம் - அன்பு 83

காதழகும் மார்பழகும் - அளக*
முகத்தழகும் முத்தழகும்
*வசை முகத்தழகு என்றும் அமையும் 84

பாதச் சிலம்ப மேவு பண்பென்ன
பைங்கொடியே வந்திடாயோ 85

வனக் குறத்தி ஆசையினால் - வேலர்
மய்யல் கொண்டு தான் மயங்கி 86

எனக்கொருவர் தூது சொல்லி
இணங்கவரக் காணே னென்றார் 87

உன்னை மணம் செய்யுவேன் - உனைவிட்
டொருபக்கமும் போகேன் - என்னை 88

அன்னிதமென்று நினைந்துகொண்டால் - எனக்
காதரவார் பெண்ணே
89. அன்னிதம் - அந்நியம் என்பதன் பேச்சு வழக்கு
ஆதரவு - உதவி 89

ஆதரவென்று சொன்னால் - எனக்கு
அடுத்த கிளை நீயோ
90. கிளை - சுற்றம் 90

மித்திர பேதகம் பண்ணாதே நான் சகியேன் - இனிப்
பேசாமல் ஓடிப் போவீரே
91. மித்திரபேதகம் - நட்புப் பிரித்தல் 91

ஓடிப்போ என்று சொன்னால் - எனக்கு
உயிர்நிலை இங்கிருக்கே என்னைக் 92

கூடிக் குலாவியே கொஞ்சிக் கொண்டாலுன்
குருக்களுக்கே புண்ணியம்
93. குருக்கள் - குருமார் 93

புண்ணியமும் தவமும் மடந்தனில்
போனால் செய்வார்களே
94. மடம் - சத்திரம் 94

ஆரண்யமான வனந்தனிலே புண்ணியம்
ஆரிங்கே செய்யப் போறார்
95. ஆரணியமான வனம் - பெருங்காடு 95

ஆரிங்கே என்று சொன்னால் - எனக்
காதாரம் எங்கும் உண்டோ 96

சேரும் படிக்குநீ நம்பிக் கொண்டால் - உன்
சிநேகம் பிரியேனே 97

ஆற்ற மாட்டாமல் புகல் கெட்டு
அலைகிறீர் தொண்ணாந்து - சும்மா
98. ஆற்ற மாட்டாமல் - பொறுக்க மாட்டாமல்
தொண்ணாந்து - ஏங்கி (பேச்சு வழக்கு) 98

பீற்றாதே போமிந்த மட்டுக்கு - தர்க்கித்துப்
பேசினால் கோபம் வரும்
99. பீற்றாதே - தற்பெருமை பேசாதே
தர்க்கித்துப் பேசினால் - வாக்குவாதம் செய்தால் 99


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:36 am


கோபமுள்ள இடத்திலே அதிகக்
குணமுண்டு என்பார்களே - மனத்
100. மனத்தாபம் - மனவருத்தம் 100

தாபமில்லாமலே சேரு மந்திரித்
தாலுந்தன் தன்னாளாயிருப்பேன்
101. மந்திரித்தல் - மந்திரம் செபித்தல் 101

தன்னாளா யிருக்கநீ எனக்குத்
தாய்தகப்பன் கிளையோ 102

எட்டி உன்னாதே மெட்டி மின்னாதே*
இனி உன்னால் ஏன்றதைப் பார்
103. எட்டி உன்னுதல் - தாவி உயர்ந்து விரைந்தெழும்புதல்
*வெட்டி மின்னாதே என்றும்பாடம்-கண்டித்துப் பேசாதே 103

கோரணி பண்ணாதே இதுவரை
கோபம் பொறுத்திருந்தேன்
104. கோரணி - குறும்புச் செய்கை 104

ஆரென்றும் பாராமல் பாங்கியரை விட்
டடித்து முடுக்கச் சொல்வேன்
105. அடித்து முடுக்க - அடித்துத் துரத்த 105

அடித்து முடுக்க என்றால் எனக்கு
அவ்வளவும் லட்சம் பொன்னே 106

பிடித்த பிட்டுக்கு மண்சுமந்தே அடி
பட்டது சொக்க ரல்லோ 107

மனதுக் கேற்ற மாப்பிள்ளை தானே - குகனை
மணம் செய்துக்கோ வள்ளி மானே 108

தனதாகு மானால் வள்ளித் தாயே - கந்த
சாமி தருவார் வெகு நன்மையே
109. தனது (ஆகுமானால்) - நட்புரிமை 109


அசுரரைப் பொருதுமே வேலன் - அயி
லாண்டவள் உதவிய பாலன் சும்மா
110. அயிலாண்டவள் - அகிலாண்டேசுவரி - உலகநாயகி 110

வசியம் பனிரண்டுகை தோளன் - உந்தன்
மனதுக்கிசைந்த மணவாளன்
111. வசியம் - பரந்த 111

கழுகுமலையில் முருகேசன் - உந்தன்
கருணைக் கிணங்கும் உபகாரன் - அவரை 112

வேறு

தழுவிக் கொண்டால் வெகுசெம்மையே - கந்த
சாமி தருவேர் வெகு நன்மையே 113

கலியுக வரத குமாரன் - ஆர்க்கும்
கருணைக் குகந்த உபகாரன்
114.கலியுக வரதகுமாரன்-கலியுகத்தில் அருள்செய்யும்கடவுள் 114

சலியாமல் சேரச் சம்மதிப்பாயே - வள்ளித்
தாயேஉன் மனதில் பதிப்பாயே
115. சலியாமல் - துக்கப் படாமல் 115

ஆரோ எவரோ என்றெண்ணாதே - சும்மா
அணைந்துக்கோ வினைகள் வாராதே 116


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:37 am


வேறே பேதகம் நினையாதே - வெற்றி
வேலரைச் சேர்ந்துக்கோ மாதே
117. பேதகம் - வேறுபாடு 117

கமலச் சரவணச் சண்முகனே - மேவிக்
கலந்துக்கோ நல்ல சேவகனே
118.சரவணச் சண்முகன் - சரவணப் பொய்கையில்
வளர்ந்ததால் வந்த பெயர் 118

அசுரர் பணி குழந்தைக் குகனே - நீ
அணைந்து கொண்டால் நல்ல முகனே 119

வேலுண்டு வினையில்லை தானே - வெற்றி
வேலரைச் சேர்ந்துக்கோ மானே 120

தனித்துநீ இருப்பது வருத்தம் - இந்தச்
சாமிக்கும் உனக்கும் நல்ல பொருத்தம் 121

வள்ளியே உன்னைநான் கண்டேன் - இப்பம்
மையலைத் தீர்த்துவி டாயோ 122

கண்கொண்டு என்னைநீ பாராய் - சற்று
காத்துப் பார்த்துநீ தாராய் 123

வேறு

வேள்வி மலைக் கரசே சிற்றூர் குடி
வேடுவர் கோமானே (தனன)
124. வேள்வி மலைக் கரசு - வள்ளியின் தந்தைக்குரிய மலை 124

தாழ்விலா வாழ்க்கையுடன் எனைப்பெற்ற
தந்தையே அண்ணன் மாரே (தனன)
125. தாழ்விலா வாழ்க்கை - குறையா வாழ்க்கை 125

என் தாய் தேடினளே எனைத்தேடி
ஏங்கி இருப்பதுண்டோ 126

மறக்க மனம் கூடுதில்லை - வஞ்சி
மாதே உந்தன் மய்யல் கொண்டு 127

வாடுறேன் இப்போதே உறக்கமும்
வருகுதில்லை என்ன செய்குவேன் 128

வெயில்தனில் தனித்திருக்க விதிதானோ - உன்னை
விட்டிருக்கத் தாய்க்குச் சம்மதி தானோ
129. சம்மதி - சம்மதம் 129

நம்பின பேர்க்கு வஞ்சகம் செய்யலாகுமோ - உன்னை
நாடி வந்து வாடி நொந்து நையலாகுமோ 130

வம்பு சேரும் கொங்கைநடு வுற்று நானும் - முத்து
மாலையாய்க் குலுங்க வரம் பெற்றிலேனே
131. வம்பு - மார்புக் கச்சு 131

துள்ளுமுன் விழியிலிட்ட மைய தாகவே
துலக்கமா யிருந்தேனில்லை மெய்ய தாகவே
132. துலக்கம் - விளக்கம் 132

வள்ளியுடன் முகத்தில் பூசு மஞ்சளாகவே
மாதுடன் இருந்தே னில்லை தஞ்ச மாகவே
133. தஞ்சம் - அடைக்கலம் 133

கன்னல் மொழி மாது - வள்ளி
மின்னாள் அப்போது 134


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:37 am


அப்பனே குமராண்டி - உன்
தகப்பன் பேயாண்டி சொன்னால் 135

தண்ணீர் உண்ணநீர் எண்ணாமலே
நின்னீர் யெப்பவே உன்னை வேண்டித்
தொழ யிருப்பவே மனம் பூண்டீர்
136. நின்னீர் - நின்றீர் 136

அடியேன் வெண் ணீறணிந்தேன் உந்தன்
குடிநான் என்று துணிந்தேன் 137

மிடிதீர எனைப்பாரும் - இந்தப்
படியோர் புகழ் காரும்
138.மிடி - வறுமை
காரும் - 'காப்பாற்றும்' என்பதன் மரூஉ 138

வானோர் புகழ் வேலர் - நீர்
தானா வென்று துதிப்பேன் 139

இறைப் போதிலும் பிரியேன் - மாத்
திரைப் போதிலும் மறவேன்
140. இறைப்போது - சிறிது நேரம்
மாத்திரைப்போது - கைந்நொடி நேரம் 140

துரையாகிய செந்தூரச் சந்த
வரை மேவிய குமரா 141

பவனிச் சிறப்பு

பானை வயிற்றோன் கழலினை
பண்புடன் போற்றுவோமே - நற்கதலி
பழமொடு சர்க்கரை அவலொடு எள் பொரி
பலகனி பட்சண வகை
சடுதியில் அருந்தியே பாரத மேரு
வரைந்தோன் இளையவர் பாதம் பணிந்திடுவோம் (தனன)
142. பானை வயிற்றோன் - பிள்ளையார்
கதலி - வாழை; சடுதியில் - விரைவில் 142

வாரணங் கொட்டு முகில் மாதரசி வர
வந்து நடனஞ் செய நட்டுவர்கள்
மங்கையர் கொங்கைகள் செங்கை குலுங்கிட
மத்தள வீணைகள் கைத்தாளம் நேர்செய்ய
மாதர்கள் ஆடிடவே சுப்பிரமண்யர்
வந்தார் பவனிதனில் (தனன) 143

காரணனாக வந்து அடியாரைக்
காப்பது நின்கடன் காண் பொதிகையில்
கரக முனிக்கொரு குருவெனப் பத்திரு
கரமயில் கொடுவினை அறுபட ஏவிய
கழுகு மலைக் குமரா குறவள்ளி
காதலனே குகனே (தனன)
144.காரணன் - கடவுள் - "உயிர்கட்கெல்லாம் காரணம்
ஆய மேலோன்" (கந்தபுராணம்); கரகமுனி - குடமுனி
பத்திரு கரம் அயில் கொடு - பன்னிரு கைகளில்
வேலினைக் கொண்டு 144

அந்திமதி சூடும் பரமன்
அருளிய பாலகனே - கொடிய
அமர்தரு செருவினில் இயல்கொடு சமர்செய
அலகை நிணம்உண கழுகு குதிகொள
அசுரர்கள் மாய்ந்திடவே - தெய்வ லோகத்து
அமரர் சிறை மீட்டாய் (தனன)
145. அமர்தரு செரு-உக்கிரம் மிகுந்தபோர் நிகழுமிடம்
இயல் - முறை; அலகை - பிசாசம்
குதிகொள - குதித்தல், பெருகுதல் 145

விந்தை பேர்க் காவில் குறத்தியை
மேவிடவே நினைந்தாய் - குறவரில்
வில்லும் அம்பொடு செல்லும் பேர்துணை
வெல்லவே நினை வல்லவோ முன்
வேங்கை மர மாகி நின்றதொரு
வேலவ னேகுக னே (தனன) 146


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:37 am


வரம் பெற்ற கும்ப கர்ணன் இந்திர சித்து
மற்றுள பேரை எல்லாம் அடக்கியே
வஞ்சக ரானவர் நெஞ்சில் அறைந்திட
வாளிய தேவிய மால் மருகா குகா
வாய்த்திடு நற் கழுகு மலைதனில்
வாழும் குருபரனே (தனன)
147. வாளி - அம்பு; மால் - திருமால் 147

திறமுற்ற பன்னிருகை அயில்கோடு
சிந்தினை வேரறுப்பாய் - கயிலைச்
சிவமய ருத்திரன் அருளிய புத்திரனைத்*
தினமும் நினைத்திட வினைகள் அறுத்திடும்
சேவற் கொடியனே உனை நிதம்
சேவடி போற்றுவமே (தனன)
148. சிந்து - கடல் (வேல் கொண்டு வேலைப்
பண்டேறிவோனே - திருப்புகழ்)
சிவமய ருத்திரன் - மகா சங்கார காரணன் (அழித்தற் கடவுள்)
*புத்திரனே என்றும் பாடம் 148

ஆனையை முன்னாளில் சலந்தனில்
ஆம் கரா பற்றிட மூலமென்று
அழைக்கும் அக் கரி பிழைக்க நேமி தொட்டங்(கு)
கராவை முன் சங் கரித்திடும்
அரி மருகா குகனே நின்னடி
அன்புடன் போற்றுவமே (தனன)
149. கரா - முதலை; நேமி - சக்கரம் 149

செந்தினில் வளர்ந்த குமரன் அடியவர்
சிந்தையில் நிறைந்த முருகன் - கனக்குழல்
தெய்வத் திருமடந்தை கணவனைச்
சேவடி போற்றுவமே - தனன
சுந்தர மிலங்கு மயிலன் நலம் பெறுஞ்
சுந்தரி தருங் குருபரன் கதிர்சொரி
துய்யவடி வேலன் பாதமலர்
சூழ்ந்து வணங்குவமே (தனன)
150. சுந்தரம் இலங்கு மயிலன் - அழகியமயிலூர்தி உடையவன்
நலம் பெறுஞ் சுந்தரி - உமை; துய்ய - தூய - பரிசுத்த 150

செஞ்சர ணிறைஞ்சும் அடியார்க் கருள்தரும்
கஞ்ச மலர் மிஞ்சு சரணம் - தினைப்புனம்
சென்று குறமாதைப் புணர்ந்தருள்
தேசிகனைப் பணிவோம் (தனன)
151. செஞ்சரண் - சேவடி
கஞ்சமலர் மிஞ்சு சரணம் - தாமரையினை வெல்லும் சேவடி 151

தேசிகன் குருபரன்
அஞ்சின் இறை அஞ்சிலேன் - மெய்க்
கதிபுரை அம்பிகை
அலர்ந்த கருணைத் துரைத்திரு
ஆறுமுகக் குமரன் பதத்தை
அனுதினமும் வாழ்த்துவமே (தனன)
152.அஞ்சின் இறை அஞ்சிலேன் - ஐந்து புலன்களின்
அலைக்கழிவுக்கு அஞ்சாத என்னுடைய மெய்க்கதி
என்று கொள்ளலாம் 152

தோடவிழ் கடப்ப மலரும் பிரசம் கமழ்
ஏடவிழ் நறைத் தொடையலும் புனைந்தருள்
சோதிவடி வேலன் பதத்தைத்
துதித்து நாம் வாழ்த்துவமே (தனன)
153. தோடு, ஏடு - இதழ்; பிரசம் - தேன் 153

காடுறுமாச் சிறுமியைத் தினந்தினம் நாடி
மயலுற்ற தன்னை முன்னின்று
காத்த தனிக்குமரன் பதத்தைக்
கனிந்து வணங்குவமே (தனன)
154. காடுறுமாச் சிறுமி - தினைப் புனைத்திலிருந்த வள்ளி 154


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:38 am


வண்டுகுடி கொண்ட குழலின் - வணங்குவார்
பண்டை வினை துண்டு செயுமின் - பத்திரு
வள்ளிக் கிசைந்த குகன் பதத்தை
வணங்கிக் கொண்டாடுவமே (தனன)
155. பண்டை வினை - முன்வினை 155

சண்டனுடலங் கிழிபடத் திருக்கழல்
தந்த விமலன் தருகுகன் தனைத் தினம்
சாமி எனப் பணிவார் அருவினை
தானறும் நிச்சயமே (தனன)
156. சண்டன் - காலன் (எமன்) 156

திண்டிறல் மிகுங் குருபரன் திரள் செயும்
வண்டுகள் முழங்குமாலை சூழ
திருச் செந்தில் மால்வரை மேல் சிறந்த
வேலவனை வாழ்த்துவமே (தனன)
157. திண்டிறல் - மிகுவலி
திரள் செயும் வண்டுகள் - மிகுந்து முழங்கும் வண்டுகள் 157

பண்டுகட லுண்ட முனிவன் - கழலினை
தெண்டனிட வண்டமிழ் உரைதனைப் புகலும்
பன்னிரு கைக் குமரன் பதத்தைப்
பணிந்து கொண்டாடுவமே (தனன) 158

பள்ளு

கொண்டல் இளசைக் குமரன் எட்டேந்திரன்
மண்டலீகன் பண்ணை தனிலே - இன்று
159.கொண்டல் இளசை - மேகம் தவழும் இளசை
(மழைவளம் பொருந்திய இளசை)
மண்டலீகன் - மண்டலாதிபதி 159

கண்டிடும் நெல்லுக்கும் புல்லுக்கும் உள்ள
கணக்கு நான் சொல்கிறேன் ஆண்டே
160.ஆண்டே - பண்ணை முதலாளியைப் பணியாள்
அழைக்கும் முறை 160

மாலோன் வணங்கும் எட்டீசுபரன் கோவில்
வகைக்கேநற் சீரகச் சம்பா நெல்லில் 161

நாலாயிரம் கோட்டை ஓர் தொகையாய்
நம்மள் நாதர் பட்டர் வசம் அளந்தேன்
162. நம்மள் - நம் (நம்ம - நம்மள் - பேச்சுவழக்கு) 162

மெய்யான காரணராம் வெங்கிடாசல
விட்டுணு கோவிலுக்குந் தன் சம்பா நெல்லில் 163

அய்யாயிரம் கோட்டை நம்பி திருமலை
அய்யங்காரர் தன்வசம் அளந்தேன் 164

சாத்தூர்ப் பெருமாள் படித்தரம் பூசை
தவறாமல் என்றும் நடக்க உங்கள்
165. படித்தரம் - கோவில் முதலியவற்றுக்குச் செய்யும் கட்டளை 165

வார்த்தைப் படிக்கு ஆயிரம் கோட்டை கஸ்தூரி
வாரணனம் பாரத்தில் அளந்தேன்
166. கஸ்தூரி வாரணன் - பெயர்
அம்பாரம் - குவியல் 166

விண்ணோர் புகழும் கழுகா சலக்குக
வேளுக்குப் பூந்தாளைச் சம்பா நெல்லில்
167. பூந்தாளைச் சம்பா - நெல்வகை 167

அண்ணர் பட்டம் வசம் எண்ணாயிரம் கோட்டை
அட்டி பண்ணாமல் அளந்தேன்
168. அட்டி பண்ணாமல் - தடை சொல்லாமல் 168[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:38 am


கந்தன் குமர ரெட்ட பாண்டிய தெய்வேந்திரன்
கண்ணன் திருநாமம் துதிக்கும் நாகூர் 169

முத்துப் புலவர் வளவுக்குத் தானுண்ண
முன்னூறு கோட்டை நெல்ல ளந்தேன்
170. வளவு - இருப்பிடம் 170

திட்டமதாய்க் குளம் வெட்டுக் கென்றே - சேரில்
கட்டுநெல் லாயிரம் கோட்டைக் (குளத்)தைக்
171. சேர் - நெற்கூடு, வைக்கோல்புரி சுற்றி அமைப்பது 171

கெட்டியதாய் நோட்டம் பார்க்கின்ற ராக்கப்பன்
செட்டியார் தன்வச மளந்தேன் 172

சட்டமதாகப் படிக்கும் கனக
சபாபதியா பிள்ளை கணக்கின் படி
173. சட்டமதாக - செவ்வையாக 173

கொட்டிய முத்துப் பேயன்பால் எண்ணாயிரம்
கோட்டை நெல் பாட்டத்தில் அளந்தேன்
174. முத்துப்பேயன் - முத்தப்பய்யன்; பாட்டம் - பகுதி 174

உவணகிரி சுத்தித்தேர் ஓட்டி வைப்பதற்கு
ஒன்பதினாயிரம் கோட்டை நெல்
175. உவணகிரி - கழுகுமலை (உவணம் - கழுகு) 175

எவரும் புகழும் குமாரவேல் மணியத்துக்கு
ஏற்கவே தீர்க்கமாய் அளந்தேன்
176. தீர்க்கமாய் - திட்டமாய் 176

சம்பாதி வெற்புக் குமர குருபரர்
சன்னிதிச் சத்திரம் நடக்க வென்றே
177. சம்பாதி வெற்பு - கழுகு மலை 177

கொம்பு பெறவே தொண்ணூற் றொரு
கோட்டைநெல் சுப்பன் பகுதியில் அளந்தேன்
178. கொம்புபெற - மேன்மை பெற
பகுதி - வருவாய் 178

இந்தவகை அன்பத்தீராயிரத் தெழுநூற்று
ஒரு கோட்டைநெல் நீக்கிச் சேரில்
179. அன்பத்தீராயிரம் -ஐம்பத்தீராயிரம் 179

வந்தநெல் தொண்ணூத்தி ரெண்டுலட்சம் கோட்டை
சொந்த இருப்பு காணாண்டே 180

தீர்த்த விசேடம் பெறும் தனுக்கோடி
சிவராம லிங்கருக் கென்றேகண் பார்த்தும் 181

ஓராயிரம் கோட்டைநெல் நேர்த்தியாய்ப்
பள்ளையச் சம்பா நெல்லளந்தேன்
182. பள்ளையச் சம்பா - நெல்வகை 182

காசினி போற்றிடு மாற்றினிக் கிரிக்கோவில்
கட்டளைக் கெண்ணூறு கோட்டை விசு
183. கட்டளை - கோவில்களுக்குச் செய்யும் நிபந்தனை 183

வாசமதாய் நமசிவாயம் பண்டாரம்
வசத்தில் மிளகுநெல் அளந்தேன் 184

கூடல்வளர் சொக்கேசர் மீனாட்சிக் கெண்ணூறு
கோட்டைநெல் குங்குமச் சம்பாயிந்த 185

நாடறியும்படி கட்டளை மீனாட்சி
நாதர்பட்டம் வசமளந்தேன் 186

தாழ்வு வராமலே கேசய்யங் காற்குப்பூந்
தாளைச் சம்பா நெல்லளந்தேன் 187

காந்திமதி வடிவாள் நெல்லை நாயகர்
கட்டளைக் கெண்ணூறு கோட்டை 188

வராந்தக மாகப்புளுகு சம்பா நெல்லை
வாரிக் கையாரவே அளந்தேன்
189. வராந்தகம் - வராத்தம் - கட்டளை 189

புன்னைவனச் சங்கரேசுபரர் கோவிலுள்
பூசை தவறாமல் நடக்கத்தானே 190


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:38 am


அன்னதானச் சம்பா ஓர்தொகையாக
அளந்தேன் அறுநூறு கோட்டை 191

ஆதிவெயில் உகந்தாள் முப்பிடாரி
அலங்காரிக் கஞ்ஞூறு கோட்டை மனு
192. அஞ்ஞூறு - ஐந்நூறு 192

நீதியாகவே பண்டாரம் கையினில்
நேர்முத்துச் சம்பா நெல்லளந்தேன்
193.பண்டாரம் - சிவனடியார்; இச்சொல்
பண்டாரகன் என்பதன் திரிபு 193

மங்காத சீர்த்திபெறும் எட்டயபுரம் தனில்
தங்காளி நாயகிக் கென்றே - கன 194

பொங்கமாய் முன்னூறு கோட்டைநெல்
பூசாரி அங்கணன் பாரிசம் அளந்தேன்
195. கனபொங்கம் - பெருமையும் பொலிவும்
பாரிசம் - வசம் - இடம் 195

செப்பமுறும் தவசித் தம்பிரானுக்குச்
சித்திரக் காலி நெல்லதிலே சைவ 196

சுப்பன் பண்டாரன் வசமளந்தேன் ஓர்
தொகையாய் அறுநூறு கோட்டை 197

தாரணி போற்றும் இளசை அன்னதானச்
சத்திரத்துக்கே ராசவெள்ளை நெல்லில் 198

ஆருமகிழச் சிதம்பரத் தய்யன் வசத்
தாயிரங் கோட்டைநெல் அளந்தேன் 199

குலதெய்வமென்னுஞ் சகதேவிக் கானைக்
கொம்பன் சம்பா நெல்லதிலே நான்
200. சகதேவி - குலதெய்வத்தின் பெயர்
ஆனைக் கொம்பன் - நெல் வகை 200

நிலவரமாக முன்னூத் தஞ்சு கோட்டைநெல்
201. நிலவரம் - இங்கு வழக்கப்படி என்று கொள்ளலாம்
* நேற்று அந்தி எனப் பிரியும் 201

காசி கேதாரத்தினில் வாசமிகு விசுவேசர்
படித்தரம் நடக்கப்படி
202.படித்தரம் - கோயில் முதலியவற்றுக்கு உதவும்
தினசரிக் கட்டளை 202

பூசை தவறாமல் ஆயிரம் கோட்டைநெல்
போசன சம்பா நெல் அளந்தேன்
203. போசன சம்பா - நெல்வகை 203

மங்கையெனும் கோவில்பட்டி தனிலே
வாழ்பூவண நாதருக் கென்றே வெகு 204

இங்கிதமாகவே முன்னூறு கோட்டை
நெல்லிற்குச் சம்பா நெல்லளந்தேன்
205. இங்கிதமாக - இனிமையுடன் 205

சந்தவரை திருச்செந்தூரில் மேவிய
சண்முகனார் கட்டளைக்கே நல்ல 206

வெந்தயச் சம்பா எழுநூறு கோட்டைநெல்
வேலன் பகுதியில் அளந்தேன்
207. வெந்தயச் சம்பா - நெல்வகை; பகுதி - வருவாய் 207

சாத்திர தோத்திர வேத பாராயணத்
தாத் தய்யங்கார் வகைக்கென்றே 208

ஆத்தி கிணத்தினில் அஞ்ஞூறு கோட்டைநெல்
காத்தன் பகுதியில் அளந்தேன் 209

ஆதிக்கற்குப் பராபரி யாகிய
ஆன கண்ணப் பருந் தனக்கு 210


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:38 am


மாதிஷ்டமாகவே எண்ணூற் றஞ்சு கோட்டைநெல்
மாசற்ற சம்பாவில் அளந்தேன் 211

நற்றமிழ் ஓங்கும் கடிகைப் புலவர்
நமச்சிவாயப் புலவருக்கே துரை
212. துரை - தலைவர் 212

சொல் தவறாமல் முன்னூற்றஞ்சு கோட்டைநெல்
தூய வெள்ளை தனில் அளந்தேன் 213

வீணைதனில் சுர ஞான மிசைத் திடும்
வெள்ளை அண்ணாவி குமாரர் தனக்கும் என்று
214. சுர ஞானம் - இசை அறிவு
அண்ணாவி - கூத்து முதலியன பழக்குபவர் 214

வான்புகழ் தொண்ணூற் றஞ்சு கோட்டை நெல்
வாழைப் பூச் சம்பாவில் அளந்தேன்
215. வாழைப்பூச் சம்பா - நெல்வகை 215

சம்பிரதிப் பிள்ளை வயித்திய லிங்கர்
தயாலெழுதுங் கைக் கணக்கின் படி
216. சம்பிரதி - தலைமைக் கணக்கன் 216

அம்பாரஞ் சேரில் களஞ்சியந் தோறும்
அனேக நெல் கட்டினேன் ஆண்டே
217.அம்பாரம் - சேர், களஞ்சியம்;
நெல் சேர்த்து வைக்கும் இடம் 217

இத்தனை நெல்லும் உள்ளூர் மணியம்
வெங்கடேச ரெட்டு முன்னிலைக் கேயின்று
218. மணியம் - விசாரணைக் காரர் 218


கந்த னனுத்தாரப் படிக் களந்துமே
கட்டி வைத்தேன் பண்ணை ஆண்டே 219

நந்தவனச் சிந்து

சந்தமிகும் புஷ்பவனமே - முத்து
சாமி செய்த நந்தவனமே - என்று 220

சார்ந்தார் களிகூர்ந்தார் - மனந்
தேர்ந்தார் கலி தீர்ந்தார்
221. கலி - சிறுமை, வருத்தம் 221

கொந்து கொந்தாய் மலர்தூவும் - மயல்
கொண்டிடவே குயில் கூவும்
222. கொந்து - கொத்து 222

பின்னும் கூடும் பெடையோடும்
உறவாடும் விளையாடும் 223

பஞ்சவர்ணக் கிள்ளைச் செறிவும் - வெகு
பாந்தக் கலவிகள் புரியும் - கனி 224

பழுக்கும் கொத்தி இழுக்கும் - பிரசம்
ஒழுக்கும் நிலம் வழுக்கும்
225. பிரசம் - தேன் 225

அஞ்சிறைத் தும்பிகள் ஓங்கும் - குயில்
அன்புடன் வயினால் வாங்கும் - மலர்
226.அஞ்சிறைத் தும்பி - 'கொங்கு தேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பி' - குறுந்தொகை - ஒப்பு 226

அடுக்கும் கீதம் தொடுக்கும் - மார்க்க
மெடுக்கும் இன்பம் கொடுக்கும்
227. கீதம் - இசை
மார்க்கம் - கூத்து வகை 227

இச்சையுடன் இரண்டு மந்தி - மாவில்
ஏறிப் பலாக்கனி அருந்திக் - கனிக்
228. கனிக்கெதிரும் - கனிக்காக எதிர்த்துக் கொள்ளும் 228

கெதிரும் சோலை உதிரும் - சுளை
உதிரும் கனி உதிரும் 229

உச்சிதச் செண்பகத் தோப்பும் - பெண்கள்
ஊடே மலர் கொய்யும் தாப்பும் - தென்றல்
230. உச்சித - உயர்ந்த
தாப்பு - நேரம், சௌகரியம், இடம் 230

ஓட்டமும் மலர் ஆட்டமும் குயில்
ஈட்டமும் கன தேட்டமும்
231. ஈட்டம் - கூட்டம்; தேட்டம் - செல்வம் 231

கற்பகக் காவனம் போலே - மயக்கங்
காணுதடி ஒருக்காலே - சுத்திக்
232. கற்பகக்கா - கற்பகச் சோலை
காவனம் - சோலை - ஒருபொருட் பன்மொழி
ஒருக்கால் - ஒருமுறை 232

கன்னலும் வளந் துன்னலும் கன
சென்னெலும் சடைப் பின்னலும்
233. கன்னல் - கரும்பு; வளந்துன்னல் - வளம் சேர்த்தல்
சென்னெல் - செந்நெல், எதுகைக்காகத் திரிந்தது 233

பொற்ப மிகுங்கன வாளையும் - தன்பூட்
டுட வாளெனும் தாளையும் - சாலைப் 234

பொங்கமும் திருவங்கமும் மகன்
சங்கமும் பிரசங்கமும்
235. பொங்கம் - பொலிவு
அங்கம் - அலங்காரம்
சங்கம் - கூட்டம் 235

குங்குமச் சந்தன மரமும் - புன்னை
கொண்டு வளர்ந்திடு முரமும் - மலர்க் 236


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:39 am


கொல்லையும் மணமுல்லையும் - பசுங்
குல்லையும் திருவில்லையும்
237. குல்லை - இருவாட்சி; வில்லை - வில்வம் 237

புங்கமிகு நந்தவனமும் - தெய்வ
பூமியிற் கற்பக வனமும் - கண்டு
238. புங்கம் - உயர்ச்சி 238

புகழ் ராதை இகழ்வார் மனம்
மகிழ்வார் கிட்ட யகழ்வார் 239

மாமரம் தோறும் உலாவி - குயில்
மாரனை வாவென்று கூவி - அதில்
240. மாரன் - மன்மதன் 240

வசிக்கும் குடல்பசிக்கும் - மெத்த
ருசிக்கும் கனி பொசிக்கும் 241

தென்னங் குரும்பையைத் தின்று
தெற்கே நிழலிலே உறங்கும் - மனம் 242

செழிக்கும் உடல் நௌிக்கும் முகம்
களிக்கும் மதங் கொழிக்கும் 243

பன்னகந் தென்றலைப் புசிக்கும் - கன
பண்புயரு மலையினில் வசிக்கும் - பல
244. பன்னகம் - பாம்பு 244

வளமும் பரிமளமும் கடல்
வளமும் மலை வளமும்
245. பரிமளம் - நறுமணம் 245

தங்கும் வளம் கண்டு மகிழ்ந்தார் - முத்து
சாமி தெய்வேந்திரனைப் புகழ்ந்தா - ருப
246. முத்துசாமி தெய்வேந்திரன் - பாட்டுடைத் தலைவன் 246

சரித்தார் மெள்ளச் சிரித்தார் - மலர்
பறித்தார் குழல் தரித்தார் 247

காவடிச் சிந்து

தாயே சரசோதி - அருள்
தரவேணுநீ தாயே
248. சரசோதி - சரசுவதி என்பதன் இசை வழக்குத் திரிபு 248

வாயீசுபரி அரசே - தமிழ்
வாணற் கருள் புரிவாய்
249. வாயீசுபரி - வா ஈச்வரி என வரும் 249

காவடிச் சிந்துபாடி - உந்தன்
கருணை மலர் தேடி 250

சேவடி தனைப் போற்ற - அருள்
புரிவாய் மனம் மகிழ்வாய் 251

ஆண்டி குமராண்டி - எழில்
அழகு மயிலாண்டி 252

மூண்டி ரண சூரர்களைத்
தாண்டி மயி லேறி
253. மூண்டி - கூடி ; இரணசூரர் - யுத்தவீரர் 253

முவ்விரண் டாறுமுகம்
எவ்வாரென் றறிந்து
254. மூவிரண்டு - முவ்விரண்டு எனக் குறுகியது 254

செவ்வே வழி நடந்தால் சிவன்
அவ்வாறே துணை செய்வார்
255. செவ்வே - நேரே நன்றாக 255

மாலிதனை வெல்வேன் - சரவண
வாவென்று சொல்வேன்
256. மால் - மயக்கம் 256

பரனே அறுமுகனே உனதிரு
நீறிட வினை தீர
257. உன - உன்னுடைய 257

ஞானக் கடல் மூழ்கி - வெகு
மானத்துடன் வாழ்க
258. வெகுமானம் - பரிசு, சன்மானம் 258

பாடுவமோ இவ்வனத்தை - வேலர்
பண்புனத்தை நாடுவமோ
259. பண்புனம் - பண்படுத்தப்பட்ட புனம் 259

தேடுவமே இவ்வனத்தில் - வேலர்
சிறந்திருக்கும் இடந்தேடி 260

ஓடுவமோ கிரியைச் சுற்றி
ஒளிந்திருந்தால் பிடிக்க லாமோ 261

ஆடுமன்ன மயிலினங்காள் - செந்தூர்
ஆண்டி வேலர் வரக் காணையளோ
262.காணையளோ - கண்டீர்களோ அல்லது
காணீர்களோ என்பதன் வட்டார வழக்கு 262

சின்ன அன்ன மயிலினங்காள்
செந்தூர் சேவகனைக் காணையளோ 263

அன்னநடைப் பட்சிகளே - எங்கள்
ஆண்டி வரக் காணையளோ 264

மாடப்புறாக் கிளிப் பிள்ளை - வடி
வேலர் வரக் காணையளோ 265

வாடை கண்டு மயங்கி வரும் - வடி
வேலர் வரக் காணையளோ
266. வாடை - வடகாற்று 266

சூரனையும் சூறையாடி வந்த
சொகுசன் வரக் காணையளோ
267. சூறையாடுதல் - அலைகழிக்க (வென்ற)
சொகுசன் - சுகானுபவமுள்ளவன் - நாகரிகன் 267

ஏறுமயில் ஏறிவரும் - எங்கள்
இறையவனைக் காணையளோ 268

கரடி பன்றி யாளிகளே - செந்தூரக்
கந்தன் வரக் காணையளோ 269

ஓரடியா லளந்தவர் தன் மருகன்
உத்தமனைக் காணையளோ 270

காடைகளே கவுதாரிகளே - செந்தூரக்
கந்தன் வரக் காணையளோ
271. காடை, கவுதாரி - பறவையினங்கள் 271

தேடி வரும் புள்ளினமே - செந்தூரச்
சேவுகனைக் காணையளோ 272

பஞ்சவர்ணக் கிள்ளைகளே - சிவன்
பாலன்வரக் காணையளோ 273

கொக்கினங்காள் குருகிணங்காள் - செந்தூரக்
குமரன் வரக் காணையளோ 274

சோலையில் வாழ் குயிலனங்காள் - செந்தூரச்
சொகுசன் வரக் காணையளோ 275

காலைமதி சூடிதரும் - கந்த
சுவாமி வரக் காணையளோ 276

பாய்ந்து வரும் புலிகரடி - சிவன்
பாலன் வரக் காணையளோ 277

மேய்ந்து வரும் தாராவே - எங்கள்
வேலர் வரக் காணையளோ
278. தாரா - ஒருவகைப் பறவை 278

கூவுகுயில் மயிலினங்காள் எங்கள்
குமரன் வரக் காணையளோ. 279

சுப்பிரமணியர் பேரில் சிந்து முற்றும்


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:41 am

4. சித்தராரூட நொண்டிச் சிந்து

(ஆசிரியர் பெயர் தெரியவில்லை)


அத்திமா முகவன் செய்ய வடியினைக் கமலம் போற்றிச்
சித்தரா ரூடம் தன்னில் செப்பிய பொருளா ராய்ந்து
சுத்தமா யெவர்க்கும் தோன்றச் சுருக்கமாய் நொண்டிச்சிந்தாய்
வித்தகர் அருளினாலே தமிழினால் விளம்பல் உற்றேன்

சித்தராரூடம் - சித்தர் எழுதிய ஆருடம் என்னும் நூல் (விஷவாகடம்)
அத்திமாமுகவன் - யானைமுகனாம் விநாயகர்
வித்தகர் - ஞானமுடையோர்

குமார நாயகன் துணை

தெட்சிணாமூர்த்தி கடாட்சம் முன்னிற்க வேணும்

கடாட்சம் - கடைக்கண் நோக்கு
திருமருதூர் வளரும் நாகலிங்கர்
சீர்பாதக் கமலமென் சிந்தையுள் வைத்து
மருவுசித்த ராரூடப் பொருளிதனை
வகுத்துச் சொல்லுறேனிந்த மகிலத்தில்
புண்டரீகத் திலுறை வோன்படைத்ததிற்
பொல்லாத விஷச்சந்து எல்லாமுமே
விண்டுரைக்கக் கேளுமினி நல்ல பாம்பு
விரியன்வழலை கொம்பேறி மூக்கன்
சாணார மூர்க்கன் புடையன் மண்டலி
சவளக்காரை மண்ணுளி சாரை 5
1 - 5.
திருமருதூர் - ஆசிரியரின் ஊராகலாம்
மகிதலம் - உலகம்; புண்டரீகம் - தாமரை
விண்டு - விளக்கமாக;விரியன், வழலை, கொம்பேறி மூக்கன், சாணார மூர்க்கன்,
புடையன், மண்டலி, மண்ணுளி, சாரை - பாம்பு வகைகள்

வாணாளை வாட்டும் செய்யான் இருதலை
மேலான சிலந்திப் புலிமுகப் பூச்சி
தேள்புள்ளி வண்டு பூரம் பச்சோந்தி
செவ்வட்டைபேய் நரிநாய் சோர்வெலி
வாள்பல்லுப் பூனை புலிபிங்கவங்கம்
வனத்துத்தவளை யட்டை வாசிமுதலை
அரணை நட்டுவக் காலி முதலியவை
அல்லாது சீவசெந்துவும் அனேகம் உண்டாம்
உரகத்தின் போநிறமும் சாதியும்
ஊரும் மணமும் மற்றுஉறைவிடமும் 10
6 - 10.
புள்ளி - பல்லி; பூரம் - பூரான்; அரனை - பாம்பரனை எனப்படும்
நட்டுவக்காலி - ஒரு நச்சுயிர் - நண்டு வாய்க்காலி என்ப
சீவசெந்து - வாழும் விஷ உயிர்கள்; உரகம் - பாம்பு

படமெடுத்தாடும் குறியும், முட்டை யிட்டுப்
பருவமறிந்து பொரித்தூரும் பரிசும் சில்
விடமுறு தங்கக் குறியும் கடித்திடும்
விடமும் கடித்தகடிமீளாததும்
கால்கடி அடக்ககுறி வேகக் குறி
கருதிய தூதரின் கண் குறிப்பும்
சீலமுள்ள மணி மந்திரத்தால் கருடதியானத்தால்
மருந்தினால் தீர்க்குஞ் செயலும்
குருமலரடி வணங்கி வகை யாய்க்
கூறுகி றெனிந்த குவலயத்தில் 15
11-15.
பரிசு - விதம்; தந்தம் - பல்
குரு - நூலாசிரியரின் ஆசிரியராகிய சித்தர்
குவலயம் - உலகம்

மருமலர்ப் பொருட்டுறைவோன் பயன்றருள்
மகவென வந்துதித்த மாதவத்தினோன்
காசிபன் மனைவிய ரில்மிக்கான கத்துரு
வயிற் றுதித்த கட்செவிகளைப்
பேசிடில் பேரனந்தன் வாசுகி பிலத்த
தக்கன் கார்கோடன் பற்பன்
மகாபற்பன் சங்கு பாலன் குளிகன் இம்
மாநாகம் எட்டுப் பேர்தானாதியிதில்

பாம்பின் சாதி

தேசுகட் செவி அனந்தன் குளிகனும்
செகத்தில் வேதியனென்று வகுத்தனரே 20
16 - 20
மருமலர்ப் பொருட்டுறைவோன் - பிரமன்
கத்துரு - காசிப முனிவரின் மனைவி. நாகங்களின் தாய்.
104 பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் பெற்றவள்.
கட்செவி - பாம்பு
அனந்தன், வாசுகி, தக்ஷன், கார்க்கோடன், பத்மன், மகாபற்பன்,
சங்குபாலன், குளிகன் - கத்துரு பெற்ற எட்டுப் பாம்புகள்
நாகர் - பாம்புச் சாதியினர்; வேதியன் - அந்தணன்

வாசுகி சங்குபாலன் இதுரெண்டு மன்னவனாகு
மென்று சொன்னார் முன்னோர்
தேசுறு தற்கன் மகாபற்பன் ............
தே......... வணிகனென்று மொழிந்தனரே
சூத்திரன் கார்க்கோடன் கனபற்பன் என்று
சொன்னார்களிவரில் முன்சொன்ன பாம்பு
மூத்திடும் ஆணாகும் பின்னாக மொழிந்த
பெண்பாம்பென்று மொழிந்தனரே

பாம்பின் உணவு,இரை எடுக்கும் நாள்

ஆதித்த வாரம் அனந்தன் வாசுகி
அடுத்த திங்கட்கிழமைக்கு இரை எடுக்கும் 25
21 - 25


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:41 am


ஆதித்தவாரம் - ஞாயிற்றுக்கிழமை; இரை - உணவு

போதித்த செவ்வாய் தக்கன் கார்கோடன்
புதன்கிழமை அன்றைக்கு இரைஎடுக்கும்
விடங்கொண்ட துளையெயிற்றுப் பற்பன்
வியாழக்கிழமை தனில் இரைஎடுக்கும்
படர்ந்துசென்று இரை எடுக்கும் தேடிமகா
பற்பராசன் வெள்ளிக் கிழமைதனில்
கூறுசனிக் கிழமை பகல் சங்குபாலன்
குளிகன் இராக்காலம் இரைஎடுக்கும்
பூநில மறிந்த பாப்பான் வாயுவும்
பூமண மிரண்டும் பொசித்திருக்கும் 30
26 - 30
போதித்த - கூறப்பெற்ற
பொசித்திருக்கும் - உண்டிருக்கும்

அரசன் அருகங் கிழங்கு வண்டும் எடுத்தருந்த
வளைதனில் சென்றிருந் திடுமே
சூத்திரன் மீன்தவளை தண்ணீர்த்
துறைதனில் சென்றருந்தும்

இருக்குமிடம் ஆடும் குறி

சாத்திரம் சொன்னபடியே நாலு வகைச்
சாதியிருக்கு மிடந்தனைக் கேளும்
வேதியன் கோவிலிலே மரத்தினில் வேந்தன்
மனையில் செட்டி சூத்திரன் புற்றில்
நீதியாய் வாழ்ந்திருக்கும் நால்வரும்
நின்றாடும் குறிதனை நிகழ்த்துகின்றேன் 35
31 - 35
அருகங்கிழங்கு - அருகம்புல்லின் கிழங்கு
சாத்திரம் - பாம்பு சாஸ்திரம்
நாலுவகைச்சாதி - அநதணர், அரசர், வணிகர்,சூத்திரர்
நின்றாடும் குறி - பாம்பு ஆடும் திறம்

அண்ணாந்து பார்த்தாடும் வேதியன் அரசன்
செவ்வே பார்த்தாடி நிற்கும்
கண்ணாலே தெற்கும் வடக்கும் திசை
காட்டிக்கொண்டு நின்றாடும் செட்டிப்பாம்பு
வெள்ளாளன் பூமி தன்னையே பார்த்தாடும்
வேத முறைப்படி தப்பாதிதுவே

படத்தின் குறி, நிறம், மணம்

முள்ளாகும் பாம்பின்படம் தனில் வைத்த
முத்திரையைச் சொல்லுகின்றேன் சித்திரமாக
பார்ப்பான் படத்தில் சங்கு மன்னவன்
படத்தினில் சக்கரம் பதித்திருக்கும் 40
36 - 40
செவ்வே பார்த்தாடி - நேராகப் பார்த்தாடும்
கண்ணாலே ... செட்டிப்பாம்பு - வணிகப் பாம்பு தன் கண்களை
தெற்கும் வடக்கும் நோக்கியபடி ஆடும்
வெள்ளாளன் - சூத்திரன்; சங்கு - சங்கு போன்ற குறி

காப்பான வில்லு வணிகன் படத்தினில்
காரளன் படத்திற்புள்ளடி யிருக்கும்
*(பூசுரன் ரெத்த நிறமாம் புரவலன்
பொன்னிறம் செட்டி மதியின் நிறமாம்
மாசில்லாச் சூத்திரநிறந் தீட்டிய
மைநிற மாமிது மெய்யாகுமே)
அந்தணன் நாவிமணம் யிறையவர்க்கு
ஆகில் மலர்தாழை மணமாகும்
வந்திடும் வைசியன் மணம் பாதிரி பூமணம்
சூத்திரன் மனமிலுப்பையின்பூச் 45
41 - 45
வில்லு - வில் போன்ற குறி; காராளன் - வேளாளர்
புள்ளடி - பறவையின் அடிபோன்ற குறி
*இவை பாண்டிச்சேரி ஏட்டுப் பிரதியில் கண்டவை
பூசுரன் - அந்தணன்; ரெத்த - இரத்தத்தின் சிகப்பு நிறம்
புரவலன் - அரசன்; செட்டி - வணிகன்
மைநிறம் - கருப்பு நிறம்; நாவி - புனுகு மணம்
வைசிகன் - வணிகன்

முட்டையிட்டுப் பொரித்திடல்

சாதியிந்த வகைநாலும் ஆணும் பெண்ணும்
தழுவிப் பிணைந்து கர்ப்பம் தரித்தபின்பு
நீதியாய் முட்டையிட்டுப் பொரித்திடும்
நெறியையும் சொல்லுகிறேன் அறியவுமே
காற்றுறு ஆடிமாதம் ஆணும் பெண்ணும்
கலந்து புணர்ந்துடலில் கர்ப்பமுற்று
தோற்றிய கார்த்திகையினில் கருமுற்றிச்
சூல்உளைந்து ஈனுமன்று தொட்டேளுநாள்
இருநூற்று நாற்பத் தெட்டுமுட்டை யிட்டும்
இருநூற்றிருபத்தெட்டு மேழு நாளில் 50
46 - 50


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:42 am


பிணைந்து - கூடி; காற்றுறும் - காற்று மிகுந்த
கார்த்திகை - கார்த்திகை மாதம்; உளைந்து - வருந்தி
தொட்டேளு நாள் - தொட்டு ஏழு நாள்

பருகிடும் நாலுமுட்டை சாமுட்டை
பதினாறு முட்டை நல்ல பக்குவத்திலே
ஒருமித்திருபத் தேழாம் நாளில்
உச்சிதமாகப் பொரிந்தூர்ந்து திரியும்

விஷமேறும் குறி

நாலாறு காலும் உண்டாய்த் தோன்றிய
நாளேழு நாளினில் நஞ்சு வேண்டி
மேலேறு மாதித்தனைப் பார்த்தாடும்
விளங்கு மேல்வாயின் பல்லு நான்கிலும்
கொடுவிடம் வந்துதிக்கும் பால் சுரக்கும்
கூறுபோல் ஊறுமென்று மாறாமலே 55
51 - 55
சாமுட்டை - கெட்டுபோன முட்டை
உச்சிதமாய் - தகுதியாய்; ஆதித்தன் - சூரியன்
பால்சுரக்கும் கூறு - பால்சுரக்கும் மடிபோல்

கடுவிடம் நாலெயிற்றுக்கும் பேர் காளி
காளாத்திரியி யமனி மதூதன்
மேல்வாய் அலகு தன்னில் அரவுக்கு
விளக்கமாய் நாலுபல்லு முளைத்திருக்கும்
நாலுபல்லுக்குந் துளையிருக்கும் கடியுறில்
நச்சுப்பல் துளைவழியே நஞ்சுகழன்றுவந்து
கடிவாயினிறங்கித் தொண்ணூற் றெட்டு
மாத்திரை நின்றுடலின் மண்டியேறும்
அந்தமுள்ள படத்துரகம் தோன்றினால்
அறுபதில் தோலுரிக்கு மாறாமதியில் 60
56 - 60
காளி,காளத்திரி, யமன், யமன்தூதன் - பற்களின் பெயர்கள்
வாயலகு - மேல்வாய்
தொண்ணூற்றெட்டு மாத்திரை - 98 நொடி
படத்துரகம் - பாம்புப் படம்

குதித்திடும் விடமெயிற்றி லிதுரெண்டும்
கொண்டவா ளரவுக்குக் கண்டமென்பரால்

கடிவாயின் குறி

குதித்திடு மெயிற்றரவம் பல்லுத் தைக்கும்
கடிவாயின் குறியினைக் கழறுகின்றேன்
காளியென்னும் பல்லுத் தைத்தால் புள்ளடிபோல்
கடிவாயின் குறியினில் பனீர்போல் வடிவாகும்
மீளாத காளாத்ரி தைத்த வாயில்
விளங்கு முக்கோண மஞ்சள்நீர் பொசியும்
கோதாய் நமன்தோட்டிப் பல்லுத் தைத்தால்
கூர்முனையிற் செந்நீர் பாயும் 65
61 - 65


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:42 am


வடிவாகும் - வடியும்; பொசியும் - வடியும்
தோட்டிப்பல் - கோடரி போன்ற பல்

தூதனென்ற பல்லுத் தைத்தால் வில்போன்ற
சுவடில்கழு நீர்வந் துவட்டெடுக்கும்
பசியினில் பயத்தில் நொந்தால் கோபத்தால்
பல்லில் விடமிகுத்தால் மெல்ல மிதித்தால்
இசையுறு தேவர் முனிவர் காலனிவர்
ஏவலினால் வினைத் தாவலினால்
செய்தநன்றி குன்றின பேரைப் பூருவ
சென்மப் பகையினவரை வன்மமுள்ளோரைப்
பையரவம் வந்து கடிக்கும் இதிலொரு
பல்பட்டால் விஷம்தோலைப் பற்றியேறும் 70
66 - 70
வட்டெடுக்கும் - வடியும்; நொந்தால் - பாம்பு வருந்தினால்
மெல்ல மிதித்தால் - மனிதர் மிதித்தால்
வினை தாவலினால் - வினை வயத்தால்
பூர்வசென்மம் - முற்பிறப்பு; வன்மம் - வைராக்கியம்
பையரவம் - நச்சுப்பையினை உடைய பாம்பு

பல்லுரெண்டும் பட்டால் விசமாங் கிசத்தை
பற்றியேறும் மூன்றுபல் பட்டால் விஷம்
வல்யெலும்பைப் பற்றியேறும் நாலு பல்லால்
வகிர்ந்தால் மூளை புகுந்தேறும்
கால்கடி யொருபல்பட்டால் இரண்டு பல்லாய்க்
கடித்தால் கடியரைக் கடியாமே
மேல்பல்லு மூன்றும் பட்டால் கடிபட்ட
விடமுக்கால் கடியென்றிட லாமே
முளைத்தபல் நாலும்பட்டால் அந்தக்கடி
முழுக்கடியா மென்று வழுத்துவரே 75
71 - 75
மாங்கிசம் - மாமிசம், சதை; வகிர்ந்தால் - பல்லால் கீறினால்

துளைப்பல்லில் ஒருபல் பட்டால் அந்தக்கடி
துசங்கட்டி தியானிக்க விடந்தீரும்
இரண்டுபல்பட் டவிடத்தை மணிபதித் தேற்கு
மந்திரத்தாலும் தீர்க்க லாமே
முரண்டுமூன்று பல்பட்டால் அந்தக் கடிகை
மூலிகை கலிக்கம் நசியத்தால் தீரும்
அரவின்பல்நாலும் பட்டால் மணிமந்திர
அவுஷதம் தெய்வச் செயலால் தீர்க்கவேணும்
இரவினில் பாம்பு கடித்தால் அந்தக்கடி
மீளாத குறியிடம் விளம்புகிறேன் 80
76 - 80
துசங்கட்டி - துவசங்கட்டி, கொடிகட்டி
(உறுதியாக நின்று என்பதும் பொருள்)
கைமூலிகை - மூலிகை மருந்து
கலிக்கம் - கண்ணுக்கிடு மருந்து
நசியம் - மூக்கில் இடும் மருந்து
அவுஷதம் - அவுடதம், மருந்து வகை

உள்ளங்கால் உள்ளங்கை நெற்றி மார்பு
கழுத்து உதடுமுலை மூக்குபுருவம் கொப்புள்
தெள்ளுநாசிச் சந்தும் குதிக்கால் செவிபுறத்
தோடி ஆலமரத் தூரடியில்
புன்னைபுளி மூங்கிலரசில் நாணலில்
புற்றுக் கிணற்றில் புறமடையில்
பின்னமுள்ள பரன்கோவில் பாழ்
வீட்டில் பிணமிடு நிலத்தில்
நந்தவனம் புத்துமடத்தில் ஏரிக்கரை
நதிக்கரை சுனைக்கரை யாக சாலையில் 85
81 - 85
நாசிச் சந்து - மூக்குத்துவாரம்
புன்னை, புளி, மூங்கில், அரசு - மரவகைகள்
பிணமிடு நிலம் - சுடுகாடு; புத்துமடம் - புற்றுள்ள இடம்

அந்திசந்தி முச்சந்தியில் உறக்கத்தில்
ஐயன் பிடாரி துர்க்கை ஆலயத்தில்
மாயவரில் பாம்பு கடித்தால் தீராத
மரணநாள் சொல்லுகிறேன் பரணிமகம்
ஆயிலியம் திருவோணம் மூலம் கார்த்திகை
ஆதிரை சுளகு சித்திரை சோதி
சென்ம நாள்அனு சென்மநாள் திரிசென்ம
சேர்ந்திடுநாள் வதமவை நாசியங்
கன்மமும் நவமி சஷ்டி குளிகனில்
கடித்திடில் அந்தக் கடிநொடிக்குள் கொல்லும் 90
86 - 90


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by சிவா on Thu Sep 18, 2014 3:42 am


மாயவரில் - திருமால் கோட்டம்
பரணி, மகம், ஆயில்யம், திருவோணம், மூலம், கார்த்திகை,
ஆதிரை, சுளகு, சித்திரை - நட்சத்திரங்கள
சுளகு - விசாகநட்சத்திரம்; சோதி - நட்சத்திரம்
குளிகன் - குளிகை நேரம்

தானோடிக் கிடந்திடனும் அந்தக் கடி
தப்பாமல் கொல்லுமென்று செப்பலாமே
கடித்தவாய் தடிக்கில் கொல்லும்-வீங்கியே
கடுத்தெரிகினும் கொல்லும் கண்டம் சொரித்தும்
குடித்த மருந்தெடுக்கில் கொல்லும்-கடித்தவாய்
குமுறினும் செங்குருதி பாயினும் கொல்லும்
விடங்குதித் தொழுகில் கொல்லும்-நாவரண்டு
விழிசிவக்கினும் கொல்லும் மெய் நடிக்கினும்
படம்கொண்ட பொறியரவம் நாவெயிறும்
பதியப்படினும் கொல்லும் பல்லும் உகிரும் 95
91- 95
தடிக்கில் - வீங்கினால்; கண்டம் - கழுத்து
குடித்த மருந்தெடுத்தல் - வாந்தி எடுத்தல்
குமுறினும் - வெந்தால்; மெய்நடிக்கினும் - மெய் நடுங்குதல்
எயிறு - பல்; உகிர் - நகம்

கறுத்திடில் கொல்லும் உரகம் சீறியே
கடித்தவுடன் மலநீர் விடுக்கிற் கொல்லும்
விறைத்திடில் கைகால்விரல் நிமர்ந்திரு
விழி சொருகினும் கொல்லுமென்னலாமே

விஷத்தின் குணம்

நச்சரவில் ஆண் கடித்தால் மேல்நோக்கும்
நயனம்பெண் பாம்பெனில் கீழ்நோக்குமே
அச்சமில்லாமல் அடக்கில் வேர்வை மிகும்
அலிப்பாம்பெனில் விடம்கலிப் பாகும்
சூலாகி வயிறுளையும் முட்டையிட்ட
துட்டனெனில் நெட்டைவிழி முட்டை சிவக்கும் 100
96 - 100
நயனம் - கண்
அலிப்பாம்பு - ஆண், பெண் இரண்டுமல்லாத பாம்பு
கலித்தல் - மிகுதல்

மேலெயிற்றுக் காளி கடித்தால் வலதுகண்
வேதனை செய்யுமகில் பாம்புகடித்தால்
கடித்தவாய் வீக்கம் காணும் வேகமாயிளங்
கன்னிக் கிடதுகண் வேதனை காணும்
துடித்திடும் குட்டிப் பாம்பு கடித்திடில்
சோர்வு மயக்கமுடன் பாரில்வீழ்த்தும்
கருநாகம் கடித்ததென்றால் உடனிரு
காதும் செவிடாமென் றோதினாரே
ஒருநாகத் தடைவிதுவே பலவிடத்து
உரகங்கள் சரித்திர முரை செய்கிறேன் 105
101 - 105
காளி - பல்லின் பெயர்

முரட்டுப் பல்பொறி விரியன் சூல் கொண்டு
முதுகுதனில் வெடித்துக் குஞ்சு பொரித்தால்
கரட்டோணான் தேள்பூரம் நட்டுவாக்
காலிசிலந்தி புலிமுகப் பூச்சி
செய்யானுடன் பொறிவண்டு முதற்பல
சீவசந்துகள் அதிலே பிறக்கும்
மெய்யான பெருவிரியன் கடித்திடில்
வீங்கிக் கடுத்தெரிவு மீறிக்குருதி
வடிந்திடும் கடிவாயில் கண்ணுறங்கும்
மயங்கி உடல்வெதும்பித் தியக்கிடுமே 110
106 - 110


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிந்து இலக்கியம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum