ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Aug 20, 2014 9:28 pm

First topic message reminder :

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை

ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.

ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.


Last edited by சிவா on Mon Sep 15, 2014 10:21 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Thu Mar 12, 2015 5:16 pm

சீனாவிலும் ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவலா?

ஈராக், சிரியா, லிபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாத செயல்களை செய்து வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஆசியாவின் மிகப் பெரும் வல்லரசு நாடான சீனாவிலும் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை உறுதிபடுத்தி உள்ள சீனாவின் ஜின்ஜியாங் மாகாண அரசு, அவர்களை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக்கு அருகே உள்ளது.

இங்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத இயக்கத்தினர் வலுவாக செயல்பட்டு வருகின்றன. சீனாவில் அவ்வபோது நடக்கும் வன்முறைகளுக்கு இவர்கள் தான் காரணம். இவர்களை ஒடுக்குவதற்கு அம்மாகாண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், அவர்கள் அவ்வபோது தலை தூக்கத் தான் செய்கின்றனர்.

இந்நிலையில், அந்த வட்டாரத்தின் அனைத்துலக எல்லை வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக சீன அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. மியான்மர் நாட்டின் எல்லை வழியாக சீனாவிற்குள் கடந்த சில நாட்களாக முன்னர் சிலர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், போலியான கடவு அட்டைகள் வைத்து இருந்தவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சீன அரசிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஜின்ஜியாங் மாகாண அரசு கூறுகையில், “கைது செய்யப்ப்பட்டவர்களிடம் முறையான விசாரணை நடைபெற்று வருகின்றது. அத்துமீறி நுழைபவர்கள் யாராக இருந்தாலும், மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by SajeevJino on Thu Mar 12, 2015 7:07 pm

.

சீனாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் அதிகமாக தஜிகிஸ்தான் எல்லையில் உள்ளனர்

அவர்கள் ஊய்கூர் முஸ்லிம் அன்று அழைக்கப்படுவர், அவர்களே அதிகமாக அம்மாகாணங்களில் தீவிரவாத தாக்குதலகளை நடத்தி வருகின்றனர். சீனாவும் தகுந்த தண்டனை அவர்களுக்கு கொடுத்து வருகிறது


சமீபத்தில் இஸ்லாம் இமாம்களை வீதியில் வைத்து நடனமாட செய்தது நினைவிருக்கலாம்

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Fri Mar 13, 2015 12:05 am

வீதியில் வைத்து நடனமாட வைத்தார்களா? ஏன்?

தண்டனையா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Fri Mar 13, 2015 12:08 am

இப்பொழுது தான் பார்த்தேன் சஜீவ்! இதற்கு முன் இந்தச் செய்தியை அறிந்ததில்லை!

Imams Forced to Dance on in street in China
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by SajeevJino on Fri Mar 13, 2015 7:57 am

@சிவா wrote:வீதியில் வைத்து நடனமாட வைத்தார்களா? ஏன்?

தண்டனையா?


@சிவா wrote:இப்பொழுது தான் பார்த்தேன் சஜீவ்! இதற்கு முன் இந்தச் செய்தியை அறிந்ததில்லை!

Imams Forced to Dance on in street in China


தண்டனை என்று தெரியவில்லை.. கொஞ்சம் குறும்பு செய்திருப்பார்கள்.. அந்நேரங்களில் அதிக அளவில் கத்திக் குத்து சம்பவங்கள் அந்த மாகாணங்களில் நடந்தது, அங்குள்ள இஸ்லாம் பள்ளிகளும் அதில் தொடர்பு படுத்தப்பட்டன..

அதனால் தான் மன அமைதிக்கு வேண்டி சீன யோகா சோகம் சோகம் சோகம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Mon Mar 16, 2015 1:45 am

ஈராக், சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் குண்டுவீசி வான்வழி தாக்குதல் நடத்தின. ஈராக்கின் அல்ஆசாத், அல் ஹவாஜா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், போர்க்கருவிகள், வாகனங்கள் சேதமடைந்தன.

இதேபோல், சிரியாவில், துருக்கியின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்தன.

இந்த தகவலை அமெரிக்க கூட்டுப்படைகள் தெரிவித்துள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Mon Mar 16, 2015 2:02 am

ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் குளோரின் அமிலம் உபயோகம்: ஏராளமான மக்கள் பாதிப்பு

அர்பில்: ஈராக் நாட்டில் குர்தீஷ் பிராந்தியம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இப்பகுதிகளில் ஏராளமான எண்ணெய் கிணறுகள் உள்ளன. இவற்றை கடந்த வருடம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கைப்பற்றி வைத்திருந்தனர். அத்துடன், குர்தீஷ் பிராந்தியத்தில் அர்பில் உள்பட பல்வேறு நகரங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இன்றுவரை வெடிகுண்டு மற்றும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவர்களை ஒடுக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் களத்தில் இறங்கின. அமெரிக்காவின் தொடர் வான்வழி தாக்குதலை தொடர்ந்து, ஈராக் மற்றும் குர்தீஷ் பாதுகாப்பு படை களத்தில் வலுவுடன் இறங்கியது. இதைத் தொடர்ந்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய எண்ணெய் கிணறுகளை யும் நகரங்களையும் மீட்டு வருகின்றனர். இந்நிலையில், குர்தீஷ் பிராந்தியத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தும் கார் வெடிகுண்டு தாக்குதலில் குளோரின் அமி லத்தை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் குளோரின் அமிலம் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப் பட்டு உள்ளது. இந்த குளோரின் அமில தாக்குதலினால் ஏராளமான மக்கள் உடல் சிதறி இறந்துள்ளனர்.

பலர் கை, கால்களை இழந்து முடமாகி உள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குளோரின் அமிலத்தை போர் ஆயுதமாக பயன்படுத்தியதால், ஏராளமான மக்களுக்கு வாந்தி, மயக்கத்துடன் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன என்று குர்தீஷ் பிராந்திய பாதுகாப்பு கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Fri Mar 20, 2015 4:37 am

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள 39 இந்தியர்களை விடுவிக்க துருக்கியின் உதவியை நாடியது இந்தியா

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கில், வேலை செய்து வந்த 39 இந்தியர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ளனர். நீண்ட நாட்களாக ஐ.எஸ். பிடியில் உள்ள அவர்களை மீட்க உதவுமாறு துருக்கிக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி மெவ்லுட் கவுசொக்லுவுடன் பேசிய சுஷ்மா சுவராஜ், ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து 39 தீவிரவாதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், பிராந்தியத்தில் நிலவும் தீவிரவாத மிரட்டல்களை எதிர்கொள்வது பற்றியும் விவாதித்தார். அப்போது சுஷ்மாவுக்கு பதிலளித்த கவுசொக்லு கூறுகையில், இந்தியர்கள் கடத்தப்பட்டது பற்றி இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்படாதவை என்றார்.

கடந்த வருடம் மொசூலில் இந்திய பணியாளர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போது, அவர்கள் எங்குள்ளனர் என்பது பற்றிய தகவல்களை துருக்கி நாடு தான் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் வரும் நவம்பர் மாதம் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பிரதமர் மோடி, துருக்கி செல்வது பற்றி இருவரும் கலந்தாலோசித்தாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sun Mar 22, 2015 11:41 pm

ஐ.எஸ்., கொலைப் பட்டியல் வெளியீடு : அமெரிக்க வீரர்கள் 100 பேருக்கு குறி

டமாஸ்கஸ்: தங்கள் அமைப்பிற்கு எதிராக செயல்படும், 100 அமெரிக்க ராணுவ வீரர்களின் புகைப்படத்துடன் கூடிய பட்டியலை, இணையத்தில் வெளியிட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அவர்களை கண்டதும் கொலை செய்யுமாறு, தங்கள் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தங்கள் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு ராணுவ வீரர்களை கொல்ல செயல் திட்டம் வகுத்துள்ளனர்.

'இஸ்லாமிக் ஸ்டேட் ஹேக்கிங் டிவிஷன்' என்ற பெயரில் செயல்படும், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் இணையப் பிரிவினர், 100 அமெரிக்க ராணுவ வீரர்களின் பட்டியலை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதில், அமெரிக்க ராணுவம், விமானப் படை, கப்பல் படையை சேர்ந்த முக்கிய வீரர்களின் புகைப்படத்துடன் கூறிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதோடு, அமெரிக்காவில் வசிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்., ஆதரவு சகோதரர்கள், இந்த பட்டியலில் இடம் பெற்றவர்களை கண்டதும் கொலை செய்யுமாறு பயங்கரவாதிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்கா மட்டுமின்றி, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்து, அமெரிக்காவின் ராணுவ மற்றும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை 'ஹேக்' செய்து பெறப்பட்டவை என, பயங்கரவாதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. பட்டியலில் இடம் பெற்றுள்ள ராணுவ வீரர்கள் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களிலிருந்து பெறப்பட்டவை என, அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் இந்த கொலைப் பட்டியல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Tue Apr 07, 2015 3:18 am

இஸ்லாமிக் அல்லாத உடைகளுக்கு தீவிரவாதிகள் தடை ;இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்த வாலிபருக்கு ஜெயில்

சிரியா மற்றும் ஈரான் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்வேறு சட்டதிட்டங்களை அங்கு நிறைவேற்றி வருகிறார்கள். அங்கு தற்போது இஸ்லாம மத சம்பந்தம் அல்லாத ஆடைகள் அணிய தடை விதிக்கபட்டு உள்ளது. மேலும் இஸ்லாமிய சட்டங்களுக்கு மீறிபவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டு உள்ளனர். இதன படி இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்த வாலிபர் ஒருவருக்கு ஜெயில் தண்டனை கொடுத்து உள்ளனர்.அவருக்கு 10 நாட்கள் ஜெயில் தண்டனை விதிக்கபட்டு உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் எதிர்ப்பு குழு இந்த சட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஐஎஸ் வினோதமான சட்ட திட்டங்களை கொண்டு வந்து அதை எதிர்ப்பவர்கள் கடவுளின் சட்டங்களை எதிர்ப்பவர்களாக கூறி கைது செய்ய படுகிறார்கள். மொபைல் போனில் இசை கேட்டால் கூட துன்புறுத்த்ப்படுகிறார்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by ராஜா on Tue Apr 07, 2015 11:16 am

@சிவா wrote:இஸ்லாமிக் அல்லாத உடைகளுக்கு தீவிரவாதிகள் தடை ;இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்த வாலிபருக்கு ஜெயில்

சிரியா மற்றும் ஈரான் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்வேறு சட்டதிட்டங்களை அங்கு நிறைவேற்றி வருகிறார்கள். அங்கு தற்போது இஸ்லாம மத சம்பந்தம் அல்லாத ஆடைகள் அணிய தடை விதிக்கபட்டு உள்ளது. மேலும் இஸ்லாமிய சட்டங்களுக்கு மீறிபவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டு உள்ளனர். இதன படி இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்த வாலிபர் ஒருவருக்கு ஜெயில் தண்டனை கொடுத்து உள்ளனர்.அவருக்கு 10 நாட்கள் ஜெயில் தண்டனை விதிக்கபட்டு உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் எதிர்ப்பு குழு இந்த சட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஐஎஸ் வினோதமான சட்ட திட்டங்களை கொண்டு வந்து அதை எதிர்ப்பவர்கள் கடவுளின் சட்டங்களை எதிர்ப்பவர்களாக கூறி கைது செய்ய படுகிறார்கள். மொபைல் போனில் இசை கேட்டால் கூட துன்புறுத்த்ப்படுகிறார்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.
இப்படி பார்த்தால் , உலகில் பெரும்பாலான இஸ்லாமியர்களை தண்டித்துவிடுவார்கள் போல இருக்கே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Apr 15, 2015 9:53 pm

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் – மலேசிய காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

கோலாலம்பூர் - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பேராக் மாநிலம் கிரிக்கில் உள்ள ராணுவ முகாமில் உள்ள வீரர்களுக்கு ஆடவர் ஒருவரால் விடுக்கப்பட்ட மிரட்டலையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு ஆயுதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

நாடு முழுவதிலும் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக மலேசிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

அங்கிருந்து ஆயுதங்களை கடத்திச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி கிரிக் ராணுவ முகாமின் நுழைவுப் பகுதி அருகே வந்த 30 வயது மதிக்கத்தக்க ஓர் ஆடவர் அம்முகாமில் உள்ள பிரார்த்தனைக் கூடத்தை பயன்படுத்த தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பலமுறை கேட்டும் அனுமதிக்கப்படாததால் அந்நபர் முகாமின் நுழைவுப் பகுதியிலேயே தனது தொழுகையை முடித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த அவர், முகாம் காவலர்களை எச்சரித்ததாக தெரிகிறது.

“நீங்கள் அனைவரும் உங்களது ஆன்மாவை சுத்தம் செய்யுங்கள். முகாமிற்குள்ளேயே இருந்துவிடுங்கள். வெளியே வராதீர்கள்,” என்று அவர் கூறியதாக ‘தி ஸ்டார் ஒன்லைன்’ ஆங்கில இணைய செய்தித் தளம்  குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்தே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் திட்டம் குறித்து சாஹிட் ஹமிடி தகவல் வெளியிட்டார்.

இந்நிலையில் அனைத்து மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கு புக்கிட் அம்மான் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

காவல் நிலையங்களுக்கு வரும் அனைவரையும் தீர விசாரிக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அந்த உத்தரவுகளின் வழி காவல் துறைஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Fri Apr 24, 2015 11:28 pm

ஐ..எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இயற்பியல் ஆசிரியர் புதிய தலைவரராகிறார்

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவராக அபுபகர் அல் - பக்தாதி இருந்தார். கடந்த மாதம் (மார்ச்) மேற்கு ஈராக் பகுதியில் அமெரிக்க கூட்டு படைகள் தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தியது. இத் தாக்குதலில் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தலைவர் அபு பகர் அல் - பக்தா படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அவரால் பணியாற்ற முடியவில்லை.

அதை தொடர்ந்து ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை வழிநடத்த தற்போது தற்காலிகமாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் அபு அலா அப்ரி.

இத் தகவலை ஈராக் அரசு ஆலேசாகர் டாக்டர் ஹிசம் அல் ஹஷிமி தெரிவித்துள்ளார். ஒரு வேளை அல் - பக்தாதி இறந்து விட்டால் தற்போது தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அப்ரி தொடர்ந்து தலைவராக இருப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அப்ரி ஈராக்கின் மொசூல் நகரை சேர்ந்தவர் தல் அபர் நகரில் உள்ள பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். இவரை ஹாஜி இமான் என்றும் அழைப்பார்கள். அல் - பக்தாதியின் வலது கரமாக திகழ்ந்தவர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed May 13, 2015 10:38 pm

47 பேர் பலியான கராச்சி தாக்குதல் – ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு!

பாகிஸ்தானில் கராச்சி நகரில் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்த தீவிரவாத கும்பல், பேருந்து ஒன்றின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 16 பெண்கள் உட்பட 47 அப்பாவிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பாகிஸ்தான் நாளிதழ்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஈராக், சிரியா போன்ற நாடுகளில் வேரூன்றி உள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், இன்று கராச்சியில் நடைபெற்ற பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்தினர் துண்டுப்பிரசுரம் மூலம் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பாகிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்து அந்நாட்டு அரசு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், கராச்சி தாக்குதலுக்கு மோடி, நவாஷ் ஷெரிப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sat May 23, 2015 11:39 pm

30 பேரை பலிவாங்கிய சவுதி வெடி குண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்பு

ரியாத், -சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு மசூதியில் நேற்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள குவாதிப் மாகாணத்தில் அல் கியுதிஹ் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள மசூதி ஒன்றில் நேற்று 150க்கும் மேற்பட்டோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்துக்குள் ஊடுருவிய தீவிரவாதி ஒருவன் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 30 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மசூதி முழுவதும் ரத்தக்கறையாக காட்சி அளித்தது. காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 52 பேர் சிகிச்சை முடிந்து நேற்றிரவு வீடு திரும்பினர். மற்றவர்கள் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஐஎஸ் தீவிரவாத இயக்கம் சன்னி பிரிவு முஸ்லிம்களின் ஆதரவு பெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் வளைகுடா பகுதியில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே பதற்றத்தை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அண்மைக்காலமாக வளைகுடா நாடுகளில் சன்னி, ஷியா பிரிவு மோதல் அதிகரித்து வருகிறது. சிரியாவில் தொடங்கி, ஈராக், பஹ்ரைன், ஏமன் என பல நாடுகளில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sat May 23, 2015 11:40 pm

பல்மைரா மியூஸியத்திற்குள் நுழைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள்; சிலைகளை சூறையாடி அட்டகாசம்

சிரியா–ஈராக் இடையேயான கடைசி எல்லையையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியிருப்பது அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பல்மைரா நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள வரலாற்று பெருமை வாய்ந்த அருங்காட்சியத்திற்குள் நுழைந்து விட்டனர். கிரேக்க-ரோம நினைவு சின்னங்களை அழித்து தீவிரவாதிகள் தங்கள் கொடியை பறக்கவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டமாஸ்கஸில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்த அருங்காட்சியகத்தின் இயக்குனர் மாமோன் அப்துல்கரீம் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அருங்காட்சியகத்தில் இருந்த வரலாற்று நினைவு சின்னங்கள் மற்றும் சிலைகளையும் சேதப்படுத்தி தீவிரவாதிகள் அட்டகாசம் செய்வதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பால்மைராவுக்கு ஒரு ஆண்டுக்கு 1,50,000 சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் என்பது நினைவு கூரத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sat May 23, 2015 11:41 pm

பாகிஸ்தானிடம் இருந்து ஓராண்டுக்குள் அணு ஆயுதங்கள் வாங்குவோம்: ஐ.எஸ். தீவிரவாதிகள்!

அல்கொய்தா தீவிரவாதிகளை விட கொடியவர்கள் என அமெரிக்காவையே அலற வைத்துள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள், சிரியாவிலும், ஈராக்கிலும் தங்களது எல்லையை விரிவுபடுத்தி வருகின்றனர்.இந்த தீவிரவாதிகள் அமெரிக்கா, ஈரானிடம் இருந்து பீரங்கி வண்டிகள், ராக்கெட் ராஞ்சர்கள், ஏவுகணைகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் என ஆயுதங்களை கைப்பற்றி குவித்துள்ளனர்.

இவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. வங்கியில் குவித்துள்ள இந்த பணத்தைக் கொண்டு ஓராண்டுக்குள் பாகிஸ்தானிடம் இருந்து அணுக்குண்டு வாங்க திட்டமிட்டுள்ளனர்.இது தொடர்பான தகவல், ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆன்லைன் பத்திரிகையான தாபிக்கில் வெளியாகி உள்ளது.

அதில், ஐ.எஸ். அமைப்பினர், வங்கியில் பல கோடி டாலர்களை குவித்து வைத்துள்ளனர். இந்தப் பணத்தை கொண்டு, அவர்கள் பாகிஸ்தானில் உள்ள தங்களது அமைப்பினரிடம் கூறி, அங்குள்ள ஆயுதத்தரகர்கள் மூலமாக ஊழல் அதிகாரிகளின் துணை கொண்டு அணு குண்டு வாங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.அந்த அணுக்குண்டை அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த பயன்படுத்த முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sun May 24, 2015 12:03 am

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேலும் ஒரு நகரை கைப்பற்றினர்

ஈராக்கில் அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேலும் ஒரு நகரை பிடித்தனர். சிரியா–ஈராக் இடையேயான கடைசி எல்லையையும் அவர்கள் கைப்பற்றினர்.

அன்பார் மாகாணம்

ஈராக்கில் அன்பார் மாகாணம் முழுவதையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் குறியாக இருக்கிறார்கள்.

ஏறத்தாழ 18 மாதம் நடத்திய சண்டைக்கு பின்னர் அந்த மாகாணத்தின் தலைநகரான ரமாடி நகரை கடந்த 17–ந் தேதி கைப்பற்றினர். இது ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க கூட்டு படையினருக்கு பெருத்த பின்னடைவு என்று அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

ஹசிபா நகர்

அதைத் தொடர்ந்து ரமாடி நகருக்கும், ஹப்பானியா ராணுவ தளத்துக்கும் இடையே ஹசாய்ஹா அல் ஷர்கியா என்ற இடத்தைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அரசு ஆதரவு படையினர் எதிர்தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த சண்டையில், அன்பார் மாகாணத்தில் உள்ள ஹசிபா நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக ஈராக் பழங்குடி இனத்தலைவர் ஷேக் ரபி அல் பாஹ்தவி கூறும்போது, ‘‘ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நடத்திய சண்டையில், பழங்குடி இன படையினர் மற்றும் போலீசாரின் வெடிபொருட்கள் தீர்ந்து விட்டன. இதனால் அவர்கள் வாபஸ் பெற்றனர்’’ என்றார்.

இந்த ஹசிபா நகர், ரமாடி நகருக்கு கிழக்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்ததின் மூலம் அன்பார் மாகாணத்தில் அவர்கள் மேலும் வலு அடைந்துள்ளனர்.

சிரியா எல்லை

இதே போன்று ஈராக்–சிரியா இடையே உள்ள கடைசி எல்லையையும் (இது சிரியாவில், ஹாம்ஸ் மாகாணத்தில் உள்ளது) ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து விட்டனர். அங்கிருந்து சிரிய அரசு படைகள் பின்வாங்கி விட்டன. இதை செய்தி நிறுவனம் ஒன்றிடம் ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சிரியாவில் பல்மைரா என்னும் வரலாற்று சிறப்புமிக்க நகரை கைப்பற்றியுள்ள நிலையில், இப்போது சிரியா–ஈராக் இடையேயான கடைசி எல்லையையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்திருப்பது அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Sun May 24, 2015 9:28 pm

பல்மைராவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 400 பேரை கொன்றனர்; அதிர்ச்சி தகவல்

சிரியா–ஈராக் இடையேயான கடைசி எல்லையையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியது அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதைதொடர்ந்து, பல்மைரா நகரையும் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள வரலாற்று பெருமை வாய்ந்த அருங்காட்சியகத்தை நேற்று சூறையாடினர்.

இந்நிலையில், பல்மைராவில் 400 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் சிரியாவின் அரசு தொலைக்காட்சி இன்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. அந்நகரத்தின் வீதிகளில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் கிடப்பதாக சமூக வலைத்தளங்களிலும் தகவல் பரவி வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Tue Jun 09, 2015 12:02 am

செல்ஃபியால் சிக்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள்; 24 மணி நேரங்களில் தலைமையகம் தகர்ப்பு

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் எடுத்த செல்ஃபி புகைப்படம், அவர்களது தலைமையகத்தை காட்டிக் கொடுத்து உள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட புகைப்படத்தை கொண்டு, இடத்தை கண்டுபிடித்த அமெரிக்கா 24 மணி நேரங்களில் சரமாரியாக குண்டுகளை வீசி அழித்தது.

ஈராக்கில் கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் ஆடினர். ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள்வசம் பல நகரங்களை கொண்டு வந்தனர். ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தாங்கள் கைப்பற்றிய நிலப்பரப்பை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசமாக அறிவித்தனர். தொடர்ந்து அவர்கள் முன்னேறினர்.

இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈராக்கும், குர்திசும் தொடர்ந்து வலியுறுத்தியது. இதனையடுத்து சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கா தலைமையில் உலக நாடுகளின் படை வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரையில் சிரியா, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகள் படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இருப்பினும், ஐ.எஸ். தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அவர்களின் முன்னேற்றமானது, அமெரிக்கா தலைமையிலான படைக்கு மிகவும் பின்னடைவு என்று கருதப்பட்டது.

இந்நிலையில் சிரியாவில் ஐ.எஸ். தலைமையகம் தகர்க்கப்பட்டு உள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அவ்வபோது தங்களது வெற்றி கொண்டாட்டத்தை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் எடுத்த செல்ஃபி அவர்களுக்கு அழிவை தற்போது எற்படுத்தி உள்ளது. சிரியாவில் உள்ள ஐ.எஸ். தலைமையகத்தில் எடுத்த செல்ஃபியை தீவிரவாதிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து உள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களை ஆய்வு செய்த அமெரிக்கா, சிறிதும் தாமதிக்காமல் தாக்குதலை தொடுத்தது. சுமார் 24 மணிநேரங்களில் சிரியாவில் ஐ.எஸ். தலைமையகத்தை தரைமட்டம் ஆக்கியது.

அமெரிக்க போர் விமானங்கள் உடனடியாக சென்று சரமாரியாக நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர், கட்டிடமும் அழிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜெ.டி.ஏ.எம்.(மொத்தமாக நேரடியாக குண்டு போட்டு தாக்கும் படை)பிரிவு வெற்றிகரமாக தாக்குதலை நடத்தியது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் முழு விபரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை. இதுவரையில் மிகவும் கவனமாக செயல்பட்டு, உலக நாடுகளின் படையிடம் அடையாளத்துடன் சிக்காத ஐ.எஸ். தீவிரவாதிகள் புகைப்பட்டத்தை வெளியிட்டு மாட்டிக் கொண்டு, அழிவை சந்தித்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Fri Jun 12, 2015 4:30 pm

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க, அமெரிக்க ஒருநாளைக்கு ரூ. 58 கோடி செலவுசெய்கிறது

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுஉள்ள அமெரிக்கா இதற்காக ஒருநாளைக்கு ரூ. 58 கோடிக்கு மேல் செலவுசெய்கிறது என்று தெரியவந்து உள்ளது.

சிரியாவிலும், ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒட்டுமொத்த உலகுக்கே அச்சுறுத்தலாக விளங்குகிறார்கள். அவர்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தி வந்தாலும், அவர்களை முழுமையாக ஒடுக்க முடியவில்லை. பல்வேறு நாடுகளில் இருந்து தீவிரவாதத்தில் நம்பிக்கை உடைய இளைஞர்கள், சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் அந்த இயக்கம் இன்னும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் பிற நாடுகளில் இருந்து சிரியாவுக்கு சென்று சண்டையிட முயற்சித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. அவற்றில் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 400 பேரும் அடங்குவர். அமெரிக்காவில் இருந்தும் சுமார் 150 பேர் சிரியா செல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட, சிரியாவில் வெளிநாட்டு தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க வேண்டும். துருக்கி–சிரியா எல்லையை தீவிரமாக கண்காணித்தால் வெளிநாட்டு தீவிரவாதிகள் பெரும்பாலோர் சிரியாவினுள் செல்வதை தடுத்து விட முடியும். தடுக்க வேண்டும். என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, சிரியா, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகள்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இரு நாடுகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுஉள்ள அமெரிக்கா இதற்காக ஒருநாளைக்கு ரூ. 58 கோடிக்கு மேல் செலவுசெய்கிறது என்று தெரியவந்து உள்ளது. இதுவரையில் சுமார் 17 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு உள்ளது அமெரிக்கா தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு முகமை பெண்டகன் வெளியிட்டு உள்ளதகவல்கள் அமெரிக்கா செலவுசெய்த தொகையை காட்டி உள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு செய்யப்பட்ட செலவில் 3-ல் 2 பங்கு அமெரிக்க விமானப்படை செலவுக்கான பில் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் செலவு செய்வதற்கு எதிரான பரிந்துரை அமெரிக்க காங்கிரஸ் நிராகரித்து விட்டது. அமெரிக்கா பாராளுமன்றம் பிரநிதித்துவம் 579 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பாதுகாப்புக்கு கட்டண ரசீதுக்கு அனுமதி வழங்கிஉள்ளது.

ஈராக் நாட்டிற்கு இந்த வாரத்தில் மேலும் 450 ராணுவ ஆலோசகர்களை அமெரிக்கா அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பணியில் ஈடுபடும் அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கையானது 3,500 ஆக உயரும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by ஈகரைச்செல்வி on Fri Jun 12, 2015 7:51 pm

நினைக்க வாசிக்க மனம் பதைபதைக்கிறது
avatar
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 501
மதிப்பீடுகள் : 126

View user profile

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Aug 26, 2015 12:43 am

மொசூல் நகரில் விபசாரத்தில் ஈடுபட்ட வாலிபர் கல் எறிந்து கொலை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தண்டனை

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிக ஆக்கிரமித்து இஸ்லாமிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். அங்கு சிறிய குற்ரங்கலுக்கு கூட கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. ஈராக்கின் மொசூல் நகரில் திருமனமான ஒருவர் வேறு பெண்ணுடன் கள்ளகாதல் கொண்டு இருந்ததால் அவர் வீதியில் வைத்து கல் எறிந்து கொல்லப்பட்டார்.

ஷரியத் கோர்ட் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அந்த நபர் நகரின் மைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டார்.அங்கு அவர் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் அவர் மீது பொதுமக்கள் கல் எறிந்து கொல்ல கேட்டு கொள்ளப்பட்டது.

பின்னர் அவ்வாறே அவர் கல் எறிந்து கொல்லபட்டு அந்த படம் தீவிரவாதிகளின் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அதே நாள் ஓரின சேர்க்கையாளர் ஒருவர் மாடிக்கட்டிடத்தில் இருந்து தூக்கி எறிந்து கொல்லபட்டார்.

2014 ஜூன் மாதம் ஈராக்கின் 2 வது மிகப்பெரிய நகரான மொசூல் நகரை பிடித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் ஷரியத் சட்டத்தை அங்கு கடைபிடிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Aug 26, 2015 12:44 am

கொலை செய்வது எப்படி? 3 வயது சிறுவனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பயற்சி

சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை பிடித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அதனை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ். அமைப்பினர் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமீப காலமாக அவர்கள் சிறுவர்களை அதிகமாக வன்முறை செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். சிறுவர்கள் போர் பயிற்சி எடுக்கும் வீடியோவை அவ்வப்பொழுது வெளியிட்டுவந்த அவர்கள் கடந்த ஜூலை மாதம் சிறுவன் ஒருவன் கைதியின் தலையை துண்டிக்கும் வீடியோவை வெளியிட்டனர்.

இது உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். அந்த வீடியோவில் 3 வயது சிறுவன் தீவிரவாதிகள் சீருடையில் தன்னிடம் இருக்கும் கத்தியால் டெட்டி பீர் எனப்படும் கரடி பொம்மை ஒன்றின் தலையை சிரித்தப்படியே துண்டிக்கிறான்.

பின்னர் அந்த பொம்மையை முற்றிலும் சிதைக்க முயற்சி செய்வது பதிவாகியுள்ளது. மேலும் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பின் கொடி இடம் பெற்றுள்ளது. 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த சிரியாவை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா on Wed Aug 26, 2015 12:47 am

சிரியாவில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட புகைப்படம் வெளியாகியதுசிரியாவில் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ரோமானியர் கால கோவிலை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகிஉள்ளது.

சிரியா, ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்குள்ள பல முக்கிய நகரங்களை தங்களுடைய பிடிக்குள் கொண்டு வந்து உள்ளனர். கடந்த மே மாதம் சிரியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரான அல்மைராவை அரசு படைகளிடம் இருந்து அவர்கள் கைப்பற்றினர். பாலைவனத்தின் முத்து என்று அழைக்கப்படும் இந்த நகரில் ரோமானியர்கள் காலத்தில், கி.பி. 17–ம் ஆண்டில் கட்டப்பட்ட பால் ஷாமின் என்ற புராதன சிறப்பு மிக்க கோவிலும் உள்ளது.

இந்த கோவிலின் பாதுகாப்பு தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 82 வயது காலித் ஆசாத் என்பவரை முதியவர் என்று கூட கருதாமல் கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். இதனால் இந்த கோவிலை எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

கடந்த ஜூன் மாதம் பல்மைரா நகரின் பழம்பெரும் 2 கோவில்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்து இருந்தனர். அப்போது அல்மைராவில் இருந்த ரோமானியர் கால நினைவுச் சின்னங்கள் பலவற்றை தகர்த்தனர். இதனால் பால் ஷமின் கோவிலையும் அவர்கள் தகர்க்கலாம் என்று கருதப்பட்டது.

அதுபோலவே நேற்று முன்தினம் பால் ஷமின் கோவிலை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இதில் அந்த கோவில் அடியோடு தரைமட்டமானது. இதுபற்றி சிரியாவின் பழம்பொருள் பாதுகாப்புத் துறையின் தலைவர் மமூன் அப்துல்கரீம் கூறுகையில், ‘‘என் கண்கள் முன்பாகவே பல்மைரா நகரம் அழிக்கப்பட்டு வருகிறது’’ என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

கோவிலை தகர்த்த பின்பு, அந்த கோவிலுக்கு அடியில் தங்கப் புதையல் இருக்கலாம் என்று கருதி தீவிரவாதிகள் அந்த இடத்தை அகழ்ந்தெடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். தவிர, சட்டவிரோதமான முறையில் அப்பகுதியில் உள்ள பொக்கிஷங்களை அகழ்ந்தெடுப்பதற்கு உரிமம் வழங்கும் பணியையும் தொடங்கி இருக்கின்றனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்மைரா நகரை கைப்பற்றுவதற்கு சிலமாதங்களுக்கு முன்பாகவே, அந்த நகரின் புராதன கோவில்களில் இருந்த விலைமதிப்பு மிகுந்த அனைத்து சிலைகளையும் சிரியா அரசாங்கம் அகற்றி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. இதனால் அந்த சிலைகள் தீவிரவாதிகளின் கைகளில் சிக்காமல் தப்பித்தன என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் தகர்க்கப்பட்டது தொடர்பான புகைப்படம் வெளியாகிஉள்ளது. ஐ.நா.வால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பால்மைரா அழிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum