ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Wed Sep 10, 2014 5:23 pm

காஷ்மீரில் 50,000 பேர் மீட்பு: வெள்ளம் வேகமாக வடிவதால் மீட்புப் பணியில் முன்னேற்றம்

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பசியில் தவிக்கும் ராணுவத்தினர் குடும்பங்கள்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மும்முரமாக முப்படையினரும் ஈடுபட்டுவரும் நிலையில், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் 1,000 பேர் உதவியின்றி தவித்து வருகின்றனர்.

சீறிப்பாயந்த ஜீலம் நதி காஷ்மீரையே புரட்டிப்போட, தெற்கு, மத்திய காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்கள் பல வெள்ளத்தல் சூழப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள மத்திய, தெற்கு காஷ்மீர் பகுதிகளில் மட்டும் 20 ராணுவ முகாம்கள் இருக்கின்றன. இந்த முகாம்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது, தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகாம்களில் இருக்கும் உணவுப் பொருட்கள் பெரும்பான்மை பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்பட்டுள்ளதால், போதிய அளவு உணவுப் பொருட்கள் இல்லாமல் ராணுவத்தினர் குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட 1000 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் உணவு, தண்ணீர் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்" என்றார்.

50,000 பேர் மீட்பு

காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக சிந்து நதியின் கிளை நதியான ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வரலாறு காணாத பெருவெள்ளத்தில் மாநிலமே கடும் பாதிப்புக்குள்ளானது.

தற்போது அங்கு மழை குறைந்துள்ளது, வெள்ளம் வடிந்து வருகிறது. இதுவரை 50,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 215 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகே நீரில் மூழ்கிய பகுதிகளுக்குச் செல்ல முடியும். அப்போதுதான் பலி எண்ணிகையை துல்லியமாக உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவந்த பலர் தாங்கள் அனுபவித்த துயரத்தை விவரித்தனர். தாங்கள் மீட்கப்படும்போது அப்பகுதியில் மற்றும் சிலர் எழுப்பிய அபயக்குரல் அடங்கியது என்றும், எனவே அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

மீட்புக் குழுவினர் மீது தாக்குதல்:

இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது பொதுமக்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிறைய பேர் சிக்கியிருப்பதாகக் கூறி மீட்புக் குழுவினர் உடனடியாக அங்கே செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் வேறு பகுதிக்கு செல்ல திட்டமிட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் மீட்புப் படை வீரர் ஒருவரது கை பலமாக பாதிக்கப்பட்டது. காயமடைந்த வீரர் சிகிச்சைக்காக சண்டிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மீட்புக் குழுவினர் மீது மக்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்திவருவது வருத்தமளிக்கிறது. மீட்புக்குழுவினருக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றார்.

இதற்கிடையில் ஜம்மு - காஷ்மீரில் நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் ஓ.பி.சிங்கை காஷ்மீர் செல்லுமாறு அரசு பணித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Wed Sep 10, 2014 5:24 pm

உதவியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள்

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் வெள்ளம் படிப்படியாக வடிகிறது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஓடும் எல்லா ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக ஜீலம் நதியின் வெள்ளம் நூற்றுக்கணக்கான கிராமங்களை முற்றிலுமாக விழுங்கிவிட்டது. மேலும், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இந்த கன மழை, வெள்ளத்துக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். மேலும் 2,500–க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகிறார்கள். அவர்களில் பலர் தங்களது வீடுகளின் கூரைகளிலும், மேல்மாடிகளிலும் ஏறி நின்று தங்களைக் காப்பாற்றும்படி தொடர்ந்து அபயக்குரல் எழுப்பி வருகிறார்கள். ராணுவ, விமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் 200–க்கும் அதிகமான படகுகளில் சென்று இரவு பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனிடையே, தெற்கு காஷ்மீர் பகுதியில் நேற்று வெள்ளநீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. ஸ்ரீநகரில் சுமார் 3 அடி முதல் 5 அடி வரை நீர் மட்டம் குறைந்து இருக்கிறது. அதே நேரம் வடக்கு காஷ்மீர் பகுதியில் வெள்ள நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. ஜீலம் நதியில் தண்ணீர் அதிகரித்து செல்கிறது. இதனை கவனத்தில் கொண்டும் மீட்பு பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்பு குழுவினர் மேலும், 29 ஆயிரம் பொதுமக்களை மீட்டுள்ளனர். இதுவரையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை 76,500 பேரை மீட்டுள்ளது. உல்லார் ஏரியில் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது. மானாஸ்பால் ஏரியில் நீர்மட்டம் 3 அடி குறைந்து 18.3 அடியாக உள்ளது. ஏரியில் நீர்மட்டம் 4.3 அடி உயரம் அபாயகட்டத்தில் உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் அதே நிலையிலே உள்ளது. தெற்கு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் ராணுவ முகாம்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 1000 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் மாநிலத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Wed Sep 10, 2014 5:25 pm

தேர்தல் ஆணைய ஆய்வு பயணம் ரத்து

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை பதவிக்காலம் 2015 ஜனவரி 15 ந்தேதியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து அங்கு சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆரமப கட்ட வேலைகளை தொடங்கி உள்ளது.மேலும் தேர்தல் பணிகள் குறித்து 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று காஷமீர் மாநிலம் செல்வதாக இருந்தது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். மேலும் 2,500–க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகிறார்கள். ராணுவ, விமானப்படை, கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் 200–க்கும் அதிகமான படகுகளில் சென்று இரவு பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளி வைப்புது என முடிவு செய்து உள்ளது.மேலும் தேர்தல் ஆய்வு பணி பயணத்தையும் தள்ளிவைத்து உள்ளனர் இந்த பயணத்திற்கான் அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது காலநிலை காரணமாக சட்டசபை தேர்தலை தள்ளிவைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் இந்த பணி தாமதமாகும் என தெரிகிறது என கூறினார்.

கடந்த முறை ஜம்மு காஷமீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. அரியான, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கான ஆய்வு கூட்டத்தை தேர்தல் ஆணையம் ஏற்கனவே முடித்து விட்டது.அரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பை ஆணையம் விரைவில் அறிவிக்கும் என கூறப்படுகிறது.ஜார்கண்ட் மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பை தாமதமாக வெளியிடும் என தெரிகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Wed Sep 10, 2014 5:28 pm

வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைவரையும் மீட்கும் வரை ஓயமாட்டோம்: ராணுவம் திட்டவட்டம்

வெள்ளத்தில் சிக்கியுள்ள அனைத்து மக்களையும் மீட்கும் வரை ஓயமாட்டோம் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழை, அந்த மாநிலத்தை வரலாறு காணாத அளவுக்கு புரட்டி போட்டுள்ளது. அங்கு திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்கு பாயும் ஆறுகளிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் செல்வதால் மக்களின் குடியிருப்புகள் அனைத்தும் குட்டி குட்டி தீவுகளாக காட்சியளிக்கின்றன. இந்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 175–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

ராணுவம், விமானப்படை, கடற்படை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் சற்றும் குறையாமல் மழை வெழுத்து வாங்குகிறது. இதனால் அங்கு மோசமான நிலையே நிலவுகிறது. தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. மோசமான வானிலை மற்றும் ஆர்பரித்து ஓடும் தண்ணீராலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திரமோடி இந்த வெள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்துள்ளார். மேலும் ஆயிரம் கோடி நிவாரண உதவி தொகையாக அம்மாநிலத்திற்கு அளித்துள்ளார். மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ராணுவமும் இணைந்து மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், மீட்பு பணிகள் பற்றி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த வடக்கு ராணுவ தளபதி ஜெனரல் டி.எஸ் ஹூடா கூறுகையில், அடுத்த 48 மணிநேரத்திற்கு எங்கள் கவனம் ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில் இருக்கும்.ஏராளமான மக்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே வெள்ளப்பகுதியில் சிக்கியுள்ள அனைவரையும் மீட்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று தெரிவித்தார். மேலும், வெள்ள நிலைமை உடனடியாக கட்டுக்குள் வராது என்றார்.

இதனிடையே, அடுத்த 3 முதல் 5 நாட்கள் வரை மழை பெய்யாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அங்குள்ள மக்கள் சிறிது நிம்மதி அடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:-

வெள்ள கட்டுபாட்டு அறை எண்:- புதுடெல்லி ஜம்மு&காஷ்மீர் இல்லம்(011)-24611210 மற்றும் 24611108
ஸ்ரீநகர்-0194-2452138
ஜம்மு-0191 -2560401

உள்துறை அமைச்சக உதவி எண்கள்:011-23093054, 23092763, 23093564, 23092923, 23092885, 23093566, 23093563
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Wed Sep 10, 2014 5:29 pm

காஷ்மீர் மீட்புப் பணிகள்: மக்கள் கொந்தளிப்புக்கு ஒமர் அப்துல்லா விளக்கம்

"ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மிக மிக மோசமானது. எதிர்பாராத இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், வெள்ளப் பேரிடரை மாநில அரசு சரிவர கையாளவில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை ஒமர் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, மீட்புப் பணியில் அரசு நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருவதாக கூறினார்.

காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இது, கடந்த 109 ஆண்டுகளில் இல்லாத அளவிலான பேரழிவு என கூறியுள்ளார் ஒமர்.

காஷ்மீர் அரசு பேரிடரை சமாளிக்க சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருவது தொடர்பான கேள்விக்கு, "காஷ்மீர் மக்கள் கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை. மக்கள் அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்றால் அபாய சூழலில் இருந்து மீட்கப்பட்டு பத்திரமாக எங்கோ தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

அந்த வகையில், மக்கள் பத்திரமாக இருப்பதை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியே. இது ஒரு எதிர்பாராத பேரிடர். தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது மட்டுமே தலையாய பிரச்சினை. பொது மக்களை மீட்பதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் கடற்படையினருடன் தொடர்பில் இருப்பதாக கூறிய ஒமர் வெள்ளம் வடிந்த பின்னர் தொற்று நோய்கள் பரவுவதை தடுப்பது மிகவும் சவாலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் வந்த பிறகே மாநில அரசு வெள்ளப் பிரச்சினையை கண்டு கொண்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒமர், "பிரதமர் வருவதற்கு முன்னரே வெள்ள மீட்புப் பணிகளை மாநில அரசு தொடங்கிவிட்டது. பிரதமர் வந்தபோது நிலைமை கட்டுக்குள் இருந்தது.

ஆனால், அதன் பிறகுதான் ஜீலம் நதி பெருக்கெடுத்து வெள்ளம் புகுந்தது. பிரதமர் ஒன்றும் காஷ்மீரில் இந்த அளவுக்கு இயற்கை பேரிடர் வரும் என ஏற்கெனவே தெரிந்து வைத்துக் கொண்டு வரவில்லை" என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Wed Sep 10, 2014 5:49 pm

விஜயகாந்த் ரூ.10 லட்சம் நிதியுதவி

ஜம்மு - காஷ்மீர் பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீர் மழை பொழிவால் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் கிராமங்கள் மட்டுமல்லாமல், நகரங்களிலும் வெள்ளம் சூழ்ந்து பெருத்த உயிர் சேதங்களும், பொருள் சேதங்களும் ஏற்பட்டு அம்மாநிலமே ஸ்தம்பித்துள்ளது.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து முப்படைகளையும் கொண்டு மீட்புபணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த மழை வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்படுத்தி உள்ளது.

வெள்ள பாதிப்பினாலும், நிலச்சரிவாலும் தீவுகளுக்குள் சிக்கிய மனிதர்கள் போல் அம்மாநிலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு அந்த மாநில அரசும், மத்திய அரசும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த இயற்கை சீற்ற பேரழிவில் இறந்தவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் தே.மு.தி.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

காஷ்மீர், நமது நாட்டின் முக்கிய எல்லை பகுதியாகவும், எப்போதும் விழிப்புடன் பாதுகாப்புபணியை மேற்கொள்ளும் மாநிலமாகவும் உள்ளது. அண்டைநாடுகளிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்கும் மாபெரும் பணியை அங்கே உள்ள ராணுவ வீரர்கள் செய்துவருகிறார்கள்.

இந்த பேரழிவில் அவர்களும் பாதிக்கப்பட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கே இயற்கை பேரழிவு சவாலாக அமைந்துள்ளது. எனவே பணக்காரர்களும், முதலாளிகளும், வியாபாரிகளும், இளைஞர்களும் மட்டும் அல்ல, தேசநலனில் அக்கறை கொண்டுள்ள அனைவருமே பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தங்களால் இயன்ற நிதிஉதவியோ, பொருள் உதவியோ, செய்திட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இயற்கை பேரழிவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை காத்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், அவர்களுக்கு உதவுகின்ற வகையில் எனது சொந்த பணத்தில் இருந்து, பாரத பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் நிதியாக வழங்குகிறேன்" இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by ayyasamy ram on Wed Sep 10, 2014 6:09 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37082
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Wed Sep 10, 2014 6:14 pm

வரலாறு காணாத வெள்ளத்தில் நான்கு லட்சம் பேர் சிக்கி தவிப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள, வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளவர்களை மீட்க, ராணுவம், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், இன்னும் நான்கு லட்சம் பேர், வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தில், கடந்த சில நாட்களாக, மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின், 90 சதவீத பகுதிகள், தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதுவரை, 200 பேர் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. அவர்களின் வீடுகளும், உடைமைகளும் பறிபோய் விட்டன; ஏராளமானோரை காணவில்லை.

முழு வீச்சில் மீட்பு பணி:

ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவப் படையினர், போலீசார் உள்ளிட்ட, 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், உணவுப் பொருட்கள், தண்ணீர் பாக்கெட், மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதியில், நேற்றும் பலத்த மழை பெய்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.ஸ்ரீநகர், நாட்டின் மற்ற பகுதி களுடன் முற்றிலும் தனித்து விடப்பட்டு, தீவாகி விட்டது. வெள்ளப் பாதிப்பு பகுதிகளில், நான்கு லட்சம் பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.நேற்றும், ஏராளமானோரை, ராணுவத்தினர் மீட்டனர். உதாம்பூர் பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில், 30 பேர் மண்ணுக்குள் புதைந்து விட்டதாக, மீட்பு குழுவினர் தெரிவித்தனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், நேற்று மீட்பு குழுவினர், தங்கள் கவனத்தை திருப்பினர்.

மீட்பு பணிகள் குறித்து, ராணுவ உயரதிகாரி சேட்டன் கூறியதாவது:படகுகளில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகிறோம். ஒரு சுற்றுக்கு, 1,000 பேர் மீட்கப்படுகின்றனர். இன்று மட்டும், 5,000 சுற்றுக் கள், மீட்பு பணிகள் நடந்துஉள்ளன. குறிப்பிட்ட பகுதியில், யாரும் சிக்கயிருக்கவில்லை என்பதை உறுதி செய்தபின்பே, அடுத்த இடத்துக்கு மீட்புக்கு செல்கிறோம்.'சாட்டிலைட் நெட்ஒர்க்' மூலம், ஓரளவு தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ரஜோரி, பூஞ்ச், டோடா உள்ளிட்ட பகுதிகளில், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலை திறப்பு:

இதற்கிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சேதமடைந்திருந்த, லடாக்கை, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியுடன் இணைக்கும் ஸ்ரீநகர் லேக் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

பாசமும், வெறுப்பும்!

வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை, ராணுவ வீரர்கள், தங்கள் உயிரை கொடுத்து மீட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட பலரும், கண்ணீர் மல்க, ராணுவ வீரர்களுக்கு, கைகூப்பி நன்றி தெரிவித்தனர். அதேநேரத்தில், 'ஜம்மு காஷ்மீர் மக்களின், பிரதிநிதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும், ஹுரியத் மாநாட்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள், இருக்கும் இடமே தெரியவில்லை. இதேபோல், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான, மாநில அரசும், வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை' என்றும், பொதுமக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

நடிகை எங்கே?

பிரபல மலையாள நடிகை அபூர்வா தாமஸ். மலையேற்றத்தில் ஆர்வம் உள்ள இவர், இதுகுறித்து பயிற்சி பெறுவதற்காக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றிருந்தார். ஸ்ரீநகரில், இவர் தங்கியிருந்த ஓட்டலை வெள்ளநீர் சூழ்ந்தது. இதையடுத்து, அபூர்வா உட்பட, ஓட்டலில் தங்கியிருந்த அனைவரும், ஓட்டலின் மாடியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இரண்டு நாட்களாக, அங்கிருந்து, கேரளாவில் உள்ளவர்களுடன், அபூர்வா பேசி வந்தார். நேற்றிலிருந்து, அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதனால், அவரின் நிலை என்பது தெரியாமல், அவரின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Wed Sep 10, 2014 6:31 pm


காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய 11 மலேசிய மாணவர்கள் மீட்பு!

புதுடெல்லி, செப்டம்பர் 10 – இந்தியாவில் வட மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய 56 மலேசியர்களில் 11 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று மாலை புதுடெல்லி அழைத்து வரப்பட்டனர்.

மீதமுள்ள 43 பேரில் 26 பேர் மாணவர்களாவர். அவர்கள் அம்மாநிலத்திலியே பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள மலேசியா தூதரகத்தின் தலைவர் சித்ரா தேவி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அவர்கள் அனைவரையும் வெள்ளப்பகுதியில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டியது. இதனால் மாநிலத்தின் அனைத்து நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இன்னும் 4 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர். மழை வெள்ளம் படிப்படியாக குறைந்தாலும், பல இடங்களில் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 43,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Wed Sep 10, 2014 6:35 pm


வெள்ள நிவாரண உதவி: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நவாஸ் ஷெரீப்!

பாகிஸ்தானில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழை சார்ந்த விபத்துகள் ஏற்பட்டது ஒருபுறமிருக்க, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

வெள்ள பாதிப்பினால் துயரப்படும் பாகிஸ்தான் மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்துக்கு பதில் அளித்தும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் நவாஸ் ஷெரிப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளதாவது:-

“பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பினால் உயிரிழந்த மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தும், துயரப்படும் பாகிஸ்தான் மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது எனவும் நீங்கள் எனக்கு எழுதியிருந்த நேற்றைய கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல், இந்திய-பாகிஸ்தான் எல்லையோரம் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இந்த வெள்ளத்தினால் உயிரிழப்பும், உடமையிழப்பும் ஏற்பட்டுள்ளதையும் அறிவேன்.

இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புப் பணிகளுக்கும், நிவாரணத்துக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில்,

இயற்கை பேரிடர்களை சந்திக்கும் மனத்திறனை நமது மக்களுக்கு உண்டாக்கும் வகையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by krishnaamma on Wed Sep 10, 2014 6:58 pm

@சிவா wrote:
வெள்ள நிவாரண உதவி: மோடிக்கு நன்றி தெரிவித்தார் நவாஸ் ஷெரீப்!

பாகிஸ்தானில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அந்நாட்டின் பல மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மழை சார்ந்த விபத்துகள் ஏற்பட்டது ஒருபுறமிருக்க, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

வெள்ள பாதிப்பினால் துயரப்படும் பாகிஸ்தான் மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்துக்கு பதில் அளித்தும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் நவாஸ் ஷெரிப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளதாவது:-

“பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பினால் உயிரிழந்த மக்களுக்கு அனுதாபம் தெரிவித்தும், துயரப்படும் பாகிஸ்தான் மக்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது எனவும் நீங்கள் எனக்கு எழுதியிருந்த நேற்றைய கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல், இந்திய-பாகிஸ்தான் எல்லையோரம் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இந்த வெள்ளத்தினால் உயிரிழப்பும், உடமையிழப்பும் ஏற்பட்டுள்ளதையும் அறிவேன்.

இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புப் பணிகளுக்கும், நிவாரணத்துக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில்,

இயற்கை பேரிடர்களை சந்திக்கும் மனத்திறனை நமது மக்களுக்கு உண்டாக்கும் வகையிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1086382

ம்.............. ஏதோ ஒத்துமையாக ஆனால் நல்லது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by T.N.Balasubramanian on Wed Sep 10, 2014 7:01 pm

மிகவும் மனதை உருக்கும் பேரிடர் .
ராணுவத்தினர் செய்கின்ற சேவை , மிக மிக போற்றப்படவேண்டிய ஒன்று
எனது flat இற்கு அடுத்த flat கணவன் ,மனைவி இருவரும் சனி அன்று அங்கே
சென்று , மாட்டிக்கொண்டு விட்டனர் .
தீயணைக்கும் நிலையத்தில் தங்கி இருந்த அவர்களை , ஹெலிகாப்டர் மூலம்
ராணுவ முகாமிற்கு கூட்டி சென்று , அங்கே இருந்து மிலிடரி விமானம் மூலம் ,
டெல்லி கூட்டி வந்துள்ளனர் . ( இது விஷயம் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் /
சென்னை பதிப்பில் , போட்டோ வுடன் வந்துள்ளது )
ராணுவத்தினர் செயல் பெருமை பட வேண்டிய ஒன்று
ஜெய் ஜவான் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by krishnaamma on Wed Sep 10, 2014 7:04 pm

இவ்வளவு வெள்ளம் வட நாட்டில்??? ஆனால் தெற்கே வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரிக்கை .....என்ன முரண்பாடு பாருங்கோ...........இனியாவது நதிகளை இணைக்க முன் வருவாங்களா?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by krishnaamma on Wed Sep 10, 2014 7:05 pm

@T.N.Balasubramanian wrote:மிகவும் மனதை உருக்கும் பேரிடர் .
ராணுவத்தினர் செய்கின்ற சேவை , மிக மிக போற்றப்படவேண்டிய ஒன்று
எனது flat இற்கு அடுத்த flat கணவன் ,மனைவி இருவரும் சனி அன்று அங்கே
சென்று , மாட்டிக்கொண்டு விட்டனர் .
தீயணைக்கும் நிலையத்தில் தங்கி இருந்த அவர்களை , ஹெலிகாப்டர் மூலம்
ராணுவ முகாமிற்கு கூட்டி சென்று , அங்கே இருந்து மிலிடரி விமானம் மூலம் ,
டெல்லி கூட்டி வந்துள்ளனர் . ( இது விஷயம் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் /
சென்னை பதிப்பில் , போட்டோ வுடன் வந்துள்ளது )
ராணுவத்தினர் செயல் பெருமை பட வேண்டிய ஒன்று
ஜெய் ஜவான் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1086396

ஆமாம் ஐயா ! ஜெய் ஜவான் !! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by T.N.Balasubramanian on Wed Sep 10, 2014 8:26 pm

@krishnaamma wrote:இவ்வளவு வெள்ளம் வட நாட்டில்??? ஆனால் தெற்கே வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரிக்கை .....என்ன முரண்பாடு பாருங்கோ...........இனியாவது நதிகளை இணைக்க முன் வருவாங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1086397

நதிகள் இணைப்பு அவ்வளவு சுலபமான காரியம் இல்லை . பூகோளம் சம்பந்தப்பட்டது .சமவெளி,பள்ளத்தாக்கு ,மலைகள் , நிதி , திட்டமிடல் etc etc
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by krishnaamma on Wed Sep 10, 2014 8:40 pm

@T.N.Balasubramanian wrote:
@krishnaamma wrote:இவ்வளவு வெள்ளம் வட நாட்டில்??? ஆனால் தெற்கே வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரிக்கை .....என்ன முரண்பாடு பாருங்கோ...........இனியாவது நதிகளை இணைக்க முன் வருவாங்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1086397

நதிகள் இணைப்பு அவ்வளவு சுலபமான காரியம் இல்லை . பூகோளம் சம்பந்தப்பட்டது .சமவெளி,பள்ளத்தாக்கு ,மலைகள் , நிதி , திட்டமிடல் etc etc
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1086405

ஈசி இல்லைத்தான் ஐயா, சீனப்பெருஞ்சுவரை விடவா கஷ்டம்? சொல்லுங்கோ.....சுதந்திரம் வாங்கி 60 வருஷத்துக்கும் மேலாச்சு.............பாரதி எப்பவோ பாடிட்டார்..............நமக்கு ஒத்துமை இல்லை...........அவங்களுக்கு வெள்ள நிவாரணம்.............இவங்களுக்கு வறட்சி நிவாரணம் என்று தந்தால்தானே சுவிஸ் வங்கி இல் பணம் சேரும்........யாருக்கும் பிரச்சனை இல்லாமல் வாழ்ந்து விட்டால்??????????????அரசியல் எப்படி நடத்துவது என்பது தான் பிரச்சனை இங்கு சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by thesa on Wed Sep 10, 2014 9:28 pm

@krishnaamma wrote:அரசியல் எப்படி நடத்துவது என்பது தான் பிரச்சனை இங்கு சோகம்


உண்மைதான்..
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Thu Sep 11, 2014 1:15 am

மீட்பு பணியில் ஒமர் அரசு எங்கே? மக்கள் கோபம்

ஸ்ரீநகர்: மீட்பு பணியில் ராணுவத்தினரை மட்டுமே ஈடுபட்டுள்ளதாகவும், மாநில அரசு இல்லை என ஸ்ரீநகர் மக்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள், ஸ்ரீநகரில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. பல அடி தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஒமர் அப்துல்லா உணவு பொருட்களை விநியோகம் செய்தன. இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு பின் கடுமையான வெள்ளம் பாதித்த காஷ்மீரில், 6 நாட்களுக்கு பின் சில பகுதிகளில் தற்போது தான் நிவாரண பொருட்கள் கிடைத்துள்ளதாக மக்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர். பலர் நிவாரண முகாம்கள் சரியில்லை எனவும் புகார் கூறியுள்ளனர். நிவாரண பணிகளில் ஈடுபடுவதில் ஒமர் அரசு தடுமாறி வருவதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றியுள்ளனர். பல நாட்களாக ராணுவத்தினர் மீது குற்றம்சாட்டி வந்த மக்கள் எண்ணத்தில், அவர்கள் பற்றிய எண்ணத்தில் தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ராணுவத்தினர் மீட்ட பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், மீட்பு பணியில் ராணுவத்தினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதில் ஒமர் அரசின் பங்கு என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என கூறினார். இதேகருத்தை பலரும் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், கனமழை துவங்குவதற்கு முன்னர், மசூதி மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அவர்கள் உயர்நிலை பள்ளிகளில் தங்க வேண்டும் என அறிவுரை வலியுறுத்தப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இந்த எச்சரிக்கை அறிவிப்பை புறக்கணித்தனர் என கூறினர்.

இதனிடையே, சட்டசபை தேர்தல் தள்ளிப்போகலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. சேதாரங்களை சரிப்படுத்தவும், மறுவாழ்வு பணிகளை துரிதப்படுத்த மக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய அவகாசம் வழங்கும் வகையில், தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Thu Sep 11, 2014 1:17 am

காஷ்மீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 76,500 மக்களை மீட்ட ராணுவம்

புதுடில்லி: காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 76,,500 பேரை ராணுவத்தினர் மீட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத் தில், கடந்த சில நாட்களாக, மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின், 90 சதவீத பகுதிகள், தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதுவரை, 200 பேர் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. அவர்களின் வீடுகளும், உடைமைகளும் பறிபோய் விட்டன; ஏராளமானோரை காணவில்லை.

ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவப் படையினர், போலீசார் உள்ளிட்ட, 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு, விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம், உணவுப் பொருட்கள், தண்ணீர் பாக்கெட், மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காஷ்மீரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தவர்களில் 76, 500க்கும் மேற்பட்டவர்களை ராணுவத்தினர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 80 ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ விமானப்போக்குவரத்து அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என கூறியுள்ளது.

இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், 807 டன் நிவாரண பொருட்களை விமானப்படையினர் விநியோகம் செய்துள்ளனர். தண்ணீர் பாட்டீல்கள் மற்றும் உணவுப்பொருட்களை ராணுவத்தினர் விநியோகம் செய்து வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில், இதுவரை 2,10,000 லிட்டர் தண்ணீர், 2.6 டன் பிஸ்கட், 7 டன் குழந்தைகளுக்கான உணவு மற்றும் 31 ஆயிரம் உணவுப்பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.தொலை தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த, 9 சாட்டிலைட் போன்களை மாவட்ட நிர்வாகத்திற்கு ராணுவம் வழங்கியுள்ளது. கார்கிலில் இருந்து ஸ்ரீநகரிலிருந்து பதாமி பாக் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் உறவினர்களை தொடர்பு கொள்ள, 30 ஜெனரேட்டர்கள் வசதியுடன் மொபைல் போன் சார்ஜர்களையும் விநியோகம் செய்துள்ளது. கடைசி ஆள் மீட்கப்படும் வரை மீட்பு பணி தொடரும் என ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

இதனிடையே,காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 6 லட்சம் பேர் இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராணுவ தளபதி ஆய்வு: வெள்ளம் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாத் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்,காஷ்மீரில் ராணுவத்தினர் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

சவாலான பணி: ஒமர்: காஷ்மீரில் வெள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். மேலும் அவர், அனைத்து மக்களையும் தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருவதாகவும், மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.

தனியார் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒமர் கூறியதாவது: ஸ்ரீநகர், தண்ணீரில் மிதக்கிறது. அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. பல பகுதிகளில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் வசதியும் சீராகி வருகின்றன.மாநிலத்தை மறு சீரமைப்பது மிகவும் சவாலானது. எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கணித்ததை விட வெள்ள நீரின் அளவு பெருக்கெடுத்து ஓடியது. மாநிலத்தில் இலக்கு மாறியுள்ளது எனவும், மக்களுக்கு உணவுப்பொருட்களை சப்ளை செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது என கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Thu Sep 11, 2014 1:17 am

@thesa wrote:
@krishnaamma wrote:அரசியல் எப்படி நடத்துவது என்பது தான் பிரச்சனை இங்கு சோகம்


உண்மைதான்..

வருக @thesa அவர்களே! நலமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by krishnaamma on Thu Sep 11, 2014 10:50 am

@thesa wrote:
@krishnaamma wrote:அரசியல் எப்படி நடத்துவது என்பது தான் பிரச்சனை இங்கு சோகம்


உண்மைதான்..
மேற்கோள் செய்த பதிவு: 1086416

நன்றி அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Fri Sep 12, 2014 2:12 am

வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரம்: இதுவரை ஒரு லட்சம் பேர் மீட்பு

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை சுமார் 1 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் இன்னமும் உதவிகளை நாடி தவித்து வருகின்றனர். இது, கடந்த 109 ஆண்டுகளில் காணாத இயற்கைப் பேரழிவாக கருதப்படுகிறது.

முப்படைகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீட்புப் பணிகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் முழு கவனம் திரும்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தலைநகர் ஸ்ரீநகரில் 21,000 வீரர்கள், ஜம்முவில் 9,000 வீரர்கள் என மொத்தம் 30,000 ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவ உதவிகளை நாடும் மக்களுக்காக, 80 மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுவீச்சில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் 21,500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவையான உணவு பொருட்கள், போர்வைகள், தண்ணீர் பாட்டில்கள் அனைத்தும் ஹைதராபாத், பரோடா, அமிர்தசரஸ், அம்பாலா மற்றும் டெல்லியிலிருந்தும் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றைச் ஏற்றி செல்லும் பணிகளில் 930 முறை நமது ஹெலிகாப்டர்களும் விமானங்களும் ஈடுபட்டன.

இதன் மூலம் சுமார் 1,237 டன்கள் நிவாரணப் பொருட்கள், காஷ்மீர் மக்களுக்காக விமானப்படையின் மூலம் மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. மக்களை ஏற்றி வருவதற்கு படகுகள் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிய வந்தவுடன், ராணுவத்தின் மூலம் 90 படகுகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர நமது ராணுவத்தால், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் 19 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மறுபுறம், மழை - வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட எல்லையோர சாலைகளை சரிசெய்யும் நடவடிக்கைகளில் அவசர நிலையில் சுமார் 5,700 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காஷ்மீர் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவசர நிலையில் அளித்திட நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து அமைச்சகங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Fri Sep 12, 2014 2:27 am

பேரவலம்!

இதுவரை சந்தித்திராத அளவிலான பேரிடரை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எதிர்கொள்கிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் இப்படியொரு மோசமான வெள்ளம் அந்த மாநிலத்தைத் தாக்கியதில்லை. ஏறத்தாழ நான்கு லட்சம் பேர் வீட்டின் கூரையிலும் மொட்டை மாடியிலும் நிவாரணம் வராதா, தாங்கள் காப்பற்றப்பட மாட்டோமா என்று காத்துக் கிடக்கும் அவலநிலை நிலவுகிறது.

முதலில், தொடர்மழையால் ஜம்மு பகுதியில் சில பகுதிகள் மட்டும்தான் பாதிக்கப்பட்டன. இப்போது ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கும், எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. பருவ மழையின் காரணத்தால் ஜீலம் நதி கரையை உடைத்துக் கொண்டு பெருகிப் பரவியதால், சில பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் இரண்டாவது தளம்வரை தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகர் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் போதாதென்று, ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுவதால் நிலைமை மேலும் மோசமாகிவிட்டிருக்கிறது. விமான நிலையம், முக்கியமான ராணுவ, நிர்வாக அமைப்புகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் எல்லாமே வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதால், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுவதுகூட இயலாத நிலை காணப்படுகிறது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத் தலைநகரும் இதுபோல வெள்ளத்தால் இவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டது இல்லை.

வெள்ளத்தின் சீற்றம் எல்லைகளைக் கடந்து காஷ்மீரத்தைத் தாக்கி இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் காணப்படுவதைவிட அதிகமான பாதிப்பு, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்ப் பகுதிகளில் காணப்படுகிறது. பாகிஸ்தானிலுள்ள மேற்குப் பஞ்சாப் பகுதியும் இந்த வெள்ளச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

திடீர் வெள்ளப்பெருக்குதான் இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்றாலும், தட்பவெப்ப நிலையைத் துல்லியமாகத் தெரிவித்து எச்சரிக்கும் விண்வெளிக் கோள்கள் போன்ற தொழில்நுட்ப வசதிகள் இருந்தும், இப்படியொரு பேராபத்து ஏற்பட இருப்பது எப்படித் தெரியாமல் போயிற்று என்கிற கேள்வி எழாமல் இல்லை.

இமயமலையிலிருந்து உருவாகும் நதிகளில் அடிக்கடி இதுபோல வெள்ளப் பெருக்குகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில், ஏன் முறையான எச்சரிக்கை அமைப்புகள் செயல்படுவதில்லை என்று தெரியவில்லை.

ஏறத்தாழ 2,500-க்கும் அதிகமான கிராமங்களும், பல நகரங்களும் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி விட்டிருக்கின்றன. அழிந்து போய்விட்ட மானிட உயிர்களும், விலங்குகளும் எத்தனை, நாசமாகிவிட்ட பயிர்களும், உடைமைகளும் எவ்வளவு என்றெல்லாம் கணக்குப் பார்க்கும் நேரமல்ல இது. எப்படி நிவாரணத்தை முடுக்கிவிட்டு எஞ்சி இருப்பவர்களை காப்பாற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு இட்டுச் செல்வது, ஏற்பட்டிருக்கும் பேரழிவை எப்படி ஈடுகட்டி அனைவருக்கும் மறுவாழ்வளிப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது. கட்டமைப்பு வசதிகள் முற்றிலுமாகத் தகர்ந்திருக்கும் நிலையில், பழைய நிலைக்கு ஜம்மு-காஷ்மீரை உருவாக்கப் பல லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படப் போகிறது.

இந்தப் பேரிடருக்கு நடுவிலும் ஒரு நம்பிக்கை துளிர்க்கிறது. நிவாரணப் பணிகள் முழுமையாகவும், விரைவாகவும், நேர்மையாகவும் நடைபெற்றால், காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை இந்தியா பெற முடியும். இயற்கைச் சீற்றத்திற்கு முன்னால், எல்லைகள் செயலற்றுப் போய்விடுகின்றன என்கிற உண்மையை அவர்கள் புரிந்து கொண்டால், அதுவேகூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தங்களுக்கு ஏற்படும் பேரழிவை இந்தியா போன்ற பெரிய தேசத்தால் மட்டுமே எதிர்கொண்டு ஈடுகட்ட முடியும் என்பது புரிந்தால், பிரிவினை கோஷம் வலுவிழந்து விடும்.

அதேபோல, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் வெள்ளச் சீற்றத்தால் ஏற்பட்ட பேரிடரை எதிர்கொள்ள எல்லைகளைக் கடந்து உதவ முன்வந்திருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். 2005இல் இந்தியா அளித்த நிவாரணப் பொருள்களையும், 2010இல் இந்தியா அளித்த நிவாரண நிதியையும் நிராகரித்த பாகிஸ்தான், இப்போது நேசக்கரம் நீட்ட முன்வந்திருப்பதும், அனுதாபத்தைப் பங்கிட்டுக் கொள்ளத் தயாராகி இருப்பதும், வெள்ளச் சேதத்துக்கு இடையில் ஏற்படும் ஆறுதல்.

முன்பு உத்தரகண்டில் கங்கை. இப்போது காஷ்மீரத்தில் ஜீலம். நதிகள் பெருக்கெடுத்துப் பேரழிவை ஏற்படுத்துகின்றன என்பதல்ல உண்மை. இயற்கையை நாம் சீண்டி விளையாட முற்பட்டிருப்பதால், அது வெள்ளப் பெருக்காகச் சீற்றம் கொள்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் பேரவலம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Fri Sep 12, 2014 8:58 pm

காஷ்மீருக்காக பெருந்தன்மையுடன் நிதி அளிப்பீர்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டு மக்கள் பெருந்தன்மையுடன் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

"எனது சக மக்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், ஜம்மு - காஷ்மீரில் எதிர்பாராத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டு, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நிறைய எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, பலர் தங்கள் இருப்பிடத்தை இழந்துள்ளனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்களும் உள்கட்டமைப்புகளும் அழிந்து போயுள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வாழும் நமது சகோதரர்களுக்கு இத்தகைய நெருக்கடி நிலையில், அவர்கள் வாழ்க்கை மீண்டும் புனரமைக்கப்பட நமது உதவி பெரிதும் தேவைப்படுகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட நமது சகோதரர், சகோதரிகளுக்கு இத்தகைய நெருக்கடி தருணத்தில் தோள் கொடுப்பது நமது கடமையாகும். ஆகவே, பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு நாட்டு மக்கள் அனைவரும் பெருந்தன்மையுடன் நிதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் மோடி.

இதற்கான தொகையை காசோலை, டிராஃப்ட் அல்லது ரொக்கம் ஆகிய முறைகளில் அனுப்பலாம். பிரதமர் அலுவலக இணையதளம் மூலமும் நிதியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் இதற்காக டிராஃப்ட் எடுத்தால் எந்த விதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை ஜம்மு - காஷ்மீர் நிவாரணத்திற்காக அளித்ததையடுத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by சிவா on Sat Sep 13, 2014 5:46 am


வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் உடைமைகள் திருடப்படும் அவலம்

காஷ்மீரில் பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் உடைமைகள் திருடப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் வீடுகளைவிட்டு வெளியேற தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக உயிர்சேதமும், பொருட்சேதமும் பெருமளவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, மழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த சம்பவங்களால் பலியானோர் எண்ணிக்கை 200-கும் மேல் அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி சுமார் 20,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முப்படையினரும் இரவும் பகலுமாக மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சுமார் ஒரு லட்சம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் உடைமைகள் திருடப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் வீடுகளைவிட்டு வெளியேற தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீநகரில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளில் நடந்த கொள்ளைச் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்காரணத்தால் மக்கள் மீட்பு படையினரோடு பாதுகாப்பான இடத்திற்கு செல்லக்கூட தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum