உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழைய தமிழ் திரைப்படங்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.
by velang Yesterday at 10:49 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by M.Jagadeesan Yesterday at 9:43 pm

» மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு
by சக்தி18 Yesterday at 6:57 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by சக்தி18 Yesterday at 6:26 pm

» தெய்வம் !
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்: விஜய் சங்கருக்கு இடம்
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» சர்வதேச படவிழாவில் திரையிடப்பட உள்ள ஜி.வி. பிரகாஷ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்களின் டெபாசிட் தொகை
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» உலக வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 வெண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 12:59 pm

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு
by ayyasamy ram Yesterday at 5:25 am

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by ayyasamy ram Yesterday at 5:14 am

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by ayyasamy ram Yesterday at 5:05 am

» மனம் எனும் கோவில்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:59 am

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by ayyasamy ram Yesterday at 4:49 am

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by ayyasamy ram Yesterday at 4:44 am

» பாட்டி வழியில் பிரியங்கா
by ayyasamy ram Yesterday at 4:37 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by ayyasamy ram Yesterday at 4:33 am

» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்
by சக்தி18 Sat Jun 15, 2019 9:56 pm

» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்
by சக்தி18 Sat Jun 15, 2019 9:52 pm

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by ayyasamy ram Sat Jun 15, 2019 8:22 pm

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by ayyasamy ram Sat Jun 15, 2019 8:19 pm

» மழையே இன்றி வறட்சியில் டெல்லி
by ayyasamy ram Sat Jun 15, 2019 8:15 pm

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Jun 15, 2019 7:06 pm

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by ayyasamy ram Sat Jun 15, 2019 7:05 pm

» முதல் விண்வெளி மங்கை!
by ayyasamy ram Sat Jun 15, 2019 6:01 pm

» மொக்க ஜோக்ஸ்...!!
by ayyasamy ram Sat Jun 15, 2019 5:55 pm

» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
by ayyasamy ram Sat Jun 15, 2019 5:50 pm

» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி
by ayyasamy ram Sat Jun 15, 2019 5:49 pm

» காதல் வேடிக்கை
by VEERAKUMARMALAR Sat Jun 15, 2019 4:34 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Sat Jun 15, 2019 3:40 pm

» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது
by ayyasamy ram Sat Jun 15, 2019 3:30 pm

» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்
by ayyasamy ram Sat Jun 15, 2019 3:23 pm

» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்
by ayyasamy ram Sat Jun 15, 2019 3:20 pm

» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி
by ayyasamy ram Sat Jun 15, 2019 3:17 pm

» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி
by ayyasamy ram Sat Jun 15, 2019 2:50 pm

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by ayyasamy ram Sat Jun 15, 2019 2:30 pm

» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.
by T.N.Balasubramanian Sat Jun 15, 2019 2:18 pm

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by ayyasamy ram Sat Jun 15, 2019 2:18 pm

» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை
by ayyasamy ram Sat Jun 15, 2019 2:07 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by சக்தி18 Sat Jun 15, 2019 2:05 pm

» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
by ayyasamy ram Sat Jun 15, 2019 1:58 pm

» புதிய இடுகைகள்
by T.N.Balasubramanian Sat Jun 15, 2019 1:52 pm

» கவிதைப்போட்டி
by T.N.Balasubramanian Sat Jun 15, 2019 12:43 pm

» கல்வி செல்வம் தந்த காமராஜர்'
by T.N.Balasubramanian Sat Jun 15, 2019 12:41 pm

Admins Online

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

best பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 8:40 pm

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.

எனவே,  எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும் புன்னகை

இதோ அந்த குறிப்புகள் புன்னகை


Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:52 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 8:44 pm

பெருங்காய  ஜலம்

9ம் மாதம்  ஆரம்பித்தது முதல் தினமும் காலை இல் இந்த பெருங்காய ஜலம் கொடுத்துடுவா புன்னகை வாயு கொண்டுக்காமல்  பிரசவம்   நன்றாக ஆகும் என்பதற்காக புன்னகை

1/2 ஸ்பூன்  பெருங்காயம்
1/2 ஸ்பூன் நெய்

செய்முறை :
ஒரு வாணலி இல் நெய் மற்றும் பெருங்காயப்பொடி போடவும்.
அது வறுபட்டதும் 2 கப் தண்ணீர் விடவும்.
அது நன்கு கொதித்து 1 கப் ஆனதும் இறக்கிவிடவும்.
கொஞ்சமா ஆறினதும், ( உங்களால் குடிக்கக்கூடிய சூடு வந்ததும்) குடிக்கவும்.


குறிப்பு: இடுப்பு வலிப்பது போல இருந்தாலும் இதை குடிக்கலாம், பிரசவ வலி என்றால் தொடர்ந்து வலி எடுக்கும்.உடனே டாக்கடர் ஆத்துக்கு  போய் விடல்லாம், இல்லை  'False  pain ' என்று சொல்லக் கூடியதாக  இருந்தால் நின்றுவிடும். சரியா? புன்னகை


Last edited by krishnaamma on Thu Sep 04, 2014 8:49 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 8:45 pm

ஏற்றுக் கொள்ளக்கூடிய உணவுகள் :

புளிக்காத தயிர், பசுநெய், பழவகைகளை அதிகம் சாப்பிடணும். பனங்கல்கண்டு, வெல்லம் சேர்த்துக்கலாம்.
பிள்ளை பெத்தா லேகியம் அல்லது சௌபாக்கிய சுண்டீ லேகியம் சாப்பிடணும் 2 வேளை. லேகியம் சாப்பிட்டுவிட்டு சூடாக வெந்நீர் குடிக்கணும்.
எது சாப்பிட்டலும் கூடவே 4லாவது வெற்றிலை போடுக்கணும். இது MUST ! எவ்வளவுக்கு எவ்வளவு வெத்திலை பாக்கு போட்டுக்கரோமோ அவ்வளவுக்கு அவ்வளவு உடம்புக்கு நல்லது. இந்த வெற்றிலை போடுவதால் நிறைய பலன் இருக்கு.
1. அவ்வளவு பச்சை இலை சாப்பிடுகிறோம்........எனவே constipation வரவே வராது புன்னகை
2. மருந்து மாத்திரைகளினால் சேரும் கால்சியத்தைவிட சுண்ணாம்பால் சேரும் கால்சியம் நல்லது. ( உங்களுக்கு நான் சொல்லவேண்டாம் புன்னகை )
3. நாம் நிறைய சாதம் சாப்பிடாமல் அரைவயிறு சாப்பிடுவது தானே பத்தியம்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 8:49 pm

முதலிலேயே கிழே உள்ள பொடிகள் மற்றும் சமையல் குறிப்புகளை பார்த்து, தேவையானவற்றை 'தமிழ் மருந்து கடை/நாட்டுமருந்து கடை ' இல் வாங்கி வைத்துக்கொள்ளவும். மெட்ராஸ் என்றால், மைலாப்பூரில் இருக்கும் 'டப்பா செட்டிக்கடை' இல் வாங்கலாம் புன்னகை நான் போனது இல்லை, ஆனால் எங்காத்தில் அங்க போய் தான் வாங்குவா புன்னகை

பொடிகளை மாட்டுப்பெண்  பிள்ளை பெற்றபிறகு தான் செய்யணும். முதலிலேயே செய்து வைக்க கூடாது. இது ஒரு 'சாங்கியம்' தான் (Sentiment) . சரியா? புன்னகை

லேகியமும் அப்படித்தான். லேகியப் பொடியும் கிடைக்கும் அதே கடை இல் அல்லது நீங்க நான் கொடுத்துள்ள குறிப்பு  படி கிளறலாம். அல்லது 'கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை' அல்லது IMCOPS  இல் வாங்கலாம். எங்க அம்மா அங்கு தான் வாங்குவா புன்னகை இப்போ பார்த்திங்க என்றால் நம் தமிழக முதலமைச்சர் கூட இந்த ' சௌபாக்கிய சுண்டீ' லேகியம் தான் ப்ரீ கிபிட் ஆக தரா புன்னகை


Last edited by krishnaamma on Thu Sep 04, 2014 8:51 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 8:50 pm

தினமும் காலை தவிர்க்க முடியாது என்று நினைத்தால் ஒரு வாய் காப்பி இல்லாவிட்டால் பசும்பால் நல்லது. யாரவது மாடுக்காரா இருந்தால் அவர்களிடம் சொல்லி வாங்கிக்கோங்கோ. இல்லாவிட்டால் 'கவர் பால்' தான். கவர் பால் என்றால் பார்த்து தண்ணீர் விட்டு கொடுங்கோ.

காலை பாலோ , டிபனோ அல்லது சாதமோ ஒரு நேரம் fix பண்ணிக்கோங்கோ , அந்த நேரத்தில் மட்டுமே தரும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு 5 நிமிஷம் 10 நிமிஷம் முன்னே பின்னே பரவால்லை. சுக்கு காபி, பாதாம் பால் சேர்த்துக்கலாம். பொதுவாக. புதியதாக சமைத்த உணவுகள் மட்டுமே சாப்பிடணும்.

எனக்கு கார்த்தால 2 மேரி பிஸ்கட் உடன் 1 டம்ளர் பால் தருவா அம்மா . Morning breakfast கிடையாது 10.30க்கு சாதம் போட்டுவிடுவா........அப்போதான் கொஞ்ச நேரமாவது தலை காய்ந்து தூங்க முடியும். 7.30க்கு பாலும் பிஸ்கட் ம். பிறகு 9 - 9.15க்கு குளித்துவிடுவா.............அப்புறம் வயத்தை கட்டி, தலைக்கு சாம்பரணி போட்டு பிறகு 10.30 க்கு சாப்பிட சரியாக இருக்கும்.

நடு நடுவே குழந்தைக்கு பால் தரவேண்டி இருக்கும். அதுக்கு குளித்து விடணும், சாம்ப்ராணி போடணும், இதுவும் நேரத்துக்கு இருக்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 8:52 pm

So , கார்த்தால, பாலும் பிஸ்கட் ம் அல்லது பிரட் ஓரங்களை எடுத்துவிட்டு தாங்கோ. இல்ல கண்டிப்பாக breakfast  வேண்டும் என்றால் இட்லி தாங்கோ, தொட்டுக்கொள்ள காரம் ரொம்ப குறைவாக போட்ட கொத்துமல்லி அல்லது புதினா சட்னி தாங்கோ .

நோ தேங்காய் சட்னி.

சர்க்கரை அல்லது தயிர் என்றாலும் ஓகே. இல்ல இட்லி மேல நெய் அல்லது நல்லெண்ணெய் என்றால் ரொம்ப உத்தமம்.

அதேபோல கடுத்த மாவு தோசை வேண்டாம், நன்கு  பொங்கிய, கொஞ்சம் புளித்த மாவில்  தோசை......................எண்ணையை தோசைக் கல்லில்  தடவி மேலே மூடி போட்டு வார்த்து கொடுங்கோ. சரியா?  
இல்லாவிட்டால் 2 தளிர் வடாம் கூட காய்ச்சி தரலாம்.

oats  கூட குடிக்கலாம் .


Last edited by krishnaamma on Thu Sep 04, 2014 8:53 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 8:53 pm

எதானாலும் 2 போறும். உடனே வெற்றிலை போட்டுக்கணும். வெந்நீர் வெது வெதுப்பக குடிக்கணும். முதல் பத்து நாட்கள் அளவாய் தண்ணீர் குடியுங்கோ, அப்புறம் பதினோராம் நாளிலிருந்து நிறைய தண்ணீர் குடியுங்கோ. தாய்பால் சுரக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குழந்தைக்கும் ஒவ்வொரு முறை பால் குடித்ததும் ஒரு 1/2 ஸ்பூன் தண்ணீர் - வெது வெதுப்பான வெந்நீர் தரவும். அது வாயில் பால் தங்காமல் இருக்க உதவும். வாயும் நாறாது. குழந்தைக்கு காலை குளிக்கும்போது மட்டுமே நாம் நாக்கை வழித்து விடுவோம், பிறகு நாள் பூரா அது பாலை குடிக்கும்போது நாக்கு கசந்துவிடும்......எங்க பாட்டி இப்படி த்தான் சொல்வா, எனவே, குழந்தைக்கும் தண்ணீர் must .

அதேபோல மதியம் சரியாக 12 மணிக்கு 'ஓர் சங்கு' என்று சொல்லுவா, அதாவது ஒரு பாலாடை தண்ணீர் புகட்டுவா. இது தினமும் தரணும். 11ம் நாளில் இருந்து ஒரு சாத்துக்குடியை ஜூஸ் பிழிந்து ஒரு பாலாடை குழந்தைக்கும் மீதியை அம்மாக்கும் தரணும். இதை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 3ம் மாதம் முழுபழ ஜூசும் குழந்தையே குடிச்சுடணும். அது தான் கணக்கு புன்னகை

சளி பிடிக்கும் என்கிற பயம் இருந்தால், வெந்நீரில் ஜூஸ் கலக்கவும். நிறைய சர்க்கரை போடணும். குழந்தைகளுக்கு சர்க்கரை மட்டும் தான் தெம்பு என்று பாட்டி சொல்வா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 8:56 pm

இப்போ லஞ்ச், தினமும் ப்ரெஷ் ஆக கறிகாய் வாங்கி சமைப்பது அதி உத்தமம்.

பிஞ்சு கறிகாய்கள் ரொம்ப நல்லது. பிஞ்சு அவரை, வெண்டைக்காய், வாழைக்காய் கச்சல் ( வாழைக்காய் தான் வாய்வு, பிஞ்சு வாழைக்காய்............குட்டி குட்டி ஆக இருக்குமே அது ரொம்ப நல்லது புன்னகை  ) புடலங்காய், பெங்களூர் கத்தரிக்காய் அதாவது'சௌ சௌ ', (கொத்தவரை வேண்டாம் வாய்வு ), பீன்ஸ், காரட், பிடிகருணை என்று சொல்லப்படும் கர்ண கிழங்கு, பூசணிகாய்  , பரங்கிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், முட்டைகோஸ், பழக்கம் இருந்தால் சுரைக்காய் ( இது , பூசணிகாய்  எல்லா நீர்க்காய் களும்  குளுமை அதனால் சளி பிடிக்க வாய்ப்பு உண்டு. பார்த்து உபயோகிக்கவும்.)

வாசனைக்கு: பூண்டு, இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, பிரண்டை, புதினா, தக்காளி,
ஓமம் போன்றவை  உபயோகிக்கலாம்.

காரத்துக்கு மிளகு மட்டும் தான். நோ பச்சைமிளகாய் அல்லது மிளகாய் வற்றல்.

நாம் கூட்டு   பொடி அல்லது வேறு எதாவது பொடி அரைக்கும்போது போடும் மிளகாய் வற்றலே போதுமானது. முடியும் வரை அதில்  கூட மிளகாய் வற்றல் ஐ குறைத்து போட்டுவிட்டு மிளகை சேர்க்கலாம்.

1. மேலே சொன்ன காய்களில் ஏதாவது ஒன்றை பயத்தம் பருப்புடன் சேர்த்து வேகவைத்து, வெளியே எடுத்து வெறும் சீரகம் தாளித்து, பருப்பு காய் கலவையை போட்டு , ஒரு 1/4 ஸ்பூன் மிளகு சீரகம் பொடி போட்டு, பெருங்காயப்பொடி,  உப்பும் போட்டு ஒரு கொதி விட்டு இறக்கணும் அவ்வளவுதான். கூட்டு ரெடி.

2. கூட்டு  பொடி செய்து வைத்துக்கொண்டு ஒருநாள் கூட்டில் அதை போடலாம்.


Last edited by krishnaamma on Thu Sep 04, 2014 8:58 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 8:56 pm

வற்றல் குழம்பு, மிளகு குழம்பு, வெந்தயகுழம்பு சாப்பிடலாம். மிளகு கூட்டு சாப்பிடலாம்.

1. ரசம் அல்லது குழம்பு செய்ய பழைய புளி நல்லது ( புளி பேஸ்ட் செய்து வைத்துக்கொள்வது நல்லதுபுன்னகை ) கொஞ்சம் கரைத்து, 1 தக்காளியையும் கரைத்து, துளி ரசப்பொடி போட்டு , பெருங்காயப்பொடி போட்டு கொதிக்க விடணும். நன்கு கொதித்ததும், விளாவி, கொத்துமல்லி தூவி இறக்கணும். தேவையானால் மஞ்சள் பொடி போடலாம். கொஞ்சம் மிளகு சீரகப்பொடியும் போடலாம்.

2. சீரகம் , பூண்டு, தக்காளி வதக்கி (நெய்யில்) துளி புளி தண்ணி விட்டு ரசப்பொடி , பெருங்காயப்பொடி,  மஞ்சள் பொடி போட்டு, கொதிக்கவிட்டு ரசம் செய்யலாம்.

3. மிளகு ரசத்திலேயே சிலர் பூண்டும் தட்டி போடுவார்கள் அப்படியும் செயலாம் அல்லது தனியாகவே பூண்டு உரித்து போட்டும் செயலாம்.


(பேதியாகலை என்றால் ரசம் தரலாம். இல்லாவிட்டால் பொடி சாதம், துவையல் அல்லது கூட்டு தான் புன்னகை )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 9:01 pm

வெற்றிலை போடுவதற்காக வைத்திருக்கும் சுண்ணாம்பில் 'கத்தைகாம்பு' என்று ஒன்று கிடைக்கும் அதை வாங்கி கலப்பா. அது வயற்று புண்ணை ஆற்றும் என்று சொல்வா. அது கலந்ததும் சுண்ணாம்பு கோவில் சுவத்தில் அடிக்கும் காவி போல ஆகிவிடும். நாளா வட்டத்தில் நம் பல்லும் அப்படித்தான் ஆகும். ஆனாலும் தினமும் பல் நன்றாக தேய்த்துவிட்டால் நாளா வட்டத்தில் பழைய வெண்மை நிறம் வந்துவிடும் புன்னகை இதுக்கு நானே சாக்ஷி ! புன்னகை


லஞ்ச் ஆச்சு. இப்போ மதியம் ஒரு கப் (12 மணிக்கு ) ஆரஞ்சு அதாவது சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் மீண்டும் ஒரு 3 மணிக்கு பசிக்கும். அப்போ டிபன் லைட்டாக தரலாம். காலை இல் சொன்ன item கள் தான் . இரண்டே இரண்டு தரணும். மீண்டும் வெற்றிலை பாக்கு.

அப்புறம் இரவு சாப்பாட்டை 6 - 6.30 க்கெல்லாம் முடித்துவிடணும். இரவு சாதம் வேண்டாம் என்றால், சாயங்காலம் 2 தளிர் வடாம் சாப்பிட்டு விட்டு தோசை, இட்லி அல்லது oats அல்லது ஓரம் நீக்கப்பட்ட பிரட் ஏதாவது சாப்பிடலாம். இல்லாவிட்டால் தயிர் சாதம் சாப்பிடலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 9:02 pm

தொட்டுக்கொள்ள : சுட்ட உளுந்து அப்பளம் அல்லது தளிர் வடாம் .................. உப்பு நார்த்தங்காய், உப்பு எலுமிச்சை, வேப்பிலை கட்டி, கருவேப்பிலை பொடி, கொத்தமல்லி பொடி, புதினா பொடி போன்றவை. அல்லது மணத்தக்காளி , சுண்டைக்காய் அல்லது வேப்பம்பூ பொறித்து வைத்துக்கொண்டு அதை தொட்டுக்கொள்ளலாம்.

அம்மாக்கு பால் குறைவாக இருப்பது போல தெரிந்தால், பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட சொல்லலாம் புன்னகை கஷ்டமானால் ஏதாவது ஒரு விதத்தில் பூண்டு சேர்ந்தால் பால் அதிகம் சுரக்கும் என்பது நம்பிக்கை புன்னகை

துவரம்பருப்பு கூடவே கூடாது புன்னகை

முதலில் பொடி சாதம்தான். தினமும் சாப்பிட உட்கார்ந்ததும் 2 ஸ்பூன் நெய் கை இல் முதலில் தரணும். அதை அப்படியே சாப்பிட்டு விடனும் புன்னகை பிறகு ஏதாவது ஒரு பொடி சாதம். அல்லது மணத்தக்காளி , சுண்டைக்காய் அல்லது வேப்பம்பூ பொறித்து வைத்துக்கொண்டு அதை போட்டு நொறுக்கி சாதம் சாப்பிடனும். பிறகுதான் கூட்டு அல்லது ரசம், குழம்பு எல்லாம். தயிர் சாதத்துடன் முடிக்கணும். நல்லா கெட்டித் தயிர் ஏடுடன் இருக்கணும் புன்னகை
இரவு படுக்கும் முன் பால் குடிக்கணும். வெற்றிலை போடணும். டாக்டர் சொல்லும் பழங்கள் சாப்பிடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 9:08 pm

பொரித்த கூட்டுப்பொடி :

தேவயானவை:

உளுந்து 1 கப்
மிளகாய் வற்றல் 2 -4
2 - 3 தேக்கரண்டி சீரகம், மிளகு
ஒரு துளி எண்ணை

செய்முறை:

துளி எண்ணை விட்டு இரண்டையும் வறுக்கவும்.
மிக்சி இல் அரைக்கவும் .
தேவயான போது உபயோகப்படுத்தவும்.

உபயோகப்படுத்தும் முறை: கூட்டு செய்ய, புடலங்காய், பெங்களூரு கத்தரிக்காய் , பீன்ஸ் , காரட், முட்டை கோஸ், அவரக்காய் போன்றவை ஏற்றவை. இதை ஏதாவது ஒருக்காய் + பயத்தம் பருப்பு சேர்த்து குக்கர் இல் வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும், வெந்த காய் பருப்பை கொட்டவும்.

கொஞ்சம் பெருங்காய பொடி, உப்பு, 2 ஸ்பூன் கூட்டு பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
அவ்வளவு தான் கூட்டு ரெடி.

ரசத்துடன் அல்லது துவயலுடன் அமர்க்களமாக இருக்கும்.

குறிப்பு: தேங்காய் பால் வயற்று புண்ணுக்கு நல்லது.............அதனால் பிள்ளை பெற்று 1 மாதம் கழித்து கொஞ்சமாய் கூட்டில் தேங்காய் பால் விடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 9:09 pm

சீரகப்பொடி

குண்டாகவும், பழுப்பு, நறுமணமாகவும் உள்ள சீரகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் அல்லது ஒரு அணைக்கப்பட்டு அடுப்பில் ஒரு வாணலி இல் சீரகத்தை போட்டு வறுக்கவும்.
கை பொறுக்கும் சூடு போறும்.

பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.

மோர் குடிக்கும்போது உப்பு மற்றும் இந்த சீரகப்பொடி போட்டு குடிக்கலாம் புன்னகை
வயறு சரி இல்லாத போது அல்லது 'பேதி' ஆகும்போது இந்த பொடியை சுடு சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் சரியாகும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best அங்காய பொடி

Post by krishnaamma on Thu Sep 04, 2014 9:17 pm

அங்காய பொடி

தேவையானவை :

வேப்பம் பூ 1 tab.sp
‘திப்பிலி ’ 6
‘சுண்டைகாய் ’ வத்தல் 1 tab sp
‘மணத்தகாளி வத்தல் ’ 1 tab sp
'துவரம் பருப்பு' 1 tab sp
தனியா 1 tea sp
மிளகு 1 tea sp
சீரகம் 1 tea sp
உப்பு
மிளகாய் வற்றல் 4

செய்முறை :

வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best அங்காய பொடி 2

Post by krishnaamma on Thu Sep 04, 2014 9:29 pm

அங்காய பொடி 2

இதில் கொடுத்துள்ளவை எல்லாமே கண் அளவு தான், எனக்கு அளவு தெரியாது புன்னகை ஆனால் பருப்புகள் மற்றும் தனியா அதிகமாகவும் சுக்கு 4 - 5 ம் எடுத்துக்கொள்ளுங்கள்.

தேவையானவை :

வேப்பம் பூ
‘அரிசி திப்பிலி ’
‘சுண்டைகாய் ’ வத்தல்
‘மணத்தகாளி வத்தல் '’
'கடலை பருப்பு'
உளுத்தம் பருப்பு
சுக்கு
தனியா
மிளகு
மஞ்சள் பொடி
உப்பு
பெருங்காயப்பொடி

செய்முறை :

வாணலி இல் பொறுமையாக ஒவ்வொன்றாக கருகாமல் வறுக்கவும்.
'நைசான' பொடியாக மிக்சி இல் பொடித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
சுடு சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிடவேண்டியது தான் புன்னகை

குறிப்பு: இந்த பொடியை பிள்ளை பெற்றவள் மட்டும் சாப்பிடணும் என்று இல்லை, சிறு குழந்தைகளுக்கும் தரலாம், வாய் கசப்பாக 'பீல்' பண்ணுகிறவர்களும் உணவு ஜெரிக்கதவர்களும் கூட சாப்பிடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

best Re: பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை