உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Today at 1:11 am

» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!
by சக்தி18 Yesterday at 10:54 pm

» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி
by சக்தி18 Yesterday at 10:48 pm

» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு
by M.Jagadeesan Yesterday at 6:51 pm

» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து
by T.N.Balasubramanian Yesterday at 6:45 pm

» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Jun 23, 2019 10:23 pm

» சினி துளிகள்! - வாரமலர்
by ayyasamy ram Sun Jun 23, 2019 10:17 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 9:10 pm

» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:18 pm

» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:16 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by சிவனாசான் Sun Jun 23, 2019 8:06 pm

» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.
by சக்தி18 Sun Jun 23, 2019 6:51 pm

» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:49 pm

» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன்! ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:13 pm

» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா?
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:08 pm

» ஏன்…? (நட்பு)
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:01 pm

» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை! - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது
by ayyasamy ram Sun Jun 23, 2019 4:07 pm

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 12:27 pm

» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...!!
by ayyasamy ram Sun Jun 23, 2019 11:52 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Jun 23, 2019 11:47 am

» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
by சக்தி18 Sun Jun 23, 2019 10:55 am

» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:26 am

» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:21 am

» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:18 am

» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்
by Guest Sun Jun 23, 2019 8:53 am

» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்!
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:03 am

» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…!!
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:55 am

» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:38 am

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:32 am

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by M.Jagadeesan Sun Jun 23, 2019 7:30 am

» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை
by சக்தி18 Sat Jun 22, 2019 6:57 pm

» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 5:20 pm

» வீட்டுக்குள் மரம்.
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 5:12 pm

» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்? அமைச்சா் வேலுமணி விளக்கம்
by M.Jagadeesan Sat Jun 22, 2019 9:56 am

» லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை.
by M.Jagadeesan Sat Jun 22, 2019 8:50 am

» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 6:55 am

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by M.Jagadeesan Fri Jun 21, 2019 7:42 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by M.Jagadeesan Fri Jun 21, 2019 7:24 pm

» நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா?- அதிர்ச்சித் தகவல்
by சக்தி18 Fri Jun 21, 2019 6:54 pm

» சினிமா – தகவல்கள்
by சக்தி18 Fri Jun 21, 2019 5:01 pm

Admins Online

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by krishnaamma on Wed Sep 03, 2014 9:37 pm

நமக்கு ரொம்ப பழக்கமான பச்சடி வகைகளை இங்கு பார்ப்போம்.

'டாங்கர்'

இது ரொம்ப சுலபமான ஆனால் ருசியான பச்சடி.

தேவையானவை:

சிவக்க வறுத்து அரைத்த  உளுத்தம் பொடி 1/2 கப்
திக்கான மோர்  - ஒரு கப்
மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது  எதானாலும் பரவாஇல்லை  4- 6
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
அவ்வளவுதான் 'டாங்கர் பச்சடி' தயார் புன்னகை
எல்லா காரமான துவயல்களுக்கும் , கூட்டுக்கும் இது ரொம்ப நல்லா இருக்கும்.
நாங்க இதில் சாதம் போட்டுக் கூட  சாப்பிட்டுவிடுவோம்.
ரொம்ப அருமையாக இருக்கும் .


Last edited by krishnaamma on Wed Nov 28, 2018 10:59 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by krishnaamma on Wed Sep 03, 2014 9:48 pm

மாங்காய் பச்சடி, புது வருட பிறப்பு அன்று செய்வது வழக்கம். அறு சுவை பச்சடி அது. அறு சுவைகள்: இனிப்பு, கசப்பு, காரம், உப்பு, துவர்ப்பு மற்றும் புளிப்பு. இவை அனைத்தும் இந்த பச்சடியில் உண்டு. இதை செய்வது மிகவும் சுபலம்.
1 ஸ்பூன் வேப்பம் பூ
4 ஸ்பூன் மாங்காய் துண்டுகள்
3 ஸ்பூன் வெல்லம்
1/2 ஸ்பூன் கடுகு
2 பச்சை மிளகாய்
1/2 ஸ்பூன் உப்பு
1 ஸ்பூன் நெய்

முதலில் வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பிறகு வேப்பம் பூ போட்டு வதக்கவும். பிறகு மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.

பிறகு 1 கப் தண்ணீர் விடவும். மாங்காய் துண்டுகள் வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்.

உப்பு போடவும். நன்றாக கொதித்ததும் இறக்கவும்.

அருமையான பச்சடி ரெடி.

என் வீட்டில் அனைவரும் இந்த பச்சடியை விரும்பி சாப்பிடுவதால் நான் மாங்காய் சீசனில்

நிறைய செய்வது வழக்கம். அப்பொழுது வேப்பம் பூ சேர்க்காமல், வெறும் மாங்காய் பச்சடி செய்வேன். குக்கரில் மாங்காயை செதுக்கி போட்டு, வேக வைக்கணும்.

பிறகு மிக்ஸியில் போட்டு ஓரு சுற்று ஓட்டணும். பிறகு வழக்கம் போல் பச்சடி செய்ய வேண்டியது தான்.

அந்த சுவைக்கு "சொத்தையே எழுதி வைக்லாம் போங்கள்".  புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by krishnaamma on Wed Sep 03, 2014 9:54 pm

நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை  :

பெரிய நெல்லிக்காய் - 5
'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
பச்சை மிளகாய் - 2 - 4
தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
இஞ்சி 1 இன்ச் அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நெல்லிக்காயை நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த  விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள நெல்லிக்காய் விழுதில் கொட்டவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty தேங்காய் இஞ்சி பச்சடி

Post by krishnaamma on Wed Sep 03, 2014 9:57 pm

தேங்காய்  இஞ்சி பச்சடி

தேவையானவை  :

'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
பச்சை மிளகாய் - 4 -6
தேங்காய் துருவல் - 1 கப்
இஞ்சி 2 -3 இன்ச் அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த  விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ்.
முக்கியமாய் 'ஸ்ரார்த  துவையலுக்கு; ரொம்ப நல்லா இருக்கும்.புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by தமிழ்நேசன்1981 on Wed Sep 03, 2014 10:04 pm

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! 3838410834 பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! 3838410834 பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by krishnaamma on Thu Sep 04, 2014 8:28 pm

நன்றி நேசன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty வெள்ளரிக்காய் பச்சடி!

Post by krishnaamma on Mon Oct 01, 2018 10:20 am

வெள்ளரிக்காய் பச்சடி!

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! 4c823610

தேவையானவை : 

2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
2 கப் குழப்பின கெட்டி தயிர் 
1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கின கொத்துமல்லி தழை 
இரண்டு பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும் 
உப்பு 

தாளிக்க :

அரை ஸ்பூன் கடுகு
ஒரு சிட்டிகை பெருங்காயம்
அரை ஸ்பூன் எண்ணெய்


செய்முறை :

ஒரு பேசினில் , துருவிய வெள்ளரிக்காய், தயிர், கொத்துமல்லி தழை , பச்சை மிளகாய், உப்பு என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
தாளிக்க கொடுத்ததை தாளித்து இதன் மேல் கொட்டவும்.
அவ்வளவுதான், சுவையான வெள்ளரிக்காய் பச்சடி ரெடி.
எல்லா துவையல் சாதத்திற்கும் இது நன்றாக இருக்கும்.

குறிப்பு: சிலர் வெள்ளரிக்காயை துருவல் மிகவும் சிறியதாக நறுக்கியும் செய்வார்கள்.புன்னகை  


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty வெள்ளரிக்காய் பச்சடி 2

Post by krishnaamma on Mon Oct 01, 2018 10:30 am

வெள்ளரிக்காய் பச்சடி 2 தேவையானவை  :

2 வெள்ளரிக்காய் - அலம்பி துடைத்து தோல் சீவி துருவவும்.
'திக்' ஆக குழப்பிய தயிர் - 1 cup
பச்சை மிளகாய் - 4 -6 
தேங்காய் துருவல் - 1 கப் 
இஞ்சி 2 -3 இன்ச் அளவு 
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன் 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
ஒரு சிட்டிகை பெருங்காயம்

எண்ணெய் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சைமிளகா, இஞ்சி,உப்பு , தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த  விழுதுடன் தயிரைச் சேர்க்கவும்.
கொஞ்சமும் தண்ணீர் சேர்க்கவேண்டாம். 
துருவிய வெள்ளரிக்காயையும் அதில் போட்டு நன்கு கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு  கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, தயிருடன் உள்ள விழுதில் கொட்டவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
எல்லா துவையலுக்கும் இது சுவையான சைடு டிஷ். 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty விளாம்பழ பச்சடி !

Post by krishnaamma on Wed Nov 28, 2018 11:01 am

விளாம்பழ பச்சடி !

தேவையானவை :

விளாம்பழம்- - 2
பொடியாக்கிய வெல்லம் – 3/4கப்
சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
நெய் – 2டீஸ்பூன்
உப்பு – ஒருசிட்டிகை

செய்முறை:

விளாம்பழத்தை உடைத்து,ஓட்டிலிருந்து எடுத்து, கூழாக மசித்து வைக்கவும்.

வெல்லத்தை தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.

வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். 

மீண்டும் அடுப்பில் வைத்து, 'பிசு பிசு' பாகு வந்ததும், ( கையில் தொட்டால் ஓட்டவேண்டும், அது தான் பதம் புன்னகை ) மசித்து வைத்த விளாம்பழத்தை போட்டு கலக்கவும்.

உப்பு, சுக்குப்பொடி போட்டுக் கலக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஒரு சின்ன கடாய் அல்லது தாளிக்கும் கரண்டி இல், நெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.

அருமையான விளாம்பழ தித்திப்பு பச்சடி தயார் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 28, 2018 11:16 am

@krishnaamma wrote:விளாம்பழ பச்சடி !

தேவையானவை :

விளாம்பழம்- - 2
பொடியாக்கிய வெல்லம் – 3/4கப்
சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
நெய் – 2டீஸ்பூன்
உப்பு – ஒருசிட்டிகை

செய்முறை:

விளாம்பழத்தை உடைத்து,ஓட்டிலிருந்து எடுத்து, கூழாக மசித்து வைக்கவும்.

வெல்லத்தை தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.

வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். 

மீண்டும் அடுப்பில் வைத்து, 'பிசு பிசு' பாகு வந்ததும், ( கையில் தொட்டால் ஓட்டவேண்டும், அது தான் பதம் புன்னகை ) மசித்து வைத்த விளாம்பழத்தை போட்டு கலக்கவும்.

உப்பு, சுக்குப்பொடி போட்டுக் கலக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஒரு சின்ன கடாய் அல்லது தாளிக்கும் கரண்டி இல், நெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.

அருமையான விளாம்பழ தித்திப்பு பச்சடி தயார் !
மேற்கோள் செய்த பதிவு: 1287365
முதலில் இனிப்பில் தாளிப்பு தேவையா என்ற சந்தேகம் இருந்தது.
தித்திப்பு பச்சடி என்றவுடன் சந்தேகம் தெளிந்தது.
அருமை அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12525
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty நெல்லிமுள்ளி பச்சடி !

Post by krishnaamma on Wed Nov 28, 2018 11:37 am

நெல்லிமுள்ளி பச்சடி !

தேவையாவை :

நெல்லிமுள்ளி – 10 - 15 
புளிப்பில்லாத தயிர் – 2கப்
பச்சைமிளகாய் – 4
தேங்காய்த்துருவல். -  3டேபிள்ஸ்பூன்
நெய் – 1டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/4கப் நறுக்கியது 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

நெல்லிமுள்ளியை ஒரு அரைமணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து மைய அரைத்துக் கொள்ளவும்.. 
அதில், தேங்காய், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும். 
அரைத்த அனைத்தையும் புளிக்காத தயிரில் கலந்து,உப்பு போட்டு கலக்கவும்.
பிறகு, நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
தேவையானால் கொத்துமல்லி தூவலாம்.


குறிப்பு: பெரிய நெல்லிக்காய்களை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்வதையே  நெல்லி முள்ளி என்று சொல்கிறோம். இந்த பச்சடியை பொதுவாக துவாதசி அன்று செய்வார்கள். காய்ந்தாலும் நெல்லிக்காய் இல் உள்ள சத்துக்கள் வீணாவது இல்லை. 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty மணத்தக்காளி வற்றல் பச்சடி !

Post by krishnaamma on Wed Nov 28, 2018 11:43 am

மணத்தக்காளி வற்றல் பச்சடி !


தேவையானவை:


மணத்தக்காளி வற்றல் – 1/4கப்
கெட்டித்தயிர். – 2கப்
மிளகாய்வற்றல் – 1
துவரம்பருப்பு – 1/2டீஸ்பூன்.
சீரகம் – 1/4டீஸ்பூன்
நெய் – 2டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை:


வாணலி இல் நெய்விட்டு மணத்தக்காளி வற்றலை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். 
பின் மிளகாய் வத்தல்,சீரகம், துவரம்பருப்பு, இவைகளை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
பிறகு,  அனைத்தையும் தயிரில் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு சேர்க்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty மல்டி வெஜிடபிள் பச்சடி!

Post by krishnaamma on Wed Nov 28, 2018 11:49 am

மல்டி வெஜிடபிள் பச்சடி!தேவையானவை:


துருவிய கேரட்,சௌசௌ,முட்டைகோஸ் குடைமிளகாய் – தலா 2டேபிள்ஸ்பூன்


தேங்காய் துருவல்  – தலா 1டேபிள்ஸ்பூன்


வறுத்த கசகசா – 1/2டீஸ்பூன்


கடுகு – 1/4டீஸ்பூன்


பச்சைமிளகாய் – 1


மல்லித்தழை - சிறிதளவு


தயிர் – 3கப்


உப்பு – ருசிக்கேற்ப


எண்ணெய் – தேவையானாளவு.செய்முறை:வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும்.


குழப்பி வைத்துள்ள தயிரில் கொட்டவும்.


தேங்காய், பச்சைமிளகாய், கசகசா மற்றும் கோத்த்துமல்லி எல்லாவற்றையும் விழுதாக அரைக்கவும்.


பின்பு, மிகவும் பொடியாக நறுக்கிவைத்துள்ள காய்கறிகள் அரைத்த விழுது எல்லாவற்றையும் தயிரில் போட்டு நன்கு கலக்கவும்.


உப்பு போட்டு கலந்து பரிமாறவும். 
Last edited by krishnaamma on Wed Nov 28, 2018 12:21 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by krishnaamma on Wed Nov 28, 2018 11:52 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@krishnaamma wrote:விளாம்பழ பச்சடி !

தேவையானவை :

விளாம்பழம்- - 2
பொடியாக்கிய வெல்லம் – 3/4கப்
சுக்குப்பொடி – 1/2டீஸ்பூன்
கடுகு – 1/4டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
நெய் – 2டீஸ்பூன்
உப்பு – ஒருசிட்டிகை

செய்முறை:

விளாம்பழத்தை உடைத்து,ஓட்டிலிருந்து எடுத்து, கூழாக மசித்து வைக்கவும்.

வெல்லத்தை தூளாக்கி, கொஞ்சம் தண்ணீர்விட்டு அடுப்பில் வைக்கவும்.

வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். 

மீண்டும் அடுப்பில் வைத்து, 'பிசு பிசு' பாகு வந்ததும், ( கையில் தொட்டால் ஓட்டவேண்டும், அது தான் பதம் புன்னகை ) மசித்து வைத்த விளாம்பழத்தை போட்டு கலக்கவும்.

உப்பு, சுக்குப்பொடி போட்டுக் கலக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஒரு சின்ன கடாய் அல்லது தாளிக்கும் கரண்டி இல், நெய்விட்டு கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும்.

அருமையான விளாம்பழ தித்திப்பு பச்சடி தயார் !
மேற்கோள் செய்த பதிவு: 1287365
முதலில் இனிப்பில் தாளிப்பு தேவையா என்ற சந்தேகம் இருந்தது.
தித்திப்பு பச்சடி என்றவுடன் சந்தேகம் தெளிந்தது.
அருமை அம்மா
நன்றி ஐயா... தித்திப்பு  , காரம் கலந்து அருமையாக இருக்கும்..மாங்காய் பச்சடி போல இருக்கும் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty மாங்காய் இஞ்சி பச்சடி!

Post by krishnaamma on Wed Nov 28, 2018 11:55 am

மாங்காய் இஞ்சி பச்சடி!


தேவையானவை:

புளிப்பில்லாத தயிர் – 2கப்

நறுக்கிய மாங்காய் இஞ்சி – 11/2டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 4டேபிள்ஸ்பூன்

சீரகம் 1 /2  டீஸ்பூன் 

கடுகு – 1/4டீஸ்பூன்

கொத்துமல்லி இலைகள்  – சிறிதளவு.

பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

தேங்காய், சீரகம், மாங்காய் இஞ்சி முதலியவற்றை விழுதாக அரைக்கவும். 

தயிரில் அரைத்தவிழுது, உப்பு போட்டுக் கலந்து, கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்துமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி ! Empty Re: பச்சடி வகைகள் - தக்காளி பச்சடி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை