புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலை மேலே மந்திரப்பானை Poll_c10மலை மேலே மந்திரப்பானை Poll_m10மலை மேலே மந்திரப்பானை Poll_c10 
42 Posts - 63%
heezulia
மலை மேலே மந்திரப்பானை Poll_c10மலை மேலே மந்திரப்பானை Poll_m10மலை மேலே மந்திரப்பானை Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
மலை மேலே மந்திரப்பானை Poll_c10மலை மேலே மந்திரப்பானை Poll_m10மலை மேலே மந்திரப்பானை Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மலை மேலே மந்திரப்பானை Poll_c10மலை மேலே மந்திரப்பானை Poll_m10மலை மேலே மந்திரப்பானை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலை மேலே மந்திரப்பானை


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Aug 30, 2014 7:46 am

மலை அடிவாரத்தில் அந்தச் சிறுவனின் வீடு இருந்தது. அவனுக்கு அப்பா இல்லை. அவர் இருந்தபோது நிறையச் சொத்துக்கள் இருந்தன. அந்தச் சொத்துக்களை, மலை உச்சியில் இருந்த ஒரு பணக்காரன் ஏமாற்றி எடுத்துக்கொண்டான். இப்போது, அவர்களிடம் இருப்பது, ஒரு பசு மட்டுமே. அம்மாவும் மகனும் சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்பட்டனர்.

மகனை அழைத்த அம்மா, ''இந்தப் பசுவைப் பக்கத்தில் உள்ள நகரத்தில் விற்றுவிட்டு வா'' என்று அனுப்பினார்.

மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டிகொண்டு சிறுவனும் கிளம்பினான். வழியில் ஓருவரைச் சந்தித்தான். அவர் துணியால் மூடிய ஒரு பொருளை வைத்திருந்தார். சிறுவனைப் பார்த்து, ''எங்கே போகிறாய்?' என்று கேட்டார்.

''இந்தப் பசுவை விற்பதற்காகச் சந்தைக்குப் போகிறேன்'' என்றான்.

''அப்படியா... அந்தப் பசுவை எனக்கு விற்கிறாயா?'' என்று கேட்டார்.

''நீங்கள் எவ்வளவு தருவீர்கள்?'' என்றான்.

''இந்தப் பானையை உனக்குத் தருகிறேன்'' என்றார்.

''பசுவுக்குப் பதிலாக பானையா? நான் தர மாட்டேன்'' என்றான் சிறுவன்.

அப்போது, மெல்லிய ஒரு குரல் ''என்னை வாங்கிக்க, என்னை வாங்கிக்க'' என்று பானையில் இருந்து வந்தது. சிறுவனுக்கோ ஆச்சர்யமாக இருந்தது. பசுவைக் கொடுத்து, பானையை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான்.

அவனைப் பார்த்த அம்மா ஆர்வமுடன், ''மகனே, பசுவை விற்றுவிட்டாயா?'' என்று கேட்டார்.

''ஓ... பசுவுக்குப் பதில், இதோ இந்தப் பானையை வாங்கிவந்தேன்'' என்றான்.

அம்மா அதிர்ந்தார். ''உனக்கு மூளையே இல்லையா? யாராவது பானைக்காகப் பசுவை விற்பார்களா? இதை என்ன செய்வது?'' என்று சத்தம் போட்டபடி, அந்தப் பானையை வெளியே வீசப்போனார்.

அப்போது, 'என்னை வீசாதீர்கள். என்னை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவையுங்கள்' என்றது அந்தப் பானை.

பானை பேசியதைப் பார்த்த அம்மாவுக்கு, ஒரே ஆச்சர்யம். பானை கூறியபடியே அதை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி, அடுப்பை மூட்டினார். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. சற்று நேரத்தில்...

''நான் போய் உங்களுக்குச் சாப்பிட ஏதாவது கொண்டுவருகிறேன்'' என்றது பானை.

காற்றில் பறந்து மலை உச்சிக்குப் போன பானை, அங்கே இருந்த பணக்காரன் வீட்டுச் சமையல் அறைக்குள் நுழைந்து, ஒரு பக்கமாக அமர்ந்தது.

பணக்காரனின் மனைவி, பலகாரங்களை விதவிதமாகச் சுட்டுக்கொண்டிருந்தார். வீடே கமகமத்தது. பலகாரங்களை வைக்க பாத்திரம் தேடினாள். அப்போது அந்தப் பானை அவள் கண்ணில் பட்டது.

'இந்தப் பானை எங்கிருந்து வந்தது? நல்லாத்தான் இருக்கு’ என்று நினைத்தவாறு, பலகாரங்களை அந்தப் பானைக்குள் வைத்தார். பிறகு, கணவரை அழைக்கப்போனார்.

உடனே, அந்தப் பானை காற்றில் மிதந்து மலை அடிவாரத்தில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு வந்தது. அம்மாவும் மகனும் பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டனர்.

அடுத்த நாள், 'என்னை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள்' என்றது பானை.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் காற்றில் மிதந்தவாறு பானை வெளியே போனது. மலை உச்சியில் பணக்காரனின் வயல்வெளியில், கோதுமை அறுவடை நடந்துக்கொண்டிருந்தது. கோதுமையைப் பிரித்து ஓரிடத்தில் குவியலாக வைத்திருந்தனர்.

அந்த இடத்தில் இறங்கிய பானை, பெரிய பானையாகத் தன்னை மாற்றிக்கொண்டது. அங்கே வேலை செய்துகொண்டிருந்தவர்கள், அந்தப் பானையில் கோதுமையைக் கொட்டினார்கள்... கொட்டினார்கள்... மூட்டைக்கணக்கில் கொட்டிக்கொண்டே இருந்தார்கள். அங்கே இருந்த கோதுமை எல்லாம் இப்போது பானைக்குள்.

வேலையாட்கள் அங்கிருந்து போனதும், பானை காற்றில் மிதந்து, சிறுவனின் வீட்டுக்கு வந்தது. சிறுவனின் அம்மா, அந்தக் கோதுமையில் இருந்து சிறிது எடுத்து ரொட்டி செய்தார். மிச்சக் கோதுமையை அங்கிருந்த தானியக் கிடங்கில் சேமித்தார். அந்த வருடத்துக்குப் போதுமான கோதுமை அது.

மறுநாள், தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்கச் சொன்னது பானை. அம்மாவும் அப்படியே செய்ய, தண்ணீர் கொதித்ததும் பானை காற்றில் மிதந்து வெளியேறியது.

பணக்காரன், தனது வீட்டில் கட்டுக்கட்டாகப் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தான். பானை அங்கே இறங்கியது. 'இந்தப் பணத்தை ஒரே இடத்தில் பத்திரமாக வைக்க வேண்டுமே... எங்கு வைப்பது?’ என நினைத்த பணக்காரன், அந்தப் பானையைப் பார்த்தான்.

'அடடே! இந்தப் பானையில் எல்லாப் பணத்தையும் வைத்து புதைத்துவிடலாமே’ என முடிவுசெய்தான். பானைக்குள் பணத்தை வைக்க... வைக்க... இடம் இருந்துகொண்டே இருந்தது. எல்லா பணத்தையும் வைத்துவிட்டான்.

பணக்காரன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, பானை காற்றில் மிதந்து செல்ல ஆரம்பித்தது. பணக்காரன் பதறியவாறு பானையைத் துரத்தினான். பானை அங்கிருந்து மறைந்து, சிறுவன் வீட்டை அடைந்தது.

''அம்மா... 'பசுவை யாராவது பானைக்கு விற்பார்களா?’ என்று கேட்டீர்களே. இப்போது இந்தப் பானைதான் நாம் இழந்ததை எல்லாம் மீட்டுக் கொடுத்துள்ளது'' என்றான் மகன்.

தங்களுக்குச் சொந்தமான பணம் திரும்பக் கிடைத்ததில் அம்மாவுக்கு மகனுக்கு சந்தோஷம்.

மறுநாள் அந்தப் பானை, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கச் சொன்னது.

''இனிமேல் இது எதற்கு? எங்களுக்குச் சேரவேண்டியதான் கிடைத்துவிட்டது'' என்றாள் அம்மா.

''உங்களை ஏமாற்றி மோசடி செய்தவருக்கு ஒரு பாடம் கற்பிக்கப்போகிறேன். நான் சொன்னபடி செய்யுங்கள்' என்றது பானை.

சிறுவனின் அம்மாவும் அப்படியே செய்தார். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், பானை காற்றில் மிதந்து பணக்காரன் கண்ணில்படும்படி போனது.

''என் பணத்தைத் திருடிக்கொண்டு போன பானை இதுதான்'' என்று பணக்காரன் கத்தினான். பானையைப் பிடித்துக் கையை விட்டுப் பணத்தைத் தேடினான். பணம் இல்லை. பணம் இருக்கிறதா என்று தலையை பானைக்குள் நுழைத்து பார்த்தான்.

பணம் எதுவும் இல்லை. திடீரென பானை சிறியதாகிவிட, தலையை வெளியே எடுக்க முடியவில்லை. பாவம் அந்த மோசக்காரன், மலைப் பகுதியில் பானைத் தலையுடன் திரிந்துகொண்டிருக்கிறான்.

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 31, 2014 10:16 am

மலை மேலே மந்திரப்பானை 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 02, 2014 6:36 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக