உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நட்பு !!!
by jairam Yesterday at 10:00 pm

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by jairam Yesterday at 9:40 pm

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சிவனாசான் Yesterday at 8:40 pm

» கண்டேன் கருணை கடலை
by T.N.Balasubramanian Yesterday at 8:29 pm

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by சிவனாசான் Yesterday at 8:27 pm

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:11 pm

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by T.N.Balasubramanian Yesterday at 4:43 pm

» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm

» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 3:33 pm

» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm

» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm

» கற்றாழையில் பிளாஸ்டிக் பை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» ஏடாகூடம்! -புதிர் விளையாட்டு கருவி
by ayyasamy ram Yesterday at 4:20 am

» மூச்சு வாங்குது…!
by ayyasamy ram Yesterday at 4:19 am

» ஒன்பது ரூபாய் சவால்!
by ayyasamy ram Yesterday at 4:15 am

» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா?
by ayyasamy ram Yesterday at 4:08 am

» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்
by ayyasamy ram Yesterday at 4:06 am

» விலை உயர்ந்த பொருள்!
by ayyasamy ram Yesterday at 4:04 am

» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}
by ayyasamy ram Yesterday at 4:03 am

» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…!!
by ayyasamy ram Yesterday at 4:00 am

» புல் பாலம்
by ayyasamy ram Yesterday at 3:59 am

» மனிதனின் ஆறு எதிரிகள்
by ayyasamy ram Yesterday at 3:58 am

» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…!!
by ayyasamy ram Yesterday at 3:57 am

» சூடு & சொல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:54 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Sep 16, 2019 8:31 pm

» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.
by சக்தி18 Mon Sep 16, 2019 5:31 pm

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by T.N.Balasubramanian Mon Sep 16, 2019 5:04 pm

» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...!
by சக்தி18 Mon Sep 16, 2019 3:52 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon Sep 16, 2019 1:59 pm

» சட்டம் எங்கே போனது?
by சக்தி18 Mon Sep 16, 2019 1:43 pm

» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
by சக்தி18 Mon Sep 16, 2019 1:05 pm

» மங்கையர் திலகங்கள்
by சக்தி18 Mon Sep 16, 2019 12:49 pm

» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...!!!.
by ayyasamy ram Mon Sep 16, 2019 12:30 pm

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by kram Mon Sep 16, 2019 12:15 pm

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by kram Mon Sep 16, 2019 11:28 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:12 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 11:07 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Sep 16, 2019 10:55 am

» காரணம் - கவிதை
by ayyasamy ram Mon Sep 16, 2019 9:38 am

» விடுகதைகள் - -ரொசிட்டா
by ayyasamy ram Mon Sep 16, 2019 9:22 am

» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
by ayyasamy ram Mon Sep 16, 2019 9:11 am

» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்
by ayyasamy ram Mon Sep 16, 2019 9:07 am

Admins Online

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by பாலாஜி on Thu Aug 28, 2014 12:24 pm

ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம், இருபத்தொண்ணுல இருந்து திண்டாட்டம்... கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய இந்தப் பாடல் வெளிவந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப் பாடலின் கருத்து இன்றைக்கும் நூறு சதவிகிதம் நமக்குப் பொருந்தி வருகிறது.

ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் 20 தேதிக்குமேல் திண்டாட்டமாகவே இருக்கிறது நம்மில் பலருக்கு. 'கையில வாங்கினேன். பையில போடல; காசு போன இடம் தெரியலை’ என்று திருச்சி லோகநாதன் பாடிய பாடலை பாட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது நம் வாழ்க்கை. எனவே, 21-ம் தேதிக்குப்பின் யாரிடம் கடன் கேட்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்.

இந்தப் பிரச்னையிலிருந்து நாம் எப்படித் தப்பிப்பது? என நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.

1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.

2. சம்பளம் வந்ததும் அத்தியாவசி யமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது.

3. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இதுபோக, மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, அடிக்கடி ஹோட்டலுக்குப் போவது, ஷாப்பிங் செய்வது, சுற்றுலா போவது போன்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.

4. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி, ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். இதை எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வைத்துவிடலாம். இந்தப் பணத்தை மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய, 20-ம் தேதிக்கு முன்பு தொடவே கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய வுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது ஆபத்பாந்தவனாக உதவும்.

ரிசர்வ் ஃபண்ட்தான் இருக்கிறதே என்று நினைத்து 20 தேதிக்குள் தாம்தூம் என்று செலவழிக்கக் கூடாது. அவசரத்துக்கு மட்டுமே என ஒதுக்கிய அந்தப் பணம் ஒருவேளை பயன்படவில்லை எனில், அதை அந்தக் கணக்கிலேயே அப்படியே வைத்துவிடலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் பணத்தை நீண்ட நாள் சேமிப்பாக மாற்றலாம்.

5. எப்போதுமே குறைந்த அளவில் கடனை வைத்துக்கொள்வது நல்லது. வீட்டுக் கடன் போன்ற சொத்து சேர்க்க உதவும் கடன்கள் தவிர்த்து, பிற கடன்கள் அனைத்துமே தேவை இல்லாத கடன்கள்தான். இதைத் தவிர்த்து, வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் அனைத்துமே அதிகமான வட்டி விகிதத்தில்தான் கிடைக்கிறது. இந்தமாதிரியான கடன்களை வாங்கும்போது அதிகமான வட்டியைச் செலுத்தவேண்டியிருக்கும். இதனாலும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு மாத கடைசியில் பிரச்னை உண்டாகும்.

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Nav60c
6. மளிகைப் பொருட்களை தினம் தினம் வாங்குவதால் நமக்கு நஷ்டம்தான். இதற்குப் பதில் மொத்தமாக வாங்கினால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். சம்பளம் வந்தவுடன் ஒரு மாதத்துக்குத்  தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடலாம். மொத்த விலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது ஒரு மாதத்துக்கு 200 - 300 ரூபாய் வரை மிச்சமாகும். தவிர, மாத கடைசியில் கையில் பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. இதனால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

7. கையிலிருக்கும் பணத்தை வைத்துதான் செலவுகளை முடிவுசெய்ய வேண்டும். உதாரணமாக, அடுத்த வாரம் 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும் எனில், உடனே எங்கு ஷாப்பிங் போகலாம், என்ன பொருளை வாங்கலாம் எனத் திட்டமிடக்கூடாது. ஏனெனில், அந்தப் பணம் வராமல் போவதற்கு  வாய்ப்புள்ளது. எனவே, கையில் உள்ளதைவைத்து திட்டமிட்டு சிறப்பாக வாழ்வதே புத்திசாலித்தனம்.

8. எல்லாவற்றுக்கும் மேலாக, சிக்கனமான வாழ்க்கைமுறைதான் அடுத்தவரிடம் கையேந்தாத நிலைமையை நமக்குத் தரும். விரும்பியதையெல்லாம் அனுபவித்தால் பணம் செலவழியவே செய்யும். இதனால் மாத கடைசியில் பணப் பற்றாக்குறை வரவே செய்யும். எனவே, சிக்கனத்துக்கான வழிவகைகளை அவசியம் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது'' என்றார் சங்கர்.

கிடைக்கும் சம்பளத்தைத் திட்டமிட்டு செலவு செய்தால், மாத கடைசியில் பணமுடையா இருக்கே என்று கவலைப்படாமல், நிம்மதி யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம்.

-முக நூல்
ந. விகடன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19843
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by யினியவன் on Thu Aug 28, 2014 12:34 pm

நல்ல பகிர்வு.

(ஆனா இதுக்கு முதலில் நாம வேலைக்கு போகணுமே)
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by M.Saranya on Thu Aug 28, 2014 1:55 pm

நல்ல பதிவு
கடனை தவிர்ப்பது நல்லது
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 28, 2014 3:09 pm

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! 103459460 ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! 1571444738 மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 4955
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2729

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by ஜாஹீதாபானு on Thu Aug 28, 2014 5:37 pm

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! 103459460 ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! 1571444738
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30789
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7256

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by உமேரா on Thu Aug 28, 2014 5:56 pm

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! 3838410834 ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! 3838410834 ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! 103459460
உமேரா
உமேரா
பண்பாளர்

பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014
மதிப்பீடுகள் : 152

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by krishnaamma on Thu Aug 28, 2014 6:06 pm

//நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.

1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.//

ரொம்ப சரி , இதே போலத்தான் எலெக்ரிகல் பில் முதலியவைகளும். எங்க வீட்டில் சம்பளம் வந்ததுமே, தனித்தனியாக பேர் எழுதி கவர்களில் போட்டு வைத்துவிடுவோம். என்ன ஆனாலும் ஒரு கவரிலிருந்து மற்றொன்றுக்கு எடுக்கமாட்டோம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by பாலாஜி on Thu Aug 28, 2014 6:16 pm

@krishnaamma wrote://நடுத்தரக் குடும்பத்தின் பெரிய பிரச்னையே மாத கடைசியில் கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி என்பதுதான். இந்தப் பிரச்னையை எல்லாராலும் எளிதில் சமாளிக்க முடியும். ஆனால், உங்கள் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை பாயின்ட் பை பாயின்டாகச் சொல்கிறேன்.

1. சம்பளம் வாங்கியவுடன் பட்ஜெட் போட வேண்டும். பட்ஜெட்டில் எழுதியதை அப்படியே பின்பற்ற வேண்டும். அதாவது, கல்விக் கட்டணம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 5-ம் தேதியே சம்பளம் வந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். சம்பளம் வந்தவுடன் இதைச் செலுத்திவிட வேண்டும். 15-ம் தேதிதானே, அன்றைக்கு கட்டினால் போதாதா என்று நினைக்கக் கூடாது. இப்படியே தள்ளிப்போட்டுக்கொண்டே போவது பிரச்னைகளை நாமே வரவழைத்துக்கொள்கிற மாதிரி ஆகிவிடும். இதனால் உரிய நேரத்தில் பணத்தைக் கட்டமுடியாத நிலைகூட நமக்கு வரலாம். அதனால் அபராதம் செலுத்தவேண்டிய சிக்கலும் வந்து சேரலாம். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் நாம் வழிவிடவே கூடாது.//

ரொம்ப சரி , இதே போலத்தான் எலெக்ரிகல் பில் முதலியவைகளும். எங்க வீட்டில் சம்பளம் வந்ததுமே, தனித்தனியாக பேர் எழுதி கவர்களில் போட்டு வைத்துவிடுவோம். என்ன ஆனாலும் ஒரு கவரிலிருந்து மற்றொன்றுக்கு எடுக்கமாட்டோம்.  
மேற்கோள் செய்த பதிவு: 1083432

இதுவும் நல்ல யோசனையாக உள்ளது.. சூப்பருங்க
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19843
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by krishnaamma on Thu Aug 28, 2014 6:22 pm

//2. சம்பளம் வந்ததும் அத்தியாவசி யமான செலவுகள் என்னென்ன, தவிர்க்கக்கூடிய செலவுகள் என்னென்ன என்பதைப் பட்டியலிட வேண்டும். வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள் வாங்குவது, இ.எம்.ஐ செலுத்துவது, மருத்துவம் போன்றவற்றுக்கான பணத்தை எந்தக் காரணம் கொண்டும் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது.//

இதுக்கு பதில் போடும் முன் நான் ஒன்று சொல்லியாகணும் புன்னகை நாங்க 1987 இல் கிருஷ்ணா அப்பாவின் வேலை காரணமாக ஹைதராபாத் புறப்படும்போது எங்க அப்பா சொன்னதை இங்கு சொல்லணும் நான் புன்னகை அவர் சொன்னது இது தான், " இனி நீங்க உங்க சம்பளத்தில் குடித்தனம் பண்ணியாகணும், யாரும் உங்களை வழிநடத்த ஆட்கள் இல்லை, எனவே, எது வாங்குவதானாலும் இதை மட்டும் நினைவில்வை என்று ஒன்று சொன்னார். அது தான் இது புன்னகை

" அவசியமானதை வாங்காதே....................தவிர்க்க முடியாததை வாங்கு"

இதுவே எங்கள் தாரக மந்திரமாக இருந்தது .....நிஜமாகவே அதை நாங்க ரொம்ப strite ஆக follow செய்தோம் புன்னகை

ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு அதாவது 2003 இல் நாங்கள் சௌதி லிருந்து இந்தியா வந்தது, AC போடும்போது சொல்கிறார், "நீ இப்போவெல்லாம் வசதிக்காக சிலது செய்ய ஆரம்பிச்சுட்டியே.".................என்று.

அதாவது அத்தனை வருடமும் அவர் பார்த்துக்கொண்டிருந்திருக்கார் .கொஞ்சம் கூட வாயே திறக்காமல்............."நீ சூப்பர் ஆக என் வார்த்தைகளை follow பண்ணரடா மாப்பிள்ளை " என்று இவரிடமோ , ஏன் என்னிடமோ சொன்னது கூட இல்லை புன்னகை so , இப்போ சொல்வதை பார்த்துத்தான் நாம் ஒ...........அப்பா மதிப்பில் நாம் உயர்ந்து தான் இருந்தோம் என்று சந்தோஷப்பட்டேன்.

அப்புறம் சொன்னேன்......."அப்பா ...............இவர் சௌதி ல சம்பாதிக்கிறார் அப்பா.........பாவம் கிருஷ்ணா......... என்று தான் அப்பா." ...........என்றேன். அரை மனதுடன் ஒப்புக்கொண்டார்.

எதுக்கு சொல்ல வரேன் என்றல் அப்படி " கட்டு செட்டாகத்தான் எப்பவும் இருக்கணும்" என்று சொல்வார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by யினியவன் on Thu Aug 28, 2014 6:23 pm

@krishnaamma wrote:
ரொம்ப சரி , இதே போலத்தான் எலெக்ரிகல் பில் முதலியவைகளும். எங்க வீட்டில் சம்பளம் வந்ததுமே, தனித்தனியாக பேர் எழுதி கவர்களில் போட்டு வைத்துவிடுவோம். என்ன ஆனாலும் ஒரு கவரிலிருந்து மற்றொன்றுக்கு எடுக்கமாட்டோம்.
இவ்ளோ கஷ்டப்பட வேண்டாம்மா எங்கிட்ட குடுத்து வைங்க நா பாத்துக்கறேன் பத்திரமா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by krishnaamma on Thu Aug 28, 2014 6:36 pm

//3. கட்டாயம் செய்யவேண்டிய செலவுகளுக்கான பணத்தை சம்பளம் வந்தவுடன் ஒதுக்கிவைத்துவிட வேண்டும். இதுபோக, மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, அடிக்கடி ஹோட்டலுக்குப் போவது, ஷாப்பிங் செய்வது, சுற்றுலா போவது போன்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.//

ஒரு சின்ன திருத்தம் முதலில் மாதத்துக்கு இல்லை வருட பட்ஜெட் போடணும் நாம். எப்போ லீவில் ஊருக்கு போகணும், எவ்வளவு பண்டிகைகள் வருகிறது, ஸ்கூல் திறக்கும் மாதம், நம் பிறந்த நாட்கள், திருமண நாள் என்று எதல்லம் வேண்டுமோ எல்லாவற்றையும் ஹவுஸ் டாக்ஸ், இன்கம் டாக்ஸ் உட்பட மாதம் வாரியாக எழுதணும். ( எழுதிப்பார்த்தால் ரொம்ப மலைப்பாக இருக்கும் புன்னகை ) ஏன்னா, சிலசமையம் yearly LIC , கார் இன்சூரன்ஸ் எல்லாம் வருமே !

அதை 12ஆல் வகுத்து மாசத்துக்கு எடுத்துக்கணும். அப்போதான் சீராக வரும். இல்லாவிட்டால் ஒருமாதம் முன்ன பின்ன வரும். மேலே அவர் சொன்னமாதிரி ஹோட்டல் ஷாப்பிங் செலவுகளையும் லிஸ்ட் இல் சேர்த்துடலாம். ஒட்டுமொத்தமாய் பார்த்துத்தானே ஒரு முடிவுக்கு வரமுடியும்? புன்னகை பிறகு பார்த்து 'ட்ரிம்' பண்ணிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by krishnaamma on Thu Aug 28, 2014 6:36 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:
ரொம்ப சரி , இதே போலத்தான் எலெக்ரிகல் பில் முதலியவைகளும். எங்க வீட்டில் சம்பளம் வந்ததுமே, தனித்தனியாக பேர் எழுதி கவர்களில் போட்டு வைத்துவிடுவோம். என்ன ஆனாலும் ஒரு கவரிலிருந்து மற்றொன்றுக்கு எடுக்கமாட்டோம்.
இவ்ளோ கஷ்டப்பட வேண்டாம்மா எங்கிட்ட குடுத்து வைங்க நா பாத்துக்கறேன் பத்திரமா
மேற்கோள் செய்த பதிவு: 1083436

சீரியசாக பேசும்போது ஜோக்கு கூடாது .............. கூடாது கூடாது கூடாது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by யினியவன் on Thu Aug 28, 2014 6:39 pm

@krishnaamma wrote:சீரியசாக பேசும்போது ஜோக்கு கூடாது .............. கூடாது கூடாது கூடாது
கணக்கை பார்த்து மலைச்சு போயி டென்ஷன் ஆகக் கூடாதும்மா - அதான்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by krishnaamma on Thu Aug 28, 2014 7:04 pm

//4. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன், ஒரு சிறிய அளவு பணத்தை எடுத்து தனியாக ஒதுக்கி, ரிசர்வ் ஃபண்டாக வைத்துவிட வேண்டும். இதை எளிதில் எடுக்க முடியாதபடி வைத்திருப்பது நல்லது. உதாரணமாக, வேறு ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை வைத்துவிடலாம். இந்தப் பணத்தை மிக மிக அவசர தேவைகள் ஏற்பட்டாலொழிய, 20-ம் தேதிக்கு முன்பு தொடவே கூடாது. இப்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய வுடன் குறிப்பிட்ட அளவு பணத்தைப் போட்டுவைப்பது ஆபத்பாந்தவனாக உதவும்.//

ம்.....ரொம்ப சரி.............நாங்க இதுவும் செய்வோம்............ஆனால் பேங்க் இல் இல்லை..............வேறு ஒரு கவர் இல் UNDERGROUND என்று எழுதி வைத்து விடுவோம் ஜாலி ஜாலி ஜாலி இன்று வரை எங்களிடம் அந்த வழக்கம் இருக்கு பாலாஜி புன்னகை அந்த பணத்துடன் அந்த மாதத்து மீதியையும் வைத்து, உள்ளே வைத்துவிடுவோம்..............அதற்காக மறுமாசம் UNDERGROUND இல் வைக்க வேண்டியதை வைக்காமல் இருக்க மாட்டோம் . அப்படி வைப்பது மேலே சொன்னது போல அவசரம் ஆத்திரத்துக்கு பிறரிடம் போய் நிற்காமல் இருக்க வைக்கும். அதற்கு சாக்ஷி நானே ! நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by krishnaamma on Thu Aug 28, 2014 7:06 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:சீரியசாக பேசும்போது ஜோக்கு கூடாது .............. கூடாது கூடாது கூடாது
கணக்கை பார்த்து மலைச்சு போயி டென்ஷன் ஆகக் கூடாதும்மா - அதான்.

சரி..........சரி..............உங்கள் வாதம் ஒப்புக்கொள்ளப்பட்டது...............நீர் போகலாம் .............. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58651
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்! Empty Re: ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை