ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழக அரசின் திட்ட பணிகள்

View previous topic View next topic Go down

தமிழக அரசின் திட்ட பணிகள்

Post by சிவா on Thu Aug 28, 2014 4:31 am

கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்த ரூ.88 கோடி

சென்னை, ஆக.28:கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அங்குள்ள ஏரி ரூ.87 கோடியே 96 லட்சம் செலவில் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புறங்களில் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குதிலும், பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரினை வழங்குவதிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திட்டங்களை தீட்டிச் செயல்படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

சுற்றுலாத் தலமாக விளங்கும் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த மூன்று ஆண்டுகளில், 27 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைத்தல், தெருவிளக்குகள் பொருத்துதல், திடக்கழிவு மேலாண்மை பணிகள் என 132 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடைக்கானல் நகராட்சியில் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த எனது தலைமையிலான அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும். கொடைக்கானல் நகர மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 43 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீழ்குண்டாறு குடிநீர் திட்டம் என்னால் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொடைக்கானல் நகராட்சியில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பொதுமக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி,கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில், 87 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொடைக்கானல் ஏரி அழகுபடுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் கீழ் ஏரியினை தூர்வாருதல், ஆகாயத் தாமரை மற்றும் தேவையற்ற நீர் தாவரங்களை அப்புறப்படுத்துதல், நீரில் உள்ள ஆக்ஸிஜன் தன்மையினை அதிகரித்தல், மீன் வளர்ப்பிற்கு தேவையான தகுந்த சூழ்நிலையினை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், ஏரியினை சுற்றிலும் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் வெளியேற்றுதல், கழிவு நீர் மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பூங்கா அமைத்தல், வாகன நிறுத்தம் அமைத்தல், சாலை வசதியினை மேம்படுத்துதல், அலங்கார தாவரங்களை அமைத்தல், வண்டல் படிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். இவை மட்டுமின்றி, படகு குழாம்களை முறைப்படுத்தி அழகுப்படுத்துதல், ஏரியின் எழில் தோற்றத்தினை மேம்படுத்துதல், சுற்றுலா தகவல் மையம், சைக்கிள் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.

மேற்காணும் நடவடிக்கைகள், கொடைக்கானல், நகராட்சி சார்ந்த மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுசூழல் நிலவவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசின் திட்ட பணிகள்

Post by சிவா on Thu Aug 28, 2014 4:32 am

கொடைக்கானல் - கும்பகோணம் - கரூர் நகராட்சிக்கு நிதி

சென்னை, ஆக.28 - கொடைக்கானல், கும்பகோணம், கரூர் நகராட்சிளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நகர்ப்புறங்களில் ஆரோக்கியமான சுற்றுச் சூழலை உருவாக்குதிலும், பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடி நீரினை வழங்குவதிலும், அடிப் படை வசதிகளை மேம் படுத்துவதிலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திட்டங்களை தீட்டிச் செயல் படுத்துவதிலும் எனது தலை மையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

சுற்றுலாத் தலமாக விளங்கும் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில், கடந்த மூன்று ஆண் டுகளில், 27 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைத் தல், தெருவிளக்குகள் பொருத்துதல், திடக்கழிவு மேலாண்மை பணிகள் என 132 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொடைக்கானல் நகராட்சி யில் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாளச் சாக் கடைத் திட்டம் செயல்படுத்த எனது தலைமையிலான அரசால் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது, அதற்கான ஒப் பந்தப் புள்ளிகள் விரை வில் கோரப்படும். கொடைக் கானல் நகர மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 43 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீழ்குண்டாறு குடிநீர் திட்டம் என்னால் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொடைக்கானல் நகராட்சி யில் அதிகரித்து வரும் மக் கள்தொகை மற்றும் வருகை புரியும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை ஆகிய வற்றை கருத்திற் கொண்டு, பொதுமக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதி களை ஏற்படுத்தி தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, கொடைக்கான லுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில், 87 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொடைக்கானல் ஏரி அழகு படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் கீழ் ஏரியினை தூர்வாருதல், ஆகாயத் தாமரை மற்றும் தேவை யற்ற நீர் தாவரங்களை அப்புறப் படுத்துதல், நீரில் உள்ள ஆக்ஸிஜன் தன்மையினை அதிகரித்தல், மீன் வளர்ப் பிற்கு தேவையான தகுந்த சூழ்நிலையினை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், ஏரியினை சுற்றிலும் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் வெளியேற்றுதல், கழிவு நீர் மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பூங்கா அமைத்தல், வாகன நிறுத்தம் அமைத்தல், சாலை வசதியினை மேம்படுத்து தல், அலங்கார தாவரங் களை அமைத்தல், வண்டல் படிவுகளை அப்புறப்படுத்து தல் ஆகிய பணிகளும் மேற் கொள்ளப்படும். இவை மட்டுமின்றி, படகு குழாம் களை முறைப்படுத்தி அழகுப் படுத்துதல், ஏரியின் எழில் தோற்றத்தினை மேம்படுத்து தல், சுற்றுலா தகவல் மையம், சைக்கிள் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் ஏற் படுத்தி தரப்படும்.

கோயில்கள் நகரம் என்ற ழைக்கப்படும் கும்பகோணம் நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில், 35 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் இதரப் பணிகள் என 234 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் நகரில் நடை பெறவுள்ள மகாமகம் பெரு விழாவையட்டி இந்நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில், 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்ப் பணிகளும், 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்கு அமைக்கும் பணிகள் மற்றும் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், 10 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள், 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேரோடும் வீதி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார சந்துகளை மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுமட்டுமல்லாமல், 11 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திடக் கழிவு மேலாண்மை திட்டம், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் கழிவறைகளை மேம் படுத்தும் பணிகள், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலக்காவேரி ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் 43.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூர் நகராட்சியில், கடந்த மூன்று ஆண்டுகளில் 108 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக் கழிவு மேலாண்மை பணி கள், பூங்காக்கள் என 608 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. கரூர், இனாம் கரூர் மற்றும் தாந்தோணி பகுதிகளுக்கு ஜெர்மானிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் 68 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் செயலாக்கத்தில் உள்ளன. கரூர் நகரின் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரி சலை சமாளிக்க பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருவ தென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி,

கரூர் நகராட்சியில், குளத்துப்பாளையம் - ஈரோடு --கரூர் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 3 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.

கரூர் நகராட்சியில் வடக்கு பசுபதி பாளையத்தில், திருச்சி மற்றும் கரூர் திண்டுக்கல் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 2 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.

மேற்காணும் நடவடிக்கை கள், கொடைக்கானல், கும்பகோணம் மற்றும் கரூர் நக ராட்சிகளைச் சார்ந்த மக்க ளுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப் படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுசூழல் நிலவவும் வழிவகுக்கும் என் பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசின் திட்ட பணிகள்

Post by சிவா on Thu Aug 28, 2014 4:33 am

கும்பகோணத்தில் ரூ43.78 கோடி மதிப்பீட்டில் பணிகள்

சென்னை, ஆக.28 - கும்பகோணம் நகரில் நடைபெறவுள்ள மகாமகம் பெருவிழாவையொட்டி இந்நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில்,43.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புறங்களில் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குதிலும், பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரினை வழங்குவதிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திட்டங்களை தீட்டிச் செயல்படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

கோயில்கள் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம் நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில், 35 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் இதரப் பணிகள் என 234 அடிப்படை வசதிப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, கும்பகோணம் நகரில் நடைபெறவுள்ள மகாமகம் பெருவிழாவையொட்டி இந்நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில்,

2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்ப் பணிகளும், 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்கு அமைக்கும் பணிகள் மற்றும் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், 10 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைப் பணிகள், 1 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேரோடும் வீதி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார சந்துகளை மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுமட்டுமல்லாமல், 11 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவறைகளை மேம்படுத்தும் பணிகள், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலக்காவேரி ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைத்தல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் 43.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்காணும் நடவடிக்கைகள், , கும்பகோணம் நகராட்சிசார்ந்த மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுசூழல் நிலவவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசின் திட்ட பணிகள்

Post by சிவா on Thu Aug 28, 2014 4:33 am

கரூர் - தாந்தோணி-க்கு ரூ.68 கோடியில் குடிநீர் திட்ட பணிகள்

சென்னை, ஆக.28 - கரூர் மற்றும் தாந்தோணி பகுதிகளுக்கு ரூ.68 கோடி செலவில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

.இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புறங்களில் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குதிலும், பொது சுகாதாரத்தை பேணிப் பாதுகாப்பதிலும், பாதுகாக்கப்பட்ட குடிநீரினை வழங்குவதிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திட்டங்களை தீட்டிச் செயல்படுத்துவதிலும் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

கரூர் நகராட்சியில், கடந்த மூன்று ஆண்டுகளில் 108 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பூங்காக்கள் என 608 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. கரூர், இனாம் கரூர் மற்றும் தாந்தோணி பகுதிகளுக்கு ஜெர்மானிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் 68 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் செயலாக்கத்தில் உள்ளன.

கரூர் நகரின் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, 1.கரூர் நகராட்சியில், குளத்துப்பாளையம் - ஈரோடு - கரூர் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 3 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.

2. கரூர் நகராட்சியில் வடக்கு பசுபதி பாளையத்தில், திருச்சி மற்றும் கரூர் திண்டுக்கல் இருப்புப்பாதையில் 3 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். இப்பணி, தென்னக ரயில்வே மூலம் செயல்படுத்தப்படும். மேலும், இந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை அமைக்கும் பணி 2 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும்.

மேற்காணும் நடவடிக்கைகள், கரூர் நகராட்சிகளைச் சார்ந்த மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திடவும், ஆரோக்கியமான சுற்றுசூழல் நிலவவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசின் திட்ட பணிகள்

Post by சிவா on Thu Aug 28, 2014 4:35 am

தஞ்சை- திண்டுக்கல்லில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி

மக்கள்தொகை பெருக்கம், வளர்ந்து வரும் வணிகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல், அதிகரித்து வரும் வருவாய் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக எனது தலைமையிலான அரசு சென்ற ஆண்டு தரம் உயர்த்தியது.

இது மட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளில் தஞ்சாவூர் மக்களின் அடிப் படை வசதிகளை மேம்படுத் தும் வகையில், 61 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டி லான குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெரு விளக்குகள் என 454 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே போன்று, திண்டுக் கல் மக்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தும் வகையில், 29 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெருவிளக்குகள் என 119 பணிகள் எடுத்துக் கொள்ளப் பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர, திண்டுக்கல் மாநகருக்கென தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் காமராஐர் சாகர் அணை குடிநீர்த் திட்டத்தை புனரமைப்பு செய்ய வும், திண்டுக்கல் மாநகர் மற்றும் காமராஜர் சாகர் திட்டத் தில் உள்ள வழியோர கிராமங் களுக்கு தேவைப்படும் 26 எம்.எல்.டி குடிநீரை பெறவும் 70 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கள் விரைவில் கோரப் படும்.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை 82 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி தருவதென எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி,

தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு சீரான மற்றும் போதுமான அளவு குடிநீர் வழங்கும் வகையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 45 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்படும்.

தாள சாக்கடைப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகளால் சேதமடைந்த சாலைகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப் படும்.

தஞ்சாவூர் மாநக ராட்சியின் அழகையும், பொலிவையும், தூய்மையை யும் மேம்படுத்தும் வகை யில், தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப் படும்.

பாதசாரிகள், போக்கு வரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சாலை களில் பாதுகாப்பாக நடந்து செல்ல ஏதுவாக, தஞ்சாவூர் மாநகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை களில் நடை பாதைகள் அமைக்கப்படும்.தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள சாலைகள் முழுவதிலும் சீரான மற்றும் தரமான ஒளியை வழங்கும் நோக்கில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெரு விளக்குகள் அமைக் கப்படும்.திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்க, 4 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும்.

இதேபோன்று, திண்டுக்கல் மாநகராட்சி மக்களுக்கும் 42 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழ்க்காணும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி,

பொதுமக்களும், நகரங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் சாலைகளையும், சுற்றுலா இடங்களையும் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சி எல்லை மற்றும் தெருக்களில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவினத்தில் ஒளிரும் வழிகாட்டி பலகைகள் மற்றும் குறியீடுகள் அமைக்கப் படும்.

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மேலும் மேம்படுத்திடும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் தேவையான வசதிகளை செய்து தரப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கென 5 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டித் தரப்படும்.

திண்டுக்கல் மாநகரின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு, பேருந்து நிறுத்து மிடங்கள், நடைமேடைகள், கழிப்பறை வசதிகள் ஆகிய வற்றை மேம்படுத்தி, உண வகம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் வகையில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலைய மேம் பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்படும்.

பொதுமக்களின் பயன் பாட்டிற்கு ஏற்ற வகையில் சாலைகளை அமைத்துத் தரவும், மேம்படுத்திடவும் ஏதுவாக திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 65 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சாலைகளில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக் கும் பணிகள் மேற்கொள்ளப் படும்.

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்து, சுகாதாரமான சுற்றுச்சுழலை உருவாக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 இடங்களில் நவீன பொது கழிப்பறைகள் அமைக்கப்படும்.

இந்த நடவடிக்கைகள் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி எழில்மிகு மாநகராட்சிகளாக உருவாக வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி யுள்ளர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசின் திட்ட பணிகள்

Post by சிவா on Thu Aug 28, 2014 4:35 am

ஆயிரம்விளக்கில் ரூ.25 கோடி செலவில் துணை மின்நிலையம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 24 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் துணை மின் நிலையத்துக்கு மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் , அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டார்.

மக்களுக்கு தங்குதடையின்றி மின்சாரம் வழங்குவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 118–வது வார்டு ராயப்பேட்டை அம்மையப்பன் சந்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. மின் கட்டணம் செலுத்தும் மையமும் அமைக்கப்படுகிறது.

இதற்கு நேற்று காலை அமைச்சர் நத்தம் விசுவநாதன் அடிக்கல் நாட்டினார். அமைச்சர் பா. வளர்மதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் 24 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். 9 மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கு துணை மின் நிலையம் அமைப்பதன் மூலம் 110. 111, 118 ஆகிய கோட்டங்களில் உள்ள மக்கள் பயன்பெறுவார்கள்.இந்த நிகழ்ச்சியில்மண்டல குழு தலைவர் சக்தி, 118–வது வார்டு மாமன்ற உறுப்பினர்,ஆயிரம் விளக்கு பகுதி செயலாளரும், கவுன்சிலரும், நுங்கை மாறன், , கவுன்சிலர்கள் புஷ்பா நகர் ஆறுமுகம், சாந்தி பாஸ்கர் மற்றும் ஜே. பார்த்தசாரதி, மன்சூர் அகமது உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசின் திட்ட பணிகள்

Post by சிவா on Mon May 25, 2015 9:01 pm

201 புதிய அம்மா உணவகங்கள் திறப்பு - 5 கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்து

ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டு 201 புதிய அம்மா உணவகங்களை திறந்து வைத்ததோடு புதிய திட்டங்களுக்கான கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.

ஜெயலலிதா இன்று ஞாயிற்றுக் கிழமை [24.05.2015] 5ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது காணொளி புதிய அம்மா உணவங்களை திறந்து வைத்தார். பின்னர் காவல் துறையினருக்கு ரோந்து வாகனங்களை வழங்கினார். மேலும் புதிய திட்டங்களுக்கான 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், ”சென்னை மாநகராட்சியில் 45 அம்மா உணவகங்கள், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் 4 அம்மா உணவகங்கள், தமிழகம் முழுவதும் உள்ள 124 நகராட்சிகளில் 128 அம்மா உணவகங்கள், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் 23 அம்மா உணவகங்கள், என மொத்தம் 201 அம்மா உணவகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84490
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழக அரசின் திட்ட பணிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum