உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by T.N.Balasubramanian on Sat Aug 16, 2014 7:24 am

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
•குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், ”நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
•குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
•விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.

நன்றி -வினவு.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by T.N.Balasubramanian on Sat Aug 16, 2014 7:32 am

திறமையை கொண்டுவர வேண்டியது அவசியம்தான் .
ஆனால் இதுதானா முறை ?
போனமுறை இது போல் வெற்றி பெற்ற சிறுவன் ,சிறுமியை வைத்து
ஒரு சினிமாவில்ஒரு பாடலுக்கு பாட வைத்தோ , பாடி நடிக்க வைத்த மாதிரி
கேள்வி பட்டேன் . வருத்தப்பட்டேன் .(அதான் முடிந்தது !)

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sat Aug 16, 2014 5:53 pm; edited 1 time in total (Reason for editing : spelling)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by ayyasamy ram on Sat Aug 16, 2014 7:53 am

[You must be registered and logged in to see this image.]
-
கலாச்சாரமா...அப்படின்னா..?!
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52304
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by T.N.Balasubramanian on Sun Aug 17, 2014 9:17 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this image.]
-
கலாச்சாரமா...அப்படின்னா..?!
-
[You must be registered and logged in to see this link.]

அது சரி , அந்த குழந்தை போல் ,தேடித்தான் பார்க்கவேண்டும் போல் உள்ளது .
ரொம்ப தூரத்தில் காணாமல் போய் விட்டதோ ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by அகிலன் on Sun Aug 17, 2014 9:36 pm

மதுபானக்கடைகள் திறந்து வைப்பதும் இப்படியான நிகழ்ச்சிகள் நடாத்துவதும் ஒன்றுதான், இரண்டுமே குழந்தைகளை சீரழிக்கும்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
மதிப்பீடுகள் : 398

http://aran586.blogspot.com

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by krishnaamma on Sun Aug 17, 2014 10:10 pm

//குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.//

ரொம்ப சரி யான வார்த்தைகள் ஐயா சோகம் வருத்தமாக இருக்கு, எப்படித்தான் பெற்றவர்களே இதை ஆதரிக்கிரர்களோ எனக்கு புரியலை, ஏதோ என்னால் முடிந்தது நான் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பது இல்லை சோகம் ஏதோ நம்மால் ஆனது அவங்க ரேட்டிங் ஏறாமல் இருக்கும் என்னால் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by ayyasamy ram on Sun Aug 17, 2014 10:27 pm

கலாசார சீர் அழிவு பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ள
வேண்டியதில்லை என்பதே என் கருத்து...
-
இதெல்லாம் காலத்தின் கட்டாயம்.
விக்டோரியா மகாராணி காலத்தில் பெண்கள் உடை
கலாச்சாரம் பற்றி கூறுவார்கள்...அப்போது பெண்ணின்
கணுக்காலை பார்த்தாலே ஒரு ஆணுக்கு பாலுணர்வு
கிளர்ந்தெழுமாம்...
-
அப்படி கணுக்காலும் தெரியாத அளவுக்கு ஆடை கலாச்சாரம்
இருந்தது..
-
ஆனால் இப்போது..!
-
உணவு கலாச்சார மாற்றத்தால்
சிறுமிகள் 7 ம் வகுப்பு படிக்கும் போதே வயதிற்கு
வந்து விடுகிறார்கள்..
-

[You must be registered and logged in to see this image.]

பாரம்பரியமான குடும்ப பழக்க வழக்கங்களால்
தொன்னூறு சதவீத இளைஞர்கள் சீரழியாமல்
நம் கலாச்சாரத்தைக் காப்பாற்றித்தான் வருகிறார்கள்...
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52304
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by T.N.Balasubramanian on Sun Aug 17, 2014 11:11 pm

Quote :
கலாசார சீர் அழிவு பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ள
வேண்டியதில்லை என்பதே என் கருத்து... இதெல்லாம் காலத்தின் கட்டாயம். "Quote

புரியவில்லை ,ராம் .
US இல்  பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் ஒத்து போவதில்லை . 10 வயதில் இருந்தே , எதிரெதிர் எண்ணங்கள் , விவாதங்கள் , 18 வயதில் வீட்டை விட்டு தனி வாழ்க்கை . குட்டிசுவராகும் வாழ்க்கை .  அமெரிக்க கலாச்சாரமாக இருந்து விட்டுப் போனால் பரவாஇல்லை .ஆனால் அதன் பாதிப்பு இங்கு வாழும் இந்திய குடும்பத்திலும் பரவ ஆரம்பித்து உள்ளது . இவைகளின் வழியே இந்தியாவிலும் இதன் தாக்கம் தெரிகிறது .
சமிபத்தில் எடுத்த சர்வே பிரகாரம் , மணம் முடித்த பின் , மற்ற ஆண்களுடன் உறவு வைத்து கொள்வதில் தவறில்லை என்று 38 % பெண்கள் நினைக்கிறார்களாம் . ஆனாலும், கணவனை தவிர ,மனதிற்கு இசைந்த வேறு ஒரு ஆணுடன் மட்டும்,  வேண்டும் போது மட்டும் உறவு வைத்துக் கொண்டு , கணவருடன் குடும்பம் நடத்துவதே நல்லது என்று அந்த 38 % இல் , பெரும்பாலோர் கருதுகிறார்களாம்  .

சமிபத்தில் பயணம் சென்று வந்த பஹாமாசில் , அரசாங்கத்தின் பெரிய தலைவலியே , unwed mothers . கன்னித்தீவு என்ற பெயர் இந்த நாட்டிற்கே மிகவும் பொருந்தும் .

எனக்கு தெரிந்த வினோத சம்பவங்கள் உண்டு .

அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது .    

ரமணியன்

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Mon Aug 18, 2014 12:05 am; edited 3 times in total (Reason for editing : spelling)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25904
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9370

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by ayyasamy ram on Mon Aug 18, 2014 12:39 am

உன் கண்ணில் நீர் வழிந்தால் கண்ணம்மா
என் கண்ணில் உதிரம் கொட்டுதடி -

-
என பாசமுடன் வாழ்ந்த பல தம்பதிகளைப் பார்த்த

தலைமுறை நம்முடன் போய் விடுமோ என்ற அச்சம்

எனக்கும் இருக்கிறது...
-

உன் குழந்தையும் என் குழந்தையும் நம்ம குழந்தைகளுடன்
விளையாடிக்கிட்டிருக்கு' னு கணவன், மனைவியிடம்
கூறுவதாக ஒரு நகைச்சுவை...
-
அந்த கலாச்சாரம் பரவ ஆரம்பித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை..

-
குறிப்பு
-

பின்னூட்டத்தில் நாம் என்ன சொல்ல வருகிறோம்
என்பதை பிறர் சரிவர புரிந்து கொள்வார்களோ என்ற
அச்சமும் இருப்பதாலேயே பலர் தங்கள் கருத்தை
சொல்ல நாணுவதாக நினைக்கிறேன்..
-
மேலும் தமிழில் தட்டச்சு செய்ய முடியாததாலும்
இருக்கலாம்...
-ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 52304
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by யினியவன் on Mon Aug 18, 2014 9:50 am

மாற்றங்கள் நல்லதுக்கு எனில் வரவேற்கலாம் - நல்லவை என்பதின் அர்த்தமே மாறிவிட்டதே என்ன செய்வது?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by M.M.SENTHIL on Mon Aug 18, 2014 1:25 pm

இதில் அந்த சேனலை குற்றம் சொல்லி புண்ணியமில்லை, அவன் குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்து, காசு பார்க்கிறான், அதற்கு துணை போகும் பெற்றோரை செருப்பால் அடித்தாலும் தப்பில்லை என்பது என் கருத்து.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6171
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by krishnaamma on Mon Aug 18, 2014 2:07 pm

[You must be registered and logged in to see this link.] wrote:Quote :
கலாசார சீர் அழிவு பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ள
வேண்டியதில்லை என்பதே என் கருத்து... இதெல்லாம் காலத்தின் கட்டாயம். "Quote

புரியவில்லை ,ராம் .
US இல்  பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் ஒத்து போவதில்லை . 10 வயதில் இருந்தே , எதிரெதிர் எண்ணங்கள் , விவாதங்கள் , 18 வயதில் வீட்டை விட்டு தனி வாழ்க்கை . குட்டிசுவராகும் வாழ்க்கை .  அமெரிக்க கலாச்சாரமாக இருந்து விட்டுப் போனால் பரவாஇல்லை .ஆனால் அதன் பாதிப்பு இங்கு வாழும் இந்திய குடும்பத்திலும் பரவ ஆரம்பித்து உள்ளது . இவைகளின் வழியே இந்தியாவிலும் இதன் தாக்கம் தெரிகிறது .
சமிபத்தில் எடுத்த சர்வே பிரகாரம் , மணம் முடித்த பின் , மற்ற ஆண்களுடன் உறவு வைத்து கொள்வதில் தவறில்லை என்று 38 % பெண்கள் நினைக்கிறார்களாம் . ஆனாலும், கணவனை தவிர ,மனதிற்கு இசைந்த வேறு ஒரு ஆணுடன் மட்டும்,  வேண்டும் போது மட்டும் உறவு வைத்துக் கொண்டு , கணவருடன் குடும்பம் நடத்துவதே நல்லது என்று அந்த 38 % இல் , பெரும்பாலோர் கருதுகிறார்களாம்  .

சமிபத்தில் பயணம் சென்று வந்த பஹாமாசில் , அரசாங்கத்தின் பெரிய தலைவலியே , unwed mothers . கன்னித்தீவு  என்ற பெயர் இந்த நாட்டிற்கே மிகவும் பொருந்தும் .

எனக்கு தெரிந்த வினோத சம்பவங்கள் உண்டு .

அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது .    

ரமணியன்

ரமணியன்

ஆமாம் ஐயா, நீங்க சொல்வதைப்பார்த்தால்  ....................அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சிஅதிர்ச்சியாகவும் எதிகால சந்ததிகள் பற்றி  பயம் பயம் பயம் பயமாகவும் இருக்கு சோகம்

அமெரிக்க மோகம் எப்போ நம்மை  விட்டு ஒழியுமோ?????????????

Last edited by krishnaamma on Mon Aug 18, 2014 2:09 pm; edited 1 time in total

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by krishnaamma on Mon Aug 18, 2014 2:08 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மாற்றங்கள் நல்லதுக்கு எனில் வரவேற்கலாம் - நல்லவை என்பதின் அர்த்தமே மாறிவிட்டதே என்ன செய்வது?

ம்...................சரியா சொன்னிங்க இனியவன் சோகம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by krishnaamma on Mon Aug 18, 2014 2:09 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இதில் அந்த சேனலை குற்றம் சொல்லி புண்ணியமில்லை, அவன் குழந்தைகளை வைத்து வியாபாரம் செய்து, காசு பார்க்கிறான், அதற்கு துணை போகும் பெற்றோரை செருப்பால் அடித்தாலும் தப்பில்லை என்பது என் கருத்து.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by பிளேடு பக்கிரி on Tue Aug 19, 2014 12:07 am

/குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்./

சரியான கருத்து[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்! Empty Re: கலாச்சாரத்தை கெடுக்கும் சூப்பர் சிங்கர்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை