ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

View previous topic View next topic Go down

முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by சிவா on Mon Aug 04, 2014 3:08 am
இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவு இடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி வரும் கடிதங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அந்தப் பதிவிற்கு தலைப்பு ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. (How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi?)

ஷெனாலி டி வடுகே என்பவர் எழுதியுள்ள அந்தப் பதிவின் சாரம்சம்: "இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு கவுன்சிலில் கலந்து கொள்ள வந்த சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட இந்திய குழுவினர், இந்தியா - இலங்கை உறவில் தமிழ்நாடு குறுக்கீடு இருக்காது என தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு அவர்கள் அதிபர் ராஜபக்சேவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துகளை வைத்து பார்க்கும்போது, தமிழக மீனவர்கள் அவர்கள் கடல் எல்லையில் மீன் வளம் இல்லாததால் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறுகின்றனர் என்பதை ஜெயலலிதா மறுக்க முடியாது என்பது உறுதியாகிறது.

எனவே இலங்கையை குற்றம்சாட்டி மோடிக்கு கடிதம் எழுதும் தந்திரத்தை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜெயலலிதா ஆட்டுவித்த மாதிரி எல்லாம் ஆட மோடி ஒன்றும் அவரது கைப்பாவை இல்லை என்பதை ஜெயலலிதா தெரிந்து கொள்ளும் காலம் தொலைவில் இல்லை.

கடித தந்திரத்தை கைவிட்டுவிட்டு மோடி வலியுறுத்துவது போல் யதார்த்த நிலையை உணர்ந்து அரசாட்சி செலுத்துவது ஜெயலலிதாவுக்கு நல்லது. இந்திய கடலில் மீன்வளம் குறைந்துவிட்டால் அண்டை நாட்டுக் கடலில் அத்துமீறி மீன்பிடிக்கலாம் என்பது அர்த்தமில்லை. மாறாக, ஜெயலலிதா தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்".

இவ்வாறு விவரிக்கப்பட்ட அந்த பதிவின் கீழ் ஒரு வாக்கியமும் இணைக்கப்பட்டுள்ளது.

(-The Ministry of Defence bears no responsibility for the ideas and opinion expressed by the numerous contributors to the “Opinion Page” of this web site-)

இந்த இணையதளத்தின் கருத்துப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள கருத்துகள், யோசனைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by சிவா on Mon Aug 04, 2014 3:09 am


ஜெயலலிதாவை கொச்சைபடுத்திய இலங்கை அரசு: கருணாநிதி கண்டனம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கொச்சைபடுத்தி கட்டுரை வெளியிட்டுள்ள இலங்கை அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இலங்கை சிங்களவாத அரசின் பாதுகாப்புத் துறையின் அதிகாரப் பூர்வமான இணைய தளத்தில், தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், தமிழக முதல் அமைச்சரை அநாகரிகமாக இழிவு படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன.

அதிமுக தலைவருக்கும், நமக்குமிடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அவர் தமிழக மீனவர்களின் இன்னல்களைக் களையும் விதத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதங்களைக் கொச்சைப்படுத்தும் அளவுக்கு சிங்கள அரசினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து சிங்கள அரசின் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதை யாவரும் புரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக இதுபோன்ற இழிவான விமர்சனங்களை திமுக எப்போதுமே ஆதரிப்பதுமில்லை. அந்தக் கடுமொழிகளை, இழிமொழிகளைக் கண்டிக்கத் தவறியதும் இல்லை.

அப்படிப்பட்ட சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது என்று தான் தமிழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சியினரும் தொடர்ந்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

அந்தக் கட்டுரை இழிவு படுத்தியிருப்பது தமிழக முதல்வரை மட்டுமல்ல; இந்திய நாட்டுப் பிரதமரையும்தான் இழிவுபடுத்தியிருக்கிறது என்ற எண்ணத்தோடு, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தன்னுடைய கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்“ என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “இணையதளத்தில் சம்பந்தப்பட்ட கட்டுரை வெளியிடப்பட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by சிவா on Mon Aug 04, 2014 3:09 am


இலங்கை அரசுடனான தூதரக உறவை இந்தியா முறிக்க வேண்டும் - வைகோ

இலங்கை இராணுவ அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாகச் சித்தரித்து, அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மனதால் நினைத்துக் கொண்டு கடிதங்கள் எழுதுவதாகப் புகைப்படம் வெளியிட்டு இருப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள வைகோ, இலங்கை அரசுடனான தூதரக உறவை முறிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்களுக்கு என்ன பொருள்?’ என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையும், இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

இலங்கை இராணுவ அமைச்சகத்தின் கொடூரமான வக்கிர புத்தியை அப்படியே வெளிப்படுத்தும் விதத்தில் இவை அமைந்து இருக்கின்றன. ஹிட்லரின் நாஜிப்படைகள் கூடச் செய்யத் துணியாத அக்கிரமத்தை ஈழத்தமிழ் மக்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் இழைத்த இலங்கை இராணுவம், தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் உள்ள ஜெயலலிதாவை இழிவுபடுத்தத் துணிந்து இருக்கின்றது. இத்தகைய கேவலமான வக்கிர எண்ணம் படைத்த இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடு மன்னிக்கவே முடியாத வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

தமிழக முதல்வர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதுவது வெறும் கடிதங்கள் அல்ல. இலங்கை அரசால் இனப்படுகொலைக்கு ஆளாகி, நாள்தோறும் இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களை இந்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று வைக்கப்படும் கோரிக்கைதான் முதல்வரின் கடிதங்கள்.

ஆனால், இலங்கை இராணுவ அமைச்சகத்திறகு எத்தகைய மண்டைக் கொழுப்பும் ஆணவமும் இருந்தால், இந்திய அரசையும் தமிழக அரசையும் துச்சமாக நினைத்து தமிழக முதல்வர் மீது கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்யத் துணிவார்கள்? தமிழக முதலமைச்சரைக் கிள்ளுக்கீரையாக இலங்கை அரசு நினைப்பதற்கு யார் காரணம்? எவர் கொடுத்த துணிச்சல்?

இராஜபக்சே கைக்கூலியும் தமிழினத் துரோகியுமான சுப்பிரமணிய சுவாமியை இந்திய அரசின் தூதராக இலங்கைக்கு அனுப்பி, இராஜபக்சேவுடன் கைகுலுக்கச் செய்து சிங்கள அரசுக்கு இந்தியா துணையாக இருக்கும் என்று தெரிவித்ததுதான் இலங்கை அரசின் இத்தகைய அத்துமீறலுக்குக் காரணம். இதுமட்டுமின்றி, இலங்கை இராணுவ அமைச்சகத்தின் கட்டுரையில் “பாரதிய ஜனதா கட்சியின் முழு அதிகாரமிக்க உயர்நிலைக்குழு சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் கொழும்பு வந்து, இராஜபக்சேவைச் சந்தித்தது. இந்திய - இலங்கை ராஜீய உறவுகளைத் தமிழ்நாடு தீர்மானிக்க முடியாது. இதில் ஜெயலலிதாவின் தந்திரோபாயங்கள் எதுவும் எடுபடாது. இந்திய-இலங்கை கடல் எல்லை பற்றியும், கச்சத்தீவு குறித்தும் 1974 மற்றும் 1976 இல் இரு அரசுகளும் செய்து கொண்ட உடன்பாடு இறுதியானது; மாற்றத் தக்கது அல்ல. இதை மாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா கூப்பாடு போட்டு, புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை. இலங்கைக் கடல்வளத்தைத் தமிழக மீனவர்கள் கொள்ளை அடிப்பதை அனுமதிக்க முடியாது” என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்திய அரசு உடனடியாக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடனான தூதரக உறவுகளை முறிக்க வேண்டும். இல்லாவிடில் சிங்கள அரசோடு கைகோர்த்துக் கொண்டு தமிழ் இனத்தைத் தண்டிக்கவும், தமிழ் மக்களை இழிவுபடுத்தவும் நரேந்திர மோடி அரசு துணிந்து விட்டதோ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.

எனவே, இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by சிவா on Mon Aug 04, 2014 3:18 am

ஜெயலலிதாவைப் பற்றிய அவதூறு கட்டுரை: சென்னை இலங்கை தூதரகம் முன்பு மக்கள் முற்றுகை!


இலங்கை அரசு இணையத்தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், மோடியையும் இணைத்து சர்ச்சைக்குரிய படத்துடன் கூடிய கட்டுரை வெளியிடப்பட்டதைக் கண்டித்து, இன்று சென்னை இலங்கை தூதரக அலுவலகம் முன்பு அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இலங்கை இணையத்தளத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

அதன் படக்காட்சிகளை கீழே காணலாம்:

(ராஜபக்‌சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் உருவ பொம்மையை எரிக்கின்றனர்)(ஆர்ப்பாட்டக்காரர்கள் ராஜபக்‌சேவின் உருவ பொம்மையை செருப்பால் அடிக்கின்றனர்)(ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர்)(பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர்)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by சிவா on Mon Aug 04, 2014 3:19 am

மன்னிப்பு கோரியது இலங்கை!

இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியானது தொடர்பாக இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.

ஈழத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய அரசியல் கடிதங்களை காதல் கடிதங்களாக சித்தரித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியானது.

இந்த கட்டுரைக்கு இந்திய அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், உடனடியாக இணையதளத்தில் இருந்து அந்த கட்டுரை மற்றும் புகைப்படம் நீக்கப்பட்டது. இந்நிலையில், அவதூறு பரப்பும் வகையில் வெளியான அந்த கட்டுரைக்கு இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.

இதுதொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “சர்ச்சைக்குரிய கட்டுரை மற்றும் படம் அதிகாரிகளின் அனுமதியின்றி கவனக் குறைவாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கட்டுரை இலங்கை அரசின் இந்தியா மீது கொண்டுள்ள கண்ணோட்டத்தை பிரதிபலிக்கவில்லை. குறிப்பிட்ட அந்த கட்டுரை வெளியானதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பினைக் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by மாணிக்கம் நடேசன் on Mon Aug 04, 2014 2:53 pm

இதெல்லாம் இதுங்க போடுற டிராமா மாதிரி இருக்கு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4230
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by ஜாஹீதாபானு on Mon Aug 04, 2014 4:26 pm

அதிர்ச்சி avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30261
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by விமந்தனி on Mon Aug 04, 2014 11:27 pm

அதிர்ச்சி கோபம் 


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8222
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by சிவா on Tue Aug 05, 2014 3:23 am

இணைய தளத்தில் ஜெயலலிதா பற்றி அவதூறு: இலங்கை தூதருக்கு இந்தியா சம்மன்

இலங்கை பாதுகாப்பு துறையின் இணைய தளத்தில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கருத்துகளை பரப்பி கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி மேல்சபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற மேலவையிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை கிளப்பினார்கள். அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை கூறும்போது, இலங்கை அரசின் இந்த மோசமான செயலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட அவதூறு செய்தியானது தமிழக அரசை மட்டுமின்றி இந்திய அரசையே களங்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள இலங்கையின் உயர் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என தம்பிதுரை வலியுறுத்தினார்.

இனியும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்தில் ஒருமனதாக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர் மைத்ரேயன் வற்புறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, இலங்கை தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை தூதர் சுதர்சன் செனவரத்னேவுக்கு அனுப்பியுள்ள சம்மனில் பாரதப் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை விமர்சித்து இலங்கை ராணுவ இணைய தளத்தில் வெளியிடப்பட்ட செய்திக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இக்கட்டுரையால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by சிவா on Tue Aug 05, 2014 3:30 am

இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்படும்: சுஷ்மா சுவராஜ்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுசெய்து இலங்கை அரசு வலைதளத்தில் கட்டுரை வெளியான விவகாரம் குறித்து இலங்கை தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் அவர் கூறும்போது, "இந்திய அரசு இலங்கையின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்படும்" என்றார் சுஷ்மா சுவராஜ்

மக்களவையில் இன்று அதிமுக எம்.பி.க்கள் இந்த விவகாரம் குறித்து அமளியில் ஈடுபட்டதையடுத்து, அவை நடவடிக்கைகள் இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதங்களை இழிவுபடுத்தும் விதமாக இலங்கை அரசு வலைதளம் கட்டுரை வெளியிட்டதையடுத்து கடும் கண்டனக்குரல்கள் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by சிவா on Tue Aug 05, 2014 3:34 am

முதல்வரை விமர்சித்த தேமுதிக நிர்வாகி கைது

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு செய்து இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை குறித்து, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேமுதிக நகரச் செயலாளர் மல்லி (எ) சுப்பிரமணி (38) என்பவர் தனது முகநூலில் (பேஸ்புக்) விமர்சித்துள்ளார்.

அதில், முதல்வரை தரக்குறைவாகவும், கண்டனத்துக்குரிய வகையிலும் விமர்சனம் செய்திருந்ததாக அதிமுக நகரச் செயலாளர் வான்மதி சேட் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார். இது தொடர்பாக சுப்பிரமணியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அவதூறு கிளப்பும் வகையில் தகவல் தெரிவித்தல், பெண்களின் தன்மானத்தை அசிங்கப்படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர்.

[note]இலங்கையில் கேவலமாகப் படம் வெளியிட்டவனைக் கேட்க வக்கில்லை, முதல்வர் பாணியில் கூறினால் திராணியில்லை... அதுபற்றிக் கருத்துக் கூறிய இவரைக் கைது செய்து தன் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டுள்ளனர் காவல்துறையும், அதற்கு ஆணையிட்ட அரசியல்வாதிகளும்![/note]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by T.N.Balasubramanian on Tue Aug 05, 2014 5:09 am

பின்னூட்டம் இடுமுன் ஒன்றை தெளிவாக கூறுகிறேன் . மாநிலத்தின் முதல்வர் ,ஒருவரை ( யாராக இருந்தாலும் ,கட்சி வேறு பாடு இன்றி கூறுகிறேன் , ஆணோ பெண்ணோ ) தமிழ் நாட்டை சார்ந்தவரே ,
அவதூறாக பேசினால் , மற்ற நாட்டவர் ஏன் பேசமாட்டார்கள் ?.

முகநூலில் அவதூறாக கூறியவர் தமிழ் நாட்டை சார்ந்தவர் . தமிழ் நாட்டை சார்ந்தவரே , தமிழக முதல்வரை ,தாழ்வாக விமர்சித்தால் , வழக்கு பதிவிடுதலில் குற்றம் காண முடியுமா ? தமிழக கட்டுபாட்டில் உள்ள , ஒருவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, அயல் நாட்டில் கேவலமாக பேசியவனை /பதிவிட்டவனை தமிழக போலீஸ் , வழக்கு பதிவிட முடியாதே . தேசிய அளவில் , வெளிஉறவு அமைச்சகம் தான் ஆவன செய்யவேண்டும் .
நம் அளவில் , தூதரகம் முன் சென்று நம் எதிர்ப்பை காட்டமுடியும் . தரக்குறைவாக செய்தி வெளியிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரியை , பதவி இறக்கம் செய்ய சொல்லலாம் , மன்னிப்பு கோர சொல்லலாம் .
வேறு எதுவும் நம் கையில் இல்லை .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by விமந்தனி on Tue Aug 05, 2014 11:06 am

@T.N.Balasubramanian wrote:பின்னூட்டம் இடுமுன் ஒன்றை தெளிவாக கூறுகிறேன் . மாநிலத்தின் முதல்வர் ,ஒருவரை ( யாராக இருந்தாலும் ,கட்சி வேறு பாடு இன்றி கூறுகிறேன் , ஆணோ பெண்ணோ )  தமிழ் நாட்டை சார்ந்தவரே ,
அவதூறாக பேசினால் , மற்ற நாட்டவர் ஏன் பேசமாட்டார்கள் ?.

முகநூலில் அவதூறாக கூறியவர் தமிழ் நாட்டை சார்ந்தவர் . தமிழ் நாட்டை சார்ந்தவரே , தமிழக முதல்வரை ,தாழ்வாக விமர்சித்தால் , வழக்கு பதிவிடுதலில் குற்றம் காண முடியுமா ? தமிழக கட்டுபாட்டில் உள்ள , ஒருவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு,  அயல் நாட்டில் கேவலமாக பேசியவனை /பதிவிட்டவனை தமிழக  போலீஸ் , வழக்கு பதிவிட முடியாதே . தேசிய அளவில் , வெளிஉறவு அமைச்சகம் தான்  ஆவன செய்யவேண்டும் .
நம் அளவில் , தூதரகம்  முன் சென்று நம் எதிர்ப்பை காட்டமுடியும் . தரக்குறைவாக செய்தி வெளியிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரியை , பதவி இறக்கம் செய்ய சொல்லலாம் , மன்னிப்பு கோர சொல்லலாம் .
வேறு எதுவும் நம் கையில் இல்லை .
ரமணியன்    
 


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8222
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by சிவா on Wed Aug 06, 2014 4:53 pm

ஜெயலலிதா பற்றிய அவதூறு செய்தி: வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!
தலைநகர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை நிருபர்களை சந்தித்துப் பேசிய ராஜபக்சே, ‘இப்படி நிகழ்ந்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக அறிக்கை தரும்படி கேட்டுள்ளேன்’ என்றார்.

நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்த முடையவை என்ற தலைப்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கடந்த 1-ம் தேதி கட்டுரை வெளியானது. அந்த கட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் சித்திரமும் இடம்பெற்றிருந்தன.

இந்த கட்டுரை ஜெயலலிதாவையும் மோடியையும் இழிவு செய்வதாக இருந்தது. இதற்கு இந்தியாவில் பலத்த கண்டனம் எழுந்ததால் பாதுகாப்பு அமைச்சகம், இணைய தளத்திலிருந்து அந்த கட்டுரையை உடனடியாக நீக்கியது. இந்தியாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியது.பிரதமரிடமும் தமிழக முதல்வரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை தெரிவித்தது.

இந்த கட்டுரை வெளியான சில மணி நேரங்களில் இந்தியாவில் பெரும் அமளி வெடித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

பாஜகவின் கூட்டணி கட்சிகளான பாமக, மதிமுக ஆகியவை இலங்கையுடனான தூதரக உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தின.

இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர பிரதமர் நரேந்திர மோடி வற்புறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இலங்கை தூதர் சுதர்சன் சேனவிரத்னாவை திங்கள்கிழமை நேரில் அழைத்து இந்த கட்டுரை தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில், கொழும்பில் நிருபர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய அதிபர் ராஜபக்சே, ‘இப்படி நிகழ்ந்ததற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக அறிக்கை தரும்படி கேட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum