புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 3%
manikavi
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
214 Posts - 42%
heezulia
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
18 Posts - 4%
sugumaran
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%
manikavi
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
prajai
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_m10ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிகர்தண்டா - திரை விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 04, 2014 1:38 am

ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Jigarrr_2037228gமுதல் காட்சியில் ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல’ பாட்டின் பின்னணியில் டுமீல் வெடிக்கும்போதே பசங்க என்னமோ செய்யப்போறாங்க என்பது தெரிந்துவிடுகிறது.

ஊரே நடுங்கும் அதிபயங்கர ரவுடிக்கு நடிப்புக் கலை மீது திடீர் ஆசை வருவதால் விளையும் ரகளைதான் ‘ஜிகர்தண்டா’.கார்த்திக்குக்கு (சித்தார்த்) சினிமா இயக்குநராக வேண்டும் என்பது கனவு. ரத்தம் தெறிக்கும் க்ரைம்கதையை எடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. மதுரையில் உள்ள அதிபயங்கர ரவுடியான ‘அசால்ட்’ சேதுவின் (பாபி சின்ஹா) வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமென்று நினைக்கிறான்.

அவன் வாழ்க்கையை ஆழமாகவும் விவரமாகவும் தெரிந்துகொண்டு படமாக்க விரும்புகிறான். மதுரையில் தன் நண்பன் ஊரணியின் (கருணாகரன்) உதவியுடன் வேலையைத் தொடங்குகிறான்.

பல்வேறு முயற்சிகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும் நேரத்தில் சேதுவிடம் மாட்டிக்கொள்கிறான் கார்த்திக். அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறான், அவனுடைய சினிமா கனவு என்ன ஆயிற்று என்பதைப் பல திருப்பங்களுடன் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஒவ்வொரு இயக்குநருக்கும் இரண்டாவது படம் அக்கினிப் பரீட்சை என்பார்கள். அந்தப் பரீட்சையில் வெற்றிகரமாகத் தேறியிருக்கிறார் ‘பீட்சா’வின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்பராஜ்.

படம் எடுக்க வேண்டும் என்று தவிக்கும் இளைஞனின் கதையாகத் தொடங்கி, படமாக எடுக்கப்படும் ரவுடியின் கதையாக விரிந்து, படம் எடுக்கப்பட்ட கதையே முக்கியக் கதையாக மாறுவதுதான் திரைக்கதையின் ஆச்சரியம். மையப் பாத்திரம் என்ற ஒன்று இல்லாமல் நிகழ்வுகளை வைத்தே கதையை நகர்த்திக்கொண்டு போன அணுகுமுறையின் மூலம் வித்தியாசப்படுகிறார் கார்த்திக் சுப்பராஜ். தமிழ் சினிமாவின் ஆகிவந்த படிமங்களை அனாயாசமாக உடைத்திருக்கிறார். எல்லாப் பாத்திரங்களும் ஏதோ ஒரு விதத்தில் பகடி செய்யப்படுகின்றன. யாருக்கும் எந்தப் பீடமும் இல்லை.

படத்தின் முக்கியமான சரடு நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட சினிமா மோகத்தின் மீதான பகடி. ரவுடியில் தொடங்கி சாவு வீட்டில் ஒப்பாரியில் இருக்கும் பெண் வரை சினிமா, சினிமாக்காரர்கள் என்றதும் வாயைப் பிளப்பதை இயக்குநர் ‘அசால்டாக’ காட்டியிருக்கிறார்.

சில காட்சிகளை மிக நுட்பமாகக் கையாண்டிருக்கிறார். உதாரணம் கழிப்பறையில் நடக்கும் கொலை. துரோக கூட்டணியை மடக்கும் காட்சி இன்னொரு உதாரணம்.

சின்னப் பாத்திரங்கள்கூட மனதில் ஒட்டிக்கொள்கின்றன. பெட்டிக்கடை தாத்தா, நாயகனின் அம்மா, கொல்லப்பட்டவனின் மனைவி, குழந்தை... இவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டிருக்கும் மனிதர், கதாநாயகியையும் அவளுடைய காதலையும் இவ்வளவு மேலோட்டமாகவா கையாண்டிருக்க வேண்டும்? புடவை திருடும் கதாநாயகி தமிழுக்குப் புதுசு. ஆனால், அதைத் தாண்டி லட்சுமி மேனனுக்குப் பாவம், படத்தில் வேலையே இல்லை.

பாபி சின்ஹாவின் அபார நடிப்புக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். அலட்டிக்கொள்ளாத ரவுடி, பின்னாளில் உருமாறும் விதத்தைக் கச்சிதமாகவும் நுட்பமாகவும் சித்தரித்திருக்கிறார். கொடுத்த வேலையை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் சித்தார்த்.

நடிப்பு வாத்தியாராக வரும் சோமசுந்தரத்தின் நடிப்புக்கும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும் அரங்கில் அடேங்கப்பா ஆரவாரம். ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். நண்பனாக வரும் கருணாகரன், சேதுவின் கையாளாக வரும் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் நடிப்பால் படத்துக்கு மதிப்பைக் கூட்டுகிறார்கள்.

சேதுவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வியூகங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. நண்பர்கள் இருவரும் எடுக்கும் ரிஸ்க் நம்பும்படி இல்லை. இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

குற்றப் பின்னணியும் நகைச்சுவையும் கலந்த திரைக்கதைக்குப் பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடல் ரசிக்க வைக்கிறது. கிணற்றுக்குள் படமாக்கப்பட்டிருக்கும் ‘பாண்டிய நாட்டுக் கொடி’ குத்துப் பாட்டு ரசிகர்களை ஆட்டம்போட வைக்கிறது.

‘என்கவுன்டர்’ காட்சியிலிருந்து சேது எழுந்திருக்கும்போதே படம் முடிந்துவிடுகிறது. அதற்கு அப்புறமும் காட்சிகள் வேண்டுமா என்ன?


தி இந்து


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 04, 2014 1:55 am

ஜிகர்தண்டா - தினமலர் விமர்சனம்

குறும்படம் இயக்கி விட்டு சினிமா இயக்க வந்தவர்களை குறும்பட இயக்குனர்கள் என்று அழைத்ததாலோ என்னமோ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், அவர் பட வசனத்தின் படியே சொல்வதென்றால் ஒரு பெரும்.....படத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை சினிமாவில் குடும்பக் கதைகளைப் பார்த்திருக்கிறோம், காதல் கதைகளைப் பார்த்திருக்கிறோம், ஆக்ஷன் கதைகளைப் பார்த்திருக்கிறோம், காமெடி கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், முதல் முறையாக ஒரு ஆக்ஷன் பிளஸ் காமெடி கதையை இப்போதுதான் பார்க்கிறோம். அது என்ன ஆக்ஷன் பிளஸ் காமெடி கதை என்கிறீர்களா. முதல் பாதி பக்கா ஆக்ஷன் கதை, இரண்டாவது பாதி காமெடி கதை.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சென்டிமென்ட் உண்டு. சினிமாவுக்குள் சினிமா என்பது இதுவரை எடுபடாமல் போன ஒன்று. பாரதிராஜா முதல் பலரும் தொட்டுவிட்ட கதைக்களம், ஆனால் யாருக்கும் ராசியாக அமையவில்லை. ஒருவேளை அந்த ராசியை உடைத்தெறியலாம் என இந்தப் படத்தின் இயக்குனர் முயன்றிருக்கிறாரோ என்னமோ? வித்தியாசமாக படம் பண்ண வேண்டியதுதான், அதற்காக முதல் பாதியை ஆக்ஷனின் உச்சத்திற்கு கொண்டு போய்விட்டு, அப்படியே அதற்கு எதிராக இரண்டாவது பாதி கதையை அமைப்பதா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஒருவேளை முதல் பாதி கதை எழுதி முடித்ததும் 'பவர் ஸ்டார்' படம் எதையாவது பார்த்திருப்பாரோ? அதன் பாதிப்புதான் 'டெரர்' ஆக இருந்த முதல்பாதியை பின்னர் 'டெரர் ஸ்டார்' காமெடி ஆன மாற்றியிருக்கிறார். எங்கே நமது படத்தையும் கொரிய படத்தின் 'காப்பி' படம் மற்றவர்கள் சொல்வதற்கு முன் நாமே சொல்லிவிடுவோம் என அதற்கும் படத்தில் ஒரு காட்சியை வைத்துவிட்டார்.

ஒரு தொலைக்காட்சியின் குறும்படப் போட்டியில் நடுவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையில், அந்த போட்டியில் கலந்து கொண்ட சித்தார்த்துக்கு நடுவர்களில் ஒருவரான ஒரு தயாரிப்பாளர் படம் இயக்க வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறி விடுகிறார். அவர் சித்தார்த்திடம் ரத்தம் தெறிக்கிற மாதிரி ஒரு ஆக்ஷன் படத்துக்கு கதை எழுதிட்டு வாங்க படம் இயக்கலாம் என்கிறார். ஒரு நிஜ ரவுடியின் வாழ்க்கைக் கதையை எழுத முடிவெடுத்து மதுரைக்குப் புறப்படுகிறார் சித்தார்த். அங்கு நண்பன் கருணாகரன் உதவியுடன், மதுரையை ஆட்டிப் படைக்கும் ரவுடி சிம்ஹாவின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து கதையை உருவாக்க ஆரம்பிக்கிறார்.

சிம்ஹாவை 'என்கெளன்ட்ர்' செய்ய காவல்துறையும் முடிவெடுத்திருக்க, சிம்ஹாவின் போட்டியாளர்களும் அவரைக் கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்க, அந்த சூழ்நிலையில் சித்தார்த்தும், கருணாகரனும் சிம்ஹாவிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை உளவு பார்க்க வந்தவர்கள் என சிம்ஹா நினைத்து போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார் இதன் பின் என்ன என்பதுதான் படத்தின் கலகலப்பான (?) மீதி கதை.

என்ன இது ஒரு பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படத்துக்குரிய கதையை சொல்லிட்டு, இதன் பின் நடப்பது கலகலப்பான கதை என்று சொல்லியிருக்கிறோமே என ஆச்சரியப்பட வேண்டாம். இடைவேளைக்குப் பின் ஆக்ஷன் டிராக்கை விட கதை வேறு தடத்தில் பயணிக்கிறது. 'நான் வெஜிடேரியன்' ஹோட்டலுக்குப் போய் விட்டு தயிர் சாதம் வாங்கி சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது நிலைமை...

படத்துல ஹீரோ சித்தார்த்தா அல்லது சிம்ஹாவான்னு படம் பார்க்கிற நமக்கு மட்டுமில்லாம, எல்லாருக்குமே ஒரு குழப்பம் வரும். சித்தார்த்தை விட சிம்ஹாக்குதான் படத்துல காட்சிகள் அதிகமா இருக்கும் போல. சும்மா சொல்லக் கூடாது சிம்ஹா புகுந்து விளையாடியிருக்கிறார். 'அசால்ட்' சேது வாக அட்டகாசமாக நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள தோற்றத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். பொதுவா, நம்மைக் கவர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் வேறு நடிகர்கள் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போம். ஆனால், இந்த சேது கதாபாத்திரத்தைப் பொறுத்தவரையில் வேறு யாரையும் கற்பனையில் கூட கொண்டு வரமுடியவில்லை. நின்று, நிதானமாக நெத்தி அடி அடித்திருக்கிறார். இந்தப் படம் சிம்ஹாவை வேறு ஒரு உயரத்தில் கொண்டு போய் உட்கார வைத்துவிடும்.

திரைப்படம் இயக்கும் ஆசையில் கதை எழுதுவதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் இயக்குனர் கதாபாத்திரத்தில் சித்தார்த். கொஞ்சம் அப்பாவித்தனமான கதாபாத்திரம், எதையுமே யோசித்து யோசித்து செய்கிறார். லட்சுமி மேனனிடம் காதலிலாவது ஜொலிப்பார் என்று பார்த்தால் அங்கும் ஒன்றுமில்லை, சிம்ஹாவிடம் கொஞ்சம் முறைத்துக் கொண்டாவது நிற்பார் என்று பார்த்தால் அங்கும் ஒன்றுமில்லை. இயக்குனர் கார்த்திக், சித்தார்த்திடம் கதாபாத்திரத்தை சரியாக சொல்லவில்லையா, அல்லது சித்தார்த், நமக்கு இருக்கும் முக்கியத்துவத்திற்கு இது போதும் என்று முடிவெடுத்துவிட்டாரா என்பது தெரியவில்லை. திறமையைக் கொட்டி நடிப்பதற்கு காட்சிகள் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சிம்ஹா கதாபாத்திரம் ஸ்டிராங்காக உருவாக்கப்பட்டு விட்டதால், சித்தார்த்தின் கதாபாத்திரம் எடுபடாமல் போய்விட்டது.

லட்சுமி மேனன் மொத்தமாக எத்தனை காட்சிகள் வந்தார் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வரும் ஒரு முன்னணி நாயகிக்கு இந்த அளவிற்கா குறைவான காட்சிகளை வைப்பது ?. படத்துக்குத் தேவையில்லை என்று நினைத்திருந்தால் மொத்தமாக அவரது கதாபாத்திரத்தைக் கூட வைக்காமல் போயிருக்கலாம். ஆனாலும், ஒரே ஒரு 'ட்விஸ்ட்'டுக்கு மட்டும் அவரது கதாபாத்திரம் பயன்பட்டிருக்கிறது.

சித்தார்த்தின் நண்பனாக கருணாகரன், காமெடிக்கு இவர்தான் பொறுப்பு என்றாலும் ஒரு சில வசனங்களால் மட்டும் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் வரிசையில் அம்பிகா, 'ஆடுகளம்' நரேன் என பலர் இருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் தேவையான இடங்களில் மட்டும் வாசித்திருக்கிறார். சிம்ஹா வரும் காட்சிகளில் ஸ்பெஷலாக கவனம் செலுத்தியிருக்கிறார். கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு கோணங்களிலும், லைட்டிங்குகளிலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறது.

இடைவேளைக்குப் பின் படத்தில் சிம்ஹா நடிகராகி விடுகிறார். அவரை எந்த அளவிற்கு 'டெரர் ஸ்டார்' ஆக நகைச்சுவையாக காட்டியிருக்கிறார்கள் என்பதை 'அ.குமார்' என்ற படத்துக்குள் படம் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமே புரிந்து கொண்டு பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அது எப்பேர்ப்பட்ட நகைச்சுவை என்பதை 'ஜிகர்தண்டா' படத்தைப் பார்க்கும் நாம் உணர முடியாததால் நமக்கு எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. ஒரு சப்-இன்ஸ்பெக்டரே சிம்ஹாவிடம் வந்து உங்க ஃபைல்களை மேலிடத்துல கேட்டிருக்காங்க, என்கௌண்டர் பண்ண வாய்ப்பிருக்கு என்று சொன்னாலும், கடைசியில் கிளைமாக்ஸ வரை கூட காவல் துறையினர் ஒருவரும் எட்டிப் பார்க்கவில்லை. வழக்கமான தமிழ் சினிமா போல கடைசியில் வில்லன் திருந்திவிடுவதெல்லாம் இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்களிடம் நாம் எதிர்பார்க்காதது.

'ஜிகர்தண்டா' - மற்றுமொரு 'மதுரை ஸ்பெஷல்', 'நிறைய காரம், கொஞ்சம் இனிப்பு...'





ஜிகர்தண்டா - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 04, 2014 5:15 am

ஜிகர்தண்டா - திரை விமர்சனம் M8cbfZQAQ0OpbuHRh1d8+zzzz
-
 மகிழ்ச்சி மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக