புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
56 Posts - 50%
heezulia
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
12 Posts - 2%
prajai
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
9 Posts - 2%
Jenila
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
4 Posts - 1%
jairam
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உழைப்பு! Poll_c10உழைப்பு! Poll_m10உழைப்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 28, 2014 10:59 pm

வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி, புதிதாக கட்டப்பட்டிருந்த அந்த சிறிய கடையில், மளிகைச் சாமான்களும், மற்ற பொருட்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடைக்கு வரிசையாக ஆட்கள் தொடர்ந்து வர, உட்கார நேரமில்லாமல் வியாபாரத்தைக் கவனித்து கொண்டிருந்தார் சபேசன்.
''என்ன சபேசா... எப்படி இருக்கே,'' என்று, கூட்டத்தின் இடையே நின்றிருந்த நண்பர் மகாலிங்கம் கேட்டார்.
''அட மகாலிங்கமா... வாப்பா வா... நல்லா இருக்கியா?''

''எனக்கென்ன குறைச்சல் சவுக்கியமாத்தான் இருக்கேன். நேரத்துக்கு மருமக கையால மணக்க மணக்க சாப்பாடு, நல்ல தூக்கம், நாலு நாளைக்கு ஒரு தடவ, இப்படி நண்பர்களப் பாக்கிறதுன்னு, 'ரிடையர்ட் லைப்' நல்லா போயிட்டிருக்கு,'' என்றார்.
மகாலிங்கமும், சபேசனும் ஒன்றாக வேலை பார்த்து, இரண்டு மாதத்திற்கு முன், பணி ஒய்வு பெற்றனர். இவர்களின் மகன்களும் கூட நண்பர்களாக இருந்தனர்.

''அப்புறம் என்ன விசேஷம் மகாலிங்கம்... கூல்டிரிங்ஸ் சாப்பிடறியா?''
''வேண்டாம்ப்பா. ஆமாம் நீ ஏன் டல்லா இருக்கே? ரிடையர்ட் ஆகியாச்சுன்னு தான் பேரு. ஓய்வு பெற்ற மறுநாளே, இந்தக் கடைய கட்டி உன்கிட்ட பொறுப்ப கொடுத்திட்டான் உன் மகன் சரவணன். நான் கூட அவன்கிட்டே சொன்னேன்... 'ஏன் இந்த வயசான காலத்தில அப்பாவ வேலை வாங்கற... அவரை வீட்டில நிம்மதியா இருக்க வைக்கக் கூடாதா'ன்னு கேட்டேன். அவன் காதிலேயே வாங்கல. நீ இன்னும் உழைக்க வேண்டியிருக்குறத நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு,'' என்றார் மகாலிங்கம்.
''வீட்டு வாசல்ல தானே கடை இருக்கு. விக்ற விலைவாசியில இந்த வருமானம் குடும்பத்துக்கு உதவியா இருக்கும்ல...'' என்றார் சபேசன்.

''நீ என்னதான் சொன்னாலும் என் மனசு கேட்கல... வேலையிலிருந்து ஓய்வு பெற்ற உன்னை, உன் மகன் இன்னும் வேலை வாங்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் அதிர்ஷ்டம் பண்ணினவன்; என் மகன் என்னை நல்லாவே பாத்துக்கிறான். சரிப்பா நீ வியாபாரத்த கவனி நான் கிளம்பறேன்.''

''உள்ளே வாப்பா... என் சம்சாரத்துக்கிட்டே சொல்லி காபி தரச் சொல்றேன்.''
''இருக்கட்டும்ப்பா இன்னொரு நாள் சாவகாசமாக வரேன்,'' என்று கூறி, விடைபெற்றார் மகாலிங்கம்.
''மாமா... சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். நீங்களும், அத்தையும் சாப்பிடுங்க; நான் கடைய பாத்துக்கிறேன்,"என்று மருமகள் கூறவும், சபேசன் வீட்டிற்குள் வந்தார்.
யோசனையாகவே சாப்பிட்டுக் கொண்டிருந்த சபேசனைப் பார்த்து, அவர் மனைவி, ''சாதத்தை ஏன் அளையறீங்க... குழம்பு இன்னும் கொஞ்சம் ஊத்தவா?'' என்று கேட்டாள்.
''வேண்டாம்.''

''ஏன்... என்னவோ போல் இருக்கீங்க... உடம்புக்கு முடியலையா?'' என்று கேட்டாள்.
''உடம்பு நல்லாதான் இருக்கு; மனசுதான் சரியில்ல.''
''ஏன். என்னாச்சு?''
''மகாலிங்கம் வந்திருந்தான்...''
''ஏன் அவர் என்ன சொன்னாரு?''

''ரிடையர்ட் ஆன பிறகு, வீட்டில் ஓய்வா, நிம்மதியா இருக்கிறதப் பத்தி சொன்னான். என்னை மாதிரியா... ஆபீசுக்கு போற மாதிரி, காலையில் குளிச்சு, சாப்பிட்டு, கடையைத் திறந்து வியாபாரத்தக் கவனிக்க வேண்டியிருக்கு. என் புள்ள என்னை ஓய்வெடுக்க கூட விடலயே... இன்னும் உழைச்சுட்டுதானே இருக்கேன்,'' என்றார் சலிப்புடன்.

''இதென்னங்க பெரிய வேலை; வீட்டு காம்பவுண்டுக்குள் கடை. வேணுங்கிற சாமானை நம்ம மகனே வாங்கி வந்து போடறான். மத்தியான நேரம் மருமகள் கடையப் பாத்துக்கிறா. அந்த நேரத்துல நீங்க கொஞ்சம் நேரம் ஒய்வு எடுக்கிறீங்க. ஏதோ நம்மால நம்ப பிள்ளைக்கு உதவியாக இருக்க முடியுதேன்னு சந்தோஷப்படுங்க.''

''ஓய்வெடுக்கிற வயசு வந்தாச்சுன்னுதானே, கவர்மென்டே ரிட்டயர்மென்ட் கொடுக்கிறான்; அதுக்குப் பிறகும் உழைக்கச் சொன்னா எப்படி? இந்த விஷயத்துல மகாலிங்கம் தான் கொடுத்து வச்சவன்,'' என்றார் பெருமூச்சுடன்.

அன்று காலை பேரனுக்குப் பிறந்த நாள் என்று, எல்லாரும் கோவிலுக்கு கிளம்பினர்.
''அப்பா மணி ஒன்பதாச்சு... கடையைத் திறக்கலயா?''
''இல்லப்பா... இன்னைக்கு உடம்பு முடியல.''
''சரி ரெஸ்ட் எடுங்க,"என்று கூறியவனை, மொபைல் போன் அழைத்தது. எடுத்துப் பேசியவன், ''என்ன சொல்றே... அப்பாவுக்கு என்னாச்சு... எந்த ஹாஸ்பிடல்? நான் உடனே வரேன்,'' என்றான், 'படபட'ப்புடன்.

''என்ன சரவணா யாருக்கு உடம்பு முடியல?'' என்று கோட்டார் சபேசன்.
''மகாலிங்கம் மாமாவுக்குத்தான்ப்பா... திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாராம்; ஆஸ்பத்திரியில இருக்காரு. நான் போய் பாத்துட்டு வரேன்.''
''நானும் வரேன்பா.''
''இல்லப்பா நீங்க ஒய்வு எடுங்க. பயப்படுற மாதிரி ஒண்ணும் இருக்காது; நான் போய் பாத்துட்டு வரேன். நாளைக்கு உங்கள அழைச்சுட்டு போறேன்.''

அன்று மாலை சரவணனுடன், மகாலிங்கத்தின் மகன் கோபால் வீட்டிற்கு வந்தான்.
''என்னப்பா அப்பாவுக்கு எப்படி இருக்கு?'' என்று கேட்டார் சபேசன்.
''பரவாயில்ல மாமா. இன்னும் இரண்டு நாள் ஆஸ்பத்திரியில இருக்கிற மாதிரி இருக்கும். சாப்பாடு விஷயத்தில, கண்ட்ரோல் இல்ல அதனால, ஷுகர் அதிகமாயிருச்சாம்.''

அவசர தேவைக்கு சரவணனிடம் பணம் வாங்கிக் கொண்டு கிளம்பினான் கோபால்.
இரவு சாப்பாடு முடிந்து சபேசன், மனைவியுடன் ஹாலில் அமர்ந்திருக்க, உள்ளே சாப்பிட்டபடி மகனும், மருமகளும் பேசுவது அவர்கள் காதில் விழுந்தது.

''மகாலிங்கம் மாமா நல்லாத்தானே இருந்தாரு. திடீர்ன்னு இப்படி முடியாம வந்துடுச்சே. வயசானாலே எப்ப என்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது போலிருக்கு,'' என்றாள் சரவணின் மனைவி.
''அப்படிச் சொல்லாதே. அவருக்கு ஏற்கனவே ஷுகர், பிரஷர் எல்லாம் இருக்கு. உடம்பைக் கவனிக்காம விட்டுட்டாரு; ஆபீசுக்கு போன வரைக்கும் உடம்புக்கு, உழைப்பு இருந்துச்சு. 'ரிட்டயர்ட்' ஆன பிறகு, நல்ல சாப்பாடு, தூக்கம்ன்னு உடம்பக் கவனிக்கல. அதான் ஷுகர் கூடிப் போய் உடம்புக்கு முடியாம போயிடுச்சு.''

''என்னங்க இப்படிச் சொல்றீங்க. அதுக்காக கடைசி வரை உழைச்சுக்கிட்டேவா இருக்க முடியும்?''
''நான் சொல்ல வர்றத சரியா புரிஞ்சுக்க. நம்ப உடம்ப நல்லா வச்சுக்கணும்ன்னா, உடம்புக்கு தகுந்த உழைப்பு இருக்கணும். அப்பாவ எடுத்துக்க... எப்பவுமே சுறுசுறுப்பா இருப்பார். இந்த சுறுசுறுப்பு தொடர்ந்து இருக்கணும்ன்னு தான் ஒய்வு பெற்ற பிறகும், அவருக்கு கடை வச்சுக் கொடுத்தேன். இல்லாட்டி அவரும் என்ன செய்யறதுன்னு தெரியாம சும்மாதான் இருப்பாரு. உடம்பின் இயக்கம் குறைஞ்சா, சோம்பேறித்தனம் அதிகமாயிடும்; தேவையில்லாத வியாதிகள் வந்து சேரும்,'' என்றான்.
''அப்ப நீங்க கடை ஆரம்பிச்சதே உங்கப்பாவுக்காகத்தான்னு சொல்லுங்க.''
''பின்னே இல்லையா... என் அப்பா எப்பவும் சுறுசுறுப்பா, உடல் ஆரோக்கியத்தோடு இருக்கணும்ன்னு நினைக்கிறேன்,'' என்றான் சரவணன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சபேசனுக்கு, தன் மேல் மகனுக்கு இருக்கும் கரிசனம் புரிந்து நெகிழ்ந்தவராக தன் மனைவியிடம், ''சரி, நேரமாச்சு படுப்போம்; இன்னக்கி தான் கடைய திறக்க முடியாமப் போச்சு. நாளைக்கு சீக்கிரம் எழுந்து வியாபாரத்தைப் பாக்கணும்,'' என்றார்.

பரிமளா ராஜேந்திரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 29, 2014 2:57 pm

உழைப்பு! 3838410834 உழைப்பு! 3838410834 சூப்பருங்க 
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 29, 2014 3:47 pm

நல்ல கதை .... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 30, 2014 1:44 pm

பாலாஜி wrote:நல்ல கதை .... பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1076367

நன்றி பாலாஜி புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 30, 2014 11:41 pm

உழைப்பு! 3838410834 உழைப்பு! 3838410834 உழைப்பு! 1571444738 



உழைப்பு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉழைப்பு! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உழைப்பு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 01, 2014 2:56 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 02, 2014 1:15 pm

அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக