ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by soplangi on Thu Jul 17, 2014 10:09 pm

First topic message reminder :

295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுவீழ்த்தப்பட்டதா?

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

-- தினமலர்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down


Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 9:38 pm


'ரஷியா உதவியுடன் ஆதாரங்களை அழிக்க முயற்சி' உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு

'ரஷியா உதவியுடன் ஆதாரங்களை அழிக்க முயற்சி' செய்யப்படுகிறது என்று உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச்.17), கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உயிரிழந்து கரிக்கட்டைகள் போன்று உருக்குலைந்து போயினர். சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 15 கி.மீ. சுற்றளவுக்கு விமானத்தின் சிதைவுகளும், உயிரிழந்தவர்களின் உடல்களும் சிதறிக் கிடக்கின்றன. 181 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும், உக்ரைன் அரசு படையினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டு கறுப்பு பெட்டிகளையும் (ஒன்று ஒலிப்பதிவு பெட்டி, மற்றொன்று தகவல் பதிவு பெட்டி) கைப்பற்றி உள்ளதாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கறுப்பு பெட்டிகளை அவர்கள் பரிசோதனைக்காக ரஷியாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த சோதனைக்கு பின்னர் விமானத்தில் கடைசி நிமிடத்தில் நடந்த நிகழ்வுகள் அம்பலத்துக்கு வரும். இவ்விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக ஓ.எஸ்.சி.இ. (ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு) குழு விசாரணையை தொடங்கியது. சம்பவம் நடந்த இடத்திற்கு விசாரணை குழு சென்றது. அவர்கள் அப்பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆய்வு செய்ய முயன்றுள்ளனர். அதற்கு கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசாரணைக்குழுவை அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு வெளியே செல்லவிடவில்லை. அதையும் மீறி அவர்கள் சென்றபோது கிளர்ச்சியாளர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன. அனுமதி அளிக்க கிளர்ச்சியாளர்கள் மறுத்ததை அடுத்து விசாரணைக் குழுவினர் அங்கிருந்து திரும்பிவிட்டனர்.

விமானம் விழுந்து கிடக்கும் பகுதியை கிளர்ச்சியாளர்கள் தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர். இதனால் விசாரணைக் குழுவினர் முழுமையான விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலேசியா குழுவும் கீவ் சென்றுள்ளது. இந்நிலையில் மலேசியா பிரதமர் நஜிப் ராசக் இவ்விவகாரம் தொடர்பாக ரஷியா அதிபர் புதினுடன் பேசியுள்ளார். அவர், முழுமையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று புதினிடம் கோரிக்கை வைத்துள்ளார். கிளர்ச்சியாளர்கள் அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து ரஷியாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. உக்ரைன் குழுவிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் ரஷியா உதவியுடன் சர்வதேச குற்றத்தின் ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்து வருகின்றனர். என்று உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 9:38 pm

மலேசிய விமானத்தில் 6 எய்ட்ஸ் மாநாட்டுப் பிரதிநிதிகள் தான் சென்றனர்

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்கேற்க 6 பிரதிநிதிகள் மட்டுமே சென்றதாகவும், 100 பேர் சென்றதாக வந்த தகவல், தவறு என்றும் தெரியவந்துள்ளது.

20-வது சர்வதேச எய்ட்ஸ் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. சுமார் 12,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இம் மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ராக் பாடகரும் ஏழ்மைக்கு எதிராக போராடி வருபவருமான பாப் கெல்டாப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச மாநாட்டில் எய்ட்ஸுக்கு எதிரான பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நிதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இம்மாநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர், சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

மாநாட்டுப் பிரதிநிதிகள் சுமார் 100 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக, சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேடு தெரிவித்தது.

ஆனால், சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற 6 பிரதிநிதிகள் அல்லது அதற்கும் கூடுதலாக சிலர் மட்டுமே, எம்.எச் 17 விமானத்தில் சென்றதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐ.நா.வின் சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டு தலைவர், மிச்சேல் சிதிபே, தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 9:41 pm

கிளர்ச்சியாளர்கள் உதவியுடன் ரஷ்யா 38 சடலங்களை அழித்தது உக்ரைன் அரசு குற்றசாட்டுகீவ்

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச்.17), நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த போது, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உயிரிழந்து கரிக்கட்டைகள் போன்று உருக்குலைந்து போயினர். சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 15 கி.மீ. சுற்றளவுக்கு விமானத்தின் சிதைவுகளும், உயிரிழந்தவர்களின் உடல்களும் சிதறிக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 181 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள், சம்பவ இடத்தில் இருந்து 270 கி.மீ. தொலைவில் உள்ள கார்கிவ் என்ற இடத்துக்கு அடையாளம் காணப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும், உக்ரைன் அரசு படையினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர்.


இந்நிலையில் உக்ரைன் அரசு அதிகாரி ஒருவர் , ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் பக் என்னும் நவீன ரக ஏவுகணையை கொடுத்திருப்பதாகவும், அந்த ஏவுகணை 28 கிமீ தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என்றும் கூறியுள்ளார். ஆனால் உக்ரைன் அரசின் இந்த கருத்தை ரஷ்யா கடுமையாக மறுத்துள்ளது. இதனால் மலேசிய விமானம் MH17ஐ சுட்டு வீழ்த்தியது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிற நிலையில், சம்பவத்தை தொடர்ந்து ரஷிய உளவுத்துறை அதிகாரிகள் விவாதித்தது தொடர்பான ஒலிப்பதிவுகளை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.
அதில் அவர்கள், ‘உக்ரைன் ராணுவ விமானம் என நினைத்து கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி விட்டனர். ஆனால் அப்புறம்தான் தெரிந்தது அது பயணிகள் விமானம் என்று’ என அவர்கள் பேசிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டு கறுப்பு பெட்டிகளையும் (ஒன்று ஒலிப்பதிவு பெட்டி, மற்றொன்று தகவல் பதிவு பெட்டி) கைப்பற்றி உள்ளதாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கறுப்பு பெட்டிகளை அவர்கள் பரிசோதனைக்காக ரஷியாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த சோதனைக்கு பின்னர் விமானத்தில் கடைசி நிமிடத்தில் நடந்த நிகழ்வுகள் அம்பலத்துக்கு வரும்.
* விமான விழுந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த இரினா திபுனோவா (வயது 65) எனபவர் கூறுகையில் பெருத்த ஊளை  சத்தம் கேட்டது . அதை தொடர்ந்து  தனது வீட்டின் மேற்கூரையை  உடைத்து மழைபோல் சடலங்கள் விழ தொடங்கியது. இன்னும் ஆடை இல்லாத ஒரு பெண் சடலம் தனது வீட்டிற்குள் இன்னும் உள்ளது என கூறினார்.மேலும் ஒரு  சடலம் தனது படுக்கையில்; வந்து விழுந்ததாக கூறினார். நிபுண்ர்கள் வரும் வரை காத்திருக்குமாறு அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆங்காங்கே வயல் வெளீகளில் சடலங்கள் விழுந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* சம்பவ நடந்த இடத்தில் யாரும் எதையும் தொடக்கூடாது என சர்வதேச விசாரணை குழு கூறி இருந்தது. இருந்த போதிலும் ரஷ்யா மற்றும்  கிளர்ச்சியாளர்கள்  சம்பவ இடத்தில் 38 சடலங்களை அப்புறபடுத்தி உள்ளனர் அப்போது அவர்கள் விமான விபத்துக்கான சாட்சியங்களை அழித்து உள்ளனர் என  உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
* சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து  ரஷ்ய ஜனாதிபதி வால்டிமர் புதின்  ஒபாமாவுக்கும் ஐநாசபை பிரதிநிதிகளுக்கும் மலேசிய விமான சுட்டு வீழ்த்தபட்டது குறித்த அறிக்கையை அனுப்பி உள்ளார்.

* விமான விழுந்த இடத்தில் ஆய்வு நடத்த சென்ற சர்வதேச ஆய்வாளர்களை  அந்த பகுதியில் குடிபோதையில் மற்றும் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்களால்  தடுக்கபடுகின்றனர்.

* பிரிட்டன் ஜான் ஆல்டர் ( வயது 63) எனபவர் சடல் உள்பட பல சடலங்களை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 9:42 pm

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷியா தனது பொறுப்பை கை கழுவிவிட முடியாது - ஆஸ்திரேலியா

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷியா தனது பொறுப்பை கை கழுவிவிட முடியாது என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச்.17), நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த போது, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உயிரிழந்து கரிக்கட்டைகள் போன்று உருக்குலைந்து போயினர். இவ்விவகாரம் தொடர்பாக ரஷியா மீது அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சர்வதேச விசாரணை நடத்த வற்புறுத்தியுள்ளார். இதற்கிடையே உக்ரைன் பகுதியில் சண்டை நிறுத்தத்திற்கு ரஷியா அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவம் உலக நாடுகளின் தலைவர்களை ஆத்திரம் அடை செய்துள்ளது.

விபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 21 பணிகளும் பலியாகினர். ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட், "இந்த கோர சம்பவத்தின் பின்னால் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இருக்கின்றனரா என்ற கேள்விக்கு ரஷியா பதில் அளிக்க வேண்டும்" என்றார். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் ரஷியா தனது பொறுப்பை கை கழுவிவிட முடியாது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ரஷியாவின் ஆதரவாளர்கள் உள்ள பகுதியிலே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரஷியாவே பெரும்பாலான ஆயுதங்களை வழங்குகிறது. என்று டோனி அப்பாட் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து துக்கம் அனுசரிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பரக்கவிடப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 9:49 pm

மீண்டும் நடந்த இவ்விமான விபத்தை ஜீரணிக்கவே முடியாது... கொந்தளிக்கும் உறவினர்கள்

கோலாலம்பூர்: மலேசிய விமானம் உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை தங்களால் ஜீரணத்துக் கொள்ளவே முடியாது என்று தெரிவித்துள்ளனர் மலேசியர்கள். காணாமல் போன எம்ஹெச்370 விமானத்தினால் ஏற்பட்ட வடுவே இன்னும் ஆறாமல் இருக்கும் நிலையில் இப்படி மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

295 பேர் உயிரிழ்ந்துள்ள இந்த சம்பவத்தால், ஏற்கனவே நடைபெற்ற மலேசிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். நாங்கள் பட்ட வேதனையை தற்போது இந்த 295 பேரின் குடும்பத்தினரும் அனுபவிப்பார்களே என்று வருந்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவங்களுக்கு பதவியில் இருப்பவர்கள் தக்க பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்றும் கொந்தளித்து போய் உள்ளனர். இது பற்றிய டுவிட்டர் செய்தியில், "நாம் அனுபவித்த துன்பத்தினை அனுபவிக்கும் 295 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதலாக இருப்பதுதான் நம்முடைய உறவினர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி" என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 9:53 pm

மழைபோல் விழுந்த பயணிகளின் உடல்கள்- உக்ரைனில் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமான பயங்கரம்

கிவ்: உக்ரைனில் மலேசிய விமானம் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தினால் சிதைந்த உடல்கள் மழைபோல் அங்குள்ள வீடுகளின் மேல் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று முன்தினம் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுட்டு வீழ்த்தப் பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பலியாகினர்.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அங்கு இரவு நேரம் என்பதால் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். திடீரென்று கேட்ட இடிபோன்ற பலத்த சத்தத்தால் வெளியில் வந்து கண்டபோது விமான பயணிகளின் உடல்கள் வீட்டின் மேல் விழுந்ததைக் கண்டதும் மக்கள் அலறிவிட்டனர்.

வீடுகளில் இருந்து 330 அடி தூரத்தில் உள்ள கோதுமை வயலில் சுமார் 35 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் விழுந்து சிதறி கிடந்தன. இதுபோன்று பல அருகில் அமைந்துள்ள வயல்களிலும், காலி இடங்களில் சிதறி கிடந்தன.

அவற்றை மீட்கும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. சிதைந்த உடல்களையும், எந்தவித சேதமும் இல்லாத உடல்களையும் சேகரித்து வைத்துள்ளனர். மீட்பு பணி இன்னும் முழுமை அடையவில்லை. விமான பயணிகளின் உடல் அனைத்தையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 10:10 pm

பயணிகளின் நகை, பணத்தை சூறையாடும் கும்பல்!

கிழக்கு உக்ரைனில் எம்எச் 17 விமானம் விழுந்து நொறுங்கிக் கிடக்கும் இடத்தில், போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் சில தீவிரவாதிகள் பயணிகளின் உடமைகள், விலையுயர்ந்த பொருட்கள், பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளதாக சில முக்கிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த திருட்டு கும்பல், பயணிகளின் நகைகள், பணம் மற்றும் வங்கி கடன் அட்டைகளை தேடி அலைவதாகவும் கூறப்படுகின்றது.

சிதறிக் கிடக்கும் பயணிகளின் பெட்டிகள் திறக்கப்பட்டு அதிலுள்ள பொருட்கள் வெளியே இழுக்கப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 10:16 pm

ஏவுகணையைப் பாய்ச்சியவர் யார்? கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்

செயற்கைக் கோள் படங்கள், எம்எச்17-ஐ சுட்டுவீழ்த்திய ஏவுகணை புகையைக் கக்கியவாறு தரையிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்து செல்வதைக் காண்பிக்கின்றன. அகச்சிவப்பு உணரிகள் விமானம் வெடித்தைப் பதிவு செய்துள்ளன.

இவற்றை வைத்து ஏவுகணையைப் பாய்ச்சியவர்கள் யார், ஏன் பாய்ச்சினார்கள், எங்கிருந்து பாய்ச்சினார்கள் முதலிய விவரங்களைக் கண்டறியும் முயற்சியில் அமெரிக்க ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த ஆய்வின் முடிவுகளை வைத்துதான் அனைத்துலக சமூகம், விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்துக்கு எதிரான அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும்.

இதனிடையே, ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் “தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் எஸ்ஏ-11 ரக ஏவுகணைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரிவினைவாதிகள் வசமுள்ள கிழக்கு யுக்ரேய்ன் பகுதியிலிருந்து பாய்ச்சப்பட்டிருக்கிறது” என்பதுதான் அமெரிக்காவின் கணிப்பு எனக் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 10:17 pm

எம்எச்17: கண்காணிப்பாளர்களைத் துப்பாக்கிக்காரர்கள் தடுத்தனர்

நேற்று, ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்பு நிறுவனத்தின் கண்காணிப்பாளர்கள்(ஓஎஸ்சிஇ), கிளர்ச்சிப் படையினர் வசமுள்ள யுக்ரேய்னின் கிழக்குப் பகுதியில் மலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தைப் பார்வையிடச் சென்றபோது துப்பாக்கிக்காரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

தடை இருக்காது என்று நினைத்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தைப் பார்வையிடச் சென்றதாக ஓஸ்சிஇ பேச்சாளர் மைக்கல் பொச்யூர்கிவ் கூறினார்.

“அந்த இடத்தை அடைந்தபோது ஆயுதமேந்திய பலர் எதிர்பட்டனர். அவர்கள் மரியாதைக்குறைவாகவும் ஒழுங்குமீறியும் நடந்து கொண்டார்கள். சிலர் போதையில் இருந்ததுபோலவும் தெரிந்தது”, என்றாரவர்.

கண்காணிப்பாளர்கள் 75 நிமிடங்கள் அங்கு இருந்துவிட்டுத் திரும்பிச் சென்றனர். இன்று அவர்கள் மீண்டும் அங்கு செல்லவும் நாள் முழுவதையும் அங்கேயே செலவிடவும் தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 10:19 pm

இவரா எம்எச் 17மீது ஏவுகணையைப் பாய்ச்சிவர்?எம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்தியவர் என்ற சந்தேகத்துக்கு உரியவராக இருப்பவர் இகோர் கீர்கின். இவர், சுயமாக பிரகடனம் செய்துகொள்ளப்பட்டிருக்கும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தற்காப்பு அமைச்சராவார்.

முன்னாள் உளவுத்துறை அதிகாரியான இவருக்கு ஸ்ட்ரெல்கோவ்- சுட்டுத்தள்ளுபவர்- என்ற பட்டப்பெயரும் உண்டு என சிட்னி மோர்னிங் ஹெரால்ட் கூறுகிறது. உத்தரவுக்குக் கீழ்ப்படியாத சொந்தப் படையினரையே சுட்டுத்தள்ளி விடுவாராம்.

ரஷ்ய சமூக வலைத்தளத்தில் வெளிவந்த ஒரு செய்திதான் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திரும்பியது. “நாங்கள்தான் எச்சரித்திருந்தோமே- எங்கள் வானத்தில் பறக்க வேண்டாமென்று”. இச்செய்தியை பதிவிட்டவர் கீர்கின் என்று கூறப்பட்டது.

சுட்டு வீழ்த்தப்பட்டது ஒரு சிவில் விமானம் என்பதும் அது யுக்ரேய்னின் சிவில் இராணுவ விமானம் அல்ல என்பதும் உறுதியான பின்னர் அப்பதிவு அகற்றப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Sat Jul 19, 2014 10:33 pm

பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைன் வான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.

உக்ரைனில் மலேசிய விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் உள்துறை அமைச்சக ஆலோசகர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அதை கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போராடாய் மறுத்துள்ளார். உக்ரைன் விமானப்படைதான் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.

ஆனால், அதை உக்ரைன் அதிபரின் அலுவலகம் மறுத்துள்ளது. ஏற்கனவே 2 விமானங்களை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள்தான், இதையும் செய்ததாக அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.

விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? என்பதில் உக்ரைன் அரசு–கிளர்ச்சியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டியுள்ளனர். இதற்கிடையே, அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் பெரும்பாலானோர் டச்சு நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

விபத்துக்குள் சிக்கிய விமானத்தில் பயணம் செய்த நாட்டினர் விபரம்; டச்சு - 154 பயணிகள், ஆஸ்திரேலியா - 27 பயணிகள், மலேசியா -23 பயணிகள், இந்தோனேசியா -11 பயணிகள், பிரிட்டன் - 6 பயணிகள், ஜெர்மன் - 4 பயணிகள், பெல்ஜியம் -4 பயணிகள், பிலிப்பைன்ஸ் - 3 பயணிகள், கனடா - ஒரு பயணி, மேலும், 47 பேர் பயணம் செய்துள்ளனர் என்று ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்சம்மவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு இன்று அவசரமாக கூடுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த பாதுகாப்பு கவுன்சில் முன்மொழிந்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by யினியவன் on Sun Jul 20, 2014 1:16 pm

நரேந்திர மோடியின் விமானம் 15 நிமிட வித்தியாசத்தில் அப்பகுதியில் பறந்திருக்க வேண்டும், இச்செய்தி கேட்டு வழி மாற்றபட்டதென சொன்னார்களே - அவர் விமானத்தை தகர்க்க எண்ணி இதை தவறாக தாக்கி இருப்பார்களோ?????

ஒன்றும் சொல்வதற்கில்லை!!!!!avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by ராஜா on Sun Jul 20, 2014 1:20 pm

@யினியவன் wrote:நரேந்திர மோடியின் விமானம் 15 நிமிட வித்தியாசத்தில் அப்பகுதியில் பறந்திருக்க வேண்டும், இச்செய்தி கேட்டு வழி மாற்றபட்டதென சொன்னார்களே - அவர் விமானத்தை தகர்க்க எண்ணி இதை தவறாக தாக்கி இருப்பார்களோ?????

ஒன்றும் சொல்வதற்கில்லை!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1074858இருக்கலாம் இருக்கலாம் , உலக அரசியலை அவ்வளவு சீக்கிரம் நம்மால் புரிந்துகொள்ள இயலாது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 3:47 am

விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஏற்றுக்கொள்ளமுடியாது: டேவிட் கேமரூன் புதினுடன் பேச்சு

கிழக்கு உக்ரைன் வான் எல்லை வழியாக நேற்று முன்தினம் 298 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானம் ரஷிய ஆதரவுப் படையான கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இவ்விமானத்தில் பயணித்த அனைவருமே உடல் கருகி பலியாகினர். இத்தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா ஒரு படி மேலே போய் இத்தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று நேரடியாக குற்றஞ்சாட்டியது. அந்நாட்டு அதிபர் ஒபாமா பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார். இந்நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த கேமரூன், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருப்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார். இதை ரஷ்யா மறுக்க நினைத்தால், பிரிவினைவாதிகள் தாக்குதலில் ஈடுபடவில்லை என்பதற்கான ஆதாரத்தை ரஷ்ய அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதே சமயம் விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அப்பகுதிக்கு வல்லுனர்கள் சென்று வர வழி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரியுள்ளார். பல்வேறு நாடுகளின் நெருக்கடியால் ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 3:51 am


அழுகி சிதறிக்கிடக்கும் பிணங்கள்

நெதர்லாந்து ஆம்ஸ்டர் டாமில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணம் செய்த 298 பேரும் பலியாகினர்.

இந்த விமானத்தை கிழக்கு உக்ரைனில் போராட்டம் நடத்தும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. அதை கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர்.

இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்கு ம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமான உடல்கள் ஆங்காங்கே பல பாகங்களாக சிதறி கிடக்கின்றன. விபத்து நடந்து 2 நாட்களுக்கு மேலாகி விட்டதால் அவை அழுகி துர்நாற்றம் வீசுகின்றன.

சில உடல்கள் ரத்தம் மற்றும் சதையுடன் உடைந்த விமான பாகங்களுடன் ஒட்டிக் கிடக்கின்றன. விமானம் விழுந்து கிடக்கும் பகுதியில் ரத்தம் உறைந்து கிடக்கின்றது. இந்த தகவலை கிளர்ச்சியார்களின் தலைவர் இகோர் கிர்கின் தங்களது ருஸ்கயா வெஸ்னா இணைய தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரும் பலியாகி உள்ளார். அவரது பெயர் ஸ்ரீசிடி அமிரா. 83 வயதான இவர், பிரதமர் நஜிப்பின் பாட்டி ஆவார்.

இந்தோனேசியாவை சேர்ந்த இவர் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட புறப்பட்டு சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த தகவலை மலேசிய ராணுவ மந்திரி ஹிஷா முதீன் உசேன் உறுதிப்படுத்தியுள்ளார்.

விபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 6 எய்ட்ஸ் நோய் நிபுணர்கள் பலியானதாக தகவல் வெளியாகி இருந்தன. தற்போது நிபுணர்கள் 100 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

298 பேர் பலியான சோகம் ஒரு புறம் இருக்க விபத்து நடந்த இடத்தில் இறந்தவர்களின் உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் சூட்கேஸ்கள், காமிராக்கள், பாஸ் போர்ட்டுகள் மற்றும் பணம் உள்ளிட்ட அனைத்தும் மாயமாகிவிட்டன. அவற்றை அப்பகுதி மக்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:21 am

பலியானவர்களின் உடல்கள் கடத்தல்!

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பலியானவர்களின் உடல்களை பழங்குடியினர் மர்ம இடத்திற்கு கடத்தி சென்றுவிட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் ஒன்று கடந்த 17ஆம் தேதி ரஷ்ய எல்லை பகுதி அருகே உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வீழ்த்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் 15 விமான ஊழியர்கள் உட்பட பயணம் செய்த அனைவரும் பலியாகி விட்டனர். அவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், உக்ரைனின் அவசர சேவை பிரிவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த பகுதியில் உள்ள பழங்குடியின பிரிவினர் அங்கிருந்த 196 உடல்களை அங்கிருந்து எடுத்து சென்று விட்டனர் என தெரிவித்துள்ளார்.

லாரி ஒன்றில் விமான விபத்து நடந்த சம்பவத்திற்கு வந்த அவர்கள் அனைத்து உடல்களையும் எடுத்து கொண்டு சென்றுள்ளனர். இன்று அங்கு சென்று பார்க்கையில், ஒரு உடல் கூட கிடைக்கவில்லை.

உடல்களை ஆயுதம் ஏந்திய பழங்குடியினரிடம் ஒப்படைக்கும்படி அவசர சேவை பணியாளர்கள் நிர்ப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் உடல்களை பழங்குடியினரிடம் கொடுத்து விட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உடல்களை பழங்குடியினர் எங்கு கொண்டு சென்று உள்ளனர் என்பது குறித்து அரசுக்கு திட்டவட்டமாக தெரியவில்லை என்று உக்ரைன் நாட்டு செய்தி தொடர்பாளர் நடாலியா பைஸ்ட்ரோ கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:26 am

எம்எச்17 பேரிடர்: 298 பயணிகளின் பட்டியலை வெளியிட்டது மாஸ்!

கோலாலம்பூர், ஜூலை 20 – கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமானத்தில் பயணம் செய்த மொத்த பயணிகளின் (விமானப் பணியாளர்கள் உட்பட) பட்டியலை மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது.

இவர்களில் விமானப் பணியாளர்கள் உட்பட 43 பேர் மலேசியர்கள் ஆகும்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:28 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:29 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:29 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:30 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:30 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:30 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:31 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by சிவா on Mon Jul 21, 2014 4:31 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum