ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

View previous topic View next topic Go down

6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:17 pm



பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 6 வயது பள்ளிக் குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நகரின் பல்வேறு இடங்களில், கற்பழித்த கயவர்கள் மீது நடவடிக்கை கோரி, பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு நகரில் உள்ள விப்ஜியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது குழந்தையை, பள்ளி ஊழியர்கள் சிலரே கற்பழித்துள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும் பள்ளி முன் பெற்றோர்கள் குவிந்தனர். கூட்டம் திரளாக வந்ததை பார்த்து அச்சம் அடைந்த பள்ளி நிர்வாகம் அவசர அவசரமாக பள்ளி கதவுகளை பூட்டியது. இதையடுத்து, ஆத்திரம் அடைந்த பெற்றோர், கதவுகளை உடைத்துக் கொண்டு பள்ளி உள்ளே புகுந்து, நிர்வாகத்தினரை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், 'சில நாட்களுக்கு முன் இந்த கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதை, நிர்வாகம் மறைத்து, குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது,' என்று புகார் கூறினர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்துள்ளதாகவும் பெற்றோர்கள் கூறினர்.

கற்பழிப்பு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பள்ளி நிறுவனர் ருஸ்தம் கேரவல்லா, 'துரதிஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களை தூக்கிலிட வேண்டும். நாங்கள் விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம், குற்றவாளிகளை அடையாளம் காண, சிசி டிவி காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம். குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்வதாக இல்லை. இந்த விஷயத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்,' என்றார்.

பெங்களூரு நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறுகையில், 'கற்பழிப்பு சம்பவம் பள்ளி வளாகத்திற்குள் தான் நடந்துள்ளது. போலீஸ் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று போலீஸ் கருதுகிறது,' என்றார்.

இந்நிலையில், நகரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள், தங்கள் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் பள்ளி நிர்வாகத்திற்கு பொறுப்பில்லை என்று கோரும் ஒரு விண்ணப்பத்தில், பெற்றோர் கையெழுத்திட வேண்டும் என வற்புறுத்தின. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளிகளின் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், ஒட்டு மொத்த பெங்களூரு நகரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Jul 17, 2014 4:26 pm

இந்த பிசாசுகளை நடு ரோட்டில் வைத்து காறி துப்பி வெட்ட வேண்டியதை வெட்டி, பின்னர் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

Post by ஈகரையன் on Thu Jul 17, 2014 4:29 pm

மீடியாக்கள் எங்க போச்சு ?

இது போன்ற ஆட்களை வெளிச்சமிட்டு காட்டவேண்டும். பிக்பாக்கெட் ஜாக்கிரதை என்று போட்டோ ஒட்டி ரயில்வே ஸ்டேஷனில் ஒட்டுவதை விட்டு இது போன்றோர்களின் போட்டோ ஒட்ட வேண்டும்.

ஈனப் பிறவிகள் எதிர்ப்பு 
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

Post by ayyasamy ram on Thu Jul 17, 2014 7:59 pm

அநியாயம் அநியாயம் 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

Post by சிவா on Mon Jul 21, 2014 3:53 am

பெங்களூரில் சிறுமியை கற்பழித்த காமுகனின் லேப்-டாப்பில் சிறுமிகள் கற்பழிப்பு வீடியோ

பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் கடந்த திங்களன்று அடையாளம் தெரியாத நபர் 6 வயது மாணவியை கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டு கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று பெங்களூர் நகர காவல் ஆணையரை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். நிலைமை மேலும் மேலும் சிக்கிலாவதை உணர்ந்த போலீசார் மாணவியை கற்பழித்த ஸ்கேட்டிங் பயிற்சியாளரான முஸ்தபா என்ற முன்னாவை கைது செய்தனர். பீகாரை சேர்ந்த 32 வயதான முன்னா கடந்த 20 வருடங்களாக அப்பள்ளியில் வேலை செய்து வருவதாக பெங்களூர் போலீஸ் கமிஷனரான ராகவேந்திர ஆராட்கர் கூறினார்.

அவனிடமிருந்து லேப்-டாப் மற்றும் மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அவையிரண்டிலும் ஆபாச படங்கள் காணப்பட்டதாகவும், குறிப்பாக லேப்-டாப்பில் இண்டர்நெட்டில் டவுன்லோடு செய்யப்பட்ட பள்ளிக்குழந்தைகள் கற்பழிக்கப்படும் காட்சிகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுமியை முன்னா தான் கற்பழித்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் அவனை எடுத்து விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

Post by விமந்தனி on Mon Jul 21, 2014 1:11 pm



avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

Post by அருண் on Mon Jul 21, 2014 1:59 pm

இந்த கயவனை அடித்தே கொள்ள வேண்டும்.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

Post by ayyasamy ram on Mon Jul 21, 2014 2:07 pm

அநியாயம் அநியாயம் 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

Post by சிவா on Tue Jul 22, 2014 2:36 am

6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்

பெங்களூர்: பெங்களூர் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் முஸ்தப்பா அதே பள்ளியில் படிக்கும் மேலும் 4 சிறுமிகளை பலாத்காரம் செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு முன் பணிபுரிந்த பள்ளியிலும் சிறுமிகளிடம் அத்துமீறி நடந்த அவன் சிறுமிகளை புகைப்படம் எடுப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது முஸ்தப்பாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் பள்ளி சீருடை அணிந்த குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது போன்ற ஏராளமான காட்சிகளும் பதிவாகியிருப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மாத சம்பளமாக ரூ.18,000 பெரும் முஸ்தப்பா விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்கள் என ஏராளமான பொருட்களை வாங்கி குவித்திருப்பதால் குழந்தைகளை வன்கொடுமை செய்து ஆபாச படம் எடுக்கும் கும்பலுடன் அவனுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சம்பவம் நடந்த பள்ளி முன்பு பாரதிய ஜனதாவின் மாணவர் அணி ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை தாண்டி பள்ளி வளாகத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனால் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டினர். பலாத்கார சம்பவத்தில் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளதால் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூடத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்வது மட்டும் தீர்வாகாது எனக் கூறியுள்ள அவர்கள் பள்ளி நிர்வாகிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

Post by ஜாஹீதாபானு on Tue Jul 22, 2014 1:42 pm

இவர்களையெல்லாம் ஓட விட்டு கொளுத்தனும் கோபம் 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: 6 வயது பள்ளிக்குழந்தை கற்பழிப்பு: பற்றி எரிகிறது பெங்களூரு நகரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum