ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள்

View previous topic View next topic Go down

சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரூ.825 கோடியில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள்

Post by சிவா on Wed Jul 16, 2014 4:20 am


சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மானியக் கோரிக்கை தொடங்கியது.

அப்போது, முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அவர் கூறியதாவது:–

வீட்டு வசதி

வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் நகர்மயம் ஆக்கல் ஆகியவற்றினை கருத்தில் கொண்டு, மக்களின் மகிழ்வான, வளமான, நலமான வாழ்க்கைக்கு வேண்டிய அத்தியாவசியத் தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படும் வீட்டு வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி, சாலை வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பிலும்; தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பிலும்; பல்வேறு குடியிருப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு, ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மக்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

குடிசைகள் அற்ற நகரங்கள்

1. திருச்சி மாவட்டம், நாவல்பட்டில், திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலை இணையும் பகுதியில் அமைந்துள்ள 68.82 ஏக்கர் நிலப்பரப்பில், 20 கோடியே 53 லட்சம் ரூபாய் செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய 1,360 பல்வேறு வகை மனைகள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக 690 மனைகளும், மத்திய வருவாய் பிரிவினருக்காக 475 மனைகளும், உயர் வருவாய் பிரிவினருக்காக 195 மனைகளும் உருவாக்கப்படும்.

2. தொலைநோக்குத் திட்டம்–2023–ஐ நிறைவேற்றும் முகத்தான், மைய மற்றும் மாநில அரசுகளின் குடிசைப்பகுதிகள் அற்ற நகரங்கள் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை மற்றும் இதர நகரங்களில் 825 கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில், மைய அரசின் பங்கு 50 சதவீதமும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமும், பயனாளிகளின் பங்கு வீட்டு கட்டுமான செலவில் மட்டும் 10 சதவீதமும் இருக்கும். கடந்த ஆண்டு எனது உத்தரவின்படி கட்டிடப்பரப்பு 397 சதுர அடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது கட்டப்பட உள்ள குடியிருப்பின் கட்டுமானப் பரப்பு 400 சதுர அடியாக இருக்கும். மேலும், மின் விசிறிகள், மின் விளக்குகள் ஆகியவை பொருத்திக் கொடுக்கப்படும். இதுதவிர, அடிப்படை வசதிகளான சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் வினியோகம், கழிவுநீர் அகற்று அமைப்புகள் மற்றும் சமூக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

534 அடுக்குமாடி குடியிருப்பு

3. 1972–ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தினால் நொச்சிக்குப்பம் பகுதியில் கட்டப்பட்ட 534 குடியிருப்புகள் மிகவும் சிதிலமடைந்து இருப்பதாகவும், அவற்றை மீண்டும் கட்டித்தருமாறும் அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர்களின் கோரிக்கையினை ஏற்று, நொச்சிக்குப்பம் திட்டப்பகுதியில் 534 அடுக்குமாடிக் குடியிருப்புகளை 48 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் மாநில நிதியுதவியின் கீழ் கட்ட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒவ்வொரு குடியிருப்பும், 400 சதுர அடி கட்டிட பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, பால்கனி, குளியலறை, கழிப்பறை வசதிகளுடன், மின்சார விசிறி மற்றும் மின்சார விளக்குகள் ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.

இக்குடியிருப்புகளுக்கு தெரு மின் விளக்குகள், குழாய் மூலம் குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்று வசதிகள் அமைக்கப்படும். நியாய விலைக் கடைகள், பாலர் பள்ளிகள் போன்ற சமூக உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். கடலோரப் பகுதிகளுக்கான ஒழுங்குமுறை விதிகளின் படி ஒப்புதல், கலங்கரை விளக்க ஆணைக் குழுவின் ஒப்புதல் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ஒப்புதல் ஆகியவை பெறப்பட்ட பின் இந்த குடியிருப்புகள் கட்டப்படும்.

விரிவடைந்த குடும்பங்களுக்கு

இக்குடியிருப்புகளில் வாழும் குடும்பங்கள் தங்களது விரிவாக்கப்பட்ட குடும்பங்களுக்கும் குடியிருப்புகள் கோரியதால் இக்குடியிருப்புகளை மீண்டும் கட்டும் பணிகளை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ள இயலவில்லை.

இந்த குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்ற குடும்பங்களுக்கு மட்டும் இந்த பகுதியில் கட்டப்பட உள்ள புதிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு அளிக்கப்படும். இவர்களது விரிவடைந்த குடும்பங்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கம் திட்டப் பகுதியில் குடியிருப்புகள் வழங்கப்படும்.

புராதன நகரங்கள்

4. மாநிலத்தின் செழுமையான பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்க இதுகாறும் 64 நகரங்கள் புராதன நகரங்கள் என அரசால் அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த புராதன நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னர் ஒவ்வொரு புராதன நகரத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான மானியத்தொகை 2012–2013–ம் ஆண்டில் 1 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 64 புராதன நகரங்களில் 60 புராதன நகரங்களுக்கு இதுகாறும் 16 கோடியே 82 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள புராதன நகரங்களான திருப்பரங்குன்றம், திருவட்டாறு, சுசீந்திரம் மற்றும் கொடுமுடி ஆகிய நகரங்களில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக தலா ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல், திருமுருகன்பூண்டி, கழுகுமலை, சுவாமிமலை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திருப்புனவாசல் மற்றும் திருபுவனம் ஆகிய 6 நகரங்கள் புராதன நகரங்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். மொத்தத்தில், இந்த 10 நகரங்களுக்கும் 10 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தன்னிறைவு பெற்ற குடியிருப்பு பகுதி

5. சென்னை பெருநகரப் பகுதிக்கான முதலாம் முழுமைத் திட்டத்தில் மறைமலைநகர் புதுநகர் திட்டம் ஒரு புதிய நகரமாக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் உருவாக்கப்பட்டு, 1,915 ஏக்கர் பரப்பளவில் பல கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. மறைமலை நகரைச் சுற்றியுள்ள பகுதியில் பெருகி வரும் வீட்டு மனைத் தேவையைக் கருத்தில் கொண்டு, கடம்பூர் கிராமத்தில் உள்ள 222 ஏக்கர் நிலப்பரப்பை அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தன்னிறைவு பெற்ற குடியிருப்பு பகுதியாக மாற்றி அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்திட்டத்தின் கீழ், திறந்த வெளியிடம், பொது உபயோகப் பகுதிகள் மற்றும் சாலைப் பகுதிகளுடன் கூடிய உயர் தர வருவாய் பிரிவு, நடுத்தர வருவாய் பிரிவு, குறைந்த வருவாய் பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த வருவாய் பிரிவு ஆகியோருக்கான குடியிருப்பு மனைகள் உருவாக்கப்படும். கடம்பூர் கிராமத்தில் 58 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு பெரிய ஏரியை நீர் நிலையாகவே நிலை நிறுத்தி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொழுதுபோக்கு வசதிகளை அபிவிருத்தி செய்து, சுற்றுச்சூழல் சமன்படுத்தப்படும்.

8 மாடி கட்டிடம்

6. கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 63 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் பல அடுக்குமாடி அலுவலக கட்டிடம் கட்டப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கட்டிடம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 840 சதுர அடி பரப்பளவில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 3 அடித்தளங்கள், தொகுப்பு, 8 மாடிகளைக் கொண்ட கட்டிடமாக அமையும். சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்கு இந்த கட்டிடம் பயன்படும்.

சுரங்க நடைபாதைகள்

7. சென்னைப் பெருநகரப் பகுதியில் போக்குவரத்து அமைப்பினை மேம்படுத்தி நீடித்த நிலையான கட்டமைப்பினை அமைக்க உலக வங்கி நிதி உதவியுடன், மூன்றாம் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெருகி வரும் வாகன போக்குவரத்தினால் பல்லாயிரக்கணக்கான பாதசாரிகள் சாலையினை பாதுகாப்பாகவும், எளிதாகவும் கடக்க, மேற்கண்ட ஆய்வில் பல சுரங்க நடைபாதைகள் தேவை என கண்டறியப்பட்டது. அவ்வாறு கண்டறியப்பட்ட சுரங்க நடைபாதைகளில், காமராஜ் சாலையில் காந்தி சிலை அருகில்; புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் கோவில் தெரு; அயனாவரம்–கொன்னூர் நெடுஞ்சாலை; வடபழனி என்.எஸ்.கே. சாலை; கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி சாலை; அரும்பாக்கம் உள்வட்டச் சாலையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் அருகில்; ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஆலந்தூர் என மொத்தம் 7 இடங்களில் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சுரங்க நடைபாதைகள், அடிப்படை கட்டமைப்பு நிதி அளிப்புடன் சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளுடன் கலந்தாலோசித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் முன்னுரிமை அடிப்படையில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.

வேளச்சேரியில் அலுவலக வளாகம்

8. இரண்டாவது பெருந்திரள் துரித ரெயில் திட்டம், இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் தென்னக ரெயில்வேயின் பெருநகர போக்குவரத்து ரெயில் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டது. 2–வது பெருந்திரள் துரித ரெயில் திட்டத்தில், மந்தைவெளி, கிரீன்வேஸ் ரோடு, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி மற்றும் வேளச்சேரி ஆகிய 9 ரெயில் நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும், முடிக்கப்பட வேண்டிய சில இறுதிப் பணிகளுடன் இயங்கி வருகின்றன. இந்த திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கும் போதே, தமிழக அரசானது 2–வது பெருந்திரள் துரித ரெயில் திட்டத்தில் அமைந்துள்ள ரெயில் நிலையங்களின் மேல் உள்ள திறந்த வெளியினை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த திட்டம் தீட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உரிய கலந்தாய்வாளர்களையும், கட்டிடக்கலை வல்லுநர்களையும், வணிக கட்டிடங்களை திட்டமிடுவதற்காக நியமித்தது. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் கலை நுணுக்கத்துடன் மேலும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட பிரத்யேக வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் கொண்ட வணிக வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி துரித ரெயில் நிலையத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள வணிகப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஒப்பந்த ஆவணங்கள் உள்ளடக்கிய விரிவான சாத்தியக்கூறு அறிக்கை கலந்தாலோசகர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், வேளச்சேரி ரெயில் நிலையத்தின் மேல் அலுவலக வளாகம் அமைப்பதற்கான, சாத்தியக்கூறு இருப்பதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின்படி, வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையத்தின் மேல் 1 லட்சத்து 11 ஆயிரம் சதுர அடி பரப்பில், 2 தளம் கொண்ட அலுவலக வளாகம் சுமார் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது தலைமையிலான இந்த அரசின் நடவடிக்கைகள் மூலம், அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதி, அரசு அலுவலகங்களின் அலுவலக வசதி மற்றும் போக்குவரத்து வசதிக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

தினத்தந்தி

[note]தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் இந்த வீடுகளைத் தாராளமாக வாங்கலாம் [/note]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum