ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா on Sat Feb 21, 2009 11:07 am

ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?
இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன!

அது சரி, உங்களிடம் ஒரு சின்ன கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் ஸ்வீட் என்றால் இனிப்பு என்று தெரியும். இனிப்பு தெரியும் என்றால் இனிப்பை உங்களால் காட்ட முடியுமா?

சர்க்கரையை காட்டுவீர்கள்.. அதன் பெயர் சர்க்கரைதான்! லட்டை காட்டினால் அதன் பெயர் லட்டுதான்!

பின்பு இனிப்பு ஏங்கே?

இந்த சின்ன கேள்விக்கே பதில் இல்லை இது அன்றாடம் நம் வாழ்வில் அனுபவிக்கும் ஒன்று, நீங்கள் தினம் தினம் உணரும் அனுபவம் அனைவரும் ஒப்புக் கொண்ட அனுபவம்! ஆனால் யாருக்கும் காட்ட முடியாத ஒன்று!

இப்படித்தான் இந்த பேய் என்ற சொல்லும்கூட!

சற்று மேலே தலைப்பை பாருங்கள்! அந்த கேள்விக்குறியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள்.. அதுவும் ஒருபேய் ஆடுவதைப்போலத்தான் தெரியும். (மிரண்டவன் கண்ணுக்கு) அது போகட்டும்!

பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லையே! என சிலர்... பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் என ஒரு சிலர்!

சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?

மனிதர்களைப் போன்று சாதி,மதம், இன வேறுபாடு இவற்றிற்கு உண்டா? எனக்கும் தெரியாது... ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!

ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைததுக்கொள் ளுங்களேன்! அங்கே பூiஜக்கு வரும் அனைவரும் ஆடுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு பல பெயர்களும் உண்டு அதை அவர்கள் வாயால் உச்சரிக்கும்போது,

ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்!

என்னை யாருன்னு நினைச்சடா? நான் ஆத்தா...

யாராலும் அடக்க முடியாத சங்கிலி கருப்பன்டா நான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா on Sat Feb 21, 2009 11:07 am

இதைத்தவிர,

மாரியாத்தா, காளியாத்தா, பச்சையம்மா, சுடலை மாடன், சவுடம்மா, தொட்டம்மா, காட்டேரி, ரத்தக் காட்டேரி, பில்லலு காட்டேரி இப்படி பல பல பெயர் களைக்கூறி ஆடுவதைப் பார்த்திருக்கிறோம்.

இந்த ஆட்டங்களின் போது, சிலர் மற்றவர்களுக்கு நடந்த, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சித்தரிக்கின்றனர். (ஓரிரு வரிகள் மட்டும்). அதை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு சம்மதமாக தோன்றும் போது சரியாகிவிடுகிறது. அதாவது கடந்த காலத்தை அப்படியே புட்டு புட்டு வைக்கிறார்கள் என கூறுகிறோம்.

சிலர் ஆட்டங்களின்போது, மற்றவர்களை அதிகப்படியாய் துன்புறுத்து வதைப் பார்க்கிறோம். குறிப்பாக பளார் என அறைவது, ஹும்.. பேசாதே! நான் சொல்வதைச் செய் எனக்கூறி.. வேப்பிலை வைத்து ஆடுவதையும், சில நேரங்களில் தன்னைத்தானே வருத்திக் கொள்வதையும் கீறிக்கொள்வதையும், கத்திகையில் ஏந்திக்கொண்டு ஆடுவதையும் கண்டிருக்கிறோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், சிலர் ஆடும்போது நன்மை ஏற்படுகிறது, சிலர் ஆடும்போது தீமை (காயம்) ஏற்படுகிறது.
இதை வைத்தே மக்கள் நல்ல பேய், கெட்ட பேய் என வகைப்படுத்த ஆரம்பிக்கின்றனர்.

இந்த நம்பிக்கையில்.. ஆதிவாசியி லிருந்து அல்ட்ரா மாடர்ன் மனிதன் வரை அடக்கம். இங்கே கல்விக்கு, பணத்திற்கு, பட்டத்திற்கு, நாட்டிற்கு, வீட்டிற்கு, ஜாதிக்கு மதத்திற்கு என்று வித்தியாசம் கிடையாது.எல்லா மதங்களிலும் இந்த பேய் அல்லது ஆவி போன்றவற்றின் ஆதிக்கம் அதிக அளவில் ஆளுகை செய்கிறது.

கிறித்தவ மதத்தில், கோயில்களில் ஆராதனை நடக்கும்போதே சில பெண்கள் உளர ஆரம்பித்துவிடுவார்கள்.அவர்களை கட்டுப்படுத்த தண்ணீர் தெளித்து- ஜெபித்து அடக்குவதைப் பார்த்திருக்கிறோம்.இதை அசுத்த ஆவி என்கின்றனர்.

முஸ்லீம் நண்பர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தொழுகை செய்யும் பள்ளியிலோ, அல்லது வேறு கூடும் இடங்களிலோ அவர்களுக்கு இதுபோன்று ஆவி வந்து ஆடுவது கிடையாது. ஆனா லும் சில பெண்கள் அல்லது ஆண்கள் வழக்கத்திற்கு மாறாக சேஷடைகள் செய்தால் அவைகளும் அவர்கள் இமாம் அல்லது அசரத் என்ற குருக்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் ஊதி கட்டுப்படுத்துகிறார்கள் (வாய் மூலம் ஊதி அல்லது ஓதி) நல்ல ஆவியை நல்ல ஜானி என்றும், கெட்ட ஆவியை கெட்ட ஜானி என்றும் இவர்கள் அழைக்கிறார்கள்.

ஆக, மொத்தத்தில் அனைத்து மதத்தினரும் பேய், அசுத்த ஆவி அல்லது ஜானி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்..
-இது நடைமுறை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா on Sat Feb 21, 2009 11:07 am

கெட்ட ஆவி என்று ஒன்று இருந்தால் நல்ல ஆவி என்று இருக்க வேண்டுமல்லவா?

அது எங்கே இருக்கிறது? இது நமது பகுத்தறிவைப் பயன்படுத்தி இந்தக் கேள்வியைக் கேட்டால் தெரியும்! எங்கே? சற்றே சிந்தியுங்கள் பார்க்கலாம்!

கெட்ட ஆவியை படிக்க சுடு காட்டுக்குப் போகவேண்டும் என்றால், நல்ல ஆவியை பிடிக்க வாழும் நாட்டுக்குள் வரவேண்டும்.
சுடுகாட்டில் கிடைப்பது இறந்தவர் சடலம். வாழும் நாட்டில் கிடைப்பது ஜாவிப்பவரின் உடல்.

இப்போது இவற்றின் வித்தியாசம் என்ன என்று சற்றே உள்நோக்கு வோமா?

இறந்தவர் உடலின் உள்ளேயும், கண் மூக்கு, வாய், இதயம், நுரையீரல், வயிறு, கை, கால் போன்றவை இருக்கிறது
ஜாவனுடன் இருப்பவரின் உட லிலும் அதே கண், மூக்கு, வாய், இதயம், நுரையீரல், வயிறு, கை, கால் போன்றவை இருக்கிறது.
இவற்றில் என்ன இல்லை? என்பதுதான் கேள்வி!
அசைவு இல்லை, சலனம் இல்லை.

துடிப்பு இல்லை, நடிப்பும் இல்லை.

ஊக்கமும் இல்லை, ஆக்கமும் இல்லை.

மொத்தத்தில் எதுவும் இல்லை.

அப்படியெனில் இந்நாள் வரை இத்துணை இயக்கங் களையும், நடத்தல், மூச்சு விடுதல், பேசுதல், படுத்தல், இச்சை அல்லது அனிச்சை செயல்கள்- போன்றவற்றை செயல்படுத்த நமது உடலில் எங்கும் வியாபித்திருக்கும் ஆவி ஒன்று இருந் திருக்க வேண்டும் ! அதுதான் ஜாவ ஆவி அல்லது நல்ல ஆவி அல்லது பரிசுத்த ஆவி!
இந்த ஆவி நல்ல விதமான ஆரோக்கியமாக செயல்பட்டு வந்தால் நமக்கு உதவும் ஆவிதான்.

இது நமக்கு எதிராக அல்லது வித்தியாசமாக அல்லது வழக்கத்திற்கு மாறாக செயல்படும்போது அது கெட்ட ஆவி, வேண்டாத ஆவி, அச்சுறுத்தும் ஆவி (இறுதியில் பேய்) என பெயர் பெறுகிறது.
இந்த நல்ல ஆவியின் ஆரோக்கிய நிலை சீர் கெட்டுப்போனால், .... கெட்டுப்போய்விடுகிறது? எதினால் சீர் கெடுகிறது?..

பல நோயினால் இருக்கலாம்!

பல சந்தேகங்களினால் இருக்கலாம்!

பல சூழ்நிலைகளினால் இருக்கலாம் அல்லவா?

உங்கள் மனம் இதற்கு என்ன சொல்கிறது? இது வெறும் அறிவுப்பூர்வமான கேள்வி மட்டும்தானே! இந்த விளக்கம் நல்ல ஆவிக்கும் கெட்ட ஆவிக்கும்; உள்ள வித்தியாசத்தை மட்டுமே தரும் (தத்துவம்)
ஆக, மொத்தம் ஒவ்வோர் உடலிலும் ஆவி ஒன்று (ஜாவ ஆவி) உலாவிக் கொண்டிருக்கிறது. உயிருள்ள வரையில் என்பது தெரிகிறது.

நமது வாழ்க்கை நிகழ்ச்சிகளை, நாம் மறக்க சில காலம் தேவைப்படுகிறது. அதுவரை இறந்தவர்களின் நினைவு வருகிறது. அவ்வளவுதான்.

மாறாக, சிலர் ஒருநாள், நான் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு இருந்தேன். அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தூக்குப்போட்டு இறந்து போனாள் அதன் பிறகு இரவில் தினமும் ச்சல்..ச்சல் என்ற சத்தம் வருகிறது.. அஹாஹா.. என சிரிப்பது, வா..வா.. என அழைப்பது போன்ற ஒலியை கேட்டேன் எனவும் கூறுகின்றனர்.

காரணம், அந்த வீட்டில் போய் படுக்கும்போதே, ஏற்கனவே ஒரு பெண் தூக்குப்போட்டு இறந்தது ஞாபகத்தில் இருக்கும். ஒருவர் மறந்து தூங்கினாலும் அவரின் ஆழ்மனதில் உள்ளே மறைந்து ஒளிந்திருக்கும் பய, அபய குரல் கத்தின கத்து, கூக்குரல் போன்றவை மீண்டும் முன் சுயநினைவுக்கு வந்து, கனவில் தோன்றி.. பாடாய் படுத்திவிடும். இதைத்தான் பேய் வந்து கூப்பிட்டது என்று கூறுகிறோம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா on Sat Feb 21, 2009 11:08 am

சற்று மாறாக, யோசித்துப் பார்ப்போமா?

கனவில் வந்தது ஓர் அழகிய பெண், வெள்ளை சேலை உடுத்தி தலை முடியை நீண்ட தூரமாய் பறக்கவிட்டு, உங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பதைப் போல கனவு கண்டாலோ அல்லது பகல் கனவில் திளைத்துப்போனாலோ- அதை பேய் என்று கூறாமல் மோகினி என்று கூறுகிறார்கள்.

இன்னும் கிராமப்புறங்களில் பெண்கள் ஆடினால் பேய் என்றும், ஆண்கள் ஆடினால் முனீஸ்வரன் என்றும், ரத்த வாந்தி எடுத்தால் காட்டேரி என்றும், அதிகளவி மாதவிலக்குத் தோன்றினால் ரத்தக் காட்டேரி என்றும், ஒருவன் தன் மனைவியை விட்டு மாறிமாறி மற்ற பெண்களுடன் அதிகளவு தொடர்பு கொண்டுவந்தால் மோகினி பிசாசு என்றும், கருச்சிதைவு ஏற்பட்டால் பில்லலு காட்டேரி பிடித்திருக்கிறது என்றும், நீல நிறமாக மாறும் குழந்
தைகள் அல்லது பெரியவர்களாய் இருப்பின் நாகாத்தம்மா, நாகராஜா போன்ற பேய் பிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இயற்கையான மரணத்திற்குப் பிறகு யாரும் பேயாக உலவுவதாக கூறுவதில்லை. ஆனால் துர்மரணம், அகால மரணம், தூக்கு, நீரில் மூழ்கி இறத்தல், கழுத்தை நெரித்து அல்லது அறுத்து, குத்தி, அடித்து கொலை செய்தல், தற்கொலை செய்துகொள்ளல்,
மண்ணெண்ணெய், பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லுதல், ரயில் தண்ட வாளங்களில் தற்கொலை, விஷ மருந்து சாப்பிட்டு இறத்தல் போன்ற பல்வேறு யுக்திகளை கையாளுகிறவர்கள் இறந்த பின்னர் மட்டுமே பேய் பிசாசு போன்ற பேச்சே வருகிறது. காரணம், பயத்தால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக அலைக் கழிக்கப்படுகின்றனர். நிஜத்தில் பேய் என்று ஒன்றும் இல்லை.
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பார்கள்.

மனம் பயந்து போனால் பேயுமாகலாம்! இதனால்தான் மிரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்று!

-ஒரு பெண் கோயிலுக்குச் சென்றவுடன் ஆடு வதைக்கண்டால்.. அவளுக்கு கற்ர ஆராதனை காட்டி அடக்குவது வழக்கம். காரணம் கற்ரத்தில் உள்ள காம்பா என்ற ரசாயனப் பொருள் அவளின் மூளை செல்லை தூண்டிவிட்டு, பின்பு சரிசெய்கிறது. இது வெறும் ஹிஸ்டீரியா என்று சொல்லப்படுகிற நிலை மட்டுமே!

இந்த ஹிஸ்டீரியா, ரத்த சோகை உள்ள ஆண்- பெண் இருவருக்கும் வரலாம். ஆனால் பெண்களுக்கு அதிகம். ரத்தப் போக்கு என்பது மாதவிலக்கின்போது வெளியாகும். அளவு அதிகமானால் பேய் பிடித்து ஆடுபவர்கள் போல செய்யலாம். அல்லது உளறுவது அல்லது அதிக கோபப்படுவது அல்லது பொருட்களை தூக்கி எறிவது அல்லது தன் குழந்தையைகூட அளவுக்கு மீறி அடிப்பது போன்றவை தோன்றலாம்.

மன விரக்தியினால், கணவனை இழந்ததினால், அல்லது நெருங்கிய உறவினர்கள் இறந்ததினால், நண்பர்களின் மரணம், அல்லது காதல் தோல்வி போன்றவற்றுக்குப் பிறகும் ஏற்படலாம். இவற்றுக்கு எல்லாம் தீர்வு உண்டு. இது விஞ்ஞான காலம்- அஞ்ஞானத்துக்கு இடம் கொடுக்காமல்- மெய்ஞானத்தை அறிந்து கொள்ளல் அவசியம்.

அடுத்து சிலர் குறி சொல்கிறார்களே, நான் தஞ்சாவூரிலிருந்து வருகிறேன், ஆனால் வேலூர் பாலாற்றங்கரையிலே இதைப் பற்றி கரெக்டாக சொல்கிறார்களே எப்படி எனக் கேட்கலாம்!

சிலருக்கு சற்றே ஈ எஸ். பி. மைண்ட் உள்ளது எனக் கூறுகிறார்கள். இதற்கு எக்ஸ்ட்ரா சென்சேஷன் பர்செப்ஷன் என்று பெயர்.
பொதுவாக குறி கேட்க வருபவர்கள் ஒரே வகையான மனோநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குறியில் நம்பிக்கை உடையவர்கள் தாம்.

குறி சொல்பவர்கள் அடுக்கடுக்காக கூறும்பல அறிகுறிகளில் இவர்களுக்கு சரியாக உள்ளதை இவர்களே டிக் அடித்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.சாமி ஆடுதல் என்பது அதிகளவு உணர்ச்சி வசப்படுதல் மட்டுமே! அது வேறுவேறு நிலைகளில் அமைகிறது.

சிலர் பயங்கரமாக மற்றவர்களை அடிப்பது, கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுவது, அழிக்கும் நோக்கத்துடன் ஆடுபவர்களை கேரளாவில் உள்ள சொட்டாணிக்காரா என்ற இடத்திலுள்ள பகவதி கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கேயுள்ள சுவற்றில் பேய் பிடித்தவரின் கைகளை வைத்து ஆணி அடித்து விடுவது வழக்கம். பின்பு அவர்கள் தெளீவு பெறுவதும்- பேய் விட்டுவிட்டது என்றும் கூறுகின்றனர்.

இது முள்ளை முள்ளால் எடுக்கும் வித்தை-எனக்கூறலாம். அழிக்கும் குண முடைய பேயை ஒரு சடன் ஷாக்ட்ரிட்மெண்ட் கொடுப்பதன் மூலம் (ஆணி அடித்தல்) வேகமான மென்டல் வைப்ரே ஷன்ஸ் உண்டாகிற சரிசெய்வது ஆகும்.

ஒரு பெண், மூன்று முறை சரியாக மூன்றாம் மாதத்தில் கருச்சிதைவுக்கு ஆளாகிறாள் என்றால், அவளுக்கு பில்லலு காட்டேரி பிடித்திருக்கு- அதை ஓட்டினல்தான் கருதரிக்கும் என்று கூறுவது மடத்தனம்.

மூன்று முறை தொடர்ந்து அபார்ஷன் ஆனால் அது தொடர் அபார்ஷன் என்று பெயர். தைராய்டு போன்ற சுரப்பிகள் மற்றும் ஒவேரியன் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாத பட்சத்தில் இதுபோன்ற கருச்சிதைவு தோன்றுவது வழக்கம்.

சரியான காரணத்தை கண்டறிந்து மருத்துவம் செய்தால், பில்லலு காட்டேரி ஓடியே போய்விடும்!

மாதவிலக்கின்போது பெண்களுக்கு சில சமயம் கட்டுப்படுத்த முடியாத அளவு உதிரப்போக்கு தோன்றுமாயின் அது கர்ப்பப்பை கட்டியின் காரணமாகவோ, நீர்ம கட்டியின் காரணமாகவோ இருக்கலாமே தவிர, ரத்தக்காட்டேரிதான் காரணம் என எப்படி சொல்ல முடியும்.

குழந்தை பிறந்தவுடன் பெண்களின் உடம்பில் 75% சக்தி உடனடியாக குறைந்துவிடுகிறது. அது சில மாதங்களில் படிப்படியாக தேற்றப்படுகிறது. இந்த நிலையில் அவள் மனம் (கணவனால்- உறவினரால்- மாமனார்-மாமியார் போன்றவர்களால்) நல்ல மகிழ்ச்சியான நிலையில் இல்லாமல் இருக்குமானால் அந்நேரங்களில் ஹிஸ்டீரியா போன்ற அறிகுறிகள் தோன்றும்.

அப்போது நான் எங்கே இருக்கேன்! நீ யார்? என்று கணவனைப் பார்த்துக் கேட்பது போன்றவை தோன்றும். இதை பெர்ப்பியூரல்மேனியா என்றே கூறுகிறார்கள்.

இப்படி பெண்களின் வாழ்க்கையில் பல கால கட்டங்களில் இவர்கள் ரத்தத்தை இழந்து, ஹிஸ்டீரியா போன்ற நிலைக்கு தள்ளப்படுவதினால், பெண்களுக்கு மட்டுமே பேய் பிடிக்கிறது என்ற பட்டப் பெயரையும் கொடுத்துவிடுகிறார்கள். (ஆண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள்)

சில ஆண்கள் குழந்தைகளை அடிப்பதும், உதைப்பதும் (கண்டிப்பு என்ற பெயரில்) கட்டி வைத்து அடிப்பதும்கூட ஆண் ஹிஸ்டீரியாதான்.

மனைவியின் ரத்தத்தை ஊசியில் இழுத்து, பிராந்தியில் குடித்ததாக ஆண்களின் கதைகளைப் படிக்கிறோம். இது ஆண் பேயில்லையா?
பேய் வாங்கி பிசாசுகிட்டே கொடுத்தேன் என்பார்கள். அப்படியானால் பேயை பிடித்துக் கொண்டு வருபவர்கள் யார்?

இனியாவது பெண்கள் பேய் பிடித்து ஆடுகிறார்கள் என்று சொல்லாமல் அவர்கள் ஆடுவதற்கான உண்மையான காரணத்தை அறிந்து அவர்களுக்கு உதவி செய்வோமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by rasan on Wed Mar 25, 2009 4:57 pm

supperrrrrrrrrrrr sivaaaaaaaaaaaaaa

rasan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 39
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Tamilzhan on Wed Mar 25, 2009 5:13 pm

நன்றிகள் சிவா.....பேய் இல்லைனு ஒரு கருத்தை சொல்லி இப்படி பேய் ஆட்டிங்களே...!!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா on Wed Mar 25, 2009 5:16 pm

உங்களுக்கு தினமும் பேய் ஓட்ட வீட்டில் மந்திரவாதி(மனைவி) இருக்கிறார்களா? இனிமேல்தான் தேடவேண்டுமா?

பார்த்தால் இன்னும் இல்லையென்றே தோன்றுகிறது, ஏன்னா இன்னும் ரொம்ப சந்தோஷமாவே இருக்கீங்களே?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Tamilzhan on Wed Mar 25, 2009 5:38 pm

@சிவா wrote:உங்களுக்கு தினமும் பேய் ஓட்ட வீட்டில் மந்திரவாதி(மனைவி) இருக்கிறார்களா? இனிமேல்தான் தேடவேண்டுமா?

பார்த்தால் இன்னும் இல்லையென்றே தோன்றுகிறது, ஏன்னா இன்னும் ரொம்ப சந்தோஷமாவே இருக்கீங்களே?
ஏன் இவ்வளவு வ்ருத்தமா கேட்கிறிங்க.? உங்களுக்கு ஆயிடுச்சா.?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா on Wed Mar 25, 2009 6:21 pm

அந்த சோகக்கதையை ஏன் ஞாபகப்படுத்தறீங்க!
சரி சரி அடுத்த டாபிக் என்ன?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by sankareeswaran on Thu Apr 09, 2009 1:02 pm

பேய் என்பது உண்மையா பொய்யா இது ஆராய்சிக்குட்ப்பட்ட செய்தி. ஆனால் என்னை பொருத்தமட்டிலும் இது உண்மையே... தேவுடியாவாக இருந்தாலும் நரு ரோட்டில் அழைத்தால் நான் பத்தினி, உத்தமி, தொட்டால் எரியும் என்ரெல்லாம்..சரி சாமியாடினால் மற்றவர்கள் மதிப்பார்கள்.. இதை சமுக அந்தஸ்தாக கருதியும், வய்ய என்னியவர்கலையும் பழி திர்ப்பதாகவே வைத்துக்கொள்வோம்..!

ஆனால் பேய்யாடிய பெண் நிலை தெரியுமா.. அப்படி இருந்தும் ஆடினால் என்ன காரனம்..? வேண்டும் என் ஆடுகிரார்கலோ.. இல்லை.. இல்லை இதில் நிறைய அனுபவம் உண்டு.. இது ஒரு உனர்வு...செக்ஸ்க்கும் நீன்ட தொடர்பு உண்டு.. 1000 ஏன் 1008 விங்ஙானம் ஒன்ரும் செய்ய இயலவில்லை... ஒரு உடுக்கை சத்தத்தில் அட்க்கி ஒடுக்க முடியும்.. என்ன நம்பிக்கை இல்லையா.. சரி... பேய் பிடித்தவர்கலை கொண்டு வாருங்கள்.. நான் குனப்படுத்துகிரேன்.. இது சத்தியம்.. பொய் சாமி எது உண்மையான் சாமி எது என நான் சொல்கிரேன்.. நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்லவே.. என்னை தொடர்பு கொல்ல 0162310890 (அ) sankareeswaran@gmail.com

sankareeswaran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Tamilzhan on Thu Apr 09, 2009 2:41 pm

நல்லதிரி..போட்டுஉள்ளீகள்..சங்கரன்.!

எனக்கு பொய்யான் சாமி எது என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா..?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by sankareeswaran on Thu Apr 09, 2009 2:56 pm

வணக்கம். நல்ல வினா எழுப்ப பட்டுள்ளது..! நான் தான் சாமி என ஆட்டம் ஆடுவது, கணவன் தன்னையோ (அ) தன் ஆலோசனையோ கேட்க்காத‌ பட்சத்தில் நான் தான்டா என ஏகவசனத்தில் பேசுவதும், இஸ்டத்திக்கு குதிப்பதும். தன்னை தாங்கி பிடிக்க நபர் இருக்கும் பட்சத்தில் துல்லி குதித்து ஆடுவதும்... குரிப்பாக குழுவாக நேர்திகடன் செலுதும் போது.. அவர் ஆட மாட்டார்கள் ஒருவர் ஆட்டம் ஆரம்பித்தால் போதும்.. ஒரு கூட்டமே ஆட ஆரம்பிக்கும். இன்னும் சிலரோ நினைத்த இடத்திலும் ஆடுவர்..அவர்கள் நெருங்கியவராக இருப்பி கேட்டு பாருங்கள்.. அவர் முறையான பதில் தரமாட்டார்.. அது ஒன்ரே சாட்சி..

sankareeswaran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Tamilzhan on Thu Apr 09, 2009 3:17 pm

நல்ல விளக்கம்...நண்பரே..!!
அப்போ பேய் இருப்பது உண்மையா? அதைபிடித்த வரை எப்படி ஓட்டுவீர்கள்...?

பேய் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது..!!!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by sankareeswaran on Thu Apr 09, 2009 4:03 pm

எனக்கு நம்பிக்கையில்லை.. ஒரு நல்ல வார்த்தை... சொன்னதை சொல்லும் பூம்.. பூம் மாடு.. அப்படி இல்லாமல் எதுவும் நான் ஆர அமர சிந்தித்துதான் செய்வேன் என்கிர எண்ணம் உங்களுக்கு பிளஸ். அனைவரையும் போல் இது மூட நம்பிக்கை என சொல்வது மைனஸ். நான், எனக்கு தெரிந்தாலோ அல்லது புலப்பட்டாலோ தான் நம்புவேன் என கூறும் சில சாரி பல பேர்களில் நீங்கலும் ஒருவர்.. ஆங்கிலம் தெரியாத ஒரு பெண் ஆங்கிலத்தில் பேசுகிரார்..?? தனக்கு அறிமுகம் இல்லாத உரின் பெயரை சொல்கிரால்..? அனைவருக்கும் ஒன்ரே ஒன்ரு மட்டும் தெரிந்து கொல்லுங்கள் ஒடும் நாயைக் கண்டால் விரட்டும் நாய்க்கு தொக்கு என்பார்கள்.. பெண்கள் பய்ந்த சுபாவம் உடையவர்கள்... உடல் அமைப்பிலும் நிறைய‌ மாற்றம்... மாதவிடாய்.. உடல் அமைப்பு, அமைதி, பொருமை.. என பல‌. ஆனுக்கு அப்படியல்ல.. எப்போ வயதுக்கு வந்திங்க பதில்?? 'தெரியாது' அதுதான்..சொல்போன நம்புரிங்க.. ஆனா இத நம்ப முடியல..? ஏன்.. ஏன்... நாம் அனைவரும்.. மன்னிக்கவும்.. உங்கலைப் போன்ரோர் சான்றொர், நல்லோர் சொல்லும் ஒரே வார்த்தை 'மூட பழக்கம்' அது இல்லை 'மூலையி பழக்கம்' எனவே சொல்ல‌லாம்.. அதுக்கு உதாரனம் நிறையவே இருக்கு... இது என் அனுபவம் நீங்கள் ஒரு நூலை படிக்கும் போது ஆர்வத்துடன் படித்தால் அது புரியும்.. அதே போல் செயலும் அதுவே.. முதலில் நம்பிக்கை.. பின்புதான் எதார்த்தம்..

sankareeswaran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Tamilzhan on Thu Apr 09, 2009 4:38 pm

பேய் இல்லை என்பதில் உறுதியாக் இருக்கிறேன்..!

பேய் என்று ஒன்று உண்டு என்றால் பெண்களை மட்டும் அதிகம் பிடிப்பது ஏன்..? இது ஒரு வியாதி என்பதே என் அறிவு..! தாங்களின் நிலை என்ன?என்பதே என் கேள்வி..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by sankareeswaran on Thu Apr 09, 2009 5:26 pm

வியாதி என்பது.. வேரு... தான் செய்த தவருக்கு தன்டனை தான் நோய்... பேய் என்பது தேடி வந்து ஒட்டி கொல்வது.. எனக்கு புரிகின்ரது உங்கள் ஆதங்கள்.. நீங்கள் சிரந்த பென்னியல் வாதி என்று... எத்தனையோ செல்போன் நம்பர் இருக்க ஏன் உங்கள் என்னுக்கு போன் செய்தால் உங்கலுக்கும், என்க்கு போன் செய்தால் எனக்கும், பிறர்க்கும் சரியாக செல்கின்ரது.. அது போல்தான்... சில பெண்கள் பலவீனப்பட்டு இருக்கும், பயம், சுத்தமின்மை (தகாத உரவு வைதுவிட்டு வெளியில் நடமாடுதல்..) நாம் அனைவருக்கும் ஒரு உருவம் எனவே நினைக்கின்ரோம்.. அதுவல்ல.. அது தன் உடலை இழந்து விட்டது.. அதன் நோக்கம்.. தன் இரப்பை தெரிவிக்க முயற்சிக்கும்.. குரிப்பாக அது பிடித்து ஆடுபவரின் உடலை அனுபவிக்கின்ரது [இது உடலுரவுக்கு சமமானது]. ஆனால் இதுவும் ஒரு உடல் சம்மந்தப்பட்டவை... நீங்கல் சொல்லுவது போல் நோய் என்ரால் மருத்துவ சோதனை செய்யும் போதெ பிரச்சினை தெரிந்து விடும் அல்லவா.. ஆனால் மருத்துவரும் கையை விரித்து விடுவார்.. இவ்வளவு ஏன்.. நீங்கள் உடல் நலம் இல்லாத போது உங்கலால் சிறிது துரம் ஓட முடியுமா..?? அல்லது காதை பொத்தாமல் 10 முறை சுத்தத்தான் முடியுமா..?? இன்னும் இன்னும் பல.. பல சொல்ல முடியாத,, வெளிப்படையாக சொல்ல‌ முடியாத விஷாயம் நிறைய.... நோய் வலியை யாராக இருந்தாலும் உனர்வார்கள்.. ஆனால் பேய் பிடித்தவர்கள் பார்திருக்கிரீர்களா.. யாராவது.. ஒரு பெண்ணை( நன்கு அறிமுகமான‌) சாதாரனமாக, அதாவது அவர்கலுக்கு தெரியாமல் முடியை வக்கென இழுத்து பாரும்...???? அப்போது உனர்வீர்கள்.. பிளஸ் (மற்றும்) மைனஸ், பகல் (ம) இரவு, ஏலை (ம) பண்க்காரன், மேடு (ம) பள்ளம், ஆண் (ம) பெண், இன்னும் ஏராளம்..அம்மாவாசை (ம) பவுர்னமி, நல்லது [ம] கெட்டது, இப்படி பட்ட உலகம்.. கடவுல் என் நம்புவொர் இதையும் நம்பத்தான் வேண்டும்...

sankareeswaran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Tamilzhan on Thu Apr 09, 2009 5:57 pm

உங்களுக்கு ஜோதிடத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர் என நினைக்கிறேன்..!

சில நோய்களை மருந்தால் குணப்படுத்த முடியது அப்போது மணத்தத்துவமே பயன்படும்.அதுப்போல சந்தர்பங்களில் மருத்துவர் கைவிருப்பது உண்டு.

மலம் என்கிறோம்..! சந்தனம் என்று சொன்னால் பூசிக்கொள்ள முடியாது. உதாரனம் மேலே சிவாவின் கட்டுரையே போதும் என நினைக்கிறேன்.
மலம் என்ற வார்த்தை தவறு என்று தோன்றினால் மன்னிக்கவும்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by sankareeswaran on Thu Apr 09, 2009 6:14 pm

இன்னும் விளக்கம் தேவை.. மனோதத்துவ நிபுனர்கலாலும் கைவிடப்பட்டவை நிரையவே... சந்தனம், மலம் இயற்கைய்.. ஆனால் பேய் என்பது..? இதை நீங்கள் கொள்லாத வரை சந்தோஸமே.. ஒரு நாளில் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்ரு.. அதில் எனக்கு நிரயவே தெரியும்

sankareeswaran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Tamilzhan on Thu Apr 09, 2009 6:37 pm

மனதிருப்தியே மனோத்தத்துவம் என்று சொல்லலாம் அது மருத்துவர்,கோயில்கள்,தர்கா,ஆலயம் போன்று செல்வதால் சரி ஆகலாம்.

ஆனால் மந்திரிப்பது ,தன்னைதானே வருத்திக்கொள்வது,சாமியார்கள் காலில் விழுவது போல் மூடபலக்கங்களிலிருந்து விடுபடவேண்டும் என்பதே நமது நோக்கம்.
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by sankareeswaran on Thu Apr 09, 2009 6:55 pm

மீண்டும்... மீண்டும்.. உங்கள் மணம் சொல்லுவதெல்லாம்.. பழைமவாதம்.. மூட நம்பிக்கை.. என தெரிகின்றது... மற்ற மதத்தை பத்தி எனக்கு நிறையத் தெரியாது.. அதே நேரம்.. வெருப்பும் கிடையாது... அவர் அவர் பணியாற்றும் போது.. ஆனால் இந்து மதத்தில் என்க்கு மிகுந்த நாட்டமுண்டு.. இ(ரு)ந்து வந்த மதமே.. இந்து மதம்.. அனைவரிடமும் உள்ள உள்ளம்.. அனைத்தும் மூட பழக்கம்.. என என்னுவது அதே சமயம் பொருள் தேட முற்படுவது.. அதற்க்கான முயற்ச்சி தோல்வி அடையும் போது... தன் இயலாமையை 'மூட பழக்க வழக்கம்' என முத்திரை குத்துவது... நண்பரே உமக்கு ஒரு செய்தி... நீங்கள் பதில் தந்து கொண்டிக்கும் வரை.. திம்பவும் விளக்கம் வரும்..நண்றி.. நான் சொல்வதை ஏற்காத வரை மகிழ்ச்சியே.. ஒரு நாள் வரும்.. தெரிந்து கொள்ள.. அது பட்டறிவாகவே இருக்கும்

sankareeswaran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Tamilzhan on Thu Apr 09, 2009 7:42 pm

நன்றிகள்...சங்கரன்

ஏதோ சாபம் இடுவதுபோல் உள்ளது உங்கள் பதில்..!
நல்லது உண்டாக ஆண்டவன் துனைஇருக்கட்டும்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by sankareeswaran on Thu Apr 09, 2009 7:45 pm

no friends i won't do this forever.. its my opinion... no body cant supper by this... its my boldness..

sankareeswaran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா on Thu Apr 09, 2009 11:26 pm

நல்ல வாதம் மற்றும் விவாதம். "இருக்கு ஆனா இல்லை" அந்த கதைதான் இதுவும்.

நம் கண்முன்னே இருப்பதை மட்டுமே நம்புவோம். காற்று கண்ணுக்கு தெரிவதில்லை, ஆனால் உணர முடிகிறது.

அதுபோல் தான் இந்த ஆவிகள் சமாச்சாரமும். சிலர் தன்னால் ஆவிகளை காண முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் படித்தவர்கள் யாரும் ஆவிகளை பார்த்ததாக கூறவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by sankareeswaran on Fri Apr 10, 2009 7:12 am

ஆம் நண்பரே, உங்கள் கருத்துக்கு மிக்க நண்றி. நீங்களும் ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தியது போல்தான் தெரிகின்ரது... ஆனால் ஒரு பழமொழி ஒன்ரு உண்டு.. படித்தவன் பாட்டை கெடுத்தான்.,எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்பர் அறிவியல் (அ) ஆராய்ச்சி என்பது.. என்ன..? பதில் சொல்ல‌ முடியுமா...? திருடப்பட்டவை (அ) திருத்தப் பட்டவை தான் என்பதை நீருபிக்க முடியும்... இன்னும் விளக்கம் வரும்.. தேவைப்பட்டால்... காரணம்.. உங்களின் மீது உள்ள பரிதாபம்/பாசம் என் மூதாதியர்களின் மீதுள்ள‌ மற்றற்ர பற்று.....

sankareeswaran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by sankareeswaran on Fri Apr 10, 2009 7:57 am

"ஏதோ சாபம் இடுவதுபோல் உள்ளது உங்கள் பதில்..!" நான் என்ன முனிவன் அல்லவே... மற்றொன்ரு சாபமிட்டால் அதற்க்கு பரிகாரம் சொல்ல வேண்டுமே.. சாபம்... பாவம் எனக்கு... உங்கலுக்காக சின்ன கதை... குழந்தையிடம் தாய் சொன்னாலாம்... "இது நெருப்பு.. கை வைத்தால் சுட்டுவிடும்" என‌... ஆனால் குழந்தை நினைத்தது.. அது உன்மை என்ரால் அம்மா நெருப்பில் சமைக்கிறாள், அப்பா நெருப்பை வாயில் [சிக்ரெட் பத்தவைக்க] வைக்கிரார்.. ஆனால் ஒன்ருமே ஆகவில்லை ஆனால் என்னை மட்டும் எதர்க்கோ தடுக்கிரார் எனவும் என்னதான் இருக்கின்றது என நினைத்து கையை நெருப்பில் விட்டது அதன் விளைவு... கையெல்லாம் புண் அதன் பின்குதான் மிகப்பெரிய விளைவே ஆரம்மித்தது.. என்ன... குழந்தைக்கு 'சிவப்பு' என்ராலே காளைமாடு போல் மிரன்டது... நியதி : நான் 'உங்களுக்கு' சொன்ன பட்டரிவு என்பது 'குழந்தையாக' அல்ல‌ கதையின் நியதி.. உல்னோக்கம் உங்கலுக்கு பேய் பிடித்தால்தான் என்பது அல்ல...'பென் பேய் பிடித்து ஆடும்போது' நேரில் பார்த்ததுன்டா...

sankareeswaran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum