புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
56 Posts - 46%
heezulia
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%
prajai
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சந்தேகம்! Poll_c10சந்தேகம்! Poll_m10சந்தேகம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 8:00 pm

பாலாவுக்கும் லதாவுக்கும் கல்யாணம் ஆகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஐந்து ஆண்டுகளாக பிசினஸ் செய்கிறான் பாலா. முதல் இரண்டு ஆண்டுகள், லாபகரமாக இயங்கிய, அவனது தொழில், கல்யாணத்திற்குப் பின், நஷ்டத்தை நோக்கி சரிய ஆரம்பித்தது. இதற்கு காரணம், அவனது நிர்வாக முடிவுகள் தான் என்றாலும், அவன் அடிக்கடி சொல்வது, அவன் மனைவி வந்த நேரம் என்று!
இன்று, காலையிலேயே ஆரம்பித்து விட்டான்...

''எந்த நேரத்துல உன்ன கல்யாணம் செய்தேனோ, அன்னயிலிருந்து என்னோட வாழ்க்கைதரமே, இறங்க ஆரம்பிச்சிடுச்சு. நம்ம பொண்ணு வந்த நேரம், அத விட மோசமாயிடுச்சு,'' என்றான்.

''குழந்தைய குறை சொல்லாதீங்க. நீங்க எடுக்ற முடிவு தான், உங்க தொழில் நஷ்டத்துக்கு காரணம். கல்யாணத்தப்பவே உங்க நண்பர், 'மார்க்கெட் டல்லாயிடுச்சு; பிசினச விட்டுட்டு, வேற வேலைக்கு போ'ன்னு சொன்னாருல்ல... கேட்டீங்களா? நானும், கல்யாணம் ஆனதிலிருந்தே பிசினச விடுங்கன்னு சொல்றேன். கேட்டா தானே,''என்றாள்.

''திறமையானவன், தோல்விய பாத்து துவண்டுட மாட்டான்; அத எப்படி சரி செய்யணும்ன்னு தான் சிந்திப்பான்.''
''முதல்ல நஷ்டத்த நிறுத்தப் பாருங்க; இல்லன்னா, பிசினச இழுத்து மூடிட்டு, ஒரு நல்ல கம்பெனியா பாத்து, வேலைக்கு போகப் பாருங்க; நீங்க தாமதிக்கிற, ஒவ்வொரு நாளும் நஷ்டம் தான்.''

''வாய மூடுடி; ஐடியா கேட்டா, பிசினசயா மூடச் சொல்ற.... இத ஆரம்பிக்க, நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன். எல்லாம் கல்யாணம் வரைக்கும் நல்லா தான் போனது. நீ வந்த நேரம் தான், எனக்கு நஷ்டம் ஆரம்பிச்சிடுச்சு. இவ்வளவு பேசுறேயே... என் தொழில் நல்ல நிலைக்கு வர்ற வரைக்கும் நீ வேலைக்கு போக வேண்டியது தானே!''

''நான் வேலைக்குப் போகத் தயார். ஆனா, ஒரு கண்டிஷன்... உங்க தொழில்ல மூணு மாசத்தில லாபத்த நீங்க பாக்கலன்னா, நீங்க இத இழுத்து மூடிட்டு, வேலைக்குப் போகணும். இதுக்கு சரின்னா, நான் வேலைக்கு போறேன்,'' என்றாள்.

''சரி,'' என்றான்.
எண்ணி பன்னிரெண்டாவது நாள், லதாவிற்கு அவள் தோழி மூலமாக, நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால், இரண்டு மாதங்களாகியும் பாலாவுடைய தொழிலில் முன்னேற்றம் இல்லாததால், அவனும், ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான். மனைவியோட சம்பளத்தை விட, தனக்கு சம்பளம் அதிகம் இல்லை என்பதில், அவனுக்கு பெரிய ஏமாற்றம்.

அலுவலகத்தில், லதாவை அவளுடைய பாஸ் இன்டர்காமில் கூப்பிட்டார். பரபரப்புடன் பாஸ் அறைக்குள் நுழைந்த லதாவிடம், ''வாழ்த்துகள் லதா; உங்களுக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு... அதுக்கு காரணம். உங்க திறமை; அதோட நீங்க வந்த நேரம், நம்ம கம்பெனியோட லாபம் அதிகரிச்சிருக்கு,''என்றார்.
''தேங்ஸ் சார்,'' என்றாள் மகிழ்ச்சியுடன்.

''அப்பறம் இன்னொரு விஷயம் லதா... நம்ம கம்பெனியில புதுசா, ஒரு, 'புராஜெக்ட்' செய்யப் போகிறோம். அது முடியுற வரை, நீங்க இந்தக் கம்பெனியில இருப்பீங்கன்னு, ஒரு ஒப்பந்தத்தில, கையெழுத்துப் போட்டு உறுதி செய்யணும். 'புராஜெக்ட்' முடிய, ஒரு வருஷம் ஆகும். அதுக்குள்ள நீங்க வேலைய விட்டா, ஐந்து லட்சம் ரூபாய் கட்டணும். ஏன்னா, இந்த, 'புராஜெக்டு'க்காக, நீங்க பல ஊர்கள், ஏன் வெளிநாட்டுக்கு கூட போக வேண்டி இருக்கும். உங்களுக்காக கம்பெனி நிறைய முதலீடு செய்ய இருக்கிறதாலே இந்த நிபந்தனை. உங்களுக்கு, சம்மதம்ன்னா ஒப்பந்தத்துல கையெழுத்து போடுங்க; அதற்கு முன், உங்க கணவர்கிட்ட இதப் பத்தி சொல்லி, அவரோட அனுமதிய வாங்கிக்கங்க,'' என்றார்.

இரவு இதைப்பற்றி கணவனிடம் பேசினாள் லதா.
''வெரிகுட் ஆபர்... ஏத்துக்கோ, சம்பளம் எவ்வளவு ஏறும்?''

''தெரியலங்க. ஆனா, இப்ப வாங்குறத விட டபுள் மடங்கு அதிகமாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்,'' என்றாள்.
தன்னை விட அதிகம் சம்பாதிக்கப் போகிறாளே என்ற வருத்தம் மனதிற்குள் இருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், ''நீ என்னை விட அதிகம் சம்பாதிக்க போவத நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு. எனக்கு பிசினஸ்ல ஏற்பட்ட நஷ்டத்த ஈடு செய்ய, இத நீ ஏத்துக்கறது தான் நல்லது,'' என்றான் பாலா.

அலுவலக இன்டர்காமில், லதாவை அழைத்த ரிசப்ஷனிஸ்ட், அவளைப் பார்க்க, ஒரு பெண்மணி வந்திருப்பதாக கூறினாள். யாராக இருக்கும் என்ற யோசனையில் வெளியே வந்த லதா, அங்கு அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து, ''யாருமா நீ? உனக்கு என்ன வேணும்?'' என்று கேட்டாள்.

''அம்மா...நான் உங்க ஆபீசில வேலை செய்கிற பியூன் மணியோட சம்சாரம். அவர் வீட்டுக்கு பணம் தந்து, பல மாசமாச்சு. வாங்குற சம்பளத்த குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்குறார். பிள்ளைங்க வயிறார சாப்பிட்டு பல நாட்களாச்சு; இங்க வேலை செய்யற ஒருத்தர் தான் உங்கள பாத்து இதச் சொல்ல சொன்னார். நீங்க தான் முதலாளி கிட்ட சொல்லி, என் வீட்டுக்காரர் சம்பளத்த, என்கிட்ட கொடுக்க ஏற்பாடு செய்யணும்,'' என்றாள் கண்ணீருடன்.

''சரிம்மா கவலப்படாதீங்க; நான் முதலாளிகிட்ட, இதப் பத்தி பேசறேன்.'' என்றாள் லதா.
''ரொம்ப நன்றிங்கம்மா.''

முதலாளி வந்ததும், பியூன் மணியின் மனைவி சொன்னதைக் கூறினாள் லதா.
''நீங்க, அவன் கிட்ட பேசிப் பாருங்க; அடுத்த மாசத்திலிருந்து, சம்பளத்த அவன் மனைவி கையில் தான் கொடுப்பேன்னு சொல்லுங்க... என்ன சொல்றான்னு பாப்போம்,'' என்றார்.

பியூன் மணியை வரவழைத்த லதா, ''மணி, உங்க பெர்சனல் விஷயத்துல தலையிடுறேன்னு நினைக்காதீங்க. உங்க மனைவி சொன்னத நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்க உங்க சம்பள பணத்த வீட்டில கொடுக்கறது இல்லன்னு புகார் சொன்னாங்க. இனிமே, நீங்க சம்பளத்த உங்க வீட்ல கொடுக்கலேன்னா, நாங்களே அவங்க கிட்ட கொடுக்க வேண்டியிருக்கும்,'' என்றாள்.
''மேடம் இது என் தனிப்பட்ட விஷயம்; இதுல நீங்க தலையிடறத நான் விரும்பல!''

''தலையிடறது தப்பு தான். ஆனா, ஒரு பெண்ணா, இன்னொரு பெண் கஷ்டப்படறத பாத்து, என்னால சும்மா இருக்க முடியாது.''
''இப்ப என்ன சொல்ல வர்றீங்க?''
''சம்பள பணத்த ஒழுங்கா வீட்டில கொடுக்கணும்.''
''மேடம், நீங்க தேவையில்லாம, என் விஷயத்துல தலையிடறீங்க...''
''உங்க மனைவி கொடுத்த புகார் மீது தான் பேசுறேன். உங்க மனைவி, போலீஸ் ஸ்டேஷன் போனாங்கன்னா, உங்களுக்கு தான் பிரச்னை. அதனால, நல்லபடியா போயிடுங்க,''என்றாள்.

''என்ன மேடம் மிரட்டுறீங்களா... உங்களால் முடிஞ்சத செய்யுங்க; என்ன வேலைய விட்டு தூக்குவீங்களா, அதையும் பாப்போம்.''
''இனி உங்கிட்ட பேசி பிரயோஜனமில்ல. நான், உங்க சம்பள பணத்தை, உங்க மனைவியிடமே கொடுக்க ஏற்பாடு செய்றேன்.''
''மேடம்... அப்படி ஏதாவது நடந்துச்சுனா, நீங்க பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்,'' என்றான் மிரட்டும் தொனியில். அவன் மிரட்டலை கண்டு கொள்ளவில்லை லதா.

லதாவை இன்டர்காமில் அழைத்த பாஸ், ''லதா... என் பொண்ணுக்கு, நாளைக்கு பிறந்த நாள்; அவளுக்கு, ஒரு மோதிரம், 'செலக்ட்' செய்யணும். எனக்காக, ஒரு அஞ்சு நிமிஷம் செலவழிக்க முடியுமா?'' என்று கேட்டார்.
''சார்... எனக்கு கூட ஒரு மோதிரம் வாங்கணும், என் கணவருக்காக. அப்படியே உங்க பொண்ணுக்கும், 'செலக்ட்' செய்தா போச்சு,'' என்றாள் லதா.

அலுவலகம் முடிந்து மாலையில் இருவரும் ஒன்றாக காரில் நகைக்கடைக்கு சென்றனர்.
இருவரும் காரில் ஒன்றாக நகைக்கடைக்கு போனதையும், மோதிரம் வாங்கியதையும் முதலாளியின் கார் டிரைவர், பியூன் மணிக்கு சொல்ல, அவனுக்கு அல்வா சாப்பிட்டது போல் இருந்தது.

'இது போதும்டா, இன்னிக்கு இது தான் தலைப்பு செய்தி...' என்று, மனதுக்குள் ஆனந்தப்பட்டவன், மறுநாள் அலுவலகத்தில், கண், காது, மூக்கு வைத்து, பாஸ் - லதா பற்றிய வதந்தியை கிளப்பி விட்டான். அத்துடன், லதாவின் கணவருக்கு போன் செய்தான்...
''சார்... நீங்க லதா மேடத்தோட கணவர் தானே... நான் சொல்றத கோபப்படாம கேளுங்க சார். உங்க மனைவியும், எங்க முதலாளியும், ரொம்ப நெருக்கமா பழகுறாங்கன்னு ஆபீஸ்ல எல்லாரும் பேசிக்கிறாங்க. அதனால தான், உங்க மனைவிக்கு, ஒரு வருஷத்திலேயே பதவி உயர்வுன்னும் சொல்றாங்க. நேத்திக்கு கூட, எங்க முதலாளி, உங்க மனைவிக்கு நகைக் கடையில, ஒரு மோதிரம் வாங்கிக் கொடுத்தார்,'' என்று, வத்தி வச்சான்.


தொடரும் ..................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 8:02 pm

இரவு லதா வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான் பாலா. மனதில் குழப்பத்தோடும், முகத்தில் கோபத்தோடும் இருந்தான்.
லதா வீட்டிற்குள் நுழைந்தவுடன், ''நேற்று நகைக் கடைக்கு போனியா?''என்று கேட்டான்.
''ஆமாம், போனேன்.''
''எதுக்குப் போனே?''

''அத இன்னிக்கு சொல்ல மாட்டேன்,''
''விளையாடாத... நான் ரொம்ப சீரியசா பேசுறேன்.''
குலுங்கி குலுங்கி, சிரித்தாள் லதா.
''என்னங்க இது... நகைக் கடைக்கு, எதுக்கு போவாங்க நகை வாங்கத்தான்.''
''போதும் உன் கிண்டல்... யாரோட போன?''
''என்ன... உங்க கேள்வி, வேற மாதிரி போகுது.''
''உன்ன, யார் கூடவோ பாத்ததா சொன்னாங்க... அதான் கேட்டேன். சரி அங்க நீ என்ன வாங்கின?''
''மோதிரம்!''

''நீ வாங்கினியா... இல்ல பரிசா கொடுத்தாங்களா?''
''என்னங்க... ஏதோ தப்பா பேசற மாதிரி தெரியுது.''
''நான் கேட்ட கேள்விக்கு, பதில் சொல்லு!''
''நீங்க ரொம்ப தப்பா பேசறீங்க. உங்க பிறந்த நாளைக்கு, 'சர்ப்ரைஸ் கிப்டா' இருக்கட்டுமேன்னு ஒரு மோதிரம் வாங்க நினைச்சேன். அது தப்பா?''
''சரி மோதிரம் வாங்கினதுக்கு ரசீது இருக்கா?''
''இல்ல; எதுக்கு ரசீது?''
''ஏன், ரசீது வாங்கலயா?''
''வாங்கினார்.''
''யாரு?''

''என் பாஸ். அவர் பொண்னோட பிறந்த நாளுக்கு ஒரு மோதிரம் வாங்கினார். அவர் கிரெடிட் கார்டில், இரண்டு மோதிரத்திற்கும் பணம் கொடுத்தார். அப்புறம் என்னிடமிருந்து கேஷா வாங்கிக்கிட்டார். அவர் கிரெடிட் கார்டில் வாங்கினதுனால, ஒரே ரசீதா போட்டு கொடுத்தாங்க; அத, அவரே எடுத்துக்கிட்டார்.''
''இத நான் எப்படி நம்புறது!''
'இது தான் உண்மை. நீங்க நம்பறதுக்காக, நான் ஒண்ணும் செய்ய முடியாது. ஆமா... இதெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது?''

''அது உனக்கு தேவையில்லாத ஒண்ணு. இனி, நீ வேலைக்கு போக வேணாம்.''
''ஏன் திடீர்ன்னு இப்படி சொல்றீங்க?''
''உங்க ஆபீஸ்ல, உன்னையும், உன் முதலாளி பத்தியும், கிசுகிசுக்குறாங்க தெரியுமா?''
''அப்படியா! உங்களுக்கு யார் சொன்னாங்க.''
''அது தேவையில்ல.''

''அப்போ... யார் என்ன சொன்னாலும், நீங்க நம்பிடுவீங்களா? அது பொய்யா, மெய்யான்னு ஆராய மாட்டீங்க... எவனோ ஊர் பேர் தெரியாதவன் சொல்றதக் கேட்டு, நீங்க என்ன விசாரிக்கிறது, எனக்கு அவமானமா இருக்கு. நீங்க என்ன புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா...''
''அதெல்லாம் பேசாதே... நீ வேலைய விட முடியுமா, முடியாதா?''
''எதுக்கு வேலைய விடணும் காரணத்த சொல்லுங்க.''
''ஊரு வாய மூட.''

''இந்த காரணத்த, நான் ஒத்துக்க மாட்டேன். இப்ப நம்ம குடும்பம் இருக்குற சூழ்நிலையில, நான் வேலைய விட முடியாது. அதற்கு முக்கியக் காரணம், உங்க சம்பளத்த மட்டும் வச்சு குடும்பத்த நடத்த முடியாது. அதுக்கும் மேல இப்ப நான் வேலைய விட்டா, என் கம்பெனிக்கு அஞ்சு லட்சம் கட்ட வேண்டி வரும். அது உங்ககிட்ட இருக்கா.''

''கடன் வாங்கி கொடுப்போம்; மானத்த விட, கடன் வாங்குறது மேல்.''
''என் மானம் என் கிட்டதான் இருக்கு. நீங்க சந்தேகப்படுறதுக்காக, நான் வேலைய விட முடியாது.''
''உனக்கு, அவன் கூட இருக்கணும். அதுக்கு என்னென்னவோ காரணம் சொல்ற.''

''வாயை மூடுங்க, நீங்க பேசறத கேட்கவே, அசிங்கமா இருக்கு. படிச்சவரான நீங்க, இப்படி நடப்பீங்கன்னு, நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல. இப்பவே நான், என் அம்மா வீட்டிற்கு போறேன்.''
''போ... எல்லாம் சம்பாதிக்கிற திமிர். உங்க வீட்டுல போய் சொல்லு. வேலையை விடச் சொன்னார், நான் விடல, அதனால வந்துட்டேன்னு.''

''அதுக்கு முன்னாடி நீங்க என்ன சந்தேகப்பட்டு கேட்ட, அந்த அசிங்கமான வார்த்தைகளையும் சொல்வேன். அதைக்கேட்டு, இப்படி ஒரு ஆளுக்கு மனைவியா இருக்கறத விட, தனியா இருக்கறது மேல்ன்னு, சொல்வாங்க. குட் பை.''

அறைக் கதவை தட்டி உள்ளே நுழைந்த பியூன் மணி, ''அம்மா... என் குழந்தைக்கு உடம்பு முடியாம ஆஸ்பத்திரியில சேத்துருக்கோம். டாக்டர் என்னென்னமோ சொல்றார். உடனே ஆபரேஷன் செய்யணுங்கிறார். முதலாளி கிட்ட பணம் கேட்டேன். நான் வீட்டில சரியா பணம் கொடுக்கறதில்லன்னு என்ன நம்ப மாட்டேங்குறார். நீங்க தான் எடுத்து சொல்லி, என் குழந்தைய காப்பாத்தணும்,'' என்று கதறி அழுதான்.

''எந்த ஆஸ்பத்திரி... வாங்க போகலாம்,'' என்று கூறிய லதா, அவனுடன் கிளம்பி, மருத்துவமனைக்கு சென்றாள்.
மருத்துவமனையில் டாக்டரைப் பார்த்து பேசிய லதா, ''டாக்டர், இந்தக் குழந்தைக்கு என்ன ஆச்சு,'' என்று கேட்டாள்.
''சுவாசக் குழாயில் சின்ன அடைப்பு. ஒரு சின்ன ஆபரேஷன் செய்தா, சரியாயிடும். 25 ஆயிரம் ரூபா கட்டணும்.''
''கிரெடிட் கார்டு, ஏத்துப்பிங்களா''
''நோ பிராப்ளம்.''
கவுன்டரில் கார்டை கொடுத்து, பணத்தை கட்டினாள்.
'' ரொம்ப நன்றிங்கம்மா.''
''கவலப்படாதீங்க, எல்லாம் நல்ல படியா நடக்கும். இந்தப் பணத்த, நீங்க திரும்பி தர வேணாம்,'' என்றாள் லதா.

''அம்மா, என்ன மன்னிச்சிடுங்க; உங்கள பழி வாங்கணும்ன்னு நினைச்ச எனக்கு, நல்லது செஞ்சு, என்ன மனுஷனா மாத்திட்டீங்க,''என்றான் கண்ணீருடன் பியூன் மணி.

லதா அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றவுடன், லதாவின் கணவன் பாலாவிற்கு போன் செய்தான் மணி...
''சார்... என் பேர் மணி; நான் உங்க மனைவி வேலை பாக்கிற ஆபீஸ்ல, பியூனா இருக்கேன். உங்க மனைவிக்கு, எங்க முதலாளியுடன் தொடர்பு இருக்குன்னு, அன்னிக்கு போன்ல பொய் சொன்னது நான் தான். அப்படி ஒரு புரளிய, எங்க ஆபீஸ்ல கிளப்பி விட்ட பாவியும் நான் தான். நான் என் சம்பளத்த, வீட்டுல கொடுக்காம குடிச்சே செலவழிச்சேன். அத என் மனைவி, உங்க மனைவிகிட்ட புகார் சொன்னதற்காக, உங்க மனைவி என்னை கண்டிச்சாங்க. சம்பளத்தையும், என் மனைவிகிட்டயே நேரடியா கொடுத்துட்டாங்க. அந்தக் கோபத்துல தான், இந்த மாதிரி கீழ்த்தரமா நடந்துக்கிட்டேன்.

''ஆனா, உங்க மனைவிக்கு ஆரம்பத்துலே அதெல்லாம் தெரியாது... ஒரு கட்டத்துல நான் தான் வதந்தி பரப்பினேன்னு அவங்களுக்கு தெரிய வந்திடுச்சு. இருந்தும், அதையெல்லாம் பெரிசுபடுத்தாம, என் குழந்தையோட உயிரையே காப்பாத்திட்டாங்க. கெட்டது செஞ்ச எனக்கு, நல்லது செஞ்சு, என்ன மனுஷனாக்கிட்டாங்க சார். உங்க மனைவி பத்தினி சார். அவங்க மேல அவதூறா பேசின என்ன மன்னிச்சிடுங்க,''என்றான்.

பாலா, ஒரு நிமிடம் சிலையாய் உறைந்தான். தான் லதாவிடம் நடந்து கொண்டதை நினைத்து வருத்தப்பட்டவன், உடனே லதாவிற்கு போன் செய்தான்.

''என்ன மன்னிச்சிடு லதா. இப்ப தான் உங்க ஆபீஸ் மணி போன் செய்து, அவன் சொன்னது பொய்ன்னு சொன்னான். எவனோ ஒருத்தன் சொன்னத வச்சு, நான் உன்னை அப்படி பேசியிருக்க கூடாது.''

''அந்த மணி போன் செய்து சொல்லலன்னா காலா காலத்துக்கும் உங்களுக்கு நான் கெட்டவளாகவே தெரிஞ்சுருப்பேன் இல்ல... ஆனா, நான் உங்கள மன்னிக்க தயாராக இல்ல. நாளைக்கே வேற யாராவது என்னப் பத்தி தப்பா சொன்னா, அதையும் நம்புவீங்க. மனைவிய அனாவசியமா சந்தேகப்படற உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் நம்ம பிரிவு, ஒரு பாடமா இருக்கட்டும். குட் பை.''செய்வதறியாது, நின்றான் பாலா.

என்.பார்த்தசாரதி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 06, 2014 8:12 pm

எவனோ ஒருத்தன் சொன்னத வச்சு, நான் உன்னை அப்படி பேசியிருக்க கூடாது.''
-
காலங்கடந்த ஞானம்...
-
 சந்தேகம்! 3838410834 
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 07, 2014 12:12 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நித்யானந்தி
நித்யானந்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 05/07/2014
http://nithyananthi@gmail.com

Postநித்யானந்தி Mon Jul 07, 2014 12:42 pm

கதை மிகவும் நன்றாக உள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக