ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 3:50 am

First topic message reminder :

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1

ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

    1. சூரியன்
    2. சந்திரன்
    3. செவ்வாய்
    4. புதன்
    5. குரு
    6. சுக்கிரன்
    7. சனி
    8. ராகு
    9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

    1. அஸ்வினி
    2. பரணி
    3. கார்த்திகை
    4. ரோகினி
    5. மிருகசீரிஷம்
    6. திருவாதரை
    7. புனர்ப்பூசம்
    8. பூசம்
    9. ஆயில்யம்
    10. மகம்
    11. பூரம்
    12. உத்திரம்
    13. ஹஸ்தம்
    14. சித்திரை
    15. ஸ்வாதி
    16. விசாகம்
    17. அனுஷம்
    18. கேட்டை
    19. மூலம்
    20. பூராடம்
    21. உத்திராடம்
    22. திருவோணம்
    23. அவிட்டம்
    24. சதயம்
    25. பூரட்டாதி
    26. உத்திரட்டாதி
    27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.

நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:16 am

சரி! நாம் இப்போது இருப்பு தெசையைக் கண்டு பிடிப்போம். அப்போது எல்லாம் விளங்கி விடும்.

மிருக சீரிஷம் நட்சத்திரத்திற்கு ஆரம்ப தெசை செவ்வாய் என்றும் அது 7 வருஷம் என்றும் எழுதி இருந்தோம் அல்லவா.

அதாவது மொத்தம் ஆத்தியந்த பரம நாழிகைக்கு வருஷங்கள் .. 7 ஆகும். அதில் சந்திரன் 4 நாழிகை 14 வினாழிகை கடந்து விட்டது. கடக்க வேண்டியது 53 நழிகை 20 வினாழிகை ஆகும். மீதமுள்ள 53 நழிகை 20 வினாழிகைக்கு எவ்வளவு வருஷங்கள் எனக் கண்டு பிடியுங்கள். நாம் கீழே கண்டு பிடித்துள்ளோம் பாருங்கள்.

57 நாழிகை 34 வினழிகையை நாழிகை ஆக்குங்கள். அது 3424 வினாழிகை வரும். கடக்கவேண்டிய தூரமான 53 நாழிகை 20 வினாழிகையை வினாழிகை ஆக்குங்கள். அது 3200 வினாழிகை வரும்.

(3200 / 3424 ) x 7 = 6 ஆண்டுகள் 06 மாதம் 15 நாட்கள் வரும்.

என்ன புரிந்ததா? திரும்பத்திரும்பப் படியுங்கள். புரியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:16 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 10


சென்ற பாடம் வரை ஜாதகம் எப்படிக் கணிப்பது என்று கற்றுக் கொண்டீர்கள். இனி பலன் எப்படிச் சொல்வது என்று கற்றுக் கொடுக்கப் போகிறோம். 12 வீடுகளையும் 9 கிரகங்களையும் வைத்துச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம். கவனமாகப் படியுங்கள்.

ஜாதகத்தில் "ல" என்று போடப்பட்ட வீடுதான் முதல் வீடு எனப் படும். அதாவது அதுதான் இலக்கினம் எனப்படும். நமது உதாரண ஜாதகத்தில் மகரம் தான் முதல் வீடு ஆகும். அடுத்த வீடு 2-ம் வீடு ஆகும். அதாவது கும்பம் தான் 2-ம் வீடு ஆகும். இப்படியே எண்ணிக் கொண்டு வந்தால் தனுசு தான் 12-ம் வீடு ஆகும். அதாவது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் இலக்கினத்தை முதல் வீடாகக் கொண்டு எண்ண வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் சில காரகத்துவம் உண்டு. அவைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பலன் சொல்ல முடியும்.

முதல் வீடு : இதை வைத்து ஜாதகருடைய நிறம், உருவம், உயரம், குணாதிசயங்கள் முதலியவற்றை அறியலாம். ஜாதகர் ஒல்லியானவரா, இல்லை பருமனானவரா, கோபம் உள்ளவரா, இல்லை சாந்தமானவரா என்றும் அறியலாம். அவர் உடல் நலத்தைப் பற்றியும் அறியலாம். அவர் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போவாரா இல்லை தாழ்ந்த நிலைக்குப் போவாரா, என்பது பற்றியும் அறியலாம். உடல் பாகத்தில் தலையைக் குறிப்பது முதல் வீடு தான். ஒருவர் சொந்த ஊரில் வாழ்வாரா அல்லது அந்நிய தேசத்தில் வாழ்வாரா என்பது பற்றியும் முதல் வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். முதல் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள், முதல் வீட்டின் அதிபதி எங்கு இருக்கிறார் அதாவது இலக்கினாதிபதி எங்கு இருக்கிறார், முதல் வீட்டை எந்தெந்த கிரகங்கள் பார்க்கின்றன என்பதை வைத்தும் பலன் சொல்ல வேண்டும்.

இரண்டாவது வீடு : இது குடும்பத்தைக் குறிக்கிறது. பணவரவு, செலவு போன்ற பொருளாதாரத்தையும் இது குறிக்கிறது. அதைத்தவிர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், Securities போன்ற சொத்துக்களையும் கூறலாம். ஆடை, அணிகலன்களையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். வங்கியில் உள்ள பண நிலைமை, Promisery Notes, போன்றவற்றையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். இரண்டாம் வீட்டை வாக்குஸ்தானம் என்றும் அழைப்பார்கள். ஒருவர் கனிவாகப் பேசுவாறா, அல்லது கடினமாகப் பேசுவாறா, நன்றாகப் பேசுவாறா அல்லது திக்கிதிக்கிப் பேசுவாறாஎன்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். கண்பார்வையையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவர் கண்ணாடி அணிபவரா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்து கூறலாம். பொதுவாக எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிப்பன நல்லதையே செய்யும். தீய கிரகங்கள் இருந்தால் அந்த வீட்டைக் குறிக்கும் காரகத்துவங்கள் கெட்டு விடும். உதாரணமாக 2-ம் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. அதில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனி ஒரு பாவ கிரகம் அல்லவா! சனி எதையும் குறைவாகவும், தாமதமாகவும் கொடுப்பார். குடும்பம் சிறியதாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் குறைவாகவும் இருக்கும். என்ன- புரிகிறதா?

மூன்றாம் வீடு : இந்த வீட்டைக் கொண்டு ஒருவரின் இளைய சகோதரம், ஒருவரின் தைரியம், அண்டை வீட்டிலுள்ளவர்கள், குறுகிய பயணம், ஆகியவற்றையும் கூறலாம். கடிதப் போக்கு வரத்துக்கள், தகவல் பரிவர்த்தனைகள், வீடு மாறுதல் ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இந்த வீட்டில் கேது இருப்பாரேயாகில் அவர் கலகங்களை விளைவிப்பவை என்றும் கூறலாம். இன்னும் நகைச்சுவையாகக் கூறப்போனால் அவரைக் "கலியுக நாரதர்" எனவும் கூறலாம். உடல் பாகங்களில் காதுகள், தொண்டை, கைகள், நரம்பு மண்டலம், ஆகியவற்றை இந்த 3-ம் வீடு குறிக்கிறது. இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்றும் கூறுவார்கள். இந்த வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர் மிக்க தைரியசாலியாக இருப்பார். ஏனெனில் செவ்வாயானவர் வீரமிக்க கிரகம். ஒருவருக்கு வீரத்தைக் கொடுப்பவர் செவ்வாய் தான். அங்கே சனி இருந்தால் அவர் அவசரப் படாமல் நிதானத்துடன் செயல் படுவர். யோஜனை செய்து தான் முடிவு எடுப்பார். அவசரப் பட மாட்டார்.

நான்காம் வீடு : இது தாயாரைக் குறிக்கும் வீடு. கல்லூரிவரையிலான படிப்பு, வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள், பூமிக்குள் இருக்கும் புதையல், கால்நடைகள், பசுக்கள், விளைநிலங்கள், அதிலிருந்து கிடைக்கும் தான்யங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த நாலாவது வீடுதான். ஒருவருக்கு 4-ம் வீட்டில் செவ்வாய் இருக்கிறார் என்க் கொள்ளுங்கள். அவர் நிச்சயமாக வீடு கட்டுவர். ஏனெனில் செவ்வாய் பூமிகாரகன். பூமிகார கனான செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்பந்தப் பட்டதால் அவர் நிச்சயம் வீடு கட்டுவர். இதே செவ்வாய் 9-ம் வீட்டு அதிபதி எனக் கொள்வோம். இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும். ஏன்? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது. செவ்வாய் பூமிகாரகனாகி, 9-ம் வீட்டையும் குறித்து , ஸ்திரசொத்துக்களைக் குறிக்கும் வீடான 4-ம் வீட்டில் இருக்கிறார். ஆக இவருக்கு தகப்பனாரின் வீடு கிடைக்கும் எனக் கூறலாம். என்ன புரிகிறதா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:16 am

5-ம் வீடு : இதை புத்திர ஸ்தானம் என்று அழைப்பார்கள். இதைப் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கல்லாம். அதாவது போன ஜென்மத்தில் ஒருவர் நல்லது செய்தவரா இல்லையா என்று இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஒருவருக்குக் குழந்தைகள் உண்டா அல்லது இல்லயா என்றும் முடிவு செய்யலாம். ஒருவருக்குக் கலைத்துறையில் நாட்டம் இருக்கிறதா அல்லது இல்லயா என்பது பற்றியும் இந்த வீட்டைக்கொண்டு முடிவு செய்யலாம். அதே போன்று, சினிமா, டிராமா, லாட்டரி, குதிரைப்பந்தயம், ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் காதலித்துத் திருமணம் செய்வாரா இல்லையா என்பது பற்றியும் இந்த வீட்டைக் கொண்டு முடிவு செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம். வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றையும் இந்த வீட்டைக் கொண்டு தீர்மானம் செய்யலாம்.

6-ம் வீடு : கடன், வியாதி, உண்ணும் உணவு , வேலை செய்யும் இடம், ஒருவருடைய வேலைக்காரர்கள் ஆகிய வற்றையும் இந்த வீட்டைக் கொண்டு சொல்லலாம். கவலைகள், துக்கங்கள் தாய் மாமன் ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இலக்கினாதிபதி புதன் 6-ம் வீடான கும்பத்தில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதன் 1-ம் வீட்டிற்கு அதிபத்யாகி 6-ம் வீட்டில் இருக்கிறார். அவர் உடல் நிலையில் நிச்சயமாகக் கோளாறு இருக்கும். ஏனெனில் புதன் 1-ம் வீட்டையும் 6-ம் வீட்டையும் குறிக்கிறார். ஆக இவர் உடலில் ஏதோகோளாரு இருக்கிறது எனக் கொள்ள வேண்டும். சரி! 2-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன் 6-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 6-ம் வீடு Employment என்று சொல்லுகின்ற வேலையைக் குறிக்கிறது. 2-ம் வீடு தனத்தைக் குறிக்கிறது. ஆகவே இவர் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பர் எனக் கொள்ளலாம். இவ்வாறாக 6-ம் வீட்டிலுள்ள கிரகம் மற்ற எந்த வீட்டுடன் சம்மந்தம் கொண்டுள்ளதோ அதை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்.

7-ம் வீடு : திருமணத்தைக் குறிக்கும் வீடு இதுதான். வியாபாரத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் மரணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். பிரயாணத்தைக் குறிக்கும் வீடும் இது தான். ஒருவர் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனி இருக்கிறது எனக் கொள்ளுங்கள். சனிதான் எதையும் தாமதப் படுத்துபவர் ஆயிற்றே! ஆக இவருக்குத் திருமணம் தாமதம் ஆகும் எனக் கூறலாம். உதாரணமாக கடக இலக்கினக்காரர் ஒருவருக்கு 7-ம் இடமான மகரத்தில் சனி இருக்கிறது எனக் கொள்வோம். சனியானவர் 7-ம் வீட்டிற்கும், 8-ம் வீட்டிற்கும் அதிபதி. 7-ல் இருக்கிறார். அவர் திருமணத்தைத் தாமதப் படுத்துவதோடு சில சங்கடங்களையும் திருமணத்திற்குப் பிறகு கொடுப்பார். ஏனெனில் சனி 8-ம் வீட்டிற்கும் அதிபதியல்லவா! சரி! சனிக்குப் பதிலாக 6-ம் வீடு, 9-ம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். திருமண வாழ்வு எப்படி இருக்கும்? 6-ம் வீடு என்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு அல்லவா! திருமண வாழ்வு சுகப்படாது. பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்.

8-ம் வீடு : ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு இது தான். பிதுரார்ஜித சொத்துக்கள், உயில்கள், இன்ஷ்ஷ¤ரன்ஸ், கிராட்டுவிட்டி, போனஸ் ஆகியவைகளைக் குறிக்கும் வீடு இதுதான். ஒருவர் மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். துன்பம், துக்கம், தோல்வி, தண்டனை, தடைகள், ஜெயில் தண்டனை, இவைகளையும் அறியும் வீடு இதுதான். இந்த வீட்டை "துஸ்தானம்" எனக் கூறுவர்கள். 8-ம் வீட்டில் சனி இருந்தால் ஒருவருக்கு தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். குரு இருந்தாலும் தீர்க்காயுசு எனக் கொள்ளலாம். பொதுவாக 8-ம் வீட்டில் உள்ள கிரகங்களோ, அல்லது 8-ம் வீட்டிற்கு அதிபதியோ தங்கள் தசா, புக்திகளில் நல்லதைச் செய்யாதென்பது பலரின் அபிப்பிராயம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:17 am

9-ம் வீடு : தகப்பனர், போன ஜென்மத்தில் ஒருவர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியங்கள், பாபங்கள், நீண்ட பயணம், தெய்வ தரிசனம் செய்தல், உயர்கல்வி, முன்பின் தெரியாதவர்கள், ஆகியவற்றைக் குறிப்பது இந்த வீடு தான். உதாரணமாக 9-ம் வீட்டில் ஒருவருக்கு சனி, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருக்கிறது எனக் கொள்ளுவோம். நிச்சயமாக அவருக்குத் தகப்பனார் அனுசரணையாக இருக்க மாட்டார். 9-ம் வீட்டைத் தவிர சூரியனின் நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சூரியன் பிதுர்காரகனல்லவா? 9-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருக்குமேயாகில் அந்த வீட்டின் காரகத்துவங்கள் எல்லாம் கெட்டு விடும்.

10-ம் வீடு : ஒருவரின் ஜீவனம், கெளரவம், சபைகளில் முக்கியத்துவம் ஆகியவற்றை 10-ம் வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு ஆகியவற்றையும் இதைக் கொண்டேதான் சொல்ல வேண்டும். ஒருவருக்கு அரசியல் நல்லபடியாக இருக்குமா அல்லது இருக்காதா என்றும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். இதைக் கர்மஸ்தானம் என்றும் கூறுவார்கள். தாயார், தகப்பனாருக்குச் செய்யும் கர்மங்களையும் இந்த வீட்டைக் கொண்டுதான் சொல்ல வேண்டும். ஒருவரின் எஜமானர், அரசாங்கம் இவைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது.

11-வது வீடு : இதை லாபஸ்தானம் என்று கூறுவார்கள். நமக்கு வரக்கூடிய லாபங்களையும், சுகங்களையும் அளிக்கக் கூடியது இந்த வீடுதான். மூத்த சகோதரத்தைப் பற்றியும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். நண்பர்களையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல வைத்துத்தான் கூற வேண்டும். நல்ல கிரகங்கள் இந்த வீட்டில் இருந்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம். அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.

12-வது வீடு: இதை மோட்ச ஸ்தானம் என்று சொல்லுவார்கள். இதை விரய ஸ்தானம் என்றும் சொல்லுவார்கள். நமக்கு வரக்கூடிய செலவுகள், நஷ்டங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை வைத்தே சொல்லவேண்டும். துன்பம், பாவங்கள், வறுமை, துரதிஷ்டம், ஆகியவையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். மறைமுக எதிரிகளையும் இந்த வீட்டை வைத்தே சொல்ல வேண்டும். ஒருவருக்கு ஜெயில் வாசம், உள்ளதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். கடனைத் திருப்பிக் கொடுத்தலையும், முதலீடு செய்வதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.

நாம் மேலே 12 வீடுகளின் முக்கியமான காரகத்துவங்களை மட்டும் பார்த்தோம். இது ஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குப் பயன் படும். இந்த ஆரம்ப கட்டத்தைக் கடந்தவர்கள் "பிருஹத் ஜாதகம்", "பலதீபிகை", "உத்திரகாலாம்ருதம்" ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். அப்போதுதான் ஜோதிட அறிவு விருத்தியாகும்.

மற்றவை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:17 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 11


சென்ற பாடத்தில் 9 கிரகங்களின் காரகத்துவத்தைப் பார்த்தோம். அத்துடன் 12 ராசிகளும் எதைக் குறிக்கிறது என்பதையும் பார்த்தோம். நாம் இந்தப் பாடத்திலிருந்து பலன் சொல்வதைப் பார்ப்போம். முதல் வீடான இலக்கினத்தைப் பார்ப்போம். முதல் வீட்டின் பலனை அதன் அதிபதியை வைத்தும், அதில் இருக்கும் கிரகங்களை வைத்தும், அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் பலன் கூற வேண்டும். இந்த ஜாதகம் No. 1 -ஐப் பாருங்கள்.இந்த ஜாதகத்தில் இலக்கினாதிபதியான குரு 11-ம் வீட்டில் இருக்கிறார். 11-ம் வீடு என்பது லாபஸ்தானம். இலக்கினாதிபதி 11-ம் வீட்டில் இருப்பது அவர் வாழ்வில் பெறப்போகும் உயர்வைக் காட்டுகிறது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர் வெளிநாட்டில் வாழ்கிறார். வாழ்க்கையில் பல வெற்றிகளைக் காண்கிறார். இலக்கினத்தில் புதன் இருக்கிறார். புதன் ஒருவருக்கு அறிவு கூர்மையைக் கொடுக்கும் கிரகமல்லவா ? புதன் இருப்பதால் அவர் Phd வரைப் படித்து இருக்கிறார். இலக்கினத்திலுள்ள புதன் இவருக்கு நல்ல அறிவைக் கொடுத்து இருக்கிறார். இந்த 2-ம் எண் உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். இலக்கினாதிபதி 3-ம் வீட்டில் இருக்கிறார். 3-ம் வீடு உபஜெயஸ்தானம் என்றழைக்கப் படும். 3-ம் வீட்டில் குரு இருந்தால் சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமையாய் வாழ்வர். இலக்கினத்தில் செவ்வாய் இருந்தால் தலையில் காயம் ஏற்பட்டு அதனால் வடு உண்டாகும். இலக்கினம் என்பது தலையைக் குறிக்கிறது அல்லவா? அதேபோல் செவ்வாய் ரணம், காயங்களை எல்லாம் கொடுப்பவர் அல்லவா? அதேபோல் இவருக்கும் தலையில் காயம் பட்டு வடு உண்டாகி இருக்கிறது.நாம் பல ஜாதகங்களை அதாவது இலக்கினத்தில் செவ்வாய் உள்ள ஜாதகங்களைப் பார்த்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை கூறுகின்றனர். ஒருவர் Motor Cycle-ல் சென்று கொண்டு இருந்தார். அவருக்கு முன்னால் சென்ற லாரி மண்ணுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அடித்த காற்றில் மணல் பறந்து வந்து கண்ணில் விழுந்ததாம். அவர் நிலை தடுமாறி கீழேவிழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாம். அடுத்தவர் ஒரு பெண்மணி. அவர் மாடியில் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார். அவரின் குழந்தை படியில் இறங்கச் சென்றது. குழந்தையைப் பிடிக்கச்சென்ற இவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். தலையில் காயம். வடு ஏற்பட்டு இருக்கிறார். அடுத்தவர் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். Fan கழன்று தலையில் விழ பெரிய அளவில் காயம் பட்டு இருக்கிறது. ஆக செவ்வாய் இலக்கினத்தில் இருப்பாரேயாகில் ஒருவருக்கு தலையில் அடிபட்டுக் காயம் ஏற்படும். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் இதே போல் ஜாதகங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12 வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இலக்கினாதிபதி இலக்கினத்தில் இருந்தால் அவர் ஆட்சியில் இருக்கிறார் எனப் பொருள். அதாவது அது அவருக்குச் சொந்த வீடு அல்லவா? நீண்ட ஆயுளை உடையவராயும், கீர்த்தி பெற்றவறாகவும், நல்ல ஜீவனம் உடையவராகவும் இருப்பர். நல்ல கெளரவத்துடன் இருப்பர். 2-ம் வீட்டில் இருந்தால் நல்ல வாக்கு வன்மை உடையவராகவும் இருப்பர். 2-ம் இடம் வாக்குஸ்தானம் அல்லவா ? சுய சம்பாத்தியம் உள்ளவர். குடும்ப விருத்தியுடன் செளக்கியமாக வாழ்க்கை நடத்துபவராக இருப்பவர். 3-ம் வீட்டில் இருந்தால் சகோதர, சகோதரிகளுடன் கூடி வாழ்பவனாகவும், நல்ல தைரியசாலியாகவும் இருப்பர். 3-ம் வீடு இளைய சகோதரத்தையும், தைரியத்தையும் குறிக்கிறது அல்லவா? அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ளுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பர். 3-ம் வீடு சிறிய பயணத்தையும் குறிக்கிறது. 4-ம் வீட்டில் இருந்தால் தாயிடம் மிக்க அன்பு உள்ளவராகவும், குடும்பத்தில் ஈடுபடு உள்ளவராகவும், பந்துக்களின் ஆதரவைப் பெற்றவராகவும் இருப்பான். கல்வியில் சிறந்து விளங்குபவராகவும், தாய் வழி மாமன்கள் ஆதரவைப் பெற்றவராகவும், சொத்துக்கள் இருப்பவராகவும் இருப்பர்.

5-ம் வீட்டில் இலக்கினாதிபதி இருந்தால் புத்திர சந்தானங்களைப் பெற்றவராகவும் அவர்களால் சாந்தோஷத்தையும், ஆதரவையும் பெற்றவராகவும் இருப்பார். தெய்வீக வழிபாடுகள் நிறைந்தவராகவும், மகான்களின் சத்சங்கத்துடனும நல்ல சிந்தனை உடையவராகவும் இருப்பார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:18 am

6-ம் வீட்டில் ல்க்கினாதிபதி இருந்தால் ஜாதகன் வியாதி உடையவனாக இருப்பார். அவருக்கு விரோதிகள், சத்துருக்கள், அவதூறு பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள். கடனுபாதைகள் நிறைந்தவரும், மனம் அமைதியற்றவனாகவும் இருப்பான். 6-ம் வீடு மறைவு ஸ்தானம் என்றும் துஸ்தானம் என்றும் அழைக்கப் படும். இந்த வீட்டில் இலக்கினதிபதி இருப்பது நல்லது அல்ல. 7-ம் வீட்டில் இலக்கினாதிபதி இருந்தால் ஸ்திரீ லோலனாகவும், ஆசைகள் உடையனவராகவும் இருப்பார். பொறுப்பை ஏற்காமல் வெளியில் சுற்றுபவனாகவும் இருப்பார். சிலருக்கு மனைவி மூலமாய் சொத்துக்கள் சேரும். நாம் கீழே ஜாதகம் No.3-ஐக் கொடுத்துள்ளோம்.இவர் எந்த வேலையையும் பொறுப்புடன் செய்தது இல்லை. ஸ்திரி லோலனாக இருந்து இருக்கின்றார். எப்போதும் வெளியில் சுற்றுபவராக இருந்தார். இவருக்கு இலக்கினாதிபதி 7-ல்; நாம் மேலே கூறியவையெல்லாம் இவருக்குப் பொருந்தி இருக்கிறது. இலக்கினாதிபதி 8-ல் இருந்தால் ஆயுள் நிறைந்தவராக இருப்பார். ஆனால் சிரமத்துடன் குடுப்பத்தை நடத்துவராக இருப்பார். வறுமையுடனும் குடும்பத்தை நடத்துபவராக இருப்பார். சிலர் உடலில் தேவையான ஊட்டமைன்றி இருப்பர். 8-ம் இடம் மறைவு ஸ்தானம் என்று கூறுவார்கள். பொதுவாக 8-ல் இலக்கினாதிபதி இருப்பது விரும்பத்தக்கது அல்ல; 9-ம் இடத்தில் இலக்கினாதிபதி இருந்தால் தகப்பனாரின் அன்பையும், ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் பெற்றவராக இருப்பார். அதேபோல் பித்துருக்களின் அன்பைப் பெற்றவருமாய் இருப்பார். சத்தியத்துடன் நேர்வழியில் நடப்பவராகவும், தருமத்தைச் செய்பவராகவும், தெய்வவழிபாடும் நிறைந்தவராகவும் இருப்பார். இலக்கினத்திற்குப் 10-வது வீட்டில் இலக்கினாதிபதி இருந்தால் குடும்பப் பொறுப்பை அறிந்து நடப்பவராகவும், ஜீவன் பலம் உடையவராகவும் தெய்வபக்தி உள்ளவராகவும், புண்ணிய காரியத்தில் பற்றுள்ளவராகவும் நற்பெயறும் கீர்த்தியும் உள்ளவராகவும் இருப்பார். அரசாங்கத்தில் நற்பெயரும், செல்வாக்கும் அதிகாரமும் உயர்பதவிகளும் உள்ளவர். பந்துக்களிடமும் உற்றார் உறவினரிடம் பெயர் பெற்றவராகவும் இருப்பார். 10-ம் இடத்தில் இலக்கினாதிபதி இருப்பது மிக நல்லது. 11-ம் வீட்டில் இருந்தால் லாபமான தொழிலைச் செய்பவராகவும் நீண்ட ஆயுளை உடையவராகவும் இருப்பார். இவருக்கு மூத்த சகோதரர்களின் ஆதரவு நிறைந்து இருக்கும். வாழ்க்கையில் இவர் ஓர் நல்ல நிலைக்கு வருவார். 12-ம் வீட்டில் இருந்தால் எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகம் இருக்கும். சிலர் அடிக்கடி இட மாற்றம் செய்வர். அலைச்சல் அதிகமாக இருக்கும். சோம்பேரி எனவும் திறமையற்றவர் எனவும் மற்றவர்களால் அழைக்கப்படுவர். சமயத்தில் அவப்பெயரும், நிந்தனைகளும் வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:18 am

இலக்கினாதிபதி 12 வீடுகளில் இருந்தால் என்ன பலன் என்பதைத் தெரிந்து கொண்டீர்கள். இலக்கினாதிபதி எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கிறது. இலக்கினாதிபதி 6, 8, 12-ம் வீட்டைத்தவிர மற்ற வீடுகளில் இருந்தால் சுபப் பலனைத் தருகிறார்.

கிரகங்கள் நமது உடலில் சிலவற்றை குறிக்கின்றனர். அவற்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரியன்ஆத்மாவிற்கு
சந்திரன்மனதிற்கு
செவ்வாய்உடல் வலிமைக்கு
புதன்பேச்சுக்கு
வியாழன்மகிழ்ச்சிக்கு
சுக்கிரன்உணர்ச்சிகளுக்கு
சனிவறுமைக்கு


ஏழு கிரகங்களும் மேற்கூறியவற்றிற்குக் காரகம் வகிக்கின்றன. இவைகள் எல்லாம் பலன் சொல்லப் பயன் படும். ஒரு கிரகம் வலுத்து இருந்தால் அந்த காரகத்துவம் நன்றாக இருக்கிறது எனப் பொருள். உதாரணமாக குரு வலுத்து இருந்தால் அவன் நல்ல குணங்களைப் பெற்றவனாகவும், பணவசதியுள்ளவனாகவும், குழந்தைப் பேரு உள்ளவனாகவும் இருப்பான் எனக் கொள்ளலாம். அதேபோல் புதன் வலுத்திருந்தால் அவன் கெட்டிக்காரனாகவும், பேச்சுவன்மை உள்ளவனாகவும் இருப்பான். ஆனால் சனி வலுத்து இருந்தால் துன்பங்கள் குறைந்து இருக்கும். சனி வலுவிழந்தால் துன்பங்கள் அதிகரிக்கும்.

நீங்கள் ஜோதிடப்புத்தகங்களை எல்லாம் படிக்க ஆரம்பிக்கலாம். படித்தால் தான் ஜோதிட அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக் கென்று பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் படியுங்கள். இனிமேல் உங்களுக்குப் புரியும்.

மறுபடி அடுத்த பாடத்தில் சந்திப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:18 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 12


நீங்கள் ஜோதிட சம்மந்தமான புத்தகங்கள் படிக்க வேண்டும்என எழுதி இருந்தோம். ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கென்று பல புத்தகங்கள் இருக்கின்றன. இதைத் தவிர "ப்ருஹத் ஜாதகம்", "பல தீபிகை" "உத்தர காலாம்ருதம்" போன்ற நூல்கள் பல இருக்கின்றன. இவைகளைப் படிக்க ஆரம்பிக்கலாம். இவைகள் தான் ஜோதிடத்திற்கு அடிப்படை. படிக்கப் படிக்கத்தான் ஜோதிட அறிவு வளரும். முயற்சி செய்யுங்கள்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்குப் பல குணங்கள் உண்டு. அவற்றின் குணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அவை பலன் சொல்லப் பயன் படும்.

ஆண், பெண் ராசிகள் :

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனப் படும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதிசங்கள் அதிகம் உள்ளவர்கள் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ இலக்கினத்தில் ஒரு பெண் பிறந்து இருப்பாரேயாகில் அவருக்கு ஆண்களின் குணாதிசியங்கள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது முன் கோபமும் முரட்டுத்தன்மை உடையவராக இருப்பார் எனக் கொள்ளலாம். அதேபோல் ஒரு பெண்ரசியில் ஒரு ஆண் பிறந்து இருப்பரேயாகில் அவருக்குப் பெண்களின் குணாதிசயங்கள் இருக்கும் எனக் கொள்ளலாம். சிறிது பயந்த சுபாவம் உள்ளவராகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும் இருப்பார் எனக் கொள்ளலாம். ஆண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசாபுக்தி காலங்களில் ஆண் சந்ததியையும், பெண்ராசியில் உள்ள கிரகங்கள் தங்கள் தசா, புக்தி காலங்களில் பெண்சந்ததியையும் கொடுக்கும். பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணாவென்று அறிய இந்த ராசிகள் பயன் படும். ஒருவர் ஜாதகத்தில் 5-ம் வீடு ஆண்ராசியாகி, 5-க்குடையவர் ஆண்கிரகமாக இருந்து அவரும் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சந்ததிகள் அதிகம் இருக்கும் என்று கூறலாம். 5-ம் வீடு பெண்ராசியாகி, 5-க்குடையவர் பெண் கிரகமாகி அவர் பெண் ராசியில் இருப்பாரேயகில் அவருக்கு பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும் எனக் கொள்ளலாம். ராசிகளை ஆன், பெண் எனப் பிரிப்பதின் அவசியம் தெரிகிறது அல்லவா?

வடக்கு, தெற்கு ராசி

மேஷம் முதல் கன்னிவரை வடக்கு ராசி எனவும், துலாத்திலிருந்து மீனம் வரை தெற்கு ராசிகள் எனவும் அழைக்கப் படும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:19 am

நெருப்பு ராசி (Fiery Signs)

மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசி எனப் படும். இந்த மூன்று ராசிகளை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். இந்த நெருப்பு ராசியில் உள்ள கிரகங்களும் மேற்கூறிய தன்மைகளைப் பெற்று இருக்கும். நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள் நெருப்பு சம்மந்தப் பட்ட தொழிலில்

இருக்கவும் சாத்தியக் கூறுகள் உண்டு.

நிலராசி (Earthy Signs)

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் இந்த ராசியைச் சேர்ந்தவை. இந்த ராசியை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக் கூடியவர்கள். எதையும் யதார்த்தமாகவும், எச்சரிக்கையுடனும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சிக்கனமாகச் செலவழிக்கும் மனது இவர்களுக்கு உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத்தொந்தரவு உண்டு. ஜீவனஸ்தானமான 10-ம் இடம் நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான வேலைகள், விவசாயம் ஆகியவை மிகுந்த பலன் தரும்.

காற்று ராசி (Airy sign)

நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசியும் காற்று ராசிகளாகும்.

ஜலராசிகள்(Watery Signs)

கடகம், விருச்சிகம். மீனம் ஆகிய மூன்றும் ஜல ராசிகளாகும். இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் மிகுந்தவர்கள். இதை Fruitful Signs என்றும் சொல்லுவார்கள். ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப் பட்ட தொழில் கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகிய வற்றில் இருப்பார்கள். இந்த ராசிக்கரர்கள் கற்பனை வளம்மிக்கவர்கள்.

இதைத் தவிர ராசிகளில் சரராசிகள், ஸ்திர ராசிகள், உபய ராசிகள் எனவும் பிரித்து அவற்றிற்குறிய குணாதிசியங்களைக் கூறி இருக்கிறார்கள். அவைகளையெல்லாம் நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர நன்மை பயக்கும் ராசிகள், மலட்டுத் தன்மையுள்ள ராசிகள், நன்மை பயக்காத ராசிகள், ஊமை ராசிகள், முரட்டு ராசிகள், மனித ராசிகள், சப்த ராசிகள், நான்குகால் ராசிகள், இரட்டை ராசிகள், குட்டை ராசிகள் நீள ராசிகள் என பல வகைப்பட்ட ராசிகள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் பலன் சொல்லும்போது மிக உதவியாக இருக்கும். இந்த ராசிகளைப் பற்றியெல்லாம் அடுத்த பாடத்தில்
பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:20 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 13


சென்னையில் ஒரு பெரிய பணக்காரருக்கு, ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அதே சென்னையில் ஒரு கூலித் தொழிலாளிக்கு அதே நேரத்தில் ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. நேரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆக ஜாதகத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது. இருவர் ஜாதகமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால் இருவரின் வாழ்க்கையும் ஒரே மாதிரித்தான் இருக்குமா ? இல்லை பணக்காரக் குழந்தை நல்ல சூழ்நிலையில் வளரப் போகிறது. ஏழைக் குழந்தை ஏழ்மைச் சூழ்நிலையில் வளரப் போகிறது. இதற்கு ஜோதிடம் தரும் விளக்கம் என்ன? இதற்கு நாம் ஒரு சிறிய விளக்கம் கொடுப்போம். இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகின்றன எனக் கொள்வோம். பணக்காரக் குழந்தை ஒரு தொழிற்சாலைக்கு அதிபதி ஆகிறான். ஏழைக் குழந்தை சிறு தொழிலில் ஒரு இறும்புப் பட்டரை வைத்துள்ளான் எனவும் கொள்வோம். நல்ல திசையில் பணக்காரனுக்கு பல லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து இருக்கலாம். அதே ஏழைக்கு அந்த நல்ல திசையில் சில நூறு ரூபாய் லாபமாகக் கிடைத்து இருக்கலாம். இருவருக்கும் பணத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. ஆனால் இருவரின் சந்தாஷத்தையும் அளவிட்டால் ஒரே அளவாகத்தான் இருக்கும். பல லட்சங்கள் அடைந்த பணக்காரனின் சந்தோஷத்தை அந்த ஏழை சில நூறு ரூபாய்களில் அடைந்து விடுகிறான். அதாவது இருவர் அடையும் சந்தோஷமும் ஒன்று தான். இவ்வாறு ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்த்தால் மனத்தளவில் ஒரே மாதிரியான சந்தோஷமும் துக்கமும் அடைவார்கள். இவ்வாறாக அவர்கள் வழ்க்கையில் ஒற்றுமை இருக்கும். பணத்தை வைத்து அளவிட முடியாது. நாம் யாருக்கு மகனாகப்பிறக்கிறோம் என்பது நம் கையில் இல்லை; நாம் எந்த ஊரில், எந்த நாட்டில் பிறக்கிறோம் என்பது நமது கையில் இல்லை. ஆகவே நாம் பிறக்கின்றபோதுள்ள பொருளாதார நிலையை வைத்துக் கொண்டு வரப்போகின்ற உயர்வு, தாழ்வுகளைக் கூற வேண்டும். நிற்க. இனி நாம் நம் படத்திற்கு வருவோம்.

ராசிகளின் குணங்களுக்குத் தக்கவாறு அவைகள் பிரிக்கப் பட்டு இருக்கின்றன. ஏற்கனவே சென்ற பாடத்தில் சில குணாதிசயங்களைப் பார்த்தோம். இப்போது மீதமுள்ளவற்றைப் பார்ப்போம். முதலில் சர ராசிகளைப் பார்ப்போம்

சர ராசி : மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளும் சரராசிகளெனப்படும். இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள். மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள். எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள். சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்.

சரராசி 2-ம் வீடாக இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒரே சீராகப் பணவரவு இருக்காது. ஒரு சமயம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் குறைவாக இருக்கும். வியாபாரம் செய்யத் தகுந்தவர்கள் இவர்கள். வியாபாரத்தில்தானே வரவு ஒரே மாதிரியாக இருக்காது.

3-ம் வீடு சர ராசியாக இருந்தால் அவர்கள் வெளியூர்ப் பயணத்தை விருப்புவர். மூன்றாம் வீடு வெளியூர்ப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? இந்த ராசிக்காரர்கள் தான் நினைத்ததை முடிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள்.

ஸ்திர ராசி : மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள். நிரந்தரமான வரவு இவர்களுக்கு உண்டு. ஸ்திர ராசி 6-ம் வீடாக இருந்து ஒருவருக்கு வியாதி வருமேயானால் பரம்பரையான வியாதி வருவதற்கு வழியுண்டு. குணம் ஆகாத வியாதிகள் ஆஸ்த்மா, சர்க்கரை போன்றவியாதிகள் வரக்கூடும். 3-ம் இடம் ஸ்திர ராசியாக இருப்பின் வெளியூர் செல்வதை விரும்ப மாட்டார். ஸ்திர ராசியிலுள்ள தசா, புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலையில் நிரந்தரம் ஆகும். மிகவும் நிதானமாகச் செயல் படும் தன்மை கொண்டவர்கள் இவர்கள்.

உபய ராசி : உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள். சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றை வெறுப்பவர்கள். கஷ்டமான வேலையைக் கண்டு மலைப்பவர்கள். நரம்பு சம்மந்தமான வியாதிகள் இவர்களைத் தாக்கும். இவர்கள் உறுதியான எண்ணங்கள் இல்லாததால் அடிக்கடி தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டே இருப்பர்கள். இவர்கள் ஏஜென்சித் தொழிலுக்கு ஏற்றவர்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:20 am

நம்மை பயக்கும் ராசிகள்(Fruitful Signs) : எல்லா ஜல ராசிகளும் இந்த வகையைச் சேர்ந்தன. ரிஷபம், துலாம், தனுசு, மகரம் ஆகியவை பாதி நம்மை (Semi Fruitful Signs) பயக்கும் ராசிகள் என்று கூறுவார்கள். ஒருவருக்குக் குழந்தை இல்லை எனக்கொள்ளுங்கள். இவர் ஜாதகத்தில் 5-ம் வீடு Fruitful Sign ஆகி 5-க்குடையவன் மற்றொரு Fruitful Sign-ல் இருப்பாரேயாகில் அவருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு எனக் கொள்ளலாம். இந்த Fruitful Sign ஆனது அதில் உள்ள கிரகங்களையும் நன்மைபயக்கும் கிரகங்கள் ஆக்குகின்றன. அதே போன்று கணவர் மனைவியர் ஏதோ சந்தர்பத்தின் காரணமாகப் பிரிந்து இருக்கின்றனர் எனக் கொள்ளுங்கள். அவர்கள் எப்போது சேருவார்கள் என்ற கேள்வி எழும். அப்போது இந்த ராசியில் உள்ள கிரகங்கள் பலன் சொல்லப் பயன் படும். நீங்கள் ஆரூடத்திப் பற்றிக் கேள்விப் பட்டு இருப்பீர்கள். அதாவது ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்கப் பயன் படும் ஜாதகம். அதாவது அவர்கள் கேள்வி கேட்க்கும் நேரத்தை வைத்து ஜாதகம் கணித்துப் பலன் சொல்லுவார்கள். ஒருவர் நம்மிடம் வந்து "நான் தேர்வில் வெற்றி பெருவேனா?"- என்று கேட்கிறார் எனக் கொள்வோம். அவரிடம் ஜாதகம் இல்லை. நாம் அந்த நேரத்திற்கு ஜாதகம் கணித்துப் பார்க்கிறோம். தேர்வு, படிப்பு ஆகியவைகளை 4-ம் வீடு குறிக்கிறது. 4-ம் வீட்டில் சுபகிரகங்கள் இருந்து 4-ம் வீட்டிற்குடையவர் 11-ம் வீட்டில் அதுவும் 11-ம் வீடு Fruitful Sign ஆகவும் இருந்து விட்டால் நாம் எளிதாகச் சொல்லலாம். நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவீர்கள் என்று அடித்துச் சொல்லலாம். இவ்வாறு பலவழிகளில் இந்த Fruitful Signs - உதவி புரிகிறது.கடகம், விருச்சிகம், தனுசு ஆகியவைகல் Fruitful signs எனப்படும்.

வறண்ட ரசிகள் (Barren Signs) : Fruitful Signs - களுக்கு எதிர் மறையான ராசிகள் இந்த வறண்ட ராசிகள் அல்லது Barren Signs. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகியவை வறண்ட ராசிகள் எனப்படும். இந்த ராசியிலுள்ள கிரகங்கள் நன்மையான பலன்களைக் கொடுக்காது.

ஊமை ராசிகள் (Mute Signs) : எல்லா ஜல ராசிகளும், அதாவது கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை Mute Signs அல்லது ஊமை ராசிகள் எனப்படும். இதை சற்று விளக்கமாக எழுதுகின்றோம். ஒருவருக்கு ஜாதகத்தில் 2-ம் வீடு பேச்சு, நாக்கு வன்மையைக் குறிக்கிறது. 2-ம் வீடு ஊமை ராசியாக வந்து அதில் புதன் இருந்து சனியால் பார்க்கப் பட்டால் அவர் திக்கித், திக்கிப் பேசுவார். செவ்வாய் பார்த்தால் மிக வேகமாகப் பேசுவார். குழந்தைகள் நன்றகப் பேசுவார்களா அல்லது பேசமாட்டார்களா என்று 2-ம் வீட்டையும், இந்த ஊமை ராசிகளயும் வைத்துக் கொண்டு சொல்லிவிடலாம். அதற்குத்தான் இந்த ராசிகள் பயன் படுகின்றன.

முரட்டு ராசிகள் : மேஷமும், விருச்சிகமும் முரட்டு ராசிகள் எனப்படும். இவற்றிற்கு அதிபதி செவ்வாய் அல்லவா? செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் அல்லவா ? அதனால் அந்த ராசிகளுக்கு முரட்டு ராசிகள் எனப்படும்.

நான்கு கால் ராசிகள் : மேஷம், ரிஷபம், சிம்மம், மகரம் ஆகியவை நான்குகால் ராசிகள் எனப்படும். செம்மரிக் கடா (மேஷம்), காளை (ரிஷபம்), சிங்கம் (சிம்மம்), ஆடு (மகரம்), ஆகியவை 4-காலுள்ள உயிரினங்கள் அல்லவா? அதனால் தான் இவைகள் நாலுகால் ராசிகள் என்றழைக்கப் படுகின்றன. சரி! இந்த ராசிகள் பலன் சொல்ல எப்படிப் பயன் படுகின்றன? எனக்கு மிகவும் வேண்டியவர்" நான் கார் வாங்க ஆசைப் படுகிறேன்? என்னால் வாங்க முடியுமா?" என்று கேட்டார். அவர் ஜாதகத்தை பார்த்தோம். அவருக்கு அப்போது சனிதசை, சூரிய புக்தி நடந்து கொண்டிருந்தது. நம்முடைய கணக்குப்படி அந்த தசா புக்தியில் அவருக்கு வாகன யோகம் வந்து இருந்தது. அவர் கார் வாங்குவாரா அல்லது மோட்டார் சைக்கிள் வாங்குவாரா என்று எப்படிச் சொல்வது? புக்தி நாதன் சூரியன் அவருக்கு மகரத்தில் இருந்தார். மகரம் நாலுகால் ராசியல்லவா? ஆகவே சூரியன் நாலுகால் ராசியின் பலனைக் கொடுப்பார் என்று நீங்கள் கார் வாங்குவீர்கள் என்று கூறினோம். இப்போது புரிகிறதா ? நாலுகால் ராசியின் உபயோகத்தை. அவரும் நாம் கூறியபடி அப்போது கார் வாங்கினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:20 am

இரட்டை ராசிகள் (Dual Signs) : மிதுனம், தனுசு, மீனம் ஆகியவை இரட்டை ராசிகள் எனப்படும். இந்த ராசிகளின் உபயோகம் என்ன? ஒருவருக்கு இரண்டு மனைவிகளா? குழந்தை இரட்டையாகப் பிறக்குமா? இரட்டை வருமானம் ஒருவருக்கு வருமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த ராசியை வைத்துக் கொண்டு பதில் சொல்லலாம். புதனுக்கு இரட்டைக் கிரகம் என்ற பெயர் உண்டு. அவர் ஒருவரின் ஜீவனஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது அதில் இருந்தாலோ அவருக்கு இரட்டை வருமானம் வரும் எனக் கூறலாம். இரட்டை வருமானம் எப்படிக் கிடைக்கும்?

ஒருவர் ஓர் அலுவலகத்தில் பணிபுரியலாம். மாலை நேரத்தில் வேறொரு இடத்தில் Part-time வேலை செய்யலாம். இது இரட்டை வருமானம் அல்லவா? சிலர் வேலை பார்த்துக் கொண்டே Insurance Agent ஆக இருப்பார்கள். இதுவும் இரட்டை வருமானம் தான். சிலர் அரசாங்கத்தில் வேலை செய்வார்கள். சம்பளம் கிடைக்கும். அதைத்தவிர மேஜைக்கு அடியிலும் வாங்குவார்கள். இதுவும் இரட்டை வருமானம்தான். இந்த மாதிரி மேஜைக்கு அடியில் வாங்குபவர்களுக்கு 10-ம் வீட்டில் புதனுடன் சனியும் சேர்ந்து இருக்கும். அல்லது சனியின் பார்வையாவது இருக்கும். சனியின் தொடர்பு இருந்தால்தான் இந்த மாதிரி மேஜைக்கு அடியில் பணம் வாங்க முடியும். சனி எதையும் ரகசியமாகச் செய்யக்கூடியவர் அல்லவா? 1983-ல் நாம் குடியிருந்த வீட்டின் பக்கத்தில் இருந்த ஒருவர் தன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்தார். அவர் தான் வீடு கட்ட முயற்சி செய்வதாயும் தன் ஜாதகப்படி வீடு கட்டமுடியுமா எனக் கேட்டார். அவர் ஜாதகத்தில் அவர் கன்னி இலக்கினம். 4-ம் வீட்டில் புதன். செவ்வாய் 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருந்தார். மற்ற கிரகங்கள் ஞாபகத்தில் இல்லை. நாம் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு உங்களுக்கு வீடு கட்ட யோகம் வந்துவிட்டது. "நன்றாகக் கட்டுங்கள்" என்று கூறினோம். அவர் "கடன் வாங்கித்தான் கட்ட வேண்டும். கட்ட முடியுமா?" என்று திரும்பவும் கேட்டார். நாம் "உங்கள் ஜாதகப் படி இரண்டு வீட்டிற்கு யோகம் இருக்கிறது. ஏன் தயங்குகிறீர்கள்?" எனக் கூறினோம். அவர் உடனே "ஒரு வீட்டிற்கே வழி இல்லை; இரண்டு வீடு கட்டுவேன் என்கிறீர்களே" என்று கூறிவிட்டுப் போய்விட்டார். சிலமாதங்களில் நாம் வீடு ஒன்று கட்டிக் கொண்டு அங்கிருந்து வந்து விட்டோம். பல ஆண்டுகள் உருண்டோடின. அந்தப் பழைய நண்பர் திரும்பவும் என்னைத் தேடிக் கொண்டு வந்தார். "நீங்கள் முன்பு கூறியபடி நான் இப்போது 2-வது வீட்டிற்குப் பணம் கொடுத்து விட்டேன். ஆனால் FLAT இன்னும் கைக்குவரவில்லை; எப்போது கிடைக்கும் என்று உங்களைக் கேட்க்கத்தான் வந்தேன்" என்று கூறினார். நாம் அவர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று கூறி அனுப்பினோம்." நாம் எப்படி அவருக்கு இரண்டு வீடு கிடைக்கும் என்று கூறினோம்?" என்று உங்களுக்குக் கூறுகிறோம். அவர் ஜாதகத்தில் 4-ம் வீடு இரட்டை ராசி. அதாவது தனுசு. அந்த வீட்டில் இரட்டைக் கிரகமான புதனும் இருக்கிறார். பூமிகாரகனான செவ்வாயும் 4-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆகவே நாம் அவருக்கு இரண்டு வீடுகள் உண்டு என்றுகூறினோம். அது பலித்து விட்டது. ஆக இரட்டை ராசிகளின் உபயோகம் தெரிகிறதல்லவா?

இத்துடன் இந்தப் பாடத்தை முடித்துக் கொள்வோம். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:21 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 14


ஜாதகத்தில் முதல் வீட்டிற்கு இலக்கினம் என்று பெயரென்று உங்களுக்குத் தெரியும். முதல்வீடு, நாலாம் வீடு, ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகியவை கேந்திரஸ்தானங்கள் என்றழைக்கப்படும். அதேபோல் ஒன்று, ஐந்து, ஒன்பதாம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள் என்றழைக்கப்படும். இந்த கேந்திரஸ்தானங்களும், திரிகோணஸ்தானங்களும் மிக நல்ல வீடுகளாக அழைக்கப் படுகின்றன. இங்கே நல்ல கிரகங்கள் தங்கி இருப்பார்களேயானால் அவைகள் நல்லவைகளையே செய்யும். கெட்ட கிரகங்கள் தங்கி இருந்தால் அவைகள் அந்த வீட்டைக் கெடுத்து விடுகின்றன. அதாவது அந்த வீட்டின் காரகத்துவம் கெட்டு விடும். உதாரணமாக ஒருவருக்கு 5-ம் வீட்டில் சனி இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 5-ம் வீடு திரிகோணஸ்தானம் ஆகும். அந்த வீடு புத்திர பாக்கியத்தைக் குறிக்கிறது. அங்கு பாபக் கிரகமான சனி இருப்பதனால் அவருக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் போகும். குழந்தையே இல்லாமலும் போகலாம். "5-ல் சனி தத்துப் பிள்ளை யோகம்" என்று கூறுவார்கள். அங்கு சுபக்கிரகமான சுக்கிரன் இருந்தால் அவருக்குப் புத்திர பாக்கியம் இருக்கிறது எனக் கூறலாம். எந்த வீடாக இருந்தாலும் அங்கு சுபக்கிரகங்கள் அந்த வீட்டின் காரகத்துவத்தை மேம்படுத்துகின்றன. ஆனால் கெட்ட கிரகங்களோ அந்த வீட்டின்காரகத்துவத்தைக் கெடுத்து விடுகின்றன. ஒருவருக்கு ஜாதகத்தில் கேந்தரஸ்தானாதிபதியும், திரிகோணஸ்தானாதிபதியும் சேர்ந்து இருப்பார்களேயானால் அவர்கள் ராஜ யோகத்தைக் கொடுப்பர்கள். உதாரணமாக கன்னியாஇலக்கினத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சுக்கிரனானவர் 9-ம் வீட்டிற்கு அதிபதி. அதாவது திரிகோணஸ்தானாதிபதி. புதன் 10-ம் வீட்டிற்கு அதிபதி. அதாவது கேந்திராதிபதி. இருவரும் சேர்ந்து ஒருவீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 4-ம் வீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். இந்த சேர்க்கையானது இவருக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும். படிப்பு, வீடு, வாசல், யோகம் எல்லாம் இருக்கும். எந்த வீட்டில் ராஜயோக கிரகசேர்க்கை இருக்கிறதோ அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கும். 9-ம் வீடு, 10-ம் வீட்டின் அதிபதிகள் சேர்ந்தால் அது தர்ம, கர்மாதிபதியோகம் என அழைக்கப் படும். தர்மஸ்தானம் என்பது 9-ம் வீடு, கர்மஸ்தானம் என்பது 10-ம் வீடு. இருவீடுகளின்அதிபர் சேர்க்கை தர்ம, கர்மாதிபதி யோகம் என்றழைக்கப்படும்.

கடகஇலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாயானவர், 5-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதி. அதாவது கோண, கேந்திர வீடுகளுக்கு அதிபதி. 5-ம் வீடு திரிகோணஸ்தானம், 10-ம் வீடு கேந்திரஸ்தானம் அல்லவா! ஆகவே செவ்வாயானவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகன் என்றழைக்கப் படுகிறார். அதேபோல் செவ்வாயானவர் சிம்மஇலக்கினத்திற்கும் 4-ம் மற்றும் 9-ம் வீடுகளுக்கு அதிபதியாகிறார். கேந்திர, கோண வீடுகளுக்கு அதிபதியாவதால் அவர் சிம்ம இலக்கினத்துக்கும் யோக காரகனாகிறார். அதே போல் மகர, கும்ப இலக்கினங்களுக்கு சுக்கிரனானவர், கேந்தரஸ்தானத்திற்கும், திரிகோணஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் அவர் இந்த இரண்டு இலக்கினங்களுக்கும் யோககாரகனாகிறார். ரிஷப இலக்கினத்திற்கு சனியானவர் 9-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். துலாஇலக்கினத்திற்கும் சனியானவர் 4-ம் வீட்டிற்கும், 5-ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். இந்த யோக காரகர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கும். அதேபோன்று 2, 6, 8, 11-ம் வீடுகள் பணபரம் என்றும், 3, 12 வீடுகள் ஆபோக்லிபம் என்றழைக்கப்படும். இந்த வீடுகளைப் பற்றிப் பின்னால் பார்ப்போம். சரி!இப்போது நாம் விட்ட இடத்திலிருந்து முதலாம் வீட்டிற்கு வருவோம்.

இலக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவை ஒருவரின் ஆயுளைக் குறிக்கிறது. ஒருவரின் ஆயுளைக் கணிக்க இந்த மூன்று வீடுகளையும் ஆராய வேண்டும். ஒருவரின் ஆயுள் 30 வயதுக்குள் இருந்தால் அது அற்பாயுள் எனப்படும். 30முதல் 60 வயது முடிய நடுத்தர ஆயுள் எனப்படும். 60 வயதுக்குமேல் அது தீர்க்காயுள் எனப்படும். சரி! ஒருவரின் ஆயுளை எப்படித் தீர்மானிப்பது? இது மிகவும் கடினமான வேலை. ஜோதிடத்திலேயே மிகவும் கடினமானது இதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் தீர்க்க ஆயுளைக் காட்டுகின்றன.

1. இலக்கினதிபதி தன் சொந்த வீட்டிலோ, அல்லது உச்ச வீட்டிலோ இருத்தல்.
2. 8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருத்தல்.
3. இலக்கினமும், சந்திரனும் நல்லவர்கள் சேர்க்கை பெற்றிருத்தல்.
4. இலக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருத்தல்.
5. இலக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்
6. எட்டாம் வீட்டிற்கதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது இலக்கினத்திலோ இருத்தல் அல்லது ல்க்கினத்தையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்
7. சந்திரனும், இலக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருத்தல்.
8. குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்.

இதைப் போல் பல கிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் கூறிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை மட்டும் நாம் கூறியுள்ளோம். நமது வாசகர்கள் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களைப் பார்த்தால் ஆயுளைப் பற்றி விரிவாகக் கூறி இருப்பது தெரிய வரும்.

கீழே கூறியுள்ளவைகள் அற்ப ஆயுளைக் காட்டுகின்றன.

1. 8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும், 6, 12 வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தாலும் அற்ப ஆயுள்தான்.
2. இலக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்
3. இலக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தாலும்,
6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்,
4. பொதுவாக இலக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள்

இருந்து சுபர் பார்வை இல்லாவிட்டாலும் அற்ப ஆயுள்தான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:21 am

நாம் பொதுவாக ஆயுள் தீர்க்காயுளா அல்லது அற்ப ஆயுளா என்பதைப் பற்றி மேலே கூறியிருந்தோம். சரி! ஒருவருக்கு எப்போது மரணம் ஏற்படும்? யார் மரணத்தைக் கொடுப்பார்கள். மரணத்தைக் கொடுக்கும் கிரகத்திற்கு மாரகன் எனப் பெயர். பொதுவாக எந்த வீட்டிற்கும் 12-ம் வீட்டதிபர் அந்த வீட்டிற்கு நன்மையைச் செய்யாது. நான்காம் வீடு தாயாரைக் குறிக்கிறது. நான்காம் வீட்டிற்குப் 12-ம் வீடு 3வது வீடு அல்லவா! 3-ம் வீட்டிலுள்ள கிரகங்களும், 3-ம் வீட்டின் அதிபதியும் தாயாருக்கு நன்மையைச் செய்யாது. கெடுதல்தான் செய்யும். 7-ம் வீடு திருமணத் தைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 6-ம் வீடு. 6-ம் வீட்டின் அதிபதியும் அதில் உள்ள கிரகங்களும் கணவன், மனவியரிடையே கருத்து வேற்றுமையும் , சில சமயம் விவாஹரத்தையும் கொடுத்துவிடும். எந்த வீட்டிற்கும் அதற்கு முந்தைய வீடு எதிர்மறையான பலன்களைக் கொடுக்கும்.

ஆயுளைக் குறிப்பது 1, 3, 8-வது வீடுகள் அல்லவா! இவற்றிற்கு முந்தையவீடு அல்லது 12-வது 12, 2, 7 வது வீடுகள் ஆகும். இவைகள் ஒருவரைக் கொல்லும் வல்லமை படைத்தவை. ஆகவே இவர்களை மாரகர்கள் என்றழைக்கலாம். 7-வது வீடு திருமணத்தைக் கொடுக்கும் என்று முன்பு கூறியிருந்தோம். இப்போது அதே 7-ம் வீடு மாரகத்தைக் கொடுக்கும் என்று எழுதுகின்றோம். கல்யாணவயதின் போது திருமணத்தைக் கொடுத்த 7-ம் வீட்டின் அதிபர் ஒருவருக்கு ஆயுளை முடிக்கும்போது அவர் மரணத்தையும் கொடுப்பார். ஒருவரின் ஜாதகத்தில் 2, 7, 12 க்கதிபர்கள், அதில் உள்ள கிரகங்கள் மாரகத்தைக் கொடுப்பார்கள் என்றும் எழுதி இருந்தோம். இவர்களைத்தவிர வேறு யாராவது மாரகத்தைக் கொடுப்பார்களா? இருக்கிறார்கள். அவர்களைக் கீழே பார்ப்போம்.

ராசிகளில் மேஷம், கடகம், துலாம் , மகரம்- ஆகியவை சரராசிகள் எனப்படும். இந்த சரரசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும். மேஷத்திற்குப் 11-ம் வீடு கும்பம்: அதன் அதிபதி சனி; ஆகவே மேஷத்திற்கு சனி பாதகாதிபதியாகிறார். இதேபோன்று கடகத்திற்கு சுக்கிரன், துலாத்திற்கு சூரியன், மகரத்திற்கு செவ்வாய் ஆகியோர் பாதகாதிபதியாகிறார்கள். பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மட்டும் மரணத்தைக் கொடுப்பார்கள். மற்ற காலங்களில் அவர்கள் வேறெந்தக் கெடுதலையும் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்குத் துலா ராசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் அதிபதி சூரியன். இவர் 10 வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 10-ம் வீடு ஜீவனஸ்தானம் அல்லவா! லாபாதிபதியான சூரியன் 10-ம் வீட்டில் இருந்தால் நல்ல வேலை கிட்டும். சிலருக்கு அரசங்க உத்தி யோகம் கிட்டும். சூரியன் அரசாங்கத்திற்குக் காரகம் வகிப்பவர். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் எல்லாம் பெற்று நல்ல விதமாக வாழ்க்கை நடத்துவர். சூரியன் லாபாதிபதியாகி ஜீவனத்தில் அனர்ந்து அனைத்து நன்மைகளையும் செய்வார். சரி! அவருக்கு ஆயுள் 65 முடிய எனக்கொள்ளுங்கள். அப்போது சூரியதசையோ, அல்லது சூரியபுக்தியோ வருமாகில் அவர் அப்போது மாரகத்தைக் கொடுப்பார். அப்போது அவர் லாபாதிபதியாகச் செயல் படமாட்டார். பாதகாதிபதியாகச் செயல் படுவார். உத்தியோகத்தில் அவ்வளவு நன்மைகளைச் செய்த சூரியன் மாரகம் என்று வரும் போது மரணத்தைக் கொடுக்கவும் தயங்குவதில்லை. தன் கடமையைத் தவறாமல் செய்வார்.

ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம் வீட்டிற் கதிபதிகளான முறையே சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் பாதகாதிபதி ஆகின்றனர்.இவர்கள் ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார்கள். ரிஷபத்திற்கு சனியோககாரகன் எனப் பெயர். அவர் தன் தசாபுக்தி காலங்களில் நன்மையைத்தான் செய்வார். இருப்பினும் ஆயுள்முடியும் போது அவர் தன் கடமையைச் செய்யாமலிருப்பதில்லை. அவர் மரணத்தைக் கொடுப்பார். ஆயுள் இருக்கும்போது நல்லவைகளையும், ஆயுள் முடியம்போது மாரகத்தையும் கொடுப்பார்.

உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார். மிதுனத்திற்கு 7-ம் வீட்டின் அதிபதி குரு, கன்னிக்கு 7-ம் வீடான மீனத்திற்கதிபதி குரு பாதகாதிபதியாகிறார். தனுசுவிற்கும், மீனத்திற்கும் புதன் 7-ம் வீட்டிற்கதிபதியாகி அவர் பாதகாதிபதியாகிறார். இளமையில் திருமணத்தைக் கொடுத்த குருவும், புதனும் ஆயுள் முடியும்போது ஆயுளை முடித்துவைக்கவும் செய்வார்கள். இப்போது மாரகாதிபதிபதிகள், பாதகாதிபதிகள் யார் யார் எனத் தெரிந்து கொண்டீர்கள். கீழே சில உதாரணஜாதகத்தைக் கொடுத்து இருக்கிறோம். அவர்களுக்கு எப்போது மாரகம் சம்பவித்தது எனக் கொடுத்துள்ளோம்.ஜாதகம் No.1 ஐப் பாருங்கள். இவர் 53 ஆண்டுகள்தான் வாழ்ந்து இருந்தார். சனிதசை, ராகு புக்தியில் காலமானார். சனி இவருக்கு யோககாரகன். அப்படி இருந்தும் இவர் அவர் தசையில் ராகு புக்தியில் காலமானார். சனி மாரகஸ்தானமான 7-ம் வீட்டில் இருக்கிறார். புக்தினாதனான ராகு சனியால் பார்க்கப்படுகிறார். ஆக சனிதசை, ராகுபுக்தியில் இவருக்கு மாரகம் சம்பவித்தது.அடுத்த ஜாதகம் No. 2-ஐப் பாருங்கள். இவர் வாழ்ந்தது 31 ஆண்டுகள்தான். குருதசை, செவ்வாய் புக்தியில் காலமானார். குரு எப்படி மரணத்தைக் கொடுத்தார்? இந்த இலக்கினத்திற்கு 11-க்குடையவன் சுக்கிரன் மாரகாதிபதி அல்லவா? அவருடைய நட்சத்திரமான பரணியில், குரு இந்த ஜாதகத்தில் அமர்ந்து இருக்கிறார். ஆக மாரகாதிபதி சுக்கிரன் கொடுக்கக்கூடிய மரணத்தை குரு கொடுத்துவிட்டார். அதுசரி! புக்திநாதன் செவ்வாய் எப்படி மரணத்தைக் கொடுத்தார்? செவ்வாயானவர் ஸ்வாதி நட்சத்திரத்தில் இருக்கிறார். ராகு 8-ல் இருந்தாலும் அவர் சனியின் வீட்டில் இருப்பதால் சனி கொடுக்கக்கூடிய பலன்களைஅவர் கொடுப்பார். ஏனெனில் அவருக்கு சொந்த வீடு எதுவும் கிடையாது. அவர் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டுப்பலனைக் கொடுப்பார் அல்லவா? சனி 7, 8 வீடுகளுக்கு அதிபதி. ஆக ராகுவானவர் 7-ம் வீட்டுப் பலனையும் கொடுக்கின்றார். 7-ம் வீடு மாரகஸ்தானம் அல்லவா? ஆக சனி கொடுக்க வேண்டிய மாரகத்தை ராகு கொடுக்கின்றார். அவருடைய நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்ததால் செவ்வாய் இந்த ஜாதகருக்கு மாரகத்தைக் கொடுத்து விட்டார். இந்த உதாரணத்திலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ஒரு கிரகம் எந்த நட்சத்திரச் சாரத்தில் அமர்ந்து இருக்கிறது என்பதையும் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும். நட்சத்திரச்சாரம் மிகவும் முக்கியம். பலன் சொல்லும்போது ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தின் காலில் அல்லது சாரத்தில் அமர்ந்துள்ளது எனப் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். இப்போது ஒரளவிற்கு ஆயுள் பாவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ளீர்கள். பல ஜாதகங்களைவைத்துக் கொண்டு அவர்கள் எப்போது காலமானார்கள் எனப் பார்த்து பலன் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:21 am

ஒருவருக்கு இப்போது என்ன தசா, புக்தி நடக்கிறது என எப்படிக் கண்டுபிடிப்பது? ஒரு உதாரணம் கொடுக்கின்றோம். நாம் ஜாதகம் போடும் போது ஜெனன காலத்தில் என்ன தெசை இருப்பில் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறோம் அல்லவா? அதை வைத்துக் கொண்டுதான் போட வேண்டும். ஒருவர் 23-01-1944-ம் தேதி பிறந்து இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். அவர் பிறந்த போது ஜெனன கால இருப்பு தெசை கேது தெசை வருஷம் 0 மாதம் 04 நாள் 04 எனக் கொள்ளுங்கள். இன்றைக்கு அதாவது 21-07-2002 அன்று என்ன தெசை, என்ன புக்தி நடக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒவ்வொரு தசைக்கும் எவ்வளவு வருஷம் என்பதை நாம் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். ஒவ்வொரு தசைக்குள்ளும் புக்திகள் எவ்வாறு பிரிக்கப்பட்டு இருக்கின்றன என்று பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ளன.

சூரிய தசை6 ஆண்டுகள்
சந்திர தசை10 ஆண்டுகள்
செவ்வாய் தசை7 ஆண்டுகள்
ராகு தசை18 ஆண்டுகள்
குருதசை16 ஆண்டுகள்
சனி தசை19 ஆண்டுகள்
புதன் தசை17 ஆண்டுகள்
கேது தசை7 ஆண்டுகள்
சுக்கிர தசை20 ஆண்டுகள்
மொத்தம்120 ஆண்டுகள்பிறந்த வருஷம், மாதம், நாள்1944 - 01 - 23
ஜெனன கால இருப்புதசை- கேது0 - 04 - 04
 
 1944 - 05 - 27
அடுத்த தசை - சுக்கிரன்20 - 00 -00
 
 1964 - 05 - 27
அடுத்த தசை - சூரியன்6 -00 - 00
 
 1970 -05 - 27
அடுத்த தசை - சந்திரன்10 -00 - 00
 
 1980 - 05- 27
அடுத்த தசை - செவ்வாய்7 - 00 - 00
  
 1987 - 05 - 27


மேற்கண்ட தேதியில் செவ்வாய் தசை முழுவதுமாக முடிந்து விட்டது. தற்போது ராகு தசை நடந்து கொண்டு இருக்கிறது. அது முடியாததால் என்ன புக்தி நடந்து கொண்டிருக்கிறது எனப் பார்க்க வேண்டும். அதைப் பார்ப்போம்.

ராகு தசை ஆரம்பம்1987 - 05 - 27
ராகு புக்தி2 - 08 - 12
  
 1990 - 02 - 09
குருபுக்தி2 - 04 - 24
  
 1992 - 07 - 03
சனி புக்தி
2 - 10 - 06
  
 1995 - 05 - 09
புதன் புக்தி2 - 06 - 18
  
 1997 - 11 - 27
கேது புக்தி1 - 00 - 18
  
 1998 - 12 - 15
சுக்கிர புக்தி3 - 00 - 00
  
 2001 - 12 - 15
சூரிய புக்தி0 - 10 - 24
  
 2002 - 11 - 09


பெரும். அதற்குப் பின் சந்திர புக்தி நடை பெறும்.

ஒருவருக்கு ஜெனன காலத்தில் சனிதசை ஆரம்பம் எனக் கொள்ளுங்கள். சனிக்குப்பின் புதன், கேது, சுக்கிரன் என்று தசைகள் நடைபெறும். இப்போது ஒருவருக்குத் தற்கால தசா புக்திகள் கண்டுபிடிக்கத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா!மறுபடி அடுத்த பாடத்தில் சந்திப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:22 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 15


சென்ற பாடத்தில் ஆயுள் எப்படிக் கணிப்பது என்று ஓரளவிற்குத் தெரிந்து கொண்டீர்கள். நாம் எப்படிப் பார்ப்பது என ஓரளவிற்குத்தான் சொல்லிக் கொடுத்தோம். நீங்கள் பல ஜாதகங்களைப் பார்த்து அவர்கள் எப்போது மரணமடைந்தார்கள் என்று பார்த்து அப்போது என்ன தசா, புக்தி என்று பார்க்க வேண்டும். ஆயிரம்பேரைக் கொன்ற வன் அரை வைத்தியன் என்பார்கள். அதே போல் நாமும் பல ஜாதகங்களைப் பார்த்துப் பழகினால்தான் பலன்களைக் கூறமுடியும். நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம், ஒரு வீட்டைப் பற்றிக் கூறவேண்டுமானால் அந்த வீட்டிலே சுப கிரகங்கள் இருக்கின்றார்களா அல்லது பாப கிரகங்கள் இருக்கின்றார்களா, அந்த வீட்டின் அதிபர் எங்கு இருக்கிறார், அந்த வீட்டை யார் பார்க்கிறார்கள், அந்த வீட்டின் அதிபர் யாருடன் சேர்ந்திருக்கிறார் என்று பார்த்துத்தான் பலன் சொல்ல முடியும். ஜாதகம் கணிப்பது எளிது. வெறும் கணக்குத்தான். ஆனால் பலன் சொல்லுவது இருக்கிறதே அது அவ்வளவு எளிது இல்லை. எளிதாக இருந்தால் எல்லோரும் ஜோதிடராக முடியும். நாம் இன்னும் முதல் வீடான இலக்கினத்தை இன்னும் முடிக்க வில்லை.

இலக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் இலக்கினாதிபதி நல்ல கிரகத்துடன் சேர்ந்து இருக்கலாம். நல்லத்தையே செய்யும். இலக்கினாதிபதி ஒருபாப கிரகத்துடன் சேர்ந்து இருந்து, இலக்கினத்தில் ராகு இருப்பாரேயாகில் அவருக்கு தாழ்மை உணர்வு இருக்கும். சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை வரண்ட கிரகங்களாகும். இவை ஒருவரின் இலக்கினத்திலே இருப்பாரேயாகில் அவர் சற்று ஒல்லியான உருவம் கொண்டவராக இருப்பர். ஒருவரின் இலக்கினம் சரராசியாக இருந்து, அதன் அதிபர் சர ராசியில் இருந்தால் அவர் அதிகம் வெளியூர்ப்பயணம் செய்து பணம் சம்பாதிப்பார் எனக் கொள்ளலாம். இலக்கினம் சரராசியாகி, நவாம்ச இலக்கினமும் சர ராசியாகி, நவாம்சத்தில் இலக்கினாதிபதி சர இலக்கினத்தில் இருப்பாரே யாகில் அவரும் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டு ஜீவனம் செய்வார் எனக் கொள்ளலாம். ஒருவருக்கு இலக்கினத்தில் பல பாப கிரகங்கள் இருப்பாரேயாகில் அவர் வாழ்க்கையில் பல துக்ககரமான சம்பவங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். இலக்கினத்திற்கு இருபுறமும் ராகுவும், சனியும் அதாவது 12, 2 ஸ்தானங்களில் இருப்பார்களேயாகில் அவர்களுக்கு திருட்டு பயம் இருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:22 am

அதேபோல் ராகுவும், செவ்வாயும் அல்லது சனியும் செவ்வாயும் இலக்கினத்திற்கு 2, 12 வீடுகளில் இருந்தால் திருட்டு பயம் இருக்கும். ஒருவரின் உறுவ அமைப்பைப் பற்றிப் பார்க்கும்போது சூரியன் இலக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பைக் கொடுப்பார். சந்திரன் இருந்தால் உடல் அமைப்பு நல்ல விகிதத்தில் இருக்கும். சிலரைப் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கு கை, அல்லது கால் நீண்டு இருக்கும். அல்லது முகம் மட்டும் நீண்டு இருக்கும். சந்திரன் இலக்கினத்தில் இருப்பாரேயாகில் உடல் அமைப்பு சரியாக இருக்கும். செவ்வாய் இருந்தால் நல்ல ஆரோக்கியமான, உறுதியான உஷ்ணப் பாங்கான உடல் அமைப்பைக் கொடுப்பார். புதனும் இலக்கினத்தில் இருந்தால் நல்ல உறுவமைப்பைக் கொடுப்பார். குரு இருப்பாரேயாகில் நல்ல மதிப்பை உண்டாக்கும் வகையில் உறுவ அமைப்பைக் கொடுப்பார். சுக்கிரன் இருப்பாரேயாகில் கவர்ச்சிகரமான உறுவ அமைப்பைக் கொடுப்பார். ஆனால் அந்த உறுவமைப்பில் பெண்மை கலந்து இருக்கும். சனி இருப்பாரேயாகில் நல்ல கறுமையான கூந்தலைக் கொடுப்பார். குருகிய மார்பு அமைப்புடன் சிறிது சோம்பேரித்தனமாக இருப்பார்.

ஒருவரின் மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சந்திரனின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரன்தான் மனதுக்குக் காரகம் வகிப்பவர். சந்திரன் சுபகிரகங்களான புதன், குரு, சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கலாம். புதனுடன் சேர்ந்து இருந்தால் நியாய உணர்வுடன் இருப்பர். நியாயத்தைப் பேசுபராக இருப்பர். புதன் அடிக்கடி மாறும் குணமுள்ளவரதலால் சந்திரனுடன் சேரும்போது இவர் தன் எண்ணங்களை மாற்றக் கூடியவராக இருப்பர். சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் எப்போதும் கவலை கொண்டவராக இருப்பார். செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் பெண்களாக இருப்பின் மாதவிலக்கு சம்மந்தமான பிரச்சனை இருக்கும். அவர்கள் மன உறுதியுடனும் தைரியத்துடனும் இருப்பர். சந்திரனும், ராகுவும் சேர்ந்து இருந்தால் அதுவும் இலக்கினத்தில் இருந்தால் Hysteria என்னும் மன நோய் இருக்கும். சந்திரனும் குருவும் சேர்ந்து இருந்தால் நல்ல எண்ணங்களோடு மன உறுதியுடன் இருப்பர். பொதுவாக சந்திரனும் ராகுவும், சனியுமோ அல்லது செவ்வாயுமோ இருக்குமேயாகில் அவர்கள் நிச்சயமாக ஒரு emotional Character ஆக இருப்பர். பாப கிரகங்கள் சந்திரனுடன் சேராமல் இருப்பது நல்லது. சந்திரனும் சூரியனும் சேர்ந்து இருந்தால் மிகவும் வலுவான மனதைக் கொண்டவராக இருப்பார். அதே சமயம் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராகவும் இருப்பார். அம்மாவாசை அன்றுதான் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும். அப்போது பிறந்தவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பர்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இலக்கினத்தில் இருக்குமேயாகில் அவர்களுக்கு நரம்பு சம்மந்தமான தொந்தரவுகளிருக்கும். சூரியன் உடலுக்கும், சந்திரன் மனதிற்கும் காரகம் வகிப்பவர்கள் என்று நாம் கூறி இருக்கிறோம். சூரியனோ அல்லது இலக்கினமோ வர்க்கோத்தமத்தில் இருந்தால் முதல் வீடு பலம் பொருந்தியதாகக் கருதப் படும். வர்க்கோத்தமம் என்றால் என்ன? வர்க்கோத்தமம் என்பது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரு கிரகமோ அல்லது வீடோ ஒரே இடத்தில் இருப்பது. ஒருவருக்கு சூரியன் ராசியில் மேஷத்தில் இருக்கிறார் எனக் கொள்வோம். நவாம்சத்திலும் மேஷத்தில் சூரியன் இருப்பாரேயாகில் அது வர்க்கோத்தமம் எனப்படும். அதாவது சூரியன் ராசியிலும், நவாம்சத்திலும் மேஷத்தில் இருக்கிறார். இது சூரியனுக்கு மட்டுமல்ல எந்த கிரகமாக இருந்தாலும் ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அது வர்கோத்தமம் எனப்படும். இலக்கினம் வர்கோத்தமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று கூறலாம். சூரியன் வர்கோத்தமத்தில் இருந்தால் அவர் உடல் வலு உள்ளவராகக் கருதலாம்.

பொதுவாக நல்ல கிரகங்கள் இலக்கினத்தில் இருப்பது நல்லது. பாப கிரகங்கள் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை. நாம் இத்துடன் முதல் இலக்கின பாவத்தை முடித்துக் கொள்வோம். இனி 2-ம் பாவத்தைப் பற்றிப் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:22 am

இரண்டாம் வீட்டை அதன் அதிபதியைக் கொண்டும், அதில் இருக்கும் கிரகங்களை வைத்தும், அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் பலன் கூறவேண்டும். 2-ம் வீட்டை வைத்து எந்தெந்த பலங்களைக் கூறலாம் என்பதைப் பார்ப்போம். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. குடும்பத்தில் அமைதி இருக்குமா அல்லது குழப்பம் இருக்குமா என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். ஆகவே இதை குடும்பஸ்தானம் என்று நாம் குறிப்பிடுகிறோம். ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது எனக் கொள்வோம். அதாவது அந்த வீட்டில் ஒரு நபர் கூடி இருக்கிறார் என்றுதானே இதற்குப் பொருள். அதனால்தான் குழந்தை பிறப்பை இந்த வீட்டை வைத்துக் கூறுகிறோம். அடுத்ததாக இதை தனஸ்தானம் என்று கூறுவார்கள். அதாவது ஒருவருக்குப் பணவரவு நன்றாக இருக்குமா அல்லது சொற்பமாக இருக்குமா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் கண்பார்வை நன்றக இருக்குமா அல்லது பார்வையில் கோளாறு இருக்குமா என்பதையும் இந்த வீட்டையும் வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வாக்கு வன்மையையும் இதை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவர் சிரிக்கச், சிரிக்கப் பேசுவர். ஒருவர் எப்போதுமே ஒருவரையும் மதியாமல் பேசுவர். சிலர் திக்கித்திக்கிப் பேசுவர். ஆக ஒருவரின் நாக்கு வன்மையை இதைவைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வங்கியில் உள்ள பணம், Liquid Cash என்று சொல்லக் கூடிய கையிருப்புப் பணம், நகைகள், Investments ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவருக்குக் கல்யாணம் ஆகவில்லையா? ஏன் என்பதையும் நாம் இந்த இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஆராய வேண்டும். இதைத்தவிர வேறொன்றும் கிடையாதா? உண்டு. இளைய சகோதரத்தின் மரணம், இளைய சகோதரத்தின் வீண் செலவுகள் ஆகியவற்றையும் கூறலாம். எப்படி? 3-ம் வீடு இளைய சகோதரத்தைக் குறிக்கிறது. 3-ம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடு 2-ம் வீடு அல்லவா? ஆக 2-ம் வீடானது இளைய சகோதரத்தின் மரணம், வீண் செலவுகள், ஆகியவற்றையும் இந்த வீடு குறிக்கிறது.

4-ம் வீடு தாயாரைக் குறிக்கிறது. 4ம் வீட்டிற்குப் 11-ம் வீடு 2-ம் வீடு அல்லவா? ஆக தாயாரின் லாபங்களையும் இது குறிக்கிற்து. ஒருவரின் 7-ம் வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்கு 8-ம் வீடு 2-ம் வீடல்லவா? ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இவருக்கு 7-ம் வீடு மீனம். இது இவருடைய மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்க்கு 8-ம் வீடு எது? துலாம் அல்லவா? இந்த 8-ம் வீட்டில் குரு இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். அதாவது ஜாதகரின் தனஸ்தானத்தில் குரு இருக்கிறார். குரு எதையும் குறைவில்லாமல் கொடுப்பவர். ஆக இவருக்குப் பணம் குறைவில்லாமல் இருக்கும் எனக் கொள்ளலாம். இவருக்குக் குழந்தை பாக்கியமும் குறைவில்லாமல் இருக்கும் எனவும் கொள்ளலாம். இவரின் மனைவிக்கு இது 8-ம் இடம் என்றும் கூறினோமல்லவா? 8-ம் இடம் என்ன? ஆயுள் ஸ்தானம். ஆக இந்த 8-ம் இடத்தில் குரு இருப்பதால் இவரின் மனைவிக்கு நீண்ட ஆயுள் இருக்குமெனக் கூறலாம். இவ்வாறாக ஒரு வீட்டை வைத்து ஜாதகர் மட்டுமில்லாது மற்றவரின் பலன்களையும் கூறமுடியும். 2-ம் வீட்டை வைத்து ஒருவரின் மூத்த சகோதரத்தின் வீடு, வாசல் ஆகியவற்றைக் கூறமுடியும். மூத்த சகோதரத்தைக் குறிப்பது 11-ம் வீடு. 11-ம் வீட்டிற்கு 4-ம் வீடு ஜாதகரின் 2-ம் வீடல்லவா? ஆக 2-ம் வீட்டை வைத்து ஜாதகரின் ஸ்திரசொத்துக்கள், கல்வி ஆகையவற்றயும் கூறமுடியும்.

இந்த 2-ம் வீட்டை வரும் பாடங்களில் விரிவாகப் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:23 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 16


சென்ற பாடத்தில் 2-ம் வீட்டை வைத்து என்னென்ன பலன் சொல்லலாம் என்பதைப் பார்த்தோம். இப்போது எப்படிப் பலன் சொல்வது என்று பார்ப்போம். ஒருவரின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள 2-ம் வீடு, 6-ம் வீடு, 10ம் வீடு 11-ம் வீடு ஆகியவற்றை கவனமாகப் பார்க்க வேண்டும். 2-ம் வீடு ஒருவரின் தனஸ்தானம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். 6-ம் வீட்டை ஏன் பார்க்க வேண்டும்? 6-ம் வீடு என்பது நாம் ஒருவரின் கீழ் வேலை செய்யும் அடிமைத் தொழிலைக் குறிக்கிறது. சிலர் 6-ம் வீடு என்பது ரோகம், ரணம், கடன் என்று மட்டும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. 6-ம் வீடு நாம் செய்யும் அடிமைத் தொழிலையும் குறிக்கிறது. நாம் செய்யும் வேலையின் மூலம் வருவதுதானே நமது வருமானம். ஆக 6-ம் வீட்டையும் பார்த்தால்தானே நம் வருமானம் தெரியும். ஆக 6-ம் வீட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 10-ம் வீடு என்பது ஜீவன ஸ்தானம் ஆகும். ஜீவனம் என்பது ஒருவருக்கு வியாபாரமாக இருக்கலாம். மற்றொருவருக்கு உத்தியோகமாக இருக்கலாம். ஆக ஜீவனம் என்பது உத்தியோகத்தையோ அல்லது வியாபாரத்தையோ குறிக்கும் பொதுப்படையானவார்த்தை யாகும். ஆக ஒருவரின் பணநிலையைத் தீர்மானம் செய்ய 10-ம் வீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 11-ம் வீடு என்பது லாபஸ்தானம் ஆகும். நாம் சம்பாதித்து செலவு செய்தது போக மிச்சம்தான் லாபம் என்பது. இதைக் குறிப்பதுதான் லாபஸ்தானம் ஆகும். ஆக இந்த 4-வீடுகளையும் கவனமாக ஆராய்ந்தால்தான் ஒருவரின் பணநிலையை நாம் கூறமுடியும்.

இயற்கையிலேயே சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர் பிறைச்சந்திரன் ஆகியவை 2-ம் வீட்டில் இருப்பது நல்லது. பொருளாதாரம் நன்றாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சனி, ராகு, கேது போன்ற பாப கிரகங்கள் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை. பணவசதி குறைவாக இருக்கும். 2-ம் வீட்டின் அதிபதி உச்சமாகவோ அல்லது சொந்த வீட்டிலோ இருப்பது தாராளமான பொருளாதாரத்தைக் குறிக்கும். 2-ம் வீட்டை அதன் அதிபதியோ அல்லது மேற் கூறிய சுப கிரகங்களோ பார்த்தாலும் பொருளாதாரம் நன்றாக இருக்கும். 2-ம் வீட்டில் செவ்வாயோ அல்லது கேதுவோ இருப்பவர்கள் சற்றுக் கடினமான வார்த்தைகளால் பேசுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேச்சு மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும். 8-ம் வீட்டின் அதிபதி தனஸ்தானமான 2-ம் வீட்டில் இருந்தால் அவர்கள் பண நிலைமை நன்றாக இருக்காது. அதே போன்று 12-ம் வீட்டின் அதிபதியும் 2-ம் வீட்டில் இருந்தால் அவர்கள் பண நிலைமையும் நன்றாக இருக்காது.

இரண்டாம் வீட்டின் அதிபதி எந்தெந்த வீட்டில் இருந்தால் என்னென்ன பலன்கள் என்று பார்ப்போம். இலக்கினத்தில் இருந்தால் அவர் சொந்த முயற்சியில் பணம் சம்பாதிப்பார். அவருடன் 9-ம் வீட்டதிபதியோ அல்லது சூரியனோ இருப்பாரேயாகில் அவருக்குப் பிதுராஜித சொத்துக்கள் கிடைக்கும். 2-ம் வீட்டதிபதி சொந்த வீட்டிலேயே இருப்பாரேயாகில் பண நிலை சரளமாக இருக்கும். 3-ம் வீட்டிலிருந்தால் இளைய சகோதரத்திட மிருந்து பண உதவி கிட்டும். 3-ம் இடம் இளைய சகோதரத்தைக் குறிப்பது அல்லவா? 4-ம் இடத்திலிருந்தால் என்ன பலன்? 4-ம் வீடு வாகனங்களைக் குறிக்கிறது அல்லவா? வீடு, வாசல், தாய் வழி சொந்தங்கள் ஆகியவற்றையும் குறிக்கிறது அல்லவா? ஆகவே வாகனங்கள் மூலமாகவும், வீடு, வாசல் வாங்கி, விற்றுத் தொழில் செய்தும் பணம் சம்பாதிப்பர். 5-ம் வீடு என்பது கலைகள், Speculation துறைகள் ஆகியவற்றைக் குறிப்பது ஆகும். இதில் 2-ம் வீட்டிற்குடையவர் இருந்தால் கலைகள் மூலமாகப் பணம் சம்பாதிக்க முடியும். லாட்டரி, ரேஸ், போன்றவற்றிலிருந்தும் பணம் இயலும். அதாவது சிரமமின்றி பணம் சம்பாதிக்க இயலும். 6-ம் இடம் என்பது உத்தியோகத்தைக் குறிக்கிறது. அதில் 2-ம் வீட்டதிபர் இருந்தால் அவர் உத்தியோகம் செய்து பணம் சம்பாதிக்க முடியம் என்று கூறலாம். என்ன! எல்லோருமே உத்தியோகம் செய்துதானே பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நீங்கள் கூறலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:23 am

ஒருவர் உங்களிடம் ஒருஜாதகத்தைக் காட்டி நான் வியாபாரம் செய்வேனா அல்லது வேலைக்குப் போவேனா? என்று கேட்க்கிறார் எனக் கொள்வோம். 10-ம் இடம் ஜீவன ஸ்தானம் அல்லவா? 10-ம் அதிபதி 6-ம் வீட்டிலோ அல்லது 6-ம் வீட்டின் அதிபதியுடனோ சேர்ந்து இருக்கிறார் எனக் கொள்வோம். நீங்கள் தைரியமாக அவர் வேலைக்குப் போவார் எனச் சொல்லலாம். அதேபோன்று 2-ம் வீட்டு அதிபர் 6-ம் வீட்டில் இருந்தாலும் உங்களுக்கு உத்தியோகத்தின் மூலமாகப் பணவரவு கிடைக்கும் என்றும் கூறலாம். 2-ம் வீட்டு அதிபர் 7-ம் வீட்டில் இருந்தால் அன்னிய நாட்டின் மூலமாகப் பணம் வரும் எனக்கொள்ளலாம்.8-ம் வீட்டில் 2-ம் வீட்டு அதிபர் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல. பணவிரயம் ஆகும் எனக் கொள்ளலாம். 9-ம் வீடு வெளிநாட்டுப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? அந்நியத் தொடர்புமூலமாப் பணம் கிடைக்கும் எனக் கொள்ளலாம். 11-வது லாபஸ்தானம் அல்லவா? அங்கு 2-ம் வீட்டு அதிபர் இருப்பது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். பணப் பெருக்கு இருக்கும். 12-ம் வீடு விரையஸ்தானம் என்று சொல்லுவார்கள். அந்த வீட்டை முதலீடு செய்யும் வீடு எனவும் கூறலாம். அதாவது ஒருவர் வீடு வாங்குகிறார் எனக் கொள்வோம். அது ஒரு முதலீடுதானே. 12-ம் வீட்டிலுள்ள கிரகத்தின் தசாபுக்திகளிலோ அல்லது 12-ம் வீட்டு அதிபரின் தசா, புக்தி களிலோ ஒருவர் வீடு வாங்க முடியும். ஏனெனில் 12-ம் வீடு முதலீட்டையும் குறிக்கும். 2-ம் அதிபர் 12-ல் இருந்தால் சிலசமயம் பணவிரயமோ அல்லது முதலீடு செய்யும் செலவோ இருக்கக் கூடும்.

2-ம்வீட்டில் சூரியனும், சந்திரனும் சேர்நது இருந்தால் கண் பார்வையில் குறை இருக்கும். 2-ம் வீட்டு அதிபர் 6 அல்லது 8 அல்லது 12-ம் வீட்டில் இருந்தாலும் கண்பார்வையில் தொந்தரவு இருக்கும். 2-ம் அதிபதி 8-ல் இருந்து அங்கு சூரியனும் இருந்தால் அரசாங்கத்தின் மூலமாகப் பண விரயம் இருக்கும். கிரகங்கள் 2-ம் வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

சூரியன் : 2-ம் வீட்டில் சூரியன் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல: கஷ்டத்தின்பேரில்தான் பணம் சம்பாதிக்க முடியும். நல்ல கிரகங்கள் பார்வை இருந்தால்தான் பண வரவு சரளமாக இருக்கும்.

சந்திரன் : பெண்கள் மூலமாகப் பணவரவு இருக்கும். சந்திரன் பெண்கிரகம் அல்லவா? பணவரவு ஒரே மாதிரியாக இருக்காது. உயர்வும், தாழ்வும் இருந்து வரும்.

செவ்வாய் : இவர்கள் சண்டைக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் பேச்சுத் திறமை இருக்கும்.

புதன் : ஏஜென்சி தொழில் மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ பணம் சம்பாதிப்பர். சிலர் தான் கற்ற கல்வியைக் கொண்டு பணம் சம்பாதிப்பர். சிலருக்கு இரட்டை வருமானம் உண்டு; ஏனெனில் புத ஒரு இரட்டைக் கிரகம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:24 am

குரு : பணப் புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பம் விருத்தியாகும். பொதுவாக 2-ம் வீட்டில் குரு நன்மையையே செய்யும்.

சுக்கிரன் : பணப் புழக்கம் நன்றாக இருக்கும். மிக இனிமையாகப் பேசுவார். சிலருக்குப் பெண்களாலும், வாகனங்களாலும் வருமானம் உண்டு.

சனி : பணப்புழக்கம் மிகக் குறைவாக இருக்கும்.வேலைக்கேற்ற ஊதியம் கிட்டாது. குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்காது. பலருடன் கலந்து பழகத்தெரியாதவர்.

ராகு : குடும்பத்தில் குழப்பம் இருக்கும். கண்பார்வையில் கோளாறு ஏற்படும். ராகுவுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோதான் நன்மை ஏற்படும்.

கேது : கடுமையகப் பேசக் கூடியவர். பண நஷ்டம் ஏற்படக் கூடும்.

2-ம் வீட்டைப் பற்றி " ஜாதகதத்துவத்தில்" என்ன சொல்லி இருக்கிறது எனப்

பார்ப்போம். பணக்காரன் ஆகும் யோகம்:-

1. இலக்கினாதிபதியும் லாபாதிபதியும் சேர்ந்து தனஸ்தானத்தில் இருத்தல்.

2. 2-ம் வீட்டு அதிபரும், 10-ம் வீட்டு அதிபரும் சேர்ந்து கேந்திரஸ்தானத்தில் இருத்தல்.

3. 10-ம் வீட்டு அதிபரும், 11-ம் வீட்டு அதிபரும் சேர்ந்து இருத்தல்.

4. ஒரு ஜாதகத்தில் 4-கிரகங்கள் சொந்த வீட்டில் இருத்தல்.

5. 2-ம் வீட்டிற்குடையவன் 9, 10, 11- வது வீட்டில் இருத்தல்.

6. சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து ஒரே வீட்டில் இருத்தல். இதைச் சந்திரமங்கள யோகம் என்பார்கள்.

7. கேந்திரஸ்தானம் என்று சொல்லுகின்ற 1, 4, 7, 10-ம் வீடுகளில் சுபகிரகங்கள் இருத்தல்.

8. குரு தன் சொந்த வீட்டிலும், 5-ம் வீட்டில் சந்திரனும் இருத்தல்.

9. சூரியன் சிம்மத்திலும், குருவும், செவ்வாயும் 1-ம் வீட்டிலும் இருத்தல்.

10. கீழே புதையல் கிடைப்பதற்கான யோகத்தைக் கீழே கூறி இருக்கிறார்.

11-ம் வீட்டு அதிபதி இலக்கினத்திலும், இலக்கினாதிபதி 2-ம் வீட்டிலும், 2-ம் வீட்டு அதிபதி 11-ம் வீட்டிலும் இருந்தால் புதையல் கிடைக்கும். (இந்தக் காலத்தில் புதையல் கிடைப்பது என்பது அரிது. லாட்டரி, ரேஸ் போன்ற வற்றிலிருந்து பணவரவு இருக்குமெனக் கொள்ளலாம்)

இவ்வாறாக ஜாதக தத்துவம் பல்வேறு கிரக நிலைகளைக் கூறி இருக்கிறது. இரண்டாம் இடத்தை வாக்குஸ்தானம் என்று கூறி இருக்கிறோம் அல்லவா? 2-ம் வீடு ஊமை ராசிகளாகி (கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை ஊமை ராசிகளாகும்) அதில் கேது இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் ஊமையாகப் போகக் கூடிய வாய்ப்பு உண்டு. 2-ம் வீட்டில் சந்திரன் இருந்து புதன் பார்ப்பாரேயாகில் அந்த ஜாதகர் மிகவும் தெளிவாகப் பேசுவார். சுக்கிரன் பார்ப்பாரேயாகில் சினிமா, டிராமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களையும், மற்றும் பால் உறவினைப்பற்றியும் அதிகமாகப் பேசுவர். சனி பார்த்தாரேயாகில் சொற்பமாகப் பேசுவார். சூரியன் பார்த்தால் மிகவும் கண்ணியமாகப் பேசுவார்.

2-ம் இடத்தைவைத்து ஒருவரின் 2-ம் கல்யாணத்தைப் பற்றிக் கூறவேண்டும். திருமணத்தைப் பற்றி எழுதும்போது நாம் 2-ம் கல்யாணத்தைப் பற்றி எழுதுவோம்.

மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Sat Jul 05, 2014 4:24 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 17


இதுவரையில் 2-ம் வீட்டைப் பற்றிப் பார்த்தோம். இந்தப் பாடத்தில் 3-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம். 3-ம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்?

மூன்றாம் வீட்டை வைத்து ஒருவர் தைரியமானவரா, இல்லையா என்றும் கூறலாம். ஆகவே இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்று கூறுவர். ஒருவரின் வலது காதையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். காது கேட்குமா அல்லது காதில் ஏதாவது தொந்தரவு இருக்குமா என்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவரின் இளைய சகோதரத்தையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவருக்குப் படிப்பதற்கு ஆசை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவருக்குப் 10-ம் வீட்டதிபர் 3-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபர் 10-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபரும், 10-ம் வீட்டதிபரும் சேர்ந்திருந்தாலும் ஒருவர் போலீஸ் வேலைக்கோ அல்லது ராணுவத்திலோ வேலை செய்வார் என்று கூறலாம். ஏன்? 3-ம் வீடு தைரியத்தைக் குறிக்கிறது. 10-ம் வீடு ஜீவன ஸ்தானம் அல்லவா? போலீஸ், ராணுவம் இவற்றிற்கு மிக முக்கியமானது தைரியம் அல்லவா? ஆக இந்த சேர்க்கை இத்தகைய வேலையைக் குறிக்கிறது. செவ்வாய் கிரகம் தைரியத்திற்குக் காரகம் வகிப்பவர். அவரும் 10ம் வீட்டிலோ அல்லது 10-ம் வீட்டதிபருடன் சேர்ந்தோ அல்லது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ போலீஸ் அல்லது ராணுவ வேலைக்குப் போவார் என்று கூறலாம். 3-ம் வீடு குறுகிய பிரயாணத்தைக் குறிக்கிறது. ஒருவர் சென்னையிலிருந்து திருச்சிக்குப் போகிறார் எனக் கொள்ளுங்கள். இது ஒரு குறுகிய பயணம். இந்தப் பயணத்தைக் குறிப்பது 3-ம் வீடு. ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்கிறார் எனக்கொள்ளுங்கள். இது நீண்ட பயணம் அல்லவா? இந்த நீண்ட பயணத்தைக் குறிப்பது 9-ம் வீடு. ஆக 3-ம் வீடு Short Journeys என்று கூறப்படுகிற குறுகிய பயணத்தையும், 9-ம் வீடு Long journey என்று கூறப் படுகிற நீண்ட பயணத்தையும் குறிக்கும்.

என் நண்பர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு வங்கியில் Inspection செய்யக் கூடிய வேலை. அது சம்மந்தமாக அவர் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். அவர் என்னிடம் "நான் எப்போது உள்ளூரிலேயே இருப்பேன்? அடிக்கடி வெளியூர் செல்ல முடியவில்லை" என்று கேட்டார். அவர் ஜாதகத்தைப் பார்த்த போது அப்போது நடக்கும் தசா, புக்திகள் 3-ம் வீட்டைக் குறிப்பனவாக இருந்தது. அதாவது அவர் மிதுன இலக்கினம். 3-க்குடைய சூரியனின் புக்தி நடந்து கொண்டிருந்தது. அடுத்த புக்தியின் அதிபதியான சந்திரன் 9-ம் வீட்டில் இருந்தார். அதற்கும் அடுத்த செவ்வாயானவர் 4-ம் வீட்டில் இருந்தார். நாம் "தற்போது சூரியனின் புக்தி நடந்து கொண்டிருக் கிறது. சூரியன் 3-ம் வீட்டிற்கதிபதி. ஆகவே வெளியூர்ப் பயணத்தைத் தவிர்க்க முடியாது. தற்போது பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் சென்று கொண்டு இருக்கிறீர்கள். இந்த சூரியன் புக்தி முடிந்து சந்திர புக்தியின்போது இன்னும் தூரத்திலுள்ள ஊர்களுக்குச் சென்றுவருவீகள். அடுத்தபுக்தியான செவ்வாய் 4-ம் வீட்டில் இருக்கிறார். அப்போதுதான் நீங்கள் உள்ளூரிலேயே தங்கி இருக்க முடியும்" என்று கூறினோம். அதன்படியே சூரியபுக்தியின் போது தமிழ் நாட்டிற்குள் பயணம் செய்து கொண்டிருந்த அவர் சந்திர புக்தியின்போது பக்கத்திலுள்ள அண்டை மாநிலங்களுக்கெல்லாம் பயணம் செய்ய ஆரம்பித்தார். சந்திரன் 9-ம் வீட்டில் இருப்பதால் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியது இருந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:00 am

4-ம் வீடு என்பது தற்போது குடியிருக்கும் ஊரைக் குறிக்கும். ஆகவே செவ்வாய் புக்தியில் பழையபடி சொந்த ஊரிலேயே வேலைசெய்யும்படியாக மாற்றல் ஆகிவிட்டது. ஆக இப்போது 3-ம் வீடு எப்படி பயணத்தைக் கொடுக்கிறது என்பது விளங்கி இருக்கும். 3-ம் இடம் என்பது தைரியஸ்தானம் அல்லவா? 3-ல் சனி இருந்தால் அவர் மிக நிதானமாகச் செயல்படுவார். அதே இடத்தில் செவ்வாய் இருந்தால் மிக துணிச்சலாக நிதானமிழந்து அவசரப்பட்டு செயல் படுவார்.

இளைய சகோதரம், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். கடிதப் போக்குவரத்து, எல்லாவிதமான செய்திகள், ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். உங்களுக்கும் இளைய சகோதரத்திற்கும் நல்லுரவு இருக்குமா அல்லது இருக்காதா என்பதையும் 3-ம் வீட்டை வைத்துச் சொல்லலாம். 3-ம் வீட்டில் சனி இருப்பாரேயாகில் உங்களுக்கும் உங்கள் சகோதரத்திற்கும் திருப்தியான உறவு இருக்காது; குரு இருந்தால் நல்லுறவு; செவ்வாய் இருந்தால் சண்டை; இவ்வாறாகப் பலன் கூறலாம். 3-ம் வீடு ஏஜென்சித் தொழிலையும் குறிக்கும். 3-ம்வீடும் 2-ம்வீடான தனஸ்தானத்துடனோ, அல்லது 6-ம் வீடான தொழில் ஸ்தானத்துடனோ, அல்லது 10ம் வீடான ஜீவனஸ்தானத்துடனோ சம்மநதப்பட்டு இருந்தால் ஒருவர் Agency தொழில், Broker ஆகிய தொழில் செய்வர். 3-ம் வீட்டில் ஒருவருக்கு கேது இருப்பாரேயாகில் அவரை நாரதர் என்று கூறலாம். ஏனெனில் அவரால் அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருக்க முடியாது.

நீங்கள் ஒரு வீட்டில் இருக்கிறீர்கள். அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டுமென்றால் 3-ம் வீட்டின் தசை, அல்லது புக்தி காலங்களில்தான் செய்ய முடியும். 4-ம் வீடு என்பது தற்போது குடிருக்கும் வீட்டைக் குறிக்கிறது. 4-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 3-ம் வீடல்லவா? ஆக 3ம் வீட்டக் குறிக்கும் தசை அல்லது புக்தியின் போதுதான் நாம் வேறு வீடு குடி செல்ல முடியும்.

உடல் உறுப்புக்களில் காது, கை, தொண்டை, தோள்பட்டை ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். 3-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் மேற்கண்ட உறுப்புக்களில் ஏதாவது தொந்தரவு இருக்கும்.ஒருவர் மருத்துவராக இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். மருத்துவத்திற்குக் காரகம் வகிப்பவர் சூரியன். அதனால்தான் அவர் தன்வந்திரி என்று அழைக்கப் படுகிறார். அவர் 10-ம் வீட்டுடன் சம்மந்தப் பட வேண்டும். அப்போதுதான் ஒருவர் மருத்துவராக முடியம். சரி! ஒருவர் மருத்துவராகிவிட்டார். 10-ம் வீட்டதிபதி 3-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டால் அவர் எந்தத் துறையில் மருத்துவராக முடியும். சொல்லுங்கள் பார்ப்போம்? 3-ம் வீடு காதைக் குறிக்கிறது அல்லவா? அவர் E.N.T டாக்டராக இருப்பார். நாம் சொல்லும் விளக்கம் உங்களுக்கு இப்போது புரிந்து இருக்குமென நினைக்கிறோம். ஜீவன, மற்றும் தொழில் ஸ்தானத்தைப் பற்ரிப் பார்க்கும்போது இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.

ராசிகளில் ஆண்ராசி, பெண்ராசி என்று உண்டென்பது உங்களுக்குத் தெரியும். அதேபோல் கிரகங்களிலும் ஆண் கிரகங்கள், பெண் கிரகங்கள், அலி கிரகங்கள் என்று உண்டு. அவையாவன...

ஆண்கிரகங்கள் : சூரியன், செவ்வாய், குரு ஆகிய மூன்றும் ஆண் கிரகங்கள் எனப்படும்.

பெண் கிரகங்கள் : சந்திரன், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் பெண் கிரகங்கள் எனப்படும்.

அலி கிரகங்கள் : புதன், சனி, கேது ஆகிய மூன்றும் அலிக்கிரகங்கள் எனப்படும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:01 am

3-ம் வீட்டதிபர் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சகோதரர்கள் அதிகமிருப்பர் எனக்கொள்ளலாம். அதேபோன்று 3-ம் வீட்டுக்காரர் பெண் ராசியில் இருப்பாரேயாகில் சகோதரிகள் அதிகம் இருப்பார்கள் எனக் கொள்ளலாம்.

ஒருவருக்கு எவ்வளவு சகோதர, சகோதரிகள் இருப்பார்கள் என்று எப்படிக் கூறுவது? இதற்கு ஒருவழி இருக்கிறது. அது எப்படி எனப் பாருங்கள்.

ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

ராசி : கன்னியில் இலக்கினம். தனுசில் சுக்கிரன், புதன், சந்திரன், மகரத்தில் கேது, சூரியன்; ரிஷபத்தில் சனி, செவ்வாய்; கடகத்தில் ராகு; சிம்மத்தில் கேது.

நவாம்சம் : மீனத்தில் இலக்கினம், சூரியன்; மேஷத்தில் சுக்கிரன், செவ்வாய், குரு ரிஷபத்தில் கேது, கடகத்தில் சந்திரன், சிம்மத்தில் புதன், கன்னியில் சனி; விருச்சிகத்தில் ராகு.

இதுதான் ஜாதகம்; இவர் இலக்கினம் கன்னி. சகோதரனுக்குக் காரகம் வகிப்பவர் செவ்வாய்; அவரே 3-ம் வீட்டிற்கும் உடையவர் ஆகிறார். 3-ம் வீட்டதிபர் நவாம்சத்தில் எவ்வளவு நவாம்சம் சென்றிருக்கிறார் எனப்பாருங்கள். அதை எப்படிக் கண்டு பிடிப்பது? ராசியில் செவ்வாய் ரிஷபத்தில் இருக்கிறார். நவாம்சத்தில் மேஷத்தில் இருக்கிறார். அதாவது 4-வது நவாம்சத்தில் இருக்கிறார். ரிஷபத்தில் ஒன்பது நட்சத்திரப் பாதங்கள் அல்லவா? கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்; ரோகிணி 1, 2, 3, 4 பாதங்கள்; மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள். செவ்வாய் ரோகிணி 1-ம் பாதத்தில் இருப்பதால் நவாம்சத்தில் மேஷத்தில் இருக்கிறார். அதாவது கார்த்திகை மூன்றுபாதங்கள், ரோகிணி 1-ம் பாதத்தையும் சேர்த்து மொத்தம் 4 பாதங்கள் சென்று விட்டன; அதைத்தான் நாம் 4 வது நவாம்சத்தில் இருக்கிறார் என மேலே குறிப்பிட்டுள்ளோம். 3-ம் வீட்டிற்கதிபதி 4 நவாம்சம் சென்று இருப்பதால் இவரையும் செர்த்து மொத்தம் 4 பேர்கள் இவருடன் கூடப்பிறந்தவர்கள். இது கூடப் பிறந்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி. முன்பு குழந்தை பிறப்பதைக் கட்டுப் படுத்த வழி கிடையாது. இப்போதோ கட்டுப்படுத்துவதற்கு வழிகள் பிறந்து விட்டன். இப்போது ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை, அல்லது இரண்டு குழந்தைகள் என்ற அளவில் கட்டுப்பாடு வந்து விட்டது. குழந்தை பிறப்பை செயற்கை முறையில் கட்டுப் படுத்துகிறோம். ஆகவே நாம் மேற்கூறிய விதி இந்தக் காலத்துக்கு ஒத்து வராமல் போகலாம். இருப்பினும் வாசகர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில் எழுதலானோம்.

பொதுவாக மூன்றாம் வீட்டில் சுப கிரகங்கள் இருப்பின் அந்த பாவம் நன்றாக இருக்கும். மாறாக பாவ கிரகங்கள் இருந்தால் அந்த பாவம் பெரிதும் பாதிக்கப்படும். அதேபோல் மூன்றாம் வீட்டை சுபகிரகங்கள் பார்த்தால் அந்த வீடு பலம் பெற்று நன்றாக இருக்கும். பாவ கிரகங்கள் பார்வை இருப்பின் அந்த வீடு கெட்டு விடும். மூன்றாம் வீட்டு அதிபர் 6, 8, 12 வீடுகளில் இருந்தாலோ அல்லது 3-ம் வீட்டு அதிபர் பாவர்களின் சேர்க்கை பெற்று இருந்தாலோ அந்த வீடு கெட்டு விடும். இத்துடன் நாம் மூன்றாம் வீட்டைப் பற்றிக் கூறுவதை நிறுத்திக் கொள்வோம். மற்றவைகளை அடுத்தபாடத்தில் படிப்போம். நாம் ஏற்கனவே கூறி இருக்கிறோம், நீங்கள் இன்னும் பல ஜோதிடப் புத்தகங்கள் படிக்க வேண்டுமென்று. படித்தால்தான் மேலும்பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். பலாதீபிகை, ப்ருஹத் ஜாதகம், உத்திரகாலாம்ருதம் ஆகியவை மிகவும் பயனுள்ள ஜோதிட நூல்கள். இவைகள் எல்லாம் வடமொழியில் இருந்தாலும் இவைகளின் மொழிபெயர்ப்புக்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கிடைக்கின்றன. அவைகளை வாங்கிப் படியுங்கள். உங்கள் ஜோதிட அறிவு வளரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by சிவா on Thu Jul 17, 2014 4:02 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 18


சென்ற பாடம் வரையிலும் 3-வது வீடு முடியப் பலன் சொல்லத் தெரிந்து கொண்டுள்ளீர்கள். பாடங்களைத் திரும்பத்திரும்பப் படியுங்கள். உங்களுக்குப் புரியும். ஒருவர் ஜோதிடராக வேண்டுமென்றால் எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும். நீங்கள் மொட்டு நிலையிலுள்ள ஜோதிடர். (Budding Astrologers). அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஒருவர் மருத்துவராக வேண்டுமென்றால் சூரியன் ஜீவன ஸ்தானத்துடன் சம்மந்தம் பெற வேண்டும். ஏனெனின் சூரியன்தான் தன்வந்திரி என்றழைக்கப் படுகிறார். ராணுவம் அல்லது போலீஸ் வேலைக்குப் போக வேண்டுமென்றால் செவ்வாய் ஜீவனஸ்தானத்துடன் சம்மந்தம் பெறவேண்டும். கலைத் தொழிலில் ஒருவர் இருக்க வேண்டுமென்றால் சுக்கிரன் சம்மந்தப்பட்டு இருக்க வேண்டும். ஏனெனில் சுக்கிரன்தான் கலைக்கு அதிபதி. இவ்வாறாக ஒவ்வொரு துறைக்கும் ஒரு கிரகம் இருக்கிறது. ஜோதிடத்திற்கு எந்த கிரகம் காரகம் வகிக்கிறது? "புதன்". இவர்தான் ஜோதிடத்திற்குக் காரகம் வகிக்கிறார்.

1. ஜோதிடராக விரும்புகிறவர்கள் ஓரளவிற்குக் கணிதம் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணிதமென்றால் Algebra, Geometry என்றல்ல; அடிப்படைக் கணிதத்தில் தவறு செய்யாதவறாக இருக்க வேண்டும். ஏனெனில் ஜாதகம் தவறு இல்லாது கணிக்க வேண்டுமல்லவா?

2. நமது முன்னோர்கள் எழுதியுள்ள ஜோதிட நூல்களைப் படிக்க வேண்டும்.

3. அதில் கூறப்பட்டுள்ள விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

4. ஜோதிடர்களுக்கு தெய்வபக்தி மிக அவசியம். அந்த பக்தி இருந்தால்தான் பலன்களைச் சரியாகச் சொல்லமுடியும்.

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு துறைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை வரையிலும்தான் நாம் செல்ல முடியும். அதேபோல் ஜோதிடத்திற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் இருந்து நாம் பலன் சொல்ல முடியும். புதன் ஒருவரின் ஜாதகத்தில் 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டிலோ இருக்க வேண்டும். புதன் ஜாதகத்தில் கெட்டுப் போகாது இருக்க வேண்டும். புதனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ, அல்லது பார்த்துக் கொண்டாலோ ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற முடியும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் ஒருவரின் அறிவுத்திறனுக்குக் காரகம் வகிப்பவர். ஆக இருவரின் சேர்க்கையும் தெளிவான சிந்தனைக்கும், அறிவு பூர்வமான சிந்தனைக்கும் வழிவகுக்கும். ஆக வலுவான புதன் தீர்க்கமாகச் சிந்தித்துப் பலன் சொல்ல உதவுவார். அந்த புதனுக்கு குருவின் பார்வையும் இருக்குமேயாகில் தெய்வ அனுகிரகம் கிட்டி பலன் சொல்ல உதவி கிடைக்கும். அதைத் தவிரவும் குருவின் பார்வை ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவையும் கொடுக்கும். ஜோதிடராகும் யோகத்தைப் பற்றி ஒரு தமிழ் நூல் கீழ்க் கண்டவாறு கூறுகிறது:-

"ஆட்சி நல் உச்சத்தோடே
அருள் குரு பார்வை பெற்று
மாட்சிமை உடைய வாக்கில்
மாபுதன் நிற்பாரேயாகில்
சூட்சும புத்தியோடே
சோதிடக் கலைகள் கற்றே
பேச்சினில் ஞானம் சொட்டும்
பெரும் புகழ் சோதிடன் காண்"
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum