ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தொடரும் பெண் சிசுக்கொலைகள் - தீர்வு எப்போது?

View previous topic View next topic Go down

தொடரும் பெண் சிசுக்கொலைகள் - தீர்வு எப்போது?

Post by சிவா on Thu Jul 03, 2014 1:10 am


இதுவரை 6 கோடி இந்தியப் பெண்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது உலக சுகாதார மையம்.

பிறப்பதற்கு முன்பே கருவிலேயே அல்லது பிறந்த பிறகு சிசுக்கொலை செய்யப்பட்டும், பெண் என்பதால் புறக்கணிக்கப்பட்டு மரணத்தை தழுவியும் போதுமான வரதட்சணை பணம் தராததால் கணவரின் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டும் மக்கள் தொகையிலிருந்து காணாமல் போனவர்கள் அவர்கள்.

1991ல், பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் ஆசியாவில் 10 கோடி பெண்கள் பாலியல் தேர்வினாலும் (sex-selection) புறக்கணிப்பாலும் காணாமல் போயுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஐந்து கோடி இந்தியப் பெண்களை காணவில்லை என்று 2005ல் 'நியூயார்க் டைம்ஸ்' அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இது இன்று நிகழ்ந்த பிரச்னையல்ல. 1991ஆம் ஆண்டின்போது எடுக்கப்பட்ட சென்செக்ஸில் பெண்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவு குறைவாக காணப்பட்டது. பெண்களின் எண்ணிக்கை தவறுதலாக குறைவாக கணக்கிடப்பட்டதா என்று ஆராயும்போது தான், எண்பதுகளில் பெருமளவில் நிகழ்ந்த பாலியல் தேர்வினால், பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே கருவிலேயே கொல்லப்பட்டதன் தாக்கம் (sex-selective abortion) என்பதை உணர்ந்தனர்.

பிரச்னையின் தொடக்கம் என்ன?

இன்று ‘பேட்டி பச்சாவ்’ (Beti Bachao – Save the girls) என்று பெண் குழந்தைகளை காக்குமாறு அறிவுறுத்தும் இந்திய அரசு, பெண் சிசுக் கொலைக்கு துணை புரிந்திருக்கிறது என்பது, நம்புவதற்கு கடினமான உண்மையாகும். 1970களில் மக்கள் தொகை பெருக்கம் மிகப்பெரிய பிரச்னையாக உருப்பெற்றபோது அதை எப்படி தடுக்கலாம் என்று ஆட்சியாளர்கள் ஆலோசித்தனர். மக்கள் ஆண் குழந்தை பெறும் வரை குழந்தைகளை பெற்றுக் கொள்வதால்தான் மக்கள் தொகை வேகமாக பெருகுகிறது. பெண் குழந்தைகளை கருவிலேயே கண்டறிந்து பிறக்காமல் தடுத்தாலே மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்கலாம் என்று எய்ம்ஸ் (AIIMS) யோசனையொன்றை அரசுக்கு முன்மொழிந்தது. அதைத்தொடர்ந்து அரசின் ஊக்கத்துடன் முக்கிய மருத்துவமனைகளில் பாலின பரிசோதனை நடத்தப்பட்டன.

தொடக்கத்தில் விலையுயர்ந்த ஆம்னியொசெண்டசிஸ் (amniocentesis) மூலம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனை அல்ட்ராசவுண்டின் வருகைக்குப் பின் அதிகளவில் நடத்தப்பட்டன. கர்பப்பையில் சிசுவின் வளர்ச்சி, பனிக்குட நீரின் அளவு, நஞ்சுக் கொடியின் நிலை போன்றவற்றைப் பற்றி அறிய உதவும் வரமாக கிடைத்த அல்ட்ராசவுண்ட் மூலம், பாலின பரிசோதனை செய்ய முடிவதால், அல்ட்ராசவுண்டே லட்சக்கணக்கான பெண் சிசுக்களுக்கு எமனாக மாறிப் போனது. முன்பு பெண் குழந்தை பிறந்த பிறகு அதை கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் முறை, அல்ட்ராசவுண்ட் வந்தபிறகு பிறப்பதற்கு முன்பே கருவிலேயே அபார்ஷன் என்ற பெயரில் கொல்வதாய் மாறிப்போனது. 1951 சென்செக்ஸில் 1000 ஆண்களுக்கு 946 பெண்களாக இருந்த ஆண்-பெண் விகிதாச்சாரம் 1991 சென்செக்ஸில் 927 ஆக குறைந்த போதுதான் இந்திய அரசு விழித்துக்கொண்டது. பாலியல் பரிசோதனையை தடுப்பதற்காக 1994ல் PNDT சட்டத்தை கொண்டு வந்தது..
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தொடரும் பெண் சிசுக்கொலைகள் - தீர்வு எப்போது?

Post by சிவா on Thu Jul 03, 2014 1:10 am

பெண் சிசுக்கொலையை தடுக்க வந்த சட்டம்

கருவிலிருக்கும் சிசுவின் வளர்ச்சி மற்றும் குறைபாடுகளை அறிவதற்கு பயன்படும் அல்ட்ராசவுண்டை சிசுவின் பாலினம் அறிய பயன்படுத்தி பெண் சிசுவாய் இருந்தால் அதை கருக்கலைப்பு நிகழ்த்துவதை தடுப்பதற்காக Pre-Conception & Pre-Natal Diagnostic Techniques Act (PNDT) 1994ல் கொண்டு வரப்பட்டது. (PNDT சட்டத்தின்படி, கர்ப்பப்பையில் உள்ள சிசுவின் பாலின பரிசோதனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

மருத்துவரொருவர் அவ்வாறு பாலின பரிசோதனை செய்தது நிரூபிக்கப்பட்டால், ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்; மேலும் ஐந்து ஆண்டுகள் அவரது அங்கீகாரம் பறிக்கப்படும். இந்த குற்றத்தை மீண்டும் புரிந்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்; அவரது அங்கீகாரம் பறிக்கப்படும். பாலின பரிசோதனை செய்வதற்காக மருத்துவரையோ, பரிசோதனை நிலையங்களையோ அணுகுபவருக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றத்தை மீண்டும் புரிந்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.)

எனினும், இந்த PNDT சட்டத்தின்படி தண்டிப்பட்டவர்கள் மிகச் சொற்பமே. இதுவரை தண்டிக்கப்பட்ட எந்த மருத்துவரின் அங்கீகாரமும் பறிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் மட்டும் 7000 பெண் சிசுக்கள் அபார்ஷன் என்ற பெயரில் கொல்லப்படுவதாக ஐ.நா. கூறுகிறது. அல்ட்ராசவுண்ட் வந்த இந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 12 மில்லியன் பெண் சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. இதை மிகப்பெரிய இனப்படுகொலை என்றுதானே கருத முடியும்? ஜி20 நாடுகளில் பெண்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத நாடு என்ற அவப்பெயரை 2012ல் நமது நாடு சம்பாதித்தது. சண்டிகர், டெல்லி, ஹரியானா, காஷ்மீர், சிக்கிம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 1000 ஆண்களுக்கு 900க்கும் கீழ்தான் பெண்கள் உள்ளனர். மேலும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண்-பெண் விகிதாச்சாரம் 950க்கும் கீழ்தான் உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தொடரும் பெண் சிசுக்கொலைகள் - தீர்வு எப்போது?

Post by சிவா on Thu Jul 03, 2014 1:10 am

பெண் சிசுக்கொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் செய்யும் முதல் பெண்மணி

தன் அனுமதி இல்லாமல், கருவிலிருந்த தனது குழந்தைகளின் பாலினத்தை சட்டத்திற்கு புறம்பாக கண்டறிந்த தனது கணவர் மற்றும் துணை போன மருத்துவமனைக்கு எதிராக PNDT சட்டத்தின் கீழ் முதல் வழக்கை பதிவு செய்தவர் டாக்டர். மீத்து குரானா.

குழந்தைகள் நல மருத்துவரான மீத்து கூறும்போது, “2004ல் மூட்டு நிபுணர் டாக்டர் கமல் குரானாவை மணந்து அவரது வீட்டில் அடி எடுத்து வைத்தது வரைதான் என் வாழ்வில் மகிழ்ச்சி இருந்தது. வரதட்சணையைக் குறைவாக கொண்டு வந்ததால், கணவர் மற்றும் அவரது குடும்பத்தால் தினமும் அவமானப்படுத்தப்பட்டேன். 2005ல், நான் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகப் போவதை அறிந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்காது என்று சிறிதும் நினைக்கவில்லை.

கருவிலுள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்று அறிய பாலின பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று எனது கணவரும், மாமியாரும் கட்டாயப்படுத்தினர். ஒரு அறையில், மூன்று நாட்கள் உணவில்லாமல் பூட்டி வைக்கப்பட்டேன். முட்டைக்கு அலர்ஜியான என்னை, வலுக்கட்டாயமாக முட்டையில் செய்யப்பட்ட கேக்கை சாப்பிட வைத்தனர். அதனால் அலர்ஜி ஏற்பட்டு மயக்க நிலையில், டெல்லியிலுள்ள ஜெய்ப்பூர் கோல்டன் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு, கிட்னியை அல்ட்ராசவுண்ட் எடுப்பதாக பொய்யாக கூறி, இரண்டு குழந்தைகளும் பெண்கள் தான் என்று அல்ட்ராசவுண்ட் மூலம் அறிந்தததும், அபார்ஷன் செய்ய கட்டாயப்படுத்தினர். அதற்கு சம்மதிக்காத என்னை துன்புறுத்தினர்.

ஒரு கட்டத்தில் படிக்கட்டிலிருந்து தள்ளிவிடும் வரை போன பின், என் குழந்தைகளைக் காக்க ரத்தம் வழிய என் தாய் வீட்டை சென்றடைந்தேன். காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற எனக்கு ‘உங்க கணவர் கேட்கற மாதிரி ஒரு ஆம்பள குழந்தைய பெத்து தர வேண்டியதுதானே’ என்ற கிண்டல்களும், அறிவுரைகளும் தான் கிடைத்தன. பெண்ணின் கருமுட்டையுடன் சேரும் ஆணின் விந்திலுள்ள க்ரோமோசோம் y ஆக இருந்தால் அது ஆணாகவும், x ஆக இருந்தால் அது பெண்ணாகவும் வளர்கிறது. குழந்தை பெண்ணாக இருந்தால் அதற்கு காரணமான ஆணை குற்றம் கூறாமல் அப்பாவியான பெண்ணை குற்றம் கூறும் ஆணாதிக்க சமூகம் இது. காவல் நிலையத்தில் நீதி கிடைக்காததால் இறுதியில் நீதிமன்றத்தில் சட்டத்திற்கு புறம்பாக பாலியல் பரிசோதனை செய்த ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை மற்றும் எனது கணவருக்கு எதிராக வழக்கு தொடுத்தேன். கடந்த எட்டு வருடங்களாக நீதிக்காக போராடி வருகிறேன். கருவிலுள்ள ஒவ்வொரு பெண் சிசுவும் கொல்லப்படாமல் தடுக்க எனது போராட்டம் தொடரும்” என்றார்.

பிரபல மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்ததால், மீத்துவின் வேலை பறிபோனது. எனினும் விடாமுயற்சியுடன் தனது இரட்டை பெண் குழந்தைகளுடன் தனது குடும்பம் மற்றும் பெண்கள் அமைப்புகளின் உறுதுணையுடன் நாடு முழுவதும் பெண் சிசுக்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ‘இந்தியப் பெண் குழந்தைகளின் பாதுகாவலர்’ என்று மீத்துவை வட இந்திய ஊடகங்கள் அழைக்கின்றன.

மீத்துவைப் போல், இந்தியாவில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான பாலின பரிசோதனையை தோலுரித்துக் காட்டியவர்கள் மீனா ஷர்மா மற்றும் ஸ்ரீபால் ஷக்தவாத் ஆகிய இரு பத்திரிகையாளர்கள். 2005ல் ஜெய்ப்பூரில் சட்டத்திற்கு புறம்பாக சிசுவின் பாலின பரிசோதனைத் தேர்வை நடத்திய 140 மருத்துவர்களைத் தங்களது ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அடையாளப்படுத்தினர். ஜெய்ப்பூரில் மட்டுமே 140 பேர் என்றால், இந்தியா முழுதும், பாலின பரிசோதனை செய்யும் மருத்துவர்களின் எண்ணிக்கையை கற்பனை செய்யவே பயமாக உள்ளது..
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தொடரும் பெண் சிசுக்கொலைகள் - தீர்வு எப்போது?

Post by சிவா on Thu Jul 03, 2014 1:11 am

பெண் சிசுக்கொலையை தடுக்கவே முடியாதா?

பெண் சிசுக் கொலையை தடுக்கவே முடியாதா என்றால், கண்டிப்பாக தடுக்க முடியும். ஹரியானாவின் நவான்ஷகர் மாவட்டமே அதற்கு நடைமுறை சான்றாகும். நமது நாட்டில் ஆண்-பெண் விகிதாச்சாரம் குறைவாகவும் பெண் சிசுக்கொலை அதிகமாகவும் காணப்படும் மாநிலம் ஹரியானாவாகும் (1000 ஆண்களுக்கு 877 பெண்கள்) . அதிலுள்ள நவான்ஷகர் மாவட்டத்துக்கு புதிதாக வந்த டெபுடி கமிஷ்னர் கிருஷ்ண குமார் பெண் சிசுக்கொலை எதிராக புதிய ஹெல்ப் லைன் நம்பர் உருவாக்கினார்; மாவட்டத்திலுள்ள அனைத்து அல்ட்ராசவுண்ட் பரிசோதனை நிலையங்களிலும் பாலியல் பரிசோதனை நடத்தப்படுகிறதா என்று ஆய்வு நடத்தினார்.

மாவட்டம் முழுவதும் பேரணிகள், நாடகங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக 2001 சென்செக்ஸில் 1000 ஆண்களுக்கு 785 பெண்கள் என்றிருந்த விகிதாச்சாரம் 2011 சென்செக்ஸில் 71 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பெண் சிசுக்கொலையை தடுப்பதற்கு காவல்துறையின் பங்கு மிகவும் தேவை. பல துறைகளிலும் பெண்கள் சாதனையாளர்களாக ஜொலிக்கும் இக்காலத்திலும் பெண் சிசுக்கொலைகள் நிகழ்வது வேதனையாகும். டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து கொதித்தெழுந்த நம் இளைய சமுதாயம் கண் முன்னே நடக்கும் ஒரு இனப்படுகொலையை தடுக்க உறுதி எடுக்க வேண்டும்.

நம்பிக்கையளித்த முதல் தீர்ப்பு

2006ல் சட்டத்திற்கு புறம்பாக சிசுவின் பாலியல் பரிசோதனை நடத்திய டாக்டர் அனில் சபானிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி பல்வால், தனது தீர்ப்பில் குறிப்பிட்ட சில வரிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ''தன்னை தற்காத்துக் கொள்ளும் திறனுள்ள ஒருவரை கொல்வது கொடூரமான குற்றமாகும்; அதை விட கொடூரமானது தற்காத்துக் கொள்ளும் திறனில்லா ஒருவரை கொல்வது. சிசுவின் பாலியல் பரிசோதனை செய்வதன் மூலம் சிசு பெண் என்று அறிந்தால் அதை கருவிலேயே கொல்கிறார்கள். இனிமேல் இந்த கொடூரச் செயலை மற்றவர்கள் செய்யாமல் இருக்க இந்த தண்டனை அளிக்கப்படுகிறது”. இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

1994ல் PNDT சட்டம் வந்தாலும் அந்த சட்டத்தின்படி முதல்முறையாக ஒரு மருத்துவருக்கு தண்டனை அளித்து எச்சரிக்கை மணி அடித்தது இந்த தீர்ப்புதான். இந்த தீர்ப்பு பின்னணியில் இருந்தவர் ஹரியானாவின் முன்னாள் சுகாதார சேவைகளின் பொது இயக்குநர் டாக்டர். பி.எஸ். தாஹியா. டாக்டர் மீத்துவைப் போன்று பெண் சிசுக்கொலைக்கு எதிராகப் போராடும் போராளி. கர்ப்பிணி பெண்களைக் கொண்டு வீடியோ ஆதாரங்களுடன் தான் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் பாலின பரிசோதனை செய்த மருத்துவர்களை காவல்துறை மூலம் கைது செய்தார். அந்த ஆதாரங்கள் மூலம் முதன்முதலாக ஒரு மருத்துவர் PNDT சட்டப்படி தண்டனைப் பெற முக்கிய காரணமாய் விளங்கினார். இந்தியாவில் 30 சதவீத பிரசவங்கள் சட்டத்திற்கு புறம்பாக பாலின பரிசோதனைக்கு உள்ளாவதாக தாஹியா கூறுகிறார். மனித உயிரை காக்க வேண்டிய மருத்துவர்களே காசுக்காக பெண் சிசுக்களுக்கு எமனாவது நமது நாட்டின் சாபக்கேடு! சாதனையாளராக வரவேண்டிய பெண்கள் பலர், பிறப்பதற்கு முன்பே கொல்லப்படும் கொடுமைக்கு முடிவு வராதா?

-மு.ஜெயராஜ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தொடரும் பெண் சிசுக்கொலைகள் - தீர்வு எப்போது?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum