ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 T.N.Balasubramanian

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:40 am

10 குழந்தைகள் உள்பட மேலும் 40 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கிறார்களா? அதிர்ச்சி தகவல்கள்

9 பேரை காணவில்லை

சென்னையை அடுத்த போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த 28–ந் தேதி நடந்த கட்டிட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 36 தொழிலாளர்கள் உள்பட 72 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் மீட்புப்பணிகள் கடந்த 5 நாட்களாக இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து யூகிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் பேர் உயிருடனும், பிணமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர். இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த 4 பெண்கள் நேற்று விபத்து நடந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் விபத்து குறித்த தகவல் மைய அதிகாரிகளிடம் ‘‘எங்களுடைய கிராமத்தைச் சேர்ந்த 9 பேரை காணவில்லை. அவர்கள் இந்த கட்டிடத்தில் தான் வேலை செய்தார்கள். அவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. கண்டுபிடித்து தாருங்கள்’’ என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

உறவினர்கள் யாரும் இல்லை

உடனே அதிகாரிகள் அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு அடையாளம் தெரியாமல் வைக்கப்பட்டு இருந்த 20 உடல்களை காட்டினர். ஆனால் அதில் யாரும் தங்களுடைய ஊரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.

மேலும், ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த சீமாத்தலம் என்பவரும், ‘‘தங்களது உறவினர்கள் சச்சிநாராயணன் (வயது 50), அவருடைய மனைவி ஜெயம்மா (40), வாலிபர் திருப்பதி ஆகிய 3 பேரையும் காணவில்லை, அவர்கள் பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா?’’ என்று தகவல் மைய அதிகாரிகளிடம் கேட்டார்.

அதிகாரிகள், அவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பிணங்களை காண்பித்தனர். அதில் தங்களது உறவினர்கள் யாரும் இல்லை என்று சீமாத்தலம் கூறினார்.

மேலும் 30 பேர் சிக்கியிருக்கலாம்

இதையடுத்து உறவினர்களால் தேடப்பட்டு வரும் நபர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்ட பகுதியில் தங்களது உறவினர்களை தேடி வருகின்றனர். இதனால் கட்டிட இடிபாடுகளில் மேலும் 30 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் விபத்து நடந்த கட்டிடத்திலேயே தங்கி பணியாற்றியதாகவும், 10–க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாகவும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர்.

இதனால் அந்த குழந்தைகளின் கதி என்னவென்று தெரியவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் விபத்து நடந்த பகுதியைச் சுற்றிலும் துர்நாற்றம் பயங்கரமாக வீசுகிறது.

தற்போது வரை 50 சதவீத கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு உள்ளது. தரைத்தள கட்டிட இடிபாட்டு பகுதி இன்னும் அகற்றப்படவில்லை. எனவே அந்த இடிபாடு பகுதிகளை அகற்றம் செய்யும்போது மேலும் பல உடல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:41 am

மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் திணறல் ‘எங்கள் குடும்ப உறுப்பினர் இறக்கவில்லை, இடிபாடுகளில் சிக்கியிருப்பார்’ என கதறல்

சென்னையில் விபத்துக்குள்ளான கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் திணறுகின்றனர். ‘‘எங்கள் குடும்ப உறுப்பினர் இறக்கவில்லை, இடிபாடுகளில் உயிருடன்தான் சிக்கி இருக்க வேண்டும்’’ என்று அவர்கள் கதறுவது நெஞ்சைப் பிசைவதாக அமைந்துள்ளது

தீராத வேதனை

சென்னை கட்டிட விபத்து மீட்புப்பணி நேற்று தொடர்ந்து 5–வது நாளாக தீவிரமாக நடைபெற்றது. ஆனாலும் கூட இதில் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை, தொடர்கதையாக நீளுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை இரண்டு வகையாக பார்க்க முடிகிறது.

கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி 5 நாட்களாகி விட்டாலும்கூட தங்களது குடும்ப உறுப்பினர், தங்கள் அன்புக்குரிய உறவினர் உயிரோடு இருப்பார்கள் என்று பலரும் நம்புகிறார்கள். தங்களது பிரார்த்தனை வீண்போகாது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம், மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண்பதுவும் மிகப்பெரும் வேதனையாக அமைந்துள்ளது. காரணம், பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகி விட்டன.

47 உடல்கள்

சம்பவ இடத்தில் இருந்து நேற்று வரை 47 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. அவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிண அறையில் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் 15–க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணும் நிலையில் இல்லை. அவர்களின் உற்றார், உறவினர்களாலும் உடல்களை அடையாளம் கண்டு கூற முடியவில்லை.

கட்டிட இடிபாடுகளில் இன்னும் சிக்கியுள்ளார் என்று நம்பப்படுகிற சென்னை அருகேயுள்ள பெரியபணிச்சேரி கருப்பையா என்பவரின் குடும்ப உறுப்பினர் வேதனையுடன் கூறும்போது, ‘‘இடுபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கிடையாது. அடையாள அட்டை இருந்திருந்தால் அடையாளம் காண்பது எளிதாக இருந்திருக்கும். பல உடல்கள் அடையாளம் காண முடியாதபடிக்கு சிதைந்துவிட்டன. ஒருவரை அடையாளம் காண்பதற்கு ஒரு வழி கூட இல்லை. இடிபாடுகளில் சிக்கியுள்ள எங்கள் கருப்பையா, இன்னும் உயிருடன் இருப்பார், ஆஸ்பத்திரியில் பிண அறையில் அடையாளம் காண முடியாதபடிக்கு இருக்கிற உடல்களில் ஒன்றாக அவர் இருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் இங்கே நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்று கண்ணீருடன் கூறினார்.

13 பேர் மாயம்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள்தான் சம்பவ இடத்தில் அதிகளவில் வேலை செய்து வந்தார்கள். இந்த நிலையில், அங்குள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ராஜம் மண்டல தாசில்தார் ராஜாராவ், விபத்து நடந்த இடத்தை நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர், ‘‘ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 2 பேர் இறந்து விட்டனர். இன்னும் 13 பேரை காணவில்லை. இறந்தவர்களின் உடல்களில் உள்ள உடைகளை வைத்துக்கூட அடையாளம் காண முடியவில்லை. ஏனென்றால் இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் இறந்துவிட்டார் என்று தெரிகிறபோது, உடல் மீது பிளிச்சிங் பவுடர் தூவியபிறகுதான் வெளியே எடுக்கிறார்கள். இதன் காரணமாக உடையை வைத்தும் அடையாளம் காண முடியவில்லை’’ என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:41 am

மரபணு பரிசோதனை

அவர் மேலும் கூறும்போது, ‘‘இடிபாடுகளை முழுமையாக அகற்றியபின்னர், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தினால் உடல்கள் மீது மரபணு பரிசோதனை நடத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்வோம். உடல்களை அடையாளம் காண முடியாமல் தவிக்கிற சிலர், இன்னும் தங்களுக்கு அன்பானவர்கள் இறந்திருக்க மாட்டார்கள். இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் சிக்கி இருப்பார்கள் என்று நம்புகிறார்கள்’’ என்று கூறினார்.

கட்டிடத்தின் கார் நிறுத்தும் இடத்திலும், முதல் தளத்தின் அடியிலும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். அந்த பகுதியிலிருந்து பலர் மீட்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தகுந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:42 am

சுனாமி, தானே புயலுக்கு பின்னர் ‘சென்னை கட்டிட விபத்து மீட்புப்பணி 3–வது பெரிய சவாலாக அமைந்தது’ தேசிய பேரிடர் மீட்பு படை டி.ஐ.ஜி. பேட்டி

தீராத சோகம்

சென்னையை அடுத்த போரூர் மவுலிவாக்கத்தில் வானளாவ கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த 28–ந் தேதி இடிந்து விழுந்து, தமிழ்நாட்டில் தீராத சோகத்தை ஏற்படுத்தி விட்டது. சென்னையில் இப்படி ஒரு விபத்து நடந்தது இதுவே முதல் முறை என்றாலும், அதன் வடு காலமெல்லாம் நினைவில் நிற்கக்கூடிய அளவு அமைந்து விட்டது.

இதுவரை 47 பேரை பலிகொண்டுள்ள சம்பவ இடத்தில் நேற்று தொடர்ந்து 5–வது நாளாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

3–வது பெரிய சவால்

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனேயே தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவின்கீழ், இந்த படையினர் தெற்கு மண்டல டி.ஐ.ஜி. எஸ்.பி.செல்வன் தலைமையில் வந்து, மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாளில் மீட்பில் காட்டிய தீவிரத்தை நேற்று 5–வது நாளிலும் அப்படியே அவர்கள் தொடர்ந்தனர்.

மீட்புப்பணி பற்றி டி.ஐ.ஜி. எஸ்.பி.செல்வன் கூறியதாவது:–

இடிந்து விழுந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி, அதில் சிக்கியுள்ளவர்களை மீட்பது என்பது எங்களுக்கு சவாலான பணியாக அமைந்துள்ளது. உலகையே அதிர வைத்த சுனாமி, தானே புயல் ஆகியவற்றுக்கு பிறகு இந்த கட்டிட மீட்பு பணி எங்களுக்கு 3–வது மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

தூசு மண்டலம்

எங்கள் படையினர் 380 பேர் 10 அணிகளாக பிரிந்து, 28–ந் தேதியிலிருந்து ஓய்வு ஒழிச்சலின்றி, களைப்பின்றி மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் படையினர் இங்கு வந்து சேர்ந்தபோது ஒட்டுமொத்த பகுதியும் அடர்த்தியான தூசு மண்டலமாகத்தான் காட்சி அளித்தது.

இடிபாடுகளில் சிக்கி தவிக்கிறவர்களை உயிருடன் மீட்கப்படுவதை உறுதி செய்கிற விதத்தில் எங்கள் படையினர் ஓய்வின்றி, தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு மோப்ப நாய்களைப் பயன்படுத்தி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. நாங்கள் இந்த பணியை தொடங்கியபோது, எங்கிருந்து மீட்புப்பணியை தொடங்குவது என்பதே சவாலாக அமைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

நவீன சாதனங்கள்

இந்த படையின் தன்னார்வலர் ஒருவர் கூறும்போது, ‘‘எங்களைச் சுற்றிலும் மலைபோன்று இடிபாடுகள் கிடந்ததால் மீட்புப்பணியை எங்கிருந்து தொடங்குவது என்பது ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது. எங்கள் பணியில் நவீன தொழில்நுட்பம் கைகொடுத்தது. சிக்கியுள்ளவர்களை கண்டறிய உதவும் வி.எல்.சி. என்னும் அதிநவீன கேமரா எங்களுக்கு உபயோகமாக அமைந்தது. ஆனால் அவற்றையும் ஆரம்பத்தில் பயன்படுத்த முடியவில்லை. ஓரளவு இடிபாடுகளை அகற்றிய பின்னர்தான் அவற்றை நாங்கள் பயன்படுத்த முடிந்தது. காங்கிரீட் பலகைகளை அறுப்பதற்கு சங்கிலி வாள்களைப் பயன்படுத்தினோம். அவை இடிபாடுகளில் சிக்கியவர்கள், எங்களை உஷார்படுத்தவும், குரல் கொடுக்கவும் வசதியாக அமைந்தது’’ என்றார்.

மேலும், ‘‘வி.எல்.சி. கேமராக்களைப் போன்று ‘ஏர் லிப்டிங் பேக்’ என்னும் பைகளைப் பயன்படுத்தினோம். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள ஒருவரை கண்டுபிடிக்கிறபோது, அங்கே இந்த ஏர் லிப்டிங் பேக்கை வைப்போம். அது சிக்கியுள்ளவர்களை தூக்கி மேலே கொண்டு வர உதவிகரமாக இருக்கின்றன’’ என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:43 am

5 வது நாள் மீட்பு பணி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

சென்னையை அடுத்த போரூர் அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் கடந்த 28-ந் தேதி நடந்த 11 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக தீவிரமாக நடைபெற்றது.

நேற்று வரை 33 பேர் பிண மாக மீட்கப்பட்டனர். 27 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர். இன்னும் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுகிறது. அவர் களில் சிலர் உயிருடன் இருக்க லாம் என்பதால் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

மீட்புப்பணிகளை விரைந்து முடிப்பதற்காக 8 மாவட்டங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்புப் படை வீரர்கள் சென்னை வந்துள்ளனர். 20 மோப்பநாய் கள் உதவியுடன் இன்று 5-வது நாளாக மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள பிணங்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவ தால் விபத்து நடந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீட்புக்குழுவினர் அனை வருக்கும் தடுப்பூசி போடப் பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்து இடிபாடு களை அகற்றி வருகிறார்கள்.

நேற்றிரவு 7 மணி நிலவரப்படி மொத்தம் 60 பேர் மீட்கப்பட்டிருந்தனர். இதில் 32 பேர் சடலமாகவும் 27 பேர் உயிருடனும் மீட்கப் பட்டிருந்தனர். நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை வரை மேலும் 10 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் அனைவரும் உடல் நசுங்கி பிணமாக கிடந் தனர். இதனால் 11 மாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்தது. நேற்றிரவு பிணமாக மீட்கப்பட்ட 10 பேல் 8 பேர் ஆண்கள். 2பேர் பெண் கள்.

இந்த நிலையில் இன்று காலை 10.45 மணியளவில் இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் 4 பிணங்கள் மீட்கப்பட்டது. இதனால் இறந்தவர்களின் எண் ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 4 நாட்களில் 10 தளங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு விட்டன. தற்போது முதல் தளமும், தரைத்தளமும் அகற்றப்பட்டு வருகிறது.

விபத்து நடந்தபோது தரைதளம் பகுதியில்தான் நிறைய தொழிலாளர்கள் சம்பளம் வாங்க நின்று கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. எனவே அவர்களில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும்.

மீட்புப்பணிகளை ஓரிரு நாட்களில் முடித்து விட வேண்டும் என்ற இலக்குடன் தற்போது கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் 2 நாளில் இடிபாடு களை அகற்றும் பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. அதன்பிறகு இந்த விபத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியவரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:44 am

3 நாட்களாக சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தார் ‘‘மறுபிறவி கிடைத்ததால் கண்களை தானம் செய்கிறேன்’’ உயிர் தப்பிய ஒடிசா வாலிபரின் உருக்கமான பேட்டி

3 நாட்களாக சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்ததாகவும், மறுபிறவி கிடைத்ததால் கண்களை தானம் செய்கிறேன்’’ என்றும் கட்டிட விபத்தில் உயிர் தப்பிய ஒடிசா வாலிபர் உருக்கமாக கூறினார்.

ஒடிசா வாலிபர்

ஒடிசா மாநிலம் கேந்திரபாலா அருகேயுள்ள ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்குமார் ராவ்(25). இவர் போரூரில் விபத்து நடந்த கட்டிடத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

விபத்து நடந்த போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி மண்ணில் புதைந்த அவர், 72 மணி நேரத்திற்கு பிறகு அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார். தற்போது போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பிரகாஷ்குமார் ராவ் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–

சிறுநீரை குடித்தேன்

கட்டிட விபத்து ஏற்பட்டபோது, நான் கட்டிடத்தின் உள்ளே வேலை செய்து கொண்டு இருந்தேன். கட்டிடம் சரிந்த நிலையில் நான் இருந்த அறையில் உள்ள ஒரு சிலாப்பில் உட்கார்ந்த நிலையில் மாட்டிக் கொண்டேன். இருட்டை தவிர வேறு எதுவும் என் கண்ணில் தெரியவில்லை.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உதவிக்காக காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என்று கூப்பிட்டபடியே இருந்தேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனது வயிறு பசித்தது. நாக்கு உலர்ந்தது. ஆனால் உணவுக்கு வழியில்லை. தொண்டை காய்ந்து வரண்டு போன நிலையில் எனது சிறுநீரை நானே குடித்தேன்.

கண்கள் தானம்

உயிர் பிழைப்பேன் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. நான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன் என்றால் அது கடவுள் செய்த அதிசயம். இது எனக்கு மறுபிறவி.

உள்ளே இருந்த சமயத்தில் மேலே இருந்து மீட்புபணிகள் நடைபெற்றதை நான் நன்றாகவே உணர்ந்தேன். எனக்கு இது மறுபிறவி என்பதால் என்னுடைய கண்கள் இரண்டையும் தானம் செய்ய முடிவெடுத்துள்ளேன். என்னுடைய 2 கண்களும் நான் இறந்தபிறகு மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

கண்மூடி கண் திறப்பதற்குள்...

விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மருதமுத்து(வயது 25) என்பவர் கூறியதாவது:–

சம்பவத்தன்று விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று இடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து கட்டிடத்தின் மேலிருந்து சிமெண்ட் துகள்கள் கொத்துக்கொத்தாக விழுந்தன.

கண்மூடி கண் திறப்பதற்குள் கட்டிடம் சரிந்து விழுந்தது. எனக்கு நினைவு வரும்போது மண் குவியலுக்கு அடியில் நான் குப்புற படுத்துக் கிடந்தேன். கை, கால்களை கூட அசைக்க முடியவில்லை. எங்கும் ஒரே இருட்டு.

எப்படி மீட்கப்பட்டேன்? எப்படி மருத்துவமனையில் வந்தேன்? எவ்வாறு தேறினேன்? என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் பிழைத்திருக்கிறேன் என்றால் அது கடவுளின் அருளால் தான். வாழ்நாள் முழுவதும் இந்த சம்பவத்தை மறக்க மாட்டேன். இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

2 தூண்களுக்கு நடுவில்...

ராமநாதபுரம் மாவட்டம் நெற்குப்பை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி(53). விபத்து நடந்த கட்டிடத்துக்கு அருகில் உள்ள மரக்கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். அவர் கூறுகையில், ‘‘கட்டிடம் சரிந்து எங்களது கடையின் மீது விழுந்தது. இதில் கடையின் 2 தூண்களுக்கு நடுவில் இடிபாடுகளுக்கிடையில் நான் சிக்கிக்கொண்டேன். என்னால் நகரக்கூட முடியவில்லை. தற்போது வரை பிழைத்தேன் என்பதை நான் நம்பவில்லை. ஒரு சின்ன சத்தத்தை கூட என்னால் தாங்கமுடியாத நிலையில் நான் இருக்கிறேன். கடவுளுக்கு நான் கூறுகிறேன்’’, என்றார்.

பசி பட்டினியுடன்...

மதுரை திருமங்கலம் புதுப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(23) என்பவர் கூறுகையில், ‘‘கட்டிட இடிபாடுகளுக்கிடையில் நாங்கள் பட்ட கஷ்டங்களையும், துயரங்களையும் சொல்லி மாளாது. ஒரு ‘லிப்ட்’ அறுந்து விழுவது போன்ற பயங்கர சத்தத்துடன் கட்டிடம் சரிந்து விழுந்தது. அந்த காட்சியை என்னால் மறக்க முடியாது. பசி பட்டினியுடன் கட்டிட இடிபாடுகளில் மண்ணோடு மண்ணாக புதைந்திருந்ததை வாழ்நாள் முடியும் வரை மறக்க முடியாது. கடவுளின் ஆசியால் நான் இன்று உயிரோடு இருக்கிறேன்’’ என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:44 am

தந்தையையும், தங்கையையும் என் கண் முன்னே பறிகொடுத்தேன் வாலிபர் கண்ணீர் பேட்டி

கட்டிட விபத்தில் எனது தந்தையையும், தங்கையையும் கண் முன்னே பறிகொடுத்தேன் என்று உயிர் தப்பியவர் கூறினார்.

துணியை எடுக்க சென்ற...

ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த பிசிக்கி ஜோதி என்ற பெண் தனது கணவருடன் சென்னையில் தங்கி 11 மாடி கட்டிடத்தில் பணிபுரிந்தார். சம்பவம் நடந்த நேரத்திற்கு முன்பு மழை பெய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது கணவரிடம் காயப்போட்ட துணியை எடுத்து வருவதாக அந்த கட்டிடத்துக்கு அருகில் சென்றார். அவர் சென்ற அடுத்த 5 நிமிடத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து பலியானார்.

கண் எதிரே நடந்தது

ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம், கொட்டாபேரீஸ் பகுதியை சேர்ந்த மிசாலுசீனு (வயது 40), என்பவர் தனது மகன் லோகேஷ்(18), மகள் பவானி(14) ஆகியோருடன் மவுலிவாக்கத்தில் தங்கி இருந்து பணிபுரிந்தார். இவர் பலியானது குறித்து அவருடைய மகன் லோகேஷ் கூறியதாவது:–

கட்டிடம் இடிந்து விழுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. எனது அப்பாவும், நானும் இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தோம். என்னுடைய சகோதரி தனியாக 11 மாடி கட்டிடத்தில் இருந்தாள். அப்போது இடி மின்னலுடன் மழை பெய்தது.

உடனே எனது அப்பா, அவள் பயந்து விடுவாள் நான் போய் அவளை அழைத்து வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அடுத்த 5 நிமிடத்தில் கட்டிடம் மளமளவென சரிந்து விழுந்துவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் என் கண் எதிரே எனது அப்பாவையும், என் சகோதரியையும் பறிகொடுத்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:45 am


கட்டிட இடிபாடுகளில் கட்டிப்பிடித்த நிலையில் 2 ஆண் சடலங்கள் மீட்பு

போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளிகள் பலர் உயிருடனும், பிணமாகவும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மீட்பு பணியின் 5 வது நாளான இன்று, கட்டிடத்தின் தரை தளத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டியபோது கட்டிப்பிடித்த நிலையில் இருந்த 2 ஆண் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

கட்டிடம் இடிந்து விழுந்தபோது அருகே நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் சாவை கண்கூடப்பார்க்கும் போது, பயத்தில் இருவரும் ஒன்றாக கட்டிப்பிடித்தபடியே இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:46 am

11 பேரை உயிருடன் மீட்க உதவிய மோப்ப நாய்கள்

சென்னை கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய பங்காக மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில் 5 மோப்ப நாய்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மிகவும் குறுகலான இடிபாடுகளுக்கிடையே ஆட்கள் உள்ளனரா என்பதை கண்டறிய நாய்களுடன் அந்த குறுகிய இடிபாடுகளுக்குள் போலீசாரும் குறிப்பிட்ட தூரம் சென்று ஆட்கள் உயிருடனோ? பிணமாகவோ? இருக்கிறார்களா? என்று தேடினார்கள். ஆட்கள் இருப்பதை போல் உணர்ந்த போலீசார் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கி உள்ளவர்களை மீட்டுள்ளனர்.

இதுவரை நடந்த மீட்பு பணியில் ஜாக் என்ற மோப்ப நாய் 3 பேரை உயிருடனும், ஒருவரை இறந்த நிலையிலும், ஜீனா என்ற நாய் 2 பேரை உயிருடனும், 2 பேரை இறந்த நிலையிலும், ஓரி என்ற நாய் 2 பேரை உயிருடனும், ஒருவரை இறந்த நிலையிலும், ஜூலி என்ற நாய் 2 பேரை உயிருடனும், ஜான்சி என்ற நாய் 2 பேரை உயிருடனும் ஆக மொத்தம் 11 பேரை உயிருடனும், 4 பேரை இறந்த நிலையிலும் மீட்க மிகவும் பேருதவியாக இருந்தன.

மீட்பு குழுவினர்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க தடுப்பு ஊசிகள்

தொடர்ந்து 5–வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் சிலர் உயிருடனும், இறந்த நிலையிலும் மீட்கப்பட்டு வருகின்றனர். நாட்கள் அதிகரித்து செல்வதால் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒரு வித துர்நாற்றம் வீசத்தொடங்கி உள்ளது. இதனால் மீட்பு குழுவில் உள்ளவர்கள் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க அடிக்கடி தடுப்பு ஊசிகள் மற்றும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மருத்துவ குழுவினர் அதிகளவில் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:48 am

சற்றுமுன்னர் மேலும் இரு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இப்பொழுது பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:52 am

தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: சென்னையில் நடந்த 11 அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ அனுப்பியுள்ளது.

பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் தானாக முன்வந்து இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது ஆணையம். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஆணையம், 2 வாரங்களுக்குள் இதற்குப் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆணையத்தின் நோட்டீஸில் கூறுகையில், இந்த விபத்து, கட்டுமானத் தவறுகள், குறைபாடுகள், பில்டரின் விதிமீறல் ஆகியவற்றின் காரணமாக நடந்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதையே பத்திரிகைச் செய்திகளும் தெரிவிக்கின்றன. அவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். பல உயிர்கள் இதில் பலியாகியுள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 12:58 am


72 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட இளைஞர் தனது செருப்பைக் கேட்ட வினோதம்

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 72 மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட இளைஞர் இன்று உயிருடன் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட மறு நிமிடம் அவர் கேட்ட கேள்வி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது என்னவென்றால், "எனது செருப்பு எங்கே?".

சென்னை போரூர் அருகில் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த மூன்றாவது நாள் காலையில் தேசிய பேரிடர் மீட்பு படையின் மோப்ப நாய் ரஸ்டாம் இடிபாடுகளுக்கிடையே மோப்பம் பிடித்து வந்தது. அவ்வாறு மோப்பம் பிடித்தபோது கான்கிரீட் சிலாப் ஒன்றின் துளைக்குள் கண்களை செலுத்தியவாறே நாய் குரைக்க ஆரம்பித்தது.

அது குரைக்க ஆரம்பித்தவுடன், இடிபாடுகளுக்கிடையே யாரேனும் இருக்கக்கூடும் என அதன் பயிற்றுனருக்கு புரிந்தது. உடனடியாக துரிதமாக செயல்பட்ட மீட்புப்படையினர் எட்டு மணி நேரம் போராடி மஞ்சள் நிற டீ-சர்ட் அணிந்த ஒடிசாவை சேர்ந்த 29 வயதான விகாஸ் குமார் என்பவரை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட பின் அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? - தனது செருப்பு எங்கே என்று அவர் மீட்பு படையினரைப் பார்த்து கேட்டார்.

அவருக்கு பொறுமையாக பதிலளித்த மீட்பு படை தலைவரான எம்.கே.வர்மா, புதிய செருப்பை தானே அவருக்கு வாங்கி தருவதாக தெரிவித்தார். பின்னர் பாட்டிலில் வழங்கப்பட்ட குடிநீரை அருந்திய அவர் வானத்தை பார்த்தவாறே நீண்ட நேரம் சோகத்துடன் உட்கார்ந்திருந்தது மற்றவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 1:16 am

தமிழகத்தை சேர்ந்தவர்கள் கடும் அவதி

சென்னை: கட்டட இடிபாடுகளில் சிக்கிய,தமிழகத்தை சேர்ந்தவர்களின் உறவினர் களுக்கான தங்குமிடங்களை, அதிகாரிகள் ஏற்பாடு செய்யாததால், அவர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னை, மவுலிவாக்கத்தில், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கிய தமிழகம், ஆந்திரா, ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.அவர்களை மீட்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கி யவர்களின் உறவினர்கள், அவர்களை தேடி, சம்பவ இடத்தில் குவிந்தனர்.ஆந்திராவிலிருந்து வந்தவர்கள், இடிந்த கட்டடம் அருகே அமைந்துள்ள, ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில், தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு உணவு வழங்கப்பட்டது.ஆனால், தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்க, இடம் ஒதுக்கப்படவில்லை. உணவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அவர்கள், ஆந்திராவை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த பள்ளிக்கு சென்றால், அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால், அவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். இது குறித்து, உளுந்தூர்பேட்டை அடுத்த, கணையாழி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் கூறியதாவது:என் தம்பி திருவேங்கடம், 28, இந்த கட்டடத்தில், வேலை செய்து வந்தார். அவரை தேடி வந்தேன். இதுவரை விவரம் தெரியவில்லை. நாங்கள் தங்க இடம் இல்லை. உணவும் ஏற்பாடு செய்யவில்லை. தம்பி நிலை குறித்த தகவலையும், அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார். தமிழகத்தை சேர்ந்தவர்களின் உறவினர்களுக்கு, தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்யப்படாதது குறித்து, இடிந்த கட்டடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள, தகவல் மையத்தில் அமர்ந்திருந்த, ஆர்.டி.ஓ.,விடம் கேட்டபோது, 'தமிழகத்தை சேர்ந்தவர்கள் எங்காவது தங்கிக் கொள்வர் எனக்கருதி, எந்த ஏற்பாடும் செய்யவில்லை' என, கூலாக பதில் அளித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 1:16 am

ஆந்திர தொழிலாளர்களின் உடல்-உறவினர்களிடம் ஒப்படைப்பு

கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள், ஆந்திராவிற்கு எடுத்து செல்லப்பட்டன. அவர்களின் உறவினர்களும், ஆந்திர அரசு ஏற்பாடு செய்த பஸ்சில், புறப்பட்டு சென்றனர். மவுலிவாக்கத்தில், இடிந்த கட்டடத்தில், ஆந்திராவை சேர்ந்த, 35 குடும்பத்தினர் தங்கி, வேலை செய்து வந்தனர்.

கட்டட இடிபாடுகளில், ஆந்திர தொழிலாளர்கள் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அவர்களை தேடி, ஆந்திராவிலிருந்து உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு உதவ, ஆந்திர மாநில அதிகாரிகளும், சென்னையில் முகாமிட்டுள்ளனர்.நேற்று மாலை வரை, ஆந்திராவை சேர்ந்த, நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. எட்டு பெண்கள் உட்பட, 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களின் உடல் மருத்துவப் பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர்களின் உடல், ஆம்புலன்ஸ் மூலம், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.உடன் செல்வோருக்கு, ஆந்திர அதிகாரிகள், 2,000 ரூபாய் பணம் கொடுத்து அனுப்புகின்றனர்.

அவர்களின் உறவினர்கள் செல்ல, ஆந்திர அரசு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது.நேற்று மாலை, உயிர் தப்பிய தொழிலாளர்கள், இறந்தவர்களின் உறவினர்கள் என, 50 பேர், பஸ்சில் ஆந்திரா புறப்பட்டு சென்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 1:17 am

பணமின்றி பரிதவித்த தொழிலாளி -போக்குவரத்து ஆய்வாளர் உதவி:

பணம் இல்லாமல் பரிதவித்த, ஆந்திர தொழிலாளிக்கு, வட்டார போக்குவரத்து ஆய்வாளர், 1,000 ரூபாய் கொடுத்து உதவினார்.ஆந்திராவை சேர்ந்தவர் சீனு. இவர் தன் மனைவியுடன், சென்னையில் இடிந்து விழுந்த கட்டடத்தில், வேலை செய்து வந்தார். இவர் உயிர் தப்ப, இவரது மனைவி நிலை என்னவென்று தெரியவில்லை. மனைவி நிலை அறிய, நான்கு நாட்களாக, அங்கேயே உள்ளார். கையில் பணமின்றி தவித்தார். இதை அறிந்த, ஆந்திர மாநிலம், செவலூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுதாகர்ரெட்டி, தன் சொந்தப் பணம், 1,000 ரூபாயை, சீனுவிற்கு கொடுத்து உதவினார்.

மீட்பு படையினருக்கு உதவும் ஐந்து மோப்ப நாய்கள்:

இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்க, ஜான்சி, மேரி, பினா, ஜாக், ஜூலி, ருஸ்தம் என, ஐந்து மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தங்கள் மோப்ப சக்தி மூலம், இடிபாடுகளில் சிக்கியிருப்போரை கண்டறிகின்றன. இடிபாடுகளில் சிக்கியோர் உயிரோடு இருந்தால், பயிற்சியாளர்களை பார்த்து குரைக்கின்றன. இறந்த உடலாக இருந்தால், காலால் தரையைக் கீறுகின்றன. இதை வைத்து, மீட்பு படையினர் உடனடியாக களத்தில் இறங்குகின்றனர்.

பெரிய இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை:

பேரிடர் மீட்பு குழு டி.ஐ.ஜி., பேட்டி:''இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை, உயிரோடு மீட்க, பெரிய அளவிலான இயந்திரத்தை பயன்படுத்த முடியவில்லை,'' என, தேசிய பேரிடர் மீட்பு குழு டி.ஐ.ஜி., செல்வம் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் அளித்த பேட்டி:

இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர்?

இடிபாடுகளில் சிக்கியவர்கள், எத்தனை பேர் என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டோரும், மழைக்கு ஒதுங்கியவர்களும், இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம்.

இடிபாடுகளில் குழந்தைகள் சிக்கியுள்ளனரா?

அதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. இதுவரை குழந்தைகள் யாரும் மீட்கப்படவில்லை.

மீட்பு படையினருக்கு இடையில், ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறப்படுகிறதே?

தினசரி காலை மற்றும் மாலை, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள, அனைத்து துறை அதிகாரிகளும், அன்று மேற்கொண்ட நடவடிக்கை, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதித்து, முடிவு செய்கிறோம்.

மீட்பு பணி மந்தமாக நடப்பதாக பேசப்படுகிறதே?

இடிபாடுகளில் சிக்கியவர்களை, உயிரோடு மீட்க வேண்டும் என்பதற்காக, கவனமுடன் செயல்படுகிறோம். இதனால், பெரிய அளவிலான இயந்திரத்தை பயன்படுத்த முடியவில்லை.இதன் காரணமாக, பணி மந்தமாக உள்ளதுபோல் தெரியலாம். அனைவரையும் உயிரோடு மீட்க வேண்டும் என்ற துடிப்புடன் பணிபுரிகிறோம்.

இவ்வாறு, அவர் பதிலளித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 1:18 am

மீட்பு குழுவில் மோதல்:

கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள, தீயணைப்பு வீரர்களுக்கும், கமாண்டோ படையினருக்கும் இடையே, மோதல் ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மவுலிவாக்கத்தில், கட்டட இடிபாடுகளில் சிக்கி தவிக்கும், தொழிலாளர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தமிழக கமாண்டோ படை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், மீட்பு பணி மந்தமாக நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில், நேற்று காலை 10:45 மணிக்கு, ஜெயலட்சுமி என்ற பெண்ணை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அப்போது, அவரை தீயணைப்பு வீரர்கள் சூழ்ந்து நின்றனர். அவர்களை கலைந்து செல்லும்படி, கமாண்டோ படையினர் கூறினர். இதற்கு தீயணைப்பு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவர்களை சமாதானப் படுத்தினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 4:00 pm

மவுலிவாக்கம் பலி 58 ஆக அதிகரிப்பு: இன்னும் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது.

கடந்த 28-ம் தேதி மாலை மவுலிவாக்கத்தில் 11 அடுக்க மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. தொடர்ந்து 6-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) மதியம் வரை ஒரு குழந்தை உள்பட 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகளில் 72 பேர் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை சடலமாகவும் உயிருடனும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80- க்கும் மேலாக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அரசு வருவாய் துறை மூத்த அதிகாரி ஒருவர், இன்னும் 25 முதல் 30 பேர் வரை இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்றார்.

இடிந்து விழுந்த கட்டிடத்தில் மொத்தம் 72 தொழிலாளர்கள் சிக்கியிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை 58 பேர் சடலமாகவும், 27 பேர் உயிருடனும் என மொத்தம் 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணி இன்னும் முடிவடையாததால் மேலும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என தெரியாமல் மீட்புக் குழுவினரும், அரசு அதிகாரிகளும் குழப்பமடைந்துள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் தொழிலாளர்கள் சிலர் குடும்பத்துடன் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. குழந்தைகளும் உடன் இருந்ததாக கூறுகின்றனர். சனிக்கிழமை வேலைக்கு வராதவர்களும் மாலையில் சம்பளம் வாங்குவதற்காக வந்துள்ளனர். மழை பெய்ததால், அனைவரும் கட்டிடத்துக்குள் சென்று நின்றுள்ளனர். அதனால், கட்டிட இடிபாடுகளில் சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அண்ணனை காணவில்லை, தம்பியைக் காணவில்லை, கணவரை காணவில்லை என பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதனால், இன்னும் 30-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.

மீட்புப் பணி முடிவது எப்போது?

மவுலிவாக்கம் கட்டிட விபத்து மீட்புப் பணிகள் இன்னும் 2 நாட்களில் முடியும் என்று டிஐஜி தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு டிஐஜி செல்வம் கூறுகையில், "இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவடையும்" என்றார்.

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்து குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை அனுப்பும்படி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு

மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட விபத்தையடுத்து, அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இடிந்த கட்டிடத்தில் 200 தொழிலாளர்கள்?

ஆந்திராவைச் சேர்ந்த ராமு என்ற தொழிலாளி அளித்த தகவலின்படி, இடிந்த கட்டிடத்தில் 200 தொழிலாளர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

கல்லூரி மாணவர் பலியான சோகம்

மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியான கல்லூரி மாணவர் ஒருவர், விடுமுறையில் வேலைக்கு வந்தபோது சோக நிகழ்வுக்கு ஆளானார் என்பது தெரியவந்துள்ளது. அவரது பெற்றோர் கதறினர்.

உயிர் பிழைத்தவர்கள் பேட்டி

கட்டிட விபத்தில் சிக்கிய தாங்கள் உயிர் பிழைப்போம் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று உயிர் தப்பியவர்கள் உருக்கமான பேட்டியை அளித்தனர்.

பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் கோரிக்கை

இதனிடையே, மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகில் இருந்த சில வீடுகள் சேதமடைந்தன. அந்த வீடுகளை கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வசித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 4:01 pm

விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவு

மவுலிவாக்கம் சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும், நீதிபதி சு.ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் 28.6.2014 அன்று மாலை இடிந்து விழுந்ததையடுத்து, இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணிகளும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 27 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் 55 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாயும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டதோடு, உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாடு அரசு செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு செலவில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதோடு, அவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

கட்டடம் இடிந்து விழுந்த இடத்தை 29.6.2014 அன்று நேரில் பார்வையிட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

மேலும், இந்தத் துயரச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறி, நிவாரண உதவியினையும் நான் வழங்கினேன்.

இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றதற்கான காரணம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும், ஓய்வு பெற்ற நீதிபதி சு. ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தினை அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விசாரணை ஆணையம்,

1. 28.6.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததன் விளைவாக 55 பேர் உயிரிழந்தது மற்றும் பலர் படுகாயமடைந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான அனைத்து அம்சங்கள் மற்றும் சூழ்நிலைகள்

2. பல கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழப்பதற்கும், படுகாயம் அடைந்ததற்கும் காரணமான இந்தத் துயரச் சம்பவம் யாருடைய அலட்சியப் போக்கினால் நடந்தது என்பதை கண்டறிந்து, அதற்கு பொறுப்பானவர்களை முடிவு செய்தல்

3. இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையில், கடைபிடிக்க வேண்டிய தீர்வு முறைகளை பரிந்துரை செய்தல்

ஆகியவற்றை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையினை அளிக்கும். விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு மேல் நடவடிக்கைகளை எடுக்கும்". இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Thu Jul 03, 2014 4:51 pm


பணத்தை திருப்பித் தருகிறேன்: கட்டுமான நிறுவன அதிபர் அறிவிப்புஇடிந்து விழுந்த 11 மாடி கட்டி டத்தை கட்டிய மதுரையை சேர்ந்த பிரைம் சிருஷ்டி நிறுவனத் தின் உரிமையாளர் மனோகரன், அவரிடம் வீடு வாங்கியவர் களுக்கு மெயில் அனுப்பியுள்ளார்.

அதில், “நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன்” என்று கூறியிருக் கிறார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். அவர் விடுதலையாகி வந்த பிறகு பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக் கையை எடுப்பார் என்று வீடு வாங்க பணம் கொடுத்தவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

டேங்க் உடைந்ததால் விபத்தா?

“அடித்தளம் சரியாக போடாததால் தான் மழை பெய்ததும் கட்டிடம் இடிந்துவிட்டது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், 11 மாடி கட்டிடத்தின் மேலே கட்டப்பட் டிருந்த பிரம்மாண்ட தண்ணீர் தொட்டியில் மின்னல் தாக்கிய தில் தண்ணீர் தொட்டி உடைந்து கட்டிடத்தின் மேலே விழுந்ததால் தான் மொத்த கட்டிடமும் இடிந்து விட்டது. மற்றபடி கட்டிட வடி வமைப்பில் எந்த தவறும் இல்லை” என்று கட்டுமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கட்டிட வடிவமைப் பாளர் விஜய் பர்காத்ரா முறை யான அங்கீகாரம் பெற்றவர் அல்ல என்றும், 11 மாடிகள் கட்டுவதற்கு அவருக்கு போதிய பயிற்சி இல்லை என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆந்திர தொழிலாளர்கள் 14 பேரை காணவில்லை

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இருந்து 39 பேர் மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட பணிக்கு வந்தனர். இவர்களில் 15 பேர் கட்டிட விபத்தில் இறந்துள்ளனர். 10 பேர் காயமடைந்து மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 14 பேரை காணவில்லை.

கைதான 6 பேரிடம் விசாரணை

பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுப்பிரமணி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுமான நிறுவன உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்து, இன்ஜினீயர்கள் துரைசிங்கம், விஜய், சங்கரராமகிருஷ்ணன், வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கட்டிடம் இடிந்தது தொடர்பாக இவர்கள் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by சிவா on Sat Jul 05, 2014 2:24 am


முகலிவாக்க கட்டட விபத்து: மீட்பு பணி நிறைவு பெற்றதாக அறிவிப்பு!

சென்னை: போரூர் அருகேயுள்ள முகலிவாக்கத்தில் நடந்த 11 மாடி கட்டட விபத்தில் மீட்புப்பணிகள் நிறைவு பெற்றதாக தமிழக வருவாய்த்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கடந்த 28ஆம் தேதி மாலை சென்னை, போரூர் அருகேயுள்ள முகலிவாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

இந்த கட்டட இடிபாடுகளுக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 750 போலீசார், 360 தீயணைப்புப் படை வீரர்கள், 402 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விபத்தில் இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாக தமிழக தமிழக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''முகலிவாக்கத்தில் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி முடிவடைந்து விட்டது. இந்த கட்டட விபத்தில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காயம் அடைந்தள்ளனர்.

மேலும், விபத்து நடந்த பகுதியை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படடு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை காவல்துறையினர் கடடுப்பாட்டில் எடுத்து கண்காணித்து வருவார்கள். முகலிவாக்கம் மக்களுக்கு குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளையும் செய்துதர வேண்டியுள்ளது'' என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by ந.க.துறைவன் on Sat Jul 05, 2014 10:38 am

விரிவான தகவலுக்கு நன்றி சிவா...
avatar
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1203
மதிப்பீடுகள் : 450

View user profile

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by அருண் on Sat Jul 05, 2014 11:52 am

எதிர் பார்க்காத இழப்பு! இதில் தவறு செய்தவர்களை கண்டிப்பாக தண்டிக்க படவேண்டும்.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: போரூர் மவுலிவாக்கம் கட்டிட விபத்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum