ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மதுக்கடைகளால் நரகமாகிறது நகரம்: முக்கிய வீதிகளில் கும்மாளம்

View previous topic View next topic Go down

மதுக்கடைகளால் நரகமாகிறது நகரம்: முக்கிய வீதிகளில் கும்மாளம்

Post by சிவா on Tue Jun 24, 2014 4:18 pm


உடுமலை: 'சத்திரம்', என்பது முற்காலத்தில், தொலை துார பயணம் மேற்கொள்ளும், பாதசாரிகள் தங்கி இளைப்பாற, அப்பகுதியை ஆட்சி செய்யும் மன்னர்களால் துவங்கப்படும் புண்ணிய காரியமாகும். இத்தகைய வரலாற்றை தாங்கி நிற்கும் உடுமலை நகர வீதியில் தற்போதைய ஆட்சியாளர்களால், 'குடிமகன்கள்' சேவைக்கு? 'டாஸ்மாக்' மதுக்கடை துவங்கப்பட்டு, அக்கடையால், பள்ளி மாணவர்களும், பெண்களும் நடமாட முடியாத நிலை உள்ளது தான் கால மாற்றமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

உடுமலை நகரத்தின் பழமையை வெளிப்படுத்துவதில், பல்வேறு வீதிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. அவ்வகையில், பழநி உட்பட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பாதசாரிகள் தங்கி செல்வதற்காக செயல்பட்ட சத்திரத்தின் பெயர் நிலைத்து நிற்க, சத்திரம் வீதி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ளது. அப்பகுதியில், சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், பள்ளி மற்றும் பல்வேறு வணிக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு, மக்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாடி வந்த வீதி இன்று முழுவதுமாக 'குடிமகன்'களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. சத்திரம் வீதியில் செயல்பட்டு வரும் 'டாஸ்மாக்' மதுக்கடையில், மது அருந்துபவர்கள், நேராக அருகிலுள்ள நகராட்சி துவக்கப்பள்ளியின் முன்பகுதியை தங்கள் ஓய்வறையாக மாற்றுகின்றனர். பள்ளி நுழைவாயிலில் குடிமகன்கள் அட்டகாசத்தை அரங்கேற்ற, அங்குள்ள குழந்தைகள் வளாகத்தை விட்டு வெளியில் வர பயப்படும் அவல நிலை உள்ளது.

காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி சுற்றுச்சுவர் அருகே, தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, 'குடிமகன்'களுக்கு சேவை வழங்கப்படுகிறது. இதனால், வணிகக்கடைகளுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல நிலை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களும், பயத்துடனே சத்திரம் வீதியை கடந்து செல்கின்றனர். சமூகத்தை நல்வழிப்படுத்தும் கோவில் மற்றும் பள்ளியின் அருகில் செயல்படும் 'டாஸ்மாக்' மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, நடத்தப்பட்ட போராட்டங்கள் எதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. சத்திரம் வீதியில், நாள்தோறும் குறிப்பிட்ட நேரங்களில், போலீசார் ரோந்து செல்வதால், 'குடிமகன்'கள் அட்டகாசத்தை சிறிது குறைக்கலாம். மதுக்கடையை இடம் மாற்றும் வரை, இந்த ஆறுதலாவது தங்களுக்கு கிடைக்குமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வெங்கடகிருஷ்ணா ரோடு: உடுமலை தினசரி சந்தை, பஸ் ஸ்டாண்ட் ஆகிய முக்கிய பகுதிகளின் அருகில், வெங்கடகிருஷ்ணா ரோடு உள்ளது. இந்த ரோட்டில் செயல்பட்டு வரும் 'டாஸ்மாக்' மதுக்கடையால், தினசரி சந்தைக்கு வரும் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வாரச்சந்தை நாட்களில் 'குடிமகன்' கள் தொல்லைகளை தாண்டி, அங்கு வர பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கி, அரசு அலுவலகங்களுக்கு மக்கள் செல்லும் இந்த ரோட்டிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையை மாற்ற வேண்டும் என தொடர் புகார் மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுக்கடை அருகே செயல்பட்டு வந்த பார் மூடப்பட்டுள்ளது. இதனால், 'குடிமகன்'கள் திறந்த வெளி பாராக ரோட்டை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வாக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், மதுக்கடைகளை இடம் மாற்றுவதால் மக்களோடு, 'குடிமகன்'களும் மகிழ்ச்சிக்குள்ளாவார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum