ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

View previous topic View next topic Go down

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by சிவா on Mon Jun 16, 2014 7:01 pmநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வியை கண்டது. இதையடுத்து தி.மு.க., தனது கட்சி அமைப்பில் மறு சீரமைப்பு செய்துள்ளது. இதன்படி, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட அமைப்புகள் 65 ஆக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியி இருந்து நடிகை குஷ்பூ விலகியுள்ளார். கட்சியில் தன்னுடைய உழைப்பும் அர்பணிப்பும் ஒரு வழிப்பாதையாகவே தொடர்ந்தது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது என்று நடிகை குஷ்பூ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக திமுக தலமைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 16, 2014 7:33 pm

குடும்ப அரசியலில் இந்த குருவிக்கு என்ன வேலை? அதான் இப்படி ஒரு நிலைமைக்கு வந்துட்டாங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by சிவா on Tue Jun 17, 2014 12:23 am


குஷ்பு பா.ஜனதாவில் சேர முடிவு?

சென்னை: திமுகவிலிருந்து விலகுவதாக பிரபல நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். அவர் விரைவில் பா.ஜனதாவில் சேருவார் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள்.

ஆனால், என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக குஷ்பு திமுகவில் சேர்ந்ததிலிருந்தே திமுகவில் ஒருதரப்பில் அவரது வருகை கசப்புணர்வுடன் பார்க்கப்பட்டது.குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி வீட்டிலேயே அவர்களது வீட்டு பெண்கள் மத்தியில் குஷ்பு வெறுப்புக்குள்ளானதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குஷ்பு, " திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் ( மு.க. ஸ்டாலின்) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்" என்று கூறியிருந்தார்.

அவரது இந்த பேட்டி வெளியானதும் திமுக இரண்டாம் மட்டத் தலைவர்களிடையே, குறிப்பாக ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் திருமணம் ஒன்றிற்கு திருச்சிக்கு சென்ற குஷ்பு, அங்குள்ள ஓட்டலில் வைத்து திமுகவினரால் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்பும் வீசப்பட்டது. அதுமட்டுமல்லாது சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்ட கார் கண்ணாடிகள் உடைந்தன. தாக்குதல் நடந்தபோது குஷ்பு கணவர் சுந்தர் சி. இல்லாத நிலையில், அவர்களது குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தை பெரிதுபடுத்தாத குஷ்பு, தனது பேட்டி தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறியிருந்தார். ஆனாலும் அப்போதிருந்தே குஷ்பு திமுகவில் ஓரம்கட்டப்பட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் கருணாநிதியின் தலையீடால், திமுக மாநாடு போன்ற, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குஷ்பு அழைக்கப்பட்டார்.

ஆனால் இதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆதரவாளர்கள் விரும்பவில்லை எனக்கூறப்பட்டது. இதனிடையே நடந்தமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குஷ்புவுக்கு சென்னையில் போட்டியிட வாய்ப்பளிக்க கருணாநிதி விரும்பியதாகவும், ஆனால் அதற்கு ஸ்டாலின் தெரிவித்த கடும் எதிர்ப்பு மற்றும் வேட்பாளர் தேர்வு முழுவதும் அவரது விருப்பப்படியே அமைந்தது போன்ற காரணங்களால் அது நடக்காமல் போனது.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கான அறிவிப்பு பட்டியலிலும் முதலில் குஷ்புவுக்கு வாய்ப்பளிக்கப்படாமல், பின்னர் கருணாநிதியின் தலையீட்டின் பேரிலேயே திமுகவின் முன்னணி பிரசாரகர்களின் லிஸ்டில் குஷ்பு இடம்பெற்று, அவரும் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில்தான் கட்சியில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது மற்றும் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அடைந்த படுதோல்வி போன்றவை குஷ்புவை இனியும் திமுகவில் நீடிக்கவேண்டுமா? என்று யோசிக்க வைத்ததாக தெரிகிறது. இதற்கிடையே அவர், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள சுஷ்மா சுஷ்மா சுவராஜுக்கும், ஸ்மிருதி இரானிக்கும் தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார். அப்போதே இது அரசியல் வட்டாரத்தில் பலரது புருவத்தை உயரச்செய்தது.

இதனையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதியைப்பற்றி சர்ச்சை எழுந்தபோது, " சாதிப்பதற்கு கல்வி தகுதி அவசியம் இல்லை. சச்சின் டெண்டுல்கர், பில்கேட்ஸ், ரஜினி, கமல் உள்ளிட்டோர் உலக அளவில் புகழ் பெற்றுள்ளனர். இவர்கள் பட்டபடிப்பு படித்தவர்கள் அல்ல. திறமைதான் முக்கியம்; படிப்பு அல்ல" என்று இரானிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் குஷ்பூ. இதனால் அப்பொழுதே குஷ்பு பா.ஜனதாவில் சேரலாம் என செய்திகள் வெளியாகின.

தற்போது குஷ்பு திமுகவில் இருந்து விலகிவிட்டதால், அவர் விரைவில் பா.ஜனதாவில் சேருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தெரிகிறது. ஸ்மிருதி இரானி போன்ற நடிகைகள் மற்றும் நஜ்மா ஹெப்துல்லா போன்றவர்களுக்கு பா.ஜனதாவில் அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றை பார்க்கும்போது தாமும் பா.ஜனதாவில் சேர்ந்தால் தமக்கும் அரசியலில் நல்ல எதிர்காலம் அமையலாம் என்ற முடிவுக்கு குஷ்பு வந்திருக்கலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக பா.ஜனதாவிலும் மக்களை கவரும் ' மாஸ் லீடர்' இல்லை என்பதால் குஷ்புவுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படலாம் என்றே தெரிகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by சிவா on Tue Jun 17, 2014 12:25 amமும்பையின் தோன்றி புகழ் சார் அணங்கு
பிம்பத்திரை ரசிகர் கனவுலக அரசி
ஏங்கித் தவித்திட்ட காளையர் கதறிட
சுந்தரை மணமிட்டு ஆன தமிழச்சி

திராவிட இயக்கம் தன்னில் இணைந்து
மேடை ஆயிரம் ஏறி முழங்கிட - உன்
தண்டமிழ் (!?!?) கண்ட கவிஞர் அனைவரும்
கூனிக் குறுகிட செம்மொழி வளர்த்தாய்.

கூர்செய் ஆப்பு நிச்சயம் ஆக
தேறவே மாட்டாய் எனவே தெளிந்து
தரவே இல்லை தேர்தலில் ஓரிடம்
அதற்கா அடைந்தாய் இத்தனை மூர்க்கம்?

ஊழல் வழக்கு பிள்ளை சண்டை
இருகொள்ளி (!?!?) தொல்லை இருண்ட அரசியல்
எதுவும் என்னை அசைத்திட்டதில்லை - ஆனால்
உன்னிக்கடிதம் உருக்கொலத்ததடி என்னை.

எதையும் தாங்கும் இதயம் பெற்றேன்
இதையும் தாங்க இருப்பில்லை துணிவு
இதுவும் நாடகம் எனவே சொல்லி
காட்டடி என்னிடம் கொஞ்சம் கனிவு.

பாணபத்திர ஓணாண்டி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by M.M.SENTHIL on Tue Jun 17, 2014 1:23 pm

@சிவா wrote:
மும்பையின் தோன்றி புகழ் சார் அணங்கு
பிம்பத்திரை ரசிகர் கனவுலக அரசி
ஏங்கித் தவித்திட்ட காளையர் கதறிட
சுந்தரை மணமிட்டு ஆன தமிழச்சி

திராவிட இயக்கம் தன்னில் இணைந்து
மேடை ஆயிரம் ஏறி முழங்கிட - உன்
தண்டமிழ் (!?!?) கண்ட கவிஞர் அனைவரும்
கூனிக் குறுகிட செம்மொழி வளர்த்தாய்.

கூர்செய் ஆப்பு நிச்சயம் ஆக
தேறவே மாட்டாய் எனவே தெளிந்து
தரவே இல்லை தேர்தலில் ஓரிடம்
அதற்கா அடைந்தாய் இத்தனை மூர்க்கம்?

ஊழல் வழக்கு பிள்ளை சண்டை
இருகொள்ளி (!?!?) தொல்லை இருண்ட அரசியல்
எதுவும் என்னை அசைத்திட்டதில்லை - ஆனால்
உன்னிக்கடிதம் உருக்கொலத்ததடி என்னை.

எதையும் தாங்கும் இதயம் பெற்றேன்
இதையும் தாங்க இருப்பில்லை துணிவு
இதுவும் நாடகம் எனவே சொல்லி
காட்டடி என்னிடம் கொஞ்சம் கனிவு.


பாணபத்திர ஓணாண்டி
மேற்கோள் செய்த பதிவு: 1069386

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6166
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by ayyasamy ram on Tue Jun 17, 2014 10:34 pm

மன அழுத்தம் நீங்கினால் சரி...!
-
 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by மாணிக்கம் நடேசன் on Wed Jun 18, 2014 9:03 am

இதற்கு பெயர்தான் குஷ்பு பெயர்ச்சி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by ரா.ரா3275 on Wed Jun 18, 2014 12:19 pm

கொடி கட்டுவது-தோரணம் கட்டுவது-தன் தலைவனைத் தலைக்குமேல் வைத்துக் கொண்டாடுவது-தன் கட்சிப் பேச்சாளனுக்கு கைதட்டுவது என தன் வாழ்க்கையோடே தன் கழகத்தையும் இணைத்து வாழும் மாண்பும் பண்பும் தமிழகத்தில் திராவிட இயக்கத் தொண்டனுக்கு மட்டுமே உண்டு.

அதிலும் தி.மு.க. தொண்டர்கள் எப்போதும் இதுசார் உணர்ச்சிகளில் முதலில் நிற்பவர்கள்.
அவர்களின் கால் தூசுக்குச் சமமாக ஆக முடியுமா இது போன்ற கவர்ச்சிப் பொம்மைகள்?

எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது தி.மு.க.வில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
வைகோ நீக்கப்பட்டபோதும் தி.மு.க.வில் கடும் கொந்தளிப்பு.
ஏனெனில் அவர்கள் தி.மு.க.வின் வளர்ச்சியைத் தங்கள் தோள்களில் சுமந்தவர்கள்.அதுதான் காரணம் அந்த தொண்டன் கொந்தளித்துக் கொதித்தெழுந்ததற்கு.

ஆனால் அதுபோல் எந்தப் பிரளயமும் இந்த கவர்ச்சிப் பதுமை விலகியதால் ஏற்படவே ஏற்படாது.அப்படியிருக்க இதை ஊதிப் பெருக்குவது உதவாது எதற்கும்.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by T.N.Balasubramanian on Wed Jun 18, 2014 6:49 pm

அய்யய்யோ , இவர் விலகியதால் , DMK அஸ்தமனம் தான் !
ஒரு பெரும் தூணை, இப்படியா கடலில் தள்ளுவது .?
கிடைக்கும் செய்திகளை பார்த்தால் ,BJP இல் இணைகிறாராம்.
பாவம் !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by Aathira on Wed Jun 18, 2014 8:53 pm

@ரா.ரா3275 wrote:கொடி கட்டுவது-தோரணம் கட்டுவது-தன் தலைவனைத் தலைக்குமேல் வைத்துக் கொண்டாடுவது-தன் கட்சிப் பேச்சாளனுக்கு கைதட்டுவது என தன் வாழ்க்கையோடே தன் கழகத்தையும் இணைத்து வாழும் மாண்பும் பண்பும் தமிழகத்தில் திராவிட இயக்கத் தொண்டனுக்கு மட்டுமே உண்டு.

அதிலும் தி.மு.க. தொண்டர்கள் எப்போதும் இதுசார் உணர்ச்சிகளில் முதலில் நிற்பவர்கள்.
அவர்களின் கால் தூசுக்குச் சமமாக ஆக முடியுமா இது போன்ற கவர்ச்சிப் பொம்மைகள்?

எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது தி.மு.க.வில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
வைகோ நீக்கப்பட்டபோதும் தி.மு.க.வில் கடும் கொந்தளிப்பு.
ஏனெனில் அவர்கள் தி.மு.க.வின் வளர்ச்சியைத் தங்கள் தோள்களில் சுமந்தவர்கள்.அதுதான் காரணம் அந்த தொண்டன் கொந்தளித்துக் கொதித்தெழுந்ததற்கு.

ஆனால் அதுபோல் எந்தப் பிரளயமும் இந்த கவர்ச்சிப் பதுமை விலகியதால் ஏற்படவே ஏற்படாது.அப்படியிருக்க இதை ஊதிப் பெருக்குவது உதவாது எதற்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1069581

நூற்றுக்கு ஆயிரம் சதம் உண்மை. அரசியலில் நுழைந்தவுடன் பதவி கொடுத்து விட வேண்டும் எண்ணுவது.....

நேத்து வந்த கனா கண்ணோடு போச்சுது. காத்துல வந்த புறா காத்தோடு போச்சுது


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by ரா.ரா3275 on Wed Jun 18, 2014 11:24 pm

@Aathira wrote:
@ரா.ரா3275 wrote:கொடி கட்டுவது-தோரணம் கட்டுவது-தன் தலைவனைத் தலைக்குமேல் வைத்துக் கொண்டாடுவது-தன் கட்சிப் பேச்சாளனுக்கு கைதட்டுவது என தன் வாழ்க்கையோடே தன் கழகத்தையும் இணைத்து வாழும் மாண்பும் பண்பும் தமிழகத்தில் திராவிட இயக்கத் தொண்டனுக்கு மட்டுமே உண்டு.

அதிலும் தி.மு.க. தொண்டர்கள் எப்போதும் இதுசார் உணர்ச்சிகளில் முதலில் நிற்பவர்கள்.
அவர்களின் கால் தூசுக்குச் சமமாக ஆக முடியுமா இது போன்ற கவர்ச்சிப் பொம்மைகள்?

எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது தி.மு.க.வில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
வைகோ நீக்கப்பட்டபோதும் தி.மு.க.வில் கடும் கொந்தளிப்பு.
ஏனெனில் அவர்கள் தி.மு.க.வின் வளர்ச்சியைத் தங்கள் தோள்களில் சுமந்தவர்கள்.அதுதான் காரணம் அந்த தொண்டன் கொந்தளித்துக் கொதித்தெழுந்ததற்கு.

ஆனால் அதுபோல் எந்தப் பிரளயமும் இந்த கவர்ச்சிப் பதுமை விலகியதால் ஏற்படவே ஏற்படாது.அப்படியிருக்க இதை ஊதிப் பெருக்குவது உதவாது எதற்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1069581

நூற்றுக்கு ஆயிரம் சதம் உண்மை. அரசியலில் நுழைந்தவுடன் பதவி கொடுத்து விட வேண்டும் எண்ணுவது.....

நேத்து வந்த கனா கண்ணோடு போச்சுது. காத்துல வந்த புறா காத்தோடு போச்சுது
மேற்கோள் செய்த பதிவு: 1069610


மிக்க நன்றி நிறைமதியாளர் அவர்களே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by சிவா on Thu Jun 19, 2014 1:03 am

நடிகை குஷ்பு பா.ஜ.க.விற்கு வந்தால் வரவேற்போம் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்

தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பா.ஜ.க.விற்கு வந்தால் வரவேற்போம் என்று, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

பாரதீய ஜனதா கட்சியின் உள்ளாட்சி பிரிவு மாநில தலைவர் ஜி.வெங்கடேசன் இல்லத்திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.வானதி சீனிவாசன் ஆம்பூர் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–
கூட்டணி நீடிக்கும்

தமிழகத்தில் தேர்தலின் போது மோடி அலை வீசவில்லை என்று கூறிவிட முடியாது. மோடி அலை வீசியதால்தான் தமிழக பா.ஜ.க.விற்கு 5.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. பல இடங்களில் தி.மு.க. பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதால்தான் வாக்குகள் சிதறிவிட்டது. எம்.பி.க்களின் எண்ணிக்கையை பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளோம். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கும்.
மத்திய அரசு நடவடிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை நடைமுறைபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தேசிய நதிநீர் இணைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. குறிப்பிட்டுள்ள நிலையில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கும்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் எடுத்து கூறியுள்ளார். நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை இலங்கையில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதிபடுத்தும் நடவடிக்கைகளையும், அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்து விலகியது அவரது சொந்த விருப்பம். அவர் பா.ஜ.க.விற்கு வந்தால் வரவேற்போம். யார் பா.ஜ.க.விற்கு வந்தாலும் வரவேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by சிவா on Thu Jun 19, 2014 6:34 am


'என் மனத்தில் மிக உயர்ந்த மனிதர் தலைவர் கலைஞர். அவர் எனக்குக் கழகத் தலைவர் இல்லை. என்னுடைய அப்பா!’ - தி.மு.க-வில் இருந்து விலகு​வதாக அறிவித்த குஷ்பு, அடுத்த சில நிமிடங்களில் தனது ட்விட்டர் வலைதளத்தில், கனத்த இதயத்துடன் இப்படி ட்வீட் செய்திருந்தார்.

'என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்தப் பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே தி.மு.க-வில் இருந்து விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்’ - இப்படி குஷ்புவின் அறிக்கையில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வலியும் வேதனையும் நிறையவே தெரிந்தது.

கட்சியில் சேர்ந்த நாளில் இருந்து பவர்ஃபுல்லாக இருந்த குஷ்புவுக்கு பிரச்னை வெளிப்படையாகத் தொடங்கியது கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான். அந்த சமயத்தில் ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில், ''தி.மு.க-வுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமளே ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக்கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம். என் வழி தலைவர் வழிதான்!'' என்று சொல்லியிருந்தார் குஷ்பு. அந்தப் பேட்டிதான் அத்தனை பிரச்னைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டது.

அந்தப் பேட்டி வெளியான சமயத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக திருச்சி சென்றிருந்தார் குஷ்பு. அங்கே ஸ்டாலின் ஆதரவாளர்கள் குஷ்புவை சூழ்ந்துகொண்டு செருப்பு வீசினார்கள். கட்சியே ஸ்டாலின் என்று ஆன பிறகு, குஷ்புவின் இந்தப் பேச்சை தி.மு.க-வில் உள்ள யாரும் ரசிக்கவில்லை. அப்போதே குஷ்பு கட்சியில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கருணாநிதிதான் குஷ்புவை அழைத்து சமாதானம் பேசினார். ஆனாலும் ஸ்டாலின் சமாதானம் ஆகவில்லை.

அந்த நிகழ்வுக்குப் பிறகு குஷ்பு தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தி.மு.க-வில் குஷ்புவின் ஒரே நம்பிக்கையாக இருந்தது கருணாநிதி மட்டும்தான். அதனால் இந்த முறை எப்படியும் தனக்கு தென் சென்னை தொகுதியில் எம்.பி ஸீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் குஷ்பு. தென் சென்னைக்கு ஸீட் கேட்டு பணமும் கட்டினார். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்திலும் குஷ்புவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. கருணாநிதி தலையிட்ட பிறகே குஷ்புவுக்கு சில தொகுதிகளில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதும், 'குஷ்புகூட நீங்க பிரசாரத்துக்கு போகணும் என்பது அவசியம் இல்லை. நீங்க உங்க வேலையைப் பாருங்க! அப்படியே போனாலும் ஒரு பாயின்ட் பார்த்தால் போதும்!’ என்று கட்சியில் உள்ள முக்கியப் பிரமுகரிடம் இருந்து வேட்பாளர்களுக்கு உத்தரவு போனது. பிரசாரத்துக்குச் சென்ற குஷ்புவை வேட்பாளர்களும் நாசூக்காகத் தவிர்த்தனர். குஷ்புவின் பிரசாரத்தை கலைஞர் டி.வி-யும் ஒளிபரப்பவில்லை. குஷ்புவுக்கு இப்படி நெருக்கடிகள் தொடர்ந்தன.

இந்தச் சூழலில்தான் கருணாநிதி பிறந்தநாள் வந்தது. கோபாலபுரம் வீட்டுக்கு பூங்கொத்துடன் குஷ்பு வந்தார். கருணாநிதிக்கு வாழ்த்துச் சொன்னார். அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் அங்கே கூடியிருந்ததால், குஷ்பு எதுவும் பேசவில்லை. அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

குஷ்பு மனவருத்தத்தில் இருக்கும் தகவல் தெரிந்து அவரை சமாதானம் செய்ய கடந்த சில தினங்களுக்கு முன்பு கருணாநிதி அழைத்துள்ளார். ஆனால், குஷ்பு செல்லவில்லை. அதன் பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம், ''நான் என் மனசுக்குத் தெரிஞ்சு எந்த தப்பு செய்யலை. கட்சியில சேர்ந்த நாளில் இருந்து என்னால் முடிஞ்சவரைக்கும் கட்சிக்காக உழைச்சேன். என் குடும்பத்துக்காக நான் செலவிட்ட நேரத்தைவிட, கட்சிக்காக செலவிட்ட நேரம்தான் அதிகம். ஆனால், அவங்க யாரும் அதைப் புரிஞ்சுக்கலையே... என்னை ஏதோ விரோதி மாதிரியேதான் பார்க்குறாங்க. தளபதிகூட இருக்கிறவங்க என் காதுபடவே என்னைத் திட்டுறாங்க. தளபதிகிட்ட இதைப் பற்றியெல்லாம் நான் பேசணும்னு நினைக்கிறேன். ஆனா, அவரு என்னைப் பார்க்குறதையே தவிர்த்துடுறாரு. இனி கட்சியில எல்லாமே தளபதிதான் என்பது முடிவாகிவிட்டது. நான் என்னதான் சொன்னாலும் அதை யாரும் ஏத்துக்கப்போறது இல்லை. தளபதி ராஜினாமா செய்வதாக அறிவிச்சப்ப, நான் அவரோட வீட்டுக்குப் போய் பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனா, அவர் குடும்பத்துல இருக்கிறவங்க என்னை வீட்டுக்குள்ளயே விடாம அவமானப்படுத்துவாங்க. அதனாலதான் போகல. தளபதி குடும்பத்துல யாருக்கும் என்னைப் பிடிக்கல. அவங்களா என்னை வெளியில போ... என்று சொல்வதற்குள் நானே கிளம்பிவிடுவதுதான் மரியாதை!'' என்று சொல்லியிருக்கிறார்.

குஷ்பு அறிக்கை வெளியான சில நிமிடங்களில், கருணாநிதி வீட்டில் இருந்து அவரைத் தொடர்பு கொண்டார்களாம். 'இனி பேசுறதுக்கு எதுவும் இல்லை... குட் பை’ என்று போனை கட் செய்தவர், சுவிட்ச்டு ஆஃப் செய்துவிட்டாராம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by ரா.ரா3275 on Thu Jun 19, 2014 12:21 pm

கூடிப் பிரிகிற காகக் கூட்டமல்ல-நாங்கள்
கூடிப் பொழிகிற மேகக் கூட்டம்


இந்த மேற்கோளை திருச்சி சிவா அவர்கள் மேடைதோறும் முழங்குவார்...இதில் தி.மு.க.தொண்டன் மேகம்...வந்து போகும் வால்நட்சத்திரங்கள் காகக் கூட்டம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum