ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

View previous topic View next topic Go down

பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by சிவா on Thu Jun 12, 2014 4:03 pm


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 பள்ளி மாணவிகள் மர்ம நபர்களால் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவிகளை பார்வையிட சென்ற சப்.கலெக்டர், அவர்கள் நிலையைக் கண்டு மயக்கமுற்றார். இந்த மாணவிகள் பலாத்காரம் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக கற்பழிப்பு, கொலை , என உ.பி., அரசை உலுக்கி வருகிறது. நேற்று கூட ஒரு போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒரு பெண் போலீஸ்காரர்களால் கற்பழிக்கப்பட்டார். பாடான் கிராமத்தில் நடந்தது போல் தற்போது 16 வயது பெண் ஒருவர் கற்பழித்து மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளார். இது மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 2 பள்ளி மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாழடைந்த மண்டபம்: பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் சர்ச் அருகே இந்த விடுதி உள்ளது. பாழடைந்த மண்டபம்போல் காட்சியளிக்கும் இந்த விடுதியில் 17 மாணவர்கள், 3 மாணவிகள் உள்ளனர். இங்கு 2 நபர்கள் நேற்று நள்ளிரவில் நுழைந்தனர். மிரட்டி, 10 மற்றும் 11 வயது உள்ள 2 மாணவிகளை கடத்தி சென்றனர். அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. உடலில் ரத்த காயங்களுடன் அழுது கொண்டே 2 மாணவிகளும் விடுதிக்கு திரும்பினர். விவரம் தெரிந்ததும் விடுத நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து 2 மாணவிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த விடுதியில் ஐ.ஜி., தேவஆசீர்வாதம், எஸ்.பி., சுதாகர் விசாரித்து வருகின்றனர். சில குளூ கிடைத்திருப்பதாவும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் பெண் சப்.கலெக்டர் ரஷ்மி சித்தார்த் மாணவிகளை பார்த்து விசாரித்தார். மாணவிகளின் நிலையை பார்த்து அதிர்ந்து போனார். இதனால் அவர் சற்று மனம் தளர்ந்து மயக்கமுறும் நிலைக்கு சென்றார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

பாதுகாப்பு இல்லை: இந்த தனியார் பள்ளி விடுதி ஒரு பாழடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு உரிய பாதுகாப்பு இல்லை . சரியான கேட் கூட இல்லாமல் இருந்தது. இது போன்ற சம்பவம் அடிக்கடி இங்கு நடந்து வருவதாக அக்கம் பக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். சிலர் இங்கு வந்து போவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் இந்த விடுதி முன்பு கூடியுள்ளனர்.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by ஜாஹீதாபானு on Thu Jun 12, 2014 4:20 pm

சோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by M.M.SENTHIL on Thu Jun 12, 2014 4:33 pm

வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம். குற்றவாளிகளுக்கு மிக கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by krishnaamma on Thu Jun 12, 2014 9:05 pm

ரொம்ப மோசம் ..............இவங்களை எல்லாம்................ எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு 


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by anikuttan on Fri Jun 13, 2014 9:03 am

அரசுக்கு இட்லி விர்பதர்க்கும் மதுக்கடை நடத்த்துவதர்க்கே நேரம் கிடைக்கவில்லை பிறகு இது போல விடுதிகள் பள்ளிகள் மீது கவனம் செலுத்த எப்படி நேரம் கிடைப்பது .
avatar
anikuttan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 99
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by சிவா on Fri Jun 13, 2014 10:26 am

@anikuttan wrote:அரசுக்கு இட்லி விர்பதர்க்கும் மதுக்கடை நடத்த்துவதர்க்கே நேரம் கிடைக்கவில்லை பிறகு இது போல விடுதிகள் பள்ளிகள் மீது கவனம் செலுத்த எப்படி நேரம் கிடைப்பது .

அருமையாகக் கூறியுள்ளீர்கள் நண்பா.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by சம்பத் on Fri Jun 13, 2014 7:50 pm

வெட்கக்கேடு

இம்மாதிரி நடக்க அரசு விடலாமா..

சம்பத்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by ரா.ரா3275 on Fri Jun 13, 2014 10:53 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி கன்னத்தில் அறை 
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by சிவா on Sat Jun 14, 2014 3:04 am

பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் பலாத்கார சம்பவம் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது 5 பேரை பிடித்து விசாரணை

பொள்ளாச்சியில் மாணவிகள் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது.இதையொட்டி 5 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலியல் பலாத்காரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பஸ்நிலையம் அருகே ஒரு தனியார் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் தங்கி படித்து வந்த 10 வயது மற்றும் 11 வயது பள்ளி மாணவிகள் 2 பேர் கடந்த 11–ந் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டனர்.

விடுதியில் இருந்த மாணவிகளை காணாதது குறித்து சக மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தேடியபோது, அருகில் உள்ள ஒரு கட்டிடத்தில் 2 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ரத்தகாயங்களுடன் சுருண்டு கிடந்தனர்.

தீவிர சிகிச்சை

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே அந்த மாணவிகள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அத்துடன் அவர்களுக்கு மனரீதியான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அமைப்புகளும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.அத்துடன் அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

விடுதிக்கு சீல்

தொடர்ந்து சமூக நலத்துறை, வருவாய்த்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி அந்த விடுதி செயல்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு தங்கி படித்து வந்த மாணவ– மாணவிகள் கோவையில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தையொட்டி குழந்தை பாலியல் தடுப்புச்சட்டம், கடத்திச் சென்று கற்பழித்தல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

6 தனிப்படை

மேலும் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல் கட்டமாக பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் பட்டியலை போலீசார் தயார் செய்தனர். அப்போது பொள்ளாச்சி சி.டி.சி.மேடு பகுதியை சேர்ந்த கோபிநாத் (24) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அடையாளம் காட்டிய மாணவிகள்

தொடர்ந்து போலீசார் கோபிநாத்தை பிடித்து விசாரித்தனர். அதில், வால்பாறையை சேர்ந்த வீரன் என்கிற வீராசாமியும் (வயது 23) அவரது நண்பரும், சம்பவம் நடந்த அன்று இரவு மது அருந்திவிட்டு சம்பந்தப்பட்ட விடுதிக்கு செல்கிறோம் என்று கூறியதாக கோபிநாத் போலீசாரிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து போலீசார் வீராசாமியின் புகைப்படத்தை கோபிநாத்திடம் இருந்து பெற்றனர். பின்பு அந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பின்னர் அந்த மாணவிகளிடம் வீராசாமியின் புகைப்படத்தை காண்பித்து விசாரணை நடத்தினர்.

ஆண்மை பரிசோதனை

மேலும் இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அரவிந்த் (25), அருண்வெங்கடேஷ் (23), ஹரி (22) ஆகியோர் மீதும் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள்.

பின்பு அவர்கள் 3 பேருடன் கோபிநாத்தையும் போலீசார் நேற்று மாலையில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்கள் 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.போலீசார் மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்த ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்றனர்.இதற்கிடையில் போலீஸ் தேடியதில் மேலும் ஒருவர் சிக்கினார்.இதன் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:– சந்தேகப்படும் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை பாதிப்புக்கு உள்ளான மாணவிகளிடம் காட்டியதில் முக்கிய துப்பு கிடைத்து உள்ளது.இதன் அடிப்படையில் 5 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஒருவர் சிக்காமல் இருக்கிறார்.அதில் ஒருவரின் புகைப்படத்துடன் விசாரித்து வருகிறோம்.அவர் பிடிபட்டால் இந்த சம்பவத்தின் முழு விவரம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் ஆறுதல்

இந்த நிலையில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் நேற்று மாலை பொள்ளாச்சி சென்றார். பின்னர் சப்–கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடேவுடன், கலெக்டர் அந்த மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிகளை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த கலெக்டர் நிருபர்களிடம் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் தற்போது நலமாக உள்ளனர். முதல்–அமைச்சர் அறிவித்த நிதியுதவி வங்கியில் அந்த மாணவிகளின் பெயரில் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபட்டு விடுவார்கள்’ என்றார்.

சப்–கலெக்டர் உத்தரவு

இதற்கிடையே, பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் அனைத்து மாணவ– மாணவிகள் தங்கும் விடுதிகள் பாதுகாப்பானதாக உள்ளதா? என்று ஆய்வு நடத்த சப்–கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிலையில், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அவருடன் முத்துகருப்பண்ணசாமி எம்.எல்.ஏ., சப்–கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே, போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் கிரி உள்பட அ.தி.மு.க.வினர் சென்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by சிவா on Mon Jun 16, 2014 3:12 am

விடுதி மாணவிகள் கற்பழிப்பு விவகாரம்: தலைமறைவான பாதிரியார் திருச்சியில் பதுங்கல்

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இதன் அருகே ஆதரவற்ற மாணவ–மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. தேவாலய நிர்வாகமே விடுதியை நடத்தி வந்தது. இங்கு 17 மாணவர்களும், 3 மாணவிகளும் தங்கியிருந்தனர்.

இவர்களில் 10 மற்றும் 11 வயது மாணவிகள் 2 பேர் கடந்த புதன்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் 6 தனிப் படை அமைக்கப் பட்டது.

பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்து ராஜன் தலைமையில் செயல்பட்ட தனிப் படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் கற்பழிப்பு குற்றவாளியான வால்பாறையைச் சேர்ந்த வீராசாமி(வயது 23) என்பவனை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனை அடிப்படையில் அவன் தான் கற்பழிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைதான வீராசாமியிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு மூலம் பெறப்பட்டது. அவை வீடியோவில் பதிவு செய்யப் பட்டது. ‘கஞ்சா போதையில் இருந்த நான் விடுதிக்குள் சென்று மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தேன்’ என்று வீராசாமி தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறான்.

வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் வீரா சாமியை பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

டி.இ.எல்.சி. தேவாலய நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த மாணவர்கள் விடுதி சட்டத்துக்கு புறம்பாக அனுமதியில்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் செயல்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து கோவை மாவட்ட சமூக நலத் துறை குழந்தைகள் நலக்காப்பாளர் விஜயா கொடுத்த புகாரின் பேரில் தேவாலய பாதிரியார் பாக்கியநாதன், வார்டன் சுரேஷ்குமார் மீது பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் வார்டன் சுரேஷ் குமார் நேற்று கைது செய்யப்பட்டார். மாணவிகள் பாலியல் பலாத்காரம் விவகாரம் பூதாகர மானதும் தேவாலய பாதிரியார் பாக்கியநாதன் தலைமறைவாகி விட்டார். அவர் இப்போது திருச்சியில் பதுங்கியிருப்பதாகவும், அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by சிவா on Mon Jun 16, 2014 4:55 am

பொள்ளாச்சி சிறுமிகள் பலாத்காரம்: 'கைதான நபர் ஒப்புதல் வாக்குமூலம்'

பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது செயலை ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவருடன் வழிப்பறியில் ஈடுபட்டதாக மேலும் இருவர் கைதாகியுள்ளனர்.

பொள்ளாச்சி, தமிழ் சுவிஷேச லுத்திரன் திருச்சபை ஆலய (TELC) நிர்வாகத்தின் கீழ் 20 வருடங்களுக்கு மேலாக மாணவர் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அனுமதி பெறாமல், பாதுகாப்பு வசதிகள் இன்றி இயங்கி வந்த இந்த விடுதியில் 3 சிறுமிகள் உள்பட 14 வயதிற்குட்பட்ட 20 பேர் தங்கி படித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவில் சமூகவிரோதிகள் சிலர் விடுதிக்குள் புகுந்து, இரண்டு சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பல மணி நேரம் கழித்து விடுதி ஊழியர்கள் அந்த சிறுமிகள் இருவரையும் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள் இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம் 2012 (போஸ்கோ), 336 (A) சிறுமிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லுதல் (procuration of minor girl), 506 (ii) கொலை மிரட்டல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் ஒரு சிறுமி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.

தேடப்பட்ட நபர் கைது..

இந்நிலையில், சிறுமிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சந்தேகத்தின் பேரிலும் வெள்ளிக்கிழமை 4 பேரை போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தினர். ரத்த மாதிரி மற்றும் தடயங்களை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

இறுதியாக, இன்று (சனிக்கிழமை) சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக வால்பாறை, கக்கன்காலனியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் வி.வீரன் (எ) வீராச்சாமியை (23) போலீஸார் கைது செய்தனர். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் பணப்பாளையம். இவர் திருமணமானவர்.

கைதானவர் ஒப்புதல்...

போலீஸார் கூறுகையில், "புதன்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வீராச்சாமி, அவரது நண்பர்கள் கோபிநாத் (23), அரவிந்த் (19) மூவரும், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே செல்போன் திருடியுள்ளனர். அங்கு மூவரில் வீராச்சாமி மட்டும் பிரிந்து சென்று விடுதி வளாகத்திற்குள் புகுந்துள்ளார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களை எழுப்பி 10, 11 வயதுடைய இரண்டு சிறுமிகளை கத்தியைக் காட்டி மிரட்டி, பாழடைந்த கட்டிடங்கள் வழியாக வணிக வளாகத்தின் மீது அழைத்துச் சென்றுள்ளான். அங்கு அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

விடுதி ஊழியர்கள் சிறுமிகளை தேடி வந்தபோது, வீராசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து வியாழக்கிழமை முதல் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் வீராசாமி பிடிபட்டார். பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் வைத்து வீராச்சாமியிடம் விசாரணை நடைபெற்றது. அதில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார்" என்றனர்.

நண்பர்கள் சிறையிலடைப்பு...

இந்நிலையில், வீராச்சாமியின் நண்பர்களான கோபிநாத், அரவிந்த ஆகியோர் மீது கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுதல் (392) பிரிவின் கீழ் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இன்று மாலை பொள்ளாச்சி ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதில் 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதி நிர்வாகம் மீது நடவடிக்கை

அனுமதி பெறாமல் முறைகேடாக இயங்கி வந்ததால் விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரி ஜி.விஜயா பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விடுதி காப்பாளர் இ.பி.சுரேஷ்குமார், விடுதி நிர்வாகி பாக்கியநாதன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு அதிகாரி கொடுத்த அறிவிப்பை புறக்கணித்ததாக (188), உயிருக்கு ஆபத்து விளைவித்தல் (336), சட்டத்திற்கு புறம்பாக தங்க வைத்தது (342) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் திருச்சியில் இருந்த பாக்கியநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுரேஷ்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று திருச்சியிலுள்ள டி.இ.எல்.சி தலைமை நிர்வாகத்தினர் பொள்ளாச்சியில் ஆலோசனை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால் நிர்வாகத் தரப்பில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவர்களது வருகை தள்ளிவைக்கப்பட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum