ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

பூமி என் தாய்
 T.N.Balasubramanian

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விளையாட்டு செய்தித் துளிகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Jun 10, 2014 5:05 pm

* 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

* பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். ‘இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியும் என நம்புகிறேன்’ என்று அங்கிதா நன்றி தெரிவித்துள்ளார்.

* தேசிய அளவில் கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு, திறமையான இளம் வீரர், வீராங்கனைகளைக் கண்டறிவதற்கான தேர்வுப் போட்டிகள் நடத்தப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

* அயர்லாந்து அணியுடன் இன்று நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் களமிறங்க, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தயாராகி உள்ளது போர்ச்சுகல் அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

* பிரெசில் நாட்டில் நாளை தொடங்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில், இடுப்புக்கு கீழே செயலற்ற நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி ஒருவர் ‘அயர்ன் மேன்’ போன்ற இரும்புக் கவச உடை அணிந்தபடி கால்பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக பிபா தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Jun 10, 2014 5:05 pm

* உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட, நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது. கியோசெரா ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

* உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி எல் சால்வடார் அணியை நேற்று வீழ்த்தியது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வில்லா 2 கோல் அடித்து அசத்தினார்.

* மான்ட்ரீல் நகரில் நடக்கும் கனடா கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்துக்கான தகுதிச் சுற்றில், மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் முதலிடம் பிடித்தார். சக வீரர் லூயிஸ் ஹாமில்டன் 2வது இடமும், நடப்பு சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் (ரெட் புல் ரேசிங்) 3வது இடமும் பிடித்தனர். நட்சத்திர வீரர் பெர்னாண்டோ அலான்சோ (பெராரி) 7வதாக வந்தார்.

* உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டும் என்று பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் வலியுறுத்தி உள்ளார். முதல் 2 லீக் ஆட்டங்களிலும் கடைசி நிமிடத்தில் கோல் விட்டுக் கொடுத்ததால், இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

* ‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) இணையாக மற்றொரு அமைப்பை உருவாக்குவோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அச்சுறுத்தியதை தொடர்ந்தே, ஐசிசி அமைப்பில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக் கொண்டன’ என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

* பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலிடம் எதிர்ப்பின்றி சரணடைந்த இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே, தனது புதிய பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீராங்கனை அமேலி மவுரெஸ்மோவை (பிரான்ஸ்) நியமித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Jun 10, 2014 5:06 pm

மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் தரவரிசையில், இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதல் முறையாக 6வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.ஜிம்பாப்வே வீராங்கனை காரா பிளாக்குடன் இணைந்து விளையாடி வரும் சானியா, பிரெஞ்ச் ஓபன் கால் இறுதியில் நம்பர் 1 ஜோடியான ஷுவாய் பெங் - சூ வெய் ஸை ஜோடியிடம் போராடி தோற்றார். பிரெஞ்ச் ஓபன் நிறைவடைந்த நிலையில், நேற்று வெளியான தரவரிசைப் பட்டியலில் அவர் முதல் முறையாக 6வது இடத்தை பிடித்துள்ளார்.ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 28 இடம் முன்னேறி 262வது இடத்தை பிடித்தார். ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் சோம்தேவ் தேவ்வர்மன் 23 இடம் பின்தங்கி 119வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இரட்டையர் ரேங்கிங்கில் லியாண்டர் பயஸ் 13வது இடத்திலும், ரோகன் போபண்ணா 17வது இடத்திலும் உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Fri Jun 13, 2014 5:28 pm

*அர்ஜென்டினா அணி வீரர்கள் பெலோ ஹரிசான்டே நகரில் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, இருபதுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மைதானத்துக்குள் ஊடுருவி நட்சத்திர வீரர் மெஸ்ஸியிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

*போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

*மகளிர் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி 2016ம் ஆண்டு சிலி நாட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில், சிட்னி தண்டர் அணிக்காக விளையாட தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

*‘உலக கோப்பை போட்டியில் நிறவெறி தலைதூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திறமையை வெளிப்படுத்துவதில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.

*ஹாங்காங்கில் நடைபெறும் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by M.M.SENTHIL on Fri Jun 13, 2014 10:18 pm

   


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6166
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Mon Jun 16, 2014 2:13 am

* இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது. வங்கதேச அணி கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளிலும் தோற்றுள்ளதால், ரெய்னா தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தும் முனைப்புடன் களமிறங்குகிறது. இரு அணிகளும் மோதியுள்ள 25 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 223 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

* இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில் இலங்கை அணி அனுபவ வீரர் சங்கக்கரா பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அவர் முதல் முறையாக சதம் விளாசி உள்ளார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், இலங்கை அணியும் சிறப்பாக விளையாடி பதிலடி கொடுத்துள்ளது. அந்த அணி 92 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்திருந்தது. சங்கக்கரா 121 ரன், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

* நியூசிலாந்து அணியுடன் போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் நாளை தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ், தொடக்க வீரர் கெய்ரன் பாவெல் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக பிளாக்வுட், லியான் ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Jun 17, 2014 12:39 am

* பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வீரர்களில் தங்களின் அபிமான வீரர் யார் என இந்திய பெண் ரசிகர்களிடம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், அர்ஜென்டினா அணி கேப்டன் லயனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார்.

* தொடக்க லீக் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் மண்ணைக் கவ்வினாலும், நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி இந்த படுதோல்வியில் இருந்து மீண்டு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்று அந்த அணியின் செர்ஜியோ ராமோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* கால்பந்து களத்தின் உள்ளே நிகழும் நிகழ்வுகளை, குறைந்த அலைவரிசை கொண்ட காந்தப் புலங்களில் முப்பரிமாணத்தில் படம்பிடித்து உடனுக்குடன் காட்சிகளை ஆய்வு செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோல் அடிக்கப்பட்டதா இல்லையா என்பதை நடுவர்கள் உறுதி செய்துகொள்ள முடியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Thu Jun 19, 2014 1:30 am

* துபாயில் நடக்கும் உலக விரைவு செஸ் போட்டியின் 5வது சுற்று முடிவில் இந்திய வீரரும் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான விஸ்வநாதன் ஆனந்த் 9வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

* இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இருவரும் துபாயில் உள்ள எல்ஸ் கோல்ப் கிளப்பின் ஆயுள்கால உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

* மலேசிய அணியுடன் நடந்த கடைசி ஹாக்கி டெஸ்டில் 5-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்திய மகளிர் அணி 6-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

* இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு கவுன்டி கிரிக்கெட் போட்டியின்போது, பெவிலியனில் வைக்கப்பட்டிருந்த ஒரு டஜன் ஐ-போன்களை ஒருவன் திருடிச் சென்றான். இதைப் பார்த்த வீரர்கள், விளையாட்டை நிறுத்திவிட்டு திருடனை விரட்டிச் சென்று தங்களின் விலை உயர்ந்த ஐ-போன்களை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Mon Jun 23, 2014 3:47 am

* டோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நேற்று இங்கிலாந்து பயணமானது. முதல் டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜூலை 9ம் தேதி தொடங்குகிறது.

* உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.

*ஆஸ்திரியன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். சக மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் 2வது இடம் பிடித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Mon Jun 23, 2014 3:49 am


18-வது ஆசிய விளையாட்டு போட்டியை (2019-ம் ஆண்டு) நடத்தும் உரிமையை வியட்நாம் தலைநகர் ஹனோய் பெற்றிருந்தது. இரு மாதங்களுக்கு முன்பு இந்த போட்டியை தங்களால் நடத்த இயலாது என்று கூறி ஹனோய் பின்வாங்கியது.

இந்த நிலையில் இந்த போட்டியை இந்தியா நடத்த ஆர்வம் காட்டி வருகிறது.2019-ம் ஆண்டு ஆசிய விளையாட்டை டெல்லியில் நடத்த விரும்புவதாகவும், உரிமம் கோருவதற்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்க இருப்பதாகவும் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, ஆசிய ஒலிம்பிக் சங்க தலைவர் ஷேக் அகமது அல்-பஹாத் அல்-சபாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Mon Jun 23, 2014 3:50 am

அசோக் பிரதர்ஸ் கபடி அணியின் முன்னாள் வீரர் தெய்வசிகாமணி நினைவு மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி சென்னை அசோக்நகர் மாந்தோப்பு காலனியில் உள்ள மாநகராட்சி திடலில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதில் ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் கலந்து கொள்கின்றன. போட்டியை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். பரிசளிப்பு விழாவில் கலைராஜன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு வழங்குகிறார். ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது.

போட்டிக்கான ஏற்பாடுகளை ஜெகதலன், கோபி, மணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இந்த தகவலை சென்னை மாவட்ட கபடி சங்க செயலாளர் கோல்டு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Mon Jun 23, 2014 3:50 am

ரூ.5 லட்சம் பரிசுத்தொகைக்கான அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது. அகில இந்திய கைப்பந்துநெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது.

‘தினத்தந்தி’, பனிமலர், எஸ்.என்.ஜே.குரூப் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரள போலீஸ், மேற்கு ரெயில்வே, கர்நாடகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, சுங்க இலாகா, வருமானவரி, ஐ.சி.எப், தெற்கு ரெயில்வே, பனிமலர், எஸ்.ஆர்.எம், எஸ்.டி.ஏ.டி ஆகிய 12 அணிகளும், பெண்கள் பிரிவில் தெற்கு ரெயில்வே, கேரள மின்சார வாரியம், கேரள போலீஸ், தெற்கு ரெயில்வே, டாக்டர் சிவந்தி கிளப் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

ரூ.5 லட்சம் பரிசுஇந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு டாக்டர் சிவந்தி தங்க கோப்பையும், 2-வது இடம் பெறும் அணிக்கு எஸ்.என்.ஜே. கோப்பையும், 3-வது இடம் பெறும் அணிக்கு பி.டி.போஸ் நினைவு கோப்பையும், பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு பனிமலர் சுழற்கோப்பையும், 2-வது இடம் பெறும் அணிக்கு என்.எம்.டி.சி. கோப்பையும், 3-வது இடம் பெறும் அணிக்கு சாய்ல் கோப்பையும் வழங்கப்படுகிறது.

24-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் வி.கே.ஜெயக்கொடி, கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்கள். வருமான வரி துணை இயக்குனர் எஸ்.பாண்டியன், உதவி இயக்குனர் கே.எஸ்.இளையராஜா உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். பரிசு கோப்பை அறிமுகம்.

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் டாக்டர் சிவந்தி கோப்பை அறிமுக நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் போலீஸ் டி.ஜி.பி. ஆர்.சேகர் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். கோப்பையை போட்டி அமைப்பு குழு சேர்மன் சி.சக்திகுமார் பெற்றார். அப்போது ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் உடனிருந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Jun 24, 2014 6:33 pm

* அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்பாக, ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் (3வது அணி: இங்கிலாந்து) விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* இங்கிலாந்தில் நடைபெற்ற பிஆர்டிசி எப்4 பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த 16 வயது சிறுவன் அர்ஜுன் மெய்னி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளான்.

* இங்கிலாந்தை சேர்ந்த ஆடம்பர பொருள் விற்பனை நிறுவனம் சார்பில், சச்சின் டெண்டுகரை கவுரவிக்கும் விதமாக தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

* விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் ஆண்டி மர்ரே (இங்கிலாந்து) 6-1, 6-4, 7-5 என்ற நேர் செட்களில் டேவிட் காபினை (பெல்ஜியம்) வீழ்த்தினார். தாமஸ் பெர்டிச் (செக்.), மிகைல் யூஜ்னி (ரஷ்யா), மடோசெவிக் (ஆஸி.), கில்லஸ் சைமன் (பிரான்ஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Jun 24, 2014 6:37 pm

* உலக கோப்பை ஆட்டத்தில் 4 கோல் போட்ட முதல் ஆப்ரிக்க அணி என்ற பெருமை அல்ஜீரியாவுக்கு கிடைத்துள்ளது.

* இதற்கு முன்பாக உலக கோப்பையில் அல்ஜீரியா விளையாடிய 7 ஆட்டங்களில் அடித்த கோல்களை விட, இந்த ஒரே போட்டியில் அதிக கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.

* தென் கொரிய அணி 7 ஆட்டத்தில் விளையாடி ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது.

* தென் கொரியா 52 சதவீத நேரமும், அல்ஜீரியா 48 சதவீத நேரமும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

* உலக கோப்பை கால்பந்து போட்டியை ஆன்லைனில் நேரடியாக பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகவும், அடுத்த உலக கோப்பை போட்டியின்போது இது மும்மடங்காக உயரும் என்றும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ‘பிபா’ தெரிவித்துள்ளது.

* குரோஷியாவின் மரியோ மாண்ட்சுகிக்கை முழங்கையால் தாக்கிய கேமரூன் வீரர் அலெக்ஸ் சாங்குக்கு 3 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Sat Jun 28, 2014 2:25 am

* ‘அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸியை மட்டுமே நம்பியிருக்கவில்லை. அவரது திறமையான ஆட்டம் எங்களுக்கு சாதகமான அம்சம். ஆனால், மற்ற வீரர்களும் வெற்றியை வசப்படுத்தக் கூடிய அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் தான்’ என்று அந்த அணியின் நடுகள வீரர் பெர்னாண்டோ காகோ கூறியுள்ளார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், அர்ஜென்டினா சுவிட்சர்லாந்து அணிகள் ஜூலை 1ம் தேதி மோதவுள்ளன.

* இத்தாலி வீரர் ஜார்ஜியோவை கடித்து காயப்படுத்திய உருகுவே அணி வீரர் லூயிஸ் சுவாரெசுக்கு 9 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது சற்று அதிகப்படியான தண்டனை என்று அர்ஜென்டினா முன்னாள் நட்சத்திரம் மரடோனா உள்பட பல வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* காயம் அடைந்துள்ள அர்ஜென்டினா வீரர் ஆகுவரோ, உலக கோப்பையில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் என்று அந்த அணி நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. அவரது உடல்தகுதி பற்றி சுவிஸ் அணியுடனான நாக் அவுட் சுற்று போட்டிக்கு முன்பாக முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Sat Jun 28, 2014 2:26 am

* ஆஸ்திரேலியன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்தியாவின் சாய்னா நெய்வால் தகுதி பெற்றார். கால் இறுதியில் ஜப்பானின் எரிகோ ஹிரோசுடன் நேற்று மோதிய சாய்னா 2118, 219 என்ற நேர் செட்களில் 47 நிமிடத்தில் வெற்றியை வசப்படுத்தினார். மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 1721, 1721 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் போராடி தோற்றார்.

* ஈரானில் நடைபெற்ற 21வது ஆசிய ஜூனியர் தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் வீர் சோத்ரானி தங்கப் பதக்கமும், யாஷ் பாத்டே வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

* இந்தியா லெஸ்டர்ஷேர் கவுன்டி அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டத்தின் 2வது நாள் ஆட்டம் கனமழை காரணமாக நேற்று முழுவதுமாக கைவிடப்பட்டது. டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 333 ரன் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தவான் 60, கம்பீர் 54, புஜாரா 57 ரன் எடுத்து ஓய்வு பெற்றனர். விஜய் 20, கோஹ்லி 29 ரன்னில் ஆட்டமிழந்தனர். ரகானே 47, ரோகித் 43 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்தியா இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் ஜூலை 9ம் தேதி தொடங்க உள்ளது.

* பார்படாஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுடன் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நீஷாம் அதிகபட்சமாக 78 ரன், வில்லியம்சன் 43, ராஸ் டெய்லர் 45, கேப்டன் மெக்கல்லம் 31, கிரெய்க் 46* ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் சுலைமான் பென் 5, கெமார் ரோச் 4 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 22 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன் எடுத்திருந்தது. அதிரடி வீரர் கிறிஸ் கேல் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Sun Jun 29, 2014 3:50 am

நடப்பு உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் மொத்தம் 136 கோல் அடிக்கப்பட்டது.

இது கடந்த 5 உலக கோப்பையில் அதிகபட்சமாகும்.

1998ல் பிரான்சில் நடந்த உலக கோப்பையில் 126 கோல், 2002ல் ஜப்பான் - கொரியா இணைந்து நடத்திய உலக கோப்பையில் 130 கோல், 2006ல் (ஜெர்மனி) 117 மற்றும் 2010ல் (தென் ஆப்ரிக்கா) 100 கோல் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by ayyasamy ram on Sun Jun 29, 2014 12:15 pm

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Mon Jul 28, 2014 3:13 am

* கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் ஒரே சத்தமாக இருக்கிறது. ‘ஒலி மாசு’ காரணமாக நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று பல வீரர், வீராங்கனைகள் புகார் தெரிவித்துள்ளனர்.

* மகளிர் டேபிள் டென்னிஸ் குழு போட்டியில் நியூசிலாந்து அணியை எளிதாக வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியது.

* ஸ்குவாஷ் போட்டியின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல், தீபிகா பாலிகல் இருவரும் முதல் முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

* மகளிர் ஹாக்கியில் ரித்து ராணி தலைமையிலான இந்திய அணி இன்று தனது 2வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா கனடாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Sep 09, 2014 4:11 am

* யூரோ-2016 ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிச் சுற்றில், உலக சாம்பியன் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை போராடி வென்றது. மற்றொரு போட்டியில் அல்பேனியா அணியுடன் மோதிய போர்ச்சுகல் அணி 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

* ‘உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு இன்னும் 5 மாதங்களே அவகாசம் உள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து அலஸ்டர் குக்கை நீக்குவது மேலும் குழப்பத்தை அதிகரிக்கவே செய்யும். அதற்கான காலம் கடந்துவிட்டது’ என்று முன்னாள் பயிற்சியாளர் ஆஷ்லி கைல்ஸ் கூறியுள்ளார்.

* அரியானா மாநிலம் ரோட்டக்கில் நடந்த 28வது தேசிய சப்-ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் மணிப்பூரின் மெய்ரபா தங்கப்பதக்கம் வென்றார். பைனலில் போராடி தோற்ற அருணாச்சலப்பிரதேச வீரர் லா துகும் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.

* சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்க உள்ள பாகிஸ்தானை சேர்ந்த லாகூர் லயன்ஸ் அணி வீரர்களுக்கு இந்தியா வருவதற்கான விசா வழங்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Sep 09, 2014 10:54 pm

பெண் தோழியை மணக்கிறார், நவரத்திலோவா

செக்கசுகோவக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் குடியேறி வசித்து வருபவர் முன்னாள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மார்டினா நவரத்திலோவா. ஓரின சேர்க்கையாளரான (லெஸ்பியன்) நவரத்திலோவா, ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து விட்டு கடந்த 1991–ம் ஆண்டில் பிரிந்தார். தற்போது 57 வயதான நவரத்திலோவா, 42 வயதான ரஷிய முன்னாள் அழகியும், தொழில் அதிபருமான ஜூலியா லெமிகோவாவுடன் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார். இவர்களது நிச்சயதார்த்தம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அரை இறுதி ஆட்டத்தின் போது ஸ்டேடியத்தில் நடந்தது. இது அங்குள்ள திரையில் காட்டப்பட்டது. அப்போது ரசிகர்கள் கரவொலி எழுப்பினார்கள். என்னை திருமணம் செய்ய விருப்பமா? என்று நவரத்திலோவா விடுத்த வேண்டுகோளை ஜூலியா ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நவரத்திலோவா, ஜூலியாவுக்கு வைர மோதிரம் அணிவித்தார். புளோரிடாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி கிடையாது. இதனால் இருவரும் மியாமியில் தங்கள் திருமணத்தை விரைவில் நடத்தலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Sep 09, 2014 10:54 pm

ஆசிய இளையோர் கைப்பந்து: இந்திய அணிக்கு 2–வது வெற்றி

10–வது ஆசிய இளையோர் ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 25–15, 25–14, 25–15 என்ற நேர்செட்டில் கத்தாரை தோற்கடித்து 2–வது வெற்றியை கண்டது. முதல் ஆட்டத்தில் பக்ரைனை வென்று இருந்த இந்திய அணி ஈரானிடம் தோல்வி கண்டு இருந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 1 முதல் 8–வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை சந்திக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Sep 09, 2014 10:54 pm

சர்வதேச கால்பந்து சங்க தேர்தலில் பிளாட்டர் மீண்டும் போட்டி

சர்வதேச கால்பந்து சங்க (பிபா) நிர்வாகிகள் தேர்தல் அடுத்த ஆண்டு (2015) ஜூன் மாதம் நடக்கிறது. இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு ஜெப் பிளாட்டர் போட்டியிடுகிறார். சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 78 வயதான பிளாட்டர் 5–வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Sep 09, 2014 10:55 pm

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு அனுமதி

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் செப்டம்பர் 13–ந் தேதி முதல் அக்டோபர் 4–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் தகுதி சுற்றில் கலந்து கொள்ளும் லாகூர் லயன்ஸ் அணிக்கு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் விசா அனுமதி அளித்து இருக்கிறது. லாகூர் லயன்ஸ் அணியில் பாகிஸ்தான் நடப்பு அணியில் இடம் பிடித்துள்ள அகமது ஷெசாத், உமர் அக்மல், கம்ரன் அக்மல், நசிர் ஜாம்ஷெட், வகாப் ரியாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by சிவா on Tue Sep 09, 2014 10:55 pm

ஆஸ்திரேலிய 20 ஓவர் அணிக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டன்

ஆஸ்திரேலிய 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஜார்ஜ் பெய்லி அந்த பதவியில் இருந்து திடீரென விலகினார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனாக அதிரடி பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளார். 27 வயதான ஆரோன் பிஞ்ச் கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 153 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விளையாட்டு செய்தித் துளிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum