ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மழலைச் செல்வத்தின் மகிமை

View previous topic View next topic Go down

மழலைச் செல்வத்தின் மகிமை

Post by சிவா on Mon Jun 09, 2014 6:38 pm

சின்னச் சின்ன அடி எடுத்து, சிங்கார நடை நடந்து, நமது செல்லக்கிளி "அம்மா' என்று அழைக்கும் போது.. மழலைச் செல்வத்தின் மகிமை புதிய கோணத்தில் புரிய தொடங்குமல்லவா!

உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கும். வீட்டிலிருக்கும் சின்ன நாற்காலிகள், ஸ்டூல்கள் எல்லாம் நம்ம குட்டி இளவரசி பிடித்துக் கொண்டு நடக்கவும், தள்ளிக் கொண்டே செல்வதற்கும்தான்! இரண்டு கால்களையும் அகலமாக வைத்துக் கொண்டு மெள்ளத் தடுமாறி நடக்கும். கால் பாதங்கள் வளைவு இல்லாமல் தட்டையாக இருக்கும். நடக்க நடக்க 3-4 வயதில் தான் பாத வளைவுகள் தோன்றும். குழந்தை நன்கு நடக்க ஆரம்பிக்கும் வரை முழங்கால்ஞ்கள் வளைவாகத் தெரியும் அவைதானே நேராகும்.

குழந்தை ஒவ்வொரு திறனையும் கற்றுக் கொள்ள இயற்கை தரும் உந்துதல் மிகவும் முக்கியமானது. முக்கியமான வளர்ச்சிப் படிகளை குழந்தை அடைந்த பிறகு சுமார் 5 வயதிற்குள் மேல் இந்த உந்துதல் அதிகம் இருப்பதில்லை. எழுந்து நிற்கும் போது அல்லது நடக்க முயற்சிக்கும் போது தடுமாறி விழுவது இயற்கை. குழந்தையின் இடுப்புக்கு, முதுகெலும்புக்கு, கால்களுக்கு பேலன்ஸ் சரிவர இருக்காது. அதனால், நிலை தடுமாறும், முயற்சி செய்ய செய்ய இடுப்பு, முதுகு தசைகள் வலுபெற்று பேலன்ஸ் கிடைத்தபிறகு அடிக்கடி விழுவது குறைந்துவிடும். குழந்தை தானாக விழுந்தால் பெரிய காயங்கள் ஏதும் சாதாரணமாக ஏற்படாது. எதன் மீதாவது மோதினால் தான் காயம் ஏற்படும். அடிக்கடி விழுந்தால் உடனே பயந்து குழந்தையின் தலையை ஸ்கேன் செய்யத் தேவையில்லை. குழந்தை நடக்கும் இடங்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதே மிகவும் முக்கியம்.

"அப்பா, அம்மா, தாத்தா, அக்கா, மாமா' போன்ற குழப்பமில்லாத சுமார் 10 வார்த்தைகளையாவது குழந்தை பேச வேண்டும். ஓரிரண்டு வார்த்தைகளைச் சேர்த்து மழலையாக ஒரு வரி பேசலாம். என் மகள் பூமாவின் மழலைப் பேச்சுப் படி "மா, கா, தா' என்றால் "அம்மா, காய் தா' என்கிறாள் என்று நான் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு ஒரு மொழியை தான் முதலில் பழக்க வேண்டும். முதல் மொழி தாய் மொழியாக இருந்தால் குழந்தை மனதில் கலவரம் கம்மி. தன்னுடைய குழநதை ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அரைகுறை ஆங்கிலத்தில் வார்த்தைகளைச் சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் போது குழந்தையின் மனதில் குழப்பம் தோன்றுகிறது. மன அதிர்ச்சி ஏற்படுகிறது. குழந்தை பேசுவதையே குறைத்துக் கொள்கிறது. வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் கால கட்டத்தில் யாவரும், ஒவ்வொரு வார்த்தைக்கும் தாய் மொழியில் அர்த்தப்படுத்தித் தான் பேசுகிறோம், புரிந்து கொள்கிறோம். குழந்தை பேச்சு ஒலியை, மொழியைப் புரிந்து கொள்ளும் முதல் படியில் இருக்கும்போது ஏன் அதன் மனதில் அலை அடிக்க வைக்க வேண்டும்? "இன்னொரு மொழி' என்ற கான்செப்ட்டே குறைந்த பட்சம் ஐந்து வயதில்தான் குழந்தைக்குப் புரியும்.

குழந்தை தன்னுடன் கூட இருக்கும் குடும்ப உறுப்பினர்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் கால கட்டமும் இதுதான். இது மூளை வளர்ச்சியின் ஒரு மைல்கல்!

தினமும் குளிக்க வைக்கலாம். இரண்டு வேளையும் குளிக்க வைக்கலாம். குளிர் காலத்தில் வெந்நீர் தேவை. வெயில் காலத்தில் பச்சைத் தண்ணீர் பயன்படுத்தலாம். ல்லது நீரை நல்ல வெய்யிலில் வைத்து இயற்கைச் சூட்டுடன் குளிக்க வைக்கலாம். வாரம் ஒருமுறை தலைக்கு ஊற்றிவிடலாம். வாரம் ஒரு தடவை நகம் வெட்டுவது கட்டாயம். இந்த அட்வைஸ் தாய்க்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும். குடல் புழுக்களின் முட்டை தாயின் நக இடுக்குகளில் தங்கி குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது உள்ளே சென்றுவிடும். குழந்தை ஆசன வாய்ப் பகுதியைச் சொரிந்து கொண்டால், அடிக்கடி அந்த இடத்தில் கை வைத்தால் குடல் புழுவாக இருக்கலாம். சில சமயம் மலத்தில் சிறு புழுக்கள் வெளியாகும். பெண் குழந்தைக்குப் பிறப்பு உறுப்பில் கூட புழுக்களால் அரிப்பு ஏற்படலாம்.

குழந்தை தானாக உட்கார ஆரம்பிப்பதற்கு முன்னால் வாக்கரில் உட்கார வைக்கக் கூடாது. 8-9 மாதங்களில் உட்கார ஆரம்பிக்கும் போதுதான் இடுப்புக் குழி எலும்பு, முதுகு எலும்பு, அவற்றைச் சார்ந்த தசைகள் வலுவடைய ஆரம்பிக்கின்றன. இதற்கு முன்னால் வீட்டு மூலையில் அல்லது வாக்கரில் உட்கார வைப்பது, பிஞ்சில் பழுக்க வைப்பது போலத்தான். எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த பிறகு நடை வண்டி கொடுத்தால் குழந்தைக்கு சரியான நடை எளிதில் வரும்.

உட்கார, நிற்க, நடக்க தாமதமாகும் குழந்தைகளுக்கு பயிற்சி தருவதற்கு வாக்கர் மிகவும் உதவும். நம் அவசரத்திற்காக குழந்தைக்கு தலை நின்றவுடன் வாக்கரில் உட்கார வைக்கக்கூடாது. குழந்தை 8 மாதத்தில் 8 அடி நடக்க வேண்டும் என்ற பழமொழியைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தையை அக்குள்களில் பிடித்து கொண்டு தரையில் நிற்க வைத்தால் நிமிர்ந்து நின்று 2-3 அடி தானாக வைக்கும். குழந்தை தானாக நடக்க ஆரம்பிப்பது 8 மாதத்தில் அல்ல!

பாப்பா டிப்ஸ்!

குழந்தைகளிடம் தாய் மொழியில் நிறையப் பேசுங்கள். பாப்பாவுக்கு புரியுமோ இல்லையோ. பேசப் பேச அதன் கேட்கும் மற்றும் பேச்சுத் திறன் மேம்படும்.

குழந்தையைப் பராமரிப்பவர்கள் அனைவரும் பணியாட்கள் உட்பட நகம் வெட்டி, சுய சுத்தம் பராமரிக்க வேண்டும். இது குடல் புழுத் தொற்றைத் தடுக்கும்.

குறைந்த பட்சம் 10 வார்த்தைகளாவது குழந்தை பேச வேண்டும். 1-2 வார்த்தைகள் சேர்த்து ஒரு சில வரிகள் கூட பேச வரலாம்.

தன் குடும்பத்தினரை குழந்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். வேற்று முகம் தெரிய வேண்டும். இந்த இரண்டிலும் ஏதேனும் சிக்கல் இருந்தால் மருத்துவ ஆலோசனை தேவை.

பொம்மைகளை வைத்துக் கொண்டு சிறிது நேரமாவது தானாக அமைதியாக விளையாட வேண்டும்.

குழந்தையின் ஒரு வயதிற்குள் முக்கியமான பல தடுப்பு ஊசிகள் போடப்பட்டு இருக்க வேண்டும். முக்கியமான தடுப்பு ஊசிகள் போடப்பட்டு இருக்க வேண்டும். முக்கியமான தடுப்பு ஊசிகள் ஒரு வயது முடியும் போது போடப்பட்டு இருக்க வேண்டும்.

- டாக்டர் என் கங்கா
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மழலைச் செல்வத்தின் மகிமை

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jun 10, 2014 2:40 pm

அனுபவமா மாமா அங்கள்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: மழலைச் செல்வத்தின் மகிமை

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 28, 2014 2:14 pm

நடனம் 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4616
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: மழலைச் செல்வத்தின் மகிமை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum