ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Wed May 21, 2014 9:45 pm

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்புபாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


Last edited by சிவா on Wed May 21, 2014 9:50 pm; edited 2 times in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Wed May 21, 2014 9:46 pm

பிரதமராக பதவியேற்பதற்கு முன்பாகவே பாராட்டுகளை அள்ளும் மோடி

புதுடில்லி: நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி வரும் 26ம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், பதவியேற்பதற்கு முன்பாகவே தனது செயல்பாடுகளின் காரணமாக, எதிர்க்கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நரேந்திர மோடிசமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 336 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி தலைமையில் அமையவுள்ள இந்த அரசு வரும் 26ம் தேதி பதவியேற்கவுள்ளது. இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பதவியேற்பு விழாவிற்கு வருமாறு, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மோடியின் இந்த அழைப்பு பல்வேறு தரப்பினரிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி, அண்டை நாடுகளுடன் வலுவான உறவுகளை மோடி ஏற்படுத்துவார் என அரசியல் நோக்கர்கள் பாராட்டுகின்றனர்.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளதை, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் வரவேற்றுள்ளனர். இது தங்களுக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சியை அளிப்பதாகவும், இதை பயன்படுத்தி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மோடி முயல வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதே போல், நேற்று பார்லிமென்ட் மைய மண்டபத்தில் மோடி ஆற்றிய உரைக்கு எதிர்க்கட்சியினரும் கூட பாராட்டு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்.பி., சசி தரூர் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மோடி ஆற்றிய உரை தன்னை மிகவும் உணர்ச்சிவயப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். மோடியின் திட்டங்களை அவர் செயல்படுத்தி, அதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அதன் பயன் சென்றடைய நாமும் பாடுபடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்லிமென்ட் மைய மண்டபத்தில் மோடி ஆற்றிய உரையில், ஏழைகளின் வாழ்க்கை உயர அரசு சிந்திக்கும். உழைக்கும் என்று தெரிவித்திருந்தார். இளைஞர்களுக்காகவும், மகளிருக்காகவும் பாடுபடப்போவதாக தெரிவித்திருந்தார். அவரது பிரதமர் பதவிக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களுடைய ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Wed May 21, 2014 9:55 pm

குஜராத்தை முன்மாதிரியாக கொண்டு தேர்தலை சந்தித்ததால் வெற்றி - நரேந்திர மோடி உரை

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், குஜராத் சட்டசபையில் அவருக்கு இன்று காலைவழியனுப்பு விழா நடக்கிறது. இதற்காக குஜராத் மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நரேந்திர மோடி பங்கேற்கும் கடைசி சட்டமன்றக் கூட்டம் இது. கூட்டத்தில் நரேந்திர மோடிக்கு சபாநாயகர் வாஜூபாய் வாலா மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், குஜராத்தை முன்மாதிரியாக கொண்டு தேர்தலை சந்தித்ததால் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். குஜராத் மாநில வளர்ச்சிக்கு அனைத்து தலைவர்களும் அவர்களது பங்களிப்பை செலுத்தினர். குஜராத் மேலும் வளர்ச்சி அடையும். தற்போது உள்ள நிலையை விட குஜராத் மேலும் வளரும். குஜராத் தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த அரசு பல திட்டங்களை முடிக்காமல் பாதியில் விட்டுச் சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

பிற்பகல் 3: 30 மணிக்கு மோடி, பாரதிய ஜனதா பிரதிநிதிகளுடன் சேர்ந்து கவர்னர் கமலா பேனிவாலை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். பிறகு சபாநாயகர் வஜூபாய் வாலாவை சந்தித்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் அவர் சமர்பிக்க உள்ளார். பின்னர் அடுத்த முதல்-மந்திரியை தேர்வு செய்ய பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். புதிய முதல் மந்திரியாக பொறுப்பேற்க ஆனந்தி பென் படேல் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குஜராத் முதல் மந்திரி நாளை பதவியேற்கவுள்ளார். ஆனந்தி பென் படேல் குஜராத் அமைச்சரவையில் வருவாய்துறையை கவனித்து வருகிறார். நரேந்திர மோடி பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது ஆனந்தி பென் முக்கிய பணிகளை கவனித்து வந்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Wed May 21, 2014 9:59 pm

ஒரு கோப்பையும் நிலுவையில் வைக்காத நரேந்திர மோடி

9 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். அவர் 25 மாநிலங்களில் 3 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, 437 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று அவர் குஜராத் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார். அதன்பின்னர் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோடி பேசினார்.

அப்போது அவர், நான் முதல்&மந்திரி பதவியை விட்டு விலகிவிட்டேன். இப்போது நான் முன்னாள் முதல்&மந்திரி ஆகிவிட்டேன். ஆனால் ஒரு கோப்பைக்கூட (பைல்) பார்க்காமல் விட்டு வைக்கவில்லை. தேர்தலின்போது பிரசாரத்தில் தீவிரமாக இருந்தபோதும்கூட, இரவில் எனக்கு எப்போதெல்லாம் சமயம் வாய்த்ததோ, அப்போதெல்லாம் அதிகாரிகளை அழைத்து பைல்களை பார்த்து என் வேலைகளை நிறைவு செய்து விட்டேன் என கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by ரா.ரா3275 on Thu May 22, 2014 12:02 am

குஜராத் கோப்பை பார்த்தீங்க...இனிமே எந்த கேப்லையும் தமிழனுக்கு ஆப்பு வைக்காத மாதிரி கோப்பை பாருங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by M.M.SENTHIL on Thu May 22, 2014 10:58 am

வாழ்த்துக்கள். மோடி ஜி. நல்ல ஒரு நபரை தேர்ந்தெடுத்து விட்டதாய் நாங்கள் நினைக்கிறோம். எங்கள் இந்தியாவின் தலை எழுத்தை கொஞ்சம் மாற்றுங்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6172
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by krishnaamma on Thu May 22, 2014 11:30 am

@சிவா wrote:[link="/t110407-topic#1065085"] ஒரு கோப்பையும் நிலுவையில் வைக்காத நரேந்திர மோடி

9 கட்டங்களாக நடந்த பாராளுமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தார். அவர் 25 மாநிலங்களில் 3 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, 437 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று அவர் குஜராத் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார். அதன்பின்னர் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோடி பேசினார்.

அப்போது அவர், நான் முதல்&மந்திரி பதவியை விட்டு விலகிவிட்டேன். இப்போது நான் முன்னாள் முதல்&மந்திரி ஆகிவிட்டேன். ஆனால் ஒரு கோப்பைக்கூட (பைல்) பார்க்காமல் விட்டு வைக்கவில்லை. தேர்தலின்போது பிரசாரத்தில் தீவிரமாக இருந்தபோதும்கூட, இரவில் எனக்கு எப்போதெல்லாம் சமயம் வாய்த்ததோ, அப்போதெல்லாம் அதிகாரிகளை அழைத்து பைல்களை பார்த்து என் வேலைகளை நிறைவு செய்து விட்டேன் என கூறினார்.

Great Man , நன்றி
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Fri May 23, 2014 3:28 am

மோடிக்கு அப்துல் கலாம் சொன்ன 3 அறிவுரைகள்!

புதுடெல்லி: மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்த்து கூறியபோது அவர் கூறிய 3 அறிவுரைகளை நிறைவேற்றுவேன் என மோடி உறுதி அளித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டதும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், ''உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியை பெற்று சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்" என்றார்.

பா.ஜ.க. அரசு எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அப்போது நரேந்திர மோடியிடம் அப்துல்கலாம் பட்டியலிட்டார். சுமார் 10 நிமிடங்கள் மோடியிடம் பேசிய அப்துல்கலாம், 3 முக்கிய அறிவுரைகளையும் கூறினார்.

இந்தியாவில் மொத்தம் சுமார் 20 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. இதில் 15 கோடி குடும்பங்கள் இன்னமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளன. அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுங்கள். அது மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்திலும் சம்பாதிக்கும் ஆற்றலை உருவாக்குங்கள் என்று அப்துல்கலாம் கேட்டுக் கொண்டார்.

அடுத்து, நதி நீர் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மோடியிடம் அப்துல் கலாம் அறிவுறுத்தினார். இதற்காக தேசிய நீர்வழிப்பாதை திட்டத்தை அமல்படுத்த கேட்டுக் கொண்டார். நதிகளை இணைத்து உருவாக்கப்படும் இந்த திட்டத்தால் நாடெங்கும் உள்ள 6 லட்சம் கிராமங்களும் நகரங்களும் தடையின்றி தண்ணீர் பெறுவது உறுதிப்படுத்தப்படும் என்றார்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால் கடும் வறட்சி காலத்தில் கூட எந்த ஊரிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. அது போல நிறைய மழை பெய்யும் போது, மழை தண்ணீரை மற்ற பகுதிகளுக்கு திருப்பி விட்டு வெள்ளத்தால் ஏற்படும் அழிவுகள், சேதங்களை தவிர்க்க முடியும் என்றும் மோடியிடம் அப்துல்கலாம் விளக்கிக் கூறினார்.

மூன்றாவதாக வேலை வாய்ப்பை அதிகரிக்க செய்வதிலும் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். இந்தியாவில் சுமார் 6½ கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறிய அப்துல்கலாம், அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் இந்தியாவில் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியும் செழிப்பும் உண்டாகும் என்றார்.

உறுதி அளித்த மோடி

அப்துல்கலாம் சொன்ன இந்த 3 அறிவுரைகளையும் நரேந்திர மோடி பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். அதன்பின், ''உங்கள் அறிவுரைகளை ஏற்று நல்லாட்சி செய்து, நாட்டின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவேன்" என்று அப்துல்கலாமிடம் மோடி உறுதியளித்தார்.

இதற்கு, மோடிக்கு தனது முக நூல் (பேஸ்புக்) பக்கத்தில் அப்துல்கலாம் நன்றி தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Fri May 23, 2014 3:29 am


மோடி பதவியேற்பு விழாவில் நவாஸ் பங்கேற்க வாய்ப்பு


இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு மிகுதியாகியுள்ளது.

அதேவேளையில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் அரசு இன்று இரவு அல்லது நாளை வெளியிடும் எனத் தெரிகிறது.

இந்தியாவின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி இம்மாதம் 26-ம் தேதி (திங்கள் கிழமை) பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கன் அதிபர் கர்சாய், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் தெற்கு ஆசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவுக்கு இந்த நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக நடந்து வந்த வெளியுறவு கொள்கை வேறுபாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளால், இந்தத் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில் பல்வேறு விதமான அணுகுமுறைகளும் முரணான காரணங்களும் இருந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வரும் 26-ம் தேதி மோடியின் பதிவியேற்பு விழாவில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அதுகுறித்த ஆலோசனை நீடித்து வருவதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள வாய்ப்பு அதிகம் என பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்துவதும், அதனை எதிர்த்து இந்திய ராணுவம் பதிலடி தருவதுமாய், எல்லையில் அவ்வப்போது பதற்றம் நிலவுகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் பரூக் அளித்த பேட்டி ஒன்றில், "புதிதாக பதவியேற்க உள்ள இந்திய அரசின் இந்த நல்லிக்கணத்துக்கு பாகிஸ்தான் கைமாறு செய்யும்" என கூறியுள்ளார்.

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய், வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸினா சார்பில் அந்நாட்டு சபாநாயகர் ஷிரின் ஷர்மின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Fri May 23, 2014 3:30 am

நவாஸுக்கு அழைப்பு: பாஜகவுக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், பயங்கரவாத விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்பது குறித்து ஆலோசித்து வருவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு தொடர்பாக பாஜகவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேர்தல் பிரச்சாரத்தின்போது மட்டும் பாஜக, பாகிஸ்தான் குறித்து அனைத்து வகையிலும் வெறுப்புப் போக்கினை வெளிப்படுத்தியது. ஆனால், அவர்கள் தற்போது பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பெரிய அளவில் பிரச்சாரம் செய்த பாஜக, தற்போது தன் நிலையை மாற்றிக் கொண்டதா என தெரிய வேண்டும்.

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைக்கிறது. அதனால் அவர்கள் தங்கள் பதவியேற்பு விழாவிற்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.

ஆனால், இதே கட்சிதான், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தானுடன் அவர் மேற்கொண்ட நுல்லுறவு கொள்கைகள் அனைத்தையும் விமர்சித்தது. பயங்கரவாதத்துடன் மன்மோகன் சிங் வெறும் பேச்சுவார்த்தையை நடத்தி கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தது" என்று திவாரி கடுமையாக பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Wed May 28, 2014 11:28 pm

மோடிக்கு எதிராக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளின் கண்டன தீர்மானம் பஞ்சாப் சட்டசபையில் நிராகரிப்பு

பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளின் மோடிக்கு எதிரான கண்டன தீர்மானத்தை பஞ்சாப் சட்டசபை நிராகரித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்தன. பயங்கரவாத நாடு என்று அவர் பாகிஸ்தனை குறை கூறியதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக கண்டன தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால் எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை பஞ்சாப் சட்டசபை நிராகரித்தது. இதனையடுத்து எதிர்க்கட்சியினர் இந்தியாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். நவாஸ் ஷெரிப் இந்தியாவிற்கு வந்தது குறித்தும் விமர்சித்து கோஷம் எழுப்பினர். தலைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Wed May 28, 2014 11:29 pm

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக நிருபேந்திர மிஸ்ரா நியமனம்

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையரான நிருபேந்திர மிஸ்ரா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Wed May 28, 2014 11:29 pm

மாநில அரசுகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்: நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது அலுவலக அதிகாரிகளை முதல் முறையாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மக்கள் பிரச்சனைகளை விரைந்து தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரச்சனைகளை தீர்க்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் மோடி ஆலோசனை வழங்கினார். மாநிலங்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது நாட்டின் வளர்ச்சி என்றும் மாநில பிரச்சனைகளை மிகுந்த அக்கறையுடன் முன்னுரிமை கொடுத்து தீர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கூறினார்.

இதனால் கூட்டாட்சி அமைப்பு வலுப்படும் என்பதை மோடி சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், பிரதமர் அலுவலக அதிகாரிகள் குழுவாக ஒன்றுபட்டு பணிபுரிய வேண்டும் என்றும் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் தங்களது யோசனைகளை எந்த நேரத்திலும் என்னிடம் வெளிப்படையாக தெரிவிக்கலாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அலுவலக அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Wed May 28, 2014 11:29 pm

சொந்தபந்தங்களுக்கு சலுகைகள் அளிப்பதை தவிர்த்துவிடுங்கள் மந்திரிகளுக்கு மோடி ’அட்வைஸ்’

சொந்தபந்தங்களுக்கு சலுகைகள் அளிப்பதை தவிர்த்துவிடுங்கள் என்று மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ’அட்வைஸ்’ வழங்கியுள்ளார். தனிப்பட்ட ஊழியர்கள் அல்லது ஒப்பந்த விவகாரங்களில் உறவினர்களுக்கு எதிராக இருங்கள் என்றும் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by Aathira on Wed May 28, 2014 11:35 pm

இது பயனுள்ள பதிவு. அப்படியே அவரது வரலாறு பதிவு செய்யுங்கள் சிவா


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Fri May 30, 2014 3:23 am

தொலைபேசியில் 25 நிமிடம் நரேந்திர மோடியுடன் சீன பிரதமர் பேச்சு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் சீன பிரதமர் தொலைபேசியில் இருதரப்பு உறவு பற்றி பேசினார்.நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்க்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், சீன பிரதமர் லீ கெகியாங் நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் பலமான, ஆரோக்கியமான உறவை வளர்க்க சீனா விரும்புவதாக தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேலும் பலப்படுத்த ஆர்வமாக இருப்பதாகவும், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் சீனாவுக்கு எப்போதுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதாகவும் மோடி கூறினார்.

இந்த தொலைபேசி உரையாடல் 25 நிமிடங்கள் நடந்தது. மேலும், இருநாட்டு தலைவர்களும் அடிக்கடி பேசவும், தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்தனர்.நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக தனது நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங்கை அடுத்த மாதம் 8ம் தேதி சிறப்பு தூதராக சீன அரசு அனுப்ப உள்ளது. அவருடைய வருகைக்கு முன்னோடியாக மோடியை லீ நேற்று தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது, இந்தியா & சீனா இடையிலான முக்கிய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காணவும் இரு தலைவர்களும் ஆர்வம் தெரிவித்தனர். மேலும், சீன அதிபர் ஜிங்பிங்கை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வரும்படி லீ மூலமாக மோடி அழைப்பு விடுத்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Fri May 30, 2014 3:25 am

குஜராத்: பள்ளி பாடப்புத்தகத்தில் மோடி வாழ்க்கை வரலாறு சேர்ப்பு!

அகமதாபாத்: குஜராத்தில் வரவிருக்கும் 2015 ஆம் கல்வியாண்டில் பள்ளி பாட புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு குறித்த பாடத்தை சேர்க்க அம்மாநில பள்ளி கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

வருகிற 2015 ஆம் கல்வியாண்டு முதல் இதனை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் பள்ளிக் கல்வி வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மோடி, தேனீர் விற்பவராக வாழ்க்கையை தொடங்கி நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்தது மகத்தான சாதனை என்றும், கடும் உழைப்புடன் முதல்வர் பதவி, அதனைத் தொடர்ந்து பிரதமர் என மோடி வாழ்க்கையில் அடைந்த உயர்வு இள வயது மாணாக்கர்களுக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்றும், அதன் காரணமாகவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அநேகமாக 3-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள பாடத்தில் மோடியின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப் படும் என்று தெரிகிறது.

மத்தியபிரதேச அரசும் பரிசீலனை

இதனிடையே மோடியின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்க ஆலோசித்து வருவதாக மத்திய பிரதேச அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இது குறித்து மத்தியபிரதேச மாநில கல்வித்துறை அமைச்சர் பராஸ் ஜெயின் கூறுகையில்," மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி பாடத்தில் மோடியின் வாழ்க்கை வர லாற்றை சேர்க்க உள்ளோம்.

இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை செய்து வருகிறோம் என்று கூறினர்.விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை போலவே மோடியின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களின் மனதில் தூண்டுதலை ஏற்படுத்தும்" என்றார்.

எதிர்ப்பு

இதனிடையே மோடி வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்கக் கூடாது என எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட கலவரமும், அப்போது ஏற்பட்ட உயிரிழப்புகளும் அவர் மீது நீங்கா களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தவிர மேலும் பல குற்றச்சாட்டுக்களும் உள்ளன. அப்படி இருக்கையில் மோடி குறித்த நல்ல அம்சங்களை மட்டுமே பாடப்புத்தகத்தில் சேர்ப்பது, வருங்கால தலைமுறையினரிடத்தில் உண்மை நிகழ்வையும், வரலாறையும் மறைப்பதாகும் என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Fri May 30, 2014 3:29 am

மோடி- நவாஸ் ஷெரீப் சந்திப்பால் இருநாட்டின் நல்லுறவு மேம்படும்: அமெரிக்கா

வாஷிங்டன்: நரேந்திர மோடி - நவாஸ் ஷெரீப் சந்திப்பு பாராட்டுக்குரியது என்று கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, இதன் மூலம் தெற்கு ஆசியாவில் உள்ள அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மேம்படும் என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், அந்த இருவரின் சந்திப்பு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும், இரு தலைவர்களின் சந்திப்பு நேர்மறையான செயல்களை ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், இதனை முன்னெடுத்து செல்வது மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு இதுவொரு நேர்மறையான தொடக்கத்தின் அறிகுறியாக இருக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல், இரு தலைவர்களின் சந்திப்பையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையையும் பாராட்டுவதாக, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் பாஸ்கி தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Fri May 30, 2014 3:30 am

மோடி வருகைக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்கா

வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை, ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புதிய அரசு அமைந்ததையடுத்து, இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று அமெரிக்காவுக்கான இந்திய உயர் தூதர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

அப்போது, இந்தியாவில் அமைந்துள்ள புதிய ஆட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவித்த ஜான் கெர்ரி, நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்பதை அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டார்.

மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய தூதருடன் அமெரிக்க வெளியுறவு செயலாளர் சந்திப்பது இதுதான் முதல் முறை ஆகும்.

முன்னதாக, குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது, அப்போது மாநில முதல்வராக இருந்த மோடி கலவரத்தை தடுக்க தவறிவிட்டார் என கூறி, மோடிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா விசா வழங்க மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Fri May 30, 2014 3:43 am

ராசியான ஸ்கார்பியோவை விட்டு கொடுத்தார் - பிரதமர் நரேந்திர மோடி பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரையே பயன்படுத்துவார்

புதுடெல்லி: பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த தனது ராசியான ஸ்கார்பியோ காரை, பிரதமராக பதவி ஏற்ற பிறகு நரேந்திர மோடி விட்டுக் கொடுத்துள்ளார். மன்மோகன் சிங் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரையே மோடியும் இனி பயன்படுத்த உள்ளார். பிரதமராக பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி, பல ஆண்டாக ஸ்கார்பியோ காரைத்தான் பயன்படுத்தி வருகிறார். பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்ட அந்த கார், குஜராத் முதல்வராக இருந்த மோடியின் ராசியான காராகவும் இருந்து வந்தது. அதில்தான் மக்களவை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மகத்தான வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கும் ஸ்கார்பியோ காரில்தான் வந்தார். இந்திய தயாரிப்பான மகிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ காரைத்தான், பிரதமரான பிறகும் மோடி பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு, நவீன வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது ராசியான ஸ்கார்பியோ காரை விட்டுக் கொடுத்துள்ளார் மோடி. கடந்த 2003ம் ஆண்டுவரை அம்பாசிடர் கார்தான் இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்பட்டு வந்தது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பிரதமருக்காக அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் ரகத்தை சேர்ந்த 6 கார்கள் வாங்கப்பட்டன. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு கமாண்டோ படையினருக்காக பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 ரகத்தை சேர்ந்த 12 கார்கள் வாங்கப்பட்டன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்தி வந்த பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் கார் பிரதமர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாகும். இதில் குண்டுகள் துளைக்காத புல்லட் புரூப் கதவு, கண்ணாடி, கண்ணிவெடித் தாக்குதலிலும் சேதமடையாத வலுவான அடிப்புறம், டயர்கள் வெடித்தாலும் ஓடும், குண்டுவெடிப்பிலும் தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், ஏவுகணை, வெடிகுண்டு களைக் கண்டறியும் வெப்ப சென்சார்கள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனம் என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.

பொதுவாக பிரதமரின் காருக்கு முன்னும் பின்னும் மொத்தம் 9 கார்கள் அணிவகுத்துச் செல்லும். இந்த அணிவகுப்பில் செல்லும் இரண்டு பி.எம்.டபிள்யூ கார்கள் பிரதமரின் பி.எம்.டபிள்யூ கார் போன்றே தோற்றமளிக்கும். இதர பி.எம்.டபிள்யூ. கார்களில் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வார்கள். இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு வசதிகள் ஸ்கார்பியோவை விட பிஎம்டபிள்யூ காரில் அதிகம் உள்ளதால் அந்த காரையே பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு கமாண்டோ குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். இதனால் தனது ராசியான ஸ்கார்பியோவை விட்டுக் கொடுத்துள்ளார் மோடி. இனி அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரையே பயன்படுத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Fri May 30, 2014 3:48 am

நரேந்திர மோடி அரசின் அடுத்த அதிரடி : மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையில் ஊக்க ஊதியம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்க நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

6–வது ஊதியக்குழு பரிந்துரை

குறைந்த அளவிலான அரசைக் கொண்டு நிறைவான நிர்வாகத்தை தரவேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ள நரேந்திர மோடி அரசு, பதவி ஏற்ற பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல் திறன் அடிப்படையில் இதுவரை எந்தவொரு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது கிடையாது. ஆனால் இதைச் செய்ய வேண்டும் என்று ஆறாவது சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்தது. அதை முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் செயல்படுத்தவில்லை. அதற்குள் அதன் பதவிக்காலமும் முடிவுக்கு வந்து விட்டது.

பா.ஜனதா அரசு கையில் எடுக்கிறது

இப்போது இந்த திட்டத்தை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு கையில் எடுக்க உள்ளது.

செயல்திறன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, விரிவான விளக்கம் அளிக்க உள்ளது.

அப்போது, சிறப்பான நிர்வாகத்துக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிற இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமருக்கு தெரிவிக்கப்படும். அதைப் பிரதமர் பரிசீலித்து, ஒப்புதல் வழங்கிய பின்னர் அதற்கான வழிமுறைகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வகுத்து அளிக்கும்.

பெரிய மாற்றத்தை தரும்

முந்தைய மன்மோகன் சிங் அரசு பதவிக்காலத்தில் இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டன. அதில் ஒரு முக்கிய அம்சம், அமைப்பின் செயல்திறன், ஊழியர்களின் செயல்திறன் ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது குறித்த கால இடைவெளிகளிலோ கணக்கில் கொண்டு, அதன் அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்கலாம் என்பதாகும்.

இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அரசு நிர்வாகத்தை மேம்படுத்துவதில் இந்த திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். சிறப்பான பயன் விளையும். இதில் பிரதமர் மேலும் பல்வேறு அம்சங்களை உடன் இணைக்கலாம்’’ என்றார்.

கூடுதலாக கிடைக்கும்

செயல் திறன் அடிப்படையில் ஊக்க ஊதியம் திட்டம் அமலுக்கு வருகிறபோது, அது ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளிலோ வழங்கப்படும். இது தனிப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் அல்லது குழு அளவிலும் அல்லது தொகுப்பாகவும் வழங்கப்படலாம்.

இது வழக்கமான ஊதிய உயர்வு, கிரேடு பதவி உயர்வு, பணிக்கால அளவிலான ஊதிய உயர்வு போன்றவற்றுடன் கூடுதலாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தினால் இதன் மூலம் மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவதோடு, அரசு நிர்வாகம் மேம்பாடு அடையும். அதன்மூலம் மக்களும் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Fri May 30, 2014 10:26 am


என்னுடயை வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்

போராட்டமும் வெற்றியும் நாட்டுப்பற்றும் நிறைந்த பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை, சிறுவர்களும் இளைஞர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க ஏற்கனவே மத்திய பிரதேச அரசு திட்டமிட்டு இருந்தது. அதேபோல், குஜராத் அரசும் இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த தகவலை அந்த மாநில கல்வி மந்திரி பூபேந்திரசிங் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில், என்னுடையை வாழ்க்கை வரலாற்றை பள்ளி திட்டங்களில் சேர்க்க வேண்டாம் என்று மத்திய பிரதேச மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக, மோடியின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டங்களில் சேர்க்கும் முடிவுக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Sat May 31, 2014 7:01 am

பிரதமர் இல்லத்தில் மாற்றம் கோராத மோடி; அதிகாரிகள் வியப்பு!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று 7, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறினார்.

சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 5 பங்களாக்களை கொண்ட பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் நரேந்திர மோடி தனி நபராக குடியேறும் முதல் பிரதமர் ஆகிறார். இதுவரை இங்கு குடியேறிய 14 பிரதமர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தான் குடியேறினர்.

கடந்தவாரம்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் இல்லத்தை காலி செய்தார். வழக்கமாக முன்னாள் பிரதமர் காலிசெய்துவிட்டு போனபின்னர், புதிதாக அங்கு வரும் பிரதமரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே, வீட்டில் பலமாற்றங்களை செய்யுமாறு கூறுவதும், புதிதாக பர்னிச்சர்கள், ஆடம்பர அலங்கார விளக்குகள், வண்ணம் பூசுவது என லட்சக்கணக்கான ரூபாய்க்கு செலவு வைத்துவிடுவார்கள்.

பிரதமர் குடும்பத்தினர் இவ்வாறு என்றால், அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களும், அவர்களது குடும்பத்தினர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இருக்காது.

ஆனால் மோடி அதுபோன்ற எதுவும் செய்யுமாறு கோரவில்லை. அவர் வருவதற்கு பிரதமர் பங்களாவில் புதிதாக பெயிண்ட் மட்டுமே அடிக்கப்பட்டதாகவும், கட்டில் சோபாக்கள் போன்ற பர்னிச்சர்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும், அவற்றை சுத்தப்படுத்த மட்டுமே செய்ததாகவும், மோடியின் இந்த அணுகுமுறை கடந்த கால பிரதமர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் அணுகுமுறையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் தங்களுக்கு வியப்பை தருவதாக மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோடியின் இந்த எளிமைக்கு அவர் தனது குடும்பத்தினர் யாரையும் அழைத்து வராமல் பிரம்மச்சாரியாகவே குடியேறியதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

வழக்கமாக புதிய பிரதமர் குடியேறுவதற்கு முன்னர் அங்கு செய்யப்பட வேண்டிய அலங்கார மற்றும் ஓவியங்கள் குறித்த யோசனைகளை கேட்டு டெல்லி 'நேஷனல் கேலரி ஆப் மார்டன் ஆர்ட்' டை சேர்ந்த அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஓலை வரும். ஆனால் இந்த முறை தங்களுக்கு அப்படி எதுவும் வேண்டுகோள் கடிதம் வரவில்லை என்கிறார்கள் அவர்கள்.

மோடியை பொறுத்தவரை அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதும், முதல்வர் இல்லத்தில் அவர் இதேப்போன்ற எளிமையுடன்தான் வசித்தார். காந்திநகரில் மாநில கவர்னர் மாளிகையின் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்திருக்கும் அந்த இல்லத்தில் மோடி வசித்தபோது லிவிங் ரூம் எனப்படும் முன்னறையில் வருபவர்கள் அமர 4 நாற்காலிகளும், அதன் மத்தியில் ஒரு மேஜை மட்டுமே போடப்பட்டிருந்தன. அதே எளிமையைத்தான் மோடி தற்போது பிரதமர் ஆன பின்னரும் பின்பற்றுவதாக மோடிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by பாலாஜி on Sat May 31, 2014 11:32 am

சிறப்பான செய்தி தொகுப்பு .......     


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by சிவா on Sat May 31, 2014 9:27 pm

அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் மற்றும் அமைச்சரவை குழுக்களை கலைத்தார் மோடி

புதுடில்லி: அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுக்கள் மற்றும் அமைச்சரவை குழுக்களை கலைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளே விரைவாக முடிவு எடுக்க முடியும் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 9 அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்களும், 21 அமைச்சரவை குழுக்களும் இருந்தன. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு முன் எந்த முடிவும் எடுக்கும் முன்னரும், அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழு பரிசீலனை செய்யும். அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் பெரும்பாலனவற்றிற்கு ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த அந்தோணி தலைமை வகித்தார். ஊழல், நதிநீர் பிரச்னை, நிர்வாக சீர்திருத்தம், எரிவாயு மற்றும் டெலிகாம் விலை தொடர்பாக அமைச்சரவை குழுக்கள் அமைக்கப்பட்டன.

தற்போது இந்த குழுக்கள் கலைக்கப்பட்டதன் மூலம், முடிவுகள் விரைவாகவும், நேர்மையாகவும் எடுக்க முடியும் எனவும், இந்த அமைச்சரவை குழுக்கள் முன் உள்ள பிரச்னைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள், தங்கள் ஆலோசனை கூட்டத்தின் போது முடிவெடுத்து கொள்ளலாம் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும் போது, பிரதமர் அலுவலகமும், மத்திய செயலகமும் தகுந்த உதவி செய்யும் எனவும், இந்த அமைச்சரவை குழுக்கள் மற்றும் அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் கலைக்கப்படுவதால் அமைச்சகங்களும், துறைகளும் அதிகாரம் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நிர்வாகம் சிறப்பாக செயல்பட, அமைச்சகங்களுக்கு 10 கட்டளைகள் பிறப்பித்து 2 நாட்கள் ஆன நிலையில், மோடி அமைச்சரவை குழுக்களை கலைக்கும் முடிவை எடுத்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum