ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திரையிசைப் பாடல்களில் செந்தமிழ் இலக்கணம்

View previous topic View next topic Go down

திரையிசைப் பாடல்களில் செந்தமிழ் இலக்கணம்

Post by pon.sellamuththu on Sun May 18, 2014 10:33 am

.  .  .  .

திரையிசைப் பாடல்களில் செந்தமிழ் இலக்கணம்



திரையிசைப் பாடல்களில் செந்தமிழ் இலக்கணம் என்ற இந்த பகுதியில் முதற்கண் வினா வகைகள் பற்றி பார்ப்போம்.



வினா வகைகள்



வினாக்கள் ஆறுவகைப்படும் என்று நன்னூல் மொழிகின்றது. அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா,
கொடை வினா, ஏவல் வினா - என்றவாறாக வினாக்கள் ஆறுவகைப்படும்.


அறிவறி…யாமை…………ஐயுறல்….கொளல்கொடை
ஏவல்……...தரும்வினா..ஆறும்…….இழுக்கார்
…………………………………….(நன்னூல் சூத்திரம் 385)




1.அறி வினா




ஆசிரியர் மாணவனை நோக்கி “பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவை?” என்று வினவுவது அறி வினாவாகும்.
அதாவது ஆசிரியருக்கு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவையென்று தெரியும். ஆனால் மாணவன்
அறிந்திருக்கிறானா என்று சோதிக்கும் பொருட்டு மாணவனிடம்  ஆசிரியர் இந்த வினாவை எழுப்புகிறார்.


இங்ஙனம் ஒருவர் தாம் ஒரு பொருளை  அறிந்திருந்து, அப்பொருள் பிறருக்கு தெரியுமா என்பதை அறிதற்பொருட்டு,
அதனைக்குறித்து பிறரிடம் கேட்பது “அறி வினா” எனப்படும்.


இந்த திரைப்பட பாடல்களில், ஆசிரியை மாணவர்களை நோக்கி வினவும் அறி வினா அமைந்துள்ளது


அறி வினா கொண்டு வரும் பாடல்கள்.


1.பூப்பூவா பூத்திருக்கு (குல விளக்கு)
2.ஒன்றே ஒன்று உலகில் (குருதட்சணை)




2.அறியா வினா




மாணவன் ஆசிரியரை நோக்கி “நெடிலடிக்கு  எத்தனை சீர்கள் ஐயா?” என்று வினவுவது அறியா வினாவாகும். மாணவனுக்கு
நெடிலடிக்கு எத்தனை சீர்கள் என்று தெரியாது. அதை  அறிந்து கொள்ளும் பொருட்டு ஆசிரியரை நோக்கி அதற்கான
விடையை கேட்டு வினா எழுப்புகிறான்.


இவ்வாறு ஒருவர் தான் அறியாத பொருளை அறிந்து கொள்ளுதல் பொருட்டு பிறரிடம் வினவுவது அறியா வினா எனப்படும்.


அறியா வினா கொண்டு வரும் படல்கள்.


1.என்னதான் பாடுவது நான் எப்படித்தான் ஆடுவது (நாணல்)
2.எந்தக்கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே (அதைவிட ரகசியம்)




3.ஐய வினா




“வானத்தில் மேகமூட்டம் மிகுதியாக உள்ளது. மழை வருமா? வராதா?” என்று வினவுவது ஐய வினாவாகும்.


இவ்வாறு ஒருவர் தனக்கு ஐயமாக உள்ள கருத்து அல்லது பொருளைப் பற்றி, அந்த ஐயம் அகலும் பொருட்டு பிறரை வினவுவது
ஐய வினா எனப்படும்.


ஐய வினா கொண்டு வரும் பாடல்கள்.


1.கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா (பார்த்தால் பசி தீரும்)
2.பூமியை படைத்தது சாமியா இல்லை சாமியை படைத்தது பூமியா (கண்ணன் வருவான்)



4.கொளல் வினா



கடைக்கு சென்று "மஞ்சள் உள்ளதா?" என்று வினவுவது கொளல் வினாவாகும். அதாவது ஒரு பொருளை கொள்ளுதல் பொருட்டு
அப்பொருள் இருக்கிறதா என்று அப்பொருள் இருக்குமிடத்தில் வினவுவதாகும்.


இவ்வாறு ஒரு பொருளை ஒருவர் கொள்ளுதல் பொருட்டு அப்பொருள் இருக்குமிடம் நோக்கி வினவுவது கொளல் வினா எனப்படும்.


கொளல் வினா கொண்டு வரும் பாடல்கள்.


இருக்குதா
அம்மா . . . . . . . . இருக்குதா
அய்யா . . . . . . . .இருக்குதா
படிக்காதவன் . .படிச்சுப்போட்ட
பழசுபட்டு . . . . . பேப்பர்
எதுவும் . . . . . . . .இருக்குதா (தங்கம் மனசு தங்கம்)




5.கொடை வினா




தேர்வு எழுதும் மாணவனைப் பார்த்து ஆசிரியர் "(கூடுதல்) விடைத்தாள் வேண்டுமா?" என்று வினவுவது கொடை வினாவாகும். அதாவது
தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் மாணவனுக்கு விடைத்தாள் இல்லை என்பதை உணர்ந்து, ஆசிரியர் விடைத்தாள் கொடுப்பதற்காக
கேட்ட கேள்வியாகும்.


இவ்வாறு ஒருவர் ஒரு பொருளை கொடுப்பதன் பொருட்டு, அப்பொருள் இல்லாதவரை பார்த்து வினவுவது "கொடை வினா" எனப்படும்.


1.நன்கு பாடுபவர் ஒருவர் நம்மைப் பார்த்து
பாட்டு வேண்டுமா என்று கொடை வினா
எழுப்புகிறார்.

பாட்டு வேணுமா ஒரு பாட்டு (மோகனசுந்தரம்)


2.இதோ மற்றொருவர் வெற்றி வேண்டுமா என்று
கொடை வினா எழுப்புகிறார்.

வெற்றி வேண்டுமா (எதிர் நீச்சல்)





6.ஏவல் வினா




"கண்ணா இதை நீ செய்து முடிப்பாயா?" என வினவுவது ஏவல் வினாவாகும். இவ் வினாவானது கண்ணனை நோக்கி, ஒரு செயலை செய்து முடிக்கும்படி ஏவுவதற்கு தொடுத்த வினாவாகும்.


இவ்வாறு ஒரு செயலை செய்யும்படி ஏவுதற் பொருட்டு, அச்செயலின் நிகழ்ச்சியைப் பற்றி பிறரை வினவுவது "ஏவல் வினா" எனப்படும்.


1.நினைக்கத் தெரிந்த மனத்தை நோக்கி, மறக்கும்படி ஏவல் வினா தொடுக்கிறாள் இவள்.
நினைக்கத் தெரிந்த மனமே (ஆனந்த ஜோதி)


2.தென்றலை நோக்கி, அதை தூது செல்லும்படி ஏவல் வினா தொடுக்கிறாள் இவள்.
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ  (தாய்க்குப் பின் தாரம்)


( இலக்கணம் இன்னும்  வளரும் )



அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து
avatar
pon.sellamuththu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum