ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

View previous topic View next topic Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:32 am

Last edited by சிவா on Thu May 15, 2014 5:04 am; edited 4 times in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:34 am

உச்சத்தில் குரு... உயர்வைத் தருவாரா?


நிகழும் ஜய வருடம் வைகாசி மாதம் 30-ம் தேதி- வெள்ளிக்கிழமை (13.6.14) கிருஷ்ணபட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள மூல நட்சத்திரம், சுபம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த அமிர்தயோகத்தில், பஞ்ச பட்சியில் கோழி பலவீனமாக உள்ள நேரத்தில், உத்தராயன புண்ணிய காலம் வசந்த ருதுவில், வியாழன் எனும் குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாலை 6:04 மணிக்குப் பெயர்ச்சியாகிறார்.

13.6.14 முதல் 4.7.15 வரை இங்கு அமர்ந்து தனது அதிகாரத்தை செலுத்துவார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர்வது போன்று, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உச்சவீட்டில் குரு அமர்கிறார். தன காரகனான குரு உச்சம் அடைவதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆனால், குரு தன்னுடைய பகைக் கோளான புதனின் நட்சத்திரமான ஆயில்யத்திலேயே ஏறக்குறைய பத்து மாதங்கள் பயணிக்க இருப்பதால், நாடாளுவோர் பணத் தட்டுப்பாடு மற்றும் வேலையில்லா திண்டாட்டங்கள் குறித்து தொலைநோக்கு சிந்தனையுடன் தீர்வு காண முடியாமல் திணறுவர். பெரும்பாலும் துண்டுபட்ஜெட்டே தாக்கல் ஆகும்.
மக்களிடையே ஆண் குழந்தை மோகம் மீண்டும் அதிகரிக்கும். வாராக் கடன்கள், கடந்த வருடத்தைவிட இந்த வருடம் வங்கிகளுக்கு அதிகம் வசூலாகும். கலப்புத் திருமணம் அதிகரிக்கும். கடந்த மூன்றாண்டுகளாக பல மாவட்டங்களில் நிலவிய வறட்சி நீங்கும். மழையளவு உயரும். உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிக்கும். இயற்கை வளம் செழிக்கும்.

பாரம்பரிய கல்வி முறைகள் மீண்டும் உயிர் பெறும். செல்வம், நிதி, தனம், தங்கம், ராஜூ ஆகியவற்றில் ஒன்றை தங்கள் பெயர்களில் உடையவர்கள், பணம் மற்றும் குடும்ப விஷயத்தில் பிரச்னைகள் வராமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இந்த ஓராண்டு காலத்துக்கு 3-ம் எண் அனைத்து வகையிலும் ஆதிக்கம் செலுத்தும். சந்திரனின் பெயர் உடையவர்கள் புகழ் அடைவர். 2-ம் எண்ணின் ஆதிக்கமும் அதிகரிக்கும். கோயில் சொத்துக்களைப் பராமரிக்க புது சட்டம் வரும். தமிழ் மொழிக்கு கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். 

விருச்சிக ராசியை குரு பார்ப்பதால் பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மருந்துப் பொருள்கள் விலை குறையும். உளவாளிகள் பிடிபடுவர். ராணுவத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படும். ராணுவ ஊழல்கள் பெரிய அளவில் பிடிபடும். தரம் வாய்ந்த தளவாடங்கள் வாங்கப்படும். அதிநவீன ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும். செவ்வாய் கிரகம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகள் இந்திய விஞ்ஞானிகளால் கண்டறியப்படும். அதிவேகமாகப் பரவி வரும் புற்றுநோய்க்கு புதிய மருந்துகள் உருவாக்கப்படும்.

பிரிந்த கூட்டுக் குடும்பங்கள் ஒன்று சேரும். கோதாவரி, காவேரி படுகைகள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் கனிம, கரிம வளங்கள் கண்டறியப்படும். நாடெங்கும் நிலவும் மின் பற்றாக்குறையைப் 
போக்க மத்திய அரசு புதுத் திட்டம் கொண்டு வரும். காவல் துறையினருக்கு சலுகைகள் கூடும்.
குரு மகர ராசியைப் பார்ப்பதால், தங்கம், வெள்ளி விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க அரசு முயற்சிக்கும். நதிகள் இணைப்புக்கான முதல் கட்ட முயற்சி வெற்றிபெறும். தொழிலதிபர்கள் செழிப்பார்கள். அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும். சட்டத்துக்குப் புறம்பான வகையில் நிகழும் பணப் பரிமாற்றம், பட்டுவாடா தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படும். சிறு தொழில்கள் நவீனமாகும். ஏற்றுமதி-இறக்குமதி அதிகரிக்கும்.

இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்த புதுத் திட்டங்கள் அமலாகும். கணினித் துறை மீண்டும் எழுச்சி பெறும். புதுத் தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். நகரங்களைவிட புறநகர் பகுதிகள் அசுர வளர்ச்சியடையும். புதிய மாதிரி நகரங்கள் உருவாகும். புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் அதிகரிக்கும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை உயரும்.

குரு மீன ராசியைப் பார்ப்பதால், கல்வித் துறை நவீனமாகும். தேர்வு முறை மாற்றப்படும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும். ஆன்மிகம் தழைக்கும். சித்தா, ஆயுர்வேதம், ஜோதிடம், தியானம், வர்மம் உள்ளிட்ட புராதன கலைகளும் வளரும். நீர்வழி மின் உற்பத்தி அதிகரிக்கும். கிராமங்கள் வளர்ச்சியடையும். பதிப்பகத் துறை, கேட்டரிங், சட்டம், சி.ஏ., சிவில், ஆர்க்கிடெக்ட் துறைகள் வளர்ச்சியடையும். வழக்கறிஞர்களின் நடவடிக்கைகள் வரையறுக்கப்படும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:34 am

பரிகாரம்:


பக்தி, பணம், பதவி, குழந்தை பாக்கியம், கௌரவம், பட்டறிவுடன் படிப்பறிவு, வேத- இதிகாச ஞானம், நேர்மை மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் பிரகஸ்பதி எனும் குரு பகவான் நீர் நிலை, மனம், தாய் மற்றும் தாய்மொழிக்கு உரிய கிரகமான சந்திரனின் வீட்டில் அமர்வதால், சொல்லாலும் செயலாலும் பிறர் மனம் புண்படாதபடி நடந்துகொள்ளுங்கள். தாயில்லா பிள்ளைகளுக்கு உதவுங்கள். குருபகவானின் அருள் பரிபூரணமாகக் கிட்டும்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:35 amபெரிய குறிக்கோள்களுடன் வாழ்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால், சூழலுக்கு ஏற்ப செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களின் பலம்-பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.

கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தலாம்; பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகவும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுங்கள். வீடு கட்ட அரசு அனுமதி தாமதமாகக் கிடைக்கும். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகளும் உண்டு. வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரத்தைச் சரிபார்த்து வாங்கவும். சொத்து விற்கும்போது ஒரே தவணையில் பணத்தை வாங்கப் பாருங்கள். தாயாருக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சை, மூட்டு வலி, முதுகுத்தண்டு வலி வந்து போகும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். மனஇறுக்கம் அதிகமாகும். அரசு வரிகளை உடனுக்குடன் செலுத்தவும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள். 

குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோக ஸ்தானத்தைப் பார்ப்பதால், சிலருக்கு புது வேலை கிடைக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் பாக்ய- விரயாதிபதியான குரு, தனது சாரமான புனர்பூசத்தில் செல்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். தந்தையும், அவர் வழி உறவினர்களும் உதவிகரமாக இருப்பர். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். புது வேலை கிடைக்கும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ஜீவனாதிபதி யும் லாபாதிபதியுமான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால் வேலைச்சுமை, பணப்பற்றாக் குறை, இனந் தெரியாத கவலைகள் வந்து செல்லும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள்.
28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை சேவகாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் செல்வதால், வீண் செலவுகள், சிறுசிறு விபத்துகள், உங்களைப் பற்றிய வதந்திகள், பழைய கடனை நினைத்து அச்சம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து செல்லும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.

3.12.14 முதல் 21.12.14 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 5-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். 

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்ய நட்சத்திரத் திலும், 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மனைவிவழியில் மோதல்கள் விலகும்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்து லாபம் பெற பாருங்கள்.தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். விளம்பர யுக்திகளைக் கையாளுங்கள். கடையை வேறிடத்துக்கு மாற்றவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், உணவு, துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள். எனினும், சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அடிக்கடி இடமாற்றம் வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகக் கிடைக்கும்.      
கன்னிப்பெண்களுக்குக் கல்யாணம் கூடி வரும். எதிலும் பெற்றோரின் முடிவுகளை ஏற்பது நல்லது. சிலருக்கு வெளி மாநிலத்தில் வேலை கிடைக்கும். புதிய நண்பர்களிடம் கவனமாகப் பழகுங்கள். மாணவ-மாணவியருக்கு, விரும்பிய கல்விப் பிரிவில் சேர்வதற்கு அதிகம் செலவாகும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடலாம். மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டிப்பூசல், வீண் வதந்தியால் உங்கள் செல்வாக்கு குறையலாம். சகாக்கள் மத்தியில் மேலிடத்தை விமர்சிக்கவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சிறு சிறு ஏமாற்றங் களைத் தந்தாலும் கடின உழைப்பால் உங்களை முன்னேற வைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆலங்குடி ஈஸ்வரனையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். ஆதவரற்ற மாணவனின் உயர்கல்விக்கு உதவுங்கள். வாழ்க்கை உயரும்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:37 amனைத்தையும் அறிந்தவர் நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 3-ல் அமர்வதால், எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். இளைய சகோதரர் வகையில் பிணக்குகள் வரும். சேமிப்பை கரைக்காதீர்கள். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்லாதீர்கள். தம்பதிக்குள் சச்சரவுகள் வந்தாலும் அன்பும், அந்நியோன்யமும் குறையாது.

முக்கிய விஷயங்களை நீங்களே முன்னின்று முடிக்கப் பாருங்கள். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். எவரையும் விமர்சிக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும்.

குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால், மனைவி வழியில் உதவிகள் உண்டு. கூடாப்பழக்கம் விலகும். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் பண வரவு உண்டு. தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். சிலருக்கு வேலை கிடைக்கும். குரு லாப வீட்டை பார்ப்பதால், மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.   

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் அஷ்டம- லாபாதிபதியான குரு புனர்பூசத்தில் செல்வதால் வேலைச் சுமை, திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். மூத்த சகோதர வகையில் சச்சரவு வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புது பதவிகளை யோசித்து ஏற்கவும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் பாக்யாதிபதியும்- ஜீவனாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆரோக்கியம் சீராகும். வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கு சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் தன - பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பு கூடும். வி.ஐ.பி-கள் அறிமுகம் ஆவர். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.  3.12.14 முதல் 21.12.14 வரை குரு கேதுவின் மக நட்சத்திரத்தில் செல்வதால், அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள். தம்பதிக்குள் சச்சரவு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்ய நட்சத்திரத் திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், குழப்பம், பூர்வீகச் சொத்துப் பிரச்னை வந்து செல்லும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிந்து, அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டட உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோ- கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களில் ஒருவர் உங்களை ஆதரித்தாலும் மற்றொருவர் மூலம் குடைச்சல்கள் இருக்கும்.   

உத்தியோகத்தில் அதிக அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரிகளை விமர்சிக்காதீர்கள். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சில தேர்வுகளில் வெற்றி பெற்று, அதன் மூலம் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் உங்களின் நிலையை தக்கவைக்க போராட வேண்டியது இருக்கும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். இடமாற்றம் சாதகமாகும்.
  
கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் அமருவார்கள். மாணவ- மாணவியர் விரும்பிய கல்விப்பிரிவில் சேருவார்கள்.

கலைத் துறையினரின் யதார்த்தப் படைப்புகளுக்கு பாராட்டுகள் குவியும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். கௌரவ பதவி உண்டு. சிலர் வழக்குகளைச் சந்திக்க நேரிடும். சகாக்களை அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சிறு சிறு தடைகளையும் தடுமாற்றங்களையும் தந்தாலும் இடையிடையே வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: பிரதோஷ திருநாளில் தென்குடித்திட்டை ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். ஏழை இதய நோயாளிகளுக்கு உதவுங்கள். முன்னேற்றம் உண்டு.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:38 amன்னிக்கும் குணம் கொண்ட பண்பாளர் நீங்கள். குருபகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், மகிழ்ச்சி கூடும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவர். நோய்கள் குணமாகும். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.  வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்கியமும் சீராகும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். 

குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்படும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகள் வாய்க்கும். நல்ல வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.     

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சப்தம- ஜீவனாதிபதியான குரு புனர்பூசத்தில் செல்வதால், வேலைச் சுமை, வீண் அலைச்சல், கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம், எதிலும் பற்றற்ற போக்கு, மனைவிக்கு மருத்துவச் செலவுகள், உத்தியோகத்தில் மறைமுக தொந்தர வுகள் வந்து போகும். வருமான வரி, சொத்து வரிகளை தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் அஷ்டம- பாக்கியாதிபதியான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், பணவரவு உண்டு. பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிநாதனும் - சுகாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பணவரவு உண்டு. கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அறிவுப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். தாயாரின் உடல் நிலை சீராகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

3.12.14 முதல் 21.12.14 வரை கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்துசெல்லும். எவருக்கும் சட்டத்துக்குப் புறம்பாக உதவ வேண்டாம்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...


22.12.14 முதல் 17.4.15 வரை குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தில் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எனினும் முன்கோபம், திடீர் பயணங்கள், கடன் பிரச்னைகள் வந்துசெல்லும். ஷேர் மூலம் பணம் வரும்.   

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்களால் உற்சாகம் அடைவீர்கள். சிலர், சொந்த இடத்துக்கு கடையை மாற்றி அழகுபடுத்துவார்கள். சிலர், மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபம் அடைவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார்.

உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலைக்கு ஏற்ப செயல் படுவீர்கள். உங்களின் முக்கியத்துவம் கூடும். அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். 

கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, புது வேலையில் அமருவீர்கள். மாணவ- மாணவியரின் அலட்சியப் போக்கு மாறும். அரசியல்வாதிகளின் களப்பணி சிறப்பு சேர்க்கும். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு, படைப்புகள் தடைகள் நீங்கி வெளியாகி வெற்றிபெறும். வருமானம் உயரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, தொட்டதையெல்லாம் துலங்க வைத்து உங்களை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: பூரம், உத்திரட்டாதி நாள்களில் விழுப்புரம் அருகிலுள்ள பனையபுரம் ஸ்ரீபனங்காட்டீஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். துயரங்கள் நீங்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:39 amசிறந்த பரோபகாரி நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரை ஜென்ம குருவாக அமர்வதால், பொறுப்புகளும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். கோபம், விரோத மனப்பான்மை அதிகரிக்கும். உணவில் கவனம் தேவை. பெரிய நோய் இருப்பதாக நினைத்து வீண் பயம் வரும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் தம்பதிக்குள் பிரிவு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகவும்.

எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். வங்கியில் உங்கள் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. புதியவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். 

குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். சிலர், தங்களது பங்கு நிலத்தை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால், தள்ளிப் போன திருமணம் கூடி வரும். கணவன்-மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சஷ்டம- பாக்கி யாதிபதியான குரு, சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால், பணப்புழக்கம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்யாணம் கூடி வரும். வழக்கு சாதகமாகும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சப்த-அஷ்டமாதிபதியான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவர். கடன் பிரச்னையை நினைத்து பயம் எழும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை சேவகாதிபதியும்-விரயஸ்தானாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பயணங்கள், வீண் செலவுகள் வந்து நீங்கும். இளைய சகோதரர்களால் சங்கடங்கள் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. 

3.12.14 முதல் 21.12.14 வரை கேதுவின் நட்சத்திரமான மகத்தில் குரு செல்வதால், திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயம் அடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். உங்களைவிட வயதில் குறைந்தவர்கள் மூலம் ஆதாயம் உண்டு. வீட்டு ப்ளான் அப்ரூவலாகும்.

22.12.14 முதல் 17.4.15 வரை குரு பகவான் ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீண் செலவுகள் வேண்டாம். மகளுக்கு நல்ல வரன் அமையும். சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளும், சிறு சிறு நஷ்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். புது முதலீடுகளோ, எவருக்கும் முன்பணம் தருவதோ, கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதோ வேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். கூட்டுத்தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.

உத்தியோகத்தில் வேலை கூடும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வை பெற போராட வேண்டி இருக்கும். 

கன்னிப் பெண்களுக்கு பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. மாணவ-மாணவிகளுக்கு மறதியால் மதிப்பெண் குறைய வாய்ப்பு உண்டு. படிப்பில் முழுக்கவனம் செலுத்தவும்.

அரசியல்வாதிகள் சபை நாகரிகம் அறிந்து பேசவும். குடும்ப பிரச்னைகளை வெளியில் தெரியாதபடி பேசித் தீர்க்கவும். கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். கலைத் துறையினரே! விமர்சனங்கள், கிசுகிசுக்கள் வந்தாலும் விரக்தி அடையவேண்டாம். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். 

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் வேலைச் சுமையையும், எதிர்மறை எண்ணங்களையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னை உணரும் சக்தியையும் தருவதாக அமையும்.

 பரிகாரம்: சஷ்டி திதி நாள்களில் பழநி முருகனையும் போகரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். தாயில்லாப் பிள்ளைக்கு இயன்றவரையில் உதவுங்கள். தடைகள் நீங்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:39 amகொடுப்பதில் மகிழ்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால், வேலைச் சுமையும், அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சிலர் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வங்கி லோன் கிடைக்கும்.
உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் எழும் சிறு பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். மகளுக்கு வரன் தேடும்போது விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது.

வெளிப்படையான பேச்சைத் தவிர்க்கவும். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வாகனத்துக்கான லைசன்ஸ், காப்பீட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். சொத்து ஆவணங்கள், பத்திரங்களைத் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எவருக்காகவும் வாக்குறுதி தர வேண்டாம்.

குரு உங்கள் சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர், வேறு ஊருக்கு குடிபெயரலாம். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும்.

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். பூர்வீகச் சொத்து சேரும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சஷ்டம- சப்தமாதிபதியான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், பிறர் மீது நம்பிக்கையின்மை, சோர்வு, சுபச் செலவுகள் வந்துபோகும். புதியவரை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். மனைவியின் நலனில் கவனம் தேவை.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை தனாதிபதியும்-லாபாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு செல்வதால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சொத்து வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். 3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், வீண் விரயம், ஏமாற்றம், அல்சர், கை, கால், மூட்டு வலி, யாரை நம்புவது என்கிற குழப்பம் வந்து நீங்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், திடீர் திருப்பம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமண முயற்சிகள் பலிதமாகும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் புது அனுபவங்கள் கிடைக்கும். புதிய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சங்கத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். அதிகாரிகளுடன் சின்னச் சின்ன முரண்பாடுகள் வந்து போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத் ததை முடிப்பீர்கள். வேற்று நாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது.

கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். உயர் கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். மாணவ-மாணவியருக்கு, படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.   

கலைத் துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேற்று மொழி பேசுபவர்களால் புது வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை மேலிடம் உற்றுநோக்கும். புது பதவியில் அமருவீர்கள். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்புகள் நீங்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சுபச் செலவுகளை தருவதாகவும், நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் அமையும்.

பரிகாரம்: உத்திராட நட்சத்திரத் திருநாளில் திருச்செந்தூர் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் பெருகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:40 amனவை நனவாக்கும் உழைப்பாளி நீங்கள்.  குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 11-ல் அமர்வதால், வெளிச்சத்துக்கு வருவீர்கள். எடுத்த வேலைகளில் வெற்றியையும், குடும்பப் பிரச்னைகளுக்கான நல்ல தீர்வுகளையும் லாப ஸ்தான குரு தந்தருள்வார்.பணப் புழக்கம் அதிகரிக்கும். கடனை அடைப்பீர்கள். வீடு கட்டும் பணி தடைகள் நீங்கி மீண்டும் துவங்கும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமணம் கூடி வரும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

அரசு விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். ஷேர் மூலமாக பணம் வரும். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் மனஸ்தாபங்கள் விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் புகழ் கூடும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மனத்தில் தெளிவு பிறக்கும். மழலை பாக்கியம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு, ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உற்சாகம் அடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பி-களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்:


13.6.14 முதல் 28.6.14 வரை, உங்களின் சுக- சப்தமாதிபதியான குரு பகவான் தனது சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், முதுகுத் தண்டில் வலி வந்து போகும். வாகனத்தை எடுக்குமுன் எரிபொருள், பிரேக் எல்லாவற்றையும் சரிபார்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். 

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் பூர்வ புண்யாதி பதியும்-சஷ்டமாதிபதியுமான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் விருப்பு வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப் படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் ராசியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.  புதிதாக சொத்து வாங்குவீர்கள். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 12-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனம் தேவை.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:


22.12.14 முதல் 17.4.15 வரை குருபகவான் ஆயில்ய நட்சத்திரத்திலும், 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேற்று மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை அமையும். நகரின் எல்லைப் பகுதியில் வீடு வாங்குவீர்கள்.

வியாபாரத்தில், பற்று- வரவு உயரும். சந்தை நிலவரத்தை  அறிந்து, அதற்கேற்ப குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். முக்கிய பிரமுகர் களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபம் உண்டு. நல்லவர்கள் பங்குதாரராக வர வாய்ப்பு இருக்கிறது. சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங் களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை, மறைமுக அவமானம் ஆகியவை விலகும். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். பதவி- சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்தும் அழைப்பு வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கு தள்ளுபடியாகும்.

கன்னிப்பெண்களுக்கு, புதிய நட்பால் உற்சாகம் உண்டு. கல்யாணம் கூடி வரும். புது உத்தியோகம் அமையும். மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் படிப்பார்கள். நினைவாற்றல் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். மதிப்பெண் உயரும்.

அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். சில வி.ஐ.பி-களும் உங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவர்.  கலைத்துறையினருக்கு, பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும். பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களை பிரபலமாக்கு வதுடன், பண வரவையும் சொத்துச்சேர்க்கையையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: பிரதோஷ திருநாளில் காஞ்சிபுரத்தில் அருளும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வாருங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வினைகள் தீரும்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:41 amழைமையில் புதுமையை திணிப்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியைப் பறித்துவிடுவாரே, கையில் காசு பணம் தங்காதே... என்றெல்லாம் பதற்றப்படாதீர்கள். ஒரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். வேலைப்பளுவால் டென்ஷன் கூடும். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவர்.
எந்த விஷயத்தையும் நீங்களே முன்னின்று முடிக்கவும். எவருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வீண் பழி வந்து சேரும். நகை, பணத்தை இழக்க நேரிடும்.

வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு ஏழாம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். குரு 9-ம் பார்வையால் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்டிருந்த காரியங்கள் இனி கைகூடும்.

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சேவகாதிபதியும் - சஷ்டமாதிபதியுமான குருபகவான் புனர்பூசத்தில் செல்வதால், உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டதை எண்ணி வருந்துவீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சுக-பூர்வ புண்ணியாதிபதியான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். 28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் உங்களின் பாக்யாதிபதியும்-விரயாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், பண வரவு உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். தந்தை மற்றும் அவர் வழி உறவுக ளால் ஆதாயமடைவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 11-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வம், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.    
 
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், சிக்கனம் தேவை. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் விவாதிக்கவேண்டாம். நண்பர்களுடன் மோதல்கள் வரும். யூரினரி இன்ஃபெக்ஷன், தோலில் நமைச் சல், மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக் கொள்ளுங்கள். கடன் தருவதைத் தவிருங்கள். பங்குதாரர்களிடம் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு சட்ட ஆலோசகரை ஆலோசிக்கவும். கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ-கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோக ஸ்தானமான 10-ல் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்றும் எண்ணம் எழும். அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது. புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களைவிட தகுதியில் குறைந்தவர்களுக்கெல்லாம் பதவி, சம்பள உயர்வு கிடைக்கிறதே என்று வருந்துவீர்கள்.

கன்னிப்பெண்கள், எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். மாணவ - மாணவியருக்கு, விருப்பப்பட்ட கல்விப் பிரிவில் சேர்வதற்கு சிலரது சிபாரிசை நாடவேண்டியது இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு, தலைமையுடன் பனிப்போர் உண்டாகும். விமர்சனத்தைத் தவிர்க்கவும். கலைத் துறையினர், சிறு வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துவது சிறப்பு. புதிய நிறுவனங்களை நம்பவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வாழ்வின் நெளிவு- சுளிவுகளை, சமூகத்தில் வளைந்து கொடுத்துப் போகும் கலையை உங்களுக்குக் கற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ரேவதி நட்சத்திர நாளில் திருவானைக்கா ஸ்ரீஜம்புகேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஏழை கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சுபிட்சம் வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:42 amவாய்மையே வெல்லும் என்பதை அனுபவத்தால் உணர்ந்தவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைகிறார். புது வியூகங்களால் முன்னேறத் துவங்குவீர்கள். தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தந்தை வழிச் சொத்துகள் வந்து சேரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளுக்கு
தீர்வு கிடைக்கும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவி உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். அவர்வழி உறவினரும் பக்கபலமாக இருப்பார்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத் தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், முகமலர்ச்சியுடன் திகழ்வீர்கள். அதிக வட்டிக் கடனை, குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் மற்றும் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு கூடும். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சேவகாதிபதியும் சுகாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், வேலை கூடும். எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். தாயாருக்கு மூட்டு வலி, எலும்பு தேய்மானம் வரக்கூடும். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வீண் செலவுகள் வேண்டாம்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை அஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், எவருக்கும் ஜாமீன் போட வேண்டாம். இருமல், சளித் தொந்தரவு, காய்ச்சல், மறைமுக நெருக்கடிகள், வாகன விபத்துகள் வந்து செல்லும். அயல் நாட்டில் இருப்பவர்கள் உதவுவர். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 10-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், கனவுகள் நனவாகும். வி.ஐ.பி ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், உணவு, என்டர்பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயம் உண்டு. விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். வங்கிக் கடனில் ஒருபகுதியைக் கட்டி முடிப்பீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள்.
உத்தியோகத்தில், உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

கன்னிப்பெண்களுக்கு நல்ல உத்தியோகம் அமையும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து, திருமணம் சிறப்பாக முடியும்.   மாணவ- மாணவிகள், நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடங்குவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களது படைப்புகளை அரசு கௌரவிக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு அதிகரிக்கும். தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் அதிகம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, முதல் வரிசையில் உங்களை உட்காரவைப்பதுடன், வசதி- வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: அமாவாசை நாளில் திருவிடைமருதூரில் அருளும் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடுங்கள். வாரிசு இல்லாதவர்களுக்கு உதவுங்கள். வளம் பெருகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:43 amயல்பு நிலையை எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், மனப் பக்குவமும் வாய்க்கும். உங்களின் சில பலவீனங்களையும், பிடிவாத போக்கையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடன் பிரச்னை மனத்தை வாட்டும்.

சந்தேகத்தையும், ஈகோவையும் ஒதுக்கிவையுங்கள்.அதனால் நட்பும் குடும்பமும் நலம்பெறும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். செலவுகளும் வழக்கால் நெருக்கடிகளும் வேலைப்பளுவும் உண்டு.  சொத்து வரியை செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன லைசென்ஸ், இன்ஷூரன்ஸை உரிய காலத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். நகை, பணம் களவு போக வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.

குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.

தாய்வழி சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.   

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசத்தில் செல்வ தால், எதிர்பார்த்த காரியங்கள் உடனே முடியும். பணவரவு உண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள். விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் தனாதிபதியும்  சேவகாதிபதியுமான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப் படுவீர்கள். கடனைத் தந்து முடிப்பீர்கள். சிலர் வீடு மாறும் நிர்பந்தத்துக்கு ஆளாவார்கள். வேற்று மாநிலம், வெளி நாடுகளில் இருப்பவர்களுடன் இணைந்து புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு உண்டு.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் சப்தமாதிபதியும் ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், வேலைச்சுமை, எதையோ இழந்ததைப் போன்ற கவலைகள், நம்பிக்கையின்மை வந்து செல்லும். புதியவரை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 9-ல் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்வதால், சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். பிதுர்வழிச் சொத்தில் சில மாற்றங் களைச் செய்வீர்கள். அரசாங்க விஷயம் உடனே முடியும்.

22.12.14 முதல் 17.4.15 வரை ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் குரு வக்ர கதியில் செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். தந்தையின் உடல் நிலை சீராகும். அவர் வழி சொத்துகள் வந்து சேரும். அரசாங்க விஷயம் சாதகமாகும். வீடு கட்ட அப்ரூவல் கிடைக்கும்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் மீண்டும் நிகழாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ரசாயன வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்கு தாரர்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் கோபதாபங்கள் வேண்டாம். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். திடீர் இடமாற்றம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் வரும்.

கன்னிப்பெண்களே! சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் கவனமுடன் செயல்படுங்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைப்பது நல்லது. மாணவ- மாணவிகள், கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். விளையாட்டின்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு; கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு, சின்னச் சின்ன வாய்ப்புகளையும் போராடி பெற வேண்டியது இருக்கும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லுங்கள். அரசியல்வாதிகளுக்கு, உட்கட்சி பூசலால் நெருக்கடிகள் ஏற்படலாம். தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்கவேண்டாம். சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சற்றே போராடி புதிய முயற்சிகளை முடிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்: திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை யும், திருவாசகம் பாடி வணங்குங்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:44 am


பிறந்த மண்ணை மறவாதவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்கிறார்.

எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்வின் நெளிவுசுளிவு களைக் கற்றுக்கொள்வீர்கள். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தடைப்பட்டிருந்த அன்பர்களுக்குத் திருமணம் கூடிவரும்.

வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து, புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். அரசு விஷயங்கள் நல்லவிதமாக முடியும். மனைவி, உங்களின் புதிய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். 

குரு உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கடின காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கௌரவப் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரர்களுடனான பிணக்குகள் நீங்கும். ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சொத்து விஷயத்தில் மீதிப் பணத்தையும் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்:


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் விரயாதிபதியும் சேவகாதிபதியுமான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், அவ்வப்போது உடலளவில் பலவீனமாக உணர்வீர்கள். சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்க்கவும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ராசிநாதனும் தனாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். புது வேலை கிடைக்கும். 

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் உங்களின் சஷ்டமாதிபதியும் பாக்யாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்படும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொந்தபந்தங்கள் மத்தியில் கௌரவம் கூடும். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 8-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள் வந்துசெல்லும். 

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பணவரவு உண்டு. மகளுக்கு திருமணம் கூடி வரும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் சட்ட ஆலோசகரை ஆலோசிப்பது நல்லது. எவரையும் விமர்சிக்க வேண்டாம். சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

வியாபாரத்தில், சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதுத் தொடர்புகள் கிடைக்கும். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். அயல்நாட்டில் இருப்பவர் களும் உதவுவர். உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கும் பங்குதாரர் வாய்ப்பார். சிலர், வேறு தொழிலுக்கு மாற வாய்ப்பு உண்டு. புரோக்கரேஜ், ஏற்றுமதி-இறக்குமதி, கன்ஸ்ட்ரக்ஷன், பதிப்பகம், கட்டட உதிரி பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில், உங்களின் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரிகளுக்கு நெருக்கம் ஆவீர்கள். எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு தாமதமின்றிக் கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்களில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் மனம் மாறும். 

கன்னிப்பெண்களுக்கு, நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். வேலை கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு, கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாகும். மாணவ-மாணவியரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். விளை யாட்டில் பரிசு பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு இப்போது கூடிவரும். பிரபல கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். அரசியல்வாதிகள் பேச்சால் சாதிப்பார்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவதுடன், வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்று வதாக அமையும்.

பரிகாரம்: கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசக்கரபாணிப் பெருமாளை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:45 am


சிந்தனைவாதிகள் நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரையிலும் ராசிக்கு 6-ல் மறைகிறார். 'சகட குருவாச்சே... சங்கடங்களைத் தருவாரே...’ என்று கலங்காதீர்கள். உங்கள் யோகாதிபதிகளின் சாரங்களில் அவர் செல்வதால், ஒரளவு நல்லதே நடக்கும்.
முயற்சியால் முன்னேறப் பாருங்கள். மற்றவர்களின் பலம் - பலவீனத்தை அறிவீர்கள் என்றாலும், சில தருணங்களில் ஏமாறவும் வாய்ப்பு உண்டு. செலவுகள் உண்டு. வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். சிலர், புறநகர்ப் பகுதியில் குடியேறுவர். வி.ஐ.பி-களை பகைக்க வேண்டாம். அரசு வரிகளைச் செலுத்துவதில் தாமதம் வேண்டாம்.

குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், பணவரவு, குடும்பத்தில் நிம்மதி உண்டு. சாமர்த்தியமாகப் பேசி காய் நகர்த்துவீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், புது வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொன்றை விற்கவேண்டி வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.

குருபகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் தனாதிபதியும் லாபாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். புதுப் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். என்றாலும் செலவுகளும், வேலைச் சுமையும் தொடரும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ராசிநாதனும் விரயாதிபதியுமான சனி பகவானின் பூசத்தில் குரு செல்வதால், செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புதிய நண்பர்களால் உற்சாகம் அடைவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும் அஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளை களால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். மகளின் பிடிவாதம் மாறும். மகனின் உயர்கல்வி, உத்தியோக முயற்சிகள் சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. 

3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 7-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்வதால், செல்வாக்கு கூடும். பணவரவு உண்டு. மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத் திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், திடீர் பயணங்களும், செலவுகளும் துரத்தும். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை நினைத்து பயம் எழும். கர்ப்பிணிகளுக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வீடு, மனை வாங்கு வது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பணவரவு உண்டு.   

வியாபாரத்தில், அதிரடி மாற்றங்களால் லாபம் ஈட்டுவீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். கடன் வாங்கியாவது சொந்த இடம் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வருவீர்கள். லோன் கிடைக்கும். சிமென்ட், கணினி உதிரிப் பாகங்கள், ரியல் எஸ்டேட், என்டர்பிரைசஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லையே எனும் ஆதங்கம் எழும். உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போன்று செயல்பட முடிவெடுப்பீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலை அதிகமாகும். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, பெற்றோருடனான மோதல் நீங்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். மாணவ-மாணவிகள் யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்துங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். கலைத் துறையினருக்கு போட்டிகள், விமர்சனங்கள் அதிகரிக்கும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர் கள். அரசியல்வாதிகள், கோஷ்டிப்பூசலில் சிக்கவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, செலவுகளையும், அலைச்சலையும் தந்தாலும், ஓரளவுக்கு வெற்றி பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: சஷ்டி திதி நாள்களில் விராலிமலைக்குச் சென்று ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுங்கள். வினைகள் யாவும் நீங்கும்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:45 am


ன்னம்பிக்கை மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 5-ல் அமர்வதால், புதிய பாதையில் பயணிப்பீர்கள். அடிப்படை வசதி- வாய்ப்புகள் உயரும். தடுமாற்றம் நீங்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும் கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல மணப்பெண் அமைவாள்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து பங்கு கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை விலகும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு  நல்ல பலன் உண்டு. வழக்கு சாதகமாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள். நட்பால் பலனடைவீர்கள். கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.

குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். தந்தையாருடன் மனஸ்தாபம் நீங்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 11-வது வீட்டை குரு பார்ப்பதால், உங்களின் புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். வருமானம் உயரும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். ஷேர் மூலமாக பணம் வரும்.

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் ராசி நாதனும் ஜீவனாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். 29.6.14 முதல் 27.8.14 வரையிலும் உங்களின் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். வீடு, வாகன வசதி பெருகும். ஊர்ப் பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் சுகாதிபதியும் சப்தமாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். தாய்வழி சொத்து சேரும். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 6-ல் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்கிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டு.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், காரியங்கள் கைகூடும். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். மனைவி உங்களது ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இதமான பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் அல்லது புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக்கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில், உங்களைப் பிடிக்காத மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். வழக்கில் வெற்றி பெற்று, இழந்த பதவியில் மீண்டும் அமர்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு. இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கன்னிப்பெண்களுக்கு, உயர்கல்வியில் வெற்றி உண்டு. தடைப்பட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். நினைத்ததை சாதிப்பீர்கள். அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். மாணவ-மாணவிகளுக்கு, மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். கலைத் துறையினருக்கு அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிக்கிடந்த படம் ரிலீஸாகும். அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். உங்களின் களப்பணி பாராட்டுக்கு உரியதாகும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, நீங்கள் தொட்டதை எல்லாம் துலங்கவைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங் களையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: பௌர்ணமி தினங்களில் நாமக்கல் சென்று, ஸ்ரீநரசிம்மரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். துப்புரவுப் பணியாளருக்கு பொருளுதவி செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by சிவா on Thu May 15, 2014 4:46 am

திருவருள் தரும்  குருவருள்!


மற்ற நட்சத்திரக்காரர்கள், வியாழக்கிழமைகளில் அருகிலிருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று கீழ்க்காணும் காயத்ரீ மற்றும் மந்திரத்தைக் கூறி ஸ்ரீகுருபகவானை வணங்குவதுடன், தெற்குப் பிராகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுங்கள். குருவருளாலும் திருவருளாலும் உங்கள் குடும்பம் சுபிட்சம் அடையும்.


குரு பகவான் காயத்ரீ


ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
   க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்

குரு பகவான் மந்திரம்


தேவானாம்ச ருஷினாம்ச குரும்
காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய
தம் நமாமி பிருஹஸ்பதிம்

கருத்து: தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குரு, பொன்னன், மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவராகிய பிரகஸ்பதியை வணங்குகிறேன்.

[thanks] சக்தி விகடன் [/thanks]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum