ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
SK
 
rajeshk1975
 

Admins Online

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை
அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down


Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by சிவா on Mon Jun 16, 2014 1:29 am

பி யு சின்னப்பா மற்றும் பாகவதர் - இவர்களின் பெயர்களை மட்டுமே இதுவரை அறிந்து வைத்திருந்தேன், ஆனால் தங்களின் இக்கட்டுரை மூலம் இருவரின் வாழ்க்கை மற்றும் சினிமா உலகில் இவர்களின் ராஜ்ஜியம் எவ்வாறிருந்தது என்பதை அறிந்து கொண்டேன். கட்டுரைக்கு மிக்க நன்றி மருத்துவரய்யா..!


அவர் சாப்பிட பயன்படுத்துவது தங்கத் தட்டுதான் ! அந்த தட்டு எப்படியும் 100 பவுன் கள் இருக்கும் ! இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத் தட்ட ரு. 2.25 கோடி இருக்கலாம் !
நல்லவேளை இப்பொழுது அவர் இல்லை, இருந்திருந்தால் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பார்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு
இது குறித்து தாங்கள் எழுதியதும் கூகிளில் தேடிப் படித்தேன்! அதனை கீழே தந்துள்ளேன்.
லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கும் தியாகராஜ பாகவதரும்:

1940-களில் தியாகராஜ பாகவதர்தான் திரையுலகின் சூப்பர் ஸ்டார். இவருடைய வெண்கலக் குரலுக்கு மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். மேடையிலோ திரையிலோ இவர் தோன்றினால் மக்கள் மெய் மறந்து சொக்கி நின்றனர். இவருடைய ஹரிதாஸ் படம் சென்னை பிராட்வே திரையரங்கில் சுமார் 700 நாள்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது. இவர் காரில் போகும்போதுகூட மக்கள் வழிமறித்து நிறுத்தி பாடச் சொல்லி கேட்பார்கள். இவர் நடித்து வெளியான சிந்தாமணி படத்தைத் திரையிட்ட ராயல் டாக்கீஸ், அதில் கிடைத்த வசூலை வைத்தே சொந்தமாக தியேட்டர் ஒன்றை வாங்கி அதை சிந்தாமணி தியேட்டர் என்று பெயரிட்டது. திவான் பகதூர் என்று பட்டம் பெற்ற திரையுலகைச் சேர்ந்த ஒரே நடிகர் இவர்தான்.

இவர் ஒரு ட்ரெண்ட் செட்டர். இவர் குரல் மட்டுமல்ல, சிகையலங்காரமும் இளைஞர்களியே பிரபலம் அடைந்திருந்தது. பாகவதர் ஸ்டைல் என்று அதற்குப் பெயர். திரையுலகை இவர் அளவுக்கு ஆண்ட இன்னொருவரைச் சொல்வது கடினம். திரையுலகின் மூலம் இவர் அடைந்த லாபங்களும், திரையுலகம் இவர் மூலம் அடைந்த லாபங்களும் மகத்தானவை. தங்கத் தட்டில் உணவு உண்டவர். அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை ஒரு கொலை வழக்கால் தலைகீழாக மாறிப்போனது. அதுதான் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.

பாகவதரைப் போலவே இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்னொருவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.  வில்லுப்பாட்டு, மேடை நாடகம், திரையுலகம் என்று பல துறைகளில் பிரசித்தி பெற்றவர். திரைப்படத்தில் தான் பங்குபெறும் நகைச்சுவை காட்சிகளுக்கு தானே வசனம் எழுதினார். சுமார் 150 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த பல படங்களில் இவருக்கு ஜோடியாக பெண் கதாபாத்திரத்தில் நடித்த டி.எம்.மதுரம் கலைவாணரின் நிஜ வாழ்க்கையிலும் துணைவியாக ஆனார். திரைவானில் வெற்றிக்கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையையும் அதே லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தாக்கி சீரழித்தது.

இரு பெரும் நடிகர்களின் வாழ்வில் சுனாமியை ஏற்படுத்திய அந்த லட்சுமிகாந்தன் யார்? இன்றைய மஞ்சள் பத்திரிகைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழந்த சினி கூத்து என்னும் சினிமா இதழைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தவர். சினி கூத்தில் சினிமாவைப் பற்றிய விமர்சனம் மட்டுமல்ல, சினிமாக்காரர்களைப் பற்றிய விமரிசனமும் இடம்பெற்றது. பரபரப்பான கிசுகிசுக்கள், எந்த நடிகருக்கும் எந்த நடிகைக்கும் தொடர்பு போன்ற ‘சுவாரஸ்யமான’ செய்திகள் இடம் பெற்றன. நடிகர், நடிகைகளுடைய தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் என்ற பெயரில் பல புனைவுகள் தயார் செய்யப்பட்டு அச்சில் ஏற்றப்பட்டன. அதனால் பல நடிகர், நடிகைகளின் சமூக அந்தஸ்துக்கு பங்கம் ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்டும் விதமாக தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு (இவர் பிரபல இயக்குனர். கோவை பக்ஷிராஜ் ஸ்டுடியோவின் உரிமையாளர்) மூவரும், அன்றைய சென்னை மாகாண ஆளுநரான ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப்பிடம் சென்று லட்சுமிகாந்தனுக்கு சினி கூத்து பத்திரிக்கை நடத்த வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று வேண்டி ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர். ஆளுநரும் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இசைந்து லட்சுமிகாந்தனுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்தார்.

ஆனால், லட்சுமிகாந்தன் தன்னுடைய நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளவில்லை. போலியான ஆவணங்களின் பேரில் தன் வெளியீட்டைத் தொடர்ந்து நடத்திவந்தான். அரசாங்கத்துக்கு இது தெரிய வரவே அந்த வெளியீட்டையும் முடக்கியது. லட்சுமிகாந்தன் இதற்கும் அசரவில்லை. ஹிந்து நேசன் என்ற வேறொரு பத்திரிகையைத் தொடங்கினான். மீண்டும் ஏகப்பட்ட கிசுகிசுக்களை எழுதினான். இம்முறை ஒரு முன்னேற்றம். சினிமாக்காரர்கள் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் உள்ள பெரும்புள்ளிகள், தொழில் அதிபர்கள் என்று அனைவரைப் பற்றிய ரகசியங்களையும், புனை கதைகளையும், கிசுகிசுக்களையும் எழுதித் தள்ளினான்.

லட்சுமிகாந்தன் எழுதும் கிசுகிசுக்களுக்கு பயந்தவர்கள், அவனுடைய நட்பைச் சம்பாதிக்க அவனுக்கு ஏகப்பட்ட பணத்தை வழங்கினர். இதன் காரணமாக லட்சுமிகாந்தன் சொந்தமாக ஒரு அச்சகத்தையே விலைக்கு வாங்கிவிட்டான். தனக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீ ராமுலு ஆகியோர்மீது நிறைய கிசுகிசுக்களை எழுதினான். அந்தக் காலகட்டத்தில் மேற்சொன்ன மூவரைத் தவிர்த்து லட்சுமிகாந்தனின் கிசுகிசுக்களால் பாதிக்கப்பட்டு அவனுக்குப் பல எதிரிகள் உருவாயினர்.

இந்நிலையில், 1944 ஆம் ஆண்டு லட்சுமிகாந்தன் தன்னுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டு சைக்கிள் ரிக்ஷாவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது சென்னை வெப்பேரி அருகே வந்து கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத சிலர் அவனைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்று விட்டனர். கத்திக்குத்து காயத்துடன் அவன் மருத்துவமனைக்குச் செல்லாமல் அவனுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டிற்குச் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். அவனுடைய நண்பர் அவனை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். கூடவே தன்னுடைய ஜூனியரையும் லட்சுமிகாந்தனுக்கு துணையாக அனுப்பி வைத்தார். ஆனால் லட்சுமிகாந்தன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், வெப்பேரி காவல் நிலையத்துக்குச் சென்று, நடந்த சம்பவங்களைப் பற்றிப் புகார் ஒன்றை கொடுத்தான். தன்னை அடையாளம் தெரியாத யாரோ குத்திவிட்டதாகத்தான் தெரிவித்தான். தியாகராஜ பாகவதரையோ என்.எஸ்.கிருஷ்ணனையோ புகாரில் குறிப்பிடவில்லை.

மருத்துவமனையிலும் அவன் புறநோயாளியாகத்தான் அனுமதிக்கப்பட்டான். காவல் நிலையத்திலும் மருத்துவமனையிலும் அவன் எந்தவிதக் கவலையும் இல்லாமல் காணப்பட்டான். நகைச்சுவை உணர்வுடன் இருந்ததாகவும் சொல்வார்கள். மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளித்தவர்களிடம் லட்சுமிகாந்தன் ஒரு கொலை விஷயத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறான்.  சமீபத்தில் தனுஷ்கோடியிலிருந்து சென்னைக்கு வந்த போட் மெயில் ரயிலில், தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அது. அந்தக் கொலையில் ஒரு பிரபல சினிமா நடிகை சம்மந்தப்பட்டிருப்பதாகவும், கொலை நடந்த ரயிலில் அவள் பயணம் செய்ததாகவும், கொன்ற பிறகு, ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டதாகவும் லட்சுமிகாந்தன் சொன்னான். அந்த நடிகைக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் அவள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தான். தகுந்த ஆதாரங்களைக் கொண்டு அந்த நடிகையைச் சிக்கவைக்கப்போகதாகவும் தெரிவித்தான்.

மறு நாள் விடியற்காலையில் எதிர்பாராத விதமாக லட்சுமிகாந்தன் உயிரிழந்தான். லட்சுமிகாந்தனை யார் கொன்றிருக்கக்கூடும் என்னும் கேள்வி எழுந்தபோது, தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் , ஸ்ரீராமுலு நாயுடு ஆகிய மூவரையும் அதற்குப் பொறுப்பாளிகளாக்கியது காவல் துறை. மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவாளிகளுக்குப் பிரபல வழக்கறிஞர்கள் ராஜாஜி, வி.டி. ரங்கசாமி ஐயங்கார், கோவிந் சாமிநாதன், கே.எம்.முன்ஷி, பி.டி.சுந்தர்ராஜன், சீனிவாச கோபால் மற்றும் பிரேடல் ஆஜரானார்கள். நீதிபதி மாக்கெட் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு நடந்த சமயத்தில் ஜூரி முறை இருந்தது. ஜூரி என்றால் நடுவர் குழு. பொது மக்களிலிருந்து 12 நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த நடுவர் குழு அமைக்கப்படும். வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு தான், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று முடிவெடுக்கும். அந்த முடிவை வைத்து நீதிபதி தகுந்த தீர்ப்பை அளிப்பார். இப்பொழுது இது நடைமுறையில் இல்லை.

வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு விசாரணையின் இறுதியில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பை வெளியிட்டது. ஆனால் ஸ்ரீராமுலு குற்றம் ஏதும் இழைக்கவில்லை என்ற முடிவையும் நீதிபதிக்குத் தெரிவித்தது. நடுவர் குழுவின் முடிவின்படி நீதிபதி, தியாகராஜ பாகவதருக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். (இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு, 1955 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து நாடு கடத்தும் தண்டனை நீக்கப்பட்டது).

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பாகவதரும் கலைவாணரும் ப்ரிவி கவுன்சிலில் இரண்டாவது மேல்முறையீடு செய்தார்கள். ப்ரிவி கவுன்சில் லண்டனில் இருக்கிறது. இந்தியாவில் உச்ச நீதிமன்றம் நிறுவப்படாத நிலையில், இந்திய உயர் நீதிமன்றங்களுடைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பியவர்கள் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலைத்தான் அணுக வேண்டியிருந்தது. இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர் உச்ச நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு, ப்ரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்வது நிறுத்தப்பட்டது.

பாகவதர் மற்றும் கலைவாணருடய மேல்முறையீட்டை விசாரித்த ப்ரிவி கவுன்சில், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று கூறி, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்தியாவில் மறுபடியும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேப்பல் மற்றும் ஷஹாபுதின் அடங்கிய பெஞ்ச் (Division Bench) முன்பு விசாரணைக்கு வந்தது. (இதில் நீதிபதி ஷஹாபுதின் பின்னாளில் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டார். அங்கே அவர் பதவி உயர்வு அடைந்து இறுதியாக பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்). இம்முறை குற்றவாளிகளுக்காக வாதாடியவர் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ். வழக்கை விசாரித்த புதிய பெஞ்ச், தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு முடியும்வரை பாகவதரும் கலைவாணரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையிலிருந்தனர். லட்சுமிகாந்தன் கொலை வழக்கிலிருந்து விடுபடுவதற்கு பாகவதரும் கலைவாணரும் தாங்கள் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் செலவு செய்திருந்தனர். தியாகராஜ பாகவதர், தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 12 திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தார். அவை அனைத்தும் கை நழுவிப் போனது. பாகவதரின் மவுசு காணாமல் போயிருந்தது. அவர் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, மேடை கச்சேரிகளில் பாடினார்.

திராவிட இயக்கம் வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது. இயக்கத்தின் தலைவராக இருந்த அண்ணாதுரை, தியாகராஜ பாகவதரைத் திராவிட இயக்கத்தில் சேருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு பாகவதர் இணங்கவில்லை. பாகவதர் திரைப்படத்துறையிலிருந்து விலகிய பிறகு, தமிழ் திரைப்படங்கள் வேறொரு தடத்தில் பயணத்தைத் தொடர்ந்தது. நாத்திக கொள்கையையும், கடவுள் மறுப்புப் பிரசாரத்தையும் மக்களிடையே சேர்ப்பதற்கு திரைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன.

பாகவதரால் மீண்டும் உயரத்தைத் தொடமுடியாமலே போய்விட்டது. 1959ம் ஆண்டு, தன்னுடைய 49-வது வயதில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார். கலைவாணர் விடுதலையானபிறகு பல படங்களில் நடித்தார். புதிய நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். பல கலைஞர்களைத் திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். மீண்டும் பாகவதர் போல் இல்லாமல், திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1957-ஆம் ஆண்டு தன்னுடைய 48வது வயதில் கலைவாணர் காலமானார்.

லட்சுமிகாந்தனை யார் கொலை செய்தார்கள் என்ற விவரம் இன்றுவரை மர்மமாகவே நீடிக்கிறது.
http://namathu.blogspot.com/2011/11/blog-post_4742.html

பாகவதரின் சில்க் சட்டை கிழிந்திருந்தது........ வேஷ்டி பயங்கரமாக கிழிக்கப்பட்டு...!
இந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை!

சின்னப்பா வை ஆதிரிக்கும் தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று பாகவதரை இப்படி விமர்சனம் செய்தது !
எப்படி விமர்சனம் செய்தது என்று கூறவேயில்லையே!!!

எனினும் ' மாத்ரு பூமி ' தடையை வென்று வெளியாகி தோல்வி அடைந்தது !
இதற்கு இந்தப் படம் தடை செ\ய்யப்பட்டே இருந்திருக்கலாம் தானே!

நம்ம ' ஈகரை ' கூட ஒரு வகையில் ' சிவ கவி ' தான் ! என்ன.... பாகவதருக்கு ' சிவ கவி ' ! ஈகரைக்கோ ...... " சிவா   கவி !  
சிவனே கதி என்றிருக்கிறேனே தவிர சிவா கவி ஆகும் எண்ணம் இல்லை பாஸ்!

சென்னை பிராட்வே திரை அரங்கில் 3  தீபாவளிகளைக் கடந்து  மாபெரும் வெற்றி பெற்றது !
மூன்று வருடங்கள் உண்மையிலேயே மக்கள் சென்று பார்த்தனரா அல்லது பவர் ஸ்டாரின் லத்திகா படம் போன்று ஓட்டினார்களா? உண்மையைச் சொல்லுங்க பாஸ்!

பி யு சின்னப்பா தனது 36 ஆம் வயதில் அகால மரணம் அடைந்தார் !
36-வயதிற்குள் இவ்வளவு சாதனைகளைப் படைத்தாரா? நினைக்கும் பொழுதே மலைப்பாக உள்ளது![note]சினிமா உலகின் அரியபல தகவல்களை தங்களின் நகைச்சுவை உணர்வுடன் கூடிய கட்டுரையில் படிக்க காத்திருக்கிறோம்/. தொடருங்கள்....![/note]avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Mon Jun 16, 2014 5:55 pm

@moganan wrote:அன்பு மருத்துவர் சாந்தாராமிற்கு...

மூன்று விதமான களஞ்சியங்களையும் அத்தான் தகவல் களஞ்சியங்களையும் ஒரே மூச்சில் படித்து ஏப்பம் விட்டுவிட்டேன். அத்தான் பசியாறி விட்டேன்...

உங்களது எழுத்திற்கு சொல்லவும் வேண்டுமா? அரிய பல தகவல்கள்... அசத்தும் மொழி நடை...

ஆதிகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கும் வருகிறீர்கள்... எம்ஜிஆர்- சரோஜா தேவி மேட்டரை டீலில் விட்டுவிட்டீர்கள்... புதிர் போட்டு விட்டால் மனது குமையத்தான் செய்கிறது?

கலக்குங்க மருத்துவரே... படித்து மகிழ பட்டாளமே இருக்கிறது...
மேற்கோள் செய்த பதிவு: 1068938


அன்புள்ள திரு . மோகனன் அவர்களுக்கு ,


உங்களின் கடிதத்திற்கு நன்றிகள் பல !எம்ஜிஆர் - சரோஜாதேவி சமாச்சாரத்தை மறுபடியும்

'உப்புமா ' மாதிரி மறுபடியும் கிண்டுகிறீர்கள் !


உங்களுக்காக நானும் கொஞ்சம்.........


சரோஜாதேவி , திருமணம் செய்துகொண்டதை எம்ஜிஆர்

விரும்பவில்லை !

காரணம் ?


" திருமணம் ஆனா சரோஜாதேவியோடு எம்ஜிஆர் நடித்ததால் ,

காதல் காட்சிகளிலும் , பாடல் காட்சிகளிலும் முன்பு போல

ரசிகர்களைக் கவரும் வகையில் சோபிக்க மாட்டார் "


இப்படி எல்லாம் நான் எண்ண வில்லை.....எம்ஜிஆர் எண்ணினார் !


எனவே ' பெற்றால்தான் பிள்ளையா ' க்கு அப்புறம் ...

எம்ஜிஆர் 'உஜ்ஜாலாவுக்கு ' மாறிவிட்டார் ...


அத்தான் - ஜெயலலிதாவுக்கு ' ஆயிரத்தில் ஒருவன் ' ஆக

மாறிவிட்டார் !


பெங்க்களூரில் நடந்த சரோஜாதேவி திருமணத்திற்கும்

மற்றும்

சென்னை மைலாப்பூர் உட்லாண்ஸ் ஹோட்டலில் நடந்த

வரவேற்பு நிகழ்ச்சிக்கும் எம்ஜிஆர் போகவில்லை !


ஆனால் சரோஜாதேவிக்கு திருமணம் முடிந்து 19 ஆண்டுகள் கழித்து

சரோஜாதேவியின் கணவர் மரணம் அடைந்த போது,

தன மனைவி ஜானகியுடன் பெங்களூர் சென்று சரோஜாதேவிக்கு

ஆறுதல் சொன்னார் எம்ஜிஆர் !


அது மட்டுமா !


அபோது ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தார் ." ராஜீவ் காந்தி இடம் சொல்லி உனக்கு எம். பி .

பதவி வாங்கித் தருகிறேன் , சரியா ? "


என்று எம்ஜிஆர் , சரோஜாதேவியிடம் கேட்டார் !

அதற்கு சரோஜாதேவியின் பதில் :


" அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம் ! "சரி, மருத்துவய்யா !

நான் என்ன உங்களைக் கேட்டேன் ?


" எம்ஜிஆரும் சரோஜாதேவியும் ஏன் ' பெற்றால்தான் பிள்ளையா'

படப் பிடிப்பில் பேசிக்கொள்ளவில்லை ? "


என்றுதானே கேட்டேன் ? "


என்று கேட்கிறீர்களா மோகனன் !


அது மட்டுமா !


" பெண் என்றால் பெண் " படத்தை சரோஜாதேவியை வைத்து

படத்தை இயக்க ஆரம்பித்த ஆரூர்தாஸை டெலிபோனில் அவரின்

'மென்னியைப் ' பிடித்து :


" ஆசிரியரே ! நீங்கள் இயக்கும் " பெண் என்றால் பெண் ' படத்தில்

சரோஜாதேவியைப் போடாதீர்கள் !

அவரை நீக்கிவிட்டு " அம்மு " ( ஜெயலலிதா ) வைப்

போடுங்கள் ? "


என்று ஏன் சொன்னார் ?

சில சமயங்களில் , சில விஷயங்களை

வெளிப்படையாக சொல்லாதிருப்பதே நல்லது , மோகனன் !


ஏன் என்றால் :


" ஏன் வீட்டுக்கு யாரவது 'ஆட்டோ ' வை அனுப்பி

விட்டால் ! ?  அய்யோ, நான் இல்லை 
"பதில்கள் தொடரும் !


எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by moganan on Mon Jun 16, 2014 6:08 pm

அடடா...

இருங்க மருத்துவரே... உங்க வீட்டுக்கு ஆட்டோ பிடிச்சு நான் வரேன் இப்போ...

அடுத்த பதிவு எப்போது என காத்திருக்க வைக்காமல்.... விரைவில் (சு)வாசிக்கத் தாருங்கள்... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
avatar
moganan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 13

View user profile http://tamilkkavithai.blogspot.com/

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by சிவா on Mon Jun 16, 2014 6:48 pm

சில சமயங்களில் , சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லாதிருப்பதே நல்லது , மோகனன் ! ஏன் என்றால் : " ஏன் வீட்டுக்கு யாரவது 'ஆட்டோ ' வை அனுப்பி விட்டால் ! ?

ஆட்டோவெல்லாம் பழசு, இப்பல்லாம் ஸ்கார்பியோ தான் !
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Tue Jun 17, 2014 7:38 am

@M.M.SENTHIL wrote:படிக்கும் போது அதில் லயிப்பு ஏற்படும் வண்ணம் பதிவது மிக சிலரால் மட்டுமே முடியும், அதில் நீங்களும் ஒருவர்.
மேற்கோள் செய்த பதிவு: 1068984அன்புள்ள திரு . M . S . செந்தில் அவர்களே,


தங்களின் மடல் கண்டு மிக்க மகிழ்வடைந்தேன் !

மிக்க நன்றியும் கூட !


நானும் உங்களின் கவிதைகளை ரசித்துப் படித்து

மகிந்திருக்கின்றேன் - ஆனால் அவைகளை விமர்சனம்

செய்யும் அளவுக்கு எனக்கு ' ஞானம் ' இல்லை !


உங்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும்,எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jun 17, 2014 2:10 pm

டாக்டர் சார், உங்களை எப்படி , எப்படி புகழ்வதுன்னு தெரியல, இப்படி எழுத எல்லாராலும் முடியாது. இது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம்னு நினைக்கிறேன். நேரில் நடப்பது போன்று இருக்கிறது, உங்களது இந்த அற்புத படைப்பு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Jun 18, 2014 8:02 am

அன்புள்ள திரு. சிவா அவர்களுக்கு,

என்னுடைய கட்டுரையை முழுவதையும் நன்கு படித்து அதனைப்

பற்றி நான் உட்பட அனைவரிடமும் பங்கு போட்டு பகிர்ந்து கொள்ளும்

உங்களின் பாங்கு என்னைக் கவர்ந்திருக்கிறது ! ஜாலி

மிக்க நன்றியும் கூட , திரு . சிவா சார் !மேலும்,

" லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு "

பற்றி நீங்கள் சொன்ன கட்டுரையை நான் எழுதவில்லை

என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .

அந்த கட்டுரையை யார் எழுதியது என்பது தெரியவில்லை !


பொதுவாக , என்னுடைய கட்டுரை 'கோனார் நோட்ஸ் ' மாதிரி

பத்தி பத்தி யாக ' சீரியஸ் ' ஆக எழுதவே மாட்டேன் !

படங்களுடன், சில சமயங்களில் நேரில் பேசுவது மாதிரி

வசன நடையுடந்தான் எழுதுவேன் என்பது உங்களுக்குத் தெரியும் !


சின்னப்பா வை ஆதிரிக்கும் தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று பாகவதரை இப்படி விமர்சனம் செய்தது ! எப்படி விமர்சனம் செய்தது என்று கூறவேயில்லையே!!! wrote:
உண்மைதான் சிவா சார் !

அந்த இணைப்புக்கள் எனக்குத் தெரியாமல்

" SUBMIT " செய்யும் போது 'ஜகா ' வாங்கி விடது !

நீங்கள் சரியாக கவனித்து விட்டீர்கள் !

நன்றி , சிவா ஐயா !
சின்னப்பா வை ஆதிரிக்கும்

தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று பாகவதரை

இப்படி விமர்சனம் செய்தது !
' நடிப்பும் திறமையும் இல்லாத பாகவதர் தன்

குரலால் மட்டும் மக்களை வசியம் செய்கிறார் !

ஆனால் சின்னப்பா பல திறமைகளைக் கொண்டவர் ! -

சகலகலா வல்லவர் ! ""][/
பாகவதர் பத்திரிக்கை :
="" பாட்டுக்கே முதல் ஓட்டு !

அழகுக்கே முதல் ஓட்டு !

சண்டைக்கு கடைசி ஓட்டு !

கருப்பு இனத்தவருக்கு கடைசி ஓட்டு "


என்று எழுதியது !பி யு சின்னப்பா தனது 36 ஆம் வயதில் அகால மரணம் அடைந்தார் ! 36-வயதிற்குள் இவ்வளவு சாதனைகளைப் படைத்தாரா? நினைக்கும் பொழுதே மலைப்பாக உள்ளது! wrote:
பி . யு . சின்னப்பா !உண்மை !

அந்த 36 வயதில் சின்னப்பா செய்த சாதனைகள் அதிகம் !

அவர் இறந்து சுமார் 70 வருடங்கள் ஆனாலும் அவர்

பெயரை இப்போதும் சொல்லப்படுகிறது !


இவர் சொந்த ஊரான புதுக்கோட்டையில் பாதிக்கும்

மீள் உள்ள அசையா சொத்துக்களை அவர் வாங்கி

விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் !

அவர் புதுக்கோட்டையில் வீடுகளை வாங்கிப்

" போடும் " வேகத்தைப் பார்த்து அப்போதைய

பிரிட்டிஷ் அரசு ஓர் உத்தரவே போட்டது !என்ன அந்த உத்தரவு தெரியுமா !


" இனிமேலும் சின்னப்பாவுக்கு யாரும்

வீடுகளை விற்க்கக்கூடாது! "

எனினும் பி யு சின்னப்பா மகா குடிக்காரர் !

சின்னப்பா, தனக்கு ' உத்தம புத்திரன் ' படம் மூலம்

மறுவாழ்வு கொடுத்த 'மாடர்ன் தியேட்டர்ஸ் ' அதிபர்

டி. ஆர் சுந்தரத்தையே தன குடியால் பகைத்துக்

கொண்டார் !


( இந்த கதை பிறகு பார்க்கலாம் ! )

( ' ஜெகதலப்பிரதாபன் ' படத்தில் 5 சின்னப்பாக்கள் !

இசைத்தட்டு விளம்பரம் ! )
1948 ஆம் ஆண்டில் வெளிவந்த என் எஸ் கிருஷ்ணன்

இயக்கிய " மணமகள் " படத்தை பார்க்க விரும்பினார் ,

சின்னப்பா .


போய்ப் பார்த்தார் !

வீட்டுக்கு வந்தார் !

அங்கே .........

உடனே இறந்து விட்டார் !


என்னய்யா காரணம் ?

மாரடைப்பு " என்றார்கள் மருத்துவர்கள் !

அப்படியா ?

" இல்லை , வேறு காரணம் உள்ளது ! "

என்றார்கள் !


என்னவாம் ?


" பி யு சின்னப்பா , அவர் மரணம் அடையும் சில

நாட்கள் முன்பு தன வீட்டில் வேலை செய்த பணியாள் ஒருவரை

குடி போதையில் அடித்து நொறுக்கி விட்டார் .....

அதனால் என்னவோ அந்த பணியாள் இறந்து விட்டார் .

காவல் துறை இதனை மோப்பம் பிடித்து பி யு

சின்னப்பாவை கைது செய்ய முடிவு செய்தது !

பாகவதர் போல தானும் ' உள்ளெ ' செல்ல சின்னப்பா

விரும்பாமலும் அவமானத்தில் இருந்த தப்பிக்க

தன விரல்களில் அணிந்திருந்த வைர மோதிரங்களில் ஒன்றின்

வைரக் கற்களை விழுங்கி மரணம் அடைந்தார் ! "


என்றும் ' பேசி .....பேசி ....பேசி ...'

கொல்கிறார்கள் .....இல்லே ... கொள்கிறார்கள் !எது எப்படியோ சின்னப்பா வின் இன்னும் பல

நூற்றாண்டுகளுக்கு மங்காமல் இருக்கும் !


( சின்னப்பா, தன மனைவி ( அவரும் நடிகைதான் )

எ . சகுந்தலாவுடன் )
சென்னை பிராட்வே திரை அரங்கில் 3 தீபாவளிகளைக் கடந்து மாபெரும் வெற்றி பெற்றது !
மூன்று வருடங்கள் உண்மையிலேயே மக்கள் சென்று பார்த்தனரா அல்லது பவர் ஸ்டாரின் லத்திகா படம் போன்று ஓட்டினார்களா? உண்மையைச் சொல்லுங்க பாஸ்!உண்மை , சிவா சார் !

அந்த காலத்தில் வெளியாகும் படங்கள் ' ரொம்ப கம்மி ' , சார் !

விடியோ , நாடகம், இன்டர்நெட் , ஈகரை ( ! )

போன்ற பொழுது போக்குகள் அப்போது இல்லை !


முதலில் " ஹரிதாஸ் " , " பிரபாத் " என்கிற ஒரு தியேட்டரில்

வெளியிடப்பட்டதாம் ! அந்த 'பிரபாத் ' தியேட்டர் இப்போது

இல்லை, ஆனால் அந்த தியேட்டர் , இப்போது உள்ள

'பிராட்வே ' வுக்கு பக்கத்திலே இருந்தது !

சில மாதங்கள் ( ! ) 'ஹரிதாஸ் ' பிரபாத் ' இல் ஓடி,

பின்னர் ' பிராட்வே ' வுக்கு மாற்றப்பட்டது !

பாகவதர் - சின்னப்பா !

இவர்களைப் பற்றி

பேச - எழுத - படிக்க -

எராளமான செய்திகள்

கடல் போல்

உள்ளன !எம்கே ஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Jun 18, 2014 5:07 pm

@மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் சார், உங்களை எப்படி , எப்படி புகழ்வதுன்னு தெரியல, இப்படி எழுத எல்லாராலும் முடியாது. இது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம்னு நினைக்கிறேன். நேரில் நடப்பது போன்று இருக்கிறது, உங்களது இந்த அற்புத படைப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1069437அன்புள்ள திரு . மாணிக்கம் நடேசன் ஐயா அவர்களுக்கு,


உங்களின் பாராட்டிற்கு தகுதி உடையவன் ஆக நான்

இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது !


ஆனால் , உங்களின் பாராட்டுக்களும் , ஊக்கங்களும்

எனக்கு மீண்டும் மீண்டும் ....இன்னும் இன்னும் .....

...அதிகம் , அதிகம் ....கொஞ்சம் , கொஞ்சமாக .....

எழுதத் தூண்டுகின்றன என்பதோ

உண்மை ! உண்மை ! உண்மை !
நன்றி , ஐயா !


எம்கே ஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 22, 2014 1:00 pm

mkrsantharam அவர்களுக்கு நன்றி !

 சூப்பருங்க அருமையிருக்கு :நல்வரவு: அன்பு மலர் 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4547
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 22, 2014 1:12 pm

சூப்பருங்க அன்பு மலர் நன்றி 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4547
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by anaamigan on Fri Jun 27, 2014 3:12 pm

இன்றுதான் (27/06/14) இந்த இழையைப் பார்க்கக் கிடத்தது.

தொலைந்துபோன ஒரு பொருள் நீண்ட நாட்களின் பின்னர் கிடைத்தது போன்ற மட்டற்ற மகிழ்ச்சி

வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

”நவரசக்” குரலோனுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றோம்.

அநா
avatar
anaamigan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ayyasamy ram on Fri Jun 27, 2014 3:31 pm

எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளன
-
பிழைகள் நீக்கினால் சுவை கூடும்.
-
 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Fri Jun 27, 2014 6:07 pm

கணனியில் தட்டச்சு செய்யும் போது சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. நல்ல தகவல்களை டாக்டர் ஐயா தரும்போது, எழுத்துப் பிழைகளை பொருட் படுத்தாமல் சுவையை மட்டும் ரசிப்போம். தொடர்ந்து எழுதுங்கள் டாக்டர் சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Dr.S.Soundarapandian on Wed Jul 02, 2014 10:34 am

mkrsantharam அவர்களுக்கு நன்றி ! எவருக்கும் தெரியாதவற்றை அப்படியே அள்ளித் தருகிறார் !

   மீண்டும் சந்திப்போம் 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4547
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Mon Jul 14, 2014 8:33 am

@Dr.S.Soundarapandian wrote:mkrsantharam   அவர்களுக்கு நன்றி ! எவருக்கும் தெரியாதவற்றை அப்படியே அள்ளித் தருகிறார் !

   மீண்டும் சந்திப்போம் 
மேற்கோள் செய்த பதிவு: 1071850    அன்புள்ள டாக்டர் திரு . எஸ்  செளந்திரபாண்டியன்

அவர்களுக்கு ,


மிகவும் தாமதமாக உங்களுக்கு கடிதம் எழுதியதற்கு

முதலில் என்னை மன்னிக்க வேண்டும் !


சில சொந்த பிரச்சனைக்களுக்காக என்னால் , இங்கே வருவதற்கு

நேரம்

ஒதுக்க முடியவில்லை .


உங்களின் பாராட்டுக்களுக்கு என் நன்றியைத்

தெரிவித்துக்கொள்கிறீன்.


உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிகள் இருந்தால்

இன்னும் அதிக கட்டுரைகளை என்னால் எழுத முடியும் என்பதைத்

தெரிவித்துக்கொள்கிறீன் !


மீண்டும் உங்களுக்கு நன்றி கூறும் ,எம்கே ஆர் சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jul 14, 2014 8:37 am

மிகவும் சுவையான தகவல்களை நேரில் காண்பது போல் இருக்கிறது உங்கள் அதிசய படைப்பு. தொடரட்டும் உங்கள் அற்புத எழுத்துகள். மிக்க நன்றி டாக்டர் சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Mon Jul 14, 2014 8:42 am

@anaamigan wrote:இன்றுதான் (27/06/14) இந்த இழையைப் பார்க்கக் கிடத்தது.

தொலைந்துபோன ஒரு பொருள் நீண்ட நாட்களின் பின்னர் கிடைத்தது போன்ற மட்டற்ற மகிழ்ச்சி

வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

”நவரசக்” குரலோனுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றோம்.

அநா
மேற்கோள் செய்த பதிவு: 1071065

   மிக்க நன்றி திரு அநாமிகன்  அவர்களே !

நான் எங்கேயும் : " காணாமல் '    போகவில்லை !

இங்கேயே சென்னையில் தானே இருக்கிறேன் !


என் மகளை எஞ்சிநிரிங்  கல்லூரியில் சேர்ப்பதற்கு கொஞ்சம்

அலைந்து கொண்டுருந்தேன்  - அத்தான் - காரணம் !


உங்களின் கடிதற்திற்கு மிக்க நன்றி , ஐயா !எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Tue Jul 15, 2014 8:15 am

@ayyasamy ram wrote:எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளன
-
பிழைகள் நீக்கினால் சுவை கூடும்.
-
 
மேற்கோள் செய்த பதிவு: 1071072   திரு . அய்யாசாமி ராம் அவர்களுக்கு,


உங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் !

உங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி !எனினும் நான் திரை உலக சம்பந்தமாக கட்டுரைகளை எழுதும்போது

கீழ்கண்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து

எழுத வேண்டி  (  ' வேண்டி '  என்று 'டைப் ' அடித்தால் 'வெண்டி' என்றுதான்

வருகிறது - அதனை கவனிக்காமல் விட்டால் - அம்போ ' தான் ! )

இருக்கிறது :1. கட்டுரைக்கு அவசியமான விஷயங்களை மட்டும்

எழுத எடுத்துக் கொண்டு அவைகளை குறிப்புக்களை

மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் !   (  மறுபடியும் ' வெண்டி ! ' )2. எழுதப் போகும் 'மேட்டர் ' இல்  , என் சொந்த சரக்கு இல்லாமல்

ஆதாரங்களை கைகளில் வைத்துக் கொண்டுதான் எழுத

வேண்டும் !

யாராவது நான் எழுதியதை 'தவறு ' என்று சொன்னால் அதனை

' சரி ' என்று சொல்ல புத்தக ஆதாரங்களை 'ரெடி' ஆக வைத்திருத்தல்

மிக்க அவசியம் !
3. கட்டுரைக்கு ஏற்ப  புகைப்படங்களை - பொருத்தமான - புகைப்

படங்களை - சரியான இடங்களில் 'சொருக ' வேண்டும் !

பல சமயங்களில் நாம் பக்கம் பக்கங்களாக எழுதும் விஷயத்தை

ஒரே ஒரு புகைப்படம் நமக்கு விளக்கிவிடும் அல்லவா!
4. கட்டுரையை 'வளா '  - 'வளா ' என்று எழுதாமல் இடம் விட்டு

வண்ணங்களில் எழுதி படிப்பவர்களை ஈர்க்கும்  வகையில்

எழுதுவது என் பழக்கம் !

இப்படி எழுதினால் படிப்பவர்களுக்கு , நான் எழுதும்

விஷயத்தில்  ஈடுபாடு இல்லாவிட்டாலும் , 'அட்லீஸ்ட் '

' என்ன எழுதி இருக்கிறான் இவன் ? '  

என்று எண்ணி நான் எழுதியதைப் படித்து

அதன் பின்னர் நான் எழுதும் தலைப்பில் அவர்களும்

ஆர்வம் செலுத்த நேரிடலாம் !5. இறுதியாக , 'பொழுதுபோக்கும் ' என்கிற தலைப்பில்

எழுதும்போது . 'சீரியஸ் ' ஆக எழுதாமல் சற்றே நகைச்சுவையை

கலந்து - அதுவும் யாரையும் புண் படுத்தாவண்ணம் - எழுத

வேண்டும் என்பது என் விருப்பம் !
மேற்கண்ட விஷயங்களில் என்னுடைய கவனத்தை அதிகம்

செலுத்துவதால் , இறுதியில் எற்படும் தட்டச்சு பிழைகளை

நான் கவனிக்க நேரம் ஒதுக்கவதில்லை என்பது கண்கூடு !
எனினும் திரு . சிவா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :


நம்முடைய படைப்புக்களை " SUBMIT "   செய்யும் போது

" பிழை நீக்குக " -  எடிட் -  செய்கின்ற ' OPTION  -

இன்னொருவர் ' POST ' செய்யும் போது மறைந்து விடுகிறது !


அந்த 'பிழை நீக்குக ' என்கிற  ' OPTION '  சிறிது காலம்

வைத்திருந்தால் ,  நாம் எழுதும் படைப்புக்களில் பிழைகள்

இருப்பின் திருத்திக் கொள்ள முடியும் !


செய்ய முடியுமா , சிவா சார் !நன்றி திரு . சிவா சார் !
எம்கே ஆர் சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Tue Jul 15, 2014 8:21 am

@மாணிக்கம் நடேசன் wrote:கணனியில் தட்டச்சு செய்யும் போது  சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. நல்ல தகவல்களை டாக்டர் ஐயா தரும்போது, எழுத்துப் பிழைகளை பொருட் படுத்தாமல் சுவையை மட்டும் ரசிப்போம்.   தொடர்ந்து எழுதுங்கள் டாக்டர் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1071084
   அன்புள்ள திரு . மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு ,

உங்களின் கருத்துக்கும் நன்றி , ஐயா !

நானும் எனக்கு கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன் !என்னுடைய அடுத்த கட்டுரை :


இன்று


மாலையில் :" முள்ளும் - மலரும் ! "
நன்றி , திரு. மாணிக்கம் நடேசன் , ஐயா !


எம்கே ஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Tue Jul 15, 2014 4:24 pm

     தொகுதி - 4 .
 இயக்குனர் : மகேந்திரனின் -
ரஜினியின் -

இளையராஜா வின் -


பாலு மகேந்திராவின் -

   

  ' முள்ளும் - மலரும் '


திரைப்படம்


உருவான கதை !
 


 
    இயக்குனர் மகேந்திரனைப்

பற்றி :

கவிஞர்  வாலி :  
   
  " அந்த  அலெக்சாண்டர்

 தரையில்

வென்றான் ! 
நம்முடைய   அலெக்சாண்டர்  :


திரையில்


வென்றான் ! "  
 வாலியின் " நினைவு நாடாக்கள் "


  (   புன்னகை    இயக்குனர் மகேந்திரனின்     இயற்பெயர் :  அலெக்சாண்டர் ! )  
        " முள்ளும் -  மலரும் "

- மற்ற தமிழ்ப் படங்களில் இருந்து :

' முள்ளும் மலரும் "

படத்திற்கு மட்டும் ஒரு

பெருமை உண்டு !  


அது என்ன தெரியுமா ?
   (  ' அத்தானே ,  என்னடா , இந்த ஆள் இன்னும்

இப்படி கேள்வி கேட்டு 'லொள்ளு '  பண்ன ஆரம்பிக்கேவே இல்லையே ! "

என்று நினைத்தீர்கள் அல்லவா !

' எப்போவும் ( இப்போவும் ! )

' கேள்வியும் நானே -  பதிலும் நானே ! '     )  


     " சினிமா என்பது :

ஒரு 'விஷுவல் மீடியம் '  என்று

தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு

நிரூபித்த முதல் தமிழ்ப்படம் :

" முள்ளும் - மலரும் " !

 
இயக்குனர் மகேந்திரன் !இயக்குனர் மகேந்திரன்  முதன் முதலாக

இயக்கிய படம் :" முள்ளும் - மலரும் " !
 "  சரி, இவர் இயக்க்கிய முதல் படம்  " முள்ளும் - மலரும்  "  

என்றால் அதற்கு  முன்பு இவர் என்ன செய்து கொண்டிருந்தார் !  "என்றா கேட்கிறீர்கள் ?   இயக்குனர் மகேந்திரன் , முதன் முதலாக

திரைப்படத் துறையில் நுழைந்தது :


!. திரைக் கதை

மற்றும்

2. திரைக்கதை வசனம்


எழுதும் துறைக்கு வந்த பின்னர்தான் .......

பின்னர் இயக்குனர் ஆனார் !
 ' சரி , அவர் : ' திரைக்கதை - மற்றும் '

எழுதுவதற்கும் முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார் ? "


என்கிறீர்களா !


 'அத்தையும் ' (  அதையும் ! )   சொல்வதற்குத்தானே

இங்கே 'கதை பண்ணுகிறேன் !   புன்னகை
     " சோ " வின்

" துக்ளக் "

பத்திரிகையில் , " போஸ்ட்மார்ட்டம் "  என்கிற பெயரில்

- 'செய்கின்றவர் : டாக்டர் '

என்கிற பெயரில் , திரைப்படங்களின் விமர்சனங்களை

எழுதிவந்தார் !

அது மட்டுமா !

மகேந்திரன் எழுதிய விமர்சனங்களை அந்தந்த பட இயக்குனர்களுக்கு

அனுப்பி அவர்களின் பதில்களையும் கூடவெ வெளியிட்டார் !

 
 (  எனக்கு நினைவு தெரிந்தவரையில் எம்ஜிஆரின்

" ரிக்க்ஷாக்காரன் " படத்தை ' போஸ்ட்மார்ட்டம் "  பண்ணி அந்த படத்தின்

இயக்குனர் ஆன  எம். கிருஷ்ணனுக்கு  ' பேதி மாத்திரை ' கொடுத்து

எம்ஜிஆரிடம் , மகேந்திரன் ' வாங்கிக் கொண்டது '

இன்னும் நினைவில் உள்ளது !    )  
' சரி ! மகேந்திரன் எப்படி திரைப்படத்

துறையில் வர நேர்ந்தது ! "

என்கிறீர்களா !     அதற்கு , மகேந்திரனின் பதில்

எப்படி தெரியுமா ?     " எம்ஜிஆரின் ' நாடோடி மன்னன் '  வெற்றி

பெறாமல் போயிருந்தால் நான் சினிமாவுக்கே

வந்திருக்க மாட்டேன் ! "


   " எப்படி ? எப்படி ? எப்படி ? "

என்று வடிவேலு , பார்த்திபனை நக்கல் அடிக்கிறமாதிரி

என்னையும் அப்படி கேட்கிறீர்களா !

அத்தையும் சொல்லிவிடுகிறேன் !  

 மகேந்திரன் , காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி . ஏ படித்துக்

கொண்டிருக்கும் போது, ' நாடோடி மன்னன் ' படம் வெற்றி

பெற்றது !

அந்த படத்தின் வெற்றியைக் கொண்டாட , எம்ஜிஆர் ஊர் ஊராக

சென்று விழா க்களை நடத்தினார் .

அப்போது , தன கல்லூரியின் :

" நுண் கலை மன்றம் " - அத்தான் -

" Fine  Arts  Association "

துவக்க விழாவுக்கு வரவேண்டும் என்று எம்ஜிஆரை

மாணவர் மகேந்திரன் உட்பட மற்ற வர்களும் சேர்ந்து

அழைத்தனர் !


எம்ஜிஆருக்கு அப்போது காரைக்குடிக்கு செல்லுகின்ற

'ப்ரோகிராம் ' இல்லை ! எனினும் முருகப்பா கல்லூரியின் பெருமை

கருதி அந்த கல்லூரிக்குச் சென்றார் !


மேடையில் எம்ஜிஆர் !


ஒவ்வொரு மாணவர்களும் பேச ' மைக் ' பிடிக்க எத்தனிக்கும்

போது :


" உட்காருடா ! "

என்று மாணவர்கள் எவரையும் பேச விடவில்லை !

எம்ஜிஆர் , இந்த வேடிக்கையைப் பார்த்து புன்னகை

செய்துகொண்டிருந்தார் !


இப்போது .........

மாணவர் மகேந்திரன் பேசவேண்டும் !

அவருக்கு மூன்று நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது !

நிலைமையை மகேந்திரன் பார்த்தார் !


எப்படி ஆரம்பித்தார் , தெரியுமா !


இதோ , ஒரு 'சாம்பிள் ' !


  " " மாணாக்கர்களே !

நாம் இந்த கல்லூரியில் ஒரு பெண்ணைக் காதலித்தால்

நம்ம கல்லூரி பிரின்சிபால் நம்மை இந்த கல்லூரியை விட்டே

விரட்டிவிடுவார் !

ஊர் மக்களும் நம்மை வெறுப்பர் !


ஆனால்......

இதோ , இவர் ( எம்ஜிஆர் )  ஒரு பெண்ணைக் காதலித்து

மூன்று ' டூயட் " களைப் பாடினால் யாரும் கண்டுகொள்வதில்லை,

மாறாக அனைவரும் ரசிக்கின்றனர் !!

இது என்ன நியாயம் ? "
3 நிமிடங்கள் பேச வேண்டிய மகேந்திரன் 45 நிமிடங்கள் பேசினார் !

அவர் பேச்சை முடித்துக்கொள்ள பிரின்சு ( ! )  சைகை காட்டினாலும்

எம்ஜிஆர் பிரின்சு வை 'அடக்கி ' மகேந்திரனை தொடர்ந்து பேச சொல்லி

அவர் பேசுவதையும் ரசித்தார் !   திறமையான ஒருவர் கிடைத்தால்

எம்ஜிஆர் சும்மா இருப்பாரா, என்ன !
எம்ஜிஆர் , மகேந்திரனை என்ன செய்தார் ?

அவரை அப்படியே 'லபிக்கிக் ' கொண்டு தன ஆபிஸுக்கு

வரவழைத்தார் , எம்ஜிஆர் .' கல்கி ' யின்  " பொன்னியின் செல்வன் " கதையை

மகேந்திரனிடம் கொடுத்து :


" மகேந்திரன் !  'கல்கி' யின் ' பொன்னியின் செல்வன் நாவலை

நான் திரைப்படமாக எடுக்கப்போகிறேன் ,  

நீ , இந்த நாவலைப் படித்து ஒரு நல்ல

திரைக்கதை

ஆக மாற்றித் தரவேண்டும் ! "

என்றார் !
 


 மகேந்திரன், 'பொன்னியின் செல்வன்'

நாவலை மிகக் குறைந்த நாட்களிலே 'திரைக் கதையாக ' மாற்றி

எம்ஜிஆரிடம் கொடுத்தார் !


எம்ஜிஆர் அதிசயத்து விட்டார் !


( ஆனால் எம்ஜிஆர் 'பொன்னியின் செல்வன் '  நாவலைப்

படமாக்க என்ன காரணத்தாலோ முடியாமல் போய்விட்டது !  )அப்போது........


எம்ஜிஆர் மூலம் அறிமுகம்  ஆனார்

பிரபல தயாரிப்பாளர் :


 கே . ஆர் . பாலன் !   கே . ஆர் . பாலன் தயாரிப்பில் ,

ஜெய்சங்கர் , ரவிசந்திரன் , &  நாகேஷ்

நடித்த " நாம் மூவர் "   படத்தின் கதைதான் , மகேந்திரன்

எழுதிய முதல் திரைக் கதை !


 அப்புறம் ?


 1. 'சபாஷ் தம்பி '

2. ' பணக்காரப பிள்ளை '

3. ' நிறை குடம் '


4. ' கங்கா '

5. ' திருடி '


போன்ற  படங்களின் திரைக் கதை நம்ம ( ! )  மகேந்திரன்

எழுதியவை ஆகும் ! சரி , ஸ்வாமி !    ஒன்னும் புரியல

மகேந்திரன் , முதல் முதலாக

கதை வசனம் எழுதிய படம் எது , ஐயா ? "

என்கிறீகளா ! சொன்னால் சில பேர்கள் நம்புவார்களோ ,என்னவோ ...

சொல்லிவிடுகிறேன் ! சிவாஜி கணேசன் நடித்த :

" தங்கப் பதக்கம் "

மகேந்திரனின் முதல் திரைக்கதை

வசனம் கொண்ட படமாகும் !


   சரி, ' முள்ளும் - மலரும் '

படத்திற்கு போகலாமா ! "

    தொடரும் ..........
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Tue Jul 15, 2014 4:28 pm

'முள்ளும் - மலரும் '  தொடர்ச்சி .........
  1. ' வாழ்ந்து காட்டுகிறேன் '

2. ' வாழ்வு என் பக்கம் '

3. ' அவளுக்கு ஆயிரம் கண்கள் '

4. ' ஆடு -புலி ஆட்டம் '

5. ' மோகம் முப்பது வருஷம் '


போன்ற படங்களின் கதை - வசனங்களை மகேந்திரன்

எழுதினார் !


எனினும் படங்களுக்கு கதை - வசனம் எழுதுவது மகேந்திரனுக்கு

சுத்தமாக பிடிக்கவில்லை !


என்ன காரணமாம் ?


" துக்ளக் " பத்திரிக்கையில் 'போஸ்ட்மார்ட்டம் ' என்கிற பெயரில்

பல படங்களின் தரத்தை ' கிழி ' - ' கிழி '  என்று கிழித்த மகேந்திரன்,

இபோது அந்த படங்களைத் தயாரிப்பவர்களைப் போல ,

தானும் கதைகளை அமைப்பது , அவருக்கே பிடிக்கவில்லை!


வருமானம் கிடைக்கிறது என்பதற்காக செய்யும் தொழிலில்

திருப்தி மற்றும் மன நிறைவு கிடைக்கவில்லை என்றால்

அந்த வருமானம் தேவை இல்லை என்கிற கொள்கையில்

உறுதியாக உள்ளவர்களில் ஒருவர் :


மகேந்திரன் !இன்னொருவர் ?

அடியேன்தான் ! கண்ணடி(    கிளினிக் உள்ளே நுழையும் ஒரு தடியாள்,

" யோவ் ! டாக்டரூ ! புடி 500 ரூபா!

ஒரு பாட்டில் குளுகோஸ் ஏத்து  ! "என்று திமிராக பேசுபவனிடம் :" குளுகோஸ் வேணா !

' ஃப்ரியா '    ஒரு  ' சுன்னத் ' ஆபரேஷன் பண்ணட்டுமா ? ! "

 என்று கேட்டு அந்த  தடியாளை   மிரட்டும் மற்றும் விரட்டும்

ரகம், அடியேன்தான் !    மண்டையில் அடி    )  மகேந்திரனும் அந்தமாதிரி 'டைப் ' தான் !


தான் படிக்கும் போது வெறுத்து ஒதுக்கிய அதே தமிழ்ப்

படங்களைப் போல அவரும் அதே மாதிரியான 'மசாலாத் ' தனமான

திரைக்கதைகளையும் , திரைக்கதை வசனங்களையும் எழுதுவது

என்னவோ மகேந்திருக்கு பிடிக்கவில்லை !
 இப்படி , தன்னைப் பற்றி , தானே குறைத்து கொண்டிருக்கும்

போது , மகேந்திரன் மேடை நாடகமாக எழுதிக் கொடுத்த :


" ரிஷி மூலம் "சிவாஜி கணேசனை வைத்து படமாக வந்து வெற்றி கரமாக ஓடியது அவருக்கு

எரிச்சலைக் ( ! )  கொடுத்தது ! இந்த நிலையில் ......


 படங்களுக்கு கதைகளைக் கேட்டும் ,

கதை வசனங்களைக் கேட்டும் நிறைய சந்தர்ப்பங்கள்

மகேந்திரனுக்கு வந்தன !

அத்தனையும் அவர் ' நோ '   என்று சொல்லிவிட்டார் !


அப்படி கதை வசனங்களை கேட்டு வந்த படத்தயாரிப்பாளர்களிடம்

மகேந்திரன் இப்படி சொல்ல ஆரம்பித்தார் :
 " இதோ பாருங்கள் , தயாரிப்பாளர்களே !

என்னிடம் இப்போது கதை இல்லை !

ஏதாவது நாவல் ஒன்றைக் கொடுங்கள் !   அதனைப் படித்து

திரைக்கதை மற்றும் வசனம் எழுதித்தருகிறேன் , சரிதானா ! "

என்றார் !


அப்போது பல தயாரிப்பாளர்களில் ஒருவர் மகேந்திரனுக்கு

படிக்கச் சொல்லி கொடுத்த நாவல்தான் :

 உமா சந்திரன்  எழுதிய :

 " முள்ளும் - மலரும் "  நாவல் !

அந்த நாவலைப் படித்து :

ஒரு திரைக்கதையை

அமைத்தார் !


மகேந்திரனுக்கே தெரியும் !

என்ன தெரியும் ?

அந்த 'முள்ளும் - மலரும் ' திரைக்கதையை எந்த படத்

தயாரிப்பாளரும் காது கொடுத்து கேட்டாலும்  முகம்

சுளிப்பார் !

காரணம் ?


' தமிழ் சினிமாவின் வழக்கமான :

மெலோடிராம ,

அதிக வசனம் ,

ஓவர் ஆக்டிங்க்க் ,

டூயட் பாட்டுக்கள்

போன்ற 'மாமூல் ' சமாச்சாரங்கள் 'முள்ளும் - மலரும் '

திரைக்கதையில் இல்லை ....நஹி ....லேது ...! எனினும் மகேந்திரன் எந்த

தயாரிப்பாளரையும் வற்புறுத்த வில்லை !

'பசை ' என்று இருந்தார் !

அத்தான் , " கம் " (  GUM )

என்று இருந்தார் !    ஜாலி


   இந்த சமயத்தில்தான் மகேந்திரனைத்

தேடி வந்தார் , பிரபல தயாரிப்பாளர் ' ஆனந்தி பிலிம்ஸ் '

வேணு செட்டியார் !


' மகேந்திரன் !  நான் ஒரு படம் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன் !

நீ அந்த படத்தை 'டைரக்ட் '  பண்றியா ! ? "


---  கேட்டார் , வேணு செட்டியார் !


     இடது பக்கத்தில் இருக்கும் மகேந்திரனுக்கு

அருகில் கைகளைக் கட்டிக்கொண்டு

'தேமே' என்று இருப்பவர்தான் - வேணு செட்டியார் ! )

 மகேந்திரனும் அவருக்கு பதில் சொன்னார் :

 " ஓ ! பண்ணலாமே ! "எதோ ,

'காப்பி சாப்பிடலாமா ? '

என்று வேணு செட்டியார் கேட்டமாதிரியாகவும் ,

" ஓ ! சாப்பிடலாமே ! "

என்று மகேந்திரன் 'பின் மொழிந்தது ' மாதிரியும்  இந்த உரையாடல்

இருந்தது ! எனினும் மகேந்திரன் சற்று யோசிக்க ஆரம்பித்தார் !

என்னவாம் ?

" நாம் வைத்துக்கொண்டிருக்கும் ' முள்ளும் - மலரும் '  திரைக்கதையை

இவருக்கு கொடுத்த படம் பண்ணினால் என்ன ? "

என்பதுதான் !


பொதுவாக எல்லா தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களும் ' மசாலாத்'தனம்

உடையவர்கள் !   யாரும் பணத்தைப் போட்டு

' ரிஸ்க் ' ஐ 'ரஸ்க்'

மாதிரி எடுத்துக்கொள்வதில்லை - நம்ம வடிவேலு மாதிரி !
 எனவே , தான் எடுக்கப்போகும் திரைக்கதையை

' மசாலா தடவிய ' ( ! )   வேணு செட்டியாரிடம் சொல்வது என்பது "லொள்ளு "

என்பது ' கைப் புண்ணுக்கு கண்ணாடி '  என்கிற மாதிரியான

ரீதியில் உண்மை தான் !    அதிர்ச்சி


எனவே , முழு திரைக் கதையை மகேந்திரன் , தயாரிப்பாளரிடம்

சொல்லவே இல்லை !   ' இப்படி செய்யலாமா, அது தர்மமா ,

இது மகேந்திருனுக்கே தகுமா ? "


என்று நீங்கள் கேட்பது புரிகிறது !   ' நாயக ன் '   வேலு நாயக்கர் கூற்றுப்படி :


" நாலு பேருக்கு நன்மை என்றால் அது தப்பே இல்லை !


center] ( ' யார் அந்த 4 பேர் ?  மகேந்திரன் , ரஜினி, பாலு மகேந்திரா

மற்றும் இளையராஜா ?'

என்றா கேட்கிறீர்கள் !......ஹாய் .. ஹாய் .  சும்மா ஒரு 'பஞ்ச் '  டயலாக் !  )   புன்னகை [/center]இருந்தாலும் :

 " துட்டு " கொடுத்து  படம் எடுப்பவரக்கு

வியர்க்காமல் இருக்குமா !

வேணு செட்டியார் , கேட்டாரே அந்த கேள்வியை !


 நீங்க டைரக்ட் செய்யப்பூகும் படத்தின் கதை

என்ன, மகேந்திரன் ? "


     மகேந்திரன் , இந்த கேள்வியை எதிர்ப்பார்த்தவரைப்

போல உடனே அவர் கேள்விக்கு பதில் சொன்னார் !

எப்படி சொன்னார் தெரியுமா ?


   " நான் இயக்கப் போகும் படத்தின்

கதை

அண்ணன் - தங்கை

பாசத்தை வெளிக்காட்டும் படம் ! " அவ்வளவுதான் !


 வானத்திற்கும் , பூமிக்கும் இடையே

வாமன அவதாரம் போல் குதிக்க ஆரம்பித்தார் , வே. செட்டியார் !

என்னவாம் ?

ஒண்ணுமில்லே , " பாச மலர் "   படம் மாதிரி உணர்ச்சிப் போராட்ட

வசனங்களும் , பாடல்களோடு இவர் படமும் ஹிட் ஆகும்

என்கிற ஆனந்தம் தான் வே. செட்டியாரின் மகிழ்ச்சி !    ' போதுமப்பா , மகேந்திரா ! இது போதும் !

நீ பிச்சு உதறு !

இதுக்கும் மேலே நீ கதை சொல்லவேணா !

இதுதான் கதை ! முடிஞ்சு போச்சு ! " 'தங்கப் பதக்கம் ' , ' ரிஷிமூலம் ' போன்ற

'கமர்ஷியன் '  வசனகர்த்தா ஆன  மகேந்திரன் அண்ணன் - தங்கை

பாசத்தை மையமாக வைத்து படத்தையே இயக்கினால்

நிச்சயம் வெற்றி பெறும் என்று வேணு செட்டியார்

எண்ணிவிட்டார் !


 வேணு செட்டியாருக்கு தெரியாது !

என்ன தெரியாது ?

'பாச மலர் ' படத்திற்கும் , 'முள்ளும் - மலரும் "  படத்திற்கும்

படமாக்கும் முறையில் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு என்பது !


'தங்கப் பதக்கம் ' பாணியில் , மேடை நாடகம் திரைப்படம் ஆன

மாதிரி , இந்த 'முள்ளும் மலரும் ' இருக்கும்

என்று ( தப்பு )  கணக்கு போட்டுவிட்டார் !


மகேந்திரன், மனதுக்குள் சிரித்துக்கொண்டார் !


 சரி, இதுவரை இந்த கதை

இன்பமுடன் சென்று கொண்டிருக்கிறது

அல்லவா , இப்போதுதானே பிரச்சனை ஆரம்பம் !


   " அண்ணன் 'காரக்டர் ' க்கு

யாரைப் போடப்போறே ? "


- வேணு செட்டியார் கிடுக்குப் பிடி !   ' ரஜினி காந்த் ! "

 -  மகேந்திரனின் 'சம்மட்டி ' அடி !   அவ்வளவுதான் !  

வேணு செட்டியாரின் முகம்
 கறுத்து விட்டது !


 ' என்ன , விளையாடுறயா ?

அந்த ரஜினி காந்த் செம கறுப்பான ஆளு !

போதாக்குறைக்கு அவர் வில்லனாக நடிக்குறாரு !

நீ வேறே ஆளப் போடு ! "

- வேணு செட்டியார் !


 " ரஜினிதான் இந்த 'ரோல் ' க்கு சரிபட்டு வருவார் !

படத்தில் அவர் பெயர் " காளி " !

நூறு சதவிகிதன் இந்த 'ரோல்' க்கு சரி பட்டு வருவார் !

அவரை ஒதுக்கி வேறு ஆளைப் போடுவது என்பது

என்னால் எண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை ! "

- மகேந்திரன் !" அத்தானே பார்த்தேன் !

ரஜினி உனக்கு 'குளோஸ் ' ' பிரண்டு ' ! அத்தான்

உனக்கு வேறு நடிகரை நினைச்சுப் பார்க்க முடியவில்லை ! "

- வேணு செட்டியார் ! " இல்லை , ஐயா !  எனக்கு ரஜினி நண்பர்

ஆகா இல்லாவிட்டாலும் , இந்தக் படத்திற்கு அவரைத்தான்

நான் பரிசீலனை செய்திருப்பேன் , இது உறுதி ! "

- மகேந்திரன் !
 செட்டியார் , இயக்குனரை

கூர்ந்து கவனித்தார் - பேசாமல்

இருந்து விட்டார் !     " ஒரு திரைப்பட தயாரிப்பின் போது

ஒரு நல்ல இயக்குனருக்கு :1. அவருடைய சிந்தனைக்கு முழு சுதந்திரம் தரவேண்டும் !


2. தயாரிப்பாளர் அல்லது மற்றவர்களின் 'தலையீடு '

ஒருபோதும் இருக்கக் கூடாது !


3. அப்படி இயக்குனருக்கு இந்த அதிகாரங்கள் கூட

தயாரிப்பாளர்கள் தரவில்லையென்றால் அந்த இயக்குனர்கள்

அந்த படத்தில் இருந்து விலகிடவேண்டும் ! "  


- இயக்குனர் மகேந்திரன் !
    கீழ் கண்ட எடுத்துக்காட்டை  படியுங்கள் :

!   ' தெய்வத்தாய் ' படத்தை இயக்கிய பி மாதவனை

அழைத்து எம்ஜிஆர் , தனக்கு இன்னொரு படத்தை இயக்கித் தருமாறு

வேண்டினார் !

காரணம் :

பி . மாதவன் , ' தெய்வத்தாய் ' படத்தின் பாடல்களை அழகாக

முறையில் படம் எடுத்தது மக்கள் திலகத்திற்கு மிகவும்

பிடித்திருந்தது !


ஆனால் , பி மாதவன் இன்னொரு எம்ஜிஆர் படத்தை இயக்க

மறுத்து விட்டார் !

' க்யா ஹுவா ' ?


' தெய்வத்தாய் ' படத்தில் எம்ஜிஆரின் தலையீடு

மாதவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை !

மாதவன் ( மறுபடியும் )  'உஜாலாவுக்கு ' .......ஹி..ஹி ...

சிவாஜிக்கு மாறிவிட்டார் !


 இப்போது கூட .....நடிகர் .......

...வேணா ...வேணா .....சொன்னால் வீண் பிரச்சனை வரும் !மகேந்திரன், ரஜினியை சந்தித்தார் .....

'காளி ; யை அறிமுகம் செய்துவித்தார் !

ரஜினி 'காளி ' யை ஈற்றுக் கொண்டார் !

அவ்வளவு ஏன், காளியாகவே

தன்னை மாற்றிக்கொண்டார் !


அடுத்து ......

'எஞ்சினியர் ' ரோல் லுக்கு யாரைப் போடலாம் ?

மகேந்திரனும் , கமலும் நெருங்கிய நண்பர்கள் !

எனவே மகேந்திரன் கமலை அணுகினார் !
ஆனால்.....

இந்த படம் எடுக்கப் பட்ட காலகட்டத்தில் கமல் நிறைய

படங்களில் நடிக்க 'கமிட் '  ஆனதால் , 'முள்ளும் மலரும் '

படத்தில் கமல் நடிக்க இயலாமல் போய்விட்டது !


அப்புறம் ?

உங்களுக்கு தெரியாதா என்ன !


சரத் பாபு நடித்தார் !

 (  கமல் நடித்த ' மீண்டும் கோகிலா ' படத்தை மகேந்திரந்தான்

இயக்க வேண்டும் என்று கமல் விரும்பினார் !


ஆனால் , இப்போது மகேந்திரனால் ' மீண்டும் கோகிலா ' படத்தை

இயக்க முடியாமல் போய்விட்டது  !    சோகம்  


என்ன கொடுமை , சிவா சார் !     சிரி    ) மற்ற கலைஞர் கள் ??


       'படா பட ' ஜெயலட்சுமி , ஷோபா ,

போன்ற கலைனர்கள்  இயக்குநருக்காக 'பிறந்தவர் கள் '  மாதிரி ( ! )

அமைந்தது ஆச்சர்யம் தான் !இசைக்கு ?

இளையராஜா !  

இந்த படக்கதையின் சூழலுக்கு இசையமைக்க இளையராஜாதான்

தகுதியானவர் என்று மகேந்திரன் நினைத்தார் .....

அது எவ்வளவு தூரம் உண்மை என்பது 'முள்ளும் மலரும் '

படப் பாடல்களே சாட்சி !ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா !


 முதலில் மகேந்திரன் அமர்த்திக் கொண்ட ஒரு மூத்த

ஒளிப்பதிவாளர் ........அவர் பெயரை சொன்னால் வம்பு என்று

மகேந்திரனனே நினைத்து 'கப் சிப் '   ஆகிவிட்டார் !

படத்திற்கு 'லொகேஷன் ' பார்க்க அவரை அழைத்துப் போன

மகேந்திரன் , அந்த ஒளிப்பதிவாளர்  'லொகேஷன் ' ஐ சரியாக

கவனிக்காமல் ' தேமேனே ' என்று இருந்ததது ....அதுவும் ...

காரில் 'கம் ' என்று இருந்தது மகேந்திரனுக்கு கடுப்பைத் தந்தது !


கமலிடம் சென்றார் , மகேந்திரன் !


" மகேந்திரன் !  உங்கள் 'டேஸ்ட்' க்கு  பொருத்தமான வர

பாலு மகேந்திரா என்பவர் !

அவர் , உங்கள் எண்ணங்களை அவரின் காமெரா மூலம்

பிரதிபலிப்பார் ! "


---- சொன்னார் கமல் !


பாலு மகேந்திரனும் , இயக்குனர் மகேந்திரனும் " ராசி "

ஆயினர் !
 


     ' முள்ளும் மலரும் '

படப் பிடிப்பு !   உமா சந்திரைன் ' முள்ளும் - மலரும் ' நாவலை

புத்தக வடிவில் படித்தவர்கள் , ' முள்ளும் - மலரும் '  திரைப்

படத்தை பார்த்திருந்தால் ......இரண்டிற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள்

இருப்பதை காணலாம் !


காரணம் ?


இயக்குனர் மகேந்திரன் அந்த நாவலை முழுவது படிக்கவில்லை !

அவருக்கு தேவை :

வித்தியாசமான கதா பாத்திரங்கள் ,

வித்தியாசமான லொகேஷன் கள் ,

வித்தியாசமான ' ஷாட்கள் ' !


மேற்கண்டவை , ' முள்ளும் மலரும் '  நாவலைப்

முத்தை 50 பக்கங்களைப் படித்தே அவர் தெரிந்து கொண்டார் !

மகேந்திரனுக்கு அவை போதும் !

முழு நாவலை மகேந்திரன் , படத்தை எடுத்து முடித்த பின்பு,

அதுவும் படம் திரைக்கு வந்த பின்னர் படித்தாராம் !


சுருக்கமாக சொல்லப் போனால் , மகேந்திரன் ஒரு நாவலைப்

படமாக்க விரும்பவில்லை ,

மாறாக ஒரு நாவலில் அவருக்குத்

தேவையானவை மட்டும் எடுத்துக் கொண்டு , தன

இஷ்டம் போல் , தனது பாணியில் படம் எடுத்துக் கொண்டார் !

மகேந்திரன் செய்தது சரியா தவறா என்பது பற்றி நான் ஒன்றும்

சொல்ல விரும்பவில்லை !


அது அவர் இஷ்டம் !
 
லொகெஷன்ஸ்:


     கர்னாட மாநிலத்தில் கிட்டத்தட்ட 2000 கிலோ

மீட்டர்கள் சுற்றி அலைந்து :


சிருங்கேரி

என்கிற இடத்தை மகேந்திரன் பிடித்தார் !

அந்த இடத்தில் இந்த படக் கதைக்குத் தேவையான :

நிலக்கரி சுரங்கம் ,

விஞ்சு ஊர்தி

காடு போன்ற சூழல்

ஆகியவை இருந்தன !

எனவே இந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது !

 இது தவிர , மகேந்திரனுக்கு

இன்னொரு பழக்கம் இருந்தது !

அது என்ன தெரியுமா ?


   மகேந்திரன் எங்கேயாவது பயணிக்கும் போது
தன்னைக கவரும் காட்சிகளை ஏதேனும் கண்டால் அவைகளை

தான் இயக்கும் படங்களில் பொருத்தமான இடங்கள்

அமைந்தால் ( யாருக்கும் தெரியாமல் ( ! ) )   ' நைசாக '

புகுத்திவிடுவாராம் !


'முள்ளும் - மலரும் '   படத்திலும்  மகேந்திரன் , இந்த 'கமால் ' வேலைகள்

செய்தார் !


அவை என்ன தெரியுமா !
1. ஒரு முறை மகேந்திரன்

" உறியடி உற்சவம் "

நடப்பதை பார்த்தார் !

'முள்ளும் - மலரும் '  படத்தில் ரஜினி உறியடி அடிக்கும்

காட்சியினை - அதுவும் - இரண்டு தடவைகள் - படத்தில்

சேர்த்துக்கொண்டார் !2. சிருங்கேரி  அருகே  இருக்கும் ஊர் ஆற்றில் - மீன்கள் - அதுவும்

அளவில் பெரிய மீன்கள் - மக்கள் போடும் அரிசி பொரியை கரைக்கே

'கிட்டே ' வந்து சாப்பிடுவதை மகேந்திரன் பார்த்தார் !


ரஜினி மனைவி 'படா பட ' ஜெயலட்சுமியை ஒரு மீன் பைத்தியம்

என்றும் , அத்தோடு அவர்  " சாப்பாட்டு ராமி "   (   'சாப்பாட்டு ராமன் '  - எதிர்ப்பதம் ! )

என்றும் முடிவானது !
 


தொடரும்.........................
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Tue Jul 15, 2014 4:35 pm

      ' முள்ளும் - மலரும் ' ......

தொடர்ச்சி! ....... படப்பிடிப்பும் ஒரு தடங்கலும் இல்லாமல்

தொடர்ந்து நடைபெற்றது !

மிகக் குறைந்த அளவே வசனங்கள் ,

முக பாவனைகளிலே கதையை சாமர்த்தியமாக நகர்த்தினர்

மகேந்திரன் !

எல்லோரும் ஒரு குடும்பம் போல் பழகினர் !பாலு மகேந்திரா மட்டும் ஷோபா வுடன் சற்று ....சற்றுசற்றுசற்று

நெருக்கமாஆஆஆஆஆஅக   எப்போதும் காணப்பட்டார் !

காரணம் உங்களுக்கு தெரியாமல் இருக்காது !
" யோவ் ! எனக்குத் தெரியாதுய்யா , நீ சொல்லுப்பா ! "


என்று என்னை யாராவது அதட்டினாலும் சொல்ல நான்

தயாரில்லை , ஸ்வாமி !


இறுதிக் காட்சி !

( ' கிளைமாக்ஸ் ! '  ) கதைப் படி , ஷோபா , தான் மணக்க விருக்கும்

சரத் பாபு மற்றும் அவரது குடும்பத்தினரருடன் , அண்ணன் காளியை

விட்டு பிரியும் காட்சி !


முதலில் தைரியத்தை வரவழைத்து வள்ளி ( ஷோபா )  , தன

அண்ணனை விட்டு பிரிந்து போக, காளி தனித்து விடப்பட,

திடீரென்று , வள்ளி ஊட்டி வந்து அண்ணனைக் கட்டிப் பிடித்து :


' எனக்கு நீ தான் முக்கியம் , அண்ணா ! "


என்பதை வசனமே இல்லாமல் தன அழுகையின் மூலம்

'நடிப்பார் !'


அண்ணன் காளிக்கோ பெருமை பிடிபடாது ! 
தங்கையை அழைத்துச் சென்று சரத் பாபுவிடம் சென்று :


' உலகத்திலே தனக்கு அண்ணன் தான் முக்கியம் என்பதை என்

தங்கை நிரூபித்துவிட்டாள் !

இப்போ என் தங்கையை உங்களுக்கு மனைவியாகத் தர

நான் தயார், சார் ! "


என்று காளி கூற .......

அதன் பின்னர் ரஜினி கூறும் வசனம்தான் படத்தைப்

பார்க்கும் எல்லோருக்கும் பிடித்தது !


அந்த வசனம் என்ன தெரியுமா ?
        "  .......ஆனா  ....இப்போவும்

உங்களைப் பார்த்தால் எனக்கு

பிடிக்கலையே சார் ! "


என்று கேலியும் கிண்டலும் கலந்து ரஜினிக்கே

உரிய ' Body  Language ' உடன் சொல்வது படத்தின் வெற்றிக்கு

முக்கிய காரணமாக அமைந்தது !
   காளியின் உண்மையான பிடிவாத

குணத்தை அந்த வசனம் அழகாக சித்தரித்துக் காட்டுகிறது !மேற்கண்ட காட்சியில் அனைவரும் நன்றாக நடித்தனர் !

சரத்பாபுவும் நன்றாகவே நடித்தார் !


ஆனால் மேற்கண்ட காட்சியில் நடித்த

சரத் பாபு அப்புறம் அந்த படப்பிடிப்பு நடக்கும்

ஊரில் காணோம்  !
   என்ன ஆச்சு , சரத் பாபுவுக்கு ?


எல்லோரும் தேடினார்கள் , தேடினார்கள் .......

கண்டார்கள் , சரத்பாபுவை !

எங்கே தெரியுமா ?


மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் !


சரத்பாபு என் அப்படி மறைந்தார் ?


காரணத்தை சொன்னால் சிரிப்பீர்கள் !
 " அதெப்படி  காளி கடைசி

காட்சியில் கூட என்னைப் பிடிக்கவில்லை என்று

சொல்லலாம் ! ? "


கோபத்துடன் இப்படி ஒரு கேள்வியை அவர் கேட்டவுடன்

இயக்குனர் மகேந்திரன் சிரித்து விட்டார் !


பின்னர் மகேந்திரன், வழக்கமான பாணி சினிமாத்தனத்துடன்

தன பாணி எப்படி மாறுபட்டிருக்கிறது , அதை எப்படி சரத்பாபு

கவனிக்கத் தவறிவிட்டார் என்பதை ஒரு நீண்ட உரையுடன்

சொல்லி சரத்பாபுவை ' சமாதானப் ' படுத்தினாராம் !


" மாமூல் " படங்களில் நடித்து வந்த சரத்பாபு , :

" சினிமா இப்படியும் இருக்குமா ? "

என்று வியந்தாராம் !
     (  ' வீர பாண்டிய கட்ட பொம்மன் ' படத்தை

சிவாஜி ரசிகன் ஒருவனின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து

சென்ற எம்ஜிஆர் ரசிகன் , படம் முடிந்து வெளியெ வந்து சிவாஜி

ரசிகனைப் பார்த்து இப்படி கேட்டானாம் :


" டேய் , சிவாஜி பைத்தியம்  !

எங்க வாத்தியார் ( எம்ஜிஆர் )  மட்டும் இப்படி கட்டபொம்மன்

ஆகா நடித்திருந்தால் இப்படி மானம் கெட்டு ( ! ) தூக்கில்

தொங்காமல் எல்லா வெள்ளைக்காரன்களை எல்லாம்

'சொய், சொய்' என்று கத்திச் சண்டை போட்டு அவர் மீண்டும்

பாஞ்சாலங்க்குறிச்சிக்கு போயிருப்பார் , தெரியுமா ? "


என்று கேட்ட மாதிரி சரத் குமாரின் மன நிலை

அப்போது இருந்திருக்கலாம் ...லாம்....லாம்...லாம் ! )  


' கட்டபொம்மன் ஜோக் ' சொன்னவர் :

சின்ன அண்ணாமலை !  )  
' முள்ளும் - மலரும் ' படப்பிடிப்பு - இது போன்ற

ஒரு சில  இலேசான சம்பவங்கள் தவிர வேறு

எந்த பெரிய பிரச்சனைகள்ள் இல்லாமல்

நன்றாகவே நிறைவடைந்தது ! ஆனால் பிரச்சனை

இனிமேல்தான் - அதுவும்

தயாரிப்பாளர் மூலம்தான் !


என்ன ஆச்சு ?மகேந்திரன் மேல் வைத்திருந்த அதீத நம்பிக்கையால்

தயாரிப்பாளர் வேணு செட்டியார் படப்பிடிப்புத் தளங்களுக்கு

வருகை தரமாட்டார் , படப்பிடிப்புகளிலும் தலையிட மாட்டார் !


அதுதான் பிரச்சனை ஆகிவிட்டது !


படம் முடிவடைந்து , ஒலிச்சேர்க்கை மற்றும் இதர தொழில்நுட்ப

வேலைகளுக்கு " டபுள் பாசிடிவ் "   பிரிண்ட்  ஸ்டுடியோவில்

வைக்கப் பட்டிருந்தது !


வேணு செட்டியார் , இயக்குநருக்குத் தெரியாமல் , விநியோகஸ்தர்

சிலரை  அழைத்துச் சென்று ஸ்டுடியோ வுக்குச் சென்று

'முள்ளும் - மலரும் '  ' டபுள் பாசிடிவ் '  பிரிண்ட் ஐ பார்த்துத்

தொலைத்தார் !


அவ்வளவுதான் !

' லபோ திபோ ' என்று கத்திக் கொண்டு தியேட்டரை விட்டு

வெளியெ வந்தார் !

இவர் படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதை ஸ்டுடியோ ஊழியர்கள்

மகேந்திரனிடம் தெரிவிக்க அங்கே உடனே வந்தார் மகேந்திரன் !

  செட்டியார் புலம்ப ஆரம்பித்தார் !     " போச் !   போச் ! எல்லாம் போச் !

அடப் பாவி ! மகேந்திரா ! என் தலையிலே மண்ணை அள்ளிப்

போட்டுட்டு விட்டாயே !

படத்திலே வசனமே இல்லையே !

அங்கே ஒண்னு , இங்கே ஒண்ணு வசனம் கிடக்கு !

படமா எடுத்திருக்கே , படம் ! "


மகேந்திரன் , செட்டியாரிடம் என்ன சொன்னார் ?

குச் நஹி ! குச் நஹி கஹா !

அத்தான் -  ஒண்ணுமே பதிலே சொல்லவில்லை !

மகேந்திரனுக்கு நன்றாகவே தெரியும் , செட்டியார் அரற்றுவதில்

நியாயம் இருக்கின்றது !

என்ன நியாயம் ?   செட்டியார் , ஒரு ' வணிக வியாபாரி ! '

அவர் மசாலாத்தனமான படங்களைத்தான்

எதிர்ப்பார்ப்பார் !

'அட்லீஸ்ட் '  மகேந்திரனின்  ' நிறை குடம் ' படம் மாதிரி

மசாலாத்தனமாதிரியான  படத்தைத்தானே எதிர்ப்பார்த்தார் !    பைத்தியம்" பரோட்டா - பெப்பர் பாயா "   கேட்டவருக்கு

" ஜெயின் சாம்பார் - இட்டிலி "  யை அவர் முன்

வைத்தால் ?    எனவே மகேந்திரன் 'கம் ' என்று இருந்து விட்டார் !

      இதற்கு அப்புறம்தான் நான் முன்பு

சொன்ன அந்த ' டிரைலர் ' செய்தி நடந்தது !


 கிட்டத்தட்ட  படம் வெளிவரும் நிலை !

தயாரிப்பாளர் செட்டியாருக்கோ ' சேஷ வான்  பிரைடு  ரைஸ் ' ஐ

தண்ணீர் இல்லாமல் , (  டோமொட்டோ சாஸ் கூட இல்லாமல் ! )

சாப்பிட்ட மாதிரியில் இருந்தார் !     கமல் , ' முள்ளம் - மலரும் '  படம் பார்த்தார் !        கமல் சொன்னார் : 
   ' மகேந்திரன் படம் மிக நன்றாக இருக்கிறது ,

நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு

இருக்கிறது !


ஆனால் ஒரு குறை :

இந்த படத்தில் ஷோபாவும் சரத் பாபுவு நேரிடையாக ஒரு சந்திப்பும்

இல்லாமல் , பழக்கமும் இல்லாமல் , :

' செந்தாழம் பூவில் ' பாடலில் சந்தித்துக்கொள்வதாக ஆரம்பிக்கின்றதே !
எனவே சிறிது அறிமுகம் ஏற்பட்டு பின்னர் பாடல்

ஆரம்பித்தால் நலம் ! "
 கமல் சொன்னதைக் கவனித்த மகேந்திரன் , அவர்

சொல்வதை ஏற்றுக்கொண்டார் !


ஆனால்........


" எப்படி கமல் !  இப்போவே தயாரிப்பாளர்

என்னைப் பார்த்து சீறுகிறார், மறுபடியும் படப் பிடிப்பு

என்றால் அவர் வெகுண்டு எழுவாரே ! "
கமல்,  ' நான்  செட்டியாரிடம் பேசிப் பார்க்கிறேன் !

அவர் சம்மதித்தால் நலம் ! "  

என்றார் !    ஆனால் வேணு செட்டியார் கடுப்பு ஆகி

விட்டார் !


" ஏற்கனவே படம் கந்தலாக உள்ளது !

இந்தஅழகில் மறுபடியும்  ' ரிஷூட் '  பண்ண என்னால்

முடியாது ! "


என்றார் !   ' இல்லை ஐயா !

இந்தபடம் :

ரஜினிக்கு ,

மகேந்திரன்னுக்கு ,

பாலுமகேந்திராவுக்கு ,

மற்ரும்

இளையராஜாவுக்கு

ஆகியோருக்கு மிகப் பெரிய " பிரேக் '  கிடைக்கப்

போகிறது !  எனவே நீங்கள் உதவி செய்ய வேண்டும் ! "  

 செட்டியார் சொன்ன ஒரே பதில் :


" நோ ! "   ஒரு கணம் யோசித்த பின்னர் கமல் , செட்டியாரிடம்

சொன்னார் :


" நீங்கள் ஆட்சேபனை எதுவும் சொல்லவில்லை என்றால்

இந்த படப்பிடிப்புக்கான செலவை நானே செய்து கொள்கிறேன் ,

என்ன சொல்கிறிர்கள் ? " செட்டியார் , கமலை வெறித்துப் பார்த்தார் !

பின்னர் சொன்னார் :


' சரி , என்ன வேனும்லானும்  செய்து கொள்ளுங்கப்பா ! "
 
   செட்டியார் - மனதிற்குள் :


" இந்த கமல் கூட சரியான 'மெண்டல் ' போலிருக்கு !   சிரி சிரி

   'சத்யா  ஸ்டுடியோ ' வில் ஒரு தோட்டத்தில்

ஷோபா , பாலு மகேந்திரா , சரத் மற்றும் துணை நடிகைகளை

அழைத்து வந்து படப்பிடிப்பை  முடித்தனர் !  எல்லாம்

கமல்   தந்த  பணம் தான் !

இன்றைய  மதிப்பில்  கமல் அந்த  படப்பிடிப்புக்கு  ரூபாய்

10 லட்சம ஆகக் கூடஇருக்கலாம் !

       ' முள்ளும் - மலரும் '

படம்  'ரிலீஸ் 'படம் வெளியானது !


முதல் 3 வாரங்கள் ......மக்கள் படத்தை பார்த்தனர் -

மெளனமாக  கலைந்து போயினர் !" படம் எப்படிப்பா இருக்கு ? "

என்று  படம் பார்க்க வந்தவரகளைக்  கேட்டால் :


" நினைத்தாலே  இனிக்கும் "  படத்தில்  நாயகி  ஜெயபிரதா

தன் முகத்தை :

கிழக்கு - மேற்கு

வடக்கு - தெற்கு

என்று ,மாறி - மாறி தலையை ஆட்டி கமலையும்

( அத்தோடு நம்மையும் ! )    கடுப்படித்த மாதிரி ஒரு 'ரியாக்ஷனும் '

வெளிக்காட்டாமல் சென்றனர் !


   பதறிவிட்டார்கள் மகேந்திரனும்

கமலும் !   செட்டியார் :


" அவ்வளவுதான்பா ! படம் படுத்துச்சி !  ஊத்திடுகிடுச்சி !

தேறாது !

அத்தோடு நம்ம கதையோ முடிஞ்சு போச்சு ! "


என்றார் !   
 ரஜினி :


" எனது நடிப்புக்கு ஒரு திருப்பி முனையாக அமையும்

இந்த ' முள்ளும் - மலரும் '   படம் !

எனவே இந்த படத்திற்கு இன்னும்

'பப்ளிசிடி '

வேண்டும் ! "

என்றார் !
 அதற்கு செட்டியாரின் பதில் என்ன தெரியுமா ! ?

   " ஓடாத படத்திற்கும்

'பப்ளிசிடி ' தேவை இல்லை !


ஓடுகின்ற படத்திற்கும்

'பப்ளிசிடி ' தேவை இல்லை ! "
     அனைவரும் நொந்து போனார்கள் !   அப்புறம் நடந்தது

தமிழ்த் திரைப்பட

உலகை திருப்பிப்

போட்டது !        ' முள்ளும் - மலரும் ' திரையிட்ட

தியேட்டர்களில் நான்காவது வாரம் முதல் படம்

வெற்றி !


தியேட்டர்களில் மகிழ்ச்சி ஆரவாரம் !

கைத்தட்டல் ஓசை !

எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் !


' முள்ளும் - மலரும் ' படம் வெற்றி !

பாராட்டு மழை !

படம் 100 நாட்கள் வரை அவை ஓயவில்லை !     வேணு செட்டியார் வாயடைத்துப் போய்விட்டார் !

நேரே மகேந்திரன் விட்டுக்குச் சென்றார் !

மகேந்திரா !  என்னை மன்னிச்சிடுப்பா! பிளீஸ் !

உன் மேலே நான் ரொம்ப கோவிச்சுபுட்டேன்!

இந்தா " பிளாங்க்க் செக் ! '

எவ்வளவு வேணும் என்றாலும் எழுதிக்கோ !

, எடுத்துக்கோ , மகேந்திரா ! "     மகேந்திரன் அந்த 'செக்'  ஐ வாங்கி

பின்னர் செட்டியாரிடம் திருப்பிக் கொடுத்தார் !


சொன்னார் :


" இப்படி ஒரு வித்தியாசமான படத்தை இயக்க

நீங்கள் கொடுத்த இந்த சந்தர்ப்பமே

1000 கோடிக்கு சமம் !

இதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ! "   மகேந்திரன் ஒரு

நல்ல படைப்பாளி

என்பதற்கு இந்த

சம்பவம் ஒன்றே

போதும் !
 
 
      ரஜினி :" நான் நடித்த படங்களிலே எனக்கு மிகவும்

பிடித்த படம் :

" முள்ளும் - மலரும் " ! மலேசிய நாட்டில் 'சண்' டி. வி விழாவில் ரஜினி !
 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

     ' வால் துண்டு !'

அத்தான் -

TAIL   PIECE  !  


   
 மகேந்திரனும் இசையமைப்பாளர் இளையராஜாவும்

'முள்ளும் - மலரும் ' படத்தை மக்கள் எப்பரி ரசித்துப்

பார்க்கிறார்கள் என்பதை அறிய ஊர் ஊராக சென்றனர் !

சேலம் !

அந்த ஊரில் ஒரு தியேட்டரில் 'முள்ளும் மலரும் ' படம்

மிகவும் ' ஹவுஸ் புல்' காட்சிகளாக ஓடியது !

மகேந்திரனுக்கு இந்த செய்தி வியப்பாக இருந்தது !

நேரே தியேட்டருக்கு சென்றார் , அவருடன் இளையராஜா!

தியேட்டர் அதிபர் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு

படத்தைப் பார்க்க அழைத்தார் !

படத்தை மகேந்திரனும் , இளையராஜாவும் பார்த்தனர் !படத்தைப் பார்த்த மகேந்திரனுக்கு அதிர்ச்சி !

என்ன ஆச்சு ?

படம் 6 ஆவது  ரீல் ஓடும் போது  .....

ரஜினி லாரியில் அடிபடுவார் ........

ரஜினி துடிப்பார் .....

மக்கள் துடிப்புடம் 'ரஜினிக்கு என்ன ஆச்சு ? '

என்கிற பதைப்புடன் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர் !

அப்போது ......7 ஆவது ரீல் தொடக்கம் ......

அப்போது பார்த்து .....


" இடை வேளை"     'கார்டு '  போட்டு மக்களை

'டென்ஷனில் ' தவிக்க விட்டு விட்டுருப்பதை

மகேந்திரன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் !


காரணம் ?

மகேந்திரன் , படத்தின் இடைவேளை யை 9 ஆவது

ரீலில்  அமைத்து வைத்தார் !

அதனை மாற்றி 6 ஆவது ரீலில் இடை வேளை ஐ சேலத்தில்

( மட்டும் ! )   விட்டிருந்தனர் !


படம் முடிந்தது ! நேரே தியேட்டர் அதிபரைப் பார்த்தனர்

மகேந்திரனும் இளையராஜாவு ம்!

" என்ன இப்படி இடைவேளை விஷயத்தை உங்கள் இஷ்டப்படி

வைத்திறுக்கிர்களே! "

என்று கேட்க .....

தியேட்டர் அதிபர் மிகக் 'கூலாக '   சொன்னது :" எங்க தியேட்டர் ஆபரேட்டர் பையன் ரொம்ப புத்திசாலி சார் !

மக்கள் , லாரியில் அடிபட்ட ரஜினி பிழைத்தாரா இல்லையா

என்கிற டென்ஷனில் வைத்து 'இடை வேளை ' விட்டால் , இடைவேளைக்கு

அப்றபும் படத்தின் எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகம் ஆகும் !

இடைவேளைக்கு அப்புறம் ரஜினிக்கு ஒரு கை மட்டும்

போய்விட்டது என்று தெரிந்து ஆறுதல் அடைகிறார்கள்பாருங்கள், அதுதான் ( அத்தான் ! )    படத்தின் வெற்றிக்கு

காரணம் ! "


மகேந்திரன் வாயடைத்து பேசாமல் இருந்தார் !
( நம்ம ( ! )   விஜயகாந்த் அங்கே இருந்திருந்தால் அந்த

தியேட்டர் அதிபரை ஒரு 'பளார் ' விட்டுருப்பார் இல்லே ! )

அப்புறம் என்ன !

அங்கே, பக்கத்தில் இருந்த இளையராஜா பாட ஆரம்பித்தார் !

என்ன பாட்டு தெரியுமா ?

"  நமக்கும் மேலே ஒருவனடா !

அவன்   நாலும்   தெரிந்த தலைவனடா !

தினம் நாடகம் ஆட்டும் கலைஞனடா !   "  

உங்கள் கருத்து ?
   %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
       அடுத்த கட்டுரை :
    எனக்குப் பிடித்த

திரைப்படப் பாடல் :" யார் அந்த நிலவு ,

என் இந்த கனவு ? "


(  படம் : " சாந்தி " ( 1965 )   )

நடிகர் திலகத்திற்கும்

பாடலை உருவாக்கியவர்களுக்கும்

( டி எம் எஸ் - கண்ணதாசன் - மெல்லிசை மன்னர்கள் )

இடையே உருவான

ஆரோக்கியமான போட்டி !எம்கே ஆர் சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jul 15, 2014 5:27 pm

முள்ளும் மலரும் படத்தில் நடித்த அந்த அருமையான நடிகை ஷோபா ஏன் தற்கொலை செய்து கொண்டார்? தெரிந்தால் சொல்லுங்களேன் டாக்டர் சார்.  அன்று ஒரு முறை இந்தப் படத்தைப் பார்த்த எனது மலாய் நண்பர், மொழி விளங்காவிட்டாலும் ஷோபாவின் அழகில் மயங்கிப் போனார், அப்படி ஓர் இயற்கை அழகை
தன்னுள் கொண்டிருந்தவர் ஷோபா.

முள்ளும் மலரும் இங்கே இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=pRBZiCprjFY

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by rksivam on Wed Jul 16, 2014 5:49 pm

ஐயா,

பொன்னியின் செல்வன் திரை கதையை மற்றும் வசனங்களை ஜான் மகேந்திரன் பூர்த்தி செய்யாமலே போனதாகவும் வெகு நாட்கள் புரட்சி நடிகர் அவருக்கு சம்பளம் அளித்ததாகவும் தூர்தர்ஷனில் ஒரு பேட்டியில் சிலவருடங்கள் முன்பு சொல்லியிருந்தார்.

சரியான நடிகர் கூட்டம் கிடைக்காததாலும் தயாரிப்பு செலவு, தயாரிப்பாளர் முன்வராமை, திமுக கட்சிப்பணி காரணத்தினால் நேரமின்மை ஆகிய பல காரணங்களினால் பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்க முடியவில்லை. இப்போது அந்த கதையின் உரிமை கமலஹாசனிடம் இருப்பதாக செய்தி.

சிவம்
avatar
rksivam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by pon.sellamuththu on Thu Jul 17, 2014 4:02 pm

ஈகரை நிறுவனர் திரு.சிவா அவர்களுக்கு அன்பு வணக்கம்.
“பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !”
என்ற இந்த இழையின் ஒவ்வொரு பக்கத்திலும்
“First topic message reminder “ தேவையில்லை என்பது எமது கருத்து.
புதிய நண்பர்கள் இப்பகுதியை பார்க்கும் போது சற்று குழப்பமடைய
வாய்ப்புள்ளது. மேலும் இடமும் விரயமாகிறது.அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து
avatar
pon.sellamuththu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum