உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by சிவனாசான் Today at 9:43 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Today at 8:46 am

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:34 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Yesterday at 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Yesterday at 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Yesterday at 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Yesterday at 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 6:34 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Yesterday at 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Yesterday at 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Yesterday at 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Yesterday at 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Yesterday at 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Yesterday at 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:21 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:20 pm

» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:16 pm

» பால்காரருக்கு வந்த சோதனை...!!
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:15 pm

» மனிதாபிமானம்
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:06 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 9:01 pm

» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:48 pm

» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்? சரத் பவாா் கேள்வி
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:34 pm

» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:26 pm

» நெகிழ்ந்த நிமிடம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:14 pm

» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:59 pm

» கவனமாக செயல்படுங்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:52 pm

» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்!
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:50 pm

» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:45 pm

» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?
by T.N.Balasubramanian Tue Apr 07, 2020 6:59 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by ROWAN01 Tue Apr 07, 2020 6:46 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by சக்தி18 Tue Apr 07, 2020 6:34 pm

» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம்
by சக்தி18 Tue Apr 07, 2020 6:28 pm

» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Tue Apr 07, 2020 6:10 pm

» பாவம் போக்கும் பரிதிநியமம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:35 pm

» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:33 pm

Admins Online

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை
அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by veeyaar on Fri May 30, 2014 7:17 am

டாக்டர் சார்
தங்களுடைய ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உழைப்பு, நேரம், அதற்காக தாங்கள் செலவிடும் தங்கள் அறிவு, திறமை அனைத்துமே ஈடு இணையற்றவை. தங்களுக்கு பாராட்டுக்கள் என்பது மிகச் சாதாரணமானது. அவற்றையெல்லாம் தாண்டி அண்ணாந்து வியந்து பார்க்கும் உயரத்தில் உள்ளீர்கள் என்பதே உண்மை.
அன்புடன்
ராகவேந்திரன்
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மதிப்பீடுகள் : 28

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by சிவா on Fri May 30, 2014 9:18 am

இனிமேல் எனக்கென்ன கவலை பாடலைப் பதிந்த விதம் அறிந்து சத்தமாகச் சிரித்துவிட்டேன்! அருமை!  சிரி சிரி 

இங்கே  இருக்கிறது  ஒரே  சூரியன் தானே ! அதென்ன புதிய சூரியன், பழைய  சூரியன் ? "

அதானே, சரியான கேள்விதான்!

அதற்கு சமாளித்த விதமும் அழகுதான்!

" நேற்று வந்தது  பழைய  சூரியன் ! இன்று  வந்ததோ  புதிய  சூரியன் ! "

பதிவின் இடையில் ஸ்ரேயா கோஷல் எப்படி நுழைந்தார்?

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 PhpaiVgDSypA6TkUXxmQ+1

இவர்தானே எம்ஜிஆரை  பிடித்துத்  தள்ளாத  குறையாகக் கடந்து போனவர்? யார் என்று எனக்குத் தெரியவில்லை!

நீங்கள் கேட்ட எனக்கென்ன கவலை பாடலை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!

http://eegarai.com/mp3/special/inimel_enakkenna_kavalai.mp3
9.29 MB

பாடலைக் கேட்க:


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 3FFQnqp1S4i22bYMqUdi+2
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by pon.sellamuththu on Fri May 30, 2014 12:52 pm

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
by mkrsantharam

" மச்சுலே குடியிருந்தா மவுசு என்னு எண்ணாதே !
குச்சியிலே குடியிருந்தா குறைச்சல் என்னு சொல்லாதே !
மச்சு - குச்சு எல்லாம் மனசிலேத்தான் இருக்கு!
மனசு நிறைஞ்சிருத்தான் மத்ததெல்லாம்
நிறைஞ்சிருக்கும் ! "
மச்சுக்கும் வந்து விட்டீர்கள், மனதும் நிறைவாக உள்ளது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.


அடுத்த கட்டுரை  தாயாராகிக் கொண்டிருக்கிறது...........
ஹி....ஹி....மன்னிக்கவும்
தயாராகிக்கொண்டிருக்கிறது
நகைச்சுவையுடன் எழுதப்பட்ட இந்த வரிகளிலும் ஒரு உண்மை பொதிந்துள்ளது. ஆமாம். தங்களின் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பிரசவத்திற்கு இணையானது என்றால் அது மிகையல்ல.


நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது !
தற்குறிப்பேற்ற அணியில் அமைந்த வாலியின் கைவண்ணம் அருமைதான்.


மக்களின் மனதில் நிற்பவர் யார்

நிச்சயம் டி எம் எஸ் தான்!
இது உறுதி செய்யப்பட்ட ஒன்று ( ஈகரை மக்களின் மனதில் தாங்கள் நிற்பது போல். )அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Jothiram on Sat May 31, 2014 8:20 pmஅன்புள்ள டாக்டர் சார்,

அருமையான தொகுப்பு, பலதெரியாத தகவல்கல், மிக,மிக,

சுவைபட எழுதுவது எல்லோராலும் இயலாது.அதுவும் தாங்கள்

மருத்துவராக பணிபுரிந்துகொண்டு!!!!!!!!

தொடருங்கள் படிக்க காத்திருக்கிரோம். திறமை அருமை,அபாரம்.

அன்புடன்
ஜோ (ஜோதிராம்)
Jothiram
Jothiram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 15/05/2014
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Jun 01, 2014 4:14 pm

@மாணிக்கம் நடேசன் wrote:அன்பே வா படத்தின் புதிய வானம் புதிய பூமி பாடல் பற்றிய உங்களது விளக்கம், சம்பவங்களை நேரில் நடப்பது போன்ற ஓர் உணர்வை தந்து விட்டது. அருமை டாக்டர் சார், மிக அருமை.  நவரசங்களுக்கான  உங்களது விளக்கம் உங்களது அயராத அற்பணிப்பை காட்டுகிறது. இப்படி ஒரு  தெளிவான செய்திகள் கிடப்பது அரிதான செயல். சிறப்பான தகவல்களை தந்து எங்களை அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி டாக்டர் சார்.  தங்களது அடுத்த பதிவினை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1066427    அன்புள்ள திரு  மாணக்கம் நடேசன் அவர்களுக்கு,                                                                                  கிடைத்த  கொஞ்சம்  " சைக்கிள்  நுழையும் 'கேப் "   இல்    'டக்'   என்று                                                                            என்னைப் பாராட்டி  ஒரு  தபாலை  'தபால்' என்று  போட்டுவிட்டீர்கள் !                                                                         நன்றி, ஐயா,  தொடர்ந்து படியுங்கள் !                                                                                                                                        எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Jun 01, 2014 4:40 pm

@veeyaar wrote:டாக்டர் சார்
தங்களுடைய ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உழைப்பு, நேரம், அதற்காக தாங்கள் செலவிடும் தங்கள் அறிவு, திறமை அனைத்துமே ஈடு இணையற்றவை. தங்களுக்கு பாராட்டுக்கள் என்பது மிகச் சாதாரணமானது. அவற்றையெல்லாம் தாண்டி அண்ணாந்து வியந்து பார்க்கும் உயரத்தில் உள்ளீர்கள் என்பதே உண்மை.
அன்புடன்
ராகவேந்திரன்
மேற்கோள் செய்த பதிவு: 1066579                            

   அன்புள்ள  திரு. வீயார்  ஐயா!,                                                                                                                    

  தங்களின் பாராட்டுக்களுக்கு  நன்றி !                                                                                                                                

ஆனால்.......  எனக்கு தெரிந்ததை - படித்ததை  - மட்டும்  எழுதுகிறேன் ....அவ்வளவுதான்.                                


  எனவே......" அண்ணார்ந்து "   -  " வியந்து  பார்க்கும்  உயரம் "                                                                                        

 என்று எழுதவேண்டாம்.......நான் இப்போது  5'  6 "    தான்   ஐயா  இருக்கிறேன் .........

Could  Be    

                                   நீங்கள்  வேண்டுமானாலும் என்னைக் கொஞ்சம் 'தள்ளி நின்று '   சிறிது  கண்களை

                                             உயர்த்தி  என்னைப் பார்க்கலாம் -  அஃது   உங்களது  உயரத்திற்குத்

 தான் ! குதூகலம்   

                                                           மற்றவர்கள் ?  

                                                                                                                                                                         


  " ஹார்லிக்ஸ்"   மாதிரி   'அப்படியே '   சா....இல்லே....பார்த்துவிடலாம் !   சிரி சிரி                     


  நன்றி, திரு. வியார்  ஐயா !                                                                                                                                                          


 எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Jun 01, 2014 5:41 pm

   அன்புள்ள திரு. சிவா  அவர்களுக்கு !  

  தங்களின் மடலுக்கும் ,  பாராட்டுக்களுக்கும்    மிக்க நன்றி !  

வெறும் பாராட்டுக்கள் மட்டும் இல்லாமல் விமரசனங்களையும்  செய்துள்ளீர்கள் !

   அதுதான்.........தப்பு....தப்பு .......அத்தான்  (    புன்னகை  )   எனக்கு  வேண்டும் !

   
  இதோ  உங்களின் ' கம்மண்ட்ஸ்'  களுக்கு  என் பதில்கள் !  
        
  மற்றவர்கள்  - ( டி எம் எஸ்  ஓர்  எடுத்துக்காட்டு ! )   பாடினால்
   
தமிழ் !  

   சுரையா போன்றவர்கள் பாடினாள்......

        தமில் !     இப்படி  நான் எழுதியதால்  ' சுரையா ( குரல் )  ரசிகர்கள் தயவு செய்து

 என்னிடம் கோபித்துக் கொ
ல்லகூடாது  ! சோகம்  %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%     பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 EfEt8zQ7Cq67fvE7fQTg+1
 ஒருவரும்  சரியான  விடை  சொல்லாதது  சற்று

வருத்தமாகத்தான்  உள்ளது !

   
      " வாஷிங்க்டனில் திருமணம் "  


,மிகப் பிரபலமான நகைச்சுவை  நாவல்

பின்னர்


மேடை நாடகம் - இதனை படைத்த  :


' சாவி '  !


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Syf4Z6ZRT8WTnhC5nMhe+229


                                            பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 L0ttDE4KTqmylsEnKd1C+savi 


 
  " அன்பே  வா " படம்  100  வது நாள் விழா  அன்று  இவர் - எழுத்தாளர் -

சா. விஸ்வநாதன் - " சாவி "   அங்கே  கூடியிருந்த  மக்களை  இப்படி

கேட்டார் :" அன்பே  வா " படம்   யார்  நடித்ததால் ஓடியது ? "


எல்லோரும் " எம்ஜிஆர்" என்றும்

"சரோஜாதேவி "

என்றும் பலவாறு  சொல்ல,

சாவியோ ....


" இல்லை, என்னால்தான் "அன்பே  வா "   100  நாட்களுக்கு மேல்

ஓடியது...ஏன் என்றால்  அந்த படத்தில்  நான்

" நடித்தேனே ! "


என்று  ஜோக்"கடித்தார் ! "  


சிவா  சார் !


" இனிமேல் எனக்கென்ன  கவலை "  அசல், சுத்தமான  பதிவு கொண்ட

பாடலைத் தந்தது  குறித்து  மிக்க மகிழ்ச்சி !

மிக்க நன்றி !


கேட்ட  பாடலைத் தர  நீங்கள்  இருக்கிறீர்கள்.....


இனிமேல் எனக்கென்ன  கவலை !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Jun 01, 2014 5:44 pm

 திரு. பொன் செல்லமுத்து  அவர்களுக்கு,


உங்கள் பாராட்டுக்களுக்கு  மிகவும் நன்றி !


தொடர்ந்து  படியுங்கள், ஐயா !எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Jun 01, 2014 5:51 pm

@Jothiram wrote:

அன்புள்ள டாக்டர் சார்,

    அருமையான தொகுப்பு,  பலதெரியாத தகவல்கல், மிக,மிக,

    சுவைபட  எழுதுவது எல்லோராலும் இயலாது.அதுவும் தாங்கள்

     மருத்துவராக   பணிபுரிந்துகொண்டு!!!!!!!!

     தொடருங்கள்    படிக்க காத்திருக்கிரோம். திறமை  அருமை,அபாரம்.

     அன்புடன்
     ஜோ  (ஜோதிராம்)  
மேற்கோள் செய்த பதிவு: 1066925                                                                                                                                                                                                            அன்புள்ள திரு. ஜோதிராம்  அவர்களுக்கு !                                                                                                                                தங்களின்   முதல் பதிவிலேயே  என்னைத்  தெரிவு  செய்து                                                                               கடிதம் எழுதியது  குறித்து  மிக்க  மகிழ்ச்சி !                                                                                                                                     உங்களின்  பாராட்டுக்களுக்கும் மிக்க  நன்றி !                                                                                                                          தொடர்ந்து  படியுங்கள் !                                                                                                                                                                             எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jun 02, 2014 11:01 am

அன்பான டாக்டர் ஐயா, உங்களது இந்த அழகான, அருமையான பதிவுகளையும் படங்களையும் ஒரு புத்தகமாகவே பிரசுரிக்கலாம். அவ்வளவு அரிய தகவல்கள் அடங்கி இருக்கிறது. உங்களால் எங்களுக்கு இது வரை கிடைத்த தகவல்களை எனது சேமிப்பில் வைத்திருக்கிறேன். எல்லாவற்றையும் அச்சிட்டு முடிந்தால் உங்களுக்கும் ஒரு நகல் தர முயற்சிக்கிறேன். அற்புத தகவல்களுக்கு நன்றி மலர்கள் ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4393
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1342

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by udayarr on Fri Jun 06, 2014 2:04 pm

அன்புள்ள டாக்டர் சார்,

வழக்கம் போல நகைச்சுவை மிக்க, வண்ணமயமான கறுப்பு வெள்ளைத்தொடரை ஈகரையில் துவங்கியிருக்கிறீர்கள்! பாராட்டுகள்.. உங்களை ஈகரைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்கள் தொடர்கள் அனைத்துமே தகவல் களஞ்சியங்கள் தான் !.. இங்கேயும் உங்கள் எழுத்தாட்சி தொடர விழைகிறேன்..

அன்போடு..
உதயா
ஜெய் வானொலி தமிழ் பண்பலை
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
மதிப்பீடுகள் : 26

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sat Jun 07, 2014 4:15 pm

@udayarr wrote:அன்புள்ள டாக்டர் சார்,

வழக்கம் போல நகைச்சுவை மிக்க, வண்ணமயமான கறுப்பு வெள்ளைத்தொடரை ஈகரையில் துவங்கியிருக்கிறீர்கள்! பாராட்டுகள்.. உங்களை ஈகரைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்கள் தொடர்கள் அனைத்துமே தகவல் களஞ்சியங்கள் தான் !.. இங்கேயும் உங்கள் எழுத்தாட்சி தொடர விழைகிறேன்..

அன்போடு..
உதயா
ஜெய் வானொலி தமிழ் பண்பலை
மேற்கோள் செய்த பதிவு: 1067870   திரு . உதயா அவர்களுக்கு !

தங்களின் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி !

உங்களைப் போன்ற  ரசிகர்களால் தான் , நான் மென் மேலும்

எழுதவேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது என்பது

மறுப்பதற்கில்லை !


மிக்க நன்றி , திரு . உதயா அவர்களே
 
      இன்னும் சில மணி நேரங்களில்

பாகவதரும் , சின்னப்பாவும்

உங்களை சந்திக்க வருகிறார்கள் !

எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by சிவா on Sat Jun 07, 2014 4:44 pm

திரு சாவி குறித்து அறியத் தந்தமைக்கு நன்றி! நான் பழைய படங்கள் பார்ப்பேன், ஆனால் நடிகர்களில் முக்கியமானவர்களை மட்டுமே தெரிந்து வைத்துள்ளேன். மற்றவர்கள் பற்றி தெரியாது! இப்பொழுது உள்ள படங்களிலும் இதே நிலைதான்!

கேட்ட பாடலைத் தர நீங்கள் இருக்கிறீர்கள்..... இனிமேல் எனக்கென்ன கவலை !

உங்களிடம் இல்லாத பாடல்களா என்னிடம் இருக்கப் போகிறது?

ஆனால் இங்கு நீங்கள் கேட்ட பாட்டையே நான் திரும்பத் தந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்! அப்படித்தானே!  சிரி சிரி சிரி 


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Jun 08, 2014 7:21 am

@சிவா wrote:திரு சாவி குறித்து அறியத் தந்தமைக்கு நன்றி! நான் பழைய படங்கள் பார்ப்பேன், ஆனால் நடிகர்களில் முக்கியமானவர்களை மட்டுமே தெரிந்து வைத்துள்ளேன். மற்றவர்கள் பற்றி தெரியாது! இப்பொழுது உள்ள படங்களிலும் இதே நிலைதான்!

கேட்ட  பாடலைத் தர  நீங்கள்  இருக்கிறீர்கள்.....   இனிமேல் எனக்கென்ன  கவலை !

உங்களிடம் இல்லாத பாடல்களா என்னிடம் இருக்கப் போகிறது?

ஆனால் இங்கு நீங்கள் கேட்ட பாட்டையே நான் திரும்பத் தந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்! அப்படித்தானே!  சிரி சிரி சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1068074
  தங்களின் பதிலுக்கு என் நன்றி !


அடுத்த கட்டுரையில் உங்கள்  பெயரையும்

' இழுத்துப் போட்டுள்ளேன் ' !

கவனித்துப் படியுங்கள்  புன்னகை 
எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Jun 08, 2014 7:36 am

தொகுப்பு எண் - 3

எம். கே. தியாகராஜ பாகவதர் ரசிகர்கள் -


Vs


பி . யு . சின்னப்பா ரசிகர்கள் !

" டிஷ்யூம் - டிஷ்யூம் " சண்டை !

'மசாலா ' தடவிய ஜாலி ரிப்போர்ட் !தமிழ்த் திரைப் பட வரலாறில் எழுதப்படாத ஒரு

விதி ( ! )

ஒன்று உள்ளது !


அது என்ன தெரியுமா ?
'அன்று முதல் இன்று வரை '

தமிழ்த் திரைஉலகை எப்போதும்

இரண்டிரண்டு பேர்கள்

பெரும்பாலான திரைஉலகை தங்கள் பக்கம்

'ஆக்கிரமித்துக்' கொண்டிருப்பார்கள் !

" எப்படி ஐயா, சொல்கிறீர்கள் ?

என்றா கேட்கிறீர்கள் ?( உங்களை வம்பில் மாட்டிவிட சில சமயங்களில் இப்படி

ஏடாகூடமாக கேட்டுத் தொலைப்பேன், ' அட்ஜஸ்ட்'

பண்ணிக்குக்கோங்கோ ! )
இதோ , இந்த புகைப்படங்களையும்

நடிகர்களின் பெயர்களையும் ' உற்று ' ப்பாருங்கள்,

உங்களுக்கு தெளிவாகும் !


தற்போது :சிவகார்திகேயன் :
விஜய சேதுபதி !பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 WgKIrT3TiCZqMns1KF6w+Sivakarthikeyan
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Mbuj4X3JSM26ARoYsjBt+Vijay-Sethupathi-gearing-up-for-another-thriller-drama' சற்று' முன்பு !
தனுஷ் :

சிம்பு !பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 8LybjPdHRAm8ZoXH9P8H+Dhanush-Latest-Pictures-And-Wallpapers2
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 ZkhRxMTxSjegbEMYgXu7+d5e3b69f1c5f41b980629959959d0a06

அதற்கு முன்பு !
'இளய தளபதி ' விஜய் !
'தல' அஜித்!

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 IywI0NPGSyy2s7EncqlH+231941-joseph-vijay
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 YC49LIyrTRmzncXtrum2+ajith-kumar-sexy-photos-0178
அதற்கும் முன்பு !

'இளய திலகம்' பிரபு !
( முத்துராமன் ) கார்த்திக் !பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 BsUpWgf8SZ6FOORGYN6z+2008091250810102
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 9lXVr2KaS4SjJhO2ct9o+karthick

அப்போதும்- இப்போதும் !

'சூபர் ஸ்டார்' ரஜினி !
'உலக நாயகன் ' கமல் ஹாசன்!பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 VfP7KVuSXiOU3zJaINyV+rajini-velaikaran
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 3SXdR1DSgaU8vBDWh9QS+kamal_hassan_860 களின் பிற்பகுதி - 70 களின் முற்பகுதி !

' மக்கள் கலைஞர் ' ஜெய்சங்கர் !
'சின்ன எம்ஜிஆர்' ( ! ) ரவிசந்திரன்!
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 0Y82VeJlSX2plvkVxZ4q+Nangu-Suvargal-1971-Tamil-Movie-Watch-Online
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 LwbWsPEgSKmoFgvizxCI+cinedoorஎன்றும் - எப்போதும் !

' மக்கள் திலகம் ' எம்ஜிஆர் !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 5GNttRQJSc2I7RVF3ZW2+mg_ramachandran
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 NzgYot1iQouzuD4qAEDU+Vasantha_Maligai_Movie_Stills644c3d417cc6f28600eb658a73ecbbf7


அதற்கும் முன்பு .....

'ஆதி காலத்தில் ' !
முதல் சூபர் ஸ்டார்- எம் கே தியாகராஜ பாகவதர் !
'சகலகலா வல்லவர் ' பி .யு சின்னப்பா !
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 CW5uVXrRTGmFVzUNhTrj+4c9bdb3237954eba6bf38c8836767639_m
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 RQ3YLhQe2M1xdbL3Kqdw+P.U.-Chinnappa-1916-1951
இப்போது உங்களுக்கு புரிகிறதா இந்த இரட்டையர்களின்

' மகாத்மியம் ! '


பாகவதர் - சின்னப்பா - இவர்கள்

எப்படிப்பட்டவகள் ?

எம் கே டி பாகவதர் :
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 0WlZsE2iTZeugWT7sdvQ+DSC07119
1. பொன்னிற சட்டை, கழுத்தைச் சுற்றி ஜொலிக்கும் அங்கவஸ்திரம்,

காதில் மின்னும் வைரக் கடுக்கன் கள்,

கையில் வைர மோதிரம் !

நெற்றியில் அழகான ஜவ்வாதுப் பொட்டு சகிதம்,...

வெற்றிலையை மென்ற வாறு நடப்பார் !
2. அவர் சாப்பிட பயன்படுத்துவது தங்கத் தட்டுதான் !

அந்த தட்டு எப்படியும் 100 பவுன் கள் இருக்கும் !

இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத் தட்ட ரு. 2.25 கோடி

இருக்கலாம் !

3. பாகவதர், தன் பாடும் திறமையாலும், அழகினாலும்

அந்த கால ரசிகர்களை - குறிப்பாக ரசிகைகளை மிகவும் கவர்ந்தார் !

4. இவரின் திரைப்படப் பயணம் 1934 ஆம் ஆண்டில்

தொடங்கியது ! ( பேசும் சினிமா வந்ததே 1931 ஆம் ஆண்டில் தான் -

தமிழில் ! )

" பவளக் கொடி " - கே . சுப்பிரமணி , நாடகத்தில் நடித்து வந்த

பாகவதரை முதன் முதலாக இந்த திரைப்படத்தில் அறிமுகம்

செய்தார் !

5. 1934 ஆம் ஆண்டில் தொடங்கிய பாகவதரின் சினிமா

வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகம் தான் !

அவர் நடித்த எல்லா படங்களும் 'ஹிட்' ஆயின!

பாடல்களும் 'ஹிட்' ஆயின!

எதுவரை ?


1944 ஆம் ஆண்டு - ' ஹரிதாஸ்' வெளியாகி , பாகவதர்,

'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் '

கைதாகும் வரை !
6. " சரி, அது என்ன . " லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு ? "

என்கிறீர்களா ?

சொல்றேன்.......ஆனா.......அதைப் பற்றி விரிவாக சொல்லப் போனால்

இந்த கட்டுரையின் தலைப்பையே மாற்ற வேண்டி வரும் !

அந்த 'மேட்டர்' அத்தனை பெரியது...அது மட்டுமல்ல...மிகவும்

ஆவலைத் தூண்டக்கூடியது !

எனவே அதனை " ஓரம் கட்டி " தனியே 5 அல்லது 6 பகுதிகளை

உடைய தொகுதிகளை வைத்து எழுதுகிறேன் !


இப்போது நான் சொல்ல வந்தது...


'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் ' பாகவதர் கைதான போது

அவரின் திரைப்பட வாழ்க்கையில் " இறங்கு முகம் " தான் !
பி . யு . சின்னப்பா .:
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 05qzobdvS6W45uoEGtsJ+P.U.-Chinnappa-1916-1951

1. 'அந்த கால கருப்பு நாயகன் பி யு சின்னப்பா !

கருத்த மேனி, குண்டு உருவம் , 'பீடி' குடிக்கும் பழக்கம்

உடையவர் !

குட்டையான உருவம் !
2. ஆனால் பாடினால் ?

மிக மிக நன்றாக பாடுவார் !


நடிப்பில் ?

சிவாஜி கணேசனுக்கும் முன்னோடி !

" நவராத்திரி' யில் சிவாஜிக்கு 9 வேடங்கள் - 1965 ஆம் ஆண்டு !

" ஆர்ய மாலா " படத்தில் சின்னப்பா வுக்கு 10 வேடங்கள் - 1941 ஆம் ஆண்டு !


சண்டைக் காட்சியில் ?


எம்ஜிஆருக்கும் சீனியர் !

மல்யுத்தம், குஸ்தி, வாட்சண்டை, சுருள் பட்டை வீச்சு,

கம்பு சண்டை - இவைகளில் வல்லவர் !
3. இவரின் சினிமா வாழ்க்கை 1936 ஆம் ஆண்டில்

தொடங்கியது ! ' சந்திரகாந்தா ' என்கிற படம் !

" சுண்டூர் இளவரசன் " என்கிற வேடத்தில் வெளுத்துக் கட்டினார்!
4. 1936 ஆம் ஆண்டில் தொடங்கிய இவரது சினிமா

வாழ்க்கை 1951 ஆம் ஆண்டு அவர் அகால மரணம் அடைந்த

பிறகு முடிவடைந்தது !

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


சரி, பாகவதர் - சின்னப்பா

ரசிகர்கள் எப்படி ?

பாகவதரின் ரசிகர்கள் !


1 .. 1934 ஆம் ஆண்டு 'பவளக் கொடி ' தொடங்கி பாகவதருக்கு ரசிகர்கள்

பட்டாளம் தான் !!

' பாகவதர் முடி ' - இது பற்ற்றி உங்க்களுக்குத் தெரியுமா ??


அது என்ன்ன ' பாகவதர் முடி ? "


ஒண்ணும் பதில் சொல்ல ' முடி'யாட்த கேள்வி அல்ல இது !

" சலூன் " க்கு போகாமல் இருந்தால் உங்கள் முடிக்கு

நேரும் " கதி " தான் ' பாகவதர் முடி ! "

பாகவதார் 'பீல்ட்' டுக்கு வந்த போது நிறைய தமிழர்களுக்கு

பாகவதர் முடிதான் !
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 XR0UKbs3SqlL7MYTBRLi+image

2. ஒரு தடவை ஓர் ஊரில் நாடகம் நடத்த போனார் பாகவதர்.

நாடகம் முடிந்து வெளியே வந்த பின்னர் ,, ஒரு ரசிகரை சந்தித்தார்.

அவர் பையில் இருந்து புத்தம் புதிய சீப்பு ஒன்றைக் பாகவதரிடம்

கொடுத்து, :


" பாகவதரே ! உங்களின் தலையை இந்த புதிய சீப்பால்

வாரிக்கொள்ளுங்கள்ள் ! "என்று கேட்டுக்கொண்டார் !"" சரி ! நம்ம தலைமுடி கலைந்திருக்கிறது போலும் !

எனவே இந்த ரசிகர் நம் தலை முடியை இந்த புதிய

சீப்பால் வாரச் சொல்கிறார் ! "


என்று நினைத்து எம்கேடி பாகவதர் தன் தலை முடியை அந்த

புதிய சீப்பால் வார்ர்ர்ர்ர்ரிக்கொண்டார்!


அப்புறம் நடந்ததுதான் தமாஷ் !
பாகவதர் வாரி முடித்தவுடன் அந்த சீப்பை பாகவரிடம் பிடுங்காத குறையாக

வாங்கி தன் பையில் போட்டுக்கொண்டார் !


அப்புறம், அந்த ரசிகர் தன் பையில் இருந்து

தன் கைகளைத் துழாவி இன்னொரு


" கேவலமான " ' பொக்கை ' மற்றும் ' மொக்கை ' சீப்பு


எடுத்து பாகவதரிடம் காட்டினார் !


" இது என்ன தெரியுமா, பாகவதரே ? " என்றாராம் அந்த ரசிகர் !


திரு. பாகவதர் , " திரு " திரு" என்று முழிக்க அந்த ரசிகரே பதில் சொன்னாராம் !

........சொல்லட்டுமா.... !


" இந்த பழைய சீப்பு போன வருடம் நீங்கள்

பொள்ளாச்சிக்கு வந்த போது வாரின சீப்பு ! "
இப்படி " சீப்பா" ன ரசிகர்கள் அப்போது பாகவதருக்கு உண்டு !

3. பெண் ரசிகைகள் ?

என்ன அப்படி கேட்டு விட்டீர்கள் !

பாகவதருக்கு வரும் ' காதல் கடிதங்கள் ' ஏராளம் !

பாகவதர் வருகிறார் என்றால் அவருக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் பெண்கள் ஏராளம் !

பாகவதர் நடந்து போன பாதையின் மண்னைத் தொட்டு கும்பிடும்

ரசிகைகள் ஏராளம் ! பாகவதரை எப்படியாவது

சந்தித்துவிட வேண்டும் என்று 'கங்கணம் ' கட்டி

வீட்டை விட்டு ஓடி வந்த பெண்கல் ஏராளம் !


4. பாகவதர் நாடகங்களைக் காண பல நூற்றுக்கணக்கான

'மைல்' களைக் கடந்து ( அப்போது 'மைல்' தான், கிலோ மீடர் கிடையாது ! )

வண்டிகளைப் பூட்டி வருபவர்கள் ஏராளம் ! நாடகங்களைப் பார்க்க

உட்கார இடம் அல்லது 'டிக்கட்' கிடைக்க வில்லை என்றால்

......' நோ டென்ஷன் ! ' ........மரங்களில் ஏறி நின்று

தேள்கள் , கட்டெறும்புகள் கடித்து ..பல்லைக் கடித்து .

..பாகவதரின் நாடகங்களை காணுவார்கள் !

அப்படி மரங்களில் ஏறி மாண்டவர்கள் ஏராளம் !4. பாகவதர் ரயிலில் போகிறார் என்றால்.....போகும் வழியில் இருக்கும்

அனைத்து ரயில் நிலையங்களிலும் ' பிளார்பார டிக்கட்' கள்

விற்று தீர்ந்துவிடும் ! அனைத்து ரயில் நிலையங்களிலும்

ஒரு கூட்டம் நின்று கொண்டு டிரைனில் பயணம் செய்யும் பாகவதரை

'தரிசனம் ' செய்து மகிழ்வர் ! அப்படிப் பார்த்தால்

கூடுவாஞ்சேரி போன்ற சிறிய ஸ்டேஷன் களில்

'பிளாட்பார்ம் டிக்கட் ' வாங்கி காத்திருக்கும் மக்களின்

கதி எப்படி ? டிரைன் அங்கே நிற்காதே !

அந்த "பருப்பு " அங்கே வேகாது ! தண்டவாளத்தில் நின்று கைகளை

ஆட்டுவார்கள் ! டிரைன் நிற்கும் !

பாகவதர் ' காட்சி -கம் - தரிசனம் ' தருவார் ! பின்னரே டிரைன் நகரும் !

மகாத்மா காந்தி க்குப் பிறகு

பாகவதருக்குத்தான்

இந்த வரவேற்பு !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


5. கீழே எழுதியதையும் படித்து விடவும் !

.......ஆனாலும் கொஞ்சம் 'ஓவர்' தான்

சார், இந்த சம்பவம் !

இந்த இடத்தில் பாகவதரின் அன்றைய செல்வாக்கு

எந்த உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது என்பதை

இப்போது அடியேன் சொல்லப்போகும் சம்பவத்தில்

இருந்து தெரிந்து கொள்ளலாம்!

இந்தியாவில் எந்த சூபர் ஸ்டாருக்கும் இந்த மாதிரியான

சம்பவம் நடந்திருக்காது !

" பாகவதரின் நணபர் ஒரு பணக்காரர்.

திருவாரூர்காரர்.பாகவதர் திருவாரூர் வந்தால் இவரின்

பங்களாவில்தான் தங்குவார்.

பாகவதருக்கென்று :

ஒரு குதிரை சாரட் வண்டி அவருக்கென்று தயார்

நிலையில் இருக்கும்! அந்த வண்டி பாகவதருக்கு

மட்டும்தான் ! யாருக்கும் கிடையாது !

அது மட்டுமா !

பாகவதருக்கென்று ஒரு தனி " பாத் ரூம்" ஒன்று இவர்

கட்டினார் ! அந்த பாத் ரூம் அந்த மாளிகையின் பின்

கோடியில் தனியாக கட்டப்பட்டிருக்கும் . அதனை பயன்

படுத்த முடியாத அளவுக்கு பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டு

இருக்கும் !

" பாத்ரூம் " என்றால் " பார்ரிவேர்" கம்பனியில் வாங்கி

சலவைக் கல்லால் " பள" பள " என்று கட்டப்பட்டது

அல்ல ! அவை எல்லாம் அப்போது கண்டுபிடிக்கப்

படவில்லை ! வெறும் ஓலைத் தடுப்புக்களால்

வேயப்பட்டது.

அன்று........

பாகவதார் திருவாரூர் வந்தார், நண்பர் பங்க்களாவுக்கு

வந்தார். அங்கே தங்கியிருந்தார். அவருடன் அந்த பணக்காரர்

வீட்டு மக்களும்- பெரிய தட்டு - மேல் தட்டு வர்க்கங்கள்-

குடும்பத்துடன் வந்திருந்தினர் !

காலை உணவு முடித்து பேசி விட்டு வெளியே கிளம்பும்

முன் "' பாத்ரூம் " போய்விட்டு வருகிறேன் ! "

என்று பின் பக்கம் போன பாகவதர் வெகு நேரம் கழிந்தும்

திரும்பி வரவில்லை !

அவருக்கு சர்க்கரை வியாதி அப்போது இல்லை !

எனவே பாத் ரூம் போனவர் ஏன் இன்னும் வர வில்லை

என்று அனைவரும் கலக்கத்தில் இருக்க, .......

திடீரென்று..........கூச்சல் ! கூச்சல்!


" என்னை விட்டுவிடுங்கள் ! என்னை விட்டுவிடுங்கள்! "


யார் குரல் அது ?

பாகவதரின் குரல்தான் அது !

என்ன ஆச்சு ?

நண்பர்கள் எல்லோரும் கொல்லைப் பக்கம்

ஓடினார்கள் !

அங்கே அவர்கள் கண்ட காட்சி !


பாகவதரின் சில்க் சட்டை கிழிந்திருந்தது........

வேஷ்டி பயங்கரமாக கிழிக்கப்பட்டு, தன்

" மானத்தைக் " காப்பாற்ற இரண்டு கைகளால்

வேஷ்டியை மூடிக்கொண்டு ஓடி வர,

அவரின் " பாகவதரின் 'கிராப்" கலைய

தன் நண்பர்களைப் பார்த்து ஓடிவந்தார் !

நண்பர்கல் அதிர்ச்சியில் நிலை குலைய....

என்ன ஆச்சு பாகவதருக்கு ?


பின்னால்............

மேல்தட்டு அழகிய பெண்கள் ! நண்பர் பங்களாவில்

விருந்துக்கு வந்த பணக்காரப் பெண்கள் !


மகாபாரததில் ' கெளரவர்கள் " ஆண்கள் !

இங்கே பெண்கள் !
அங்கே பாஞ்சாலி பெண் !

இங்கே " பாஞ்சாலன் " -- பாகவதர் !

இப்போது பாகவதர் உயிருடன்

இருந்து , இப்போது அந்த சமாச்சாரம் நடந்தி

ருந்ததால, பாகவதர் என்ன பாட்டு பாடியிருப்பார்?
" வொய் திஸ்

கொல வெறி, கொல வெறி,

கொல வெறி டீஸ் ! "பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 RFK7No4RteyKNJn11LFx+trrdஎன்றுதானே பாடியிருப்பார் !பி . யு . சின்னப்பா வின் ரசிகர்கள் !பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 CsQ8ntb4TlOz4fIC3bQQ+DSC07114


இப்போது 'சூபர் ஸ்டார் ' ரஜினிக்கு இருக்கும் 'இமேஜ் ' ஐ விட

பல மடங்கு பெரும் புகழ் மற்றும் 'இமேஜ் ' கொண்டவர் சின்னப்பா !

என்னதான் இவத சின்னப்பா கரிய நிறத்தவராக இருந்தாலும் அவருக்கும்

பெண் ரசிகர்கள் ஏராளம் !


ஒரு முறை சின்னப்பா நடிப்பதை நிறுத்திக்கொண்டு ....

( இப்போது சமீபதித்தில் நடிகை ரஞ்சிதா போல் ! )

ஆன்மீகத்தில் ஈடுபட்ட போது சின்னப்பா மெளன விரதம்

மேற்கொண்டார் !

அப்போது இந்த செய்தியை கேள்விப்பட்டு ...

இரு ரசிகைகள் தற்கொலை செய்து கொண்டார்களாம் !

' முக்கூடல் பிராண்ட் ' பீடி !

" இந்த பீடியை புகைத்தீர்களா ? "

என்று விளம்பரம் பண்ண இதைக் கேட்க வில்லை !

" பிண்ணே எதுக்குய்யா ? "

என்றா கேட்கிறீர்கள் !

சொல்றேன் !

இந்த பீடித் தயாரிப்பாளர் ஹரிராம் சேட் என்பவர் ,

பி யு சின்னப்பாவின் தீவிர ரசிகர் !


இவருக்காகவே ' கிராம போன் பெட்டியையும் எக்கசக்க மான

சின்னப்பாவின் இசைத்தட்டுக்களை வாங்கி கேட்டு மகிழ்ந்தார் !

என் எஸ் கிருஷ்ணன் , இவருக்கு நண்பர் !

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 DGrxRrtrTEeM7q0ttZlr+mxvobx3qmC8gp3nNnTZp2-Q


( ஒரு வேலை கலைவாணரும் கூட " முக்கூடலில் "

சங்கமம் தானா ! )

ஒரு முறை திருநெல்வேலியில் பாகவதர் கச்சேரி நடந்த போது ,

கிருஷ்ணன் , ஹரி ராம் சேட் ஐ அந்த கச்சேரிக்கு அழைத்தார் !

நம்ம ( ! ) சேட் வும் வேண்டா வெறுப்பாக பாகவதரின் கச்சேரிக்கு

சென்றார் !

பாகவதரின் கச்சேரியைக் கேட்டவுடன் , அந்த சேட் என்ன செய்தார்

தெரியுமா !

நேரா தன வீட்டுக்கு சென்றார், சின்னப்பா வின் இசைத்தட்டுக்களை

ஒன்னொன்றாக வெளியெ போட்டு சுத்தியால் உடைத்தார் !

என்ன காரணம் ?

ஒண்ணும் இல்லே !

பாகவதரை விட சின்னப்பா சரியாக பாடவில்லையாம் !

அப்போது பாகவதரும் கிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு வந்தனர் !

இசைத்தட்டுக்கள் உடைந்து கிடந்ததைப் பார்த்து கிருஷ்ணன்

" 10 ஷன் " - அத்தான் - " டென்ஷன் " - Tension - ஆகி விட்டார் !


" ஏன்னா ஓய செய்கிறீர் , சேட்டு ? "

- கிருஷ்ணன் !


" இந்த பாகவதர் கச்சேரியை இப்போதுதான் முதன் முறையாக

கேட்கிறேன் !

இவர் கச்சேரியைக் கேட்ட பிறகு சின்னப்பா வின் பாட்டுக்களை

கேட்க பிடிக்கவில்லை ! "
பாகவதவர் , சேட் ஐ தீர்க்கமாக பார்த்தார் , பின்னர்

அவரைப் பார்த்து கேட்டார் :


" அப்போ , சின்னப்பா கச்சேரியை நீங்கள் நேரில் கேட்டால்

என்னுடைய பாடல்களைக் கொண்ட இசைத்தட்டுக்களை இப்படித்தான்

சுத்தியலால் போட்டு உடைப்பீர்கள ? "சேட் வாயடைத்து நின்றார் !

இப்போது அந்த சேட் உயிருடன் இருந்திருந்தால்

என்ன செய்திருப்பார் ?


என்ன செய்வார் .........

இசைத்தட்டுக்களுக்குப் பதில் :

" Hard Disc " களை 'சகட்டு மேனி'க்கு போட்டு

நொறுக்கி இருப்பார் !
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இப்போது .....

விஷயத்திற்கு வருவோமா !


( அப்பாடா ! ஒரு வழியாக விஷயத்திற்கு வந்தானா , இந்த ஆள் ! )
தொடரும் ....


எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 3 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை