ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை
அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down


Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Tue Aug 18, 2015 11:53 am

@மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர்சார் அவரது பணியில ரொம்ப பிசியா இருப்பாருன்னு நெனைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1157968

இருக்கும் மாமா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by T.N.Balasubramanian on Tue Aug 18, 2015 12:14 pm

நன்றி நன்றி எம்கேஆர்சாந்தாராம் அவர்களே .
தெளிந்த நீரோடையில் ஓடி விளையாடும் குட்டி மீன்
போன்று இருந்தது , உங்கள் விவரிப்பு.
ரசித்து ரசித்துப் படித்தேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22148
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Aug 19, 2015 8:02 am

மடல்களை எழுதிய :1. ஷோபனா அவர்களுக்கும் ,


2. திரு. விஸ்வாஜி அவர்களுக்கும் ,


3. தங்கை கிருஷ்ணம்மா அவர்களுக்கும்

4. தங்கை கிருஷ்ணம்மா அவர்களுக்கும்

( இரண்டு மடல்களை எழுதினாங்க இல்லே , அதனால்தான் ! புன்னகை )


5. திரு . மாணிக்கம் நடேசன் அவர்களுக்கும்6. திரு . பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும்
நன்றி ! நன்றி நன்றி !

உங்களின் அனைவரின் அன்பையும்

என்றும் மறக்க மாட்டேன் !

சில பல வேலைகள் ,

சில பிச்சல்கள் ,

சில பிடுங்கல் கள் ,

சில லொள்ளுகள் ,

சில கொள்ளுகள் ,

சில ராவுகள் ,

சில 'லவுசுகள் ' .........


இத்தியாதி , இத்தியாதிகள் ......காரணமாக இக்கரைக்கு ......

அத்தான் " ஈகரை" க்கு எழுத முடியவில்லை !வெகு விரைவில் .....


இந்த இழையிலும் .....

மற்றும் " பாக்கி " வைத்துள்ள வேறு இழைகளிலும்

எழுதுவேன் .......


நேரம் தவறியதற்கு பொறுத்தருள வேண்டுகிறேன் !
எம்கே ஆர் சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Wed Aug 19, 2015 8:42 am

டாக்டர் பணி மிகவும் பழுவான பணி. டாக்டர் ஐயா, உங்கள் நிலையை நாங்களும் அறிவோம். உங்களது பொறுப்பு எந்த அளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே. சிறப்பான உங்களது பதிவு ஒரு தொடர்கதை படிப்பது போல் இருக்கிறது. அதனால் அடுத்தது என்னவாக இருக்கும் என காத்திருக்கிறோம். நன்றி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Wed Aug 19, 2015 6:39 pm

@மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் பணி மிகவும் பழுவான பணி. டாக்டர் ஐயா, உங்கள் நிலையை நாங்களும் அறிவோம். உங்களது பொறுப்பு எந்த அளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே. சிறப்பான உங்களது பதிவு ஒரு தொடர்கதை படிப்பது போல் இருக்கிறது. அதனால் அடுத்தது என்னவாக இருக்கும் என காத்திருக்கிறோம். நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1158043

மாமா சொல்வது ரொம்ப வாஸ்த்தவம்...........நன்றி அண்ணா, அப்பப்போ வந்து போங்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by shobana sahas on Thu Aug 20, 2015 12:58 am

அய்யா .. முடிந்த போதெல்லாம் வாருங்கள் .. எங்களுக்கு செய்திகள் பல தாருங்கள் ... நன்றி அய்யா .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Namasivayam Mu on Thu Aug 27, 2015 4:30 pm

மிகவும் நன்று
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Fri Aug 28, 2015 7:17 am

மடல்களை எழுதிய :


1. திரு. மாணிக்கம் நடேசன்


2. தங்கை கிருஷ்ணம்மா


38000  பதிவுக்கும் மேல் !   அப்பா ! அப்பப்பா !  அம்மா ! அம்மம்மா !  இத்தனை

பதிவுகள் !  "  சர்ர்க்க் " !   அத்தான் !    உங்களை நெட்டி முறித்து

திருஷ்டி கழிக்கிறேன் !

வாழ்த்துக்கள் தங்கை சுமதி !

இன்னும் பல லட்சங்கள் பதிவுகள் நீங்கள் இடவேண்டும் !

வாழ்த்துக்கள்  !


3. ஷோபனா சஹாஸ்


4, திரு. நமசிவாயம் -  உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன் !
ஆகிய அனைவருக்கும் நன்றி !@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


b]
     சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !பாடல் :  3  
[/b]

  "  தாழம்பூ " (  1965 )எம்ஜிஆர் நடித்த  படத்தில் இருந்து

ஒரு பாடல் !


[color:8c67= #006600]  பாடலை எழுதியவர் :


வாலி !

" என்னய்யா !   ' லேட் கமர் ' !    வந்த வேகத்தில் எந்த பாடல்

என்பதை குறிப்பிட மறந்தீரோ ! ? "


என்றா கேட்கிறீர்கள் ! 
 காரணம் இல்லாமலா " கம் " என்று எழுதாமல் விட்டேன் !

அது எந்த பாடல் என்று இப்போதே குறிப்பிட்டால் கட்டுரையின்

சுவாரஸ்யம் கிட்டாமல் போய்விடும் !


அத்தான் !( சரி , சரி , அதற்காக முந்திரிக்கொட்டை மாதிரி இப்போதே

கட்டுரையின் பின் பக்கம் எட்டிப் பார்த்து

உங்களின் சுவாரஸ்யத்தை நீங்களே

" லபக்கிக்" கொள்ளாதீர்கள் , அம்புட்டுத்தேன் !    என்ன கொடுமை சார் இது


 எம்ஜிஆர் -  வாலி .சுமார் 25 ஆண்டுகள் காலம் , கிட்டத்தட்ட

" கணவன் - மனைவி " போல

வாழ்ந்து வந்த நட்பு !


எம்ஜிஆர் மற்றும் வாலி - இந்த இருவரைப் பற்றி முற்றிலும்

அறிந்தவர்கள் நான் சொன்ன கூற்றை

மறுத்து பேசமாட்டார்கள் !முதன் முதலில் , எம்ஜிஆர் க்காக வாலி பாடலை எழுதிய

" நல்லவன் வாழ்வான் " படத்திற்காக

சீர்காழி - சுசீலா பாடிய :

" சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் "

இடம் பெற்றபோது எம்ஜிஆருக்கு வாலி பற்றிய

ஜாதகம் மற்றும் அரிச்சுவடி கூட  தெரியாது !

அந்த பாடல்  , அண்ணா அவர்கள் சிபார்சு செய்து பதிவு

செய்த பாடல் !அப்போ எப்போ ?


எப்போவா .....?


" படகோட்டி " படத்தின் அனைத்துப் பாடல்களையும் படத்தயாரிப்பாளர்

ஜி என் வேலுமணி யின் தயவாலும் மெல்லிசை மன்னர்களின்

தயவாலும் வாலி எழுதியபோது , எம்ஜிஆருக்கு அப்போதுதான்

அவரின் திறமை தெரிந்தது !அன்றிலிருந்து ........


எம்ஜிஆர் , வாலியை " கப் "  என்று பிடித்துக் கொண்டார் !


திருக்கழுக்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் :" இனிமேல் என் படங்களுக்கு வாலிதான் பாடல்களை

எழுதுவார் ! "


என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அளவுக்கு வாலிக்கு

எம்ஜிஆரின் நட்பு கிடைத்தது !(   " அந்த காலத்தில் பாடல்களுக்கு கண்ணதாசன் தானே புகழ் பெற்றவர் ,

அவரை என் எம்ஜிஆர் கைவிட்டுவிட்டார் ? "


என்றா கேட்கிறீர்கள் ?


அந்த ' கதை ' ஐ  நான் எழுத வேண்டும் என்றால் .........

அதுவே ஒரு தனி கட்டுரை ஆகிவிடும் .........

எனவே அந்த " கசமுசா " வை அப்புறம் வைத்துக் கொள்ளலாமே !  )  

 " படகோட்டி " படத்தின் 7  (   எட்டு பாடல்கள் - ஒரு பாட்டு

படத்தில் இல்லை !   )  பாடல்கள் அனைத்தும் செம ஹிட் !

பிறகு வந்தது : " தெய்வத்தாய் "   - எல்லா பாடல்களும் செமஹிட் !

' எங்க வீட்டுப் பிள்ளை ' -  எல்லாப் பாடல்களும் செம ஹிட் !எம்ஜிஆர் மகிழ்ச்சி அடைந்தார் !


வாலியும் மகிழ்ச்சிக்கு அளவில்லை !
அப்போது .......

என்ன நடந்தது தெரியுமா ?" சொன்னால்தானே தெரியும் ,

சொல்லித்தொளையும் ஐயா ! "


என்றா புலம்புகின்றீகள் ?


சொல்றேன் !
யாருக்கும் சொல்லாமல் ,

யாரையும் கூப்பிடாமல் ,

வாலி திருப்பதிக்குச் சென்று

திருட்டு +  காதல்  கல்யாணம்

செய்து கொண்டார் !
எப்படி இருக்கும் , எம்ஜிஆருக்கு ?


( வாலி , தன துணைவியார் : ரமண திலகம்

உடன் ! நாடக நடிகையான ரமணதிலகம் -ஐ வாலி காதலித்து திருமணம்

செய்து கொண்டார் !

ரமண திலகம் நடித்த ஒரே படம் :


" பணம் தரும் பரிசு " ( 1965 ) )
பயங்கர கடுப்பு ஆனார் எம்ஜிஆர் !" இந்த வாலி பயலுக்கு என் செலவிலே திருமணம் செய்து

வைக்கிறேன் என்று கூட சொன்னேனே , இப்போது

எனக்கே , திருமணத்திற்கு அழைக்காமல் துரோகம்

செய்து விட்டாரே ! "


என்று மனம் நொந்தார் !ஓர் அறிவிப்பு செய்தார் :
" இனிமேல் என் படங்களுக்கு வாலி

பாடல்களை எழுத மாட்டார் !  "
விளைவு ?
எம்ஜிஆர் -ஐ வைத்து படம் எடுத்து அவரிடம் ' கால் ஷீட் ' வாங்கிய

படத்தயாரிப்பாளர்கள் வாலியை நெருங்கக் கூட துணியவில்லை !வாலிக்கு எம்ஜிஆர் படங்களுக்கு பாடல்களை எழுத 'சான்ஸ் '

போயி போச்சு !


அதுவும் எம்ஜிஆர் எப்பேர்ப்பட்ட மனிதர் !

வாலியை தன உடன் பிறந்த தம்பியைப் போல் பாவித்து

அவருக்கு தன படங்களுக்கு  பாடல்களுக்கு 'சான்ஸ் ' வாங்கிக் கொடுத்தார்.இந்த செய்தியைப் படியுங்கள் ,

உங்களுக்கே நன்கு புரியும் !
வாலியின் ஆரம்ப கால கட்டங்களில் , ' திரை இசைத் திலகம் '

கே . வி . மகாதேவன் அவர்களுக்கு வாலியை , என்ன காரணத்தாலோ

வெறுக்க ஆரம்பித்தார் !


சில பேர்களுக்கு - சில சமயங்களில் -  காரணம் தெரியாமல்

விரும்புவார் கள் /  வெறுப்பார்கள் -  இந்த அனுபவத்தை நானும்

உணர்ந்துள்ளேன் !

நீங்கள் எப்படி , சார் ?

இந்த மாதிரியான உணர்ச்சி மகாதேவன் அவர்களுக்கும் , வாலியை

பார்த்த பின்பு நேர்ந்தது !" யார்யா அவரை அழைத்து வந்தது !

அது என்ன " வாலி - தொலி "   என்று பேர் வைத்துக்கொண்டு ! "இதுதான் கே வி எம் அவர்களின் 'கம்மெண்ட் ' - வாலியைப பார்த்து !இதனை நேரில் கேட்ட தொலி ........ஹி... ஹி  ... வாலி உடனே

'ஜகா '

வாங்கினார் !


" கே விம் அவர்கள் இசையமைத்தால் நான் பாடல்களை

எழுதமாட்டேன் ! "


இதுதான்  வாலியின் ' கம்மென் " !
இந்த சமயத்தில் ............................ !" உடன் பிறப்பு "-  1963 .


இந்த பெயரில் , எம்ஜிஆரை வைத்து ஒரு படம்  எடுக்க

ஒரு கம்பனி முன் வந்தது !

எம்ஜிஆர் உடன் சாவித்திரி !

படக் கம்பனி ஆட்கள்  வாலியை 'அட்வான்ஸ் " உடன் வந்து

கூப்பிட்டார்கள் !

வாலியும் பணத்தை வாங்கிக் கொண்டார் !

" எங்கே மெல்லிசை மன்னர்களை காணோம் ? "

அந்த படத்திற்கு இசை மெல்லிசை மன்னர்கள் என்று வாலி

அப்படி கேட்டார் !


ஆனால் ......


" உடன் பிறப்பு " படத் தயாரிப்பாளர்கள் மென்று முழுங்கி  மெதுவாக ...." வாலி சார் !   இந்த படத்திற்கு இசை கே வி எம் அவர்கள் ! "


என்று சொன்னார் கள் !


இதனைக் கேட்டவுடன் வாலியின் முகம் சிவந்தது !

' அட்வான்ஸ் ' ' டப்பு' வை  ' வாபஸ் ' செய்தார் - ' விருட் ' என

' எக்சிட் ' (  EXIT )   ஆனார் !(   " யோவ் ! தமிழில் எழுதுயா ! "  - கேட்பது நீங்கள் தானே !

" சர்த்தான் நயனா !  " - இது நான் !  )  விஷயத்தை கேள்விப்பட்டார் எம்ஜிஆர் , வாலியை அழைத்து

சமாதானம் செய்தார் !


உம ... உம ....எம்ஜிஆர் ' அம்பேல் ' ஆனார் !


ஆனாலும் எம்ஜிஆரா இல்லே கொக்கா !


மாற்று எற்பாடு செய்தார் ' வாத்தியார் ' !


என்ன அது ?
எம்ஜிஆரே , வாலியிடம் பாடலை எழுதி

வாங்கி அதனை கே வி எம் விடம் கொடுத்து பாடல்களுக்கு

இசையமைக்க எற்பாடு செய்தார் !
அத்தனை ப்ரியம் - வாலியின் மேல் எம்ஜிஆருக்கு !ஆனால் அதனையும் மீறி வாலி , எம்ஜிஆர் இன் மீது

வைத்தார் - 'ஆப்பு "  !எம்ஜிஆருக்கு கோபம் வருமா , வராதா !" ரும்" !  

   
 ( ஆனால் என்ன பலன் !  , ' உடன் பிறப்பு ' படம்

பாதியில் நிறுத்தப்பட்டது , வெளிவரவில்லை !

1990 களில் வந்த " உடன் பிறப்பு "  சத்தியராஜ் , சுகன்யா நடித்து

பி . வாசு இயக்கியது - அது வேறே !  )  ( இன்னொரு ' பிராக்கட் நியூஸ் ' !

வாலியின் திறமை பின்னர் அறிந்த 'திரை இசைத் திலகம் '

விரைவில் வாலியின் நட்புக்கு பாத்திரமானார் !

'அரசகட்டளை ' , ' பேசும் தெய்வம் '

' அடிமைப் பெண் ' - இவை வாலி - கே வி எம்

பெருமையை பறை சாற்றும் படங்களில் சில

சான்றுகள் ! )
 சரி , வாலி என்ன சொன்னார் ?
 " திருமணம் என்பது என் சொந்த விஷயம் ,

அதில் யாரும் தலையிடமுடியாது !

என் குடும்பத்தினரைக் கூட யாரையும் அழைக்காமல் நான்

திருமணம் செய்து கொண்டேன் !

இந்த விஷயத்தில் எம்ஜிஆர்  அண்னன் கோபித்துக் கொண்டால்

நான் என்ன செய்வது ? "

ஆனாலும் வாலிக்கு பாடல்களை எழுத எம்ஜிஆர் படங்களைத்

தவிர மற்ற படங்களில் பாடல்களை எழுத அழைப்பு வந்தது !

அவைகளில் வாலி கவனம் செலுத்தி .......

புது மனைவியுடன் வாழ்க்கையை தொடங்கினார் !
இந்த சமயத்தில் ......


எம்ஜிஆர் படங்களை தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்கள்

" வாலியை வைத்து பாடல்களை வைத்தால் நன்றாக

இருக்கும் "

என்று சொல்லி எம்ஜிஆரை  நச்சரிக்க ஆரம்பித்தனர் !


படங்களை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் கூட

இதே நச்சரிப்புத்தான் !
எம்ஜிஆர் யோசிக்க ஆரம்பித்தார் !
ஒரு வாரப் பத்திரிக்கை இந்த சமயத்தில்

இப்படி ' கிசு - கிசு ' த்தது !

"  ஒரு மூன்றெழுத்து நடிகருக்கு

இரண்டெழுத்து பாடலாசிரியர் பாடல்களை

எழுதினால்தான் படம் ஓடும் ! "

 வாலியின் பிரச்சனை பெரிதாவதாக

எம்ஜிஆர் உணர்ந்தார் !

வாலியை அழைத்து சமாதானம் செய்து , அவரை மீண்டும்

தன படங்களில் பாடல் எழுத ஏற்பாடு செய்ய விரும்பினார் !

[color:8c67= #336600]அங்கே ....வாலியின் வீட்டில் .....
வாலியின் காதல் மனைவி ரமண திலகம் , தன கணவரை

சமரசப்படுத்தில் முனைந்தார் !" என்னங்க !  எம்ஜிஆர் எவ்வளவோ பெரியவர் !

அவர் கோபித்துக் கொண்டதில் என்ன தவறு ?

உங்கள் மேல் கொண்ட அன்பினால்தான் அவர் உங்கள் மேல்

கோபம் ஆக உள்ளார் , எனவே நீங்களே அவரை சந்தித்து

பேசிவிடுங்கள், அதுதான் நல்லது ! "ஆனால் வாலி ' கம் '  என்று இருந்துவிட்டார் !ஒரு நாள் காலை ......


வாலியின் வீட்டுக்கு  ' தாழம்பூ " படத் தயாரிப்பாளர் வந்தார் ....

சொன்னார் :" சின்னவர் ( எம்ஜிஆர் )   உங்களை அழைத்து வரச் சொன்னார் ! "வாலி ....அசைந்து கொடுக்கவில்லை .....


" வர முடியாது ! "


வாலி !


" சின்னவர் உங்களுடம் சேர்ந்து காலை உணவு சாப்பிட விரும்புகிறார் ! "" ஐயா ! நான் காலை உணவை எப்போதோ முடித்துவிட்டேன் ! "


" சின்னவர் , வெறும் காலை உணவுக்கு மட்டும் உங்களை

அழைக்கவில்லை ! "
" தாழம்பூ " உக்கும் ( ! )    வாலிக்கும் நடந்த உரையாடல்களைக்

கேட்ட  ரமண திலகம் வாலி யை ஒப்பேத்தி ( ! )   ஒரு வழியாக

அவரை தோட்டத்திற்கு ' பார்சல் ' கட்டினார் !


தோட்டத்தில் .....

வாலியை எம்ஜிஆர் வரவேற்றார் !

காலை உணவை சாப்பிட அழைத்தார் !

வாலி , ( மீண்டும் ! )   காலை உணவை சாப்பிட்டார் !
" வாலி !   நம்ம அடுத்த படம் " தாழம்பூ " !

அந்த படத்தில் நீங்கள் பாடல்களை எழுதவேண்டும் !

" சரி அண்ணே ! "

- இது வாலி !

எம்ஜிஆர் பாடலின் " சிட்டிவேஷன் " ஐ சொன்னார் :


" படத்தில் , கதாநாயகி கோபித்துக்கொண்டு

காரில் போகிறார் !

அவரைப் பின் தொடர்ந்து கதாநாயகன் , நாயகிக்கு

" அட்வைஸ் "

செய்தபடியே பாடவேண்டும் !


எங்கே பாடலை எழுதுங்கள் , பார்க்கலாம் ! "

 வாலி கொஞ்சம் கூட தயங்க வில்லை .....

பாடலை எழுதினார் !
" எங்கே போய்விடும் காலம் !

அது என்னையும் வாழ விடும் !

நீ  இதயத்த்தை திறந்து வைத்தால்

அது உன்னையும் வாழவைக்கும் ! "  


எம்ஜிஆர் பாடலைக் கேட்டார் !

அவருக்கு கோபம் வந்தது !

அங்கே :


" நாயகன் :  வாலி

நாயகி    : எம்ஜிஆர்   "


போல  வாலி எழுதியதை எம்ஜிஆர் ஒன்றும்

சொல்ல முடியவில்லை !


படத்தின் காட்சிக்கேற்ப பாடல் வரிகள் ஜோராக

அமர்ந்திருக்கின்றது அல்லவா !


எம்ஜிஆரால் என்ன செய்ய முடியும் !" ஆனாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் , வாலி ! "


எம்ஜிஆர் சொன்னது !


 வாலி சிரித்துக் கொண்டெ

எம்ஜிஆஇடம் விடை பெற்றார் !

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அடுத்த பாடல் :கண்னதாசன் !அண்ணாதுரை

அவர்களை  " கன்ன பின்னா " என்று

திட்டித் தீர்த்து

எழுதிய பாடல் !
எம்கே ஆர் சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ayyasamy ram on Fri Aug 28, 2015 7:31 am


-
தொடருங்கள்...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Fri Aug 28, 2015 3:28 pm

//மடல்களை எழுதிய :

தங்கை கிருஷ்ணம்மா !

38000 பதிவுக்கும் மேல் ! அப்பா ! அப்பப்பா ! அம்மா ! அம்மம்மா ! இத்தனை

பதிவுகள் ! " சர்ர்க்க் " ! அத்தான் ! உங்களை நெட்டி முறித்து

திருஷ்டி கழிக்கிறேன் !

வாழ்த்துக்கள் தங்கை சுமதி !

இன்னும் பல லட்சங்கள் பதிவுகள் நீங்கள் இடவேண்டும் !

வாழ்த்துக்கள் !//

மிக்க நன்றி அண்ணா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by shobana sahas on Sat Aug 29, 2015 2:49 am

சூப்பர் அய்யா , நீங்கள் எழுதும் விதம் மிகவும் சுவாரசியமாக உள்ளது . கூடவே உங்கள்(உங்களுக்கும் , எங்களுக்கும் நடக்கும் ) உரையாடல்கள் ரொம்ப அருமை டாக்டர் அய்யா . அடுத்து என்ன என்பது அறிய ஆவலை தூண்டும் வகையில் உள்ளது .
அடுத்த பதிவை எதிர்நோக்கி இருக்கிறேன் ... வாழ்த்துக்கள் அய்யா.
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Thu Oct 15, 2015 3:27 pm

டாக்டர் சார், இங்கே தாங்கள் கடைசியாக எழுதியது ஆகஸ்டு 28 2015,  அதற்கு பிறகு இன்னும் எதுவும் எங்களுக்காக தரவில்லை. தாங்கள் என்றும் நலமாக இருக்க வேண்டும், இது தான் எங்கள் ஆசை.  நேரம் கிடைக்கும் போது எங்கள் ஆவலையும் கொஞ்சம் பாருங்களேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Fri Oct 16, 2015 12:12 am

ஆமாம் அண்ணா, உங்களின் வேலை பளுவிற்கு நடு நடுவே, அப்பப்போ வந்து போங்கள் புன்னகை............நிறைய விசிறிகள் காத்திருக்கோம் ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by shobana sahas on Fri Oct 16, 2015 2:12 am

ஆம்மாம் அய்யா நானும் உங்களை அழைக்கிறேன் .....
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Fri Oct 16, 2015 5:52 pm

கடிதங்களை எழுதிய :

1. திரு . மாணிக்கம் நடேசன்

2. தங்கை கிருஷ்ணம்மா

3. ஷோபனாஸ் சாஹாஸ்

ஆகிய எல்லோருக்கும் :

நன்றி ! நன்றி ! நன்றி !


வரும் 25 ன் தேதி முதல் நான் ' இலவசம் ' ஆகிவிடுவேன் .....................ஹி......ஹி ....

...ஹி ......ஹி ...... நான் ' FREE ' ஆகிவிடுவேன் என்பதை ரொம்ப கொடூரமாக

தமிழ்ப் படுத்திவிட்டேன் !விரைவில் ' எக்ஸ்பிரஸ் ' வேகத்தில் !
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Sat Oct 17, 2015 12:50 am

ஹா...ஹா...ஹா....நீங்க இலவசமானதும்..........FREE ஆனதும் நிறைய பதிவுகள் போடுங்கோ அண்ணா....ஆவலாகக் காத்திருக்கோம் படிக்க புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Sat Oct 17, 2015 11:06 am

ஒன்னும் புறியல டாக்டர் சார், பதவி ஓய்வு பெறப்போறீங்களா? அப்படி ஒன்னும் உங்களுக்கு வயது ஆகலையே, ஏன்னா நீங்கள் என்றுமே இளமை தான். விரைவில் உங்கள் ஏற்றுமதியை இங்கு காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Nov 01, 2015 12:37 pm

@மாணிக்கம் நடேசன் wrote:ஒன்னும் புறியல டாக்டர் சார், பதவி ஓய்வு பெறப்போறீங்களா? அப்படி ஒன்னும் உங்களுக்கு வயது ஆகலையே, ஏன்னா நீங்கள் என்றுமே இளமை தான். விரைவில் உங்கள் ஏற்றுமதியை இங்கு காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1169853ஒண்ணும் குழப்பம் அடைய வேண்டாம்,

மாணிக்கம் நடேசன் அவர்களெ !

என் தொழிலுக்கு " ரிடையர்மெண்ட் " என்பது கிடையாது !

எனவே அதற்கான வயதும் எனக்கு கிடையாது !

ஒருவருக்கு , ஒரு புத்தகம் எழுதுவதற்கு உதவிகளை செய்து

வந்தேன், அதன் வேலைகளை 25 ன் தேதி வரை செய்தேன் , இப்போது

அதன் வேலை முடிந்து இப்போது " இலவசம் "

ஆகிவிட்டேன் !


இதோ அடுத்த கட்டுரை .....எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் .....

விரைவில் !எம்கே ஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Sun Nov 01, 2015 12:51 pm

நல்லது டாக்டர் ஐயா, முதலில் நல்ல ஓய்வு எடுங்கள், நேரம் இருக்கும் போது எழுதுங்கள். உங்கள் எழுத்து நடை பலரையும் கவர்ந்திருப்பது தான் உண்மை, புதிதாக தாங்கள் தரும் வரை நாங்கள் உங்களது பழைய வரிகளை மீண்டும், மீண்டும் படித்து ரசித்துக் கொண்டு தான் இருக்கிறோம், சுவையாக ரசிக்கும் வகையில் இருக்கிறது உங்கள் படைப்பு, மிக்க நன்றி டாக்டர் ஐயா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Fri Nov 06, 2015 7:55 am

சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !பாடல் : 4.

" அண்ணன் காட்டிய வழியம்மா !

இது அன்பால் விளைந்த பழியம்மா ! "படம் : " படித்தால் மட்டும் போதுமா " ( 1962 )


பாடியவர் : டி. எம். எஸ் .

இசை : மெல்லிசை மன்னர்கள் :
1962 ஆம் ஆண்டு .....

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , இமய மலை உச்சியில் இருந்த

காலம் !

" பதி பக்தி " படம் சூபர் ஹிட் ஆன பிறகு :

" பாசமலர் "

" பாவ மன்னிப்பு "

முதலிய படங்களில் :

" சிவாஜி கணேசன் - ஜெமினி கணேசன் - சாவித்திரி "

" காம்போ " படங்கள் அனைத்தும் " சூபர் டூபர் " ஹிட் ஆன காலம் !

ஒரு நாள் , நடிகர் திலகம் , திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாசை

அழைத்தார் :


" டேய் , ஆரூரான் ! நம்ப காஸ்டியூமர் ராமகிருஷ்ணன்

ஒரு படம் தயாரிக்கிறான் , அந்த படத்தில் நான் நடிக்கிறேன் !

அந்த படத்தை , ராமகிருஷ்ணன் , தன மகன் ரங்கநாதன் பெயரில்

" ரங்கநாதன் பிக்சர்ஸ் " என்கிற பெயரில் படம் வரப்போகிறது !

நம்ப மேகமென் ஹரிபாபு பையன் ஒரு வங்காளக் கதையை

வைத்திருக்கிறான் , அந்த கதை நீ வாங்கிப் படித்து

வசனம் எழுது !

நம்ம " பாசமலர் " டீம் - பீம்பாய் - நான் - ஜெமினி - சாவித்திரி - நீ -

விஸ்வநாதன் - ராமமூர்த்தி - கண்ணதாசன் " கூட்டணியில்

படம் வரவேண்டும் , சரியா ? "


ஒரே மூச்சில் நடிகர் திலகம் பேசி முடித்தார் !

அவருக்கு அது கை வந்த கலைதானே !

ஆரூதாஸ் , நடிகர் திலகம் சொன்னதை உள் வாங்கிக்

கொண்டார் !


ஆரூர் , ' பீம் பாய் ' ( அத்தான் இயக்குனர் எ . பீம்சிங் , ' என்னடா

" மைக்கேல் மதன காமராஜன் " படத்தில் வரும் " பீம்பாய் "

இங்கே எப்படி வந்தார் ? " என்று ( இருக்கும் கொஞ்ச நஞ்ச )

தலை முடியை பிச்சிக் கொள்ள வேண்டாம் ! " ! அதிர்ச்சி )

இடம் சென்று படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் !


படத்தில் பங்கு கொள்ள எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள் .........

நடிகர் ஜெமினி கணேசனைத் தவிர !


என்னவாம் ?

என்ன சொன்னார் ஜெமினி ?

இதோ !
[b
[color:bbc3= #336600]" இந்த படத்தின் கதையை நான்

படித்தேன் , படத்தின் கதைப் படி , சிவாஜி திருமணம் செய்து

கொள்ளவேண்டிய சாவித்திரியை , நான் ஒரு

மொட்டை கடுதாசியை போட்டு , ஏமாற்றி திருமணம்

செய்து கொள்வதாக வருகிறது , நிஜ வாழ்க்கையில் சாவித்திரியை

காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை , இந்த படத்தைப்

பார்க்கும் மக்கள் எற்றுக்கொள்ள மாட்டார்கள் , படத்தின் வெற்றி

இதனால் பாதிப்பு அடையக்கூடும் , எனவே என்னை விட்டு விடு ! "
] [/b]உண்மைதான் !

தமிழ்ப் பட ரசிகர்கள் , நிஜ வாழ்க்கையோடு ஒன்றி படம்

பார்ப்பவர்கள் !

இந்திப் படம் பார்ப்பவர்கள் எப்படி ?

அவர்களும் அப்படித்தான் !

மணிரத்தினம் இயக்கிய " ராவண் " இந்திப்படத்தில் தன

" ஒரிஜினல் மனைவி " யான ஐஸ்வர்ய ராயை , படத்தில்

கடத்திக் கொண்டு போவதை யார் விரும்ப்வார்கள் ?

படம் தோல்வி !
1962 ஆம் ஆண்டில் ஜெமினிக்கு தோன்றிய இந்த சிறிய

ஐடியா பின்னாட்களில் மிகப் பெரிய இயக்குனர் மணி ரத்தினத்திற்கு

ஏன் தோன்றவில்லை ?
" சரி , மணியை ( மணிரத்தினம் ) விட்டு

விடுங்கள் ! ஜெமினி , ' ஜகா ' வாங்கிய பிறகு என்ன ஆனது ? "

என்றா கேட்கிறீர்கள் ?ஜெமினி கணேசன் சொல்வதில் உண்மை இருக்கின்றது

என்பதை ஆரூர்தாஸ் ஏற்றுக்கொண்டார் !

சிவாஜியிடம் விளக்கினார் !

சிவாஜியியும் ஏற்றுக்கொண்டார் !

அப்புறம் ?[color:bbc3= #663300]நடிகர் கே . பாலாஜி தேர்வானார் !


இப்படித்தான் உருவானது :


" படித்தால் மட்டும் போதுமா "இனி ,

' நம்ம ' விஷயத்திற்கு வருவோமா !

பாடலின் ' சிடிவேஷன் '' படித்தால் மட்டும் போதுமா ' படத்தில் :

'படிக்காதவன் ' அண்ணன் - சிவாஜி கணேசன் !

' படித்தவன் ' தம்பி : கே . பாலாஜி !

எதோ ஒரு ' தமாஷுக்கு ' அண்ணனுக்கு தம்பி பெண் பார்க்கவும்

தம்பிக்கு , அண்ணன் பெண் பார்த்து திருமணங்கள் நிச்சயம் செய்ய

முடிவானது !

ஆனால் நடந்ததோ வேறு !

படித்த அண்ணன் , தம்பிக்கு பார்த்த பெண்ணை ( சாவித்திரி ) பிடித்துப் போக ,

ஒரு ' சூழ்ச்சி ' செய்து அண்ணன் பாலாஜி , தம்பிக்கு பார்த்த

சாவித்திரியை சுயநலத்துடன் திருமணம் செய்து கொள்ள ,

தம்பிக்கோ , அண்ணனுக்குப் பார்த்த படித்த பெண் ( ராஜ சுலோசனா )

ஐ ' தலையில் ' கட்டுகிறார்கள் !

அத்தோடு வீண் பழி தம்பி மீது !

அண்ணன் கே. பாலாஜியின் சூழ்ச்சியால் தம்பி சிவாஜி யின்

வாழ்க்கை குட்டிச் சுவராகிறது !

இதனை நினைத்து நினைத்து தம்பியாகிய சிவாஜி

மனம் கலங்கி பாடுவதுதான் பாடலின் ' சிடுவேஷன் '
[color:bbc3= #006600] பாடலை எழுதிய

கண்ணதாசனின் " சிடுவேஷன் ' !" அதென்னய்யா பாடலுக்குத்தான் ' சிடுவேஷன் '

உண்டு !

பாட்டை எழுதுபவருக்கு கூட ' சிடுவேஷனா ' ? "

என்று என்னை கரித்துக் கொட்டாதீர்கள் !

பெரும்பாலான கண்ணதாசனின் பாடல்கள் , தன சொந்த

வாழ்க்கையின் அனுபவங்களை மனதில் கொண்டே

பாடல்களை வரைவதுண்டாம் !

இந்த பாடலும் அந்த வகையைச் சேர்ந்ததுதான் !

கவியசு கண்ணதாசன் பல அரசியல் கட்சிகளை மாறி

மாறி தாவுவதில் வல்லவர் !

அவர் எப்போதும் ஒரே கட்சியில் இருந்ததே இல்லை !
அந்த காலத்தில் இப்படி ஒரு ' ஜோக் ' உண்டு !


" கவியரசு கண்ணதாசன் இப்போ எந்த கட்சி ? "

- கேள்வி.


" தெரியாது , இன்னும் காலைப் பத்திரிக்கை வரவில்லை ! "

- பதில் !


( பிரபல முன்னாள் அமைச்சர் : ஹெச் . வி . ஹண்டே

என்பவரும் இந்த ' விளையாட்டில் ' வல்லவர் ! )


கவியரசு கண்ணதாசன் வெறும் திரைப்படத்துறையில்

இருந்து கொண்டு பாடல்களை எழுதியிருந்தால் இன்னும்

பல ஆயிரம் பாடல்களை எழுதியிருப்பார் !


1962 ஆண்டு வாக்கில் கண்ணதாசன் ' திராவிட முன்னேற்ற கழகம் '

கட்சியில் இருந்து வந்தார் !

அப்போது ......கண்ணதாசனுக்கும் , கட்சி யின் நிர்வாகிகளுக்கும்

இடையே ' காச முசா ' !

இதனால் கண்ணதாசன் மேல் மேலிடத்திற்கு அதிருப்தி

எற்பட்டது !

விளைவு ?

கட்சியின் தலைவர் :

சி . என் . அண்ணாதுரை :

கண்ணதாசனை கட்சியை விட்டு நீக்கிவிட்டார் !

கண்ணதாசன் பயங்கரமான மன உளைச்சலுக்கு

உள்ளானார் !

அந்த கால கட்டத்தில் , கண்ணதாசனுக்கு , அண்ணா வின் மீது

கோபமும் வெறுப்பும் வந்தது !

எனினும் என்ன செய்வது !

எந்த கட்சியில் சேருவது என்றும் யோசித்துக் கொண்டிருந்தார் !இது கண்ணதாசனின் ' சிடிவேஷன் ' !
[color:bbc3= #009900] " அண்ணன் காட்டிய வழியம்மா ! "

பாடலின் ஒலிப்பதிவு ! "
வழக்கம் போல : ( ! )மெல்லிசை மன்னர் ' ஆஜர் ' !

பாடலை எழுத கண்ணதானும் ' ஆஜர் '


" டேய் விசு ! பாடலுக்கான ' சிடுவேஷன் ' என்ன என்று சொல்லு ! "

- இது கண்ணதாசன் !


விசு .......அத்தான் ......மெல்லிசை மன்னர் விவரிக்கிறார்........

இரத்தின சுருக்கமாக !

" ஓர் அண்ணன் , தம்பிக்கு , தன சுயநலத்திற்காக

துரோகம் செய்துவிடுகிறான் ! தம்பி , அந்த துரோகத்தை நினைத்து

நினைத்து மனம் புழுங்கி , வருந்தி பாடுவதாக ஒரு சூழ்னிலை - இதற்கு

ஏற்றாப் போல பாடல் வேண்டும், கவியரசரே ! "
கண்ணதாசன் , மனதுக்குள் சிரித்துக் கொண்டார் !

" நம் நிலைமையும் இதேதானே ! "

கவியாசர் சிரித்துக் கொண்டார் !

அப்புறம் என்ன !


" எழுதிக் கொள்ளு , விசு ! "கண்ணதாசன் சொல்ல ஆரம்பித்தார் ...........

அவர் வாயில் இருந்த வந்த வார்த்தைகள் அல்ல , அவைகள் ......

அவர் இதயத்தில் இருந்து வந்த வரிகள் !

' அண்ணன் காட்டிய வழியம்மா ! - இது

அன்பால் விளைந்த பழியம்மா ! "


" கண்ணை இமையே கெடுத்ததம்மா - என்

கையே என்னை அடித்ததம்மா ! "" தொட்டால் சுடுவது நெருப்பாகும் !

தொடாமல் சுடுவது சிரிப்பாகும் ! "" தெரிந்தே கெடுப்பது பகையாகும் !

தெரியாமல் கெடுப்பது உறவாகும் !"" அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன் !

அணைத்தவனே நெஞ்சை எரித்துவிட்டான் !"" பொறுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன் !

கும்பிட்ட கைகளை எரித்துவிட்டான் !"" அவனை நினைத்தே நான் இருந்தேன் ! அவன்

தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தான் !"" இன்னும் அவனை மறக்கவில்லை ! - அவன்

இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை ! "


" ஆஹா ! அற்புதம் ! அற்புதம் ! "


சொன்னவர் - மெல்லிசை மன்னர் !

அவருக்கு இசையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது !

கண்ணதாசனின் மன நிலையைப் பற்றி உட்பட

மெல்லிசை மன்னர் வேறு ஒன்றும் அறிந்ததில்லை !
கண்ணதாசனின் இந்த பாட்டை

அண்ணாவிடம் சிலர் கொண்டு போய் அந்த பாட்டை

போட்டுக்காட்டி :" பாருங்கள் , அண்ணா !

உங்களை எப்படி எல்லாம் சினிமால்

பாட்டு எழுதிகிறேன் என்கிற சாக்கில் கண்ணதாசன்

திட்டி இருக்கிறார் , பாருங்கள் ! "


என்றனர் !
அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் :

" அவனை விட்டு விடுங்கள் ,

தம்பிகளா !

சுத்தத் தமிழில் அல்லவா என்னை

திட்டுகிறான் ! "
என்றாராம் !( ஆகவே , நண்பர்களே ! என்னையும் திட்டுவதென்றால்

சுத்தத் தமிழிலே திட்டிவிடுங்கள் , ஆமாம் ! மகிழ்ச்சி )
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடுத்து :

உடனே வரும் கட்டுரை ! ( அடே சூப்பருங்க ! )

கவியரசு காங்கிரஸ் கட்சியில் சேர

தூது விட்ட பாடல் ! !
எம்கே ஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Nov 15, 2015 5:59 pm

சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !பாடல் : 5.

அடுத்து :

உடனே வரும் கட்டுரை ! ( அடே சூப்பருங்க ! )

கவியரசு காங்கிரஸ் கட்சியில் சேர

தூது விட்ட பாடல் ! !" பட்டணத்தில் பூதம் " ( 1967 ) (


' பட்டணத்தில் பூதம் ' படத்தில் ஒரு ' டூயட் ' பாடல் !

பாடலிக்கு இசை :

ஆர் . கோவர்த்தனம் .

பாடலைப் பாடிய வர்கள் :

டி எம் எஸ் - சுசீலா


பாடலை எழுதியவர் :


கண்ணதாசன் .எல்லாமே தயார் தான் .........................ஆனாலும் .......

' பிராப்ளம் ........பிராப்ளம் ..........பிராப்ளம் .....

ஒரே பிராப்ளம் !


யாருக்கு ?


இசையமைப்பாளர் ஆர் . கோவர்த்தனம் அவர்களுக்கு !


என்னவாம் ?


கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு அழகாக ' டியூன் ' போட்டு விட்டார் ......

பாடலும் அழகாக அமைந்துவிட்டது .............................

ஆனால்

படத்தின் இயக்குனர் எம் . வி . ராமன் ' கஜல் ' முறையில் பாடலை

இசையமைக்க சொல்லிவிட்டாராம் ........ !

பொதுவாக , பாடல்களை எழுதிவிட்டு அதற்கு ' டியூன் ' போட்டு

பாடலை வடிவைப்பது ஆர் . கோவர்த்தனக்கு வழக்கம் !" பாடலை எழுதிவிட்டு பின்னர் அதற்கு மெட்டு அமைத்து

பாட்டை அமைத்தால் 100 க்கு 100 சதவிகிதம் பாடல்கள்

வெற்றி பெறும் !

அப்படி இல்லாமல் மெட்டு அமைத்து அதன் பின்னர் பாடலை

அந்த மெட்டுக்குள் ' உள்ளே புகுத்துவது ' சரிவராது !

அப்படி செய்தால் 100 பாடல்களில் 10 பாடல்கள் கூட

வெற்றி

பெறாது ! "

-----------------------------------------------சொல்கிறார் கோவார்த்தனம் !


ஆனால் அப்படி சொன்னவருக்கே சோதனை !

கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு இயக்குனர் உத்தரவு படி

'கஜல் ' முறைப்படி இசையமைக்கவேண்டும் !


முடியுமா ?


முடியும் !


பாடல்வரிகளை மாற்றி விட்டால் !

ஆனால் .........

" பாடல் வரிகளை மாற்றக் கூடாது ! "

----------- சொன்னவர் கவியரசு !

என்னவாம் ?

காரணம் இருக்கு ......இறுதியில் அது உங்களுக்குத் தெரியும் !

பாடல் வரிகளை மாற்ற கோவர்த்தனம் அவர்களுக்கே மனம்

வரவில்லை !

பாடல் வரிகள் அவ்வளவு அற்புதமாக அமைந்துள்ளன !சரி , அப்புறம் என்னய்யா ஆச்சு ? "

என்கிறீர்களா !


என்னவாகும் .....


. " இட்லி இல்லேன்னா தோசை தான் ......

தோசை இல்லேன்னா பரோட்டா தான் ! "


கதைதான் ஆனது !


" ஆனவோன்னா ' சஸ்பன்ஸ் ' போட்டு எழுதுறான்யா இந்த ஆளு ! "


என்கிறீர்களா !


சொல்கிறேன் !" பாடல் வரிகளை மாற்ற முடியவில்லை என்றால்

" கஜல் டியூன் " ஐ நீங்கள் தியாகம் செய்ய வேண்டும் ! "


சொன்னவர் இசையமைப்பாளர் , இயக்குனரிடம் !


இயக்குனர் " சரி " என்று தலையாட்ட


" வீணை மற்றும் " லைட் கிலாச்சிகள் " மெட்டில்

பாட்டு அரங்கேறி பாட்டு ஹிட் ஆனது !
அந்த பாட்டுத்தான் :


" அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி !

என்னை சேரும் நாள் பார்த்து சொல்லடி ! "
சரி , கண்ணதாசனின் வரிகள்

ஏன் மாற்றப்படவில்லை ? "கண்ணதாசன் அப்போது

காங்கிரஸ் கட்சியில் சேர

துடித்தார் !

எனவே ......அவர் ...

" சிவகாமி மகனிடம் " பாட்டில் தூது விட்டார் !


" சரியா ! ' அது யார்யா ' சிவகாமியின் மகன் ' ? "


வேறு யார் .....

" கர்ம வீரர் காமராஜ் தான் ! "


" சிவகாமியும் - அவரது செல்வனும் !

பாடல் :@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுத்த பாடல் !

சரோஜாதேவியை

திட்டியும் ( ! )

பத்மினியும் வாழ்த்தி ...............வரவேற்றும்

கண்ணதாசன்

எழுதிய பாடல் !
எம்கே ஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Hari Prasath on Sun Nov 15, 2015 6:50 pm

மிக அருமை
 

" இட்லி இல்லேன்னா தோசை தான் ......
தோசை இல்லேன்னா பரோட்டா தான் ! "

சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்பு
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 16, 2015 7:06 pm

இதை பலவாறு அறிப்பட்ட கதை அதை பகிர்ந்தமைக்கு நன்றி.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8575
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Tue Nov 17, 2015 1:13 pm

நம்ம டாக்டர் சார் இருக்காங்களே, சும்மா சாதாரணமா சகல விசயங்களையும் கறச்சி கலந்து சுந்தர எழுத்தோட, இதமா பதமா நம்மை படிக்க வச்சிடுவாரு. சும்மா படிச்சிகிட்டே இருக்கலாம், அம்புட்டு சுவையாக இருக்கும் அவரோட எழுதும் திறன். வாழ்த்துகள் டாக்டர் சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by pkselva on Wed Nov 18, 2015 8:56 am

அருமையான பதிவுகள்!

மேலும் தொடர வேண்டுகிறேன்


செல்வா!
avatar
pkselva
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 108
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum