உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Today at 9:35 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by ayyasamy ram Today at 9:32 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Today at 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Today at 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Today at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Today at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Today at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Today at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» நீ . . .நீயாக இரு !
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 7:14 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:08 pm

» இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது
by T.N.Balasubramanian Today at 7:01 pm

» வருங்கால மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்
by ayyasamy ram Today at 5:16 pm

» 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை
by ayyasamy ram Today at 5:04 pm

» இடத்தை காலி செய்யுங்கள்
by சக்தி18 Today at 4:11 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:53 pm

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

Admins Online

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை
அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Jul 09, 2015 5:45 pm

  மடல்களை வரைந்த :


1. திரு . அய்யாசாமி

மற்றும்

2. மாணிக்கம் நடேசன்


- இவர்களுக்கு நன்றி !

################################################      சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !பாடல் :  2 .  

 " குட்டி ஆடு தப்பி வந்தா

குள்ள நரிக்குச் சொந்தம் "


-  படம் :  " பாச வலை " ( 1954 )
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 KiRKOf8SGyCokzBfrJAu+44db0abfb0375789b75904614c6d4f40_m

பாடல் : பாட்டுக் கோட்டையார் !
 பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 CkGSPV0YRfe43oG4y6Hn+pattukottai-kalyanasundaram
அந்த காலத்தில் ......ஏன்.......

இந்த காலத்தில் கூடத்தான் .....பிற மொழிகளில்

: ஹிட் " ஆனா பாடல்களை தமிழில் " காப்பி " அடிப்பதை

ஏறக்குறைய எழுதாத சட்டமாக ஆகிவிட்டது ......அல்லவா !


முன்பு எல்லாம் ....அப்படி காப்பி அடிக்கப் பட்டதை சற்று

அடக்கமாக சொல்லி ஒத்துக் கொள்வதை நாம் பார்த்திருக்கின்றோம் !

ஆனால் .... இப்போது :


" ஆமாம் யா ! காப்பி அடித்தி உள்ளோம் , அதனால்

என்ன ? "

என்று கேட்கும் அளவுக்கு சற்று " துணிந்து "  விட்டார்கள் !
ஆனால் ........

மெல்லிசை மன்னர்கள் அந்த மாதிரியான

" காப்பி " அடிக்கும் பழக்கம் அவர்களுக்கு இல்லை ,

இதனை அவர்கள் ஆரம்பித்தில் இருந்தே கடை பிடித்துக்

கொண்டு இறுதி வரைக்கும் அப்படி இருந்தனர் / இருக்கின்றார் !


அவ்வளவு ஏன் , இளையராஜா கூட ஆரம்ப கால

கட்டங்களில் சில பாடல்களை பிற மொழிகளில் இருந்து

" சுட்டிருக்கின்றார் " !

ஆனால் மெல்லிசை மன்னர்கள் அப்படி இல்லை !

ஒரு சில பாடல்கள் , அதன் மூலப் பாடல்களின்

" concept "
ஐ பயன்படுத்தி இருப்பார்கள் .........ஆனால் அது

" காப்பி " அல்ல !( எடுத்துக் காட்டு : " மாலையிட்ட மங்கை " யில் வரும் மிகப்

பிரபலமான பாடல் " செந்தமிழ்த் தேன்மொழியாள் " பாடல் ,

இந்தியில் " ஆன் " படத்தில் அவர்களது குருநாதர் நெளஷாத்

இசையமைத்த பாடல் ஒன்றின்  " கான்செப்ட் " !    )  

100 படங்களுக்கும் மேலாக படங்களை தயாரித்து

வெளியிட்ட :


" மாடர்ன் தியேட்டர்ஸ் "
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 V7bM62JlQUyW76F2xTzd+1418324161-1074_Modern-Theatres-in-its-heyday


   அதிபர்

டி. ஆர் . சுந்தரம்

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 SkFNlPVqQtOC40jE7J3A+1418324037-748_TR-Sundaramஅப்படி இல்லை !

தான் தயாரிக்கும் அனைத்தூ படங்களிலும்

ஒரு சில பாடல்களாவது பிற மொழி களில் வெளிவந்த

படங்களின் பாடல்களை " காப்பி " அடிப்பதையே

" தொழில் "

ஆக கொண்டிருந்தார் !
 இந்த :

" இரு துருவங்களும் "

ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் !
மெல்லிசை மன்னர்கள் , நறுக்கு தெறித்தாற்பூல

" மாடர்ன் தியேட்டர்ஸ் " அதிபரிடம் சொல்லிவிட்டனர் !

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 C549EWkSwqRXbmMoX5Sr+DSC06885

" ஐயா !   எங்களுக்கு " காப்பி " அடிக்கும் பழக்கம்  இல்லை ,

ஆனால் உங்களுக்கு மிகவும் பிடித்தவாறு இசையமைப் போம் !

உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் ! "


என்று சொல்லிவிட்டனர் !

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் தலையாட்டினார் !
" சுகம் எங்கே  " ( 1954 )

இந்த படத்திற்கு முதன் முதலில் இரட்டையர்கள்

' மாடர்ன் தியேட்டர்ஸ் '  க்கு இசையமைத்தனர் -  அத்தனைப்

பாடல்களும் மெல்லிசை மன்னர்களின் :

" ஒரிஜினல் ட்டின் களே "


மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் மிகுந்த மகிழ்ச்சி

அடைந்தார் !


( எனினும் " மாடர்ன் தியேட்டர்ஸ் " அதிபரின் பழக்க தோஷம்

விடவில்லை !

என்ன ஆச்சு ?

யாருக்கும் தெரியாமல் " டாக்ஸி டிரைவர் " என்கிற இந்திப்படத்தில்

இருந்து ஒரு பாடலை உருவி  " சுகம் எங்கே " படத்தில் சேர்த்து விட்டார் !

அது தனி கதை ! )  
" பாசவலை "
மெல்லிசை மன்னர்கள் , " மாடர்ன் தியேட்டர்ஸ் "

இல் இசையமைக்கும் இரண்டாவது படம் !


இந்த படத்திலாவது , வேறு மொழிப் பாடல் ஒன்று கூட இல்லாதவாறு

அவர்கள் பார்த்துக்கொள்ள படாத பாடு பட்டனர் !


இதற்காக அவர்கள் சேலத்திற்கு முகாமிட்டு வந்திருந்தனர் !அந்த " பாச வலை "  படத்தில் ஒரு பாடல் :


அப்போதெல்லாம் ஒரு பாடல் காட்சிக்கு இரண்டு பாடலாசிரியர்கள்

கூட ஒன்றாக அமர்ந்து பாடலைப் படைக்கும் பழக்கம்

இருந்தது !

யார் எழுதிய பாடல் வரிகள் சிறப்பாக இருக்கின்றதோ அவர்

எழுதிய பாடல் வரிகள் பாடலில் இடம் பெறும் !

இரு பாடலாசிரியர்களும் சிறப்பாக எழுதியிருந்தால்..... ?

ஒன்றும் பிரச்சனை இல்லை ......இருவரின் வரிகளும்

ஏற்றுக்கொள்ளப்பட்டு , அவை  பாடலில் இடம் பெறும் !போட்டியின்றி , பொறாமை இல்லாத நற்காலம் அது !


இப்போது " பாசவலைக்கு " வருவோம் !


" பாச வலை "  படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு இரண்டு

பெரிய பாடலாசிரியர்கள் அங்கே பாடலை எழுதிக்கொண்டு

இருந்தனர் !ஒருவற் : கண்ணதாசன் !


இன்னொருவர் : மருதகாசி !


இரண்டு பேர்களும் பாடல் சரியாக வருவதற்கு முயற்சி செய்து

கொண்டிருந்தனர் !சரி பட்டு வரவில்லை !


பாடல் சரியாக வராமல் " வளிச்சுக்கொண்டெ " ......ஹி ..ஹி

இழுத்துக்கொண்டே  சென்றது !


ஒரு நாள் இல்லை , இரண்டு நாள் இல்லை !


ஒரு வாரம் ஆகிவிட்டது !


மெல்லிசை மன்னர்களுக்கு ரொம்ப கடுப்பு ஆகிவிட்டனர் !

வெறும் மன உளச்சலுக்கு ஆகிவிட்டனர் !

[color:94e4= #330000]இந்த சமயத்தில் ...........


" மாடர்ன் தியேட்டர்ஸ் "   நிறுவன மேனேஜர் :

சுலைமான் , மெல்லிசை மன்னர்களை சந்திக்க உள்ளே

வந்தார் .....


சொன்னார் :

" விசு !  ஒரு வார காலமாக இந்த பாடலின் வரிகள் ,

யாருக்கும் சரிபட்டு வரவில்லை !

எனக்குத் தெரிந்த ஒரு  புதியவர் எழுதியதை படித்துப் பார்த்து,

அவை உங்களுக்குப் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் ! "
அந்த புதியவர் யார் என்று சுலைமான் , மெல்லிசை

மன்னரிடம் சொல்லவில்லை, சொல்லியிருந்தாலும் கூட யாருக்கும்

அந்த புதியவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியாது !


சுலைமான் சொன்னதைக் கேட்டு மெல்லிசை மன்னர் சீறினார் .....

பின் வருமாறு சொன்னார் :
   " அட போய்யா !

இங்கே இரண்டு ஜாம்பவான்கள் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் !.....

எவனோ பாட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கிறானாம் ! ...

பார்க்கணுமாம் ! '

 சுலைமான் முகத்தில் ஈயாடவில்லை !

பதில் பேசாமல் போய்விட்டார் !


மறு நாள் .......

சுலைமான் வந்தார் , மெல்லிசை மன்னரை சந்தித்தார் .....

அந்த புதியவரைப் பற்றி சொன்னார் .....

அந்த பேப்பரில் எழுதிய பாடல் வரிகளைப் படிக்க கொடுத்தார் ....


மெல்லிசை மன்னர் ....சீறினார் !

சுலைமான் போய்விட்டார் !அதன் பின்னர்      ......?


சுலைமான் முகமது கஜினி ஆகிவிட்டார் !


" என்னய்யா சொல்றே ? "

என்றா கேட்கிறீர்கள் !


ஒண்ணும் இல்லே ......

மெல்லிசை மன்னரிடம் அடிக்கடி

" படை "    எடுத்து

புதியவரைப் பற்றி சொல்ல சொல்ல......மெல்லிசை மன்னரும் அதே போல் சீறுவார் !

 கரைப்பார் கரைத்தால்

கல்லும் கரையும்

அல்லவா !நாட்கள் நகர்ந்து கொண்டெ போனதே தவிர

வரிகள் கிடைக்கப் பெறாமல் இரு பாடலாசிரியர்கள்

வெறிச்சோடிக் கிடக்க , மெல்லிசை மன்னர்கள்

விரக்தியின் விளம்பில் இருந்தனர் .......

அப்போது ......
" மாடர்ன் தியேட்டர்ஸ் " மானேஜர் சுலைமான்

மீண்டும் அதே பல்லவியைப் பாட வந்தார் !


" என்னய்யா இது ! ரொம்ப ரோதனையாப் போச்சு !

கொண்டாயா அந்த பாட்டை !

என்னத்தை அவன் கிழித்திருகிறான் என்று பார்ப்போம் ! "======== மெல்லிசை மன்னரின் வெறுப்புடன் பேச்சு !

சில நிமிடங்களில் , வெளியில் நின்றிருந்த அந்த

இளவயது வாலிபருடன் பாடலுக்கான " சிட்டிவேஷனை " சொல்லி

வாங்கி வந்தார் , சுலைமான் !

எழுதிக் கொடுத்த அந்த வாலிபன் 'விருட் ' என்று நடையை

கட்டிவிட்டார் !
மெல்லிசை மன்னர் அந்த வாலிபன்

" எழுதிக் கிழத்ததை "

படித்துப் பார்த்தார் :

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 CiafXaCQQ6vHDoX0RCqC+ar747pattukottai-kalyanasundaram
" குட்டி ஆடு தப்பி வந்தா

குள்ள நரிக்குச் சொந்தம் !


குள்ள நரி மாட்டிக்கிட்டா

கொறவனுக்குச் சொந்தம் !


தட்டுக் கேட்ட மனிதர் கண்ணில்

பட்டதெல்லாம் சொந்தம் !


சட்டப்படி பாக்கப் போனா

எட்டடிதான் சொந்தம் ! "
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Nzme0SHS2C2OIYgNxMsg+downloadஇப்படி வரிகள் போய்க்கொண்டே இருந்தன !


படித்துப் பார்த்த மெல்லிசை மன்னர் பரவசமானார் !


அந்த பாடல் காட்சிக்கு எற்றவாறு செதுக்கி வைத்தாற்போல ,

வந்து விழுந்தன வார்த்தைகள் !அது மட்டுமா ! தான் நினைத்தமாதிரி பாடல் எப்படி வரவேண்டுமோ

அது மாதிரியே சரியான வார்த்தைகளைப் போட்டு பாடல்

வரையப்பட்டிருந்தது !

 " பலே ! பலே ! பாடல் பிரமாதம் !........

எழுதிய ஆளை அழைத்து வா , சுலைமான் ! "சொன்னார் மெல்லிசை மன்னர் !
சுலைமான் , வெளியெ சென்றார் !

" ஓடிப் போக " எத்தனித்த அந்த நபரை அழைத்து வந்தார் !" இவர்தான் பாட்டு எழுதியவர் ! "

என்றார் சுலைமான் !
பனை மரத்தில் பாதி !

அந்த அளவுக்கு அவரின் உயரம் !
அவர்தான் :பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 SPD3kpOJRTaNnhOGDhfm+ar747pattukottai-kalyanasundaramஅவரை மனதாரப் பாராட்டிய மெல்லிசை மன்னர்

பாடல்வரிகளை மீண்டும் படித்தார் .....20 நிமிடங்களில் மெட்டமைத்து இசையமைத்தும் விட்டார் !
[color:94e4= #000000]ஆனால் .......

மெல்லிசை மன்னர் மனம் ஒடிந்து விட்டார் !


என்னவாம் ?


இத்தனை சிறப்பாக எழுதிய ஒருவரை

புறக்கணிக்கப் பார்த்தோமே !

அவரை அவமானப் படுத்திவிட்டோமே !"


உள்ளூற மெல்லிசை மன்னரின் மனம் வாட்டியது !

அன்று இரவு .......


" மாடர்ன் தியேட்டர்ஸ் "  வளாகத்தில் இருந்த பூஜை அறைக்குள்

தஞ்சம் அடைந்தார் மெல்லிசை மன்னர் !


பூஜை அறையின் கதவை சாத்தி , தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார் !சுவரில் , தன தலையை முட்டி மோதி

" மடார் " , " மடார் "

என்று தன்னைத் தானே அடித்துக்கொண்டார் !

" எண்டா , விஸ்வநாதா ! அதுக்குள்ளெ உனக்கு அவ்வளவு

திமிரா !

அறிவு கெட்டவனே !

நீ என்ன பெரிய ஆள் என்ற நினைப்பா ?

ஓர் ஆள் நன்றாக பாடலை எழுதிக் கொண்டு வந்து படிக்கச்

சொல்கிறான், அதனை படித்துக் கூடப் பார்க்காமல்

நாட்களை கடத்தினாயே,  உனக்கு எவ்வளவு

கொழுப்பு ? "தன மனசாட்சியை , தானே கேட்டு அழுத்தி அழுது இரவு பூரா

பூஜை அறையிலே பொழுதை போக்கினார் !


அன்று இரவு , மெல்லிசை மன்னர் சாப்பிடவில்லை !

யாருடனும் பேசவில்லை !

மற்றவர்கள் எவ்வளவோ சமாதானப் படுத்தியும்

அவர் ஆறுதல் அடையவில்லை !
மெல்லிசை மன்னரின் பல நல்ல

குணங்களில் இதுவும் ஒன்று !அன்றிலிருந்து மெல்லிசை மன்னர்

ஒரு சபதம் மேற்கொண்டார் :என்ன சபதம் அது ?


        " இனிமேல் , யார் வந்து என்னைப் பார்க்க

வேண்டும் என்றால் , அவருக்கு ஒரு 10 நிமிடங்கள்

ஆவது ஒதுக்கி அவரிடோ பேசி அனுப்புவது ! "
 

ஆமாம், மெல்லிசை மன்னரை , அடியேன் 3 முறை

சந்தித்த போதும்

அந்த " இசை தெய்வம் "  எனக்கு 10 நிமிடங்களுக்கும் மேல்

( ஒவ்வொரு சந்திப்பிலும் ! )

பேசி உரையாடியதை என்னால் எப்படி

மறக்க முடியும் , ஐயா !    
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 GPx5yTRkRnuQ09rcEVzM+DSC04486    (  மெல்லிசை  மன்னர், இந்த கட்டுரை

எழுதியவரை  பார்த்துக்கொண்டே

அவருடன்......ஹி.....ஹி ..... அவனுடன்

உரையாடுகின்றார் !    )  

 பாட்டுக்கோட்டையாரின்

அந்த பாட்டு !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%  அடுத்த பாடல் :

வாலி !

 எம்ஜிஆரின் கோபம் !

கொஞ்சம் கூட பயப்படாத  வாலி !

கோபத்தைத் தீர்த்த

அந்த பாடல் !

எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by shobana sahas on Thu Jul 09, 2015 8:36 pm

அய்யா பிரமாதம் ...... எம் எஸ் வி எவ்வளோ பெரிய மகான்...... எவ்வளோ அடக்கம் , வாழ்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் பாடம் கற்கிறார் . .. அவர் உடல் நலம் சீக்கிரம் முன்னேற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் .
உங்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அய்யா . அற்புதமான பதிவு . பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 103459460 பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 3838410834 பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by விஸ்வாஜீ on Tue Aug 18, 2015 9:35 am

அருமை நண்பரே நீண்ட நாட்களாகிவிட்டது காத்திருக்கிறோம்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1332
இணைந்தது : 25/09/2011
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Tue Aug 18, 2015 9:49 am

ஆமாம் அண்ணா, ரொம்ப நாளாய் உங்களை காணவில்லையே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Tue Aug 18, 2015 10:38 am

டாக்டர்சார் அவரது பணியில ரொம்ப பிசியா இருப்பாருன்னு நெனைக்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4367
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1319

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Tue Aug 18, 2015 11:53 am

@மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர்சார் அவரது பணியில ரொம்ப பிசியா இருப்பாருன்னு நெனைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1157968

இருக்கும் மாமா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by T.N.Balasubramanian on Tue Aug 18, 2015 12:14 pm

நன்றி நன்றி எம்கேஆர்சாந்தாராம் அவர்களே .
தெளிந்த நீரோடையில் ஓடி விளையாடும் குட்டி மீன்
போன்று இருந்தது , உங்கள் விவரிப்பு.
ரசித்து ரசித்துப் படித்தேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9399

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Aug 19, 2015 8:02 am

மடல்களை எழுதிய :1. ஷோபனா அவர்களுக்கும் ,


2. திரு. விஸ்வாஜி அவர்களுக்கும் ,


3. தங்கை கிருஷ்ணம்மா அவர்களுக்கும்

4. தங்கை கிருஷ்ணம்மா அவர்களுக்கும்

( இரண்டு மடல்களை எழுதினாங்க இல்லே , அதனால்தான் ! புன்னகை )


5. திரு . மாணிக்கம் நடேசன் அவர்களுக்கும்6. திரு . பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும்
நன்றி ! நன்றி நன்றி ! பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 1571444738

உங்களின் அனைவரின் அன்பையும்

என்றும் மறக்க மாட்டேன் !

சில பல வேலைகள் ,

சில பிச்சல்கள் ,

சில பிடுங்கல் கள் ,

சில லொள்ளுகள் ,

சில கொள்ளுகள் ,

சில ராவுகள் ,

சில 'லவுசுகள் ' .........


இத்தியாதி , இத்தியாதிகள் ......காரணமாக இக்கரைக்கு ......

அத்தான் " ஈகரை" க்கு எழுத முடியவில்லை !வெகு விரைவில் .....


இந்த இழையிலும் .....

மற்றும் " பாக்கி " வைத்துள்ள வேறு இழைகளிலும்

எழுதுவேன் .......


நேரம் தவறியதற்கு பொறுத்தருள வேண்டுகிறேன் !
எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Wed Aug 19, 2015 8:42 am

டாக்டர் பணி மிகவும் பழுவான பணி. டாக்டர் ஐயா, உங்கள் நிலையை நாங்களும் அறிவோம். உங்களது பொறுப்பு எந்த அளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே. சிறப்பான உங்களது பதிவு ஒரு தொடர்கதை படிப்பது போல் இருக்கிறது. அதனால் அடுத்தது என்னவாக இருக்கும் என காத்திருக்கிறோம். நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4367
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1319

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Wed Aug 19, 2015 6:39 pm

@மாணிக்கம் நடேசன் wrote:டாக்டர் பணி மிகவும் பழுவான பணி. டாக்டர் ஐயா, உங்கள் நிலையை நாங்களும் அறிவோம். உங்களது பொறுப்பு எந்த அளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே. சிறப்பான உங்களது பதிவு ஒரு தொடர்கதை படிப்பது போல் இருக்கிறது. அதனால் அடுத்தது என்னவாக இருக்கும் என காத்திருக்கிறோம். நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1158043

மாமா சொல்வது ரொம்ப வாஸ்த்தவம்...........நன்றி அண்ணா, அப்பப்போ வந்து போங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by shobana sahas on Thu Aug 20, 2015 12:58 am

அய்யா .. முடிந்த போதெல்லாம் வாருங்கள் .. எங்களுக்கு செய்திகள் பல தாருங்கள் ... நன்றி அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Namasivayam Mu on Thu Aug 27, 2015 4:30 pm

மிகவும் நன்று
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Fri Aug 28, 2015 7:17 am

மடல்களை எழுதிய :


1. திரு. மாணிக்கம் நடேசன்


2. தங்கை கிருஷ்ணம்மா


38000  பதிவுக்கும் மேல் !   அப்பா ! அப்பப்பா !  அம்மா ! அம்மம்மா !  இத்தனை

பதிவுகள் !  "  சர்ர்க்க் " !   அத்தான் !    உங்களை நெட்டி முறித்து

திருஷ்டி கழிக்கிறேன் !

வாழ்த்துக்கள் தங்கை சுமதி !

இன்னும் பல லட்சங்கள் பதிவுகள் நீங்கள் இடவேண்டும் !

வாழ்த்துக்கள்  !


3. ஷோபனா சஹாஸ்


4, திரு. நமசிவாயம் -  உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன் !
ஆகிய அனைவருக்கும் நன்றி !@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


b]
     சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !பாடல் :  3  
[/b]

  "  தாழம்பூ " (  1965 )
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 SElxNbcZTvO2YruhI36b+thazampuposter


எம்ஜிஆர் நடித்த  படத்தில் இருந்து

ஒரு பாடல் !


[color:8c67= #006600]  பாடலை எழுதியவர் :


வாலி !
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 D046GkdQRRG771fviZEV+vaa

" என்னய்யா !   ' லேட் கமர் ' !    வந்த வேகத்தில் எந்த பாடல்

என்பதை குறிப்பிட மறந்தீரோ ! ? "


என்றா கேட்கிறீர்கள் ! 
 காரணம் இல்லாமலா " கம் " என்று எழுதாமல் விட்டேன் !

அது எந்த பாடல் என்று இப்போதே குறிப்பிட்டால் கட்டுரையின்

சுவாரஸ்யம் கிட்டாமல் போய்விடும் !


அத்தான் !( சரி , சரி , அதற்காக முந்திரிக்கொட்டை மாதிரி இப்போதே

கட்டுரையின் பின் பக்கம் எட்டிப் பார்த்து

உங்களின் சுவாரஸ்யத்தை நீங்களே

" லபக்கிக்" கொள்ளாதீர்கள் , அம்புட்டுத்தேன் !    என்ன கொடுமை சார் இது


 எம்ஜிஆர் -  வாலி .
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 D5IyLPE8SOKE9v6rm8lh+images(1)சுமார் 25 ஆண்டுகள் காலம் , கிட்டத்தட்ட

" கணவன் - மனைவி " போல

வாழ்ந்து வந்த நட்பு !


எம்ஜிஆர் மற்றும் வாலி - இந்த இருவரைப் பற்றி முற்றிலும்

அறிந்தவர்கள் நான் சொன்ன கூற்றை

மறுத்து பேசமாட்டார்கள் !முதன் முதலில் , எம்ஜிஆர் க்காக வாலி பாடலை எழுதிய

" நல்லவன் வாழ்வான் " படத்திற்காக

சீர்காழி - சுசீலா பாடிய :

" சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் "

இடம் பெற்றபோது எம்ஜிஆருக்கு வாலி பற்றிய

ஜாதகம் மற்றும் அரிச்சுவடி கூட  தெரியாது !

அந்த பாடல்  , அண்ணா அவர்கள் சிபார்சு செய்து பதிவு

செய்த பாடல் !அப்போ எப்போ ?


எப்போவா .....?


" படகோட்டி " படத்தின் அனைத்துப் பாடல்களையும் படத்தயாரிப்பாளர்

ஜி என் வேலுமணி யின் தயவாலும் மெல்லிசை மன்னர்களின்

தயவாலும் வாலி எழுதியபோது , எம்ஜிஆருக்கு அப்போதுதான்

அவரின் திறமை தெரிந்தது !அன்றிலிருந்து ........


எம்ஜிஆர் , வாலியை " கப் "  என்று பிடித்துக் கொண்டார் !


திருக்கழுக்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் :" இனிமேல் என் படங்களுக்கு வாலிதான் பாடல்களை

எழுதுவார் ! "


என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அளவுக்கு வாலிக்கு

எம்ஜிஆரின் நட்பு கிடைத்தது !(   " அந்த காலத்தில் பாடல்களுக்கு கண்ணதாசன் தானே புகழ் பெற்றவர் ,

அவரை என் எம்ஜிஆர் கைவிட்டுவிட்டார் ? "


என்றா கேட்கிறீர்கள் ?


அந்த ' கதை ' ஐ  நான் எழுத வேண்டும் என்றால் .........

அதுவே ஒரு தனி கட்டுரை ஆகிவிடும் .........

எனவே அந்த " கசமுசா " வை அப்புறம் வைத்துக் கொள்ளலாமே !  )  

 " படகோட்டி " படத்தின் 7  (   எட்டு பாடல்கள் - ஒரு பாட்டு

படத்தில் இல்லை !   )  பாடல்கள் அனைத்தும் செம ஹிட் !

பிறகு வந்தது : " தெய்வத்தாய் "   - எல்லா பாடல்களும் செமஹிட் !

' எங்க வீட்டுப் பிள்ளை ' -  எல்லாப் பாடல்களும் செம ஹிட் !எம்ஜிஆர் மகிழ்ச்சி அடைந்தார் !


வாலியும் மகிழ்ச்சிக்கு அளவில்லை !
அப்போது .......

என்ன நடந்தது தெரியுமா ?" சொன்னால்தானே தெரியும் ,

சொல்லித்தொளையும் ஐயா ! "


என்றா புலம்புகின்றீகள் ?


சொல்றேன் !
யாருக்கும் சொல்லாமல் ,

யாரையும் கூப்பிடாமல் ,

வாலி திருப்பதிக்குச் சென்று

திருட்டு +  காதல்  கல்யாணம்

செய்து கொண்டார் !
எப்படி இருக்கும் , எம்ஜிஆருக்கு ?
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 0Fbu4C5LSp1fGeBDFREg+vaaliramana


( வாலி , தன துணைவியார் : ரமண திலகம்

உடன் ! நாடக நடிகையான ரமணதிலகம் -ஐ வாலி காதலித்து திருமணம்

செய்து கொண்டார் !

ரமண திலகம் நடித்த ஒரே படம் :


" பணம் தரும் பரிசு " ( 1965 ) )
பயங்கர கடுப்பு ஆனார் எம்ஜிஆர் !" இந்த வாலி பயலுக்கு என் செலவிலே திருமணம் செய்து

வைக்கிறேன் என்று கூட சொன்னேனே , இப்போது

எனக்கே , திருமணத்திற்கு அழைக்காமல் துரோகம்

செய்து விட்டாரே ! "


என்று மனம் நொந்தார் !ஓர் அறிவிப்பு செய்தார் :
" இனிமேல் என் படங்களுக்கு வாலி

பாடல்களை எழுத மாட்டார் !  "
விளைவு ?
எம்ஜிஆர் -ஐ வைத்து படம் எடுத்து அவரிடம் ' கால் ஷீட் ' வாங்கிய

படத்தயாரிப்பாளர்கள் வாலியை நெருங்கக் கூட துணியவில்லை !வாலிக்கு எம்ஜிஆர் படங்களுக்கு பாடல்களை எழுத 'சான்ஸ் '

போயி போச்சு !


அதுவும் எம்ஜிஆர் எப்பேர்ப்பட்ட மனிதர் !

வாலியை தன உடன் பிறந்த தம்பியைப் போல் பாவித்து

அவருக்கு தன படங்களுக்கு  பாடல்களுக்கு 'சான்ஸ் ' வாங்கிக் கொடுத்தார்.இந்த செய்தியைப் படியுங்கள் ,

உங்களுக்கே நன்கு புரியும் !
வாலியின் ஆரம்ப கால கட்டங்களில் , ' திரை இசைத் திலகம் '

கே . வி . மகாதேவன் அவர்களுக்கு வாலியை , என்ன காரணத்தாலோ

வெறுக்க ஆரம்பித்தார் !


சில பேர்களுக்கு - சில சமயங்களில் -  காரணம் தெரியாமல்

விரும்புவார் கள் /  வெறுப்பார்கள் -  இந்த அனுபவத்தை நானும்

உணர்ந்துள்ளேன் !

நீங்கள் எப்படி , சார் ?

இந்த மாதிரியான உணர்ச்சி மகாதேவன் அவர்களுக்கும் , வாலியை

பார்த்த பின்பு நேர்ந்தது !" யார்யா அவரை அழைத்து வந்தது !

அது என்ன " வாலி - தொலி "   என்று பேர் வைத்துக்கொண்டு ! "இதுதான் கே வி எம் அவர்களின் 'கம்மெண்ட் ' - வாலியைப பார்த்து !இதனை நேரில் கேட்ட தொலி ........ஹி... ஹி  ... வாலி உடனே

'ஜகா '

வாங்கினார் !


" கே விம் அவர்கள் இசையமைத்தால் நான் பாடல்களை

எழுதமாட்டேன் ! "


இதுதான்  வாலியின் ' கம்மென் " !
இந்த சமயத்தில் ............................ !" உடன் பிறப்பு "-  1963 .


இந்த பெயரில் , எம்ஜிஆரை வைத்து ஒரு படம்  எடுக்க

ஒரு கம்பனி முன் வந்தது !

எம்ஜிஆர் உடன் சாவித்திரி !

படக் கம்பனி ஆட்கள்  வாலியை 'அட்வான்ஸ் " உடன் வந்து

கூப்பிட்டார்கள் !

வாலியும் பணத்தை வாங்கிக் கொண்டார் !

" எங்கே மெல்லிசை மன்னர்களை காணோம் ? "

அந்த படத்திற்கு இசை மெல்லிசை மன்னர்கள் என்று வாலி

அப்படி கேட்டார் !


ஆனால் ......


" உடன் பிறப்பு " படத் தயாரிப்பாளர்கள் மென்று முழுங்கி  மெதுவாக ...." வாலி சார் !   இந்த படத்திற்கு இசை கே வி எம் அவர்கள் ! "


என்று சொன்னார் கள் !


இதனைக் கேட்டவுடன் வாலியின் முகம் சிவந்தது !

' அட்வான்ஸ் ' ' டப்பு' வை  ' வாபஸ் ' செய்தார் - ' விருட் ' என

' எக்சிட் ' (  EXIT )   ஆனார் !(   " யோவ் ! தமிழில் எழுதுயா ! "  - கேட்பது நீங்கள் தானே !

" சர்த்தான் நயனா !  " - இது நான் !  )  விஷயத்தை கேள்விப்பட்டார் எம்ஜிஆர் , வாலியை அழைத்து

சமாதானம் செய்தார் !


உம ... உம ....எம்ஜிஆர் ' அம்பேல் ' ஆனார் !


ஆனாலும் எம்ஜிஆரா இல்லே கொக்கா !


மாற்று எற்பாடு செய்தார் ' வாத்தியார் ' !


என்ன அது ?
எம்ஜிஆரே , வாலியிடம் பாடலை எழுதி

வாங்கி அதனை கே வி எம் விடம் கொடுத்து பாடல்களுக்கு

இசையமைக்க எற்பாடு செய்தார் !
அத்தனை ப்ரியம் - வாலியின் மேல் எம்ஜிஆருக்கு !ஆனால் அதனையும் மீறி வாலி , எம்ஜிஆர் இன் மீது

வைத்தார் - 'ஆப்பு "  !எம்ஜிஆருக்கு கோபம் வருமா , வராதா !" ரும்" !  

   
 ( ஆனால் என்ன பலன் !  , ' உடன் பிறப்பு ' படம்

பாதியில் நிறுத்தப்பட்டது , வெளிவரவில்லை !

1990 களில் வந்த " உடன் பிறப்பு "  சத்தியராஜ் , சுகன்யா நடித்து

பி . வாசு இயக்கியது - அது வேறே !  )  ( இன்னொரு ' பிராக்கட் நியூஸ் ' !

வாலியின் திறமை பின்னர் அறிந்த 'திரை இசைத் திலகம் '

விரைவில் வாலியின் நட்புக்கு பாத்திரமானார் !

'அரசகட்டளை ' , ' பேசும் தெய்வம் '

' அடிமைப் பெண் ' - இவை வாலி - கே வி எம்

பெருமையை பறை சாற்றும் படங்களில் சில

சான்றுகள் ! )
 சரி , வாலி என்ன சொன்னார் ?
 " திருமணம் என்பது என் சொந்த விஷயம் ,

அதில் யாரும் தலையிடமுடியாது !

என் குடும்பத்தினரைக் கூட யாரையும் அழைக்காமல் நான்

திருமணம் செய்து கொண்டேன் !

இந்த விஷயத்தில் எம்ஜிஆர்  அண்னன் கோபித்துக் கொண்டால்

நான் என்ன செய்வது ? "

ஆனாலும் வாலிக்கு பாடல்களை எழுத எம்ஜிஆர் படங்களைத்

தவிர மற்ற படங்களில் பாடல்களை எழுத அழைப்பு வந்தது !

அவைகளில் வாலி கவனம் செலுத்தி .......

புது மனைவியுடன் வாழ்க்கையை தொடங்கினார் !
இந்த சமயத்தில் ......


எம்ஜிஆர் படங்களை தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்கள்

" வாலியை வைத்து பாடல்களை வைத்தால் நன்றாக

இருக்கும் "

என்று சொல்லி எம்ஜிஆரை  நச்சரிக்க ஆரம்பித்தனர் !


படங்களை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் கூட

இதே நச்சரிப்புத்தான் !
எம்ஜிஆர் யோசிக்க ஆரம்பித்தார் !
ஒரு வாரப் பத்திரிக்கை இந்த சமயத்தில்

இப்படி ' கிசு - கிசு ' த்தது !

"  ஒரு மூன்றெழுத்து நடிகருக்கு

இரண்டெழுத்து பாடலாசிரியர் பாடல்களை

எழுதினால்தான் படம் ஓடும் ! "
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 6W6zTfXgTBSrT86aJEdl+images

 வாலியின் பிரச்சனை பெரிதாவதாக

எம்ஜிஆர் உணர்ந்தார் !

வாலியை அழைத்து சமாதானம் செய்து , அவரை மீண்டும்

தன படங்களில் பாடல் எழுத ஏற்பாடு செய்ய விரும்பினார் !

[color:8c67= #336600]அங்கே ....வாலியின் வீட்டில் .....
வாலியின் காதல் மனைவி ரமண திலகம் , தன கணவரை

சமரசப்படுத்தில் முனைந்தார் !" என்னங்க !  எம்ஜிஆர் எவ்வளவோ பெரியவர் !

அவர் கோபித்துக் கொண்டதில் என்ன தவறு ?

உங்கள் மேல் கொண்ட அன்பினால்தான் அவர் உங்கள் மேல்

கோபம் ஆக உள்ளார் , எனவே நீங்களே அவரை சந்தித்து

பேசிவிடுங்கள், அதுதான் நல்லது ! "ஆனால் வாலி ' கம் '  என்று இருந்துவிட்டார் !ஒரு நாள் காலை ......


வாலியின் வீட்டுக்கு  ' தாழம்பூ " படத் தயாரிப்பாளர் வந்தார் ....

சொன்னார் :" சின்னவர் ( எம்ஜிஆர் )   உங்களை அழைத்து வரச் சொன்னார் ! "வாலி ....அசைந்து கொடுக்கவில்லை .....


" வர முடியாது ! "


வாலி !


" சின்னவர் உங்களுடம் சேர்ந்து காலை உணவு சாப்பிட விரும்புகிறார் ! "" ஐயா ! நான் காலை உணவை எப்போதோ முடித்துவிட்டேன் ! "


" சின்னவர் , வெறும் காலை உணவுக்கு மட்டும் உங்களை

அழைக்கவில்லை ! "
" தாழம்பூ " உக்கும் ( ! )    வாலிக்கும் நடந்த உரையாடல்களைக்

கேட்ட  ரமண திலகம் வாலி யை ஒப்பேத்தி ( ! )   ஒரு வழியாக

அவரை தோட்டத்திற்கு ' பார்சல் ' கட்டினார் !


தோட்டத்தில் .....

வாலியை எம்ஜிஆர் வரவேற்றார் !

காலை உணவை சாப்பிட அழைத்தார் !

வாலி , ( மீண்டும் ! )   காலை உணவை சாப்பிட்டார் !
" வாலி !   நம்ம அடுத்த படம் " தாழம்பூ " !

அந்த படத்தில் நீங்கள் பாடல்களை எழுதவேண்டும் !

" சரி அண்ணே ! "

- இது வாலி !

எம்ஜிஆர் பாடலின் " சிட்டிவேஷன் " ஐ சொன்னார் :

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Ne1mFsMRlirPoYW5q1gR+download

" படத்தில் , கதாநாயகி கோபித்துக்கொண்டு

காரில் போகிறார் !

அவரைப் பின் தொடர்ந்து கதாநாயகன் , நாயகிக்கு

" அட்வைஸ் "

செய்தபடியே பாடவேண்டும் !


எங்கே பாடலை எழுதுங்கள் , பார்க்கலாம் ! "

 வாலி கொஞ்சம் கூட தயங்க வில்லை .....

பாடலை எழுதினார் !
" எங்கே போய்விடும் காலம் !

அது என்னையும் வாழ விடும் !

நீ  இதயத்த்தை திறந்து வைத்தால்

அது உன்னையும் வாழவைக்கும் ! "  


எம்ஜிஆர் பாடலைக் கேட்டார் !

அவருக்கு கோபம் வந்தது !

அங்கே :


" நாயகன் :  வாலி

நாயகி    : எம்ஜிஆர்   "


போல  வாலி எழுதியதை எம்ஜிஆர் ஒன்றும்

சொல்ல முடியவில்லை !


படத்தின் காட்சிக்கேற்ப பாடல் வரிகள் ஜோராக

அமர்ந்திருக்கின்றது அல்லவா !


எம்ஜிஆரால் என்ன செய்ய முடியும் !" ஆனாலும் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் , வாலி ! "


எம்ஜிஆர் சொன்னது !


 வாலி சிரித்துக் கொண்டெ

எம்ஜிஆஇடம் விடை பெற்றார் !

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அடுத்த பாடல் :
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 9aWyWcLZRqWGA7qoYW0n+PNKtc0910கண்னதாசன் !அண்ணாதுரை


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 YVEt7imlRxub44e8humS+annaஅவர்களை  " கன்ன பின்னா " என்று

திட்டித் தீர்த்து

எழுதிய பாடல் !
எம்கே ஆர் சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ayyasamy ram on Fri Aug 28, 2015 7:31 am

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 103459460 பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 3838410834
-
தொடருங்கள்...
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Fri Aug 28, 2015 3:28 pm

//மடல்களை எழுதிய :

தங்கை கிருஷ்ணம்மா !

38000 பதிவுக்கும் மேல் ! அப்பா ! அப்பப்பா ! அம்மா ! அம்மம்மா ! இத்தனை

பதிவுகள் ! " சர்ர்க்க் " ! அத்தான் ! உங்களை நெட்டி முறித்து

திருஷ்டி கழிக்கிறேன் !

வாழ்த்துக்கள் தங்கை சுமதி !

இன்னும் பல லட்சங்கள் பதிவுகள் நீங்கள் இடவேண்டும் !

வாழ்த்துக்கள் !//

மிக்க நன்றி அண்ணா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 14 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை