ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை
அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down


Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Mon Feb 23, 2015 7:44 am

அன்பு மிக்க திரு . மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு ,

முதலில் உங்களின் கடிதத்திற்கு மிக்க நன்றி !


நான் இங்கே : " திமிசு கட்டை " மாதிரி நன்றாகத்தான்

இருக்கிறேன் !

வழக்கம் போல ' நேரம் இல்லாத குறை ' தான் !

இடையில் நேரம் இருக்கும் போது "


" பாடிய முதல் பாட்டு "

என்கிற திரியில் பி. லீலா அவர்கள் பாடிய சில பாடல்களின்

தொகுப்பை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் !


" பாலும் பழமும் " கட்டுரை ஏராளமான புகைப் படங்களுடன்

5 பகுதிகளாக தொகுத்து :

" ஏக தம் " ஆக :

ஒரே சமயத்தில் கொடுக்கப் போகிறேன்,


வரும் " பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் 5 தொகுதிகளை

" ஒரே முட்டா" க கொடுக்கப் போகிறேன் ,

பெற்றுக்கொள்ளவும் !தங்களின் அன்புக்கு என்றும் நன்றியுடன் ,

எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Mon Feb 23, 2015 11:33 am

மெதுவாகவே தாருங்கள், முதலில் உங்கள் நேரம்தான் முக்கியம். உங்கள் பணி அப்படி? நன்றி டாக்டர் சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Feb 25, 2015 4:34 pm

தொகுப்பு எண் : 8

" பாலும் பழமும் " ( 1961 )படமும்

பாடல்களும் !ஓர் அலசல் !
] " ப" வரிசை படங்களின் பாடல்கள்

ஒவ்வொன்றும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும்

இரண்டறக் கலந்துள்ளன என்பது உண்மை !


எனவே நான் எழுதும் கடுரை , சில சமயங்களில்

உணர்ச்சிகரமாக அமைந்துள்ளதை நீங்கள்

கவனிக்கக் கூடும் !இதோ , இப்போது நான் அடுத்து கொடுக்க

இருக்கும் படமும் , பாடல்களும் எங்கள்

குடும்பத்துடன் இணைந்திருப்பதை நிங்கள் படிக்கப்

போகிறீர்கள் !


]ஆதலால், இதுவும்

ஒரு ' குடும்பப் படம் ' தான்


புற்று நோய்க்கு ஆராய்ச்சி

செய்யும் -

டாக்டர் ரவி --


சிவாஜி கணேசன்,

அவரது வாழ்க்கைக்கும் ஆராய்ச்சிக்கும்

உறுதுணையாக இருக்கும்

நர்ஸ் சாந்தி -
------------

சரோஜா தேவி


இவர்களின் காதல் கதைதான்


" பாலும் பழமும் " ( 1961


" பாகப் பிரிவினை '"


' பாவ மன்னிப்பு '


' பாச மலர் '


அடுத்து......


" பாலும் பழமும் " !


இந்த படத்திற்கும் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பலத்த

எதிர்ப்பார்ப்பு !" சரவணா பிலிம்ஸ் " ஜி வேலுமணி யின்

இரண்டாவது தயாரிப்பு !இந்த படம் தயாரிப்பில் இருந்த போது

படத்திற்கு பெயரையே வைக்கப்பட வில்லை !


கடைசி நேரத்தில் :


" பாலும் பழமும் "


என்கிற பெயர் வைக்கப்பட்டது


சிவாஜி கனேசனுக்கு

முற்றிலும் நூதனமான வேடம் !" டாக்டர் ரவி " !புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி செய்யும்

டாக்டராக :மாறுபட்ட " விக்"

மற்ரும்

உடையுடன்

தோன்றினார் , நடிகர் திலகம்


அவரது, சிறு அங்க அசைவுகளைக் கூட

கவனித்து கைதட்டும் ரசிகர் குழாம் கால கட்டத்தில்

உயர் மட்டத்து விஞ்ஞானி தோற்றத்தில்

சிவாஜியின் அளவான நடிப்பைக்கண்டு பலர் மெய்

மறந்து ரசித்தனர் !அதே சமயத்தில்...


உயிருக்குயிராய் காதலிக்கும் தன் இலட்சிய மனைவியின்

மேல் அவர் அன்பை வெளிப்படுத்தும் :

அன்பு கணவனாகவும்

நடிகர் திலகம் ' வெளுத்துக்" கட்டினார் !

சரோஜா தேவி :

எம்ஜிஆர் படங்களில் " கிளாமர்" ஆகத் தோன்றும் சரோஜாதேவி

சிவாஜி கணேசனின் படங்களில் :

நடிப்பில் சிவாஜிக்கு போட்டியாகவும்

விளங்கினார் !


அழகுக்கு அழகு,

நடிப்புக்கு நடிப்பு !

இரண்டிலும் சரோஜாதேவி , தன் திறமையைக்

காட்டின படம் " பாலும் பழமும் " !அதிலும் 60 களில் கொடுமையான நோயாக

விளங்கிய ' காச நோய் " பாதிக்கப்பட்ட

நோயாளியாக சரோஜாதே அற்புதமாக நடித்தார் !இதற்காக அவர் பல நாட்கள் பட்டினி கிடந்து தன்

முகப் பொலிவை இழந்தவராக , ' டி பி ' யில் வாடும்

பெண்ணாக தன் முகத்தை மாற்றிக் கொண்டு

அற்புதமாக சரோஜாதேவி நடித்தார்.
எம் ஆர் ராதா.
" டாக்டர் ஆக இருப்பவன் ஒரு நர்ஸ் ஐத்

தான் கல்யாணம் கட்டிக்கணும் !


ஒரு என் ஜினீயர், சித்தாளைத்தான் கட்டிக்கணும் !


ஒரு ஆபிஸர் ஆக இருப்பவன் , ஒரு 'டைப்பிஸ்ட்' த்தான்

கட்டிக்கணும் !அப்போத்தான் தொழில் வளரும் ! "

என்கிற எம் ஆர் ராதாவின் 'ஜோக்' புகழ் பெற்றது !


இன்னொரு கட்டத்தில் , படத்தில் ஒருவர் - நாகய்யாவோ

அல்லது பாலய்யாவோ , எம் ஆர் ராதாவுக்கு :


" ஆசிர்வாதம் "


என்று சொல்லும்போது, எம் ஆர் ராதா ' டக் ' என்று :" ஆசி " எனக்கு, " வாதம் " உனக்கு ! "


என்று சொல்வது தமாஷ் !இப்படி ஒரு சில காட்சிகளே எம் ஆர் ராதா

இந்த படத்தில் வந்தாலும் இவர் வரும் போது கலகலப்புக்கு

பஞ்சம் இல்லை என்று சொல்லலாம் !இயக்குனர் ஏ பீம்சிங் :


மனித உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து

படங்களை இயக்குவது / எடுப்பது இவருக்கு வழக்கம் !இவரது படங்களில் " மசாலா" இருக்காது !

சண்டைக் காட்சிகள் இருக்காது !

" Muscle Dance " அல்லது " ஐட்டம் " நடனங்கள் இருக்காது !


இவர் படம் எடுப்பதை இப்போது ' பீல்ட்' இல்

உள்ள மக்களைக் கேட்டால்.....


" Sentimental Feelings "


என்று அலட்சியமாக பேசுவர் !அதனால்தான் " மங்காத்தா " வுக்கும் " பாலும் பழமும்" க்கும்

வித்தியாசம் ஆகும் !
இந்த " Sentimental Touch " உடன் இவர் படங்களை

இயக்கியதால்.....

53 வருடங்களுக்குப் பிறகும் இந்த படத்தைப் பற்றி இப்படி

இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம் !


" மங்காத்தாவும் " , " பிரியாணி" யும் விலாசம் தெரியாமல்

அமுங்கப் பட்ட 'சோன் பப்படி' ஆகிவிட்டன!கதை வசனம் : ஜி பாலசுப்பிரமணி & பாசு மணி .

" பாலும் பழமும் "

ஏன் வெற்றி பெற்றது


கணவன் - மனைவி உறவு :'அண்ணன் -தங்கை உறவை " பாச மலர்'

நல்ல முறையில் எடுத்துச் சொன்னதைப் போலவே....கணவன் - மனைவியின் உறவை

- அன்பின் வெளிப்பாடு - பாசப்பிணைப்பு -

மனைவியைப் பிரிந்தால் கணவன் படும் பாடு....

கணவனைப் பிரிந்த மனைவி படும் வேதனை.......


இதனை : சிவாஜி கணேசன்,

சரோஜா தேவி

மெல்லிசை மன்னர்கள்,

டி எம் எஸ் - பி சுசீலா

மற்றும்

கவிஞர் கண்ணதாசன் இவர்களைக் கொண்டு

இயக்குனர் பீம்சிங்.....

மிகச் சிறந்த முறையில் படமாக்கியிருந்தார் !
" வாழ்ந்தால் இலட்சிய தம்பதிகள் :

டாக்டர் ரவி - நர்ஸ் சாந்தி

போல் வாழவேண்டும் ! "


என்று அந்த கால இளம் தம்பதியர்கள் உறுதி பூண்டனர்

என்றே சொல்லலாம் !பொதுவாக நடிகர் - நடிகையர்களின் பெயர்களை

தாங்கள் பெற்ற செல்வங்களுக்கு வைக்கும் உண்ட

இந்த நேரத்தில்...." பாலும் பழமும் " படம் வந்த போது

நிறைய குழந்தைகளுக்கு " ரவி" , " சாந்தி " என்றே

பெயர்களை வைத்து மகிழ்ந்தனர் !


எங்களின் குடும்பத்திலும் அவ்வாறே நிகழ்ந்தது !

எப்படி.....

இன்னும் கொஞ்சம் படியுங்கள்....சொல்கிறேன் !சிவாஜி கணேசன்

சரோஜா தேவி !


'பாச மலர் "


" சிவாஜி - சாவித்திரி "நிஜமான அண்ணன் -தங்கை !

" பாலும் பழமும் "


சிவாஜி - சரோஜாதேவி
நிஜமான கணவன் மனைவி
இவர்கள் இப்படித்தான் நடித்தனர் !


" கதையின் போக்கு அப்படித்தான் இருக்கிறது.....எனவே

இவர்கள் இப்படி நடித்தது ஒன்றும் புதுமையா ? "என்று சிலர் கேட்கலாம் !
கதை அப்படித்தான் இருக்கிறது....

ஆனால் கதைக்கு :


' உயிரோட்டம் " கொடுத்தது யார் ?
இவர்களின் நடிப்பு / அர்ப்பணிப்பு - இவைகளை பாடல்களை

நான் கொடுக்கும் போது எழுதட்டுமா ?


மெல்லிசை மன்னர்கள்

கவிஞர்

டி எம் எஸ் - பி சுசீலா .


" பாலும் பழமும் " படத்தின் பாதி வெற்றிக்கு

மேற்கண்ட நபர்கள்தான் காரணம் !பாடல்களைத் தரும்போது இவர்களைப் பற்றி

பேசலாம !

" பாலும் பழமும் "

படமும் , அந்த படத்தின் வெற்றியும்

அதன் விளைவுகளும் !" பாலும் பழமும் " படம் சென்னையிலும் மற்றும் பல

இடங்களிலும் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியது !
ஆனால் , அந்த படம் நம்

தமிழ் நாட்டு மக்களை எவ்வாறு பாதித்தது !


1 . 'பாலும் பழமும் ' சேலைகள்!

அதென்னப்பா, " பாலும் பழமும் சேலைகள் ?


" பாலும் பழமும் " படத்தில் சரோஜாதேவி

அணிந்து வந்த சேலையா ?


................இல்லையா !
அந்த காலத்தில் மக்களைக் கவர்ந்த

பெயர்களில் " புடவை டிசைன்" களை புதிதாக

அறிமுகப் படுத்தியதுண்டு !


" பாலும் பழமும் " என்கிற பெயர் மக்களிடையே மிகப்

பிரபலம் அடைந்ததால்...


ஒரு புடவையின் டிசைன் ஐ " பாலும் பழமும் '

என்று வைத்தனர் !

" பாலும் பழமும் " சேலைகள்

எப்படி இருக்கும் ?இப்படித்தான் இருக்கும்


" பாலும் பழமும் " சேலைகள் என்றால்

'கட்டங்கள் " போட்ட டிசைன்

உள்ள சேலைகள் ஆகும் !


இன்றும் இணையதளத்தில் கூட இந்த சேலைகள்

விற்கப்படுகின்றன !( பல வண்ணங்கள் உள்ள சேலைகளை அந்த

காலத்தில் 'டெக்னிக் கலர்' படமான

" கொஞ்சும் சலங்கை' படப் பெயரில்

" கொஞ்சும் சலங்கை சேலைகள் '

என்றனர் ! )


" இதெல்லாம் எப்படி ஐயா,

உங்களுக்குத் தெரியும் ? "
என்கிறீர்களா ?
எங்களை,,

அத்தான் , நான் சாந்திருக்கும் :

செளராஷ்டிரா சமுகத்தை :


நம் தமிழக அரசே

" பட்டு நூல் காரர் "

என்றே இன்றும் அழைக்கிறது !

என் தந்தையார் " பாலும் பழமும் சேலைகளை'

வடிவமைத்து , நெசவாளர்களை வைத்து கைத்தறிகளைக்

கொண்டு தயாரித்தார்......இது...எனக்கு இலேசான

ஞாபகம் !

2.

2 . 'பாலும் பழமும் 'சென்னையில்

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது !


இந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் போது

இந்த படத்தை எப்படியாவது பார்த்துவிட

வேண்டும் என்ற என் தாயார்

விரும்பினார்களாம் !ஆனால்.....


அப்போது அவர் நிறை மாத கர்ப்பிணி !


எனினும் தன் அம்மாவை ( என் பாட்டி )

அழைத்து சென்னை "உமா"

தியேடருக்கு ( இப்போது அந்த தியேடர் : 10 மாடி பிளாட்! )

சென்றுவிட்டார் !


அப்போது ......." நான் பேச நினைப்பதெல்லாம்"

சோகப் பாடல் படத்தில் வரும்போது என்

அம்மாவுக்கு பிரசவ வலி........

படத்தை அப்படியே " போட்டு விட்டு"

வெளியே அம்மா ஓடி வர...........

ஆஸ்பத்திரியில் என் தம்பி பிறந்தான் !என் தம்பியின் பெயர் :


ரவி !


சரி, அப்போது நான் எங்கே இருக்கிறேன் ?


நானா !


என் பாட்டி என்னை தன் இடுப்பில்

" தூக்கி “


வைத்திருந்தாராம் !


படிக்க தமாஷ இல்லே !


3 .


3 . " பாலும் பழமும் " படத்தில் சிவாஜி

கணேசனுக்கு மேக் அப் போட்ட ஒப்பனையாளர்,

தன் கற்பனைத்திறனால் சிவாஜிக்கு மிக அழகான

" கெட் அப் " இல் மேக் அப் போட்டார் !


இந்த கால கட்டத்தில் அவரின் துணையாருக்கு ஓர்

ஆண்குழந்தை பிறந்தது !அந்த குழந்தையின் பெயர் : ரவி !


அந்த குழந்தைதான் என்னுடன் மருத்துவம் படித்த

டாக்டர் ரவி


4.

4.


4 . நம் ஈகரை இல் யே :


" ரவி "

என்கிற பெயரில் பல மெம்பர்கள் இருப்பதை நீங்கள்

பார்த்திருக்கலாம் !

அவர்களில் பெரும்பாலானோர் 1961 களில் பிறந்தவர்களாக

இருந்தால் அதற்கு " பாலும் பழமும் " தான் காரணம் !avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Feb 25, 2015 4:36 pm

" பாலும் பழமும் "


பாடல்கள் !


மெல்லிசை மன்னர்கள்.


" நாவல்டி.....புதுமை...அப்படி

ஏதாவது செய்யணும்னு வெறி இருந்தது.

ஆனால், பழைமை மாறாத புதுமை பண்ணணும்னு

நினைத்தோம்.

எந்த பாடலை எடுத்தாலும் ஒரு ராகம் இருக்கும்,....அதனை

கொஞ்சம் மாற்றி அமைத்து ......கொஞ்சம் வெஸ்டர்னைஸாக

பண்ணி .....இப்படி ஒரு விதமாக சேஞ்ச் பண்ணினோம் !முழுக்க முழுக்க கிளாசிகலா இருந்ததை மாற்றி,

லைட் கிளாசிகலா பண்ணி

ஜனரஞ்சகமாக கொடுத்தோம் ! "...........................சொல்பவர் :


மெல்லிசை மன்னர்களின் பாடல்களைப் பற்றி

நான் சொல்லி உங்களுக்கு தெரியப் போவதில்லை !ஆனால் இதனை நான் சொல்லியே ஆகவேண்டும்


" பாலும் பழமும் " இந்தியில்" சாத்தி "என்கிற பெயரில் தயாரான போது அந்த படத்திற்கு இசையாமைக்க

மெல்லிசை மன்னரின் குரு :

நெளஷாத்

இசையமைக்க மறுத்து விட்டாராம் !

( முகமது ரபி அழகாக பாடுவதை குமட்டில் ( ! ) கையை வைத்து

அவரின் இசையமைப்பை ரசிக்கும் நெளஷாத் !

கொடுத்துவைத்தவர் !

யார் ?

இருவரும்தான் ! )
என்னவாம் ?


மெல்லிசை மன்னர்களைப் போல

தன்னால் இசையமைக்க முடியாது என்று சொல்லி

விட்டாராம் !


எனவே, இந்தியிலும் மெல்லிசை மன்னர்களே

இசையமைக்க நெளஷாத் விரும்பினாலும், மெல்லிசை

மன்னர்கள் மறுத்துவிட்டார்களாம் !இந்தியில் பாடல்கள் எப்படி ?


" நான் பேச நினைப்பதெல்லாம் " பாடலின் இந்தி வடிவத்தை

முகேஷ் - சுமன் கல்யாண்புர்ன் பாடியது

தவிர மற்றவை சுமார் ரகம்தான்!TFMLover கொடுத்த இந்த விடியோ வில் இந்தியுடன் ,

தமிழ் " பாலும் பழமும் " ' நான் பேச நினைப்பதெல்லாம்"

சிவாஜி கணேசன் - சரோஜாதேவி

தோன்றி வருவதைப் பார்க்கும் போது எனக்கு

மெய்சிலிர்த்தது !


தமிழ்ப் பாடலுக்கும் இந்திப் பாடலுக்கும் என்ன வித்தியாசம்

பாருங்கள் - கேளுங்கள் !

பின்னணி :


T . M. செளந்திரராஜன்

P . சுசீலா

இந்த படம் வந்த காலகட்டத்தில் வந்த

படங்களில் " பின்னணி பாடியவர்கள் "

என்றால்.....அது :


இவர்கள் மட்டும்தான் !


என்கிற அறிவிப்போடு பல படங்கள் !

" பாலும் பழமும் "

இதற்கு எடுத்துக்காட்டு !மற்ற படங்களில் சில :


1. " தாய் சொல்லைத் தட்டாதே "


2. " தர்மம் தலை காக்கும் '


3. " தாயைக் காத்த தனையன் "


டி எம் எஸ்.இவர் காட்டில் அப்போது அடை மழை !


எக்கச்சக்கப் படங்கள் !


ஏராளமான பாடல்கள் !


" பாலும் பழமும் " வெளிப் புறப் படப்பிடிப்பு

ஊட்டியில் !


படக் குழுவினர் போகவேண்டும் !


பாடல்கள் தயாராக வில்லை !


காரணம் :டி எம் எஸ் க்கு சரியான ஜலதோஷம் !


அவரால் வழமையான குரலில் பாட முடியாத நிலை !


" என் உடல்நிலை சரியான உடன் பாடுகிறேனே ! "

.......................சொன்னவர் டி எம் எஸ் !
" பரவாயில்லை !

கதாநாயகன் ஊட்டியில் பாடும் காட்சிதான் !

......நீங்கள் ஜலதோஷத்துடன் பாடினால்

பொருத்தமாகத்தான் இருக்கும் ! "...................சொன்னவர்கள் : தயாரிப்பு நிர்வாகிகள் : " பாலும் பழமும் " !நேரம் காலம் நல்லா இருந்தா

தெய்வமும் கூரையை பீய்த்து

கொடுக்குமாம் !
டி எம் எஸ் " ஜலுப்பு" கொண்டு பாடிய

மிக மிக புகழ் பெற்ற பாடல் :


" போனால் போகட்டும் போடா ! "


பாட்டா ! ?


பி சுசீலா

1.. " ஆலைய மணியின் ஓசையை நான் கேட்டேன் "2. " நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் ! "3. " காதல் சிறகை காற்றினில் விரித்து "4. " இந்த நாடகம் அந்த மேடையில் "5. " என்னை யார் என்று எண்ணி "6. " தென்றல் வரும் சேதி வரும் " ( படத்தில் இல்லாத பாடல் ! )
ஆக மெஜாரிட்டி பி . சுசீலா அம்மாவுக்கு !

( கணவருடன் பி. சுசீலா ! )பி சுசீலாவின் கொடி உச்சத்தில் பறந்தது......


" பாலும் பழமும் " படத்திற்கு பிறகு !


பி சுசீலா, புகழின் உச்சிக்குப் போனார் !


என்ன செய்தார் பி சுசீலா ?


பாடுவதற்கு வாங்கும் ஊதியத்தை

கூட்டிவிட்டார் !


ஒரு பாடலுக்கு ரு 500 வாங்கியவர் ரு 1000 வாங்கியதாக

கேள்வி !இதனால் கடுப்பான மெல்லிசை மன்னர், பின்னர் வந்த

" ஆலையமணி " , " சுமைதாங்கி " போன்ற படங்களின்

ஒரு சில பாடல்களை எஸ் ஜானகி க்கு

வழங்கினார் என்று சொல்லப் படுகிறாது !குறிப்பு :


மேற்கண்ட செய்திக்கு உறுதியான ஆதாரம் என்னிடம்

இல்லை !" ..........பாடிய பாடல்களுக்கு சுசீலாவால்

எதையோ கூட்ட முடிந்தது என்பதுதான் உண்மை ! "


.....................சொல்பவர் : திரு வாமனன் !..


கவிஞர் கண்ணதாசன்.


" பாலும் பழமும் "

பாடல்களின் தலைவன் !
நான் தரப் போகும் இந்த படத்தின் பாடல்களில் :


கண்ணதாசன்


பெயரை எழுதாமல் என்னால் முடியாது !
கண்ணதாசனைத் தவிர வேறு

பாடலாசிரியரும் , தங்கள் வாழ்க்கையின் அனுபவங்களை

பாடங்களை, படிப்ப்பினைகளை தாங்கள் எழுதிய

பாடல்களை புகுத்தினர் என்பது கிடையாது ![b]
எனவேதான் மற்ற கவிஞர்கள், கண்ணதாசனுக்கு

நிகராகவும் - சில சமயங்களில் கண்ணதாசனுக்கும் மேலாக

எழுதிய போதிலும் , :

இந்த வாழ்க்கை அனுபவப் பாடல்களில் கண்ணதாசன்

விஞ்சி நிற்கிறார் என்பது கண்கூடூ !
[/b


( கவிஞர் வாலி, தன் தாயார் இறந்த பிரிவை :

" உறவு என்றொரு சொல் இருந்தால் " பாடலை

எழுதினார் என்றும்...

" என்னைப் பாட வைத்தவன் ஒருவன் " என்கிற 'அரச கட்டளை'

பாடலை ஜெயலலிதாவுக்கு எழுதினார்

என்றும் அவரே எழுதியுள்ளார் ! )[b] கவிஞர் கண்ணதாசன், எப்படி தன் வாழ்க்கை

அனுபவங்களை " பாலும் பழமும் " பாடல்களில்


எழுதினார் என்பதை இதோ....பார்க்கப் போகிறோம்


avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Feb 25, 2015 4:38 pm


பாடல்கள் :

எல்லா பாடல்களையும்

எழுதியவர் : கண்ணதாசன் !எல்லா பாடல்களையும் பாடியவர்கள் :


டி எம் எஸ் & பி சுசீலா !
1. " ஆலையமணியின் ஓசையை நான்

கேட்டேன் ! "
http://picosong.com/2YbZ
' பின் தூங்கி முன் எழும் பத்தினியாக '

நர்ஸ் சாந்தி விடியற்காலையில் எழுந்திருக்க, கணவன் டாக்டர்

ரவி இன்னும் உறங்கிக் கொண்டிருக்க, குளித்து விட்டு துளசி மாடம்

அருகே சாந்தி பாடும் பாட்டு !


இந்த பாடலின் சூழ்நிலையை நீங்கள்

அறிந்து கொண்டால், பாடலை இன்னும் அதிகமாகவே

ரசிக்க ஆரம்பிக்கலாம் !


மங்களகரமாகத் தோன்றும் சரோஜாதேவியின்

தோற்றமும்,

சுசீலாவின் குரலும்

நம்மை மயக்கும் !1. முதலில் தொடங்கும் ஆலையமணியின் ஓசை, வேறு

எந்த பாடலிலும் கேட்கமுடியாது.


பொதுவாக மணியோசை என்பது

இசை அல்ல, ஓசை!


ஆனால் இந்த பாட்டில் மணியின் ஓசை கூட இசை மாதிரியே

அமைதியாக, அடக்கமாக ஒலிப்பது மிகவும் சிறப்பு !
2. அதற்கு அப்புறம் ஒலிக்கும் வயலின் களின் இசை , மெல்லிசை

மன்னர்களுக்கே உரியது !3. பி சுசீலா !

இந்த பாடகிக்கு மிகப் பெரிய புகழைக் கொடுத்த பாடல் இது !

மிகவும் அமைதியாக இனிமையாக சுசீலா பாடும் இந்த

பாடல் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் இனிமை !


4. ஷெனாய் இசை !


இந்த பாடலின் இடைவெளி இசையில் இரு முறை வரும்

ஷெனாய் இசை அற்புதம் !
இந்த பாடலில் இடம் பெற்ற ஷெனாய் சோலோ இசையை

அழகாக வாசித்தவர் , மெல்லிசை மன்னரின் இசைக்குழுவைச்

சேர்ந்த சத்யம் என்பவர்.


சத்யம் எப்போதும் , மெல்லிசை மன்னரின் முகத்தைப்

பார்த்துக்கொண்டே ஷெனாய் வாசிப்பாராம் !


என்ன காரணம் ?

மெல்லிசை மன்னரின் முகத்தில் காணப்படும் முக மாறுதல்

களை வைத்தே தான் நன்றாக வாசித்தோமா இல்லைய என்பதை

அறிந்து கொள்வாராம் !


அப்படி ஒருநாள், இப்படி ஷெனாய் வாசித்து விட்டு வீடு

சத்யம் வீடு திரும்பும்போது மிகவும் மனம் நொந்தபடியே

சென்றாராம்.

அங்கே வீட்டில் தன் மனைவியுடன் சரியாக பேசவில்லையாம்,

சரியாக சாப்பிடவில்லையாம், சரியாக தூங்கவும் இல்லையாம்!


இதனைப் பார்த்த அவரின் துணைவியார், மெல்லிசை மன்னருக்கு

போன் செய்து நடந்ததை " என்ன நடந்தது அவருக்கு ? "

என்று கேட்கும் அளவுக்கு போய் விட்டதாம் !


மெல்லிசை மன்னரின் இசைக் குழுவில்

இப்படி எல்லாம் நல்ல மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் !ஒரு முறை பிரபல ஷெனாய் வித்வான்

பிஸ்மில்லா கான், மெல்லிசை மன்னரை சந்தித்த போது

இந்த " ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேனே ! "

ஷெனாய் இசையை அவரே வாசித்துக் காட்டி மெல்லிசை

மன்னரை பாராட்டி மகிழ்ந்தாராம் !( ஆதாரம் :

" என்றும் எம் எஸ் வி " - ராணி மைந்தன் - பக்கம் 206 )இவர்தான் , " பொண்ணுக்கு தங்க மனசு " படத்தில் வரும்

" தேன் சிந்துதே வானம் " பாடலில் வரும் ஷெனாய் இசையை

வாசித்தவர் என்பதும் நான் படித்தது...


மேற்கண்ட செய்திகளில் தவறுகள் இருந்தால்

என்னைத் திருத்தவும் !


மெல்லிசை மன்னர், பிஸ்மில்லா கானை, " தீர்க்க சுமங்கலி

வாழ்கவே " - என்கிற " தீர்க்க சுமங்கலி " படப்பாடலுக்கு

ஷெனாய் வாசிக்க பிஸ்மில்லா கானை அழைத்தாராம் !


இந்த பாடலை கண்ணதாசன்

எப்படி எழுதினார் ?

1.


கவிஞர் வசித்து வந்த வீட்டுக்கு எதிரே ஒரு பெரிய பூங்கா

உண்டு.


விடியற்காலையில் எழுந்து விட்டால், கவிஞர் தன் வீட்டின்

வாசலில் வந்து நிற்பார், பொழுது புலரும் நேரத்தில் :

பறவைகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு மகிழ்வார்!" அதிகாலை 6 மணிக்கு ஒரு நாள் ஏதோ ஓர் ஊரில் படுக்கையில்

புரண்டு படுக்கும் போது, பக்கத்து கோவில் மணியோசை

கவிஞர் காதில் விழுந்தது, அவரின் தூக்கம் கலைந்தது!


பறவைகள் ஓசை கேட்டது.


பக்தி மார்க்கம் அவரை இழுத்த நேரமாம், அவருக்கு!சில மாதங்கள் கழித்து.......


" ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன் "

பாடல் கவிஞரிடம் பிறந்தது !
( ' எனது வசந்த காலங்கள் "

புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியது. )

2.


கவிஞர் , மதுரைக்கு இரயிலில் சென்று கொண்டிருக்கிறார்.

அதிகாலையில் கவிஞர் கண்விழித்து , இரயில் கதவோரமாக

சாய்ந்து கொண்டிருந்த வேளையில் :


அருள் வாசகமாக தோன்றியது :


" ஆலையமணியின் ஓசையை நான் கேட்டேன் "


என்கிற வாசகம் !' சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் '


என்கிற நூலில் கண்னதாசன் இதனை குறிப்பிடுகிறார் !
ஆக, கவிஞரின் சொந்த அனுபவம் /

அனுபவங்களில் உதித்த பாட்டு இது !


கணவனைப் பார்த்து / நினைத்து / நோக்கி


மனைவி பாடும் சில திரைப்படப் பாடல்களில்


எனக்குப் பிடித்தவை :

1. " மலர்கள் நனைந்தன பனியாலே " - " இதயக் கமலம் "2. " வெள்ளிக்கிழமை விடியும் நேரம் " - " நீ "3. " ஓர் ஆலையம் ஆகும் மங்கை மனது " - " சுமதி என் சுந்தரி "4. "தண்ணிலவு தேன் இறைக்க " - " படித்தால் மட்டும் போதுமா "5. " உன்னை அடைந்த மனம் வாழக " - " ஆனந்தி "6. " கண்னுக்கு குலமேது கண்ணா " - " கர்ணன் "7. " தங்கத்திலே குறை இருந்தாலும் தரத்தில் " - " பாகப்பிரிவினை"8. " நாற்பது வயதில் " - " பாரத விலாஸ்"9. " நான் நன்றி சொல்வேன் " _ " குழந்தையும் தெய்வமும் "


போன்ற பாடல்கள் !
2. " நான் பேச நினைப்பதெல்லாம்

நீ பேசவேண்டும் ! "


மகிழ்ச்சி :

http://picosong.com/2YQc/
அந்த காலத்தில் காதல் 'டூயட்' பாட்டுக்கள்,

" மானே " , " தேனே " , " குயிலே " , " மயிலே "

என்றுதான் 'பாரம்பரியமாக' எழுதிவந்தனர் !

மெல்லிசை மன்னர்கள் இசையமைக்கத் தொடங்க ஆரம்பித்ததும்,

இதனை மாற்றி அமைக்க முனைந்தனர் !


முக்கியமாக மெல்லிசை மன்னர் - கண்ணதாசன்

மற்றும்

மெல்லிசை மன்னர் - வாலி

கூட்டணி இந்த 'வேலை' யை தொடங்கியது !1. " கொடி அசைந்ததும் காற்று வந்ததா" ( " பார்த்தால் பசி தீரும் " )2. " பறக்கும் பந்து பறக்கும் " ( " பணக்கார குடும்பம் " )3. " இந்த புன்னகை என்ன விலை " ( " தெய்வத்தாய் " )4. " குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான்

வரட்டுமா " ( " எங்க வீட்டுப் பிள்ளை " )5. " நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான் "

( " வாழ்க்கை வாழ்வதற்கே" )6. " ஒடிவது போல் இடை இருக்கும் - இருக்கட்டுமே ! "

" இதயத்தில் நீ " )7. " யாரது யாரது தங்கமா " - " என் கடமை "8. " தொட்டால் பூ மலரும் , தொடாமல் நான் மலர்ந்தேன்"

- " படகோட்டி "9. " போகப் போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் "


- ( " சர்வர் சுந்தரம் " )போன்ற பல பாடல்கள் இப்படித்தான் விளைந்தன !அந்த வரிசையில் உள்ள முக்கியமான

பாடல்தான் :


" நான் பேச நினைப்பதெல்லாம் " !

இந்த பாடல் எப்படி உருவானது ?
" பாரதி பிலிம்ஸ் "

என்கிற பெயரில் ஒரு புதிய படக் கம்பனியை யாரோ

துவக்கி இருந்தார்கள்.

தாங்கள் தயாரிக்க இருக்கும் முதல் படத்திற்கு பாடல்களை

எழுதித் தர வேண்டி நின்றார்கள், கண்ணதாசனிடம் !
ஒரு பாடலின் சூழ்நிலை:


படத்தின் நாயகி, தன் வீட்டுத்தோட்டத்தில் இருந்து கொண்டு

பூப் பறித்துக்கொண்டே பாடலைப் பாடிக்கொண்

டிருக்கிறாள் .


பக்கத்து வீட்டில் இருக்கும் கதாநாயகன், இந்த பாட்டைக் கேட்டு

அந்த பெண்ணிடம் தன் மனதை பறி கொடுக்கிறான் .


பின்பு அவளை நேரிலும் பார்த்து அவளின் அழகைப் பார்த்தும்

மனதை பறிகொடுக்கிறான் !பின்பு.......


அடம் பிடித்து... தன் பெற்றோரிடம்

சண்டை போட்டு , அந்த பெண்ணை திருமணம் செய்து

கொள்கிறான் !


முதல் இரவு....

அப்போதுதான் தெரிகிறது அவனுக்கு....

தான் மணம் முடித்த பெண் :

ஓர் ஊமை என்பது !


கோபத்துடன் அவன் முதல் இரவு நடக்கும் அறையை விட்டு

வெளியே வருகிறான்.


வெளியே.......


நாயகியின் தங்கை அங்கே நின்று கொண்டு

அதே பாட்டை பாடுகிறாள் !


அப்போதுதான் தெரிகிறது அவனுக்கு !


பூப் பறிக்கும் போது அக்கா வெறும் வாயசைக்க

தங்கை " டப்பிங்க்" கொடுத்திருக்கிறாள் என்பதை !


பின்பு நாயகன் தன் ஊமை மனைவியுடுன் சேர்ந்து வாழ்வதற்கு

அந்த தங்கைக்கு போடும் நிபந்தனை என்ன தெரியுமா ?
" நான் உன் அக்காளுடன் சேர்ந்து வாழ

வேண்டும் என்றால் , நீ திருமணம் செய்து கொள்ளாமல்,

எங்களுடன் பாட்டு பாடிக்கொண்டே இருக்கவேண்டும் ,

நான் விரும்பியதோ நீ பாடும் பாட்டுத்தானே தவிர

உன் அக்காளை அல்ல! "
தங்கை சம்மதித்து கூடவே இருக்கிறாள்....

பாட்டு பாடிக்கொண்டே !அக்காளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது !


அந்த தாயால் தன் குழந்தைக்கு தாலாட்டு பாட முடியவில்லை.அந்தத் தாயால் பாடமுடியாத தாலாட்டுப்

பாட்டை, அவளின் தங்கை பாடுகிறாள் !இதுதான் காட்சி அமைப்பு :கவிஞர் எழுதுகிறார் :


" தாய் பேச நினைப்பதெல்லாம்

நீ பேச வேண்டும் !


தாய் தூங்க தாலாட்டு

நீ பாட வேண்டும் !

நீ பாடும் தாலாட்டைத்

தாய் கேட்கவேண்டும் ! - தன்

நிலை மாறி அவள் கூட

மொழி பேசவேண்டும் ! "கதைக்கென்றே பிறந்த அழகான பாட்டு !


ஆனால்.......


" பாரதி பிலிம்ஸ் " மூடப்பட்டது.....

படம் வெளிவரவில்லை.....

பாட்டும் அப்படித்தான் !


இப்போது....

" பாலும் பழமும் "!கண்ணதாசன், அந்த

தாலாட்டுப் பாட்டை, 'டூயட் '

பாடலாக மாற்றி விட்டார் !" நான் பேச நினப்பதெல்லாம்

நீ பேச வேண்டும் !


நாளோடும் பொழுதோடும்

உறவாட வேண்டும் ! "

காதலி, காதலனுக்கு உத்தரவுகளைப்

போடுகிறாள்....

காதலன் அவைகளை ஏற்றுக்கொள்கிறான் !

எப்படி ?

" ஹம்மிங் " பாடிக்கொண்டே !


இன்னொன்று :


ஒவ்வொரு வரிகளையும் ஒரு முறைக்கு

இரு முறை பாடுவதால்..

அந்த " உத்தரவு" கள் இருவருக்கும் பொருந்தும்

என்பதும் தெரிகிறதல்லவா !

ஒருவர் மீது இன்னொருவர்

காட்டும் உரிமை தான்

அளவற்ற காதல் !

" பாவை உன் முகம் பார்த்து

பசியாற வேண்டும் ! "
ஒரு தாய் தன் குழந்தையப் பார்த்து

சொல்லவேண்டியதை இங்கே,

மனைவி, கணவனைப் பார்த்து சொல்வது

மிகப் பொருத்தம் அல்லவா !


" சொல்லாத சொல்லுக்கு

விலை ஏதும் இல்லை ! "
அப்படி என்றால் என்ன ?சொல்லை சொன்னால்தானே விலை !

இந்த பாட்டை நான் இன்னும் விளக்கி சொல்லாவிட்டால்

அதற்கு ஒரு விலை உண்டா !" அன்பு மிகுந்திருக்கும் இடத்தில்

அமைதியிலேயே

பரிமாற்றங்கள் நடக்கும் !


" அருகருகே இருக்கின்றோம் "

என்கிற உணர்வு தரும் மன நிலையை விட


வார்த்தைகள் தேவையா, என்ன !

எண்ணங்கள் வெளிப்படையாக

இருக்கும் போது ,

சொற்கள் பயனற்றவைதான்......

எனவேதான் அதன் விலை " 0 " பைசாதான் !


The Untold Words

Has No Price ! "என்று " பீடர் " மட்டும் பேசுபவர்களிடம் சொல்லிப்

பாருங்கள் !" இந்த வரி எந்த

இலக்கியத்தில்

உள்ளது ? "என்று கேட்பார்கள் !
திரை அரங்குகளை

இலக்கிய அரங்குகள் ஆக

மாற்றியவர் :

கண்ணதாசன் !


3 . " நான் பேச நினைப்பதெல்லாம்

நீ பேசவேண்டும் ! "


சோகம் :


http://picosong.com/2YQj/


இந்த பாடல் " நான் பேச நினைப்பதெல்லாம் " பாடலின்

சோக வடிவம்.


சோக வடிவம் இருந்தாலும், இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம்

மகிழ்ச்சியான

பாடலை நினைவூட்டுவதால் லேசான கிளர்ச்சி மனதில்

ஏற்படுகிறது என்பது உண்மை !

' பாடு, லீலா "சிவாஜி கணேசன் பேசும் ( டி எம் எஸ் அல்லது சிவாஜி ? )

இந்த குரலை இப்போதும் கேட்டாலும் மெய் சிலிர்ச்சிறது !


மொத்தத்தில் அருமையான சோகப் பாட்டு !


இதோ , அடுத்த பகுதி !


எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Feb 25, 2015 4:41 pm

4. " பாலும் பழமும் கைகளில் ஏந்தி "
http://picosong.com/2Yb9/
கணவன் - மனைவி - இவர்கள்

ஒருவருக்கு ஒருவர் உதவிகளை செய்து

அன்பு கொண்டு வாழ்வதுதான் இல்வாழ்க்கை.


இவர்களில், மனைவி எனப்படுபவளின்

பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது !

வீட்டை நன்றாக நிர்வாகம் செய்பவளை : 'இல்லத்தரசி'

என்று சொல்கிறார்கள் !'இல்லத்தரசன் '

என்கிற சொல்லே வழக்கில் இல்லை !என் வீட்டில் , என்னுடைய மனைவி தன் அம்மா வீட்டுக்கு

சென்றால்.....

என் நிலைமை அதோ கதிதான் !
1. முதலில் சுவையான, சூடான உணவு போச் !


2. வீட்டை " கவனிப்பது " என்பது தலைவலி !


3. ஒரு தேனீர் தயாரித்து சாப்பிட வேண்டும்

என்றால் :

பால், சர்க்கரை , டீத்தூள் ,டீ பில்டர்

, டம்பளர் ( 2 - ஒன்று 'ஆத்துவதற்கு' )

தயாராக வைத்திருத்தல் வேண்டும் !"காஸ்' ஐ 'பற்ற' வைக்கவேண்டும் !


'டீ" கொதிக்கும் வரை 'கூட' இருக்க வேண்டும் !

டீ யை வடிகட்டி பின்னர் மறக்காமல் 'காஸ்'

ஐ " ஆப் ' செய்யவேண்டும் !


அப்புறம் ?


'டீ குடிக்கவேண்டும் !

பின்னர் : ' சம்பந்தப்பட்ட ' பாத்திரங்களை " மரியாதை" யாக

கழுவேண்டும் !


ஒரு டீ சாப்பிடுவதற்கு இவ்வளவு :

சம்பிரதாயாங்கள் !
என் மனைவி இருந்தால்.....?


சூடான நுரையுடன் தேனீர், கம்புயூடர் முன்பு,

நான் ' ஈகரை முன்பு !( வெளியே போய் டீ யை சாப்பிட்டால்.....

டீ யின் விலை என்னவோ

8 அல்லது 10 ரூபாய்கள்தான் ....ஆனால்


Food Poisin வந்து என்னை வேறு ( நல்ல) டாக்டரிடம்

தூக்கிக் கொண்டு போகவேண்டும் ! )
என் மனைவி ஊருக்குப் போய்விட்டால், காலயில்

" கிளினிக்" போவதற்கு முன்னர்,

என்னூடைய வழக்கமான குளிப்பது போன்ற வேலைகளைத்

தவிர .....

செய்யவேண்டிய வேலைகள் எத்தனை தெரியுமா ?


23 பணிகள் !
( சில எடுத்துக்காட்டுகள் :

1. Freezer உள்ள பால் பாக்கட் ஐ வெளியே 'எடுக்க'...'எடுக்க'...'எடுடுடுடுக்க்க'

வேண்டும்.....அவ்வளவு 'ஈஸி' இல்லை !


2. இன்று காலையில் வந்த பாலை Freezer இல் வைக்க வேண்டும்..

அல்லது 'தூக்கி' போடவேண்டும் ! )
என்னுடைய மனைவி சில நாட்களே

ஊருக்குப் போனாலே இந்த நிலைமை !


மனைவியை இழந்து விட்டால் ?


அதனை என்னால் இங்கே சொல்லமுடியவில்லை...

அந்த வேதனையை அனுபவித்து என்னிடம் வந்து

புலம்புவர்கள் சொல்லி நான் வருத்தம் அடைந்திருக்கிறேன்!
மொத்தத்தில்...கணவனுக்கு முந்தி சுமங்கலியாக

" போக" வேண்டும் என்று நினைக்கும் மனைவிமார்கள்

சுயநலம் கொண்டவர்கள் என்று நான் நினைக்கிறேன்,


அப்படிப் பார்த்தால்.....


நானும் சுயநலம் கொண்டவன் தான்

மிக உண்மையாக காதலிக்கும் இளம் மனைவி உடல்நலம்

பாதிக்கப்பட்டால்....


அவளையே நினைத்திருக்கும் காதல் கணவனின்

மனநிலை எப்படி இருந்திருக்கும் !அவள், எப்படி தன்னை கவனித்துக்கொண்டாள் என்ற

நினைவுகளும்...

இன்று உடல்நலம் கெட்டதால் அமைதி இழந்து தூக்கம்

இன்றி தவிக்கும் :

அவளைப் பற்றிய கவலைகளும் நிறைந்த

கணவனின் சிந்தனைகள் எப்படி இருந்திருக்கும் ?

இதைத்தான் கவிஞர் கண்ணதாசன் இந்த

பாட்டில் சுவைபடா எழுதி உள்ளார் !
பாடலின் முதலில் வரும் மெல்லிய வயலின் இசையில்

மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்திமட்டுமா நினைவுக்கு வருகிறார்....ஓர் அமைதியான பாட்டைக் கேட்கப் போகிறோம்

என்கிற உணர்வும் நினைவூக்கு வருகிறது அல்லவா !
" பாலும் பழமும் கைகளில் ஏந்தி "

பாடலில்....

கணவன், எப்படியெல்லாம் மனைவி மேல்

வைத்திருப்பான் என்பதைக் காட்டுகிறது அல்லவா !

" உண்ணும் அழகைப்

பார்த்திருப்பாயே ! "இப்படி ஒரு வரி இந்த பாட்டில் உள்ளது !


அது எப்படி...

ஒருவர் சாப்பிடுவதை இன்னொருவர் வேடிக்கை பார்ப்பது....

அநாகரிகமான செயல் அல்லவா ?
ஒருவர் சாப்பிடுவதை இன்னொருவர்

பார்க்கக் கூடாது என்பது உண்மைதான்....


ஆனால்....

கணவன் சாப்பிடும் அழகை

மனைவி பார்க்கலாம் என்பது கண்கூடு !

கவிஞர் கண்ணதாசன் , தன் வாழ்வில்

நடந்ததைத்தான் இப்படி பாடலாக எழுதி உள்ளார் !
ராம. கண்ணப்பன் .


கவிஞர் கண்ணதாசனின் உதவியாளர் சொல்கிறார்." கவிஞரை பாராட்டி , சீராட்டி ஊட்டி வளர்த்ததில்

கண்னதாசனின் மனைவி பார்வதி அம்மையாருக்கு

பெரும் பங்கு உள்ளது ! "" தன் கணவருக்கு சமைத்த உணவு

வகைகளை எல்லாம் தேவையான அளவுக்கு

பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு :

சேலை முந்தானையால் அவைகளை மூடியபடி

கவிஞரின் அறைக்குச் செல்வார் !


கவிஞர் சாப்பிடுவதை பிறர் காணக்கூடாது என்று தான்

அறைக்குள் சாப்பாடு !


பரிமாறும்போது.......


சிறிது சிறிதாகத்தான் உணவு வகைகளை எடுத்து இலையில்

வைக்கவேண்டும் !


அதிகம் வைத்தால் அவர்க்கு கோபம் வந்துவிடும் !


அவர் எதனை அதிகமாக விரும்பி சாப்பிடுகிறாரோ

அதனை குறிப்பறிந்து அளவாக ( ! ) வைக்க வேண்டும் !ஆற அமர கவிஞர் சாப்பிடுவார் !


கடித்துத் துப்பிய எலும்புகளும்,

மீன் முள்களும்,

சுவைத்து துப்பிய காய்கறி தொலிகளுமாக

சாப்பாடு மேஜை ஒரு போக்களம் போன்று

காணப்படும் !


அவைகளை பின்னர் ஒரு குப்பைத்தொட்டியில் போட்டு

விட்டு மூடிவிடுவார்....

யார் கண்னும் பட்டுவிடக் கூடாது என்கிற எண்ணம்

அந்த அம்மையாருக்கு ! "
இப்படி எழுதியுள்ளார் ராம .கண்ணப்பன் !


இப்படி தன் அனுபவங்களைத்தான் கண்ணதாசன்

இப்படி பாட்டிலே எழுதியுள்ளார் !
" உங்கள் வீட்டில் எப்படி ? "

என்றா கேட்கிறீர்கள் ?


என் மனைவியும் நான்


" உண்ணும் அழகை "


பார்த்துக் கொண்டிருப்பாள்.... !


உண்ணும் அழகை - Inverted Comma வில் இப்பதைப் பார்க்கவும் !


இதோ, சில

" உண்ணும் அழகு"

- என்னை போல !( ' முதல் மரியாதை ' சிவாஜி கணேசன் ! )
( ' எங்க வீட்டுப் பிள்ளை ' எம்ஜிஆர் ! )( " என்னய்யா, உங்க வூட்லே சாப்டா அழுவாங்களா? "

'சபாஷ் மீனா ' மூக்கன் !

" கண்ணை இமைபோல் காத்திருப்பாயே "

என்கிற வரிகளை, கவிஞருக்கு பிடித்த வரிகள்

என்பதை முன்னரே உங்களுக்கு சொல்லி இருந்தேன்.


" உயிரைக் கொடுத்தும் உன்னை நான் காப்பேன்"


என்கிற வரி என்ன சொல்கிறது ?


ஒருவர், தன் உயிரைக் கொடுத்து இன்னொரு உயிரைக்

காப்பாற்ற முடியுமா, என்ன ?


அப்படி இல்லை !


" அந்த அளவுக்கு உன்னை காக்க முயல்வேன் "


என்றுதான் அர்த்தம் !

இந்த பாட்டில் இன்னொரு சிறப்பு உண்டு!

" பாலும் பழமும் கைகளில் ஏந்தி "மேற்கண்ட வரிகளை படித்தீர்களா ?


இப்போது சொல்கிறேன் :இந்த பாடல் வரிகளைப் பயன்படுத்தியே

இந்த பாடல் முழுவதையும் பாடிவிடலாமே ! "

எடுத்துக்காட்டு :
" உண்ணும் அழகைப் பாத்திருப்பாயே !


உறங்கவைத்தே விழித்திருப்பாயே !


கண்ணை இமைபோல் காத்திருப்பாயே !


காதற்கொடியே கண் மலர்வாயே ! "

மேற்கண்ட வரிகளை இப்படி பாடுங்கள் !" பாலும் பழமும் கைகளில் ஏந்தி !


பாலும் பழமும் கைகளில் ஏந்தி !


பாலும் பழமும் கைகளில் ஏந்தி !


பாலும் பழமும் கைகளில் ஏந்தி ! "
கமல்ஹாசன், முன்பு இருந்த :

" மெட்ரோ சானல்" இல்

இப்படி இந்த பாடலை மிக அற்புதமாத

பாடிக் காட்டினார் !கணவன் , மனைவிய நோக்கி / நினைத்து

பாடும் சில பாடல்களில் எனக்குப் பிடித்தவை !
1. " சுமைதாங்கி சாய்ந்து போனால் " - " தங்கப் பதக்கம் "2. " உன் கண்ணில் நீர் வழிந்தால் " - " வியட்நாம் வீடு "4. " பொன்னை விரும்பும் பூமியில் " _ " ஆலைய மணி "5. " துள்ளித் திரந்த பெண் ஒன்று " - " காத்திருந்த கண்கள் "6. " தானே தனக்குள் ரசிக்கின்றாள்" - " பேரும் புகழும் "7. " அடக் கொப்புரானே சத்தியமாய் " _ " காவல்காரன் "8. " மலர் கொடுத்தேன் " - " திருசூலம் "9. " பாவாடை தாவணியில் பார்த்த உருவமோ " _ " நிச்சயத்தாம்பூலம்"10. " புன்னகையில் ஒரு பொருள் வந்தது " - " பவானி "11. " இறைவனுக்கும் பாட்டு எழுதும் " - " நிமிர்ந்து நில்


5. " போனால் போகட்டும் போடா ! "


http://picosong.com/2Ybb/திரைப் படப் பாடல்கள் அனைத்துப் பாடல்களும் மிக

உயர்ந்ததாக அமையும் என்று சொல்லிவிடமுடியாது !

கதையின் போக்கு, காட்சி அமைப்பு போன்றவைகளால்

சில பாடல்கள் சில கவிஞர்களால் சாதாரணமாக போய் விடுவது

உண்டு.

ஆனால் எல்லோர் மனதிலும்

நீங்கா இடம் பெற்ற சில பாடல்கள் :


கதையின் படியும்,

நிஜ வாழ்க்கையில் நம் உள்ளத்தை தொடும்படியும்

அமைவதும் உண்டு !

இந்த பாடலும் அப்படித்தான்ஒரு நாள்...கவிஞர் கண்ணதாசனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

அந்த செய்தி :" திரு டி டி கிருஷ்ணமாச்சாரி ( டி டி கே)

உங்களை சந்திக்க விரும்பிகிறார், வரமுடியுமா


டி டி கே பிரதமர் நேரு அவர்களின் மந்திரி

சபையில் நிதியமைச்சராக இருந்தவர்.

ஒரு நல்ல ரசிகர், சங்கீதத்தை விரும்புகிறவர் !

ஆனால் இந்த நிகழ்ச்சி நடக்கும் சமயத்தில் மத்திய மந்திரி

சபையில் இருந்து விலகி விட்டார்......


"இந்த சூழ்நிலையில் இவர் ஏன் என்னைப் பார்க்க

விரும்புகிறார் ? "


குழம்பினார் , கண்ணதாசன் !டி டி கே வை சந்திக்க அவர் வீட்டுக்குச் சென்றார் கவிஞர்.


இவரைப் பார்த்த டி டி கே :


" வாங்க.....வாங்க....கண்ணதாசன் ! "


என்று வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டார் !
டி டி கே சொன்னார் :

" தவிர்க்க முடியாத வருத்தம் எனக்கு.

மந்திரி சபையில் இருந்து ராஜினாம செய்துவிட்டேன்.

ஏதோ இனம் தெரியாத அழுத்தம் !

யார் யாரோ எப்படியோ ஆறுதல் சொன்னாலும்

என் மனம் உடன் படவில்லை !

ஆனால் வீட்டுக்குள் நுழைந்த போது நீங்கள் எழுதிய

பாடல் : " போனால் போகட்டும் போடா ! "

வானொலியில் ஒலித்தது !

எனக்கு மனதை இதமாக வருடிக்கொடுத்த அனுபவம்

கிடைத்தது !

எனவே உங்களை சந்திக்க விரும்பினேன் !"என்று சொன்னாராம் !அவருக்கு மட்டுமா !
எதையும் இழந்து துயரில் வாடி நிற்கும்

எவருக்கும் ஆறுதல் தரும் பாட்டு....இன்றும்

ஆறுதல் பாட்டு இது !" லட்சயவாதிகள் தன் சொந்த வாழ்க்கையில்

எந்த லாப நஷ்டம் வந்தாலும் :

" வந்தால் வரட்டும், போனால் போகட்ட்டும் "

என்ற இருப்பார்கள் ! "என்கிற சாந்தியின் வரிகள் தான் டாக்டர் ரவியை :

வெறுப்புக்கு ஆளாக்கி விட்டது !ரவியின் ஆராய்ச்சிக்கு தான் தடையாக இருப்பதை

சாந்தி விரும்பவில்லை.....

எனவே ரவியை விட்டு விலகுகிறாள், சாந்தி !எனவேதான் :" போனால் போகட்டும் போடா ! "பாடல் வரிகளைப் படித்த மெல்லிசை மன்னர்,

" வாடா, போடா "

என்கிற சொற்களைப் பார்த்து அவைகளை

ஆட்சேபித்தாராம் !


ஆனால் கண்னதாசன் ஒத்துக்கொள்ள வில்லை !இருவரின் நட்பு பலமாக

இருந்ததால் இப்படி பல பாட்டல்கள் நமக்கு

கிடைத்தன !

மிகக் குறைந்த வாத்தியங்கள்,

மரணத்தை பற்றிய பாடல் என்பதால்

மெல்லிசை மன்னரின் 'ஹம்மிங்க்' கூட

நம்மை இடுகாட்டுச் சூழலை எடுத்துக் காட்டியது !


வேறு ஏதாவது ?


நிறைய இருக்கின்றன......

கொஞ்சம் நீங்களும் எழுதுங்களேன் !இதோ , அடுத்த பகுதி .........


எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Feb 25, 2015 4:43 pm

6. தொகையறா :


" தாவி வரும் மேகமே "


பாடல் : " காதல் சிறகை காற்றினில் விரித்து
http://picosong.com/2kyM/

இந்த பாடலைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத்

தெரிந்திருக்கும் ! ஆனால் இந்த பாடலில் பொதிந்து

உள்ள முழு அர்த்தத்தை அடியேன் சொல்லவேண்டும்

என்றால் 2 கண்டிஷன் கள் போடவேண்டும் ! முதலில்

“ கிளினி” ஐ மூடிவிட வேண்டும் ! இரண்டாவது :

” மின் வெட்டு” இருக்கக்கூடாது!ஏதோ அடியேனால் முடிந்த அளவுக்கு எழுதுகிறேன் !

” பிரிவு”

என்கிற சொல்லுக்கு அர்த்தம் தரும் வகையிலும் ,

விளக்கம் தரும் வகையிலும் தமிழ்ப் பாடல்கள்

நிறைய வந்துள்ளன !“ காதல் கீதம் கேட்குமா” - “ கொஞ்சும் சலங்கை”


“ எங்கிருந்த போது உன்ன மறக்க முடியுமா”

- “ நீங்காத நினைவு ““ ஒரே பாடல் உன்னை அழைக்கும் “ - “எங்கிருந்தோ

வந்தாள் ““ நீ இல்லாத உலகத்திலே” - “ தெய்வத்தின் தெய்வம் “
“ அவள் பறந்து போனாளே” - “ பார் மகளே பார்”“ நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே”

- “ சதாரம் “இன்னும் எவ்வளவோ சொல்லலாம் !

இவைகளில் முதன்மையானது இந்த பாடல்!
காதலித்து , திருமணம் ஆன பின்னர் தொழிலில்

ஈடுபாடு இல்லாமல், தன்னயே சுற்றி வரும் கணவனை

விட்டு பிரிந்து விடும் மனைவி, தன் கணவனை

நினைத்து , ஏங்கி, பிரிவை

நினைத்து பாடும் பாடல் !

அவள் வெளி நாட்டில் இருக்கிறாள்.

பிரிவின் துயரை தவிர்க்க “ மேகத்தையே

தூதுவன்” ஆக “ போக மாட்டாயோ”

என்று ஏங்குகிறாள் !

அது மட்டுமா !

வெளிநாட்டில் இருக்கும் அவளுக்கு தூது

செல்ல யாரும் இல்லாத போது அவள் என்ன

சொல்கிறாள் - என்ன நினைக்கிறாள் ?


இந்த வரிகளை எந்த தமிழனும்

மறக்க மாட்டான் !
” எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவிம் பகலும் நடக்கவா !

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை

கொண்டு வணங்கவா! “பிரிவின் துயரத்தை இன்னும் எப்படித்தான்

விவரிப்பது !” பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது

அழுதால் கொஞ்சம் நிம்மதி !

பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான்

தெய்வத்தின் ச்ன்னிதி- அதுதான் காதல் சன்னதி ! “இந்த மாதிரியான வரிகளை யார்தான் மறக்கமுடியும்

7 . " என்னை யார் என்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய் !http://picosong.com/2kkw/


இந்த பாடலை கவிஞர் எழுதிய விதம்

வியக்கத்தக்கது !

தான் பாடலை எழுதும் திரைப்படத்திற்கும் பொருத்தமாக

இருக்கவேண்டும், அதே சமயத்தில் தான் வாழ்க்கையில் பட்ட

அனுபவமாகவும் இருக்க வேண்டும் - இந்த இரண்டையும்

இவர் எப்படி 'பாலன்ஸ்' செய்தார் என்பது ஆச்சர்யத்தைத்

தரக்கூடியது !

ஒரு தடவை நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,

கண்ணதாசனைப் பார்த்து இப்படி கேட்டாராம் :" எப்படி இவ்வளவு அற்புதமாக

பாடலை எழுதுகிறீர்கள் ? "என்று கேட்டாராம் .
கண்ணதாசன் சொன்னாராம் :

" அப்படியா ?

உண்மையில் உங்களை மயக்கும் பாடல்களை

நானா எழுதுகிறேன் !


" என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் "


பாடலைக் கேளுங்கள் ! புரியும் !

நான் உண்மையில் அவளுக்காகவே

எழுதினேன் ! "என்றாராம் !
கண்ணதாசன் சொல்கிறார் :
" நான் சிறுவயதில் ஒரு பெண்ணைக்

காதலித்தேன் .அவள் கெளரமான குடும்பப் பெண்.

எங்களுக்குள்ளே ரகசிய சந்திப்போ, பேச்சோ நிகழ்ந்த

தில்லை, நான் அவளைத் தொட்டதும் இல்லை !


முதன் முதலில் அந்த பெண் என்னைப் பார்த்து சிரித்தாள்!

அதன் பின்பு ஆயிரக்கணக்கான சிரிப்புகளை நான்

பார்த்திருக்கின்றேன், ஆனால் அவளின் சிரிப்பை

நான் மறக்கமுடியவில்லை ! அவள் சிரிப்புதான்

எனக்குப் பிடித்தது !


( ' ஓராயிரம் பார்வையில் உன் பாரவையை நான் மறவேன்! ' )


அந்த காதல்தான் என் கற்பனைக்கு வடிவமாகிறது.

என் கவிதைகளுக்கு அவள்தான் குரு !

இல்லையென்றால் கவிதை எழுதும் ஆசையே எனக்கு

இல்லையே ! "
இப்படி சொன்ன கண்ணதாசன் அந்த பெண் யார், அவள் பெயர்

என்ன என்பதை குறிப்பிடவே இல்லை !

ஏன் ?அந்த காதல் அத்துடன் முறிந்து விட்டது !இதெல்லாம் நடந்து முடிந்து சில வருடங்கள்

கழித்து.......


தமிழர்கள் வாழும் ஒரு வெளி நாட்டில்.....

கவிஞர் சென்றார்.

கவிஞர் மேடையில் பேசிக்கொண்டிருக்கிறார்.

எதிரில் , பெண்கள் அமரும் இடத்தில் கண்ணதாசனின்

விழிகள் அலைந்தன .

எதற்கு ?


அந்த பெண்ணின் விழிகளைத் தேடித்தான்!
( ' பாட்டும் பரதமும் ' படத்தில் நடிகர் திலகம் ஒவ்வொரு ஊரில்

நடனமாடும் போது, நிகழ்ச்சி நடக்கும் முன்பு , நாடகத் திரையை

விலக்கி தன் நாயகி ஜெயலலிதாவைத் தேடுவது போல ! )அன்று ஒரு நாள் அவரின் ஏமாற்றம் நீங்கியது !


கவிஞர் பேசிய மேடைக்குப் பக்கத்திலேயே அந்த பெண் உட்கார்ந்து

அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் !


எப்படி ?


வைத்த கண் வாங்காது அவரை உற்றுப் பார்த்துக்

கொண்டிருந்தாள் !தன்னை கவிஞன் ஆக்கிய

காவிய நாயகியைக் கண்டதும் காவேரி வெள்ளம் போல்

உற்சாகம் கொண்டார்
" என்னை யார் என்று

எண்ணி எண்ணி நீ

பார்க்கிறாய் ! இது யார் பாடும் பாடல்

என்று நீ கேட்கிறாய் ! "


கவிஞர் மேடையில் பாடினார் !

ஒரே கரவொலி !

கவிஞர் மேலும் பல கவிதைகளை பாடினார் !
மேற்கண்ட சம்பவத்தை அவரால்

மறக்க முடியவில்லை !

மேற்படி சம்பவத்தை இந்த

" பாலும் பழமும் ' படத்தில்

இணைத்து விட்டார் !' அவள் பேரை தினம்

பாடும் குயிலாக...'

கவிஞர் மாறிவிட்டார் !


விபத்தில் கணவனுக்கு கண் பறிபோகிறது.

மனைவி இறந்து விட்டாள் என்று அவன் நினைக்கிறான்.

தொல்லை காரணமாக வேறு பெண்னை மணக்கிறான், கணவன்.

இறந்து விட்டதாக கருதப்பட்ட மனைவி அவனுக்கு

நர்ஸ் ஆக வேலைக்கு வருகிறாள் !
அவளுக்கோ தான் யார் என்று வெளியே

சொல்லமுடியாத நிலை !


பாடலை கணவன் தொடங்குகிறான்

" என்னை யார் என்று எண்ணி எண்ணி

நீ பார்க்கிறாய் ?

இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் ?


நான் அவள் பேரை தினம் பாடும் குயில் அல்லவா ?

என் பாடல் அவள் தந்த மொழியல்லவா ? "

மேற்கண்ட வரிகள் மட்டும் அல்ல...

முழுப் பாடலையும் கண்ணதாசன்

அந்த பெண்ணை நினைத்தே

எழுதியுள்ள்ளார் !
இந்த பாடலில்

சரணங்களை மாற்றிப்

பாடினால் நன்று !
முதலில்,

படத்தில் / இசைத்தட்டில்

இடம் பெற்ற முறையைப் பார்ப்போம் !
பாரா - 1

" என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா..

சருகான மலர் மீண்டும் மலராதய்யா.....

கனவான கதை மீண்டும் தொடராதய்யா....

காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா ! "


பாரா - 2

" எந்தன் மனக் கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா..

மலரோடு மலராக மலர்ந்தாளம்மா...

கனவ்ர்ன்னும் தேர் ஏறி பறந்தாளம்மா..

காற்றோடு காற்றாக கலந்தாளம்மா ! "

கணவன் பேச பேச...மனைவி பதில் சொல்ல ..சொல்லசரணங்கள் 'உல்ட்டா'

ஆகிவிட்டன !


" எப்படி ? "

என்கிறீர்களா , சொல்கிறேன் !
முதலில் பாரா 2 இல் கணவன் என்ன பாடுகிறான் ?" எந்தன் மனக் கோயில் சிலையாக

வளர்ந்தாளம்மா! "
இதற்கு மனைவி தரும் பதில் பாரா - 1 வருகிறது !" என்றும் சிலையான உன் தெய்வம்

பேசாதய்யா ! "
இது போல...

கணவன் பாடும் பாரா 2 முதலிலும்

மனைவி , கணவனுக்கு பதில்

சொல்லும் பாரா -1 , இரண்டாவகத்தான்

கவிஞர் எழுதியிருப்பார் !


திரைப்படப் பாடலாகும் போது....

அது மாறிவிட்டது !மேலும் படியுங்கள் :

கணவன் - பாரா -2" மலரோடு மலராக மலர்ந்தாளம்மா"மனைவி பதில் - பாரா -1" சருகான மலர் மீண்டும் மலராதய்யா"
கணவன் - பாரா -2" 'கனவென்னும் தேர் ஏறி பறந்தாளம்மா"


மனைவி பதில் - பாரா -1" கனவான கதை மீண்டும் தொடராதய்யா"
கணவன் - பாரா -2" காற்றோடு காற்றாக கலந்தாளம்மா "


மனைவி பதில் - பாரா -1

" காற்றன அவள் வாழ்வு திரும்பாதய்யா "

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று

நினைக்கிறேன் !


கடைசியாக :


" இன்று உனக்காக உயிர் வாழும் துணை

இல்லையா,


ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா...


அவள் வாழ்வு நீ தந்த வரம் அல்லவா....


அன்போடு அவளோடு மகிழ்வாய் அய்யா ! "
என்கிற வரிகள் முதல் மனைவி, இரண்டாவது மனைவி

செளகார் ஜானகிக்கு பரிந்து பேசும் வரிகள் தானே !சாகா வரம் பெற்ற

கவிஞரின் முதல் காதல்

தந்த சாகா வரம் பெற்ற

பாடல் இது !

8. " தொகையறா :


" பாலும் பழமும் என "


பாடல் :

" இந்த நாடகம் அந்த மேடையில்

ஒரு மாறுதலுக்கு :


இந்த பாடலுக்கு விளக்கத்தை யாராவது ஒருவர்

எழுதுங்களேன் !9 . " தென்றல் வரும் சேதி வரும் "
http://picosong.com/2kqL/


இந்த அழகான பாட்டு, நீளம் கருதியோ என்னவோ

படத்தில் இருந்து நீக்கப்பட்டது.


இந்த பாடலுக்கான படப்பிடிப்பும் நடத்தப் படவில்லை

என்று தெரிகிறது !


10. " டைட்டில் இசை

http://picosong.com/2kqy/அன்பர்களே !


" பாலும் பழமும் " படத்தைப் பற்றிய

தகவல்கள் இன்னும் ஏராளமாக உள்ளன !


சொல்லப்போனால்.......நான் எழுத நினைத்ததில்


பாதியைத்தான்


இப்போது எழுதியது !

நேரமின்னை காரணமாகவும்

வேறு கட்டுரைக்கு செல்ல வேண்டிய

அவசியத்தையும் கருதி இத்துடன்

நிறுத்திக்கொள்கிறேன் !செய்திகளில், எழுத்துக்களில் தவறு இருந்தால்

திருத்தவும், சரி செய்து கொள்கிறேன்.


நன்றி !


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுத்த கட்டுரை !சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !பட்டுக்கோட்டையார் &

கவியரசர் கண்ணதாசன்


மற்றும்

'வாலிப ' வாலியார்

பாடல்களில் இருந்து !

எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by chittibabu on Wed Feb 25, 2015 6:41 pm

வணக்கம் டாக்டர் சார்,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் இழையில் விஜயம்.

கணவன் - மனைவி - இவர்கள்

ஒருவருக்கு ஒருவர் உதவிகளை செய்து

அன்பு கொண்டு வாழ்வதுதான் இல்வாழ்க்கை
.

எந்த ஒரு விசயத்தையும் கணவனுக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்கு தெரியாமல் கணவனோ செய்யாமல் இருப்பதே இல்வாழ்க்கையின் மற்றுமொரு அங்கம்

வாழ்த்துக்கள்..... தொடருங்கள்.....


என்றும் அன்புடன்
சிட்டிபாபு

avatar
chittibabu
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Dr.S.Soundarapandian on Wed Feb 25, 2015 8:07 pm

நன்றி எம்.கே.ஆர். சாந்தாராம் அவர்களே !

எப்போதோ உண்ட உணவுக்கு இப்போது சுவை ஏற்றுகிறீர்கள் சாந்தாராம் ! விந்தைதான் ! மிகவும் பயனுள்ள அனுபவம் !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2435

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Thu Feb 26, 2015 8:42 am

சும்மா சொல்லக்கூடாது, டாக்டர் ஐயா அவர்கள் சற்றும் தளராமல் தமிழ் திரைப்படச் செய்திகளை அள்ளி வீசுகிறார். எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் நமது வேலை. மெதுவாக நேரம் கிடைக்கும் போது சுவைக்கலாம். நன்றி டாக்டர் ஐயா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by M.Saranya on Thu Feb 26, 2015 4:06 pm

மிகவும் அருமையான தகவல்கள்...நான் இன்னும் பாலும்பழமும் படத்தை முழுமையாக பார்த்ததில்லை ... நீங்கள் கூறிய பிறகு ஏன் தான் நான் பார்க்காமல் இருந்தேன் என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்...

ஐயா, நீங்கள் பாடல்களை விளக்கிய விதம் மிகவும் ரசிக்க வைத்தது என்னை...தொடருங்கள் ஐயா உங்கள் கட்டுரையை..ஆர்வத்துடன் இருக்கிறேன் படிக்க .........

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Dr.S.Soundarapandian on Tue Mar 03, 2015 8:18 pm

எம்.கே.ஆர்.சாந்தாராம் அவர்களே !
நீங்கள் தரும் -
நல்ல நல்ல செய்திகளை நம்பி
ஒரு கூட்டமே இருக்குது குந்தி !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2435

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Mar 11, 2015 5:24 pm

கடிதங்களை எழுதிய :1. திரு. மாணிக்கம் நடேசன் :

அய்யா ! நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவு மற்றும் ஊக்கம் என்னை

" மெர்சல் " ஆகி " இதுக்கும் மேலே " எழுத வைக்கிறீர்கள் !

' இதுக்கும் மேலே ' நிச்சயம் எழுதுவேன் !2. திரு . சிட்டிபாபு !

அய்யா சிட்டி ! 'நல்லாக் கீறீங்க்களா !

ரொம்ப 'பிசியோ ? "

நீங்க எப்போவும் 'பிஸி' யாகத்தான் இருக்கணும் !
3. சகோதரி சரண்யா !

நீங்கள் இன்னும் " பாலும் பழமும் " படத்தை பார்க்கவில்லை

என்பதை அறிந்து வியப்பு அடைந்தேன் !

எனினும் அடியேன் எழுதிய கட்டுரை உங்களை நிச்சியம்

" பா . ப " படத்தை பார்க்கவைக்கும் !
4. திரு. டாக்டர் . செளந்திரபாண்டியனார் அவர்களே !


நீங்கள் ' குந்திக் கொண்டே ' என் கட்டுரையைப் படிக்கும் போதே

நான் நினைத்து விட்டேன் = நீங்களும் நம்ம சென்னை வாசிதான்

என்பதை !


' நா எய்துறதெ நல்லா படிங்க நயனா ......இல்லே .......

நான் எழுதுவதை நன்றாக படியுங்கள் , ஐயா !

அனைவருக்கும் நன்றி ! நன்றி ! நன்றி !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

திரைப்படப் பாடல்களும்

சுவையான செய்திகளும் !" டிரைலெர் "

( TRAILER )


" பார் மகளே பார் " ( 1963 )-


சிவாஜி கணேசன் எறக்குறைய படம் முழுவதும் வயதான

'கேட் அப் ' இல் ஜமீன்தாராக 'பின்னிப் பெடல் ' எடுத்த படம் !

எனவே , சிவாஜி கணேசனுக்கு , இயக்குனர் பீம்சிங் ஆல்

" டூயட் "

அமைத்து படத்தில் இடம் தராத நிலைமை !( எடுத்துக்காட்டாக : ' நவராத்திரி ' , ' சரஸ்வதி சபதம் '

"பழனி " , " பச்சை விளக்கு " ' சவாலே சமாளி '

ஆகிய மற்றும் வேறு பல படங்களுலும் சிவாஜிக்கு

இதே " கதி " தான் ! )


" பாடல் மகளே பார் " - படப்பிடிப்பு நடக்கும் முன்னர் பாடல்கள்

இசையமைப்பு நடைபெறும் சமயம் !


அங்கே , மெல்லிசை மன்னர்கள் , கண்ணதாசன் உடன் 'சீரியசாக '

பாடல்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தனர் !


அப்போது :


' நடிகர் திலகம் ' - பீம் பாயுடன் ( ! ) அங்கே வந்தனர் !

மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பை இவர்கள் இருவரும்

வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர் !" நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ! "

பாடலுக்கு ஒத்திகை அங்கு நடந்து கொண்டிருந்தது !


" இந்த பாட்டு எப்போ படத்தில் வருகிறது , பீம் பாய் ? "

கேட்டது சிம்மக்குரலோன் !


" படத்தில் " உங்கள் மனைவுக்கு " ( செளகார் ஜானகி ! ) இரட்டை

குழந்தைகள் பிறந்த போது, உங்கள் " மனைவி " அந்த குழந்தைக்கு

" நீரோடும் வைகையிலே "

என்று தாலாட்டு பாட்டு பாடுகிறார் , கணேசா ! "

---- இது பீம்சிங் இன் பதில் !" அப்போ , அங்கே எனக்கு என்ன வேலை ? "

- 'நடிகர் திலகம் ' கேள்வி !


" அங்கே , சுசீலா அம்மா பாடப் பாட , நீங்கள் இரவு உடை அணிந்து

கொண்டு


" விஸில் "


அடித்துக் கொண்டே இருக்கவேண்டும், அம்புட்டுத்தேன் ! "


- இது " பீம் பாய் ! "" அடப் பாவிகளா !

எனக்கு இந்த படத்தில் 'டூயட் " பாடல் ஒன்று கூட இல்லை !

இந்த 'அழகில் ' விஸில் வேறு !

யோவ் பீம்பாய் ! பேசாம இந்த பாட்டை ஒரு டூயட் - கம் - தாலாட்டு

பாடலாக மாற்றி எனக்கு இந்த காட்சியில் பாட " சான்ஸ் "

கொடுக்கமுடியுமா ? "


- கெஞ்சினார் 'கலைக் குரிசில் ' !யோசித்தார் பீம்பாய் !


மெல்லிசை மன்னர்களை நோக்கினார் பீம்பாய் !


மெல்லிசை மன்னர்கள் , கண்ணதாசனை நோக்கினார்கள் !


அப்புறம் என்ன !


பி. சுசீலா பாட ,

உடன்

டி எம் எஸ் , சிவாஜிக்கு குரல் கொடுக்க ," நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ! "


ஒரு தாய் பாடும் தாலாட்டு பாடல் ,

கணவன் - மனை சேர்ந்து குழந்தைகளை கொஞ்சி


பாடம் தாலாட்டு - டூயட் பாடலாக

மாற்றப்பட்டது ../..........

" அப்கோர்ஸ் "

" விஸில் "

ஒசைவுடன் !

விரைவில் ............!
எம்கே ஆர் சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ராஜா on Wed Mar 11, 2015 7:20 pm

வாவ் .... " நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே ! " இந்த பாடலுக்கு பின்னாடி இப்படி ஒரு சுவையான சம்பவம் இருக்கிறதா புன்னகை

அறிய தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by சிவா on Fri Mar 13, 2015 10:22 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Fri Apr 17, 2015 5:06 pm

   

  தொகுப்பு எண் : 9
சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !
 


  தமிழ்த் திரைப் படங்களில் பல ஆயிரக்கணக்கான பாடல்கள்

உண்டு !

அவைகளை பல் வேறு இசையமைப்பாளர்களும் , பாடலாசிரியர்களும்

பாடகர்களும் மற்றும் பாடகியர்களும் ஒன்று சேர்ந்து அவைகளை இனிய

பாடல்களாக நமக்கு அளித்து வருகின்றனர் !
  ( அந்த கால ' ஜெமினி பட நிறுவனத்திற்கு '   சொந்தமான

இசைக் குழு ! சும்மாங்காட்டி ஒரு ' சாம்பிளுக்கு ' !    )  


அவர்கள் ஈன்று கொடுக்கும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பிரசவம்

போலத்தான் !

ஆனால் சில சமயங்களில் அவைகள் ' சுகப் பிரசவங்கள் ' ஆக அவை

அமைவதில்லை !

அந்த சமயங்களில் ...........


சில சுவையான சம்பவங்களும் நடந்து   விடும் !


   

  அந்த சம்பவகளில்

சிலவற்றை சொல்வதே இந்த கட்டுரையின்

நோக்கம் !
ஒரே கட்டுரையை ஒரே சமயத்தில் நான் எழுத நினைக்கும் அனைத்தையும்

என்னால் தர இயலாது !


எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் .....

ஒவ்வொரு பாடலுக்கும் - அதனை ஒட்டி நடந்த

சுவையான சம்பவத்தை யும் அவ்வப்போது எழுதிவிடலாம்

என்று எண்ணியுள்ளேன் !


ஆகவே இந்த கட்டுரை மிகப் பெரியதாக இருக்கும் என்பதோடு இந்த

கட்டுரை நான் எழுதி முடிக்க அதிக நாட்கள் கூட ஆகிவிடலாம்

என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் !
எச்சரிக்கை !

    நான் இங்கே கொடுக்கக்கபோகும் பாடல்களும் அதற்கான

சுவையான சம்பவங்களும் :


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ,

கண்ணதாசன் ,

மற்றும்

வாலி .......

இந்த மாதிரியான பாடலாசிரியர்களுடன் ....

மருதகாசி -  கே.பி. காமாட்சி  - போன்ற

மற்ற பாடலாசிரியர்களும்

இடம் பெறக்கூடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் !     சூப்பருங்க
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
முதலில் ...........

கவியரசு கண்ணதாசன் !


1. " மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் "

" ராஜபார்ட் ரங்கதுரை "    - கண்ணதாசன் - மெல்லிசை மன்னர் .

" ராஜபார்ட் ரங்கதுரை "  !குகநாதன் கதை வசனத்தில் , பி . மாதவன் இயக்கிய படம் !

திரைப் படங்கள் தோன்றாத பொழுது தமிழகத்தில் நாடகங்கள்தான்

மக்களின் பொழுது போக்கும் !

அந்த கால கட்டத்தில் , அதாவது , நம் இந்திய சுதந்திர போராட்டக்

காலங்களில் நாடக சபாக்கள் பல, நாடகங்களை நடத்தில் மக்களை

மகிழ்வித்து வந்தது !

தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் ,

பம்மல் சம்பந்த முதலியார்

போன்றவர்கள் பல சபாக்களை நிறுவி நாடகங்களை பல

ஊர்கள் தோறும் நடத்தி வந்தனர் .
அத்தகைய காலகட்டங்களை நினைவுபடுத்தும்

வகையில் நடிகர் திலகத்தை வைத்து

எடுத்த படம்தான் :

" ராஜபார்ட் ரங்கதுரை " !
(  சமீபத்தில் வெளிவந்து மண்ணைக் கவ்விய :

" காபியத் தலைவன் "

என்கிற படமும்  " ரா . ர "   படம் மாதிரிதான் !  

ஆனால் இந்த படம் எப்படி ?  :  " நோ கம்மெண்ட்ஸ் "  

  " ராஜபார்ட் ரங்கதுரை " படத்தில் ஒரே ஒரு ' டூயட் ' பாடல் !" மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் "


 
பாடலை என்னவோ , படு 'அசால்ட் '   ஆக கண்ணதாசன்

எழுதிவிட்டார் !


மெல்லிசை மன்னர் அவர்களும் கண்ணதாசனை விட .....

படு ....படு .....படு  ...' அசால்ட் ' ஆக  :


" டியூன் "

போட்டுவிட்டார் !


ஆனால் என்ன பிரயோஜனம் !

" ஏன், என்னப்பா ஆச்சு ? "

என்று கேட்கிறீர்களா !


அங்கேதான் பிரச்சனை !


மெல்லிசை மன்னர் ஒரே ஒரு ' டியூன் '  ஐப் போட்டிருந்தால்

பிரச்சனையே இல்லை !


( இப்போது நமக்கு " வாய்த்துள்ள "   இசையமைப்பாளர்கள் சிலர்

ஒரு பாடலுக்கு ஒரு  ' டியூன் ' போட ஒரு நாளை க்கு  2 லட்சம்

வாடகையாக  ஒரு கப்பலையே அமர்த்துக் கொள்ளும்

' பரிதாப நிலை ' மெல்லிசை மன்னருக்கு இல்லை !

குளிர் பதனம் செய்யாத , பாய் போட்ட அறையில்  லொட

லொட '   மின் விசிறி வசதியுடன் மெல்லிசை மன்னர் போட்டது

ஒரு டியூன் இல்லை !


பின்னே ?
 

    மெல்லிசை மன்னர்

' மதன மாளிகை ' பாடலுக்கு

போட்ட ' டியூன் ' கள் :

ஏழு !  
7  டியூன் களில்  எந்த " டியூன் " ஐ எடுப்பது ?

எவை களை விட்டுவிடுவது ?

மெல்லிசை மன்னர் தலையை சொறிந்தார் !

கண்ணதாசனை நோக்கினார் !

 " அண்ணே !   இந்த பாட்டுக்கு எந்த ' டியூன் ' ஐ  நான்

தேர்ந்தெடுப்பது , நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கண்ணே ! '


மெல்லிசை மன்னர் , கவியரசை கெஞ்சினார் !கண்னதாசன் :


" தம்பி விசு !  எழுதுவது ஏன் வேலை !

மெட்டமைப்பது உன் வேலை !

உன் வேலையை செய் ! "
மெல்லிசை மன்னர் யோசித்தார் ......" சரி , முதலில்  போட்ட  டியூன் ' , பாடலில் முதலில் வரும்


" தொகையறா " வுக்கு

போட்டுவிடலாம் !

ஆனா   .....பாடலுக்கு எந்த  டியூன் ? "உதவி செய்ய வேண்டிய கண்ணதாசன் காலை வாரி விட ....

மெல்லிசை மன்னர் வேறு என்ன செய்வார் ?


கண்ணதாசனைத் தவிர அங்கே இருந்த இசைக் கருவிகளை வாசித்துக்

கொண்டிருக்கும் நிபுணர்களின் உதவியை நாடினார் !" அண்ணே !   கடைசி 2 ' டியூன் களை ' ப போடுங்கண்ணே ! "


மெல்லிசை மன்னர் ' கடைசி 2 'டியூன் ' களை போட்டார் !

" வேலைக்கு ஆகவில்லை ! "

அந்த மாதிரியான பாடல் யாருக்கும் பிடிக்கவில்லை !
" அண்ணே !  டியூன் 3  -ம்  , டியூன்  6  -ம்  " மிக்ஸ் " செய்யுங்க , அண்ணே ! "மெல்லிசை மன்னர்   3  +  6   =  " மிக்ஸ் " செய்தார் !


" லம்பாடி லுங்கி கிழிந்தது ! "


......ஹி...ஹி ...ஹி ...  புரியலே ?

அத்தானா ......பாட்டு " போனி " ஆக வில்லை !
  மெல்லிசை மன்னருக்கு :

" தாவு "

தீர்ந்த மாதிரி ஆகிவிட்டது !


என்ன செய்வது !

நேரமோ ஆகிக் கொண்டிருந்தது !
இந்த மாதிரி பாடல்களை எழுதி 'டியூன் ' போட்டு  பாடல்களை

படிக்க பல மணி நேரங்கள் ஆகலாம் அல்லவா !

இடையில் எல்லோருக்கும் :

காப்பி , மற்றும் ' டீ "

உண்டு !


காபி , டீ  கொண்டு வரும் பையன் அங்கே அவர்களுக்கு காபி , டீ

சப்ளை செய்து கொண்டெ அங்கே நடக்கும் :


" கூத்து - சண்டை "    யை


வேடிக்கை பார்த்துக் கொண்டெ இருந்தான் !

நடுவில் காபி , டீ கொண்டு வர வெளியெ போய்க்கொண்டும்

இருந்தான் !நேரம் ஆக மெல்லிசை மன்னர் சலித்துவிட்டார் !


" மதன மாளிகை " என்கிற  சொல்லுடன் அந்த பாடல் ஆரம்பம் ஆகினார்

அனைவரையும் அந்த பாடல் பிடித்து ' சூபர் ஹிட் ' ஆகிவிடும் என்பதை

மெல்லிசை மன்னர் விரும்பினார் !


அங்கே இருந்த அனைவரும் " மதன மாளிகை " என்கிற பதத்தை

மிகவும் விரும்பினர் !இடையில் ' காபி - டீ ' சப்ளை !

காபி சப்ளை செய்த பையன் மறுபடியும் மறுபடியும்

அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டே இருந்தான் !அந்த பையனுக்கு பொறுக்க வில்லை !


பேசிவிட்டான் !


என்ன சொன்னான் ?

    " சார் !

அந்த மூணாவது  டியூன் ஐயும்

எழாவது டியூன் ஐயும்

" மிக்ஸ் " பண்ணிப் பாருங்கள் !

பாட்டு நன்றாக வரும் ! "

 அந்த பையன் அப்படி சொன்னதும் கவியரசு வுக்கு கோபம்

வந்து விட்டது !" அட பொடியா ! இது என்ன காபி கடையா !

பாலோடு காப்பி டிக்காஷனை  'மிக்ஸ் '

பண்றதுக்கு !  உன் வேலையைப் போய்

பாருடா !  "
ஆனால் மெல்லிசை மன்னர் , அந்த பையன் சொன்னதைக் கேட்டு

கோபம் கொள்ளாமல் யோசிக்க ஆரம்பித்தார் !


அட !


 


    இந்த பையன் சொன்னது போலவே நாமும்

" டிரை " செய்தால் என்ன ! "


டியூன் 3 ஐயும்  டியூன் 7 ஐயும் ' மிக்ஸ் ' செய்தார் !


அட !


" மதன மாளிகை " பாட்டு பிறந்துவிட்டது !ஆமாம் !


இப்போது நாம் கேட்டுக்கொண்டிருக்கும்

" மதன மாளிகை " பாடலுக்கு

' டியூன் " களை  தீர்வு செய்தது !

ஒரு டீக்காரப் பையன்தான் !கொஞ்சம் கூட " ஈகோ " பார்க்காமல் ...

" பந்தா " இல்லாமல்

பழகும் ஒரே இசையமைப் பாளர்

நம் மெல்லிசை மன்னர் ஒருவர்தான் !

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

 


     அடுத்து :


பாட்டுக் கோட்டை யார் !" குட்டி  டிரைலர் " !

   


  ..........................................

.......................' பாச வலை ' ( 1954 ) பாடல் பதிவு நேரம் ....

மெல்லிசை மன்னர் ஒடி தன அறைக்குச் சென்று

கதவைத் தாஜித்துக் கொண்டார் !

அந்த அறையில் யாரும் இல்லை !

அழுதார் மெல்லிசை மன்னர் !

வாய் விடு விழுதார் !

கண்களில் கண்ணீர் தாரையாக கொட்ட

அழுதார் .......

ஏன் அழுதார் ?தொடரும்
எம்கே ஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Dr.S.Soundarapandian on Sat Apr 18, 2015 2:59 pm

எம். கே. ஆர். சாந்தாராம் அவர்களே !

நீங்கள்

தங்கத்தில் உடலெடுத்து
சந்தனத்தில் நிறமெடுத்து
வந்ததொரு கலையையா !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2435

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed May 06, 2015 4:50 pm

@Dr.S.Soundarapandian wrote:எம். கே. ஆர். சாந்தாராம் அவர்களே !

நீங்கள்

தங்கத்தில் உடலெடுத்து
சந்தனத்தில் நிறமெடுத்து
வந்ததொரு கலையையா !
மேற்கோள் செய்த பதிவு: 1131394
உங்களின் அன்பு மிகு மடலுக்கு மிக்க

நன்றி ,

திரு. டாக்டர் . செளந்திரபாண்டியனார்

அவர்களே !மேலே , நான் விவரித்த ' மதன மாளிகை ' பாடல் வந்த பிறகு

அந்த பாடலைப் போலவே இசையமைத்து வந்த இன்னொரு பாடலை

நான் இங்கே குறிப்பிடுவது நன்று என்று நினைக்கின்றேன் !


இதோ !

சிட்டுக்குருவி " ( 1978 ) படத்தில் இருந்து :


" என் கண்மணி / உன் காதலில் / இளமாங்கனி/உனைப் பார்த்ததும் / சிரிக்கின்றதே ! "


எஸ் பி பி / சுசீலா / பாஸ்கர் ஆகியோர் !


இசை : ' இசை ஞானி

பாடல் : ' வாலி
இந்த பாடலைப் பற்றி :

1. இசை ஞானி இளைய ராஜா வளர்ந்து வரும் நேரம் :பாடல்களில் புதுமையை புகுத்துவதைப் பற்றி இசை ஞானி தனது இரண்டாவது படமான :

" பாலூட்டி வளர்த்த கிளி " யில் இருந்தே ஆரம்பித்துவிட்ட்டார் .

இந்த படத்தில் இடம் பெற்ற பாடலான :


" நான் பேச வந்தேன் "

எஸ் பி பி - ஜானகி பாடல் பாடலில் இருவரும் :

வெவ்வேறு ' டியூன் ' களில் 'ஹம்மின்ங்க் ' செய்து பாடுவதை

இப்போதும் நாமும் கேட்டுக்கொண்டுதானே இருக்கின்றோம் !


" காற்றினிலே வரும் கீதம் " படப் பாடலிலும் .....பாடலின் இறுதியில் இதே போன்று

மாறுபட்ட டியூங்அள் வரும் அல்லவா !இப்படி ' ஹாமனி ' கெடாமல் ஒன்றுக்குக்கும் மேற்பட்ட டியூன் களில் இசையமைப்பதை

மேல் நாட்டு இசைப் படி :" COUNTER POINT "


என்று சொல்லுவர் !" சிட்டுக்குருவி ' படத்தில் இயக்குனர்கள் தேவராஜ் - மோகன் இருவரில் - தேவராஜ் , இளையராஜாவிடம் :


" படத்தில் கதாநாயகனும் , கதாநாயகியும் ஒரே பஸ் இல் அமர்ந்து ஒருவரை ஒருவர்

' முறைத்துக் " கொண்டே ( ! )

தங்கள் காதலை வெளிப்படையாக சொல்லாமல் பயணிக்கும் போது பாடும் பாட்டு

ஒன்று வேண்டும் ! "


என்று சொன்னவுடன் அந்த " CONCEPT ' ஐ " பக் " என்று பிடித்துக் கொண்டார்,

இளையராஜா!இந்த பாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட டியூன் களை பயன்படுத்தினால் என்ன ?

என்று தோன்றியதன் விளைவே :


" என் கண்மணி "


பாட்டு !
இளையராஜா, வாலியை அழைத்து தன் எண்ணத்தை சொன்னார் !

வாலி ' பக் ' என்று அதனைப் பிடித்துக்கொண்டார் !


விளைவு ?


இதோ பாடல் !
ஆண் :
" என் கண்மணி ...

இளமாங்கனி

சிரிக்கின்றதே

நான் சொன்ன ஜோக் ஐ க் கேட்டு நாணமோ ! "

பெண் :

' உன் காதலில்...

எனைப் பார்த்ததும்

சிரிக்கின்றதே

நீ நகைச்சுவை மன்னன்

இல்லையோ ! "மேற்கண்ட இரண்டு 'பாரா'க்களை

சேர்த்துப் படித்தாலும்....


தனித் தனித்....தனித் தனியாஅகப் படித்தாலும்

அர்த்தம் புரியும் !1. முதலில் எஸ் பி பி பாடினார் !

2. சுசீலா பாடவேண்டிய இடங்களில் இசையைப் போட்டு 'ரொப்பி' னார்கள் !

3. பின்னர் சுசிலா பாடினார் !

4. ' ரொப்பிய ' இசையை நீக்கிவிட்டு ' சுசீலா வை நுழைத்தார்கள் !

5, பாடல் ஓ கே !

6. சரி, பஸ் இல் போவதை பாடலில் எப்படி " காட்டு"வது ?


" கருவாடு கூடை , முன்னாடி போ ! "

" தேனாம்பேட்டை சூப்பர் மாகெட் இறங்கு "


போன்ற " பஞ்ச் " வசனங்கள் இளையாராஜாவின் அண்ணன் பாஸ்கரை விட்டு

பேச வைத்தார்கள் !
பாடல் சூபர் ஹிட்
இப்படி நான் எழுதியதால் , இளையராஜா என்னவோ

மெல்லிசை மன்னரின் " மதன மாளிகை " பாடலை

" காப்பி " அடித்தார் என்று நான் சொல்லவந்த தாக

தயவுசெய்து எண்ணவேண்டாம் !


ஏன் தெரியுமா ?" எனக்கும் இசைக்கும்

பல மைல்கள் / கிலோ மீட்டார்கள்

தூரம் ! என்ன கொடுமை சார் இதுஎம்கே ஆர் சாந்தாராம் .
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ayyasamy ram on Thu May 07, 2015 5:13 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Fri May 08, 2015 10:26 am

இந்த வரிகளை ' போன்ற " பஞ்ச் " வசனங்கள் இளையாராஜாவின் அண்ணன் பாஸ்கரை விட்டு
பேச வைத்தார்கள் !' பேசியது மேஜர் சுந்தர்ராஜன் என்றுதான் நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். குழப்பத்தை நீக்கிய டாக்டர் ஐயா, உங்களுக்கு மிக்க நன்றி. உங்களது இப்புனித பணி மேலும் தொடரட்டும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Jul 09, 2015 5:45 pm

  மடல்களை வரைந்த :


1. திரு . அய்யாசாமி

மற்றும்

2. மாணிக்கம் நடேசன்


- இவர்களுக்கு நன்றி !

################################################      சில திரைப்படப் பாடல்களும்

அவை பின்னர் மறைந்திருக்கும்

சுவையான

செய்திகளும் !பாடல் :  2 .  

 " குட்டி ஆடு தப்பி வந்தா

குள்ள நரிக்குச் சொந்தம் "


-  படம் :  " பாச வலை " ( 1954 )


பாடல் : பாட்டுக் கோட்டையார் !
 
அந்த காலத்தில் ......ஏன்.......

இந்த காலத்தில் கூடத்தான் .....பிற மொழிகளில்

: ஹிட் " ஆனா பாடல்களை தமிழில் " காப்பி " அடிப்பதை

ஏறக்குறைய எழுதாத சட்டமாக ஆகிவிட்டது ......அல்லவா !


முன்பு எல்லாம் ....அப்படி காப்பி அடிக்கப் பட்டதை சற்று

அடக்கமாக சொல்லி ஒத்துக் கொள்வதை நாம் பார்த்திருக்கின்றோம் !

ஆனால் .... இப்போது :


" ஆமாம் யா ! காப்பி அடித்தி உள்ளோம் , அதனால்

என்ன ? "

என்று கேட்கும் அளவுக்கு சற்று " துணிந்து "  விட்டார்கள் !
ஆனால் ........

மெல்லிசை மன்னர்கள் அந்த மாதிரியான

" காப்பி " அடிக்கும் பழக்கம் அவர்களுக்கு இல்லை ,

இதனை அவர்கள் ஆரம்பித்தில் இருந்தே கடை பிடித்துக்

கொண்டு இறுதி வரைக்கும் அப்படி இருந்தனர் / இருக்கின்றார் !


அவ்வளவு ஏன் , இளையராஜா கூட ஆரம்ப கால

கட்டங்களில் சில பாடல்களை பிற மொழிகளில் இருந்து

" சுட்டிருக்கின்றார் " !

ஆனால் மெல்லிசை மன்னர்கள் அப்படி இல்லை !

ஒரு சில பாடல்கள் , அதன் மூலப் பாடல்களின்

" concept "
ஐ பயன்படுத்தி இருப்பார்கள் .........ஆனால் அது

" காப்பி " அல்ல !( எடுத்துக் காட்டு : " மாலையிட்ட மங்கை " யில் வரும் மிகப்

பிரபலமான பாடல் " செந்தமிழ்த் தேன்மொழியாள் " பாடல் ,

இந்தியில் " ஆன் " படத்தில் அவர்களது குருநாதர் நெளஷாத்

இசையமைத்த பாடல் ஒன்றின்  " கான்செப்ட் " !    )  

100 படங்களுக்கும் மேலாக படங்களை தயாரித்து

வெளியிட்ட :


" மாடர்ன் தியேட்டர்ஸ் "


   அதிபர்

டி. ஆர் . சுந்தரம்
அப்படி இல்லை !

தான் தயாரிக்கும் அனைத்தூ படங்களிலும்

ஒரு சில பாடல்களாவது பிற மொழி களில் வெளிவந்த

படங்களின் பாடல்களை " காப்பி " அடிப்பதையே

" தொழில் "

ஆக கொண்டிருந்தார் !
 இந்த :

" இரு துருவங்களும் "

ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் !
மெல்லிசை மன்னர்கள் , நறுக்கு தெறித்தாற்பூல

" மாடர்ன் தியேட்டர்ஸ் " அதிபரிடம் சொல்லிவிட்டனர் !


" ஐயா !   எங்களுக்கு " காப்பி " அடிக்கும் பழக்கம்  இல்லை ,

ஆனால் உங்களுக்கு மிகவும் பிடித்தவாறு இசையமைப் போம் !

உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் ! "


என்று சொல்லிவிட்டனர் !

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் தலையாட்டினார் !
" சுகம் எங்கே  " ( 1954 )

இந்த படத்திற்கு முதன் முதலில் இரட்டையர்கள்

' மாடர்ன் தியேட்டர்ஸ் '  க்கு இசையமைத்தனர் -  அத்தனைப்

பாடல்களும் மெல்லிசை மன்னர்களின் :

" ஒரிஜினல் ட்டின் களே "


மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் மிகுந்த மகிழ்ச்சி

அடைந்தார் !


( எனினும் " மாடர்ன் தியேட்டர்ஸ் " அதிபரின் பழக்க தோஷம்

விடவில்லை !

என்ன ஆச்சு ?

யாருக்கும் தெரியாமல் " டாக்ஸி டிரைவர் " என்கிற இந்திப்படத்தில்

இருந்து ஒரு பாடலை உருவி  " சுகம் எங்கே " படத்தில் சேர்த்து விட்டார் !

அது தனி கதை ! )  
" பாசவலை "
மெல்லிசை மன்னர்கள் , " மாடர்ன் தியேட்டர்ஸ் "

இல் இசையமைக்கும் இரண்டாவது படம் !


இந்த படத்திலாவது , வேறு மொழிப் பாடல் ஒன்று கூட இல்லாதவாறு

அவர்கள் பார்த்துக்கொள்ள படாத பாடு பட்டனர் !


இதற்காக அவர்கள் சேலத்திற்கு முகாமிட்டு வந்திருந்தனர் !அந்த " பாச வலை "  படத்தில் ஒரு பாடல் :


அப்போதெல்லாம் ஒரு பாடல் காட்சிக்கு இரண்டு பாடலாசிரியர்கள்

கூட ஒன்றாக அமர்ந்து பாடலைப் படைக்கும் பழக்கம்

இருந்தது !

யார் எழுதிய பாடல் வரிகள் சிறப்பாக இருக்கின்றதோ அவர்

எழுதிய பாடல் வரிகள் பாடலில் இடம் பெறும் !

இரு பாடலாசிரியர்களும் சிறப்பாக எழுதியிருந்தால்..... ?

ஒன்றும் பிரச்சனை இல்லை ......இருவரின் வரிகளும்

ஏற்றுக்கொள்ளப்பட்டு , அவை  பாடலில் இடம் பெறும் !போட்டியின்றி , பொறாமை இல்லாத நற்காலம் அது !


இப்போது " பாசவலைக்கு " வருவோம் !


" பாச வலை "  படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு இரண்டு

பெரிய பாடலாசிரியர்கள் அங்கே பாடலை எழுதிக்கொண்டு

இருந்தனர் !ஒருவற் : கண்ணதாசன் !


இன்னொருவர் : மருதகாசி !


இரண்டு பேர்களும் பாடல் சரியாக வருவதற்கு முயற்சி செய்து

கொண்டிருந்தனர் !சரி பட்டு வரவில்லை !


பாடல் சரியாக வராமல் " வளிச்சுக்கொண்டெ " ......ஹி ..ஹி

இழுத்துக்கொண்டே  சென்றது !


ஒரு நாள் இல்லை , இரண்டு நாள் இல்லை !


ஒரு வாரம் ஆகிவிட்டது !


மெல்லிசை மன்னர்களுக்கு ரொம்ப கடுப்பு ஆகிவிட்டனர் !

வெறும் மன உளச்சலுக்கு ஆகிவிட்டனர் !

[color:94e4= #330000]இந்த சமயத்தில் ...........


" மாடர்ன் தியேட்டர்ஸ் "   நிறுவன மேனேஜர் :

சுலைமான் , மெல்லிசை மன்னர்களை சந்திக்க உள்ளே

வந்தார் .....


சொன்னார் :

" விசு !  ஒரு வார காலமாக இந்த பாடலின் வரிகள் ,

யாருக்கும் சரிபட்டு வரவில்லை !

எனக்குத் தெரிந்த ஒரு  புதியவர் எழுதியதை படித்துப் பார்த்து,

அவை உங்களுக்குப் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் ! "
அந்த புதியவர் யார் என்று சுலைமான் , மெல்லிசை

மன்னரிடம் சொல்லவில்லை, சொல்லியிருந்தாலும் கூட யாருக்கும்

அந்த புதியவரை அடையாளம் கண்டுகொள்ளமுடியாது !


சுலைமான் சொன்னதைக் கேட்டு மெல்லிசை மன்னர் சீறினார் .....

பின் வருமாறு சொன்னார் :
   " அட போய்யா !

இங்கே இரண்டு ஜாம்பவான்கள் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் !.....

எவனோ பாட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கிறானாம் ! ...

பார்க்கணுமாம் ! '

 சுலைமான் முகத்தில் ஈயாடவில்லை !

பதில் பேசாமல் போய்விட்டார் !


மறு நாள் .......

சுலைமான் வந்தார் , மெல்லிசை மன்னரை சந்தித்தார் .....

அந்த புதியவரைப் பற்றி சொன்னார் .....

அந்த பேப்பரில் எழுதிய பாடல் வரிகளைப் படிக்க கொடுத்தார் ....


மெல்லிசை மன்னர் ....சீறினார் !

சுலைமான் போய்விட்டார் !அதன் பின்னர்      ......?


சுலைமான் முகமது கஜினி ஆகிவிட்டார் !


" என்னய்யா சொல்றே ? "

என்றா கேட்கிறீர்கள் !


ஒண்ணும் இல்லே ......

மெல்லிசை மன்னரிடம் அடிக்கடி

" படை "    எடுத்து

புதியவரைப் பற்றி சொல்ல சொல்ல......மெல்லிசை மன்னரும் அதே போல் சீறுவார் !

 கரைப்பார் கரைத்தால்

கல்லும் கரையும்

அல்லவா !நாட்கள் நகர்ந்து கொண்டெ போனதே தவிர

வரிகள் கிடைக்கப் பெறாமல் இரு பாடலாசிரியர்கள்

வெறிச்சோடிக் கிடக்க , மெல்லிசை மன்னர்கள்

விரக்தியின் விளம்பில் இருந்தனர் .......

அப்போது ......
" மாடர்ன் தியேட்டர்ஸ் " மானேஜர் சுலைமான்

மீண்டும் அதே பல்லவியைப் பாட வந்தார் !


" என்னய்யா இது ! ரொம்ப ரோதனையாப் போச்சு !

கொண்டாயா அந்த பாட்டை !

என்னத்தை அவன் கிழித்திருகிறான் என்று பார்ப்போம் ! "======== மெல்லிசை மன்னரின் வெறுப்புடன் பேச்சு !

சில நிமிடங்களில் , வெளியில் நின்றிருந்த அந்த

இளவயது வாலிபருடன் பாடலுக்கான " சிட்டிவேஷனை " சொல்லி

வாங்கி வந்தார் , சுலைமான் !

எழுதிக் கொடுத்த அந்த வாலிபன் 'விருட் ' என்று நடையை

கட்டிவிட்டார் !
மெல்லிசை மன்னர் அந்த வாலிபன்

" எழுதிக் கிழத்ததை "

படித்துப் பார்த்தார் :

" குட்டி ஆடு தப்பி வந்தா

குள்ள நரிக்குச் சொந்தம் !


குள்ள நரி மாட்டிக்கிட்டா

கொறவனுக்குச் சொந்தம் !


தட்டுக் கேட்ட மனிதர் கண்ணில்

பட்டதெல்லாம் சொந்தம் !


சட்டப்படி பாக்கப் போனா

எட்டடிதான் சொந்தம் ! "இப்படி வரிகள் போய்க்கொண்டே இருந்தன !


படித்துப் பார்த்த மெல்லிசை மன்னர் பரவசமானார் !


அந்த பாடல் காட்சிக்கு எற்றவாறு செதுக்கி வைத்தாற்போல ,

வந்து விழுந்தன வார்த்தைகள் !அது மட்டுமா ! தான் நினைத்தமாதிரி பாடல் எப்படி வரவேண்டுமோ

அது மாதிரியே சரியான வார்த்தைகளைப் போட்டு பாடல்

வரையப்பட்டிருந்தது !

 " பலே ! பலே ! பாடல் பிரமாதம் !........

எழுதிய ஆளை அழைத்து வா , சுலைமான் ! "சொன்னார் மெல்லிசை மன்னர் !
சுலைமான் , வெளியெ சென்றார் !

" ஓடிப் போக " எத்தனித்த அந்த நபரை அழைத்து வந்தார் !" இவர்தான் பாட்டு எழுதியவர் ! "

என்றார் சுலைமான் !
பனை மரத்தில் பாதி !

அந்த அளவுக்கு அவரின் உயரம் !
அவர்தான் :பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் !அவரை மனதாரப் பாராட்டிய மெல்லிசை மன்னர்

பாடல்வரிகளை மீண்டும் படித்தார் .....20 நிமிடங்களில் மெட்டமைத்து இசையமைத்தும் விட்டார் !
[color:94e4= #000000]ஆனால் .......

மெல்லிசை மன்னர் மனம் ஒடிந்து விட்டார் !


என்னவாம் ?


இத்தனை சிறப்பாக எழுதிய ஒருவரை

புறக்கணிக்கப் பார்த்தோமே !

அவரை அவமானப் படுத்திவிட்டோமே !"


உள்ளூற மெல்லிசை மன்னரின் மனம் வாட்டியது !

அன்று இரவு .......


" மாடர்ன் தியேட்டர்ஸ் "  வளாகத்தில் இருந்த பூஜை அறைக்குள்

தஞ்சம் அடைந்தார் மெல்லிசை மன்னர் !


பூஜை அறையின் கதவை சாத்தி , தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார் !சுவரில் , தன தலையை முட்டி மோதி

" மடார் " , " மடார் "

என்று தன்னைத் தானே அடித்துக்கொண்டார் !

" எண்டா , விஸ்வநாதா ! அதுக்குள்ளெ உனக்கு அவ்வளவு

திமிரா !

அறிவு கெட்டவனே !

நீ என்ன பெரிய ஆள் என்ற நினைப்பா ?

ஓர் ஆள் நன்றாக பாடலை எழுதிக் கொண்டு வந்து படிக்கச்

சொல்கிறான், அதனை படித்துக் கூடப் பார்க்காமல்

நாட்களை கடத்தினாயே,  உனக்கு எவ்வளவு

கொழுப்பு ? "தன மனசாட்சியை , தானே கேட்டு அழுத்தி அழுது இரவு பூரா

பூஜை அறையிலே பொழுதை போக்கினார் !


அன்று இரவு , மெல்லிசை மன்னர் சாப்பிடவில்லை !

யாருடனும் பேசவில்லை !

மற்றவர்கள் எவ்வளவோ சமாதானப் படுத்தியும்

அவர் ஆறுதல் அடையவில்லை !
மெல்லிசை மன்னரின் பல நல்ல

குணங்களில் இதுவும் ஒன்று !அன்றிலிருந்து மெல்லிசை மன்னர்

ஒரு சபதம் மேற்கொண்டார் :என்ன சபதம் அது ?


        " இனிமேல் , யார் வந்து என்னைப் பார்க்க

வேண்டும் என்றால் , அவருக்கு ஒரு 10 நிமிடங்கள்

ஆவது ஒதுக்கி அவரிடோ பேசி அனுப்புவது ! "
 

ஆமாம், மெல்லிசை மன்னரை , அடியேன் 3 முறை

சந்தித்த போதும்

அந்த " இசை தெய்வம் "  எனக்கு 10 நிமிடங்களுக்கும் மேல்

( ஒவ்வொரு சந்திப்பிலும் ! )

பேசி உரையாடியதை என்னால் எப்படி

மறக்க முடியும் , ஐயா !        (  மெல்லிசை  மன்னர், இந்த கட்டுரை

எழுதியவரை  பார்த்துக்கொண்டே

அவருடன்......ஹி.....ஹி ..... அவனுடன்

உரையாடுகின்றார் !    )  

 பாட்டுக்கோட்டையாரின்

அந்த பாட்டு !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%  அடுத்த பாடல் :

வாலி !

 எம்ஜிஆரின் கோபம் !

கொஞ்சம் கூட பயப்படாத  வாலி !

கோபத்தைத் தீர்த்த

அந்த பாடல் !

எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by shobana sahas on Thu Jul 09, 2015 8:36 pm

அய்யா பிரமாதம் ...... எம் எஸ் வி எவ்வளோ பெரிய மகான்...... எவ்வளோ அடக்கம் , வாழ்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் பாடம் கற்கிறார் . .. அவர் உடல் நலம் சீக்கிரம் முன்னேற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் .
உங்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அய்யா . அற்புதமான பதிவு . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2699
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by விஸ்வாஜீ on Tue Aug 18, 2015 9:35 am

அருமை நண்பரே நீண்ட நாட்களாகிவிட்டது காத்திருக்கிறோம்
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1332
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by krishnaamma on Tue Aug 18, 2015 9:49 am

ஆமாம் அண்ணா, ரொம்ப நாளாய் உங்களை காணவில்லையே? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Tue Aug 18, 2015 10:38 am

டாக்டர்சார் அவரது பணியில ரொம்ப பிசியா இருப்பாருன்னு நெனைக்கிறேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum