உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Today at 8:46 am

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by ayyasamy ram Today at 8:44 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:34 am

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 7:06 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Yesterday at 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Yesterday at 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Yesterday at 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Yesterday at 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by M.Jagadeesan Yesterday at 6:34 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Yesterday at 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Yesterday at 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Yesterday at 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Yesterday at 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Yesterday at 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Yesterday at 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Yesterday at 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மதுக்கடைகளை உடனே திறக்க வேண்டும் - 10 மாநில முதல்வர்களுக்கு மதுபான தயாரிப்பாளர் கூட்டமைப்பு கடிதம்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:21 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:20 pm

» பெட்காஃபியோட புருஷன எழுப்பற காட்சி...
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:16 pm

» பால்காரருக்கு வந்த சோதனை...!!
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:15 pm

» மனிதாபிமானம்
by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2020 9:06 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 9:01 pm

» ஒவ்வொரு ராசியினரும் எந்தெந்த கோயிலகளில் விளக்கேற்றி வழிபட நன்மை உண்டாகும்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:48 pm

» தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குஅனுமதி அளித்தது யாா்? சரத் பவாா் கேள்வி
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:34 pm

» மனிதன் திட்டமிட்டதற்கு இறைவன் அளித்திருக்கும் இடைக்கால தீர்ப்பு.
by சிவனாசான் Tue Apr 07, 2020 8:26 pm

» நெகிழ்ந்த நிமிடம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 8:14 pm

» பிடித்த புத்தகம் – தமயந்தி, எழுத்தாளர்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:59 pm

» கவனமாக செயல்படுங்கள்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:52 pm

» நீங்கள் அளப்பதே உங்களுக்கும் அளக்கப்படும்!
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:50 pm

» சிக்கன நடவடிக்கைகள் இப்போது அவசியம்- பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 7:45 pm

» மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?
by T.N.Balasubramanian Tue Apr 07, 2020 6:59 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by ROWAN01 Tue Apr 07, 2020 6:46 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by சக்தி18 Tue Apr 07, 2020 6:34 pm

» முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே! இன்று பங்குனி உத்திரம்
by சக்தி18 Tue Apr 07, 2020 6:28 pm

» கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
by ayyasamy ram Tue Apr 07, 2020 6:10 pm

» பாவம் போக்கும் பரிதிநியமம்
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:35 pm

» தெரிந்த ஊர்! தெரியாத பெயர்கள்!!
by ayyasamy ram Tue Apr 07, 2020 5:33 pm

Admins Online

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை
அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed Dec 03, 2014 5:55 pm

@Dr.S.Soundarapandian wrote:நன்றி  
எம்கேஆர்சாந்தாராம் அவர்களே ! மிக மிகப் பயனுள்ள - உயிரோட்டமான செய்திகள் உங்களுடையவை !
எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 103459460 பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 103459460 பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 1571444738 பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1100999அன்புள்ள திரு. டாக்டர் . செளந்திரபாண்டியன்

அவர்களுக்கு,

உங்களின் கடிதம் எனக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது , ஐயா !

நன்றிகள் பல !

மருத்துவ பணிகளின் பளுவின் காரணமாக சென்ற மாதம்

என்னால் கட்டுரையை எழுத முடியவில்லை......

மன்னிக்கவும்.

இதோ....

" நாயகன் "   கட்டுரை நாளை முதல்

தொடர்ந்து தருவேன்.

நன்றியுடன் ,


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Fs2nR2DLQDSMnDeZpWCP+santha

எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Wed Dec 03, 2014 5:58 pm

நாயகன் பற்றி எழுதவிருக்கும் டாக்டர் ஐயா, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4393
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1342

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Dec 04, 2014 4:42 pm

@மாணிக்கம் நடேசன் wrote:நாயகன் பற்றி  எழுதவிருக்கும் டாக்டர் ஐயா, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1107669மிக்க நன்றி, திரு. மாணிக்கம் நடேசன் அவர்களே !

மின்னல் வேகத்தில் நீங்கள் பதில் எழுதும் பாங்கு எனக்கு

மிகவும் பிடித்திருக்கின்றதூ !எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Dec 04, 2014 4:43 pm

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 V9oyxmUQ5Kgq33Bug5JY+poster
தொகுதி - 7

" நாயகன் " ( 1987 )

உருவான

கதை !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
முதலில் .............


இவரைப்பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 DzX07FMZRvCyWmiBg4ZQ+iiiiiiiiபற்றி !

இயக்குனர் : மணிரத்னம் :
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 RI56gq0Rk6nyNAiSKRQw+mkrscolor=#00008B]

' கோபால ரத்னம் சுப்பிரமணியம் '

என்கிற :

ஜி. மணி ரத்னம் ஓர் M . B . A . பட்டதாரி .

சரி, மணி ரத்தினத்தின் சித்தப்பா யார் தெரியுமா ?

சரி, சரி, முறைக்கவேணடாமே, நானே சொல்லிவிடுகிறேனே !

பிரபல இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய ' சூபர் பம்ப்பர் ' திரைப்படம் :

" கல்யாண பரிசு "

தெரியும் இல்லே........

அந்த படம் மட்டுமல்ல, .....

சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்த :

" உத்தம புத்திரன் "


வெற்றிப் படத்தை எடுத்த :


" வீனஸ் பிக்சர்ஸ் "

அதிபர்கள் :

கிருஷ்ணமூர்த்தி

கலைவாணர் என்.எஸ்.கே வின் சகலர் :

கோவிந்தராஜன்,

மற்றும் இயக்குனர் ஸ்ரீதர்.இவர்களில் : கிருஷ்ணமூர்த்தி தான் மணிரத்தினத்தின் சித்தப்பா......

அப்பப்பா......போங்கப்பா.....ஒரு 'தபா' சரியாக சொல்லிவிட்டேன்ப்பா !சரி, " மணிரத்தினத்தின் அப்பா ? "( " போச்சுடா ! மறுபடியும் ஆரம்பிச்சுட்டான் டா ! "

என்று ஓ.பி எஸ் மாதிரி புலம்பவேண்டாம் ! )


மணிரத்தினத்தின் அப்பா :ரத்னம் ஐயர் :

இவரும் " வீனஸ் பிக்சர்ஸ்" இல் வேலை செய்தவர்கூட !


சரி, இவ்வளவை சொல்லிவிட்டு இன்னொன்றை சொல்லாவிட்டால்

என்னை 'ஜோட்' டால் அடிப்பார்கள், விஷயம் தெரிந்தவர்கள் !


" என்னைய்யா அது, சொல்லித் தொலையும் ! ! "

என்கிறீர்களா !

சொல்றேன் !

மணிரத்தினத்தின் இரண்டு சகோதரர்களில் ஒருவர் :


" ஜி. வி. பிலிம்ஸ் " பட நிறுவன அதிபர் :


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 S4QZm72QDOQyPTiDGtmv+gvஜி. வெங்கடேஸ்வரன் - இவர் மணிரத்தினம் இயக்கிய :

" நாயகன் " , " தளபதி" , " அஞ்சலி " , " மெளன ராகம் "

படங்களின் தயாரிப்பாளர் ஆகும் !


சரி, " மணிரத்தினத்தின் மனைவி ? "

அஃது உங்களுக்கு தெரியாதா, என்ன !

நான் சொல்லமாட்டேன், அஸ்கு - புஸ்கு !

[/color]
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 33T19FcMRnKfWXYQMADz+suhasini

" நாயகன் " படக் கதை தோன்றிய

கதை :!

" கிழக்கு எந்த பக்க்கம் , சொல்லுங்கள் ! "கேட்டவர் :

" முக்தா " சீனிவாசன் , மணிரத்தினத்தைப் பார்த்து தான் இப்படி

கேட்டார் !

மணிரத்தினம் " கிழக்கு முகத்தை " காட்டினார் !
" சரி, யார்யா இந்த : ' முக்தா' சீனிவாசன் ? "

என்றா கேட்கிறீர்கள் ?( " ஆரம்பிச்சான்யா, மறுபடியும் !" என்கிறீர்களா ?


" ஏன் என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை ! ' )


' முக்தா' சீனிவாசன் :


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 HE57mepDSsOzaJkrhr1c+muktha


ஆரம்ப நாட்களில் ' மாடர்ன் தியேடர்ஸ் ' நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னர்

படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆகி, பின்னர் படத் தயாரிப்பாளர்

ஆக மாறி பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து இயக்கியவர் !

நடிகர் திலகம் நடித்த ' தவப் புதல்வன் ' , ' நிறை குடம் ' , ' அந்தமான்

காதலி' போன்ற படங்கள் இவர் இயக்கி தயாரித்த படங்களே ஆகும் !

இப்போது முதன் முதலாக தனது நிறுவனத்திற்கு வெளியாட்களைக்

கொண்டு படத்தை இயக்க மணிரத்தினம் வீட்டுக்கு வந்து

உள்ளார் !ஒரு நீளமான கனமான 'கவர்' ஐ முக்தா சீனிவாசன்

மணிரத்தினதிடம் கொடுத்தார் !

அந்த 'கவர்' ஐ வாங்கிகொ கொண்ட மணிரத்தினம் சிறிது

" ஜொள்ளு "

விட்டார் என்றே சொல்லவேண்டும் !

காரணம் ?

நேரம் காலம் இடம் பார்த்து ஒருவர், தன் வீட்டுக்கு வந்து ஒரு கவரை

கொடுத்தால் நாம் என்ன நினைப்போம் ?

எல்லாம் " டப்பு" சமாச்சாரம்தான் !

மணிரத்தினம், அந்த கவரில் " MONEY " இருக்கின்றது என்று நினைத்தார் !

ஆனால் ' ரத்தினம்' அப்படி நினைக்க

'முக்தா ' அப்ப்படி நினைக்கவில்லை !" மணிரத்தினம் ! அந்த கவரில் ஒரு வீடியோ காஸ்ஸட்

உள்ளது !

பிரபல நடிகர் சஞ்சீவ் குமார் நடித்த இந்திப் படம் :" பக்லா கஹின் கா "பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 6mO76T9dSg6FG7CqzmQd+pagla


படப் பிரதி அது !


மணிரத்தினம் சற்று ' அப்சட்' ஆகிவிட்டார் !

கவரில் " துட்டு" இல்லை என்று தெரிந்தால் சிரிக்கவா முடியும் !

மணிரத்தினம் , அந்த கால கட்டத்தில் அப்போதுதான்

" மெளன ராகம் "


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 JiTUu0MlRk0vQLZDq4Lh+Mouna_Ragam_posterபடத்தை வெளியிட்டு வைத்திருந்தார்......

" மெளனராகம் " படம் " ஏ " வகை மையங்களில் நன்றாகவே ஓடியது,

பணத்தை சம்பாதித்துக் கொடுத்தது.......ஆனால் " பி " மற்றும் ' சி ' மையங்களில்

' ஊத்திக்' க்கொண்டது ![h3][b] ( ஆனால், இதே கதையை :


கார்த்திக் - 'மைக்' மோகன் - ரேவதி - 'காம்போ' வை மாற்ற்றி :

ஜெய் ஆகாஷ் - ஆர்யா - 9 தாரா - ' காம்போ' வை வைத்து

" ராஜா ராணி " என்று எடுத்து இக்கால " புதுமை இயக்குனர்கள் '

ஓரளவு வெற்றி கண்டனர் !பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 AiqIAtATqCc1nCoe8O7Q+Raja-Rani-2014-Telugu-Movie-Free-Download


சும்மா ஒரு ' கிக்' க்கு காக 'மன வாடு மொழி ' போஸ்டர்...

மற்றபடி " 10 ஷன் " ஆகவேண்டாம் ! )


இதனால் மணிரத்தினாம் , அனைத்துத் தரப்ப்பினரையும் குஷிப் படுத்தி

மாபெரும் வெற்றி பெற இன்னொர்ரு படத்தை எடுக்க தன்னை ஆசுவாசப்

படுத்தி வைத்திருந்தார் !

படம் : " அக்னி நட்சத்திரம் "


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Xtd70aM8SBaUge32Cd1p+agin-1ஆனால் அந்த படத்தை இன்னும் எடுக்க ஆரம்பிக்க வில்லை.....

இப்போது 'முக்தா' வேறு வந்துள்ளார் !" இந்த இந்திப் படத்தை என்னிடம் ஏன் கொடுத்தீர்கள் ?

- மணிரத்தினம்.
" இந்த இந்திப் படத்தை நீங்கள் தமிழில் ' ரிமேக்'

பண்ணித்தர வேண்டும், நம் ' முக்தா பிலிம்ஸ் ' சார்பாக ! "

......முக்தா சீனிவாசன் :
" ஐயா, பொதுவாக எனக்கு ' ரிமேக்' படங்களை

எடுக்க வராது ! என்னை மன்னித்துவிடவும் ! "

...................மணிரத்தினம்

" சரி, நாளை உங்க்களை ஏ.வி. எம் ஸ்டுடிய்யோ வுக்கு

அழைத்துச் செல்கிறேன் ........அங்கே வந்தூ இப்போது நீங்கள்

இப்போது என்னிடம் சொன்னதை சொல்லிவிடுங்கள் ! "


- ' முக்தா! '
மறுநாள் :அங்கே :

கமல் இருந்தார் !மணிரத்தினம், கமல் இடம் :" ஐயா ! 'பக்லா கஹின் கா ' படம் தமிழில் ரிமேக் செய்ய்ய

உகந்தவன் நான் அல்ல......எனவே நான் அந்த படத்தை இயக்க விருபவில்லை !"
பின்னர், கமல் , மணிரத்தினத்திடம் கேட்டது :" பின்னே, எந்த மாதிரியான படத்தை இயக்க

விரும்புகிறீர்க்கள் ? "அப்போதுதான் மணிரத்தினத்தின் மனதுக்குள்

"பட்சி" சொல்லியது :


' கமலும், முக்தாவும் என்னை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க

அழைக்க ' ஒரு விடியோ காஸ்ஸட்' ஐப் பயன்படுத்தி உள்ளர் !


என்பது !

" சரி, எந்த மாதிரியான படத்தை என்னை வைத்து

எடுக்க முடிவு செய்வீர்கள்ள் ? "


- கேட்டவர் கமல் !
மணிரத்தினம் , கமலிடம்:
" BEVERY HILLS COP "

" DIRTY HARRY "

007 - JAMES BOND

போன்ற " ஆக்ஷன் " படங்களை எடுக்க விருப்ப்பம் .....

இல்லை என்றால்

பாம்பே வரதராஜமுதலியார் வாழ்க்கை வரலாற்றை படமாக

எடுக்கல்லாம் என்று மூடிவு செய்துள்ளேன் ! "
கமல்ஹாசனின் தேர்வு என்ன என்பது நான்

சொல்லவேண்டுமா, என்ன !!


இப்படித்தான் :

" நாயகன் "

தோன்றீனான் !

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 XD5GfNrvQUGg5mhNrhaJ+varada-2பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 ZSMDzr5QNWB5pp1uTWW1+varada
தொடரும்...


எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by ஜாஹீதாபானு on Thu Dec 04, 2014 5:34 pm

மணிரத்னம் பற்றிய தகவல் சூப்பர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30968
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7385

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Mon Dec 08, 2014 2:55 pm

நாயகனுக்கு இப்படி ஒரு பெரிய கதையையை எழுதி விட்டார் நம் டாக்டர் சார், இதையே ஒரு படமாக உடுக்கலாம் போல் இருக்கு.
ஒரு கேள்வி டாக்டர் சார், ஜோட். தபா மற்றும் டப்பு, இது மூன்றுக்கும் என்ன அர்த்தம் டாக்டர் சார். எங்க நாட்ல இப்படி வார்த்தைகள் தமிழில் கிடையாது, அதான்.கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4393
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1342

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by சிவனாசான் on Tue Dec 09, 2014 9:12 am

பழைய படங்கள் பண்பை வளர்த்தன . தற்போதைய படங்கள் பண்பை குலைத்து குற்றத்தை வளர்க்கின்றன @ படிக்கும் பிள்ளைப் பருவத்திலிருந்தே.... நிர்வாக தூய்மைக்கு முதல்வன் படம் பார்க்கனுங்க...மேலும்புதிய படங்கள் குற்ற செயல் காட்சி இன்றி எடுக்கனுங்க...........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4349
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1220

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mbalasaravanan on Tue Dec 09, 2014 12:16 pm

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 103459460
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by M.Saranya on Tue Dec 09, 2014 3:17 pm

நல்ல பதிவு...
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Dec 11, 2014 4:18 pm

@ஜாஹீதாபானு wrote:மணிரத்னம் பற்றிய தகவல் சூப்பர்
மேற்கோள் செய்த பதிவு: 1107876


 மிக்க நன்றி சகோதரி ஜாஹீதாபானு அவர்களே !

மிக்க நன்றி !  பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 1571444738எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Dec 11, 2014 5:05 pm

தங்களின் மடலுக்கு மிக்க நன்றி :

திரு. மாணிக்கம் நடேசன் அவர்களே !
" நா பொறந்த ஊரு, ஸ்கோலுக்கு போன

ஊரு, எரும்மாடு மாரி வளர்ந்து ஊரு , கண்ணாலம் கட்டிக்

கொண்ட ஊரு, பொழைக்க கஸ்டப்பட்டும் ஊரு, இப்டி

எத்தினி தபா சொன்னாலும் இந்த மெட்றாஸ் தான்

மாணிக்கம் நய்னா !

அப்பாலே, அப்டியே இங்கேயே குந்திக்கினு பொழப்பை

பார்த்த்க்கினி இருந்ததாலே நம்ம ஊரு பாஷை நா

கிறுக்கினு எழுத்திலே 'அசால்ட்' ஆ இருக்கும் !

கண்டுக்கோ, மாணிக்கம் நாய்னா !.......ஹு....ஹு,,,

வர்ட்டா ? "மேற்படி எழுதியதை

" தமிழில் " தருகிறேன் ! " நான் பிறந்த ஊர் , பள்ளிக்கு சென்ற ஊர்,

எருமை மாடு போல வளர்ந்த ஊர்,, திருமணம் செய்து

கொண்ட ஊர், பிழைப்புக்கு கடினப் படும் ஊர்,

இப்படி எத்தனை முறை சொன்னாலும் இந்த சென்னைதான்,

மாணிக்கம் ஐயா !


அப்புறம், இங்கேயே இருந்து கொண்டு பிழைப்பை கவனிப்பதால்

எங்களின் ஊர் மொழி நான் எழுதுவதில் சகட்டு

மேனிக்கு காணப்படும் !

கவனியுங்கள், மாணிக்கம் ஐயா !

உம்....உம் ....வரட்டுமா !   ? "  

நான் எழுதும் எழுத்துக்கள்

" சென்னை வட்டார வழக்கு மொழி "

'ஜாஸ்தி ' ........ஹி...ஹி.... ஐ மீன்...

அதிகம்

ஆக இருக்கும் !

" அட்ஜஸ்ட் "  பண்ணுக்குங்கோ !
 திரு. மாணிக்கம் நடேசன் கேட்கிறார் :

 " ஒரு கேள்வி டாக்டர் சார், ஜோட். தபா மற்றும் டப்பு, இது மூன்றுக்கும் என்ன அர்த்தம் டாக்டர் சார். எங்க நாட்ல இப்படி வார்த்தைகள் தமிழில் கிடையாது, அதான்.கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார் "  
ஐயா !

" மெட்ராஸ் பாஷை " என்பது  பல மொழி சொற்களின்

' சங்கமம் ' ஆகும் மொழி !

உருது, இந்தி , தெலுங்கு, ஆங்கிலம் கன்னடம், மலையாளம்

அராபிக், போர்துக்கீஷ், பாரசீகம் போன்ற சொற்கள் கலந்த

மொழி......ஜோடு =   என்றால்  தமிழில்  " செருப்பு "  என்று சொல்லுவார்கள் !


" தபா "   என்றால் ?    இன்னொரு ' தபா ' சொல்லட்டுமா....

" தபா" என்றால் " தடவை " என்று பொருள் !" டப்பு " என்றால் ..... தெலுகில் " பணம் " என்று பொருள் !

 நம்ம பெரீவர்....அத்தான்....சிவா எஜமான்

" எய்து....நாய்னா....கரீக்டா எய்து நய்னா "

என்னு எங் கையிலியே சொன்னாங்கிட்டின்னா

நா ' புல்' ஆ மெட்ராஸ் பாஷையிலே ஒரு கட்டுரையை

எய்த நா 'ஜூட் ' !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Dec 11, 2014 5:13 pm

P.S.T.Rajan wrote:பழைய  படங்கள் பண்பை வளர்த்தன . தற்போதைய படங்கள்  பண்பை குலைத்து  குற்றத்தை வளர்க்கின்றன @  படிக்கும் பிள்ளைப்   பருவத்திலிருந்தே.... நிர்வாக தூய்மைக்கு  முதல்வன் படம் பார்க்கனுங்க...மேலும்புதிய படங்கள் குற்ற   செயல் காட்சி  இன்றி எடுக்கனுங்க...........
மேற்கோள் செய்த பதிவு: 1108547
தங்களின் மடலுக்கு என் நன்றி திரு. ராஜன்  ஐயா !

நீங்கள் சொல்வதை அப்படியே நான் ஏற்றுக்கொள்கிறேன் !

நீங்கள் இப்படி எழுதியதை நான் தக்க எடுத்துக்காட்டுகளுடனும்

மேற்கோள் களும் போட்டு என்னால் :

பல படங்கள்,

பல நடிகர் - நடிகையர்கள்

பல பாடல்கள்

பல பாடகர் பாடகியர்

பல இயக்குனர்கள்

என்று பல பிரிவுகளில் இன்றைய தமிழ்ப் படங்களைப்

பற்றி என்னால் எழுத முடியும் !


ஆனால்,

பலரின் கோபத்திற்கு நான் ஆளாகும் நிலையில்

வருவதற்கு எனக்கு உடன்பாடில்லை !


எனவே ......

" கப் - சிப் " !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Dec 11, 2014 5:15 pm

மேற்கோள் செய்த பதிவு: 1108570மிக்க நன்றி, திரு. பாலசரவணன் !


எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Thu Dec 11, 2014 5:44 pm

@M.Saranya wrote:நல்ல பதிவு...
மேற்கோள் செய்த பதிவு: 1108625உங்களின் மடலுக்கு மிக்க நன்றி ..

சகோதரி சரண்யா அவர்களே !

" நாயகன் " உருவான கதை :

இரண்டாம் தொகுதி :

நாளை !

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 IFh45vFQ2OqPKLLJe62L+santha


எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Fri Dec 12, 2014 5:12 pm

'நாயகன் ' உருவான கதை !.....

தொடர்ச்சி.........

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Mhjj2JqYRb6FwmUJ41Zq+narappadai


மணிரத்தினத்திற்கு ' நாயகன் ' படத்தை எடுக்கும்ம் 'ஐடியா'

எப்போது வந்தது ?

கமல் நடித்து பாரதிராஜா இயக்கிய :

' டிக் டிக் டிக் '

படத்தயாரிப்பாள, ஆர் . சி. பிரகாஷ் ,

சத்யராஜை வைத்து ஒரு படம் எடுக்க

மணிரத்தினத்தை அணுகியபோது, இவர்

'நாயகன்' படத்தின் 'ஒன் லைன் ஸ்டோரி ' யைத் தான்

சொன்னாராம் !

ஆனால் என்ன காரணத்தினாலோ பிரகாஷ் , அந்த படத்தை

தயாரிக்க முன்வரவில்லை !

மணிரத்தினமும் அந்த படம் கைவிடப்பட்டது குறித்து

எந்த வருத்தமும் கொள்ளவில்லை !

( ஒரு வேளை......சத்யராஜ் ஐ வைத்து ஆர். சி . பிரகாஷ்

இன் படத்தை 'நாயகன்' ' ஸ்டைலில்' எடுத்திருந்தால்

'சத்யராஜின் வேலுநாய்க்கர் இப்படித்தான் இருந்திருப்பாரோ

என்னவொ.....எனக்குத் தெரியாது, ஸ்வாமி !
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 QQVWqcIMQf6sAraffPLq+sathya

மணிரத்தினம் 1985 ஆம் ஆண்டில் இயக்கிய " பகல் நிலவு "

படத்தில் சத்யராஜ் இன் 'கெட் அப் ! '

'நாயகன்' 1987 ஆம் ஆண்டு தயாரிப்பு ! )
மணிரத்தின்ம் தனது பட்டப் படிப்பை - 1975-77

வருடங்களில் மும்பை யில் தான் படித்தாராம், அப்போது

பம்பாய் வரதராஜ முதலியார் மிகவும் புகழ் பெற்றிருந்தார்.

பம்பாய் மக்கள் அவரை தெய்வமாகவே வழிபட்டனர் ! இதனை

நேரில் பார்த்த மணிரத்தினம் அந்த காட்சிகள் அவருக்கு

பசுமரத்தாணி போல பதிந்து விட்டது !

இதனையே நாம் படமாக எடுத்தால் என்று , மணிரத்தினம்

கமலை சந்திக்கும் போது ஏற்பட்டுவிட்டது ! "

கமல் :

" நாயகன் " கதையின் கரு என்ன ?மணிரத்தினம் :
" ஒரு தமிழன் , தமிழ் நாட்டில் இருந்து

பம்பாய்க்குச் சென்று அந்த ஊரை ஆள்கிறான் ! "

கதையின் கரு கமலைக் கவர்ந்து விட்டது !

( க - க - க - க ! )கமல் :


" மணி , 'நாயகன் ' படப்பிடிப்புக்கு வரும் டிசம்பரில் தேதிகளைத்

தருகிறேன் , சரியா ? "

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 OGBrmGNwTMSCdcHVW4Ns+04SM_NAYAKAN_JPG_1254879g" சரி " !

இதனைச் சொன்ன மணிரத்தினம் மீண்டும் குழப்பத்தில்

ஆழ்ந்தார் !

என்னவாம் ?

அப்போதுதான் மணிரத்தினம் " அக்னிநட்சத்திரம் " படப்பிடிப்பை

அடுத்த செப்டம்பரில் ஆரம்பிக்கப் போகிறார் !

இந்த " அழகில்" எப்படி இரண்டு மாதங்களில் இன்னொரு

படத்தை - அதுவும் கமலை வைத்து - ஆரம்பிப்பது ?
ஒரே சமயத்தில் இரண்டு படங்களை இயக்குவது என்பது

ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வதற்கு சமம் !( தமிழ்த் திரைஉலகில் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில்.....

மன்னிக்கவும்.....இரண்டு படங்களில் இயக்கிய சம்பவங்கள் உண்டு !


" ஓர் உதாரணம் - அத்தான் - எடுத்துக்காட்டு - கொடுய்யா ! "

என்கிறீர்களா !


1962 ஆம் ஆண்டில் பிரபல பழம் பெறும் இயக்குனர் கே. சங்கர்....

ஒரே சமயத்தில் :

நடிகர் திலகத்தை வைத்து " ஆலயமணி " படத்தையும்

மக்கள் திலகத்தை வைத்து " பணத்தோட்டம் " படத்தையும்

வைத்து இயக்கினார் !

இரண்டு படங்களையும் மிகக் குறைந்த கால இடைவெளியில்

வெளியிட்டு பெரும் வெற்றி பெற்றார் ! )பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 HXyARfvDScGFXcqmkiji+aalayamani


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 YmjHBay1R4qczu0BkWI1+sankarகமலின் 'கால் ஷீட் ' ஐ யார்தான் வீண் அடிப்பார்கள் !

மணிரத்தினம் யோசித்தார் !

" அக்னிநட்சத்திரம் " படத்தை ஒரு வருடத்திற்கு படம் எடுக்க

தயாரிப்பாளரிடம் " தடா " வாங்கினார் !

படத்தை ' நிப்பாட்ட ' தயாரிப்பாளரும் ஒத்துத் கொண்டார்ர் !

" என்னய்யா, செம ' புரூடா ' விடுகிறீர்கள் !

எந்த தயாரிப்பாளரும் அப்படி ' உட்காரு - நில்லூ ' என்று

உடனே ஒத்துக்கொள்வார்களா , என்ன ? "

என்கிறீர்கள்ளா !

ஒத்துக்கொண்டார் !

ஏன் ?

படத்தயாப்பாளர் , மணிரத்தினத்தின் அண்ணன் ஜி. வி ஆயிற்றே !

தன் தம்பி , ' நாயகன்' ஆவதை அண்ணன் தடுக்கவில்லை !இந்த சமாச்சாரம், வேறு தயாரிப்பாளர் விஷயத்தில் மணிரத்தினம்

இப்படி நடந்து கொண்டிருந்தால் ?

" அம்மா" படத்தை எடுக்கச் சொல்லி இங்கே சில சில

நகராட்சிக்களில் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும்

நடக்கும் " டமால் - தொபால் " நிகழ்ச்சி போல் அல்லவா

மணிரத்தினம் விஷயத்தில் நடந்திருக்கும் !


சரி, ' அக்னிநட்சட்த்திரம் ' ஒரு வருடம் தள்ளிப் போடப்படது !


சரி, ' நாயகன் ' ஆவது உடனேதொடங்கப் பட்டதா ?


' லேது ' ஸ்வாமி, லேது !

என்னவாம் ?

கமல் ' சரி ' என்று சொல்லும்போது மணிரத்தினம் 'நாயகன்'

படத்தின் " ஸ்கிரிப்ட்" தயாராக இல்லையாம் !

இந்த விஷயம் கமலின் காதில் போடப்பட்டது !இதற்கு கமலின் பதில் மணிரத்தினத்தையே வியப்பை ஏற்படுத்தியது !


கமல் என்ன சொன்னார் ?


" பரவாயில்லை !

உங்களின் " ஸ்கிரிப்ட் " ரெடியாகும் கால இடைவெளியில் நாம்

" டெஸ்ட் ஷூட் " ( TEST SHOOT )

செய்து பார்க்கலாம் ! "

அது என்ன " டெஸ்ட் ஷூட்? "
படத்தின் இயக்குனரும் பிற தொழில்நுட்ப

நிபுணர்களுடன் ( ஹீரோ உட்பட ) இணைந்து படம் செழிப்பாக

எடுக்க ஆயுத்தம் செய்து கொள்ள சில பல காட்சிகளை எடுக்க

செய்யும் " பிராக்டிஸ் " முயற்சிதான் அது !

கிரிக்கட் இல் " நெட் பிராக்டிஸ் " போலத்தான் இதுவும் !

அதுவும் தயாரிப்பாளரின் தலையில் ' மொளகாய் '

அரைத்து செய்யப்படும் வேலை இது !!

தயாரிப்பாளர் " என்னவோ பசங்க படம் எடுக்க ஆரம்பிச்சானுங்க

போலிருக்கே ! "

என்று 'கானல் நீர் ' காணும் வேலை !

தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனுக்கு இந்த 'டெஸ்ட் ஷூட்'

சமாச்சாரம் எல்லாம் அறிந்திருக்கவில்லை !


ஒரு வழியாக ' நாயகன் ' படப்பிடிப்பு தொடங்கியது !

எங்கே ?

அன்றைய பம்பாய் - இன்றைய மும்பய் - இல் ஒரு சில நாட்கள் - அதாவது -

கதை பம்பாயில் நடக்கின்றது என்பதை நமக்கு காடுவதற்கா மட்டும் அவர்கள்

மும்பாயில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்று சொல்ல

வேண்டும் !

மற்றபடி சென்னையில் படப்பிடிப்பு நடத்தினார்கள் என்றே சொல்ல

வேண்டும்.

மும்பையில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் :

தாராவி பகுதியைப் போல்

ஒரு ' செட் ' ஐ சென்னை ' வீனஸ் ஸ்டுடியோ ' வில் உருவாக்கி

அங்கே படப்பிடிப்பு நடத்தினார்கள் !

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 0vZ8UxRAScu0VFjQU37m+Nayakan2

' நாயகன் ' இல் கமல்ஹாசனின் ' மேக் அப் ':
கமல் ஒரு சிறந்த நடிகர் மட்டும் அல்ல,

பல்வேறு தொழில்நுட்பங்களின் நிபுணரும் கூட !

மற்ற படங்களில் அவர் எப்படியோ, ' நாயகன் ' படத்தில் ஒப்பனை

அவரே போட்டுக்கோண்டதுதான் !

அது மட்டுமா !

படத்தில் மற்ற கலைஞர்களுக்கும் ஏதேனும் ஒப்பனையில் குறைகள்

இருந்தாலும் கமலே தானாகவே சென்று அந்த ஒப்பனை குறைகளை

'அட்ஜஸ்ட்' செய்து கொடுப்பாராம் !


இதில் என்ன ஒரு "கொடுமை " என்றால் , கமல் இந்த 'அட்ஜஸ்ட்மெண்ட் '

வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது, மணிரத்தினம் படத்தின்

மற்ற வேலைகளை முடித்துக் கொண்டே இருப்பாராம் !

'' நாயகன் "" படத்தில் ஜனாகராஜ், டெல்லி கணேஷ் ஆகியோர்களுக்கு

வயதான கெட் அப் தோற்றங்களை உண்டாக்கியவரும் கமல்தான் !

அது மட்டுமா !!

படத்தில் டெல்லி கணேஷ், ஜனகராஜ் ஆகியோருக்கு ஒட்ட முடி

வெட்டியவரும் கமல் தானாம் !

படத்தில் கமலின் மேக் அப் எப்படி ?

பிற படங்களில் கமல், வயதான தோற்றத்தில் வரும்போது சாம்பல் நிறத்தில்

' டோபா ' வைத்து நடித்திருப்பார்.

எடுத்துக் காட்டு : " சாகர சங்கமம் "

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 FpTiObogRTeAZE7WjZXJ+salangkai
" நாயகன் " படத்தில் எப்படி ?1. கமலின் தலைமுடியின் நடுவில் முடியை வெட்டி விட்டு

அவர் அந்த வயோதிக தோற்றத்திற்கு :


வழுக்கை

என்று காட்டுவதற்கு ஏற்பாடு செய்தனர் !2. நிஜ வாழ்வில் வரதராஜ முதலியார் எப்படி :

தாடியின்றி வருவாரோ , அப்படியே கமலையும் தன்

முகத்தை கொஞ்சம் கூட முடி இல்லாமல் ' பளிச்'

என்ற தோற்றத்தில் வலம் வரச் செய்தனர் !

முகத்தில் தாடி இருந்தால் அவரது தாடைகள் அவரது

இளவயதை மறைத்து விடும் என்று எண்ணினார் !

ஆனால் மணிரத்தினம் " தாடி பாலிசி " யை ஒத்துக் கொள்ளவில்லை !


எனினும் கமல் தாடி சமாச்சாரத்தில் மனம் கலங்கவில்லை !

தன் நடிப்பனால் " தன் முதுமை நடிப்பை " நிலை நாட்டினார் !
3. தூய்மையான வேட்டி சட்டை மட்டும் அணிந்து வந்தார் !
" நாயக்கன்" படத்தில் கமல் இப்படி வழுக்கை மனிதர் ஆக நடித்தார்

அல்லவா !

" நாயகன் " படப்பிடிப்பு முடிந்த வுடன் வழுக்கையை என்ன

செய்ய ?

மொட்டை அடித்துக் கொள்ளவேண்டும் !

ஆமாம் , மொட்டை அடித்துக் கொண்ட்டார் !

அடுத்து அவர் நடித்த படம் :
" சத்யா "


ஆயிற்றே !


பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Yxa8sMaFTua5finr6uDE+sathaசரி, ' மேக் அப் ஆயிற்று ! எனினும் கமலே மேகப் செய்து

கொண்டாலும் அதனை சரி படுத்துவதற்கு ஒரு நிபுணர் வேண்டுமே !

அதற்கும் கமல் தயார் செய்து கொண்டார் !

பிரபல ஒப்பனையாளர் சலீம் அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்

கொண்டு அவரின் ஆலோசனையை கேட்டுத்தான் கமல்

தன்னை ஒப்பனை செய்து கொண்டார் !

அது மட்டுமா !அப்போது அவர் அருகே இருவர் இருந்தனர் !

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்,

மற்றும்

நடிகர் ஜனகராஜ் ஆகியோர் இருந்தனர் !" என் மேக் அப் எப்படி இருக்கிறது ? "

கேட்டார் கமல்.


" உங்களை கொஞ்சம் கூட அடையாளம் கண்டுகொள்ள

முடியவில்லை, கமல் சார் ! "


சொன்னார்கள் ஸ்ரீராமும் ஜனகராஜ் உம் !

கமல் அவர்களை நம்பவில்லை !
பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 6QQyt9RGQaGm2XYQ8KmO+2004082001760106


ஒளிப்பதிவாளர் ஸ்ரீராமை அழைத்ட்துக் கொண்டார் !

வெளியே வந்தார் !


( உடன் ஜனகராஜ் அவர்களை அழைத்துச் சென்றால் " ரிஸ்க்"

அல்லவா ! )


வயதான கெட் அப் இல் வெள்ளை சட்டை - வேட்டி சகிதம் அவர்

சென்னை ஆழ்வார்ப்பேட்டை ஜங்சன் பக்கம் காலாற நடந்து

வந்தார்......யாரும் அவரை சட்டை பண்ணவில்லை - கமல் 'சட்டை'

அணிந்து வந்தாலும் கூட !

ஸ்ரீராமுக்கோ உதறல் !

ஒரு மிகப் பெரிய நடிகருடன் நாம் வெளியே வருகின்றோமே,

யாரோ ஒருவர் கமலை அடையாளம் கண்ட்டுகொண்டால் !

என்ன ஆச்சர்யம் !

ஒருவரும் கமலை - அத்தான் - வேலு நாய்க்கரை அடையாளம்

கண்டுகொள்ளவில்லை !பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 A4zesxbuQaLOBAFQWCZA+NAYAGAN_15397f
" இப்போது நீங்கள் சொல்வதை நம்புலின்றேன் ,

ஸ்ரீராம் !

யாரும் என்னை அடையாளம் தெரியாதவாறு வேடம் பொருந்தி

உள்ளது !கமல் திருப்தி அடைந்தார் !


மூன்றாம் பகுதி ......

விரைவில் .........................................

தொடரும்.எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பழைய தமிழ்த்  திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! - Page 11 Empty Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை