ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Go down

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Wed May 14, 2014 7:33 am

First topic message reminder :

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா !
ஓரக்கண் பார்வை
அன்பு  நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .

நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  !

இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், -  இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
"  Over   Build - Up  "    இல்லாமல்  தருவது என் நோக்கமே !
 

    முக்கியமாக..... :இந்த  தொடரை  எழுதும் அடியேன் ......  உள்ளது....உள்ளபடியே  எழுதுவது மட்டுமின்றி :

யாரையும் "  Suppoort  " செய்து  எழுதுவதோ...
யாரையும் தூற்றி  எழுதுவதோ  என்னுடைய வேலை அல்ல
என்பதையும்  பணிவாம்புடன்  தெரிவித்துக் கொள்கிறேன் !திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும்   அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர்  அவைகளைப் படித்து  'நெளிய'  நேரிடும் !  எனவே நாகரீகம்  கருதி   நெளிய வைக்கும்  பல விஷயங்கள், பல விஷயங்கள்  - எனக்கு  தெரிந்தும் அவைகளை  தவிர்த்து, எழுதவேண்டிய  விஷயங்களை  மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

சரிதானா,  நண்பர்களே ! ஜாலி  

எம்கேஆர்சாந்தாராம்[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா   [/ok]


Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down


Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by veeyaar on Tue Sep 30, 2014 11:42 pm

டாக்டர் சார்
சாந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற யாரந்த நிலவு பாடலைப் பற்றிய மிக விரிவான கருத்துரைக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களிடமிருந்து வரும் இது போன்ற விரிவான ஆய்வுப் பதிவுகள் தமிழ்த் திரையுலகின் வரலாற்றை எதிர்காலத்திற்கு எடுத்துரைக்கும் மிகச்சிறந்த ஆவணங்களாகும்.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Wed Oct 01, 2014 7:08 am

அன்பு வீயார் சார், கொஞ்ச நாளா உங்கள இங்க காணோமே,

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Oct 05, 2014 7:38 am

@மாணிக்கம் நடேசன் wrote:நல்ல விளக்கம் டாக்டர் சார்.  கர்மவீரர் பார்த்து கருத்து சொல்லும் அளவுக்கு இப்படம் கொண்டு சொல்லப்பட்டுள்ளது மிக சுவராசியமான செய்தி.  நன்றி டாக்டர் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1089627      மிக்க நன்றி , திரு. மாணிக்கம் நடேசன் அவர்களே !

'கர்ம வீரர் ' காமராஜ் சில படங்களை மட்டும் பார்த்து ரசித்துள்ளார் !

ஜெயகாந்தன் எழுதி இயக்கி நாகேஷ் கதாநாயகன் ஆக நடித்த :

" யாருக்காக அழுதான் "

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த காமராஜ் தேம்பி தேம்பி

அழுதுகொண்டே இருந்தாராம் !

இந்த படத்தில் நடிக்க சிவாஜி கணேசனும் மற்றும் ஜே.பி.

சந்திரபாபுவும் விரும்பினார்களாம், ஆனால் சில பல காரணங்களால்

அவர்களால்ல் நடிக்க இயலாமல் போக இறுதியில் நாகேஷ்

நடித்தாராம் !எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Sun Oct 05, 2014 7:44 am

யாருக்காக அழுதான் என்ற படத்தை பார்த்ததே இல்லை, ஒரு வேலை எங்கள் நாட்டிற்கு அப்படம் வரவில்லையோ?  நல்ல தகவலுக்கு நன்றி டாக்டர் சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Oct 05, 2014 8:01 am

அநியாயம்  அநியாயம்
@ராஜா wrote:
ஆனால் இன்று நம்மை சுற்றியிருக்கும் சமுதாயத்தில்

இந்த படத்தின் கதையை விட மோசமான நிகழ்ச்சிகளை நாம்

தினம் தினம் செய்தித்தாள்களில் படிக்கிறோம் !

இன்றைய தமிழ்த்திரைப்படக் கதைகளிலும் இந்த கதையை விட

மோசமான நிகழ்ச்சிகளை அமைத்து வெளிவருவதை நாம்

காண்கிறோம் !
உண்மை தான் ஐயா , இன்றைய திரைப்படங்களில் வரும் கதையமைப்பு மிக மோசம் அதைவிட கொடுமை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களின் கதை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1089634

   தங்களின் மடலுக்கு மிக்க நன்றி திரு. ராஜா அவர்களே !

இப்போது தொலைகாட்சிகளில் வரும் காட்சியமைப்புகள் மற்று கதை

அமைப்புக்கள் உண்மையில் தமிழ்ப் படங்களை தோற்கடிக்கும் நிலையில்

உள்ளன என்பது உண்மை !

இப்போது தொலைக்காட்சிகளில் வரும் தொடர்களில் ,மனைவிடம்

திட்டு மற்றும் வசவுகளை வாங்கும் கணவனைப் பார்த்த

சிறுவர்கள் அதே மாதிரி திட்டுகளையும் வசவுகளையும் என்

கிளினிக்கில் என் முன்னாடி அந்த சிறுவர்கள் அவர்களின் அப்பாக்களை

அதே மாதிரி திட்டுவதை  நான் கேட்டு கலங்கியவன் !
இதைவிட இன்னொரு கொடுமையை நான் சொன்னால் நீங்கள்

அதிர்ச்சி அடையலாம் .......சொல்லடுமா !


தொலைகாட்சி தொடர்களில் " டைவர்ஸ்" - அத்தான் - விவாக ரத்து -

இந்த சொல்லைப்  பயன்படுத்தி வரும் தொடர்கள் சர்வ சாதாரணமாகி

விட்டன என்பது உங்களுக்குத் தெரியும் !

அந்த தொடர்களைப் பார்க்கும் சிறுவர்கள் , அந்த ' டைவர்ஸ்'

என்கிற சொல்லை எப்படி எல்லம் பயன்படுத்துகிறார்கள், தெரியுமா ?என் கிளினிக்கில் சில சிறுவர்களுக்கு அவர்களுக்கு  வந்த வியாதியின்

தன்மைப் படி ஊசிகளை நான் போடுவதுண்டு.

அப்படி ஊசி போட்டுக்கொண்ட ஒரு பையன், வலி தாங்காமல்

கோபத்துடன் தன் அம்மாவைப் பார்த்து அழுதுகொண்டே சொன்ன

வசனம் இது :  
" அம்மா ! இந்த டாக்டரை நாம்

'டைவர்ஸ் ' பண்ணிடலாம் அம்மா !

இவர் சும்மா சும்மா ஊசி போடறரார் !

நாம இனிமேல் வேறே டாக்டரை வச்சிக்கலாம் ! "
   இது எப்படி இருக்கு !  
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Oct 05, 2014 8:07 am

vishwajee wrote:தலைவர் காமராசரைப் பற்றி படித்தாலே மனம் மகிழ்கிறது. இன்று உண்மை நிகழ்வை
படமெடுக்கிறேன் என்ற போர்வையில் மிக மோசமான படங்கள் வந்துகொண்டுதான்
இருக்கிறது எந்தவிதமான தடையுமில்லாமல் .
மேற்கோள் செய்த பதிவு: 1089663
     தங்களின் கடிதத்திற்கு மிக்க நன்றி, திரு. விஷ்வா

அவர்களே !

நீங்கள் சொல்வது உண்மை !எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Oct 05, 2014 8:11 am

@Dr.S.Soundarapandian wrote:அரிய செய்திகள் அத்தனையும் !
மேற்கோள் செய்த பதிவு: 1090979


 

 தங்களின் மடலுக்கு மிக்க நன்றி,

திரு. டாக்டர். செளந்திரபாண்டியன் அவர்களே !

தாங்கள்,  நான் எழுதும் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பதை

அறிந்து எனக்கு மிக்க மகிழ்ச்சி !

எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Oct 05, 2014 8:14 am

@veeyaar wrote:டாக்டர் சார்
சாந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற யாரந்த நிலவு பாடலைப் பற்றிய மிக விரிவான கருத்துரைக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களிடமிருந்து வரும் இது போன்ற விரிவான ஆய்வுப் பதிவுகள் தமிழ்த் திரையுலகின் வரலாற்றை எதிர்காலத்திற்கு எடுத்துரைக்கும் மிகச்சிறந்த ஆவணங்களாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1091965
 

   மிக்க நன்றி, திரு. வியார் அவர்களே !

திரு. மாணிக்கம் நடேசன் அவர்கள் எழுதியபடி நீங்கள் அடிக்கடி

இங்கே வரவேண்டும், எழுதவேண்டும், ...

அம்புடுத்தான் !
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Oct 05, 2014 8:24 am

@M.Saranya wrote:மிகவும் சோகமான முடிவு இக்கதையில். எல்லா நிழழ்வுகளும் சுவாரஸ்யமாக உள்ளது ஐயா. அடுத்த படம் பற்றி எப்போது பதிவிடுவீர்கள் ஐயா. காத்திருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1089633   தங்களின் மடலுக்கு மிக்க நன்றி, சகோதரி. சரண்யா அவர்களே !!

தொடர்ந்து படியுங்கள் !


இதோ அடுத்த கட்டுரைக்கு " டிரைலர்! " 

   " கற்பகம் "  ( 1963 )   உருவான கதை !


ஒரு "  TRAILER "  - அத்தான் -

முன்னோட்டம் !
...........................

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.............................................,,,,,,,


அப்போது  எம்ம்ஜிஆர், கே. எஸ் . கோபாலகிருணனை

தன் வீட்டுக்கு அழைத்தார்.

இருவரும் கீழ்கண்டவாறு பேசிக்க்கொண்டார்கள் !

  எம்ஜிஆர் :
   "  கோபாலகிருஷ்ணன் !  நீங்கள்ள் '  சாரதா '

படத்தை நல்ல  முறையில் இயக்கி உள்ளீர்கள் !

நீங்கள் எனக்காக ஒரு படத்தை இயக்கித்  தரவேண்டும் ! "
கரும்பு தின்ன கூலியா !

" சரி, அண்ணே ! "

மகிழ்வுடன் தலையை ஆட்டினார் கே எஸ் ஜி !


மருதகாசியிடம் கொடூத்து பின்பி தான் எழுதிய ::


"  தூண்டாமணி விளக்கு "

கதைய்யை  எம்ஜிஆருக்கு ஏற்ப சற்று மாற்றி :


" கற்பகம் "  


என்று மாற்றி எம்ஜிஆருக்கு படிக்க கொடுத்தார், கே. எஸ் ஜி !


எம்ஜிஆர் அந்த கதையை படித்துப் பார்த்து மகிழ்ந்தார் !

பின்னர் எம்ஜிஆர், கே எஸ் ஜியிடம் கேட்டார்  :
 எம். ஜி. ஆர் :
 " இந்த படக் கதையில் வரும்

'மாமனார் ' வேடத்திற்கு  யாரை நடிக்க வைக்கப் போகிறீர்கள் ? "
   கே. எஸ் .ஜி : " அந்த மாமனார் வேடத்திற்கு :

எஸ்.வி.. ரங்காராவ்
அவர்களை நடிக்க வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன், அண்ணே ! "

 
 

  அதற்கு எம்.ஜி. ஆர் சொன்ன 'ஐடியா' ஐக்

கேட்டு கே.  எஸ்.ஜி மிகவும் அதிர்ச்சி அடைந்தார் !

அப்படி என்ன்ன எம்ஜிஆர் சொல்லிவிட்டார்........ ?
அப்படி என்ன எம்ஜிஆர்  அப்படி  கேட்டுவிட்டார் ?

இதோ, எம்ஜிஆர் சொன்னது :..............................


" ....................................................................." !!!!விரைவில்...........முழுவதும் ! எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sun Oct 05, 2014 2:22 pm

@மாணிக்கம் நடேசன் wrote:யாருக்காக அழுதான் என்ற படத்தை பார்த்ததே இல்லை, ஒரு வேலை எங்கள் நாட்டிற்கு அப்படம் வரவில்லையோ?  நல்ல தகவலுக்கு நன்றி டாக்டர் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1092942

   

அன்புள்ள திரு . மாணிக்கம் நடேசன் அவர்களுக்கு," யாருக்காக அழுதான் " ( 1966 )  

படம் ஜெயகாந்தனின் சொந்தப் படம் !முதலில் ஜி. என் . வேலுமணி இந்த படத்தை சிவாஜி , சாவித்திரி - இவர்களை

வைத்து படம் எடுத்தார் .

ஆனால் இந்த படம் நிறுத்தப் பட்டு பின்னர் ஜெயகாந்தனே தயாரித்தார் .

இந்த படத்தில் நாகேஷுடன் ,

கே.ஆர் . விஜயா , டி. எஸ் . பாலய்யா ஆகியோர் நடித்தனர் !இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் :

     

 " உருவத்திலே இவன் மனிதன் !

கொண்ட உள்ளத்திலே ஒரு பறவை !!

பருவத்திலே இவன் குழந்தை !

நெஞ்சில் பாசத்திலே இவன் தந்தை ! "பாடியவர் : கே. ஜே. யேசுதாஸ்


இசை   : எஸ். வி. ரமணன்,


பாட்டு  : ஜெயகாந்தன் ,பாடல் இதோ :http://picosong.com/9795எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Mon Oct 06, 2014 10:25 am

இந்தப் பாடலை இதற்கு முன் கேட்டதே இல்லை டாக்டர் சார், முதன் முறையாக கேட்கிறேன். தந்து உதவியமைக்கு மிக்க நன்றி ஐயா.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sat Oct 18, 2014 4:47 pm

 

         தொகுதி - 6
 

    கே. எஸ் . கோபால கிருஷ்ணன் இயக்கி,

கே. ஆர் . விஜயா அறிமுகம் ஆன :

" கற்பகம் "  ( 1963 )  திரைப்படம்

உருவான கதை !:  

 

    சில படங்கள், தயாரிக்க தொடங்கும் நிலையிலே பிரச்சனைகள்

ஆரம்பம் ஆகிவிடும் !

அப்புறம் ?

"  Going  Steady "  தான் !சில படங்கள், ஆரம்பிக்கும் போது அமர்க்களமாக ஆரம்பிப்பார்கள்...

ஆனால் ஆரம்பித்த பிறகே பிரச்சனைகள் தொடங்கிவிடும்  !

அப்புறம் படம் வெளிவருவதற்கே " ததிங்கணத்தோம் "

ஆகிவிடும் !

" மேற்கண்ட இரண்டு வகைகளுக்கு ஒவ்வொரு எடுத்துக்காட்டாவது

தரமுடியுமா ? "என்கிறீர்களா !


சொல்கிறேன் !

  h3]    " பவானி " - இந்த பெயரில் 1957 - 58  ஆம்  ஆண்டு    கள்
இடையில் ஒரு படம் தொடங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர், எஸ் எஸ் ஆர் , பானுமதி , அஞ்சலி தேவி ஆகியோர்

நடிக்க ஒப்பந்தம் ஆயினர் !

" ஸ்வஸ்திக் பிலிம்ஸ் " என்கிற படக்கம்பனி அந்த படத்தை

தயாரிக்க முயற்சி செய்தது. கவிஞர் கண்ணதானும் அந்த படத்தில்

ஒரு ' பார்னர்' ஆக இருந்தார்.

படத்தை சுமார் 10 வருடங்களாக தயாரிப்பில் இருந்தது.

படம் வளரவே இல்லை !

ஆண்டுகள் உருண்டன !

அப்புறம் ?

பானுமதி - அஞலி தேவி - இவர்களின் 'மார்க்கட்' போய்விட்டதால்

அவர்களை நீக்கி விட்டு - சரோஜாதேவி சேர்க்கப்பட்டார்.....

கூடவே ஜெயலலிதா !
எஸ்எஸ் ஆர் ஐ நீக்கிவிட்டு எஸ் ஏ  அசோகனைப் போட்ட்டார்கள் !


ஒரு வழியாக படம் முடிக்கப்பட்டு அந்த " பவானி" வெளிவரும்போது

" அரச கட்டளை "என்று மாற்றப்பட்டு 1967 ஆம் ஆண்டில் வெளிவந்தது !


அப்போது படக்கம்பனி " சத்யராஜ் பிக்சர்ஸ்" என்று மாறியது !


இதிலும் ஒரு குளறுபடி !


என்னவாம் ?படத்தின்  இறுதியில் எம்ஜிஆர் சரோஜாதேவியை மணந்து கொள்வதாகவும்,

ஜெயலலிதா துறவறம் பூண்டுகொள்வதாகவும் ---


( படத்தில்தான்யா துறவரம்

பூண்டுகொள்கிறார்-  'அரச கட்டளை ' !  )    படம் முடிவடைகிறது !
ஆனால் அப்போது எம்ஜிஆர் சுடப்பட்டதாலும் ,

சரோஜாதேவி உண்மையிலே

வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாலும் -  படம் வெளிவரும்போது

சரோஜாதேவியை " சாகடித்து ' ( ! )  ( படத்தில்தான் ! )  

எம்ஜிஆர் ஜெயலலிதாவுடன்

டூயட் பாடுவதோடு படத்தை ' ஒரு வழியாக்க ' ( ! )  ......

" முடித்து விட்டார்கள் ' !
( அதே  1967 ஆம் ஆண்டில் வெளிவந்த " பவானி " வேறு - அதில்

விஜயகுமாரி - ஜெய்சங்கர் நடித்தது !  )  
[[/h3]    


    " உலகம் சுற்றும் வாலிபன் " - எம்ஜிஆர் இயக்கிய

இந்த படம் , ஆரம்பித்தார் எம்ஜிஆர் 'சட்' என்று !

ஆனால் ஆரம்பித்து என்ன பலன் !

படாத பாடு பட்டார் - படம் வெளிவர !

" என்னென்ன பாடுபட்டார் ? "

என்றா கேட்கிறீர்கள் !


" உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை "

என்கிற பெயரில் ஒரு புத்தகமே வந்துள்ளது !

அவ்வளவு சமாச்சாரங்கள் - அவஸ்தைகள் - கஷ்டங்கள் -

படம் வெளிவருவதற்கு ! 

 சரி, ' கற்பகம் ' படம் இதில்

எந்த வகையைச் சேர்ந்தது ? "


என்கிறீர்களா ?


முதல் வகையைச் சேர்ந்தது !

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

     " கற்பகம் "  படத்தின் இயக்குனரைப்

பற்றி முதலில் சொல்லிவிட்டு பின்னர் ....... !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 ' இயக்குனர் திலகம் '

K . S  .. கோபால கிருஷ்ணன் :

 தமிழ்த் திரைஉலகில் :


" குட்டைக் கவி "


என்கிற பெயரோடும்    பின்னர் :

" இயக்குனர் திலகம் "

என்கிற பட்டப் பெயரோடும் புகழ் பெற்ற இயக்குனர் :

கே. எஸ். கோபாலகிருஷ்ணன்  !ஆரம்ப காலங்களில் நாடக மேடைகளில் பல நாடகங்களை

எழுதி மிகவும் புகழ் பெற்றார்.

அப்போது அவர் எழுதிய நாடகங்களை திரைப்படமாக எடுக்க

பலர் முன் வந்தனர்ர்.

ஒரு பட கம்பனி ( ' சரவணபவா பிக்சர்ஸ் ' )   , கே. எஸ். கோபாலகிருஷ்ணன்

எழுதிய " தம்பி "   என்கிற நாடகம் ஒன்றை படமாக முன்

வந்தது.

அப்போது இன்னொரு இளைஞர்  " எதிர்ப்பாராதது "  என்கிற பெயரில்

ஒரு கதையை அவர்களிடம் கொடுத்து படிக்க சொன்னார் !

இரு கதைகளையும் படத்த அந்த பட கம்பனி குழப்பத்தின்

உச்சிக்கே சென்றது !


என்னவாம் ?


இரண்டு கதைகளும் நன்றாகவே இருந்தன - எந்த கதையை படமாக்குவது

என்று அவர்களுக்குத் தெரியவில்லை !


(  இப்போது நம்மிடைய

' முகம் கூட காட்டாமல் '


படங்களை

எடுத்துத் தள்ளும் ' ஆஸ்கார் பில்லிம்ஸ் ' வி. ரவிசந்திரன் அப்போது

இருந்திருந்தால் .......

" இரண்டு கதைகளையும் இரண்டு படங்களாக ஒரே சமயத்தில்

எடுக்கலாம் ! "

என்று சொல்லி அந்த இரண்டு பேர்களையும்

' இன்னும் கதைகளை

கொண்டு வாங்கப்பா ! "  

 என்று துரத்தியிருப்பார் !      )


சரி, அப்புறம் என்னாச்சு ?

அத்தானே ! அத்தை ( அதை ! )  சொல்லத்தானே இந்த கட்டுரை !

" சரவண பவா அண்ட் யுனிடி பிக்சர்ஸ் " என்கிற பெயரில் இருந்த

படக்குழுவினர் நன்றாக ஆராய்ந்து பின்னர் வேறு இளைஞர் கொண்டு வந்த

' எதிர்ப்பாராதது' என்கிற கதையை படமாக்க முடிவு செய்து கே. எஸ். கோபால

கிருஷ்ணனை " U - TURN ' எடுத்து போக்ச் சொன்னார்கள் !


" எதிர்ப்பாராதது" கதையை எழுதிய  அந்த இளைஞர்  யார் தெரியுமா ?பிரபல திரைப்பட இயக்குனர் : ஸ்ரீதர் !

தன் கதையை தேர்வு செய்யப்பட்டதால் , தன்னைப் போன்ற ஓர் இளைஞன்

ஒருவன் ஏமாந்து போவதை ஸ்ரீதர் விரும்பவில்லை !


ஏன் ?


ஏன் என்றா  கேட்கிறீர்கள் !

ஏன் என்றால் ஸ்ரீதர் வாழ்ந்த காலம் , அந்த கால தமிழ்த் திரைப்பட உலகம் !


" என் கூட நீங்கள் உதவியாளர் ஆக உங்களுக்கு விருப்பம் இருந்தால்

என்னுடன் இருங்களேன் ! "


கே எஸ் ஜி யிடம் கேட்டார், ஸ்ரீதர்.


கே எஸ் ஜி ஒத்துக் கொண்டார் !


" நீங்கள் நன்றாக பாடல்களை எழுதுவதாக சொன்னீர்களே !

இந்த ' எதிர்ப்பாராதது ' படத்திலும் பாடல்களை எழுதலாமே ! "

கேட்டார், ஸ்ரீதர், எழுதினார் கே எஸ் ஜி !


" காதல் வாழ்வில் நானே

கனியாத காயாகப் போனேன் "


ஜிக்கி-ஏ- எம் ராஜா  பாடிய இந்த பாடலை எழுதியவர் , கே எஸ் ஜி !

பாடல் சூபர் ஹிட் !


அதற்கப்புறம் ஸ்ரீதர் கதை வசனம் எழுதிய படங்களில் சில பாடல்

களை எழுதினார் கே எஸ் ஜி !


" உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே "  - " உத்தம புத்திரன் "


" நாணயம் மனுஷனுக்கு அவசியம் " - " அமர தீபம் "ஸ்ரீதர் கதை வசனம் எழதிய படங்களில் தெலுங்கு நடிகர் - நடிகையர்களுக்கு

வசனம் சொல்லிக் கொடுக்கும் :


" வாத்தியார் "

ஆக கே. எஸ் . ஜி விளங்கினார் !

எஸ் .வி. ரங்கராவ், அஞ்சலிதேவி, சாவித்திரி போன்றவர்கள்

நல்ல தமிழ் பேசி நடித்தது இந்த ' வாத்தியார்' கே. எஸ். ஜிதான் !


பின்னர் ?


" தெய்வப்பிறவி " படத்திற்கு இவர் தனியாக சென்று பணியாற்ற வாய்ப்பு

வந்தது !

ஸ்ரீதர் அவரை வாழ்த்தி அனுப்பினார் !

பின்னர் :

" படிக்காத மேதை "  பட  வசனம் இவரை உயரத்தில் கொண்டு

போய் விட்டது !


" சாரதா" - இவர் முதலில் இயக்கிய படம் குடியரசுத் தலைவர்

விருதை வாங்கிக் கொடுத்தது !


கே எஸ் ஜியைப் பற்றி விலா வாரியாக பின்னர் ஒரு சமயத்தில்

பார்ப்போமா !


அப்புறம் ?


" கற்பகம் "   படக் கதை !   :%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
     ' கற்பகம் ' திரைப்படம்

எப்படி ஆரம்பிக்கப் பட்டது ?
   1962  ஆம்ம் ஆண்டு , கே எஸ் கோபாலகிருஷ்ணன், ஏ. எல் .எஸ்

தயாரிப்பில் உருவான " சாரதா " படத்தை முதன் முதலாக இயக்கி

வெற்றி பெற்றதை சொன்னேன் அல்லவா !

அந்த சமயத்தில் ,  பிரபல பாடலாசிரியர் மருதகாசி, ஒரு சொந்தப் படத்தை

தயாரித்து  அந்த படம் தோல்வியடைந்ததால் , பெரும் நஷ்டத்திற்குள்

உள்ளானார் .

அவர் சொந்தமாக எடுத்த படத்தின் பெயர் :

எஸ் எஸ் ஆர், எம். என். ராஜம், எஸ், வி... சஹஸ்ரநாமம் ஆகியோ

நடித்த :


" அல்லி பெற்ற பிள்ளை "


அந்த படம் தோல்வியடைந்து இன்னலுக்க்கு ஆளான மருதகாசியை

மீண்டு எள அவரை தன்னுடைய கதை ஒன்றை அவருக்கு கொடுத்து

அதனை படமாக்க கொடுத்தார் , கே. எஸ். ஜி !

கே. எஸ்.ஜி கொடுத்த கதையின் பெயர் :" தூண்டாமணி விளக்கு "


கே. எஸ் ஜி யின் கதையை வாங்கிப் படித்த மருத காசி,, அந்த கதையை

திரைப்படமாக ஆக்கினால் வெற்றி பெறும் என்று எண்ணினார்.

மருதகாசி தயாரிக்க இருந்த  அந்த படத்தின் கதை வசனத்தை , கே. எஸ்.ஜி

அவர்களையே எழுத வேண்ட்டினார்.


கே.எஸ். ஜீ அதற்கு  சம்ம்மதித்தார்.


படத்திற்கு பூஜை போடப் பட்டது.


யார் யார் அந்த படத்தில் நடிக்க்க இருந்தனர் ?


சிவாஜி கணேசன்,   சாவித்திரி,

ரங்காராவ், எஸ். ஏ . அசோகன்

ஆகியோர் நடிக்க எல்லோருக்கும் அட்வாண் பணமும் கொடுக்கப்

பட்டது.

ஆனால், படம் வளரவில்லை !

என்னவாம் ?

" பாம்பு படம் எடுப்பதும்

தயாரிப்பாளர் எடுப்பதும் .....

ரெண்டும் ஒன்றும்தான் !"


இரண்டு பேர்களும் எப்போது :

" படம் "

எடுப்ப்பார்கள் என்று சொல்ல முடியாது !

ஒரு வேளை மருதகாசி பொருளாதார ரீதியில் அவதிப்

பட்டுக்கொண்டிருப்பதால் படம் நின்று போயிருக்கலாம் !அப்புறம் என்ன்ன ஆச்சு  ?

 அப்போது  எம்ம்ஜிஆர், கே. எஸ் . கோபாலகிருணனை

தன் வீட்டுக்கு அழைத்தார்.

இருவரும் கீழ்கண்டவாறு பேசிக்க்கொண்டார்கள் !
  எம்ஜிஆர் :   "  கோபாலகிருஷ்ணன் !  நீங்கள்ள் '  சாரதா '

படத்தை நல்ல  முறையில் இயக்கி உள்ளீர்கள் !

நீங்கள் எனக்காக ஒரு படத்தை இயக்கித்  தரவேண்டும் ! "
கரும்பு தின்ன கூலியா !

" சரி, அண்ணே ! "

மகிழ்வுடன் தலையை ஆட்டினார் கே எஸ் ஜி !


மருதகாசியிடம் கொடூத்து பின்பி நின்றூ போன ::


"  தூண்டாமணி விளக்கு "

கதைய்யை  எம்ஜிஆருக்கு ஏற்ப சற்று மாற்றி :


" கற்பகம் "  


என்று மாற்றி எம்ஜிஆருக்கு படிக்க கொடுத்தார், கே. எஸ் ஜி !


எம்ஜிஆர் அந்த கதையை படித்துப் பார்த்து மகிழ்ந்தார் !

பின்னர் எம்ஜிஆர், கே எஸ் ஜியிடம் கேட்டார்  :
 எம். ஜி. ஆர் :
 " இந்த படக் கதையில் வரும்

'மாமனார் ' வேடத்திற்கு  யாரை நடிக்க வைக்கப் போகிறீர்கள் ? "
   கே. எஸ் .ஜி : " அந்த மாமனார் வேடத்திற்கு :

எஸ்.வி.. ரங்காராவ்


அவர்களை நடிக்க வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன், அண்ணே ! "

 
  அதற்கு எம்.ஜி. ஆர் சொன்ன 'ஐடியா' ஐக்

கேட்டு கே.  எஸ்.ஜி மிகவும் அதிர்ச்சி அடைந்தார் !

அப்படி என்ன்ன எம்ஜிஆர் சொல்லிவிட்டார்........ ?

அப்படி என்ன எம்ஜிஆர்  அப்படி  கேட்டுவிட்டார் ?

இதோ, எம்ஜிஆர் சொன்னது :


     " கே. எஸ். ஜி !  அந்த மாமனார் வேடத்திற்கு

ரங்காராவுக்குப் பதில் நாகய்யா ஐப்  போட்டால் நன்றாக இருக்குமே !

முயற்சி செய்து பாருங்களேன் !  "கே. எஸ். ஜி கொஞ்சம் கூட அசரவில்லை,

எம்ஜிஆரிடம் ஆணித்தரமாக சொல்லிவிட்டார் : " இல்லை அண்ணே ! படத்தின் உயிர் நாடியே அந்த

மாமனார் வேடம்தான் !  அதற்கு மிக்க பொருத்தமானவர் ரங்காராவ்

அவர்கள்தான் ! நாகய்யா வும் சிறந்த நடிகர்தான் , அதில் சந்தேகம்

இல்லை, ஆனால் இந்த படத்திற்கு ரங்காராவ் தான் பொருத்தமானவர் ! "
 எம்ஜிஆர் விட்டுக் கொடுக்கவில்லை !
எம்ஜிஆர் : " நாகய்யாவைப் போட்டால் நான் நடிக்கிறேன் !

இல்லையென்றால் இந்த படத்தில் நடிக்க எனக்கு இஷ்டமே இல்லை ! "
கே . எஸ். ஜி :" மன்னிக்கணும் அண்ணே !  நான் வேறு நடிகரை வைத்து

இந்த படத்தை எடூத்துக்கொள்கிறேன் !  வேறு ஒரு படத்தில் நாம்

இணைந்து பணியாற்றுவோம் ! "


      (  1971 ஆம் ஆண்டு வாக்கில் வெளியான

எம்ஜிஆர் நடித்த " சங்கே முழங்கு "  படத்திற்கு கதை வசனம் :

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் ! )  
தொடரும்....


எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sat Oct 18, 2014 5:13 pm

" கற்பகம் " உருவான

கதை - தொடர்ச்சி  ...... !

[/center]
 அப்போ , எம்ஜிஆருக்குப் பதில்

யார் நடித்தது ?

வேறு யார் ?

நம்ம ஜெமினி கணேசன் தான் !


 'கற்பகம்  '  கதாநாயகி :

' புது முகம் ' ( ! )   K . R . விஜயா  

                               

  " மகளே  உன் சமத்து "  -  இந்த பெயரில் ஒரு படம்

1964 ஆம் ஆண்டில் நீண்ட கால தயாரிப்பில் வெகு தாமதமாகவே

வெளியானது ! '  விஜயபுரி வீரன் ' ஆனந்தன் - ராஜ்யஸ்ரீ - எம்.ஆர் ராதா

ஆகியோர் நடித்த

படம்!

அந்த படத்தில்  ஒரு சிறிய வேடத்தில் நடிக்க வந்திருந்த பெண்ண்ணைஇ

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் - அந்த படத்தில் நடிக்க வந்திருந்த

எம். ஆர்..  ராதா !!    
" உன் பெயர் என்னம்மா ? "

எம். ஆர்.  ராதா அந்த பெண்ணைப் பார்த்து கேட்டார்.


" தெய்வநாயகி "சொன்னாள், அந்த பெண் !


" அய்யய்யே ! சுத்த பழங்கால பெயர் ஆக உள்ளதே !

வேறு புதுசா பெயர் வெச்சுக்கோ !

அப்போத்தான் பிழைக்க முடியும் ! "


சொன்னார் எம். ஆர். ராதா !" நீங்களே  ஒரு நல்ல பெயரை என் பொண்ணுக்கு

வைத்து விடுங்கள் , அண்ண்ணே ! "


சொன்னவர் அந்த பெண்ணின் தந்தை !

" ஏதோ விஜயா - கிஜயா ( ! )  என்னு வச்சிக்கோ ! "

சொன்னார் நடிகவேள் !

இப்படித்தான் ,

" தெய்வநாயகி ' -   கே. ஆர். விஜயா'

ஆன கதை !  பெயரை சூட்டியவர்

எம்.ஆர். ராதா ! அதன் பின் ?

' தெய்வநாயகி ' ( எ )   கே. ஆர். விஜயா பின்பு :

" விளக்கேற்றியவள் " (1965 )  என்கிற படத்தில் ஒரு சிறிய

வேடத்தில் நடித்தார்......ஆனாலும் ஒன்றும் சுகமில்லை !
   

இந்த பக்கத்தில் இயக்குனர் கே. எஸ். கோபால

கிருஷ்ணன், 'கற்பகம் ' படத்தில் நடிப்பதற்கு ஜெமினி கணேசனை ஒப்பந்தம்

போட்டுவிட்டு,  ' கற்பகம்"  என்கிற கதாபாத்திரத்திற்கு ஒரு புதுமுகத்தை

போடலாம் என்கிற பரிதவிப்போடு ( ! )   ஒரு பெண்ணை தேடிக்

கொண்டிருந்தார் !
" கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கப் போகும் :

" கற்பகம் "

என்கிற படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஒரு

புதுமுகம்

தேவை ! "இப்படி ஒரு விளம்பரம் பத்திரிக்கைகளில் ........

பத்திரிக்கைகள் என்ன பத்திரிக்கை........

" தினத் தந்தி " யில் வெளியானது !.......

என்றுதான் சொல்லவேண்டும் !

அவ்வளவுதான் !

நூற்றுக்கணக்கான பெண்கள் !

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் ஆபிசை முற்றுகை இட்டனர் !
ஆனால் அந்தோ பரிதாபம் !

ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை !

கே. எஸ் . கோபாலகிருஷ்ணன் வாழ்க்கையை வெறுத்து

விட்டார் !

" ஏன் சார் !  அவரை மும்பை பக்கம் போயிருந்தால் நிறைய

" தமில்( ! )  பேசும் "

நடிகைகள் அவருக்கு கிடைத்திருப்பார்களே ! "

என்கிறீர்களா !
அது மெய்தான் !ஆனால் கே.எஸ்ஜிக்கு  " தமிழ் " பேசும் நடிகை அல்லவா கேட்டார்,

மாறாக " தமில்"    பேசும் நடிகைகள் அல்லவே !
இந்த சமயத்தில்...............!


அச்சுதன் !

இவர் யார் தெரியுமா ?" சத்தியமாக நமக்கு தெரியாது ! "

என்கிறீர்களா !  உண்மைதான் !இந்த கட்டுரையை நான் 'எழுதுவதற்கு' முன்னர் எனக்கே கூட

அவர் யார் என்று தெரியாது !

அச்சுதன், ஒரு துணை நடிகர் ஏஜண்ட் !

அந்த அச்சுதன் தான் பல பெண்களை அழைத்து வந்தார் !

ஒரு கட்டத்தில் கே . எஸ். ஜி, அச்சுதனைப் பார்த்து இப்படி

சொல்லிவிட்டார் :
." இதோ பார் அச்சுதா !

இனிமேல் எந்த பெண்ணையும் அழைத்து வராதே !

'கற்பகம்' காரக்டருக்கு யாரும் தகுதி இல்லே ! "


அச்சுதன் அஞ்சவில்லை !

" அண்ணே !  இப்போது இந்த  பெண்ணைப் பார்த்து விடுங்கள்,

அப்புறம் சொல்லுங்கள் !

என்றார் !


கே. எஸ். கோபாலகிருஷ்ணன் வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்

தலையைத் திருப்பி அந்த பெண்ணைப் பார்த்தார் !


அடுத்த நொடி !

கே. எஸ்.ஜி முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது !

முகத்தில் புத்துணர்ச்சி  !

கத்த ஆரம்பித்துவிட்டாஅர் !


" டேய் ! இவளைத்தான் டா தேடிக்கொண்டிருக்கேன் !

இவதான் டா  'கற்பகம் ' !


உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தார் !' தெய்வநாயகி' ( எ )  கே. ஆர். விஜயா ' கற்பகம் ' ஆனார் !

அப்போது 'கற்பகம்' த்து......ஹி...ஹி...ஐ மீன் ....கே. ஆர். விஜயாவுக்கு

வயது 17 !

 (  'கற்பகம் ' படத்தில் ஒப்பந்தம் ஆன நடிகர் ஜெமினி

கணேசன் , ஒரு தருணத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில்

தெய்வநாயகியைப் பார்த்து விட்டு பின்னர் அவர்தான் அந்த தெய்வ

நாயகியை கே . எஸ். ஜியிடம் அறிமுகம் செய்து வைத்ததாக

ஒரு தகவல் சில புத்தகங்களில் காணப்படுகிறது ! ! )
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&' கற்பகம்' உருவான கதை :

சில சுவையான செய்திகள் !


கே. ஆர். விஜயா ." இவள் ஒரு களிமண் !

அதை அழகான்ன அற்புதமான பொம்மையாக

வடித்திருக்கிறேன் !

படத்தைப் பாருன்ங்கள் , இவள் கே. ஆர். விஜயா அல்ல !

'கற்பகம் ! "
சொல்கிறார் : கே. எஸ் .ஜி !


என்னதான் சிறிய , சிறிய வேடங்கள் என பல படங்களில்

கே. ஆர். விஜயா நடித்திருந்தாலும், , கே. எஸ். கோபால

கிருஷ்ணனின் 'கற்பகம் ' தான் அவரை சிறந்த நடிகை என்று

நம்மை அடையாளம் காட்டியது !
(  ஒரு விஷயம் !

அந்த கால கலைஞர்கள் பலர், தாங்கள் அறிமுகம் ஆன படம் என்பதை

மறைத்து விட்டு, மாறாக தாங்கள் மக்களால் பிரபலப் படுத்திய படத்தையே

முதல் படம் என்று சொல்லித் திருந்தனர் !

கே. ஆர். விஜயாவும் அவர்களில் ஒருவர் !


மற்ற எடுத்துக்காட்டுக்கள் சில பேர்களை சொல்லட்டுமா ?

சொல்றேனே !


கே.ஜே. யேசுதாஸ், மலேசியா வாசுதேவன்,

நாகேஷ், வாணி ஜெயராம்,

சரோஜாதேவி, ......என பல பேர்கள் ! )
கே. ஆர். விஜயா :  

களையான முகம்!  கடைந்து எடுத்த சிற்பம் போன்ற தேகம் !

புன்னகையுடன் கூடிய முகம் !

இந்த கே. ஆர். விஜயாவுக்கு " டைட்டில் " ரோல் தந்து

முன்னிலைப் படுத்தி  அந்த புதுமுகத்திடம் நடிப்புத்

திறமைய வெளிக் கொணர்ந்த திறமை கே . எஸ் . ஜி அவர்களையே

சாரும் ! $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
   

" பேபி" ஷகிலா !

இந்த குழந்தை நட்சத்திரமும் ' கற்பகம் "

பட அறிமுகம்தான் !

இந்த குழந்தையும் தமிழ் ரசிகர்களை மகிழ்வித்தார் !

" புது முகம் "  கே. ஆர். விஜயாவை " அத்தை " , " அத்தை "  என

அடிக்கடி அழைத்து படம் முழுக்க வலம் வந்தாள் !

படத்தில் முத்துராமன் - ஷீலா தம்பதியின் மகளாக வரும்

ஷகிலா, பழகுவதோ ஜெமினி கணேசன் - கே. ஆர். விஜயா தம்பதியிடம்

தான் !

எனவே கதைப்படி 'அத்தை' கற்பகம் கூடவே 'ஒட்டி' பழகுவதற்கு,

வசதியாக குழந்தை ஷகிலாவை விஜயாவுடன் நன்றாக பழக

விட்டார்கள் !

விளைவு ?

குழந்தை ஷகிலா , கே. ஆர். விஜயாவுடன் நன்றாக பழகிவிட்டாள் !

எப்போதும் கே. ஆர். விஜயாவுடன் அவள் காணப்படுவாள் !

விளவு ?

படப்படிப்பு சுமார் 6 மாதங்களில் ஷகிலா, விஜயாவுடன் பழகின பிறகு,

ஷகிலாவை அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் !

விளவு ?

குழந்தை ஷகிலா அழுது அழுது முகம் எல்லாம் வீங்கியபடி

கே. எஸ்.ஜி யின் ஆபிசுக்கு அவளின் அம்மா அழைத்து வர , அவள்

அழுது அழுது முகம் வீங்கிக் காணப் படுவதைக் கண்டு அனைவரும்

திடுக்கிட்டனர் !


" என்னம்மா, ஆச்சு, ஷகிலாவுக்கு ? "

கே. எஸ். ஜி கேட்டார் !


" என்னவா !  இந்த பொண்னு அவங்க அம்மாவை நினைச்சு

நினைச்சு அழுது , சார் ! "


ஷகிலாவின் தாயார் சொன்னது !

விளைவு ?

அனைவரும் திடுக்கிட்டுனர் !


" என்னம்மா சொல்றீங்க ! ஷகிலாவின் அம்மா நீங்க தானம்மா! "

அபைவரும் இப்படி கேட்டனர் !


அதற்கு அந்த அம்மா சொன்னது :


" இல்லீங்க!   இந்த ஷகிலா, உங்க படத்திலே நடித்த புதுமுகம்

கே. ஆர். விஜாயா தான் தன் அம்மா என நினைத்து அழுகிறாள்,

அய்யா ! "


விளைவு ?


விளைவா......அனைவரும் வாழ்க்கையே வெறுத்து விட்டனர் !ஷகிலா, பின்னர் :

" எங்க வீட்டுப் பிள்ளை "

" எங்க பாப்பா "

போன்ற படங்களில் நடித்தாள் !

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
எஸ். வி. ரங்காராவ் :

படத்தின் உயிர் நாடியே இவர்தான் !

அசல் கிராமத்து பண்ணையார் போன்ற தோற்றம் !

பல பேர்களுக்கு உதவி செய்யும் கருணை கொண்ட உள்ளம் !

தன் பண்ணை நிலங்களை பராமரிக்கும் நல்ல மனிதன்

ஜெமினியை தன் மருமகானாகவே ஏற்றுக்கொள்கிறார் !

தன் மகள் மாடு முட்டி இறந்ததை விட, தன் மருமகன்

அவளை நினைத்து நடைபிணமாக வாழுவத்ஹைப் பார்த்து

மனம் துடிக்கும் பெரியவர் அவர் !

பின்பு, தன் தம்பி மகள் சாவித்திரியை அவனுக்கே மணம்

முடிக்க துடிக்கும் முதியவர் - ரங்காராவ் !

இவர் நடிக்கவில்லை !

அந்த கிராமத்துப் பெரியவர் ஆகவே ஆகிவிட்டார் !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ஜெமினி கணேசன் :
அமைதியான நடிப்பு ! மிகை இல்லாத நடிப்பு !

மனைவியை சொற்ப காலத்தில் இழந்தவன் எப்படி இருப்பானோ

அவனப் போன்ற முகம் +  நடிப்பு !

மாமனாரிடம் காட்டும் மரியாதை !

மிக அற்புதமாக நடித்தார் , ஜெமினி கணேசன் !

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
நடிகையர் திலகம் சாவித்திரி.
படத்தில் இவருக்கு ஏறக்குறைய இரண்டாவது கதாநாயகி

வேடம் ! எனினும் அதைப் பற்றி சற்றும் கவலைப் படாமல் தான் ஏற்றுக்

கொண்ட பாத்திரத்திற்கு பெருமை சேர்த்தார் !

குழந்தை ஷகிலா தன் மீதூ பாசம் காட்டவில்லை என்கிற சோகத்துடன்,

தாலி கட்டிய கணவன் இறந்து போன முதல் மனைவயின் நினைவாகவே

வாழ்ந்து வருவதைக் கண்டு மனம் புழுங்கும் அருமையான வேடம்,

இவருக்கு !   அந்த பாத்திரத்தின் மனநிலையை மிக  அற்புதமாக

சாவித்திரி வெளிக் காட்டினார் !

அவர், அப்படி மனம் உருகி நடித்த காரணத்தினால், படத்தை

காணும் நமக்கு :

' இந்த ஜெமினிகணேசனும் ஷகிலாவும் சாவித்திரியிடம்

அன்பு காட்டுவார்களா ! '

என்கிற ஏக்கம் பிறக்க வைக்கின்றது என்பது என்னவோ உண்மை !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@எம் . ஆர் . ராதா.
படக்கதையின் வில்லன், ஆனால் படத்தை நகர்த்துபவர்

இவரே !   கே. ஆர். விஜயா மாடு முட்டி மடிவதற்கு இவர்தான் காரணம்.

எம். ஆர். ராதாவின் தனித்துவமான வசன 'மாடுலேஷன்' இந்த படத்தில்

மிக 'அழகாக' ( ! )  மிளிருவதை இந்த படத்தில் காணலாம் !

அந்த கால திரைப்படங்களில் எஸ். வி. ரங்காராவும், எம். ஆர்.

ராதாவும் இணைந்து நடித்தாலே அந்த படம் வெற்றி பெறுவது

உறுதி செய்த ஒன்று !

எடுத்துக்காட்டுக்கள் : ' குமுதம் ' , ' பச்சை விளக்கு' போன்ற

படங்கள் !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%ஒளிப்பதிவு மேதை : கர்ணன் !

[/h2]


' கற்பகம்' படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு

காரணம் ! தெளிவான ஒளிப்பதிவுக்கு, அதிலு, கருப்பு - வெள்ளை

திரைப் படத்திற்கு மெருகு ஊட்டுவதில் கர்ணன் வல்லவர் !

பின்னர் இவர் தனக்கென்று ஒரு பாணியில் 'செக்ஸ்' படங்களை

எடுத்துத் தள்ளியதால் ஒளிப்பதிவாளர் கர்ணனின் திறமை

குடத்தில் இட்ட விளக்காகி விட்டது !1. 'கற்பகம் ' படத்தில் வெளிப்புற காட்சிகளை அதிலும் கிராமத்து

வயல் வெளி - களத்து மேடு '  - போன்றவைகளை மிக

அற்புதமாக கர்ணன் படம் பிடித்தார் !2. ' புது முகம் ' கே . ஆர் . விஜயா வை அழகான தோற்றத்தில்

அனைத்துத் தரப்பு ரசிகர்களை கவரும் வகையில் படம்

பிடித்து காட்டினார் , கர்ணன் !3. " மன்னவனே அழலாமா "   பாடல் காட்சியில் , களத்து மேட்டில்

சோகமாக காணப்படும் போது, இறந்து போன தன மனைவி

( கே. ஆர் . விஜயா )  ஆவி வடிவில் வந்து அவரை தேற்றும் பாடல்

காட்சியில் உண்மையிலீயெ அனைவரையும் பயமுறுத்தும்

அளவில் அற்புதமாக படம் பிடித்தார் , கர்ணன் !

இந்த காட்சியைப் பார்த்து அவரது குருநாதர் , பிரபல

ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் :


" டேய் கர்ணா ! உனையிலே பேயைப் பார்த்தமாதிரி மிக

அற்புதமாக படம் எடுத்திருக்கிறாய் ! "


என்று பாராட்டினாராம் !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


'கற்பகம் ' படத்தின் பாடல்கள் !

' கற்பகம் ' படத்தைப் பற்றி இன்றளவும் பேசப்படும்

முக்கிய காரணங்களில் இன்றியமையாதது ஒன்று :   அது :

'கற்பக்கம்' படத்தில் இடம் பெற்ற பாடல்கள் !

தமிழ்த் திரைப்படங்களில்

ஒரே பாடகி படத்தில் இடம் பெற்ற அனைத்துப்

பாடல்களையும் பாடின முதல் படம் :

' கற்பாகம் "

பாடகி : பி . சுசீலா !( வெறும் பாடகர்கள் மட்டும் பாடிய முதல் படம் ?

" ஒரு தலை ராகம் " ( 1980 ) .
மெல்லிசை மன்னர்கள் - வாலி -

பி. சுசீலா - இவர்களால் உருவான பாடல்கள்.......

விரிவாகவே ,,,,,,,,,, பின்னோட்டத்தில் !

[/b]


விரைவில் ...

'கற்பகம்'  படப் பாடல்கள்....

பின்னோட்டத்தில் !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&" கற்பகம் " - வெற்றி !" கற்பகம் " படம் , 15-11- 1963 ஆம் ஆண்டில் வெளியாகி

பெறும் வெற்றி பெற்றது .

பல இடங்களில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது !

இயக்குனர் கே. எஸ். ஜிக்கு பெரிய செல்வத்தையும்,

புகழையும் வாரி இறைத்தது !


அந்த பணத்தை வைத்து இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்

சென்னை வடபழனியில் :


" கற்பகம் ஸ்டுடியோ"

என்கிற படப்பிடிப்பு  அரங்கை நிர்மானித்தார் !அது மட்டுமா !


மத்திய அரசால் 1963 ஆம் சிறந்த படத்திற்கான வெள்ளிப்

பதக்கத்தையும் வாங்கியது, 'கற்பகம் " !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அடுத்த கட்டுரை :

மணிரத்தினம் - 
கமல்-
இளையராஜாவின் :

" நாயகன் " (  1987 )
உருவான  கதை !


விரைவில் !


எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Sun Oct 19, 2014 7:07 am

எம்.ஆர்.ராதாவின் அசத்தலான படம் ஒன்றை போட்டு எங்களை அசத்தி விட்டீர்கள், எங்கிருந்து இவற்றை எடுத்து வருகிறீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. தகவல்களுக்கும் தரமான கிடைப்பதற்கிறிய படங்களுக்கும் மிக்க நன்றி டாக்டர் சார்.

தொடரட்டும் உங்களது இந்த அற்புத பணி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by M.M.SENTHIL on Sun Oct 19, 2014 1:10 pm

தொடர் பதிவிற்கு நன்றி நன்றி


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by veeyaar on Tue Oct 21, 2014 10:14 pm

டாக்டர் சார்

1. கற்பகம் படத்திற்காக வாலி எழுதி ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடி ஒரு பாடல் பதிவு செய்யப் பட்டதா..
2. சித்தி படத்தில் இடம் பெற்ற சந்திப்போமா பாடல் கற்பகம் படத்திற்காக பதிவு செய்யப்பட்டதா..

சந்தேகத்தை தெளிவு செய்யுங்களேன்...
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by veeyaar on Tue Oct 21, 2014 10:15 pm

என் கேள்விகள் ஒரு புறம்..

உங்கள் கட்டுரை...
என்னவென்று சொல்வது.. இவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதும் கலை சிலருக்கு மட்டுமே வாய்க்கும்...
தங்களுடைய எழுத்துக்க அந்த வலிமை உள்ளது.
பாராட்டுக்கள்..
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by மாணிக்கம் நடேசன் on Wed Oct 22, 2014 2:11 pm

வீயார் சார், நீங்கள் குறிப்பிடுவது போல் டாக்டர் ஐயா அவர்கள் நிறைய சினிமா சம்பந்தமாக பல அறிய தகவல்களை வைத்திருப்பார் போல் இருக்கிறது. நமக்காக இங்கு அவர் தந்து வருவது நாம் செய்த பலன். அவருக்கு என்றுமே நாம் கடமைப்பட்டிருக்கிறோம். வளர்க அவரது தொண்டு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sat Nov 01, 2014 7:31 am

@மாணிக்கம் நடேசன் wrote:எம்.ஆர்.ராதாவின் அசத்தலான படம் ஒன்றை போட்டு எங்களை அசத்தி விட்டீர்கள், எங்கிருந்து இவற்றை எடுத்து வருகிறீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. தகவல்களுக்கும் தரமான கிடைப்பதற்கிறிய படங்களுக்கும் மிக்க நன்றி டாக்டர் சார்.

தொடரட்டும் உங்களது இந்த அற்புத பணி.
மேற்கோள் செய்த பதிவு: 1097683

அன்புள்ள திரு. மாணிக்க்கம் நடேசன்ன் அவர்களுக்கு,

தங்களின் இரு கடிதங்களுக்கும் நன்றி  !

எனக்கு நேரம் இருக்கும் போதேல்லாம் நிச்ச்சயம்  எழுதுகிறேன்,

மருத்துவப் பணியில் இருக்கும் எனக்கு நேரம் கிடைப்பது

என்பது அரிது.

எனினும் , நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேஎன்.


நன்றி ஐயா,எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sat Nov 01, 2014 7:33 am

@M.M.SENTHIL wrote:தொடர் பதிவிற்கு நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1097721 நன்றி , திரு. எம். எம். செந்தில் அவர்களே !

எம்கேஆர்சாந்தாராம்

avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sat Nov 01, 2014 8:03 am

@veeyaar wrote:டாக்டர் சார்

1. கற்பகம் படத்திற்காக வாலி எழுதி ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடி ஒரு பாடல் பதிவு செய்யப் பட்டதா..
2. சித்தி படத்தில் இடம் பெற்ற சந்திப்போமா பாடல் கற்பகம் படத்திற்காக பதிவு செய்யப்பட்டதா..

சந்தேகத்தை தெளிவு செய்யுங்களேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1098487


நன்றி , திரு. வியார் சார் !

உங்க்களீன் இரு கடிதங்களுக்கும் நன்றிகள் பல !

முதல் கேள்விக்கு எனது பதில் :


எனக்குத் தெரிந்தவரையில் ' கற்பகம் '  படத்தில் ஏ. எல். ராகவன் - எல் .ஆர்.

ஈஸ்வரி - இவர்களின் பாடலை பதிவு செய்து பின்னர் இசைத்தட்டாக

வந்ததாக நினைவு இல்லை.

அப்படி ஒரு பாடல் வெளி வந்திருக்கும்  என்று

என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் படத்தில் அந்த

பாடலை ஷீலாவும் முத்துராமனும் தான் பாடுவதாகத்தான்

படமாக்கி இருக்க வேண்டும் - ஆனால் அவர்களின் டூயட் படத்திற்க்கு

அவசியம் இல்லை என்பதே என் கருத்து !


நம் சகோதரர் திரு. நீலமேகம் கூட இதைத்தான் குறிக்கின்றார் !


இரண்டாவது கேள்விக்குப் பதில் :


" கற்பகம்" படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியவர்

வாலி !

வாலியை வைத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியது

குறித்து கவிஞர் கண்ணதாசன் அதிருப்தி அடைந்தார் என்பது

ஒரு ' கிசு - கிசு '   செய்தி !

எனவே அவரை சமாதானப் படுத்தும் நோக்கில் ,

கே. எஸ்.. ஜி , கவிஞர் கண்ணதாசனை " சித்தி " படத்தில்

பாடல்களை எழுதச் சொன்னதாகவும் ஒரு 'கிசு- கிசு '

செய்தி !


( " கிசு- கிசு "   என்பதை " குசு- குசு"  என்று படித்துவிட வேண்டாம் ! )


" கற்பகம் "  படத்திற்கு இசை :

மெல்லிசை மன்னர்கள் .


"சித்தி " படத்திற்கு இசை :

மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் தனித்து !" கற்பகம் " வெளிவந்தது : 1963 ஆம் ஆண்டு !


" சித்தி" வெளிவந்தது 1966  ஆம் ஆண்டு !இன்னொன்று :

மெல்லிசை மன்னர்களின் அற்புதமான கலவை கொண்ட ' கற்பகம்'

பாடல்களுக்கும் ,

தனித்துவம் கொண்ட அற்புத இசையமைப்பு கொண்ட

மெல்லிசை மன்னர் எம். எஸ். வி. அவார்களின்

பாடல்களுக்கும் உள்ள வித்தியாசங்களை நீங்கள்

அறியாததா, என்ன !


எனவே கண்ணதாசன் எழுதி, 'கற்பகம்' படத்தில்

' சந்தீப்போமா' பாடல் இடம் பெற

வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.


தொடர்ந்து எழுதுங்கள், வியார் சார் ! " கற்பகம்" பாடல்காள் !

இன்று மாலைக்குள் !
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by M.Saranya on Sat Nov 01, 2014 4:44 pm

அருமையான படம்.... கற்பகம்....
நன்றி ஐயா...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sat Nov 01, 2014 4:59 pm

@M.Saranya wrote:அருமையான படம்.... கற்பகம்....
நன்றி ஐயா...
மேற்கோள் செய்த பதிவு: 1100966


மிக்க  நன்றி சரண்யா சகோதரி அவர்களே,

இதோ, " கற்பகம் " பாடல்கள் !
எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by mkrsantharam on Sat Nov 01, 2014 5:09 pm

[ b] h2]
" கற்பகம் " பாடல்கள் !
[/b] [ [/h2]
 ' கற்பகம் '  படத்தை கே. எஸ். ஜி இயக்கத்தில்

கே.எஸ். ஜிக்கு  சொந்தமான :

" அமர்ஜோதி "

என்கிற பட நிறுவனம் எடுக்க முடிவான போதே அந்த படத்திற்கு

இசையமைப்பு :

" மெல்லிசை மன்னர்கள் "

என்று முடிவு செய்யப்பட்டது !

இந்த படத்தை தயாரிப்பதற்கு சற்றே கால இடைவெளியில்

' முக்தா பிலிம்ஸ் '  படக் கம்பையில் இருந்து :


" இதயத்தில் நீ "  ( 1963 )


திரைப்படத்திற்கு இசையத்த மெல்லிசை மன்னர்

எம். எஸ். விஸ்வநாதன் கவிஞர் வாலியின் திறமைய கண்டு

மெச்சி,  :


" இத்தனை காலம் நீங்கள் எங்கிருந்தீர்கள்  "


என்று மெல்லிசை மன்னர், வாலியைப் பார்த்து கேட்கும்

அளவில் , வாலியின் பாடல் எழுதும் திறன் மிகவும் உயர்ந்து

காணப்பட்டது !


எனவே மெல்லிசை மன்னர், தன் கண்களில் தென்பட்ட

படத்தயாரிப்பாளர்களை சந்தித்து வாலியை சிபார்சு செய்யத்

தொடங்கினார் !(  மெல்லிசை மன்னருக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் மிகப்

பெரிய " புரிதல் '  அத்தான் - ' Chemistry '  இருந்தது என்பது

என்னவோ உண்மை !  அதனால் திறமை உள்ளவர்களை

ஊக்குவிக்க அவர் என்றும் விரும்பினார் என்பதும் உண்மை ! )


   " அத்தை மடி மெத்தையடி !

ஆடி விளையாடம்மா ! "

  " உங்களைப் பற்றி எம். எஸ். வி அவர்கள் என்னிட்டம்

நிறைய சொன்னார் ! மகிழ்ச்சி ! முதலில் ஒரே ஒரு பாட்டு

உங்களுக்குத் தருகிறேன், மற்றவை பிறகு பார்ப்போம் ! "
சொன்னார் : கே. எஸ். கோபாலகிருஷ்ணன், வாலியிடம் ." எங்கே, எம். எஸ். வி க்கு நீங்கள் எழுதின பாட்டு ஒன்று

சொல்லுங்கள், கேட்போம் ! "


கேட்டார் இயக்குனர் திலகம்.
 " உறவு என்றொரு சொல் இருந்தால்

பிரிவு என்றொரு பொருள் இருக்கும்.

காதல் என்றொரு கதை இருந்தால்

கனவு என்றொரு முடிவு இருக்கும் ! "" இதயத்தில் நீ " ( 1963 )  - வாலி


மேற்கண்ட பாடலை பாடிக்காட்டினார் வாலி!" ஓ.கே ! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் !

நாளைக்கு ஆபிசுக்கு வாங்க!

வண்டி அனுப்புகிறேன் ! "


கே. எஸ். இப்படி கூறிவிட்டு சென்றார் !
மறுநாள் காலை.........
வாலியின் இருப்பிடத்திற்கு கார் வந்தது.

கே. எஸ். ஜி யின் ஆபிஸ் :


" வாலி !  ஒரு தாலாட்டுப் பாடல் வேண்டும் !

அந்த குழந்தையின் அத்தை முறை கொண்ட ஒரு

பெண் ஒருத்தி பாடும் தாலாட்டு பாடல் !

அந்த பெண் எப்படி அந்த குழந்தைக்கு தாலாட்டுப் பாடலை

பாடுவாள் என்று சொல்லுங்கள், பார்ப்போம் ! "
இதில் வேடிக்கை என்னவென்றால்......

இயக்குனர் திலகம் கே. எஸ். ஜிக்கே திரைப்படங்களுக்கு

பாடல்களை எழுத நன்றாகத் தெரியும்.........இது பற்றி அடியேன் முன்னரே

உங்களுக்கு சொல்லிவிட்டேன் !

இப்போது விஷயம் தெரிந்தவர் முன்பு வாலி நன்றாக பாடி

பேர் எடுக்கவேண்டிய நிலைமை !
வாலி கொஞ்சம் கூட தயங்க வில்லை !

' பாட' ஆரம்பித்துவிட்டார் :
 
   " அத்தை மடி மெத்தையடி !

ஆடி விளையாடம்மா !

ஆடும் வரை ஆடிவிட்டு

அல்லிவிழி மூடம்மா ! "
கே. எஸ். ஜி துள்ளிக் குதித்தார் !

வாலியின் முதுகில் ஓங்கி ஒரு குத்து விட்டார் !


" சபாஷ் !  சரியான பாட்டு !

நான்  எண்ணியதற்கும் மேலாக நீங்கள் எழுதி விட்டீர்கள் ! "


வாலியின் பாடல் ஓ.கே ஆனது !இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும் :

இயக்குனர் என்கிற வகையில் , கே. எஸ். ஜி அவர்கள்,

பாடலாசிரியர்களிடம் பாடலை எழுதி வாங்கும் போது பாடல்களை

அவர்கள் முதலில் எழுதுவதே கே. எஸ்.ஜிக்கு திருப்தி ஏற்பட்டு

விட்டால் அந்த பாடல் வரிகளை அவர் ஏற்றுக்கொள்வார் !

மாறாக, கே. எஸ். ஜி திருப்தி ஏற்பட்ட போதிலும் மேலும்

மேலும் பாடல் வரிகளை எழுதச் சொல்லி கவிஞர்களை

துன்புறுத்தும் வழக்கம் அவர்களுக்கு இல்லை !

' முதலில் எனக்குப் பிடிக்கும் வரிகளை இவர்கள் எழுதிவிட்டால்

பின்னர் எதற்காக மேலும் அவர்களை எழுதச் சொல்லவேண்டும் ? '

என்று வாதாடுவார் !ஒரு சம்பவம் :


" அருகில் வந்தாள் , உருகி நின்றாள் "

என்கிற ஏ. எ,. ராஜா பாடிய " களத்தூர் கண்ணம்மா "

பாடலை எழுதிய கவிஞர் கண்ணதாசனை மேலும்

மேலும் சரணங்களை எழுதுமாறு ' டார்ச்சர்'  கொடுத்தாராம்

அந்த படத்தை முதலில் இயக்கிய இயக்குனர் :

டி. பிரகாஷ் ராவ் !


கண்ணதாசன் எழுதினார்.....

எழுதினார்.......

எழுதின்னார்.....

எத்தனை சரணங்கள் தெரியுமா ?


51   சரணங்கள் !


பார்த்தார், ஏ. வி. எம் பட அதிபர் செட்டியார் !

கண்ணதாசனிடம் சொன்னார் , செட்டியார் :


" அய்யா ! இந்த டி. பிரகாஷ் ராவ் ஒரு தெலுங்கர் !

தமிழ் அவ்வளவாக அறியாதவர் !

எனவே நீங்கள் இதுதும் நிறுத்திக் கொள்ளவும் !

நீங்கள் எழூதிய இத்தனை சரணங்களில் நாங்கள்

மூன்றை மட்டும் ( ! )

எடுத்ட்துக்கொண்டு மற்றவைகளை விட்டுவிடுகின்றோம் ! "


என்றாராம் !


விளைவு ?

அந்த டி . பிரகாஷ் ராவ் , பின்னால் வேறு ஒரு பிரச்சனையின்

விளைவாக மாற்றப்பட்டு " களத்தூர் கண்ணம்மா " வை இறுதியாகஏ. பீம்சிங்


இயக்கினார் !
" அத்தை மடி மெத்தையடி  "

மகிழ்ச்சி :

mediafire.com listen/mvhdlmbb6q37wu2/Karpagam-1963_-_Athai_Madi_Methaiyadi-PS-Vaali.mp3" அத்தை மடி மெத்தையடி  "

இன்னொன்று :

mediafire.com listen/psv2c4j64mf4toq/Karpagam-1963_-_Athai_Madi_Methaiyadi(Sad)-PS-Vaali.mp3

2 . " மன்னவனே அழலாமா , கண்ணீரை விடலாமா ! " " முதலில் ஒரு பாட்டு "  என்று வாலியிடம்

' சும்மாங்காட்டி '

சொன்ன கே. எஸ். ஜி , இப்போது சப்பு கொட்டினார்.....அத்தான் ...

' ஜொள்ளிட்டார் ' !

' இந்த வாலிக்கு இன்னொரு பாடலைக் கொடுத்தால் என்ன ? "

என்று எண்ண ஆரம்பித்தார் !


" கருவாட்டைத்தான் கூவி விற்க வேண்டும் !

சந்தனத்தை அப்படி விற்க வேண்டியதில்லை ! '


தானாக விற்பனை ஆகிவிடும் !

வாலியின் நிலைமை இப்படித்தான் !  ஜாலி" ஹலோ வாலி !

இதோ இன்னொரு பாட்டுக்கான ' சிட்டுவேஷன்! '


" இளம் மனைவியை சதி வேலையால் இழந்த கணவன்,

இன்னொரு பெண்ணை விருப்பம் இல்லாமல் மணந்து

கொள்கிறான் ....ஆனால் அவளை அவன் மணந்த பின்னரும்

அவளை ஏற்றுக்கொள்ள தயங்குகிறான்.......

தன் முதல் மனைவியின் நினைவுடனேயே இருக்கின்றான்.

அவனை, அந்த முதல் மனைவி நேரில் வந்து பாடினால்

அந்த பாடலை நீங்கள் எப்படி எழுதுவீர்கள் ? "


' கிடுக்குப் பிடி' போட்டார் கே. எஸ். ஜி, வாலையைப் பார்த்து !


வாலி சற்று யோசித்து எழுத ஆரம்பித்தார் :" மன்னவனே அழலாமா !  கண்ணீரை விடலாமா "


கே. எஸ். ஜி மகிழ்ச்சி அடைந்தார்......

ஆனால் வாலியின் இந்த வரிகளில் கே. எஸ். ஜி பரவசம்

அடைந்தார் :" என் உடலில் ஆசை இருந்தால் என்னை நீ மறந்து விடு !

என் உயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ் விடு ! "


கூடவே மெல்லிசை மன்னர்களின் இசையிலும் ,, காமரா மேதை

கர்ணனின் ஒளிப்பதிவும் அந்த பாடல் வரிகளை உயரத்தில் தூக்கி

வைத்தன !


பாடல் :
mediafire.com listen/zy7y4r5ze6y5og7/Karpagam-1963_-_Mannavane-PS-Vaali.mp3####################################################3. " ஆயிரம் இரவுகள் வருவதுண்டு !

ஆனால் இதுதான் முதல் இரவு ! "

இயக்குனர் திலகத்திற்கு இப்போது வாலியை இலேசில்

வீட மனம் வரவில்லை !

அடுத்த பாடலுக்கு ' சிட்டுவேஷ' ஐ சொல்லிவிட்டார் !" கல்யாணம் ஆகி, முதல் இரவுக்கு கிளம்பும் தன்

தோழிக்கு, கல்யாணம் ஆகாத பருவப் பெண் எப்படி

அவளை வாழ்த்திப் பாடி வழி அனுப்புவாள் ? "


வாலி எப்படி பாடலை எழுதினார் ?
வாலி, " ஆயிரம் இரவுகள் "  பாடலை

முழுமையாக எழுதவில்லை !


பின்னே ?

அறைகுறையாக சொற்களை சரியாக நிரப்பாமல் :


FILL  - UP  THE   BLANKS  

முரையில் எழுதிவிட்டார் !


எப்படி ?
தோழி பாடுகின்றாள் : 
 " வயதில் வருவது ஏக்கம் !

அது வந்தால்  வராதது ------------- ! "" வந்தது மாமலர் கட்டில் !

இனி வீட்டினில் ஆடிடும் ----------------- ! "" வருவார் வருவார் பக்கம் !


உனக்கு வருமே வருமே __________________ ! "" தருவார் தருவார் நித்தம்

இதழ் தித்திக்க தித்திக்க ___________________ ! "
  கல்யாணம் ஆகாத கன்னி , முதல் இரவைப் பற்றி

"  BOLD "   ஆக , தைரியமாக பாடத்தயங்கித்தான் இந்த :


" கோடிட்ட இடங்களை நிரப்பும் "  

பாடல் !


அப்புறம் ?

அப்புறம் என்ன......

தியேடரில் இந்த பாடலை திரையில் வரும்போது மக்கள்


" கோடிட்ட இடங்களை நிரப்பினார்கள் ! "


" தூக்கம் "


" தொட்டில் "

" வெட்கம் "

" முத்தம் "


என்று ஒரே ஆரவாரம்.....ஆரவாரம் !


இறுதியில் பாடலை அந்த பெண் பாடுவதாக இப்படி

எழுதுகிறார் :" யாரோ சொன்னார் கேட்டேன் - நான் கேட்டதை

உன்னிடம் சொன்னேன் !


நானோ சொன்னது பாதி !

இனி தானாய் தெரியும் மீதி ! "இந்த பாடல் ஹிட் ஆனதுதான் உங்களுக்குத் தெரியுமே ! நன்றி  

பாடல் :

mediafire.com listen/wlcjugb68z94gk9/Karpagam-1963_-_Aayiram_Iravugal-PS-Vaali.mp3 %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%4 .  " பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்,

பார்வையிலே படம் புடிச்சாம் ! "

இந்த பாடலும் வாலி எழுதிய பாடல்தான் !

பாடலைப் பாடியவரும் பி. சுசீலா அம்மாதான் !

பாடலின் இசை மெல்லிசை மன்னர்கள்தான் !


ஆனால்...............................


இந்த பாடல் ( முதலில் ) இடம் பெற்றது :


" கற்பகம் "  படத்தில் அல்ல !


' பின்னே  எந்த படத்தில் ஐயா இந்த பாடல் இசையமைக்கப் பட்டது ? "


என்றா கேட்கிறீர்கள் ?

சொல்றேன் !

இந்த பாடல் முதலில் கே. எஸ்.ஜி , ' கற்பகம் " படத்தை அடுத்து

இயக்கி வெளிவந்த :


" கை கொடுத்த தெய்வம் " ( 1965 )

படத்திற்காக பாடப் பட்டது !" எப்படி ஐயா இதனை சொல்கிறீர்கள் !

ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ? "


என்றா கேட்கிறீர்கள் ?
"  ஆதாரம்  இல்லாத சாந்தாராமா !  "   போட்டிக்கு ரெடிஇந்த பாடலில் இடம் பெற்ற இந்த வரிகளை படியுங்கள் :
" யமுனையிலே வெள்ளம் இல்லை.....

விடியும் வரை கதை படிச்சான் ? "" கற்பகம் " படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரம் பாடுவதாக

அமைந்த இந்த பாட்டில்:

" வட நாட்டில் பாயும் யமுனை நதி எங்கே வந்தது ? "

சொல்லுங்கய்யா !     கூடாது" காவேரியில் வெள்ளம் இல்லை "

அல்லது

" தாமிரபரணியில் வெள்ளம் இல்லை ! "


என்று ஏன் வரவில்லை ?


ஏன் யமுனை ?


சொல்றேன் !


" கை கொடுத்த தெய்வம் " படத்தில் கே. ஆர் . விஜயா பாடுவதகத்தான்

இந்த பாடல் இசையமைக்கப் பட்டது !

கே. ஆர். விஜாயா வின் கதாபாத்திரம் ' கை கொடுத்த தெய்வம் '

படத்தில்ல் வட இந்தியாவில் உள்ள பாட்னா அல்லது வேறு ஊரில்

வசிப்பதாக வருகிறது !

எனவே வட இந்தியாவில் வசிக்கும் கே. ஆர். விஜயா இந்த

பாட்டை பாடுவதற்கு ஏற்ப :


" யமுனையிலே வெள்ளம் இல்லை ! "


என்கிற வரியை வாலி எழுதியுள்ளார் !


சரியா ?     சிரி சிரி
இன்னொன்று  :


இந்த     பாடலை ' கற்பகம் '  படத்தில் பாடும் சாவித்திரி ஏற்றுக்கொண்டு நடிக்கும்

கண்ணியமான பாத்திரத்தை களங்கப் படுத்துவதைப் போன்று

அமைந்துள்ளதாக, படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள், தங்கள்

அதிருப்தியைத் தெரிவித்தது என்பது உண்மை !

அதற்கு இயக்குனர் கே. எஸ். ஜி , எந்த விதமான விளக்கமும் அப்போது

சொல்ல்லவில்லை என்பதும் உண்மை !

ஆனால் , துடுக்குத்தனமான பாத்திரத்தை ஏற்று வித்தியாசமாக நடித்த

' கை கொடுத்த தெய்வம் ' கே.  ஆர். விஜாவுக்கு இந்த பாடல் சரியாக

பொருந்துகிறது என்பதும் உண்மை !  
 
ஆனாலும் இந்த பாடலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு !

" கற்பகம் "  படத்தின் 100 வது நாள் வெற்றி விழாவுக்கு கண்ணதாசன் அவர்கள்

அழைக்கப்பாட்டார்.

அப்போது மேடையில் பேசிய பிரபல தயாரிப்பாளர் :


சின்ன அண்ணாமலை


 இடது ஓரத்தில்

" ஸ்மால் " ( ! )  அண்ணாமலை !
கண்ணதாசனை புகழ்ந்து பேசும் ஆசையில் வாலியை இப்படி

பேசி விட்டார் !

என்ன பேசினார் :


" சில சமயங்களில் குதிரைப் பந்தயத்தில் " நோஞ்சான் குதிரை "

கூட எப்படியோ மூக்கை நுழைத்து ஜெயித்து விடுகிறது ! "


ஆனால், பின்னர் பேச வந்த கவிஞர் கண்ணதாசன் , சின்ன அண்ணாமலையின்

பேச்சை கண்டித்தார் !

வாலியை பாராட்டினார் !கண்ணதாசன் சொன்னார் :


" வாலி மிகச் சிறந்த கவிஞர், இதில் சந்தேகமே இல்லை !

இதோ, அவர் " கற்பகம் " படத்தில் எழுதியுள்ள ஒரு பாடல் :

" பக்கத்து வீட்டு பருவ மச்சான் "

இந்த பாடலில் வாலி எழுதியுள்ள ஒரு வரியினைப் படியுங்கள் :
" மனசுக்குள்ளே தேரோட்ட

மை விழியில் வடம் புடிச்சான் ! "இந்த வரிகள் ஒன்றே போதும் அவர் ஒரு சிறந்த கவிஞர்

என்பதை நிரூபிக்க ! "


என்று சொன்னாராம் !

mediafire.com listen/acnls24502yx0bz/Karpagam-1963_-_Pakkathu_Veettu_Paruva_Machaan-PS-Vaali.mp3
" எம். எஸ். வி யை சந்திப்பதற்கு முன்னர்

எனக்கு சோற்றுக்கு வழி இல்லை !

அவரை சந்தித்த பிறகு

எனக்கு சோறு திங்க நேரம்மில்லை ! "----   கவிஞர்  வாலி !%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அடுத்து :" நாயகன் "


உருவான கதை !

எம்கேஆர்சாந்தாராம்
avatar
mkrsantharam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 98

View user profile

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 01, 2014 7:45 pm

நன்றி
எம்கேஆர்சாந்தாராம் அவர்களே ! மிக மிகப் பயனுள்ள - உயிரோட்டமான செய்திகள் உங்களுடையவை !
எவ்வளவு பாராட்டினாலும் தகும் !

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2435

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum