ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Sat May 03, 2014 4:51 am

ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா

தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; 1997 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்புச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கத் தவறிய

கருணாநிதி; தனது மைனாரிட்டி ஆட்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட போது, அதனை வேடிக்கைப் பார்க்கும் அளவுக்கு காவல் துறையை சீரழித்த கருணாநிதி; அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, தனது ஆட்சிக் காலத்தில் அமளிக் காடாக மாற்றிய கருணாநிதி; 1.5.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விவரம் புரியாமல், மனம் போன போக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டு இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

கருணாநிதி தனது அறிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது என்றும்; ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தீவிரவாத நடவடிக்கைகள் என்ன என்று உடனடியாக முறைப்படி முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றிருக்காமலே கூடத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் வாய்க்கு வந்தவற்றையெல்லாம் கூறி இருக்கிறார்; எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் ‘armchair critic’ என்ற ஒரு சொலவடை உள்ளது. அதாவது எதைப் பற்றியும் தெளிவுற, அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளாமல்; சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, மனம் போன போக்கில், எதிர்மறை கருத்துகளைத் தெரிவிப்பது என்பது இதன் பொருள். கருணாநிதியின் அறிக்கை இதற்கு இலக்கணமாக அமைந்துள்ளது.

தீவிரவாதம் தமிழகத்தில் தலைதூக்க விடாமல் இருப்பதில் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழகக் காவல் துறையினர் கடந்த

34 மாதங்களாக எடுத்து வருகின்றனர். பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட “போலீஸ்” பக்ருதீனை சென்னையிலும், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரிலும் அடையாளம் கண்டு, அவர்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதி ஜாகீர் உசேனையும் தமிழகக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், 1.5.2014 அன்று பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் பெங்களூரு-கவுகாத்தி விரைவு ரயில், 1ஙூ மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைந்தவுடன், எஸ் 4 மற்றும் எஸ் 5 ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்து, ஒருவர் உயிரிழந்தார்; 14 பேர் காயமுற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுவாக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் என்பவை மத்திய அரசினுடைய ரயில்வே பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. மாநில ரயில்வே காவல் படை, ரயில்வே பாதுகாப்புப் படையுடன் இணைந்து அங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில் நிலையத்திற்குள்ளோ அல்லது ரயிலிலோ ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறும் போது, ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தமிழகக் காவல் துறையினர் புலன் விசாரணையை மேற்கொள்வார்கள். அந்த வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றவுடன் தமிழக காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், எனது உத்தரவின் பேரில், இந்த வழக்கு மாநிலக் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட உலோக பைப், மின்கல உறை, கடிகாரத்தின் பகுதிகள் ஆகியவற்றை கொண்டு, எவ்விதமான கருவி பயன்படுத்தப்பட்டது; பயன்படுத்திய வெடிகுண்டின் தன்மை போன்றவற்றை கண்டறிவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வெடிகுண்டு எங்கு வைக்கப்பட்டது என்பது குறித்து ஆராய, ரயில் வண்டி புறப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து சென்னை வந்து சேரும் வரை உள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள காமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆராயப்படுகின்றன. முதல்கட்ட விசாரணையில், காலக்கெடுவுடன் கூடிய வெடிகுண்டாக இருக்கலாம் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இந்த ரயில் குறித்த நேரத்தில் சென்னை வந்தடைந்து, புறப்பட்டுச் சென்று இருக்குமேயானால், காலை 7.15 மணிக்கு ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருக்கும் போது வெடித்திருக்கும். இது குறித்தும், மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு எந்த ஓர் அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் நுண்ணறிவுப் பிரிவினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களிடமும், இதர சாட்சிகளிடமும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேனிடமும் முழுமையான விசாரணையை காவல் துறையினர் அன்றே மேற்கொண்டனர். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து ஜாகீர் உசேனிடம் தகவல் பெறப்பட்டு இருந்தால், தமிழகக் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பினை தடுத்து இருப்பார்கள். தமிழகக் காவல் துறை முன் எச்சரிக்கையுடன் தான் செயல்பட்டு வருகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க,

ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று கருணாநிதி கூறி இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் பொறுப்பற்ற செயல் ஆகும்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் 1.5.2014 அன்று அளித்த பேட்டியில், “இந்த ரயில் பெங்களூரிலிருந்து கிளம்பி ஜோலார்பேட்டை தாண்டியவுடன் தமிழ்நாடு எல்லை வந்து விடுகிறது. எனவே, தமிழ்நாட்டு எல்லைக்குள் எங்கே குண்டு வைக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு காவல் துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற எச்சரிக்கையாகத் தான் இதைக் கருத வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், வெடிக்காத பைப் வெடிகுண்டு ஒன்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

இந்த விபத்து குறித்து கருணாநிதியும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவனும் தெரிவிக்கின்ற கருத்துகளைப் பார்க்கும் போது, தீவிரவாதிகளிடமிருந்து இவர்கள் நிறைய தகவல்களைப் பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. அப்படி அவர்கள் ஏதாவது தகவல்களைப் பெற்றிருந்தால், அவற்றை உடனடியாகத் தமிழகக் காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றை அனுப்ப மத்திய அரசு முன்வந்தது போலவும், அதனை எனது தலைமையிலான அரசு தடுத்துவிட்டது போலவும் தவறான செய்திகள் சில பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. மத்திய அரசின் உள் துறையில் உள்ள ஒரு இடைநிலை அதிகாரி, தமிழக உள் துறை செயலாளரை 1.5.2014 அன்று தொடர்பு கொண்டு, வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோ, வெடிகுண்டினைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் குழுவோ தேவைப்பட்டால் அனுப்புவதாகத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் உள் துறைச் செயலாளர், ஏதேனும் தேவையிருப்பின், உதவியைக் கோருவதாகக் கூறினார். தேசிய பாதுகாப்புக் குழுவின் வெடிவிபத்து குறித்த வழக்குகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் சம்பவ இடத்தைப் பார்வையிட வந்துள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை ஏதும் எடுக்காத கருணாநிதி, இந்த ரயில் வெடிகுண்டு விபத்து குறித்து கருத்து தெரிவிக்கும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு; இந்தக் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சதிகாரர்களை கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தரத் தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Last edited by சிவா on Sat May 03, 2014 3:22 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Sat May 03, 2014 4:53 am

மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன? எனக்கு என் அதிகாரத்துவப் போக்கும், அரசியலின் இதுபோன்ற அசிங்கமான அறிவிப்புக்களுமே முக்கியம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Sat May 03, 2014 3:23 pm

முதல்வர் என்றால் வரையறை கடந்து பேசலாமா?- கருணாநிதி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை 'சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது' என விமர்சித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் என்றால் வரையறை கடந்து பேசலாமா என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில்: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது பற்றியும், அதில் பெண் மணி ஒருவர் பரிதாபமாக இறந்தது குறித்தும், பலபேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது பற்றியும் நான் மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் கடுமையாகத் தாக்கி முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் சயனித்தவாறே அறிக்கை விடுத்திருக்கிறார்.

அந்த அறிக்கையில் 1998ஆம் ஆண்டு கோவையில் தி.மு. கழக ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை ஒப்பிட்டிருக்கிறார். எனவே 1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது, முதலமைச்சர் என்ற முறையில், நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதைத் தெளிவாக்கிட விரும்புகிறேன்.

14-2-1998 அன்று அதாவது தமிழகத்தில் 16ஆம் தேதியன்று தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில் கோவையில் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றவுடன், உடனடியாக நான் அன்றைய பிரதமர் ஐ.கே. குஜ்ராலுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். மறுநாள், 15-2-1998 அன்றே நான் விபத்து நடைபெற்ற கோவை மாநகருக்கு விரைந்தேன்.

கோவை சென்ற நான் குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையெல்லாம் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

அந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதமும் காயமுற்றவர்களுக்கு, அவர்களின் காயத்தைப் பொறுத்தும் நிதி உதவி அளிக்கச் செய்தேன்.

விபத்து நடந்த அதே நாளில் புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, “கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்” என்று கோரினார்.

மணப்பாறையில் ஜெயலலிதா பேசும்போது, “தி.மு.கழக ஆட்சியில் என்னுடைய பாதுகாப்புக்குக் கூட உத்தரவாதமில்லை” என்றார். மானாமதுரையில் பேசும்போது, “குண்டு வெடிப்புச் சம்பவங்களை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை, இதைச் செய்ய முடியாத இவர் இன்னும் பதவியில் இருக்கவேண்டுமா?” என்று கேட்டார்.

1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது இப்படியெல்லாம் பேசியவர் தான் ஜெயலலிதா. தற்போது நான் அப்படியெல்லாம் கூடப் பேசவில்லை.

என்னுடைய அறிக்கையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியை உடனடியாக முறைப்படி முழுமையாக விசாரித்திருந்தால், இந்தக் குண்டு வெடிப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா; எனவே காவல் துறை நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். இதைத் தான் தவறு என்று கூறி முதல் அமைச்சர் கொடநாட்டில் அவர் தங்கியிருக்கும் ஓய்வு மாளிகையிலிருந்து அவசர அவசரமாக அறிக்கை விட்டிருக்கிறார்.

நான் வெளியிட்ட அதே அறிக்கையில், தமிழகத்தில் நிலவிடும் கடும் வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு, தாய்மார்கள் காலிக் குடங்களோடு நடத்திடும் மறியல் போராட்டங்கள், கடுமையான மின்வெட்டு, ஆம்னி பேருந்துகளில் கடுமையான கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, காடீநுந்து போன நெற்பயிர்கள் என்பதைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டிய முதல் அமைச்சர் எங்கே என்று கேட்டிருந்தேனே; முதலமைச்சர் ஜெயலலிதா வசதியாகஇவற்றையெல்லாம் மறந்து விட்டாரே? ஏன்?

நான் வெளியிட்ட அறிக்கையை சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று ஜெயலலிதா விமர்சிக்கிறார் என்றால், 98ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் குண்டு வெடிப்புக்காக என்னை பதவி விலக வேண்டுமென்று கூறினாரே,அவர் சொன்னது மட்டும் சாத்தான் வேதம் ஓதியதைப் போல இல்லையா? முதலமைச்சர் என்றால் வரையறை கடந்து எதை வேண்டுமென்றாலும் பேசலாமா?

கோவை குண்டு வெடிப்பு பற்றி அறிக்கை விட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போது தலைநகரிலேயே குண்டு வெடிப்பு நடைபெற்றிருக்கிறதே, என்ன செய்து கொண்டிருக்கிறார்? கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன், முதலமைச்சராக இருந்த நான் கோவை சென்று மருத்துவமனையிலே சிகிச்சை பெறுபவர்களை யெல்லாம் நேரில் கண்டு ஆறுதல் கூறினேனே, அவ்வாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக சென்னை வந்து பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறியிருக்க வேண்டாமா?

நான் ஏதோ சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, எதையும் தெரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் கருத்துகளைக் கூறுவதாக தனது அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் சாலை வழியாகவே வேனிலே சென்று மக்களை யெல்லாம் நேரில் சந்தித்து வந்த நான் சுகவாசியாம்! சொல்வது யார் தெரியுமா? ஒவ்வொரு

ஊரிலும் இலட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கெலிகாப்டர் தளம் அமைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா விமானத்திலும், கெலிகாப்டரிலும் பயணம் செய்து, வேட்பாளர்களை வாக்கு கேட்கக் கூட அனுமதிக்காமல் பிரச்சாரம் செய்து விட்டு, இரண்டு மாத காலம் தலைமைச் செயலகத்திற்கே செல்லாமல் இருந்து, நிர்வாகப் பணிகளை அலட்சியப்படுத்திவிட்டு, நேராக கொடநாட்டில் போய் தங்கிக் கொண்டு என்னை சுகவாசி என்று சொல்வது முறை தானா என்பதைத் தமிழ்நநாட்டு மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்". இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Sat May 03, 2014 3:33 pm

நெருக்கடியான நேரத்தில் முதல்வர் தலைநகரில் இல்லை: கருணாநிதி கண்டனம்

நெருக்கடியான நேரத்தில் கூட முதல்வர் தலைநகரில் இல்லாத காரணத்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாத காரணத்தாலும் தான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளதாக கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தோர் விரைவில் நலம் பெற விழைவினையும் தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கேட்பாரற்ற நிலையிலே இருப்பதாகவும், அதுபற்றி அக்கறையோடு முறையாக நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை என்றும் நான் பல நாட்களாக தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தேன். ஆனாலும் அ.தி.மு.க. அரசினர் அதைக் காதில் போட்டுக் கொள்ளவும் இல்லை; கவனம் செலுத்தவுமில்லை.

பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது. காவல் துறையினர் என்ன தான் திறமையாகப் பணியாற்றிய போதிலும், அவ்வப்போது ஆய்வு செய்து, அவர்களை வழி நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டிய

அந்தத் துறையின் பொறுப்பினை ஏற்றுள்ள முதலமைச்சர் நெருக்கடியான நேரத்திலே கூட தலைநகரிலே இல்லாத காரணத்தால், அந்தத் தீவிரவாதி கைது செய்யப்பட்ட பிறகும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால் தான், இன்று காலையில்சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. வெடிக்காத பைப் வெடி குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அப்படிப்பட்ட நிர்வாகச் செயல்பாடுகள் இல்லாமல் காவல் துறையினர் எப்படி முடிவெடுப்பது என்று புரியாமல் திசை அறியாத நிலையில் இருப்பதாகவும் கூறப் படுகிறது.

ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தீவிரவாத நடவடிக்கைகள் என்ன என்றுஉடனடியாக முறைப்படி முழுமையான விசாரணைகள் நடைபெற்றிருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றிருக்காமலே கூடத் தவிர்க்கப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகள் மேலும் என்னென்ன திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் காவல் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மீண்டும் கொடநாடு சென்று விட்டார்". இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Sat May 03, 2014 3:34 pm

கருணாநிதிக்கு குண்டுவெடிப்பு தகவல் தெரிந்து இருக்கலாம்: சந்தேகம் கிளப்புகிறார் முதல்வர் ஜெ.,

சென்னை : ''தி.மு.க., தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் எம்.பி.,யான இளங்கோவன், ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கும் போது, பயங்கரவாதிகளிடம் இருந்து, நிறைய தகவல்களை பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்படி அவர்கள் ஏதேனும் தகவல்களை பெற்றிருந்தால், அதை உடனடியாக, தமிழக போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்,'' என, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கோவை தொடர் குண்டுவெடிப்பை முன்கூட்டியே தடுக்கத் தவறிய, அப்போதைய முதல்வர் கருணாநிதி, ரயில் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, விவரம் புரியாமல், மனம் போன போக்கில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், அறிக்கை வெளியிட்டு இருப்பது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. ரயில் நிலையத்திற்குள்ளோ, ரயிலிலோ, ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, தமிழக போலீசார் புலன் விசாரணை மேற்கொள்வர்.அந்த வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குண்டு வெடித்ததும், தமிழக போலீசார் விரைந்து சென்று, விசாரணையில் ஈடுபட்டனர். அதன் பின், இந்த வழக்கு, மாநில குற்றப்பிரிவு புலனாவுத் துறைக்கு மாற்றப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட உலோக பைப், மின்கல உறை, கடிகாரத்தின் பகுதிகள் ஆகியவற்றை கொண்டு, எவ்விதமான கருவி பயன்படுத்தப்பட்டது; பயன்படுத்திய வெடிகுண்டின் தன்மை போன்றவற்றை கண்டறிவதற்கான ஆவுப்பணிகள் நடந்து வருகின்றன.முதல்கட்ட விசாரணையில், காலக்கெடுவுடன் கூடிய வெடிகுண்டாக இருக்கலாம் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது.

இந்த ரயில், குறிப்பிட்ட நேரத்தில், சென்னை வந்தடைந்து, புறப்பட்டு சென்றிருந்தால், காலை, 7:15 மணிக்கு, ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருக்கும் போது வெடித்திருக்கும். இது குறித்தும், மாநில குற்றப்புலனாவுத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்திற்கு, எந்த ஒரு அமைப்பும், இதுவரை பொறுப்பேற்கவில்லை. காயமடைந்தவர்களிடமும், இதர சாட்சிகளிடமும், விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.நான்கு நாட்களுக்கு முன் கை தான, ஜாகிர் உசேனிடமும், முழுமையான விசாரணை, அன்றே மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, தகவல் பெறப்பட்டு இருந்தால், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குண்டு வெடிப்பை தடுத்திருப்பர்.உண்மை நிலை இவ்வாறிருக்க, ஜாகிர் உசேன் கைது செயப்பட்டதும், முழுமையான விசாரணை நடந்திருக்குமானால், இவ்விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என கருணாநிதி கூறியிருப்பது, அரசியல் ஆதாயம் தேடும் பொறுப்பற்ற செயல்.

தி.மு.க., எம்.பி.,இளங்கோவன் அளித்த பேட்டியில், 'இந்த ரயில் பெங்களூரில் கிளம்பி, ஜோலார்பேட்டை தாண்டியவுடன், தமிழக எல்லை வந்து விடுகிறது. எனவே,தமிழக எல்லைக்குள், எங்கே குண்டு வைக்கப்பட்டிருந்தாலும், தமிழக போலீசாருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகத் தான், இதை கருத வேண்டும்' என, கூறியுள்ளார். கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், வெடிக்காத பைப் வெடிகுண்டு ஒன்று, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இவ்விபத்து குறித்து, கருணாநிதி, இளங்கோவன் தெரிவிக்கும் கருத்துக்களை பார்க்கும்போது, பயங்கரவாதிகளிடம் இருந்து, இவர்கள் நிறைய தகவல்களை பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்படி அவர்கள் தகவல்களை பெற்றிருந்தால், அவற்றை உடனடியாக,தமிழக போலீசாருக்கு தெரிவிக்கவேண்டும். இவ்வாறு, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Sat May 03, 2014 3:35 pm

என்.ஐ.ஏ., விசாரணைக்கு மறுப்பா : முதல்வர்

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய பாதுகாப்பு படை மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.,) ஆகியவற்றை, அனுப்ப மத்திய அரசு முன் வந்தது போலவும், அதை என் தலைமையிலான அரசு தடுத்து விட்டது போலவும், தவறான செய்திகள் வெளி வந்துள்ளன.

மத்திய அரசின் உள்துறையில் உள்ள ஒரு இடை நிலை அதிகாரி, தமிழக உள்துறை செயலாளரை, மே 1ல் தொடர்பு கொண்டு, வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோ, வெடிகுண்டை கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் குழுவோ, தேவைப்பட்டால், அனுப்புவதாக கூறியுள்ளார்.தமிழக உள்துறை செயலாளர், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கேட்பதாக கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு குழுவின் வெடிவிபத்து குறித்த வழக்குகளில் திறமை வாய்ந்த நிபுணர்களும், சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளனர்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Sat May 03, 2014 3:50 pm

சுகவாசி நானா, ஜெயலலிதாவா?: கருணாநிதி காட்டம்

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா, இரண்டு மாத காலம் தலைமைச் செயலகத்திற்கே செல்லாமல் இருந்து, நிர்வாகப் பணிகளை அலட்சியப் படுத்திவிட்டு, கொடநாட்டில் போய் தங்கிக் கொண்டு என்னை சுகவாசி என்று சொல்வது முறை தானா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"சுடுநீரிலே விழுந்த பூனை, பச்சைத் தண்ணீரைக் கண்டாலும் பயப்படுமாம்" என்பது ஒரு பழமொழி. அது போல முதலமைச்சர் என்ன தான் கொடைநாடு எஸ்டேட்டில் போய்த் தங்கினாலும், பல வகைப் பிரச்னைகளில் சிக்கிக் கொண்டுள்ள அவருடைய நினைப்பெல்லாம், தி.மு.கழகத்தின் மீதும், அதன் தலைவனாக இருக்கின்ற என்மீதும் தான் போலும்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது பற்றியும், அதில் பெண் மணி ஒருவர் பரிதாபமாக இறந்தது குறித்தும், பலபேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது பற்றியும் நான் மாத்திரமல்ல; தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் கடுமையாகத் தாக்கி முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில் சயனித்தவாறே அறிக்கை விடுத்திருக்கிறார்.

அந்த அறிக்கையில் 1998ஆம் ஆண்டு கோவையில் தி.மு.கழக ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை ஒப்பிட்டிருக்கிறார். எனவே 1998ஆம் ஆண்டு கோவையில் குண்டு வெடிப்பு நடைபெற்ற போது, முதலமைச்சர் என்ற முறையில், நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதைத் தெளிவாக்கிட விரும்புகிறேன்.

14.2.1998 அன்று அதாவது தமிழகத்தில் 16ஆம் தேதியன்று தேர்தல் நடக்கவிருந்த நேரத்தில் கோவையில் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றவுடன், உடனடியாக நான் அன்றைய பிரதமர் ஐ.கே.குஜ்ராலுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

மறுநாள், 15.2.1998 அன்றே நான் விபத்து நடைபெற்ற கோவை மாநகருக்கு விரைந்தேன். என்னுடன் த.மா.கா. தலைவராக இருந்த மூப்பனாரும் வந்தார்.

மேலும் அன்றைய தலைமைச் செயலாளர் கே.ஏ.நம்பியார், சிறப்புத் தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமி, காவல்துறைத் தலைமை இயக்குநர் எப்.சி.சர்மா மற்றும் உள்துறைச் செயலாளராக இருந்த ஆர்.பூர்ணலிங்கம், ஐ.ஏ.எஸ். ஆகிய அதிகாரிகளையும் உடன் அழைத்துச் சென்றேன்.

கோவை சென்ற நான் குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையெல்லாம் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

அந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதமும், காயமுற்றவர்களுக்கு, அவர்களின் காயத்தைப் பொறுத்தும் நிதி உதவி அளிக்கச் செய்தேன்.

விபத்து நடந்த அதே நாளில் புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, "கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்" என்று கோரினார். மணப்பாறையில் ஜெயலலிதா பேசும்போது, "தி.மு.கழக ஆட்சியில் என்னுடைய பாதுகாப்புக்குக் கூட உத்தரவாதமில்லை" என்றார்.

மானாமதுரையில் பேசும்போது, "குண்டு வெடிப்புச் சம்பவங்களை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை, இதைச் செய்ய முடியாத இவர் இன்னும் பதவியில் இருக்க வேண்டுமா?" என்று கேட்டார்.

1998ஆம் ஆண்டு கோவையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற போது இப்படியெல்லாம் பேசியவர் தான் ஜெயலலிதா. தற்போது நான் அப்படியெல்லாம் கூடப் பேசவில்லை. என்னுடைய அறிக்கையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியை உடனடியாக முறைப்படி முழுமையாக விசாரித்திருந்தால், இந்தக் குண்டு வெடிப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லவா; எனவே காவல்துறை நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். இதைத்தான் தவறு என்று கூறி முதலமைச்சர் கொடநாட்டில் அவர் தங்கியிருக்கும் ஓய்வு மாளிகையிலிருந்து அவசர அவசரமாக அறிக்கை விட்டிருக்கிறார்.

நான் வெளியிட்ட அதே அறிக்கையில், தமிழகத்தில் நிலவிடும் கடும் வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு, தாய்மார்கள் காலிக் குடங்களோடு நடத்திடும் மறியல் போராட்டங்கள், கடுமையான மின்வெட்டு, ஆம்னி பேருந்துகளில் கடுமையான கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்னை, காய்ந்து போன நெற்பயிர்கள் என்பதைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டிய முதலமைச்சர் எங்கே என்று கேட்டிருந்தேனே; முதலமைச்சர் ஜெயலலிதா வசதியாக இவற்றையெல்லாம் மறந்து விட்டாரே? ஏன்?

நான் வெளியிட்ட அறிக்கையை சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று ஜெயலலிதா விமர்சிக்கிறார் என்றால், 98ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியில் கோவை குண்டு வெடிப்புக்காக என்னை பதவி விலக வேண்டுமென்று கூறினாரே, அவர் சொன்னது மட்டும் சாத்தான் வேதம் ஓதியதைப் போல இல்லையா?

முதலமைச்சர் என்றால் வரையறை கடந்து எதை வேண்டுமென்றாலும் பேசலாமா? நான் அறிக்கை விடுத்த அதே நாளில் "தினமலர்" நாளேடு "எச்சரிக்கை விடுத்த உளவுத் துறை! கோட்டை விட்ட தமிழக போலீஸ்" என்ற தலைப்பில் தமிழக உளவு மற்றும் பாதுகாப்பு சிறப்பு போலீஸ் சார்பில், அனைத்துப் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட ரகசிய எச்சரிக்கைக் கடிதத்தை அப்படியே "பிளாக்" செய்து செய்தி வெளியிட்டிருக்கிறதே, அந்தச் செய்திக்கு முதலமைச்சரின் பதில் என்ன?

கோவை குண்டு வெடிப்பு பற்றி அறிக்கை விட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போது தலைநகரிலேயே குண்டு வெடிப்பு நடைபெற்றிருக்கிறதே, என்ன செய்து கொண்டிருக்கிறார்? கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன், முதலமைச்சராக இருந்த நான் கோவை சென்று மருத்துவமனையிலே சிகிச்சை பெறுபவர்களையெல்லாம் நேரில் கண்டு ஆறுதல் கூறினேனே, அவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக சென்னை வந்து பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூறியிருக்க வேண்டாமா?

நான் ஏதோ சாய்வு நாற்காலியில் சுகமாக அமர்ந்தவாறே, எதையும் தெரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் கருத்துகளைக் கூறுவதாக தனது அறிக்கையிலே ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் சாலை வழியாகவே வேனிலே சென்று மக்களை யெல்லாம் நேரில் சந்தித்து வந்த நான் சுகவாசியாம்! சொல்வது யார் தெரியுமா? ஒவ்வொரு ஊரிலும் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து ஹெலிகாப்டர் தளம் அமைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் பயணம் செய்து, வேட்பாளர்களை வாக்கு கேட்கக் கூட அனுமதிக்காமல் பிரசாரம் செய்து விட்டு, இரண்டு மாத காலம் தலைமைச் செயலகத்திற்கே செல்லாமல் இருந்து, நிர்வாகப் பணிகளை அலட்சியப்படுத்திவிட்டு, நேராக கொடநாட்டில் போய் தங்கிக் கொண்டு என்னை சுகவாசி என்று சொல்வது முறை தானா என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by மாணிக்கம் நடேசன் on Sat May 03, 2014 4:11 pm

அறிக்கைப் போரும் இல்ல, அக்கப் போரும் இல்ல, ரெண்டு பேருக்கும் இது ஹனி மூன் போர். அதவது அசிங்கப் போர்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Sat May 10, 2014 9:33 am


கருணாநிதி எனக்கு அறிவுரை வழங்கியிருப்பது நகைப்புக்குரியது: ஜெயலலிதா

சென்னை: நதிநீர் பிரச்னையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதி எனக்கு அறிவுரை வழங்கியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''நதிநீர்ப் பிரச்னை; இலங்கை தமிழர் பிரச்னை; பொதுத் துறை பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் பிரச்னை; தமிழக மீனவர் பிரச்னை; மாநிலத்தின் அதிகாரங்களை பறிக்கும் பிரச்னை என எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அவற்றில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதில் மிகுந்த ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும், கவனத்துடனும் செயல்பட்டு அதில் வெற்றிக் கனியை பறிக்கின்ற அரசாக எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு விளங்குகிறது.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததிலும், காவேரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதிலும், என்.எல்.சி.யின் பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியதிலும் எந்த அளவுக்கு எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறாக நடந்து கொண்ட அரசு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு.

மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்யாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, முல்லைப் பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு தற்போது அறிவுரை வழங்கியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, கேரள மாநிலத்திலும், தமிழகத்திலும் முல்லைப் பெரியாறு அணை குறித்து தனித் தனியாக இரு மாநில உயர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில் 14.2.1998 அன்று தி.மு.க. ஆட்சியிலே தான், இரண்டு மாநில வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, அந்த மனுவின் மீது தான் உச்ச நீதிமன்றம் 142 அடி வரை அணையில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தமிழகத்திற்கு சாதகமாக 27.2.2006 அன்று தீர்ப்பளித்ததாக கருணாநிதி கூறி இருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட மனுத் தாக்கல் செய்யப்பட்டதைத் தவிர, கருணாநிதி இதற்கென வேறு எந்த முனைப்பான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.

உண்மை நிலை என்னவென்றால், கேரளாவைச் சார்ந்த ஒரு சில தனி நபர்களால் 1997 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை தற்காலிகமாக குறைக்கப்பட்ட அளவான 136 அடிக்கு மேல் தமிழ்நாடு உயர்த்தக் கூடாது எனக் கோரி ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு மாறாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை முன்பிருந்தபடியே முழு நீர் மட்ட அளவான 152 அடிக்கு உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு சில தனி நபர்கள் 1998 ஆம் ஆண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி மாற்றல் மனுக்கள், அதாவது Transfer Petitions உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழ்நாடு அரசும் ஒரு மாற்றல் மனுவை 1998 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், அதற்கு பிறகு மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சியில் இருந்த தி.மு.க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், 2001 ஆம் ஆண்டு நான் 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தான், முல்லைப் பெரியாறு குறித்த அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற 8.4.2002 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்ததன் அடிப்படையில் தான் 27.2.2006 அன்று தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது என்பதை கருணாநிதிக்கு நினைவூட்டவும், தெளிவுபடுத்தவும் விரும்புகிறேன். எனவே, முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல என்ற பழமொழி கருணாநிதிக்குத் தான் முழுமையாக பொருந்தும்.

27.2.2006 ஆம் நாளிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில், கேரள அரசு சட்டத் திருத்தங்களை கொண்டு வந்ததையடுத்து, முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் எனது தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்தது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் 7.5.2014 அன்று தமிழகத்தின் உரிமையினை நிலைநாட்டக் கூடிய, நியாயமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது. இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எனது தலைமையிலான அரசால் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த உடன், முல்லைப் பெரியாறு அணையைச் சார்ந்த பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அணையின் நீர்மட்டத்தினை உயர்த்துவதற்கான அனைத்து ஆரம்ப கட்டப் பணிகளை தொடங்கி தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அணையின் நீர்மட்டம் 142 அடி என அணை மற்றும் உபரி நீர் வழிந்தோடிகளில் குறியீடுகள் செய்தும்; மதகுகள் மற்றும் கதவணைகள் (Shutters) போன்றவற்றில் வண்ணம் பூசுதல்; கதவணைகளில் மசகு பூசுதல் (greasing); பேபி அணையில் (Baby Dam) நடைபாதையை சீர்செய்தல் போன்ற ஆரம்ப கட்ட பணிகளை 8.5.2014 முதற்கொண்டே ஆரம்பித்து தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எனது உத்தரவின்படி, 8.5.2014 அன்றே உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பார்வைக் குழுவில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக, காவேரி தொழில்நுட்பக் குழுவின் தலைவரான இரா.சுப்ரமணியனை நியமித்து ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பார்வைக் குழு உடனடியாக அதன் பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக, என்னுடைய உத்தரவின் பேரில், மத்திய நீர்வளக் குழுமம் ஓரு பிரதிநிதியை நியமிக்க வேண்டியும் மற்றும் கேரள அரசு அதன் பிரதிநிதியை நியமிக்க வேண்டியும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து 8.5.2014 அன்றே மத்திய நீர்ஆதார அமைச்சக செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் எனது தலைமையிலான அரசால் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தும் நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழுவின் மேற்பார்வையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், 'The Committee shall supervise the restoration of FRL in the Mullaiperiyar dam to the elevation of 142 ft.' என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழுவின் மேற்பார்வையில் 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும் என்பது ஆகும்.

எனவே தான், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் பிரதிநிதியை உடனடியாக நியமித்ததுடன், மத்திய நீர்வள குழுமத்தின் சார்பிலும், கேரள அரசின் சார்பிலும் பிரதிநிதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு மட்டும் தன்னிச்சையாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, இது நன்கு தெரிந்திருந்தும், மக்களை குழப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டு இருப்பது, தூங்குபவர்களை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்கிற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.

தமிழ்நாடு அரசினுடைய கடிதத்தின் மீது தற்போதுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், 16.5.2014-க்குப் பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அந்த ஆட்சியின் கொள்கைகளை நிர்ணயிக்கும் சக்தியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கும். அப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, உடனடியாக மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் அந்தக் குழுவால் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சனைகளில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டு, தற்போது தனக்குத் தானே மனக் கோட்டைக் கட்டிக் கொண்டு, மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கருணாநிதியின் கபட நாடகத்தை மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். தென் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையான முல்லைப் பெரியாறு பிரச்சனையை இனிமேலும் அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம் என கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by கிருஷ்ணா on Sat May 10, 2014 11:54 am

இவர்களிடையே சிக்கிய மக்களின் பாடுதான் திண்டாட்டம்.
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by ரா.ரா3275 on Sat May 10, 2014 9:54 pm

கொஞ்சம் பொறுங்க பாஸு...டெல்லில இருந்தும் பெங்களூருல இருந்தும் ஆப்பு வரட்டும்...அப்பா நடக்கும் பாருங்க ஒரே அய்யாப்போரும் அம்மாப்போரும்...ஆனா நமக்கு அது செம போருதான்...எப்பவும் போல...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Sun May 11, 2014 1:11 am


சாத்தான் வேதம் ஓதுவது போன்று நடப்பது யார்?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதிலடி!


சென்னை: முல்லைப் பெரியாறு பிரச்னையை அரசியலாக்கி, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல நடந்து கொள்வது யார் என்பதை, என்னுடைய அறிக்கையையும், ஜெயலலிதாவினுடைய அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்து கொள்வார்கள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் என்னிடம் கருத்து கேட்டபோது, 'முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது' என்று சுருக்கமாகப் பதில் அளித்தேன்.

ஆனால், ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி வெளியிட்ட அறிக்கையில் வேண்டுமென்றே வழக்கம்போல என்மீது அரசியல் ரீதியாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார்.

அதற்குப் பதிலளித்திடும் வகையிலேதான் கடந்த 8-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். தற்போது (10-5-2014) ஜெயலலிதா “முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம்” என்று எனக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஜெயலலிதா தன்னுடைய அறிக்கைகளில் அடிக்கடி “சாத்தான் வேதம் ஓதுகிறது” என்று குறிப்பிடுவது வழக்கம். முல்லைப் பெரியாறு பிரச்னையை அரசியலாக்கி, சாத்தான் வேதம் ஓதுவதைப் போல நடந்து கொள்வது யார் என்பதை, என்னுடைய அறிக்கையையும், ஜெயலலிதாவினுடைய அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்து கொள்வார்கள்.

ஜெயலலிதா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு மாற்றல் மனு ஒன்றை 1998ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சியில் இருந்த தி.மு.க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று ஜெயலலிதா முல்லைப் பெரியாறு பிரச்சினையை மீண்டும் அரசியலாக்கி ஆதாயம் தேட எத்தனித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் மாற்றல் மனு தாக்கல் செய்ததற்குப் பிறகு தி.மு.க அரசு தொடர்ந்து எப்போதும் போல முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.எனினும் எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்க நினைக்கும் ஜெயலலிதா, இனியாவது குறைந்தபட்சம் முல்லைப் பெரியாறு பிரச்சினையையாவது அரசியலாக்கி ஆதாயம் தேடாமல், அது விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை - பொதுமக்களின் குடிதண்ணீர்ப் பிரச்னை என்பதால், அரசு நிர்வாக ரீதியான தொடர் நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொள்வதே நல்லது". இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by கோ. செந்தில்குமார் on Sun May 11, 2014 3:34 pm

இந்த அறிக்கைப் போர் கேவலமான அரசியலின் முகத்தினை தோலுரித்துக் காட்டுகிறது...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Mon Jun 09, 2014 12:00 am

காவிரி விவகாரம்: ஜெயலலிதா இனிமேலாவது உணருவாரா? கருணாநிதி கேள்வி

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உடனடியாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் என்பதை இனிமேலாவது ஜெயலலிதா உணருவாரா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றையதினம் நாளேடுகளில் வந்துள்ள செய்திகளில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியிடம் பேசியதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் யோசனை எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும், ஆதாரம் இல்லாமல் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தற்போது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறியதோடு, இது குறித்து பிரதமர் மோடியை வரும் 10ஆம் தேதியன்று கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு ஒன்று நேரில் சந்தித்து முறையிடவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக மாநில அரசு இந்தப் பிரச்னைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்துக் கட்சிகளையும் கொண்ட குழுவினை பிரதமரைச் சந்திக்க அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது.

ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் இது போன்ற பிரச்னைகளுக்காக ஜனநாயக ரீதியாக அனைத்துக் கட்சிகளை அழைத்து யோசனை கேட்பதோ, பிரதமரிடம் முறையிடுவதோ என்பதெல்லாம் கிடையாது.

குறைந்த பட்சம் அவர்களுடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றாவது முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தாரா என்றால் அதுவும் கிடையாது.

குறுவைச் சாகுபடி இந்த ஆண்டும் தொடர்ந்து கேள்விக் குறியாகி விட்ட நிலையில் முதலமைச்சர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உடனடியாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளைக் கேட்டு நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் என்பதை இனிமேலாவது ஜெயலலிதா உணருவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Mon Jun 09, 2014 5:15 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடக்கூடாது என்று கருணாநிதி நினைக்கிறாரோ? - ஜெயலலிதா பதில்

காவிரி மேலாணமை வாரியம் அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி கருத்துகளைக் கேட்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

காவேரி நதிநீர் குறித்த வழக்கினை சத்தம் போடாமல் திரும்பப் பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி; முல்லைப் பெரியாறு பிரச்சனையில் அப்போதைய மத்திய அரசை கண்டிக்க அஞ்சிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத கருணாநிதி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக தேர்தலைக் காரணம் காட்டி முடக்கி வைத்த கருணாநிதி, இன்று திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி உடனடியாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்டது. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் கருணாநிதி. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அப்போதே தொடர்ந்து வலியுறுத்தினேன். 2011 ஆம் ஆண்டு ஆட்சியை விட்டுச் செல்லும் வரை காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட கருணாநிதி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு காரணம் கர்நாடக மாநிலத்தில் உள்ள தன்னுடைய குடும்ப வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது என்பது தான். தான் பிறந்த ஊரை வளமாக்க நடவடிக்கை எடுக்காமல், வளமான இலாகாக்களை போராடிப் பெற்று தன்னை வளப்படுத்திக் கொண்டார் கருணாநிதி. இப்படிப்பட்ட திரு. கருணாநிதி, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று கூறியிருப்பது, இது போன்ற வாரியம் அமைவதை விரும்பவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

2011 ஆம் ஆண்டு நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தான், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தேன். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்படுவதற்கு முன்பு, தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு பிரதமரைச் சந்தித்து பேசியதாக கருணாநிதி தெரிவித்தார்.

ஆனால், பேசியதன் மர்மம் குறித்து கருணாநிதி இன்றுவரை எதையும் வெளியிடவில்லை. இருப்பினும், உச்ச நீதிமன்றம் மூலம் எனது தலைமையிலான தமிழக அரசு போராடியதன் விளைவாக, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது.

இதனைத் தொடர்ந்து காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நான் கடிதமும் எழுதினேன்; உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தேன். ஆனால், அவர்கள் ஆட்சியில் இருந்த வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பொழுதெல்லாம் அது குறித்து வாய் திறக்காத கருணாநிதி; ஆட்சியை விட்டு வெளியே வந்தும், தன் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு தூது அனுப்பிய கருணாநிதி; காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என ஏன் மத்திய அரசிடம் முறையிடவில்லை? ஏன் வலியுறுத்தவில்லை? ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, தன்னலத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த கருணாநிதி, மக்கள் செல்வாக்கை இழந்தவுடன் திடீரென்று தமிழர்களின் நலனில் அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வது, மக்களை ஏமாற்றும் செயல். ஆனால், தமிழக மக்கள் இனியும் ஏமாற தயாராக இல்லை.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. அனைத்துக் கட்சிகளுமே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. எனவே, இது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்பது அர்த்தமற்ற செயல். மத்திய அமைச்சர் அனந்தகுமார் கர்நாடக மாநிலத்தினைச் சேர்ந்தவர் என்பதால், காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மாறுபட்ட கருத்தினை அவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், இது குறித்து தமிழகத்திற்கு எதிரான எந்தக் கருத்தையும், பிரதமரோ, அல்லது இந்தத் துறை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரோ தெரிவிக்கவில்லை.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்பட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமரிடம் நான் 3.6.2014 அன்று கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளேன். பிரதமரும், அவற்றை கனிவுடன் கேட்டு, ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

தமிழக அரசுடன் நல்லுறைவை பேணுவதையே பிரதமர் விரும்புகிறார். தமிழகத்திற்கு உதவும் எண்ணத்தில் அவர் இருக்கிறார். காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அம்சமாகும். இதைச் செயல்படுத்த மத்திய அரசிற்கு சிறிய கால அவகாசம் தேவைப்படும்.

இந்த விஷயத்தில் நடுநிலையுடன் பிரதமர் செயல்படுவார் என்ற நம்பிக்கை தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவே, மத்திய அரசுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது நியாயமானது தான். பிரதமரை நான் சந்தித்து இது குறித்து எடுத்துரைத்த பின், முழுமையாக ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் கருணாநிதி அதற்குள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்?

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதி; ஆட்சி அதிகாரம் பறிபோன பிறகு; நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் விரட்டி அடித்து மூலையில் உட்கார வைத்த பிறகு, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்குவது, தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்குச் சமம்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே கருத்தினைக் கொண்டுள்ளதால், அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடக் கூடாது என்ற கெடுமதியில் தான் இவ்வாறு சொல்கிறாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்ற வரிகளை கருணாநிதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by rksivam on Mon Jun 09, 2014 6:05 pm

நண்பர்களே,

ஹேமாவதி ஆணை கட்ட அனுமதி அளித்தவர் கலைஞர். முடிவு ஒன்றும் எட்டப்படாமல் காவிரி விவகாரத்தில் காவிரியை தமிழகத்துக்கு கொண்டுவந்ததாக சைதாபேட்டை யில் காவிரி சிலை வைத்து குடம் குடமாய் தண்ணீர் கொட்டி விழா எடுத்தவர் அன்னார். கோவை குண்டு வெடிப்பு அயோத்த்யாவுக்கு பதிலடி என்று முரசொலியில் முழங்கியவர். முல்லை பெரியாறு விவகாரத்தில் சொதப்பியவர் மக்கள் திலகம். இலங்கை பிரச்சினை முதற்கொண்டு பெரும்பாலான தொந்தரவுகள் அந்நாளின் அரசியல். அப்போது விதைக்கப்பட்ட விதை இபோதைய வினை அறுவடை.

என்றும் நண்பன்,

R K சிவம்.
avatar
rksivam
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 46

View user profile

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by Aathira on Mon Jun 09, 2014 6:08 pm

நல்ல அக்கப்போர்.

நண்பர் கே.கே சிவம் சொல்வது உண்மை. இது அறுவடை காலம்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by ரா.ரா3275 on Tue Jun 10, 2014 12:27 am

ஒன்னும் புரியல என்ன கொடுமை சார் இது 
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Sat Jun 28, 2014 2:34 am


பெரியாறு அணை கேரளாவுக்கு சொந்தமா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

சென்னை: தமிழகத்திற்கு சொந்தமானது என்று பட்டியலிடப்பட்ட முல்லைப் பெரியாறு உள்ளிட்ட 4 அணைகளும், கேரள மாநிலத்திற்குச் சொந்தமானது என தேசியப் பதிவேட்டில் மாற்றப்பட்டுள்ளதற்கு எதிராக, தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள பெரிய அணைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக் கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 4 அணைகளும் 2009 ஆம் ஆண்டு வரை தமிழகத்திற்குச் சொந்தமானது என தேசியப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்தாண்டு டிசம்பரில் நடைபெற்ற மத்திய நீர்வள ஆணையக் கூட்டத்தில், இதற்கு கேரளா எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த 4 அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

காவிரி பிரச்னையிலும், முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் தம்மால்தான் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட்டப்பட்டது என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கேரளாவின் பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைப்பதற்கு கேரளா எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி, இதற்கு தமிழக அரசின் பதில் என்ன எனக் கேட்டுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Sun Jun 29, 2014 1:29 am

கருணாநிதியின் "நதிநீர் பிரச்சினையில்..." அறிக்கைக்கு ஜெயலலிதா பதிலடி

கருணாநிதி வெளியிட்ட "நதிநீர் பிரச்சினையில் கேரளமும் தமிழகமும்" என்ற அறிக்கை அரைவேக்காட்டுத் தனமானது என்று முதல்வர் ஜெயலலிதா பதில் அறிக்கையில் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கை வருமாறு:

மக்களின் செல்வாக்கை முற்றிலும் இழந்து விரக்தியின் விளிம்பில் உள்ள தி.மு.க. தலைவர் திரு. மு. கருணாநிதி, “நதிநீர்ப் பிரச்சினையில் கேரளமும், தமிழகமும்” என்ற தலைப்பில் எதையும் புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில், முன்னுக்குப் பின் முரணாக “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழிக்கேற்ப ஓர் அரைவேக்காட்டு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அரசு அதிகாரிகளின் உதவி இல்லாமல் தானாகவே அறிக்கை எழுதினால் இப்படித்தான் இருக்கும் என்பதை திரு.கருணாநிதி ஏற்கெனவே பல முறை வெளிபடுத்தி இருக்கிறார்.

திரு. கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கேரள சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி, “முல்லைப் பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது” என்று பதில் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த உண்மை நிலையை நான் மக்களுக்கு எடுத்துரைக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாட்டின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. பின் குறிப்பில், “இந்த அணைகள் கேரள மாநிலத்தில் உள்ளன” என்றும், “தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவேட்டில் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், 2012 ஆம் ஆண்டு விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய புதுப்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், அணைகள் அமைந்துள்ள இடத்தின் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை விவரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. எனவே தான், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் கேரள மாநில அணைகள் பட்டியலின் கீழ் காட்டப்பட்டு உள்ளன. அதே சமயத்தில், பின் குறிப்பில் “இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன” என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெரிய அணைகள் குறித்த இந்தப் பதிவேட்டில், புவியியல் அமைப்புப்படி அணை அமைந்துள்ள இடத்தை தெரிவிக்கும் நோக்கத்தில், அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை விவரங்களை உள்ளடக்கிய சில மாற்றங்களை தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தான் 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில் ஏதேனும் தவறு உள்ளதாக கருதினால், திரு.கருணாநிதி ஏன் அப்போதே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை? அன்று ஏன் மவுனமாக இருந்தார்? இதன் அடிப்படையில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு ஆகிய அணைகள் கேரளாவிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், மேற்படி அணைகள் தமிழ்நாட்டினால் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில், தமிழ்நாடு அரசின் வற்புறுத்தலின் பேரில், தமிழ்நாட்டிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலில், 2கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று பின் குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், கேரள மாநிலத்தின் கீழ் வரும் அணைகள் பட்டியலிலும், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று மேற்படி அணைகளுக்கு எதிராக தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. 27.12.2013 அன்று நடைபெற்ற 32-வது அணை பாதுகாப்பு தேசிய குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் கீழ் வரும் அணைகள் பட்டியலில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இந்த அணைகள் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என தமிழ்நாட்டின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை அணைப் பாதுகாப்பு தேசியக் குழு ஏற்றுக் கொண்டது. இது போன்ற கோரிக்கைகள் பிற மாநிலங்களிடமிருந்து வரப் பெற்று, தேசியப் பதிவேடு புதுப்பிக்கப்படும் போது, தமிழ்நாட்டின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட கோரிக்கையின் வாசகங்கள் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் அணைப் பாதுகாப்பு தேசியக் குழுக் கூட்டக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் சார்பில், மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைவருக்கு விரிவான கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம், மத்திய நீர்வளக் குழுமத்தின் அணைப் பாதுகாப்பு கண்காணிப்புக் குழு, தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ள குறிப்பில், பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் உள்ள அணைகளின் பட்டியல்கள், அணைகளின் இருப்பிடம் எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநிலத்தின் கீழ் அந்த அணைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும்; இந்தத் தகவல்களின் அடிப்படையில், யாரும் எந்த உரிமையையும் கோர முடியாது என்றும்; இந்தப் பதிவேட்டில் ஏதாவது தவறு இருப்பது சுட்டிக் காட்டப்பட்டால், அவை திருத்தப்படும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, முல்லைப் பெரியாறு குறித்த 7.5.2014 நாளைய உச்ச நீதிமன்ற தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம் தேக்கடி மாவட்டத்தில் இருக்கிறது என்றும், இந்த அணை தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்றும், தமிழ்நாட்டினால் பராமரிக்கப்படுகிறது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேற்காணும் விளக்கங்களிலிருந்து, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு அணைகள் புவியியல் அமைப்புபடி கேரளாவில் இருந்த போதிலும், அவை தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்பதும்; தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. எனவே, திரு. கருணாநிதி கூறுவது போல், தமிழ்நாட்டின் உரிமை எதுவும் பறிபோகவில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆனால், இவற்றை எல்லாம் ஆய்ந்து பார்க்காமல், “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்ற பழமொழிக்கேற்ப நுனிப்புல் மேய்ந்திருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. திரு. கருணாநிதியின் இந்தச் செயலை நினைக்கும் போது, “ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்” என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

திரு. கருணாநிதியின் இந்த அறிக்கை கேரளாவிற்கு பக்கவாத்தியம் வாசிப்பது போல் இருப்பது மட்டுல்லாமல், உச்ச நீதிமன்றத்தையே அவமதிப்பது போல் உள்ளதால், இவரது அறிக்கையே உச்சநீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகக் கூடியது. “எண்ணித் துணிக கருமம்” என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப செயல்படுவது நல்லது, இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என்பதை திரு. கருணாநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

அடுத்தபடியாக, “காவேரி நதிநீர்ப் பிரச்சனை தீர்ந்துவிட்டதா? மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டு விட்டதா?” என்று வினவியிருக்கிறார் திரு. கருணாநிதி. காவேரி மேலாண்மை வாரியத்தைப் பொறுத்தவரையில், மாண்புமிகு பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து நான் வலியுறுத்தி இருக்கிறேன். இது தொடர்பாக, சில சர்ச்சைகளை மத்திய அமைச்சர்கள் எழுப்பியவுடன், இது குறித்து 31 பக்கங்கள் கொண்ட விளக்கமான கடிதத்தினை மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு எழுதி இருக்கிறேன். தற்போதைய மத்திய அரசு நிச்சயம் காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனது தலைமையிலான அரசின் பகீரத முயற்சியின் காரணமாகத் தான், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது என்பதை திரு. கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கச்சத்தீவு, காவேரி நதிநீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, இலங்கைத் தமிழர் பிரச்சனை என அனைத்திலும் முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்த திரு. கருணாநிதிக்கு தமிழ்நாட்டின் உரிமையைப் பற்றி பேசவே எந்த அருகதையும் இல்லை.

“முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்பட்டு விட்டதா?” என்று கேட்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. திரு. கருணாநிதியின் கேள்வியிலிருந்தே, இந்தப் பிரச்சனையில் எனக்கும், எனது தலைமையிலான அரசுக்கும் நல்ல பெயர் கிடைத்துவிட்டதே என்ற திரு. கருணாநிதியின் ஆதங்கத்தையும், ஆற்றாமையையும் தெரிந்து கொள்ளலாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில், ஒரு மேற்பார்வைக் குழுவை அமைக்கவும், அந்தக் குழுவில் மத்திய அரசின் சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்டவுடன், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவது உறுதி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக, கேரள சட்டசபையில் அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் “நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியம் இல்லை” என்று பேசியதை சுட்டிக்காட்டி, இதற்கு தமிழ்நாடு அரசின் பதில் என்ன என்று கேட்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, “நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை” என்று காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி கூறியதற்கு பதில் அளிக்க வக்கில்லாமல்; நதிநீர் இணைப்புத் திட்டத்தையே முடக்க நினைத்த காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து; சுயநலத்திற்காக நதிநீர் இணைப்புப் பிரச்சனையில் வாய்மூடி மவுனம் சாதித்த திரு. கருணாநிதி, இப்போது வாய் திறப்பது விந்தையாக இருக்கிறது. நதிநீர் இணைப்புத் திட்டத்தினை நான் தொடர்ந்து வற்புறுத்தி கொண்டு வருகிறேன். நதிநீர் இணைப்பு குறித்த பொதுநல வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தீர்ப்பினை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த ஒரு சிறப்புக் குழுவினை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி ஓர் ஆண்டு கழித்து சிறப்புக் குழுவினை அமைத்த தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, அந்தக் குழுவின் கூட்டத்தை ஒரு முறை கூட்டக் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. மத்தியிலே ஆட்சியில் இருந்த போது மவுனம் சாதித்த திரு. கருணாநிதி; ஆட்சியை விட்டு வெளியே வந்த பிறகு கூட, தன் மகளுக்காக மத்திய அரசிடம் மன்றாடிய திரு. கருணாநிதி; ஏன் இது குறித்து வாய் திறக்கவில்லை? மகளா, மாநிலமா என்றால் மகள் தான் என்பது திரு. கருணாநிதியின் நிலைப்பாடாக அப்போது இருந்தது. இப்போது அரசியல் நடத்த வேண்டும் என்பதற்காக கேரள அமைச்சர் கூறியதையெல்லாம் மேற்கோள் காட்டி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

“வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்று கங்கை-காவிரி இணைப்புக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் வித்திட்ட மகாகவி 4பாரதியாரின் கனவினை நனவாக்கும் வகையில், அதன் முதற்கட்டமாக 1,862 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அத்திக்கடவு-அவிநாசி வெள்ளப் பெருக்கு கால்வாய் திட்டம்; 500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பெண்ணையாறு (சாத்தனூர் அணை) – பாலாறு இணைப்புத் திட்டம் மற்றும் பெண்ணையாறு-நெடுங்கால் அணைக்கட்டு-பாலாறு இணைப்புத் திட்டம்; 5,166 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவேரி ஆற்றின் வெள்ள நீரை வறட்சி பாதித்த பகுதிகளுக்கு திருப்பிவிடும் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும், 11,421 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவேரி படுகை கால்வாய் முறைகளை நவீனப்படுத்தும் திட்டம் ஆகியவற்றை முதற்கட்டமாக நிறைவேற்ற நிதி ஒதுக்குமாறும்; மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணார், பாலாறு, காவேரி மற்றும் குண்டாறு ஆகிய நதிகளை இணைக்கவும்; மேற்கு நோக்கி பாயும் பம்பா மற்றும் அச்சன்கோயில் நதிகளின் நீரை தமிழ்நாட்டில் உள்ள வைப்பாறுக்கு திருப்பிவிடவும் ஆவன செய்யுமாறு, மாண்புமிகு பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து 3.6.2014 அன்று நான் வலியுறுத்தியுள்ளேன். என்னைப் பொறுத்தவரையில், தமிழர்களின் நலன் தான் முக்கியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொத்தத்தில், திரு. கருணாநிதியின் இந்த அறிக்கை ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் முயற்சி போல் அமைந்துள்ளது. தமிழர்களின் நலன் கருதி, இது போன்ற செயலில் இனி ஈடுபட வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதியை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். திரு கருணாநிதியின் அரை வேக்காட்டு அறிக்கையை வெளியிட்ட பத்திரிகைகள் மீது கோபித்துக் கொள்ளாமல், இந்த நல்ல விளக்கத்தைக் கூற எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Tue Jul 08, 2014 4:14 am

அரசியல் அரைவேக்காடு யார்?- நதிநீர்ப் பிரச்சினையில் கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

நதிநீர்ப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள முதல்வர் ஜெயலலிதா, முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அரசியல் ஆதாயம் அடையலாம் என்று எதிர்பார்த்து "நதிநீர்ப் பிரச்சினையில் கேரளமும், தமிழகமும்" என்ற தலைப்பில் ஒரு வெத்துவேட்டு அறிக்கையை வெளியிட்டு, வாங்கிக் கட்டிக் கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, "அரைவேக்காடு யார்?" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

"வாய்மூடி மவுனியாக இருந்து முட்டாள் என்று பிறர் நினைப்பது, வாயைத் திறந்து அனைத்து ஐயப்பாடுகளையும் நீக்கி, தான் ஒரு முட்டாள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவதைவிட மேலானது" என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. இந்த இலக்கணத்திற்கு ஏற்ப மீண்டும் வாயைத் திறந்து, தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் கருணாநிதி.

நதிநீர்ப் பிரச்சனை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்த நான், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு ஆகிய அணைகள் குறித்து 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது?, 2012 ஆம் ஆண்டு வரையிலான விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய புதுப்பிக்கப்பட்ட தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது?, 2013 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது? என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டியதோடு, மேற்படி நான்கு அணைகளும் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற தமிழ்நாட்டின் உரிமை, அணைப் பாதுகாப்பு தேசியக் குழுக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் சுட்டிக் காட்டினேன்.

இது மட்டுமல்லாமல், முல்லை பெரியாறு அணை குறித்து 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் இரண்டாவது பத்தியில், முல்லை பெரியாறு அணை கேரள மாநிலம், தேக்கடி மாவட்டத்தில் இருந்தாலும், இந்த அணை தமிழ்நாட்டிற்குச் சொந்தம் என்றும், தமிழ்நாட்டினால் பராமரிக்கப்படுகிறது என்றும் சுட்டிக் காட்டியிருப்பதையும் விளக்கமாக எடுத்துரைத்து இருந்தேன்.

அதே சமயத்தில், மேற்படி அணைகள் கேரளாவுக்குச் சொந்தமானவை என்று எந்தப் பதிவேட்டிலும் சுட்டிக் காட்டப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் ஆதாயம் தேடும் வகையில், என்னுடைய பதில் அறிக்கையில் உள்ள உண்மை விவரங்களையும் படித்து புரிந்து கொள்ளாமல், தேசியப் பதிவேடுகளையும் படித்துப் பார்க்காமல், யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து கருணாநிதி லாவணி பாடி ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கையின் மூலம் தான் ஒரு குழப்பவாதி என்பதை படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்.

2012 ஆம் ஆண்டு விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகை குறித்த விவரங்கள் தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் சேர்க்கப்பட்டதால் தான் முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய அணைகள் கேரள மாநிலத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன என்று நான் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டி, "2012 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா தானே பொறுப்பு வகித்தார்? தேசியப் பதிவேட்டில் இந்த நான்கு அணைகளும் 2012 ஆம் ஆண்டு கேரள மாநில அணைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஜெயலலிதா குரல் கொடுத்திருக்க வேண்டாமா? இது குறித்து மத்திய அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டாமா?" என்று பதில் அளித்து இருக்கிறார் கருணாநிதி.

நான் முதலமைச்சராக இருந்ததால் தான், நான் குரல் கொடுத்ததால் தான், நான் வலியுறுத்தியதால் தான் கேரள மாநிலத்தின் கீழ் வரும் முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய அணைகளின் பெயருக்கு அருகிலேயே, இந்த அணைகள் தமிழ்நாட்டினால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்ற வாசகமும்; தமிழ்நாட்டிற்கு கீழே உள்ள அணைகளின் பட்டியலின் பின் குறிப்பில், கேரளாவில் உள்ள மேற்படி அணைகள் தமிழ்நாடு பொதுப் பணித் துறையினரால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்ற வாசகமும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

இது மட்டுமல்லாமல், மேற்படி அணைகள் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற கோரிக்கையும் அணைப் பாதுகாப்பு தேசியக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றால், தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மூலம், தி.மு.க. தலைவர் கருணாநிதியால் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்னால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி தன்னுடைய அறிக்கையின் மூலம், இந்தப் பிரச்சனையில் மத்திய அரசை தான் தட்டிக் கேட்காததை ஒப்புக் கொண்டிருக்கிறார். துரோகத்தை மட்டுமே தன்னால் செய்ய முடியும் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. எனவே, கருணாநிதியின் இந்த அறிக்கை யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல் அமைந்துள்ளது.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை சத்தம் போடாமல் திரும்பப் பெற்ற கருணாநிதி; கச்சத்தீவு மத்திய அரசினால் இலங்கைக்கு தாரைவார்க்கப்படப் போகிறது என்பதை முன் கூட்டியே தெரிந்தும், அதைத் தடுக்காமல் வாய்மூடி மவுனியாக இருந்த கருணாநிதி; ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, முல்லை பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசையோ, கேரள அரசையோ கண்டிக்கக் கூட திராணியில்லாமல் மூலையில் முடங்கிக் கிடந்த கருணாநிதி; ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்த கருணாநிதி; தமிழகத்தின் உரிமைகளை பாதுகாத்து வரும் என்னைப் பற்றி குறை கூறி பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

"நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை" என்று ராகுல் காந்தி கூறிய போது, அதைத் தட்டிக் கேட்காமல் தொடர்ந்து ஆட்சியிலிருந்தது குறித்தோ; நதிநீர் இணைப்புத் திட்டத்தினை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் சிறப்புக் குழுவினை அமைக்க வேண்டும் என்று கூறி, அதன் அடிப்படையில் ஓர் ஆண்டு கழித்து சிறப்புக் குழுவினை அமைத்தாலும், அந்தக் குழுவின் கூட்டத்தை ஒரு முறை கூட கூட்ட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நான் எழுப்பிய கேள்வி குறித்தோ, பதில் அளிக்க வக்கில்லாத கருணாநிதி; அந்த வழக்கை தொடுத்ததே கழக வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் தான் என்று கூறியிருப்பது தான் "பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கு விலை சொல்வது" என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்த கே.எஸ். இராதாகிருஷ்ணன், பல்வேறு காலங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்தவர். மூன்றாவது முறையாக தி.மு.க.வில் இணைந்து தற்போது பணியாற்றி வருகிறார். இவர் தனிப்பட்ட முறையில் தாக்கல் செய்த வழக்கு, தி.மு.க.வினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? இதை வைத்து நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க. போராடியதாக உரிமை கொண்டாட கருணாநிதி முயல்வது சிறுபிள்ளைத்தனமானது.

1994 ஆம் ஆண்டே யமுனை நதி பற்றி ஒரு நாளிதழில் வெளிவந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஒரு வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனுடன், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஓர் இடைக்கால மனுவையும், 2002 ஆம் ஆண்டு தனியே ஒரு ரிட் மனுவாக உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. இராதாகிருஷ்ணனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு, கடந்த 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு ராதாகிருஷ்ணனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மூலம் மட்டுமே கிடைத்தது என்று கருத முடியாது.

கருணாநிதியால் குறிப்பிடப்பட்ட இதே ராதாகிருஷ்ணன் "கங்கையும் - காவிரியும் குமரியைத் தொடுக" என்ற தலைப்பில் ஓர் கட்டுரையை 2007 ஆம் ஆண்டு எழுதி இருக்கிறார். அது அவருடைய இணைய தளத்திலேயும் உள்ளது. அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சிலவற்றை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

"கடந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நதிநீர் இணைப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அது குறித்து ஆராய சுரேஷ் பிரபு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு தன் அறிக்கையை கடந்த 2005 டிசம்பரில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வந்து அக்குழுவின் காலத்தை நீட்டிக்காமல் விட்டதால் நதிநீர் இணைப்பு குறித்து ஐந்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் வீணடிக்கப்பட்டன. சுரேஷ் பிரபு குழு இந்திய நதி நீர்களை இணைக்க 1,200 கோடி ரூபாயிலிருந்து 1,500 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிட்டது. இன்றைக்குள்ள மன்மோகன் சிங் அரசு சற்றும் நாட்டின் நலனைச் சிந்திக்காமல் இந்தத் திட்டத்துக்கு ‘அம்போ’ என்று மங்களம் பாடிவிட்டது. இது எல்லாம் தெரியாமல் தமிழக முதலமைச்சர் கருணாநிதி டெல்லியைப் பார்த்து நதிநீர் இணைக்க வேண்டும் என்று சொல்கின்றார். இதில் விஷய ஞானம் தெளிவில்லாமல் பேசுவது மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும் ..." என்று கூறியிருக்கிறார்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றினார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நதிநீர்ப் பிரச்சனை மட்டுமல்ல, அனைத்துப் பிரச்சனைகளிலும் மக்களை ஏமாற்றுவது தான் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வேலை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, "மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகள் உட்பட அனைத்து நதிகளும் தேசிய நதிகள் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்றும், நதி நீரை முறையாக பயன்படுத்தும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்து 26.4.1982 அன்றே அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அடுத்தபடியாக, "முதலில் தீபகற்ப நதிகளையாவது இணைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை அவசர அவசியம் கருதி, உடனடியாக நிறைவேற்றும் பணி மத்திய அரசால் தொடங்கப் பெற இந்த அரசு தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொள்ளும்" என்று 2007-2008 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டு உள்ளார். 2004 முதல் மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. மாநிலத்தில் 2006 முதல் 2011 வரை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. இப்படி இருக்கும் போது, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற என்ன முயற்சி எடுத்தார் கருணாநிதி? ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை கருணாநிதி. நதிநீர் இணைப்பு குறித்து அறிந்தவர்கள் இதையெல்லாம் மறக்கவில்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கடைசியாக, தன்னுடைய ஆட்சிக் காலத்தில், "...திருச்சிக்கு அருகே மாயனூரில் உபரி நீரை வறண்ட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ், காவிரியின் குறுக்கே கட்டளையில் கதவணை கட்டும் பணிகள் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்காக 369 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. பெண்ணை ஆற்றுடன் செய்யாற்றை இணைக்கும் திட்டத்திற்கு 174 கோடி ரூபாய்க்கான கருத்துரு மத்திய அரசின் நீர்க் குழுமத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது" என்று தனது அறிக்கையில் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இது குறித்த உண்மை நிலையை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

மாயனூர் கதவணையைப் பொறுத்த வரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 189 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், 96 கோடி ரூபாய் தான் செலவிடப்பட்டது. அடைப்பான்கள் தயாரித்தல், அதை நிறுவுவதற்கான பகுதியினை அமைத்தல், அடைப்பான் நிறுவுதல், சிமெண்ட் கான்கிரீட் பிளாக்குகள் அமைக்கும் பணிகள் என பல்வேறு பணிகள் தொடங்கப்படவே இல்லை. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்தத் திட்டத்திற்கு 234 கோடி ரூபாய் அளவுக்கு திருத்திய ஒப்புதல் வழங்கி, கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 135 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, 25.6.2014 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது.

தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டத்தை எடுத்துக் கொண்டால், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்ததாக கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். உண்மை நிலை என்னவென்றால், இந்தத் திட்டத்தை நான்கு நிலைகளில் செயலாக்க 2008 ஆம் ஆண்டு ஆணை

வெளியிடப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான ஆணையே 2010 ஆம் ஆண்டு தான் வெளியிடப்பட்டது. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தான், முதல் இரண்டு நிலைகளுக்கான 190 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது புதிய நில எடுப்புச் சட்டத்தினை மத்திய அரசு இயற்றியுள்ளதால், இந்தச் சட்டத்தின்படி மூன்றாம் மட்டும் நான்காம் நிலைகளுக்கு நிலங்களை கையகப்படுத்த ஆணை வெளியிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் இரண்டு நிலைகளுக்கு 57.06 கிலோ மீட்டர் நீளத்திற்கான கால்வாய் அமைக்கப்பட வேண்டும். 22.84 கிலோ மீட்டர் நீளத்திற்கான கால்வாய் மட்டுமே முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் அமைக்கப்பட்டது. மீதமுள்ள 34.22 கிலோ மீட்டர் நீளத்திற்கான கால்வாய் அமைப்பதில் எனது தலைமையிலான அரசால் 27.82 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி, நிலம் கையகப்படுத்தும் பிரச்சனையால் நிலுவையில் உள்ளது. இதே போன்று, முதல் இரண்டு நிலைகளுக்கு 168 குறுக்கு கட்டுமான பணிகள் அமைக்கப்பட வேண்டும்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெறும் 23 குறுக்குக் கட்டுமானப் பணிகளே முடிக்கப்பட்டன. எனது தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் 100 கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 45 குறுக்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு அறிக்கையை அங்கீகரிக்கப்பட்ட கலந்தறிவு நிறுவனத்தின் மூலம் ஆய்வு செய்யப்படவில்லை. இந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கடைசியாக பெண்ணையாற்றுடன் செய்யாற்றினை இணைக்கும் திட்டம் குறித்து கருணாநிதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி பெறும் கோரிக்கை 2008 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும், 2011 ஆம் ஆண்டு ஆட்சியை விட்டுச் செல்லும் வரை மத்திய அரசிடமிருந்து இதற்கான நிதி உதவியை கருணாநிதியால் பெற முடியவில்லை. புதிய நில எடுப்புச் சட்டத்தின்படி நிலத்தை கையகப்படுத்த கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியிருப்பதால், இத்திட்ட மதிப்பீடு 360 கோடி ரூபாயாக திருத்தி அமைக்கப்பட்டு, விரைவுபடுத்தப்பட்ட பாசனத் திட்டத்தின்கீழ் நிதி உதவி கோரி மத்திய நீர் வளக் குழுமத்திற்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது.

என்னுடைய விளக்கங்களிலிருந்து, கருணாநிதியால் குறிப்பிடப்பட்ட மேற்காணும் மூன்று திட்டங்களுக்கு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, என்னுடைய ஆட்சிக் காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக்கப்பட்டு உள்ளது.

எனது தலைமையிலான அதிமுக அரசுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமையின் வெளிப்பாடாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற தவறான அறிக்கைகளை கருணாநிதி வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். 1.7.2014 அன்று "கேள்வியும் நானே – பதிலும் நானே" என்ற பாணியில் வெளியிடப்பட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில், "அ.தி.மு.க. அரசு சார்பில் பத்து இடங்களில் ‘அம்மா’ மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்திருக்கிறாரே" என்று தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, "அடுத்த அறிவிப்பினை நீங்கள் பார்க்கவில்லையா? தமிழகத்தில் 100 இடங்களில் "அம்மா வெற்றிலை-பாக்கு கடை" களைத் திறந்து வைத்து, அந்த வியாபாரத்தை அமைச்சர்களே முன் நின்று நடத்தப் போகிறார்களாம்" என்று வயிற்றெரிச்சலுடன் தனக்குத் தானே பதில் அளித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இது போன்று தனக்குத் தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, பதில்களை அளிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தமிழக மக்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

"ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை - ஊக்கா ரறிவுடையார்" என்றார் வள்ளுவர். அதாவது, "பெரிய ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்து, இருக்கின்றதையும் இழந்துவிடக் கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்" என்பது இதன் பொருள். அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைத்து, தன்னுடைய அரசியல் அறியாமையை தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி. இதிலிருந்து "அரசியல் அரைவேக்காடு யார்?" என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by T.N.Balasubramanian on Tue Jul 08, 2014 8:17 am

இருவரின் அறிக்கை போர்களை மையபடுத்தி , ஆராய்ச்சிகள் செய்து முனைவர் பட்டம் வாங்கலாம் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22168
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by மாணிக்கம் நடேசன் on Tue Jul 08, 2014 8:53 am

இந்த ரெண்டு பேரும் சேர்ந்து, பொது மக்களை வைக்கோல் போரா ஆகுகிட்டாங்களே.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by சிவா on Tue Jul 22, 2014 2:07 am

மின்வெட்டைப் பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை இல்லை: ஜெயலலிதா

தமிழக சட்டசபையில் இன்று எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-

மின்வெட்டைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க.-விற்கு அருகதையே இல்லை. ஏனென்றால், மின்வெட்டு என்பதை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான். நான் இப்போது மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய முதல் ஆட்சிக் காலத்தில், 1991 முதல் 1996 வரை மின்வெட்டு என்ற பேச்சுக்கே தமிழ்நாட்டில் இடமில்லை. அப்போது மின் உற்பத்தியில் உபரி மாநிலமாக, மிகை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்தது.

அதைப்போலவே, எனது இரண்டாவது ஆட்சிக் காலம்; 2001 முதல் 2006 வரை, தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்போதும் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக விளங்கியது. அதன்பின்னர், தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாடு மின் குறை மாநிலமாக ஆக்கப்பட்டு, தமிழ்நாடு இருளில் தள்ளப்பட்டது. மீண்டும் 2011-ல் மூன்றாவது முறையாக நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, தி.மு.க. விட்டுவிட்டுச் சென்ற கடன், சுமை, தி.மு.க. விட்டுவிட்டுச் சென்ற மின்வெட்டு என்ற நிலைமை, இவற்றோடு பகீரத முயற்சி செய்து, போராடி இப்பொழுதுதான் நிலைமையைச் சரிசெய்திருக்கிறோம்.

விவசாயிகளுக்கு மின்வெட்டு என்றார்கள்; இரண்டு மணி நேரம்தான் மின்சாரம் தரப்படுகிறது என்றார்கள்; அப்படியில்லை. விவசாயிகளுக்கு 12 மணி நேரம் தடையில்லா மின்சாரம், மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உறுப்பினர் பெரியசாமி பேசும்போது, இலவச ஒரு விளக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி என்று தெரிவித்தார். இது உண்மைக்கு மாறான தகவல். ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு என்ற திட்டத்தை 1979 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். 1979 ஆம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தியபோது, மாதம் 2 ரூபாய் 50 காசு எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர், இந்தக் கட்டணம் நீக்கப்பட்டு விட்டது. எனவே, செய்யாத ஒரு செயலுக்கு உரிமை கொண்டாட வேண்டாமென்று தி.மு.க. உறுப்பினரை கேட்டுக்கொள்கிறேன்.

விலைவாசியைப் பற்றியும் தி.மு.க. உறுப்பினர் பேசினார். அதிக கட்டணம் கொடுத்து இந்த ஆட்சியில் மின்சாரத்தை வெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம் என்றும் குற்றஞ்சாட்டினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஒட்டுமொத்த விலைவாசி குறைவாக இருந்தபோது, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், இப்போது எனது ஆட்சிக் காலத்தில், விலைவாசி மூன்று மடங்கு பெருகியிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில், இந்தச் சூழ்நிலையில், குறைந்த விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by பாலாஜி on Tue Jul 22, 2014 12:52 pm

தெரிஞ்சி , தெரியாம இந்த திரிக்குள் வந்துவிட்டேன்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum