ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

View previous topic View next topic Go down

விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:01 am



16-வது மக்களவைத் தேர்தலில் தமிழகம் நாளைய தினம் தனது ஜனநாயக கடமையை ஆற்ற இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்களின் கள நிலவரத்தைத் தெரிந்துகொள்வோம்:

பொன்.ராதாகிருஷ்ணன்:

கன்னியாகுமரி தொகுதியில் இவருக்கும் காங்கிரஸ் வேட் பாளர் வசந்தகுமாருக்கும் பலமான போட்டி. பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் எனப் பிரகடனம் செய்யப் படுவதாலும், மோடி அலை வீசுவதாலும் நம்பிக்கையுடன் முன்னணியில் நிற்கிறார் பொன்னார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:02 am

வைகோ:

திமுக-வின் தலித் வாக்கு வாங்கியை கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிரிப்பது போல் அதிமுக-வின் முக்குலத்தோர் வாக்கு வங்கியை காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பங்குபோடலாம். மக்கள் காங்கிரஸை ஒதுக்கித் தள்ளினால், விருதுநகரில் வைகோ தனது வெற்றிக்காக சிரமப்பட வேண்டும். இவருக்கு பாதகமான ஒவ்வோர் அம்சமும் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு சாதகமாக அமையும்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:02 am

டி.ஆர்.பாலு:

சொந்த மண் கைகொடுக்கும் என்கிற தைரியத்தில் நின்றாலும், இவரை எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் பரசுராமனின் வெற்றியில் வைத்திலிங்கத்தின் அமைச்சர் பதவியின் ஆயுள் நீடிப்பும் உள்ளதால், அதிமுக-வினர் பம்பரமாகச் சுழல் கிறார்கள்.

ஆனால், டி.ஆர்.பாலு வெற்றி பெற் றால் தொகுதிக்கு நல்ல காரியம் நடக்கலாம் என நடுநிலையாளர்கள் சிந்திக்கிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:03 am

எல்.கே.சுதீஷ்:

இவருக்கும், திமுக-வின் உமாராணி, அதிமுக-வின் பன்னீர் செல்வத்துக்கும் கடும் போட்டி. உமாராணி சிறுபான்மையினர் வாக்கு வங்கியை வைத்தும் பன்னீர்செல்வம் அதிமுக வாக்கு வங்கியை வைத்தும் மிரட்டினாலும் பாமக, தேமுதிக கூட்டணி பலத்தை வைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறார் சுதீஷ்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:03 am

அன்புமணி ராமதாஸ்:

தருமபுரி தொகுதி யின் வெற்றிவாய்ப்பை நிர்ணயிப்பது வன்னியர் ஓட்டுகள் என்பது இவருக்கு ப்ளஸ் பாயின்ட். மோடி அலை, தேமுதிக, கொங்கு கட்சிகளின் கணிசமான வாக்கு வங்கியைக் கணக்குப் போட்டு தெம்பாகவே களத்தில் நிற்கிறார் அன்புமணி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:04 am

திருமாவளவன்:

திமுக தெம்பில் மீண்டும் களம் இறங்கி இருக்கிற இவரை, அதிமுக-வும் பாமக-வும் எளிதில் கரைசேரவிட மாட் டார்கள் போலிருக்கிறது. கடந்த முறை திருமாவுக்கு ஆதரவாக விழுந்த ஓட்டுகளில் பெரும்பகுதி பாமக-வுக்கு பாயலாம். அப்படி நடந்தால் அதிமுக-வுக்கு சாதகமான சூழல் உருவாகலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:04 am

மணிசங்கர் ஐயர்:

ஒட்டுமொத்த காங்கி ரஸ் எதிர்ப்பு அலை இவரை இரண்டாம் இடத்தில் கூட நிற்க விடாது போலிருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியும் அதிமுக-வும் இங்கு நேரடிப் போட்டியில் உள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:04 am

கார்த்தி சிதம்பரம்:

சிவகங்கையில் மற்ற கட்சிகளே வியக்கும் அளவுக்கு தேர்தல் பணியை காங்கிரஸ் கட்சி செய்துள்ளது. ஆனாலும் கூட்டணி தோழர்கள் இல்லாததால் இங்கேயும் காங்கிரஸுக்கு தள்ளாட்டம்தான். தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்ற காங் கிரஸ் வேட்பாளர் பட்டியலில் கார்த்தியும் இடம்பிடிக்கலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:05 am

ஆ.ராசா:

2ஜி ஊழலை மாற்றுக் கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும் ஆ.ராசா போட்டியிடும் நீலகிரி தொகுதியில் அதன் தாக்கம் பெரிதாகத் தெரியவில்லை. பாஜக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடியானதும் முகம் தெரியாத வேட்பாளரை அதிமுக நிறுத் தியதும், ராசாவுக்கு ப்ளஸ் ஆகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:05 am

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:

திருப்பூரில் பெரும்பாலானவர்கள் மாற்றத்தை விரும்பி, மோடி என்ற மந்திரச் சொல்லுக்கு கட்டுப் பட்டுக் கிடக்கிறார்கள். எனவே, இங்கு தேமுதிக-வுக்கும் அதிமுக-வுக்கும்தான் நிஜ போட்டி என்பதால் இளங்கோவ னுக்கு எத்தனையாவது இடம் என்று கணிக்கவே முடியவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:06 am

பாரிவேந்தர்:

பெரம்பலூரில் சுமார் 80 ஆயிரம் பார்க்கவ குல ஓட்டுகள், தேமுதிக ஓட்டுகள், மோடி அலை இவைகளை நம்பி களத்தில் நிற்கிறார். திமுக வேட் பாளர் சீமானூர் பிரபுவும் அதிமுக வேட் பாளர் மருதைராஜாவும் முத்து ராஜா இனத் தவர்களாக இருப்பதால் அந்த வாக்குகள் இரண்டாக பிரிகின்றன. இதுவும் ஐஜேகே தரப்பின் தாராள பணப் புழக்கமும் வேந்தருக்கு சாதகமாக அமையலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:06 am

சி.பி.ராதாகிருஷ்ணன்:

மின்வெட்டு பிரச்சினை அதிமுக; திமுக கட்சிகள் மீது கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கின்றன. கோவை வாக்காளர்களிடம் தலைக் காட்டும் பாஜக பற்றுதலும் ராதாகிருஷ்ணனுக்கு சாதகமாக இருந்தாலும் அவரை மிக அருகில் நெருங்கிக் கொண்டிருக்கிறார் அதிமுக வேட்பாளர் ஏ.பி.நாகராஜன். இந்த அலையில், இங்கு போட்டியிடும் இன்னொரு வி.ஐ.பி-யான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:07 am

ஈஸ்வரன்

பொள்ளாச்சி தொகுதியில் கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி, அதிமுக வேட்பாளர் மகேந்திரன் மூவருக்கும் இடையில் சரிநிகர் போட்டி. மூவருமே கவுண் டர்கள் என்றாலும் ஈஸ்வரன் சாதி கட்சி வேட்பாளராக தெரிவதால் கவுண்டர்களின் ஆதரவு இவருக்கு கூடுதலாகவே உள்ளது. தேமுதிக; மதிமுக; பாஜக அலை இதெல் லாம் முழுமையாக கைகொடுத்தால் மட்டுமே ஈஸ்வரன் வாகைசூடமுடியும். இல்லா விட்டால் அந்த வாய்ப்பை அதிமுக தட்டிச் சென்றுவிடலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:08 am

திருநாவுக்கரசர்:

இவர் எம்.ஜி.ஆர்.அதிமுக என்ற கட்சியை நடத்திய போது இங்கே கணிசமான ஆதரவாளர்கள் இருந்தார்கள். அவர்களும் அதிமுக-வும் திமுக-வும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதால் அந்தக் கட்சிகளில் உள்ள முக்குலத்தோரும் தன்னை ஆதரிக்கலாம் என நினைக்கிறார் அரசர். ஆனால், இவருக்கு விழும் ஓட்டுகள் அனைத்துமே அதிமுக- ‑வுக்கு வேட்டு வைப்பதால் திமுக வேட்பாளர் ஜலீல் ராமநாதபுரத்தில் தன்னெழுச்சியாக வெற்றிப் படிக்கட்டுகளை தொடும் சூழல் நிலவுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 12:08 am

டாக்டர் கிருஷ்ணசாமி:

தென்காசி தொகுதியில் இவருக்கும் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாருக்கும்தான் போட்டி. ஏற்கெனவே இங்கு தனித்து நின்றே லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ள கிருஷ்ணசாமி, அந்த வாக்கு வங்கியையும் திமுக-வின் கூட்டணி பலத்தையும் நம்புகிறார். தொகுதியில் உள்ள சிறுபான்மையினர் ஓட்டுகளில் பெரும்பகுதி இவருக்கு சாதகமாக விழலாம் என்று கணிக்கப்படுகிறது. அப்படி நடந்தால் சதன் திருமலைக்குமாருக்கு சிக்கல்தான் 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 7:19 am

எது எப்படி இருந்தாலும் 16-5-2014 அன்று இவர்களின் சாயம் வெளுக்க போகிறது என்பது தான் உண்மை...! சிரி சிரி சிரி 
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by ரா.ரா3275 on Thu Apr 24, 2014 2:38 pm

வைகோ வெல்வது உறுதி.அவரின் சிம்மக்குரல் பாராளுமன்றத்தின் சுவர்களில் பட்டுத் தெறித்து பாரதம் முழுக்க ஒலிப்பதும் உறுதி.
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by சிவா on Thu Apr 24, 2014 3:24 pm

@ரா.ரா3275 wrote:[link="/t109657p15-topic#1059687"]வைகோ வெல்வது உறுதி.அவரின் சிம்மக்குரல் பாராளுமன்றத்தின் சுவர்களில் பட்டுத் தெறித்து பாரதம் முழுக்க ஒலிப்பதும் உறுதி.

இதுவே எமது ஆசையும்! சூப்பருங்க
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 4:06 pm

தேர்தல் நேர்மையாக நடந்தால் திரு. வைகோ அவர்கள் வெல்வது உறுதி...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by பாலாஜி on Fri Apr 25, 2014 4:00 pm

தகவலுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by T.N.Balasubramanian on Fri Apr 25, 2014 6:47 pm

@சிவா wrote:[link="/t109657p15-topic#1059690"]
@ரா.ரா3275 wrote:[link="/t109657p15-topic#1059687"]வைகோ வெல்வது உறுதி.அவரின் சிம்மக்குரல் பாராளுமன்றத்தின் சுவர்களில் பட்டுத் தெறித்து பாரதம் முழுக்க ஒலிப்பதும் உறுதி.

இதுவே எமது ஆசையும்! சூப்பருங்க

எமது விருப்பமும் அதுவே.
எங்கோ இருக்க வேண்டியவர் ,
சில நேரங்களில் எடுத்த சில தப்பான முடிவுகள்
மதிமுகாவிற்கு இந்த நிலை. இனி ஏறுமுகம்தான்

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22127
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: விஐபி வேட்பாளர்கள் வெற்றி எப்படி?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum