ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

40 தொகுதிகளின் நிலவரம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:53 pm

தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!

 இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும் களமிறங்கியிருக்கிறார்கள்.
வேட்புமனு இறுதி செய்யும் சமயத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு சின்னம் கிடைத்தது. அதுவரை வேட்பாளர் பெயரை மட்டுமே சொல்லி வாக்குகளைக் கேட்டது, ரவிக்குமாருக்கு மைனஸ். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காதது இன்னொரு மைனஸ். திருவள்ளூர் தொகுதி தி.மு.க-வுக்குக் கிடைக்காத அதிருப்தியில், இன்னும் சில நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரசாரத்துக்கு ஸ்டாலின் வந்து சென்ற பின்னரே ஒத்துழைப்பு கிடைத்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அடுத்த மைனஸ், புரட்சி பாரதம் கட்சியினர். திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றிபெறக் கூடாது என்ற முனைப்புடன் அவர்கள்  அ.தி.மு.க-வுக்காக சுறுசுறுப்புடன் வேலைபார்த்து வருகிறார்கள். தொகுதியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. கூட்டணி, அது நிச்சயம் பலன் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.

சிட்டிங் எம்.பி-யான வேணுகோபால்தான் அ.தி.மு.க. வேட்பாளர். இந்தத் தொகுதியில் செய்த பணிகளை ஒவ்வொரு பிரசாரத்திலும் பட்டியலிடுகிறார். சிரித்த முகத்துடன் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து செல்வது வேணுகோபாலுக்கு ப்ளஸ்.

தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜ் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பதால், தே.மு.தி.க-வினர் முழுவீச்சில் இவருடைய வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். அதோடு கூட்டணிக் கட்சியினரும், மோடி அலையும் தங்களுக்கு ப்ளஸ் என்கிறார்கள். புதிய வாக்காளர்களும் இளைஞர்களும் நிச்சயம் முரசைக் கொட்டுவார்கள் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக யுவராஜுக்கு உள்ளது.

உள்ளூர் மைந்தன் என்ற முகவரியுடன் களமிறங்கிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார். ஆவடியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட இவர், தொகுதி மக்கள் மத்தியில் ஓரளவுக்குப் பிரபலமானவர். கணிசமான வாக்குகளை வாங்குவார். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், மோதிரம் டாலடிப்பதைவிட இரட்டை இலையே துளிர்க்கும் நிலை இந்தத் தொகுதியில் தெரிகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:54 pm

 
தினக்கூலித் தொழிலாளர்களும், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களும் செறிவாக வாழும் தொகுதி வட சென்னை. இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை மீனவர்களும், தலித் மக்களும் கிறிஸ்துவர்களாக உள்ளனர். முஸ்லிம்களும் கணிசமான அளவில் இருக்கின்றனர். 

 இந்தத் தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் வெங்கடேஷ் பாபு, தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் கிரிராஜன், தே.மு.தி.க. சார்பில் சௌந்தர பாண்டியன், சி.பி.எம். சார்பில் உ.வாசுகி ஆகிய பிரதான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

எந்த அடிப்படை வசதிகளும், உள்கட்டமைப்பு வசதிகளும் இன்றுவரை முறையாக நிறைவேற்றப்படாத பகுதி வட சென்னை. சென்னை நகரின் குப்பைத் தொட்டி என்பதுபோல் காட்சியளிக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த காலத்திலேயே தி.மு.க. ஆதிக்கம் செலுத்திவந்த இந்தத் தொகுதி, இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வின் பக்கம் போவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான தி.மு.க-வின் டி.கே.எஸ்.இளங்கோவன், தொகுதிப் பக்கம் அதிகம் எட்டிப் பார்க்காததும், குடிநீரில் பெட்ரோலும் டீசலும் கலந்து வந்தபோது, அஜாக்கிரதையாக செயல்பட்டதும், பெரும் ஆவேசத்தை அந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. அவை அப்படியே அ.தி.மு.க-வுக்கு வாக்குகளாக மாறும் என்கிறார்கள். இரண்டு கட்சி ஆட்சியும் வடசென்னையின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பான்மை மக்களிடம் இருக்கிறது.

சிறுபான்மையின மக்கள் அதிகம் உள்ளதாலும், பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., தே.மு.தி.க, விடுதலைச் சிறுத்தைகள் இந்தத் தொகுதியில் பெரிய அளவில் பலம் இல்லாமல் இருப்பதும், தே.மு.தி.க. வேட்பாளருக்கு மிகப்பெரிய மைனஸ். தொழிற்சங்கங்கள் வலுவாக இருப்பதால், கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாசுகிக்கு உற்சாகமாக வேலை பார்க்கின்றனர். ஆனால், அவை எந்தளவுக்கு வாக்குகளாக மாறும் எனத் தெரியவில்லை.  இந்தக் குறைகளை எல்லாம் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அரசின் சாதனைகளைச் சொல்லி பிரசாரம் செய்து​வருகின்றனர் அ.தி.மு.க-வினர்.

தி.மு.க. இல்லையென்றால் அ.தி.மு.க. என்ற தமிழகத்தின் மனப்பான்மையின்படி இந்த முறை அ.தி.மு.க-வே இந்தத் தொகுதியில் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:54 pm

பேரறிஞர் அண்ணாவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த தொகுதி தென் சென்னை. படித்தவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், உயர் தட்டு மக்கள், சாஃப்ட்வேர் பணியாளர்கள் என பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய தொகுதி இது. தொடர்ந்து நான்கு முறை இந்தத் தொகுதியில் வென்ற தி.மு.க-வுக்கு கடந்த முறை முற்றுப்புள்ளி வைத்தது அ.தி.மு.க.
 
முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமாரின் மகன் டாக்டர் ஜெயவர்தன் அ.தி.மு.க. வேட்பாளர். தென் சென்னைக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியே வென்றது, அவர்களுக்கு தெம்பைத் தந்துள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சுறுசுறு பிரசாரத்தில் இருக்கிறார். ஆனாலும், இவர் வட சென்னை வட்டாரத்தில் அறிமுகம் ஆனவர். தென் சென்னை கட்சியினருடன் ஒட்ட முடியவில்லை. இலை வாக்குகள்தான் இவருக்கு பலம். சிட்டிங் அ.தி.மு.க. எம்.பி-யான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மீதான கெட்ட பெயர்கள் இவருக்கு எதிராக உள்ளன.

பி.ஜே.பி. வேட்பாளர் இல.கணேசன் அனைத்து தரப்பினருக்கும் பரிச்சயமானவராக இருக்கிறார். கடந்த முறை தனித்து நின்று 40 ஆயிரம் வாக்குகள் வாங்கினார். இந்த முறை கூட்டணி பலத்துடன் நிற்கிறார். படித்த வாக்காளர்கள், மத்தியதர வர்க்கத்தினர் ஆதரவு இவருக்கு உண்டு. மோடி பிரசாரம் இவருக்கு கை கொடுக்கிறது.

வட சென்னையில் தா.பாண்டியனுக்கு ஷாக் கொடுத்து கடந்த முறை வெற்றிபெற்ற டி.கே.எஸ்.இளங்கோவன், இந்த முறை தென் சென்னையில் தி.மு.க. சார்பில் மல்லுகட்டுகிறார். கட்சியில் அவர் பிரபலமானவராக இருப்பது ப்ளஸ். தொகுதி மாறியதால், ஆரம்பத்தில் உற்சாகம் இல்லாமல் பிரசாரத்தைத் தொடங்கினாலும், தற்போது கட்சி நிர்வாகிகள் முனைப்புடன் இறங்கி வேலை செய்வது அவருக்குத் தெம்பாக இருக்கிறது.

காங்கிரஸில் சீட் வாங்க போராடிய ரமணி, அந்த முனைப்பை வெற்றிபெறுவதற்குக் காட்டுவதாகத் தெரியவில்லை.

''மோடியின் நீண்ட நாள் நண்பர் இல.கணேசன். மோடி பிரதமர் ஆனால், இல.கணேசன் மந்திரி ஆவார். அவரை ஆதரியுங்கள்'' என்று பேசி ஓட்டு கேட்கிறார்கள் பி.ஜே.பி-யினர். இல.கணேசன் பிரிக்கும் ஓட்டுகளால் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறது தி.மு.க. தரப்பு. ஆனால், வீடு வீடாகச் சென்று 'பி.ஜே.பி-க்கு ஓட்டுப் போட்டு வீணாக்காதீர்கள்; அ.தி.மு.க-வுக்கே ஓட்டுப் போடுங்கள்’ என்கிறது அ.தி.மு.க. டீம். அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் 'பதவி பறிபோய்விடும்’ என்ற பயத்தில் உருண்டுபுரண்டு வேலை செய்வது ஜெயவர்தனை வாக்காளர்களிடம் அதிகமாகக் கொண்டுபோய் சேர்க்கிறது. அதனால், இந்த முறையும் இலையே மீண்டும் துளிர்க்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:55 pm

பரப்பளவில் சிறிய தொகுதிதான் என்றாலும், தமிழ்நாடே எதிர்பார்க்கும் பரபரப்பான தொகுதியில் மத்திய சென்னையும் ஒன்று.
 கடந்த இரண்டு முறை வென்ற தயாநிதி மாறன்தான் இந்த முறையும் தி.மு.க. வேட்பாளர். அ.தி.மு.க. சார்பில் எஸ்.ஆர்.விஜயகுமாரும் தே.மு.தி.க. சார்பில் ஜோ.க.ரவீந்திரனும் இவரை எதிர்த்துப் போட்டி போடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் சி.டி.மெய்யப்பனும், ஆம் ஆத்மி ஜே.பிரபாகரும் களத்தில் இருக்கின்றனர்.

தி.மு.க. அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே மத்திய சென்னையை மானப் பிரச்னையாகக் கருதுவதால், தேர்தல் களத்தில் ஏகத்துக்கும் அனல். இதுவரை நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. ஒருமுறைகூட இந்தத் தொகுதியில் வெற்றி பெறவில்லை. இதனை உடைத்து அ.தி.மு.க-வை வெற்றிபெற வைத்து வரலாறு படைக்க வேண்டும் என தீயாக வேலை செய்துவருகிறார் விஜயகுமார்.

தயாநிதியும் சளைக்காமல் டைம் டேபிள் போட்டு வீதி வீதியாக வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளார். இவரது மனைவி ப்ரியாவும் தன் கணவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார்.

தே.மு.தி.க. வேட்பாளர் ரவீந்திரன் பெயரே வாக்காளர்களுக்கு இன்னும் தெரியவில்லை. 'யாரோ விஜயகாந்த் கட்சியில் நிற்கிறார்களாம்’ என்றுதான் சொல்கிறார்கள். இந்தத் தொகுதியில் கவனிக்கப்படும் இன்னொரு வேட்பாளர், ஆம் ஆத்மியின் ஜெ.பிரபாகர். படித்த வாக்காளர்கள் பலரும் இந்தத் தொகுதியில் இருப்பதால், இவருக்கு கணிசமான வாக்குகள் விழும்.
மத்திய சென்னை தொகுதியில் பணக்கார வாக்காளர்களும் அதிகம் இருக்கிறார்கள்; அடித்தட்டு மக்களும் அதிகம் வாழ்கிறார்கள்.

'இரண்டாவது வகையினர் வாக்கு இரட்டை இலைக்குதான். முதல் வகையினர் எங்கே வாக்குச்சாவடிக்கு வரப்போகிறார்கள்?’ என்பது அ.தி.மு.க-வினரின் கணக்கு. 'தி.மு.க-வின் கோட்டையான மத்திய சென்னையை விட்டுக்கொடுக்க மாட்டோம். மத்திய சென்னையில் உதயசூரியனை அஸ்தமிக்க விடமாட்டோம். மக்களும் விடமாட்டார்கள்’ என அதீத நம்பிக்கையில் தி.முக-வினர் இருக்கிறார்கள். ஆக மொத்தம் கடுமையான போட்டி நிலவுவதால், யாருக்கு வெற்றி கிடைத்தாலும் சரி... சில ஆயிரம் வாக்கு வித்தியாசங்களில்தான் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

இதற்கெல்லாம் மேலாக, 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாக’யாக நிற்கும் தயாநிதி மாறனை ஜெயிக்கவைத்தால், கட்சிக்குள் தங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும் என எண்ணி, தேனீயாக வேலை செய்கிறார்கள் உடன்பிறப்புகள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மத்திய சென்னையை தி.மு.க. தக்கவைக்கும் என்றே தெரிகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:56 pm

 
 
தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது ஸ்ரீபெரும்புதூர். தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும், அ.தி.மு.க. சார்பில் கே.என்.ராமச்சந்திரனும், பி.ஜே.பி. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளராக டாக்டர் மாசிலாமணியும் காங்கிரஸ் வேட்பாளராக அருள் அன்பரசும் களம் காண்கிறார்கள்.

அரக்கோணம் தொகுதி எம்.பி-யான ஜெகத்ரட்சகன் ஸ்ரீபெரும்புதூருக்கு முகாம் மாறிவிட்டார். தொகுதியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள தி.மு.க. போராடுகிறது. பல கல்லூரிகளின் அதிபரும் பிரபல பிசினஸ் புள்ளியுமான ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு 78 கோடி. ஆனால், ஜெகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் சொத்து மதிப்பைக் காட்டியிருக்கிறார், அ.தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரன். அதனால் இரண்டு பக்கமும் தாராள செலவுகளுக்குப் பஞ்சமே இல்லை. செலவு செய்தும் ஆங்காங்கே அ.தி.மு.க-வினரிடையே அதிருப்தி நிலவுகிறது. தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் சின்னய்யா கொடுத்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி வேட்பாளர் பக்கம் திரும்பியிருக்கிறது.

தொழில் வளர்ச்சியால் விவசாய பகுதிகள் தொழில் நகரங்களாக மாறிவிட்டன. வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் இங்கேதான் பெருமளவில் குடியேறுகிறார்கள். இதனால் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை இங்கே அதிகம். அத்துடன் அவர்களுக்கான பிரச்னைகளும் அதிகம். தாம்பரம் ஏரியாவில் போக்குவரத்து நெரிசல், தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுப்பது இங்கே பிரதானப் பிரச்னையாக இருக்கிறது. இது அத்தனையும் ஆளுங்கட்சிக்கு மைனஸ் ஆக வாய்ப்பிருக்கிறது.

ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் மாசிலாமணி  கூட்டணி பலத்துடன் வலம் வருகிறார். புதிய வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதி இது. பி.ஜே.பி-க்கு இங்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனக்காக இந்தத் தொகுதியை பி.ஜே.பி.யை சேர்ந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தயார் செய்து வைத்திருந்தார். கடைசி சமயத்தில் தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால், தமிழிசையின் உழைப்பு டாக்டர் மாசிலாமணிக்கு உதவியாக இருக்கிறது. வன்னியர்கள் வாக்கும் இங்கு உள்ளது. அதுவும் கூடுதல் பலம்.

'ராஜீவ் காந்தி உயிர்நீத்த பூமியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்’ என்ற நம்பிக்கையோடு களமிறங்கியிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு. இந்தத் தொகுதியில் காங்கிரஸுக்கு இருக்கும் செல்வாக்கு அருளுக்கு கணிசமான வாக்குகளை வாங்கித் தரும்.
அ.தி.மு.க-வுக்கு இருக்கும் அதிருப்திகளை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு உதயசூரியன் வாக்கு வங்கிகளை வைத்து தி.மு.க. முன்னேறுகிறது. அதனால் ஜெகத்ரட்சகன் ஜொலிக்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:56 pm

 
  
ஜெயலலிதா முதன்முதலாகப் பிரசாரத்தைத் தொடங்கிய தொகுதி காஞ்சிபுரம்.

தனித் தொகுதியான இதில் அ.தி.மு.க. சார்பாக மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பாக செல்வம், ம.தி.மு.க. சார்பாக மல்லை சத்யா, காங்கிரஸ் சார்பாக சிட்டிங் எம்.பி. விஸ்வநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஓய்வு இல்லாமல் பிரசாரம் செய்து வரும் மரகதம் குமரவேலுக்கு கட்சி மேலிடம், தேர்தல் பொறுப்பாளர்கள், சொந்த செல்வாக்கு என அனைத்தும் இருப்பதால் ஆரம்பத்தில் இருந்தே சுறுசுறுப்புக்குப் பஞ்சம் இல்லை. 

தொகுதி முழுக்க நன்கு அறிமுகம் உள்ளவர் ம.தி.மு.க-வைச் சேர்ந்த மல்லை சத்யா. திருப்போரூர், மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் தொல்லியல் துறைக்கு எதிராக உள்ளூர் மக்களுக்காக ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்திருக்கிறார். தே.மு.தி.க., பா.ம.க. கட்சியினர் பங்களிப்பும், ஜெயலலிதா மீது உள்ள கோபமும் மல்லை சத்யாவுக்கு சாதகம். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் வ.கோ.ரங்கசாமிக்கும் பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்துக்கும் இடையே உள்ள பகை, பி.ஜே.பி-யில் நிலவும் கோஷ்டிப்பூசல், பணபலம் குறைவு ஆகியவை மைனஸ். 'மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வரப்போகிறது. அப்படியானால், அந்தக் கூட்டணி வேட்பாளர்தான் நம் தொகுதியில் ஜெயிக்க வேண்டும்’ என்று காஞ்சிபுரத்தில் படித்தவர்கள் மத்தியில் செய்யப்படும் பிரசாரம் இவருக்கு ப்ளஸ்.

கடந்த மூன்று முறை தி.மு.க. தனது கூட்டணிக்கே ஒதுக்கியதால், கூட்டணிக் கட்சி வெற்றிக்கே பாடுபட்டு கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். இந்த முறை தி.மு.க. வேட்பாளராக செல்வம் அறிவிக்கப்பட்டது, தி.மு.க-வுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார் முன்னாள் அமைச்சர் த.மோ.அன்பரசன். எதிர் தரப்பினரின் வாக்குகள் சிதறும் நிலையில், தி.மு.க. வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றாலே வெற்றிதான் என்ற ஃபார்முலாவோடு தொகுதி முழுக்கச் சுற்றி வருகிறார். காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்றவை தி.மு.க-வுக்குச் சாதகமான பகுதிகள். மதுராந்தகம், அச்சரப்பாக்கம் பகுதியில் நிலவும் கோஷ்டி பூசல்களால் தி.மு.க. திணறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக இந்த முறையும் இதே தொகுதியில் போட்டியி​டுகிறார் விஸ்வநாதன். 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் இவருக்கு பலம். மேற்கண்ட மூன்று வேட்பாளர்களின் ஓட்டுகளை கணிசமாக சிதைப்பதில் இவருடைய பங்கு இருக்கும்.
மைனஸ் எதுவும் இல்லாமல் மரகதம் குமரவேல் முந்துகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:57 pm

தென் மாவட்டங்களுக்கு இணையாக சாதி கணக்குப் போடப்படும் தொகுதிகளில் ஒன்று வட மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் தொகுதி. அரசியல் கட்சிகளும் சாதி கணக்கைப் போட்டுத்தான் இங்கே வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளன.
 இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்களையே அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. அடுத்த இடத்தில் இருக்கும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரை தி.மு.க., வேட்பாளராக்கி இருக்கிறது. 

பா.ம.க. வேட்பாளர் அரங்க.வேலு, கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி பலத்துடன் வென்று, ரயில்வே இணை அமைச்சர் ஆனவர். 2009 தேர்தலில் தோல்வியடைந்த இவர், இப்போது பி.ஜே.பி. கூட்டணி வேட்பாளராகக் களம் காண்கிறார். வேலூர் மாவட்டத்துக்கு மட்டுமே 40 ரயில்வே மேம்பாலங்கள் கட்டியது, ரயில் பாதையை அகலப்படுத்தியது என அவருடைய சாதனைகள் இப்போது நன்றாகவே கைகொடுக்கின்றன. 'வாலாஜாரோடு ரயில் நிலையத்தில் அதிவேக ரயில்கள் நிற்பதற்கு அவரே முக்கியக் காரணம். வாலாஜா, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து வேலைக்காக சென்னைக்கு செல்வோர் ஏராளம். அவர்களுக்கு ஏதுவாக ரயில் போக்குவரத்தை மேம்படுத்தினார்’ என்று வேலு புராணம் பாடுகிறார்கள் மக்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரி, அ.தி.மு.க. அரசின் சாதனைகளைச் சொல்லி தொகுதி முழுக்க சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஆளுங்கட்சி பலமும் வன்னியர் சமூக வாக்குகளும் தன்னைக் கரைசேர்க்கும் என்று நம்புகிறார். ஆனால், வன்னியர் சமூக வாக்குகள் இலையைவிட மாம்பழம் பக்கமே அதிகம் சாய்கிறது.

தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ, உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவர் தந்தை ரங்கநாதன் சோளிங்கர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. இந்த முகவரியை மட்டுமே வைத்துக்கொண்டு உதயசூரியன் சின்னத்தை நம்பி களம் காண்கிறார். அவர் சார்ந்த முதலியார் சமூக வாக்குகள் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். தொகுதியில் கணிசமாக இருக்கும் தலித் வாக்குகளும், முஸ்லிம் வாக்குகளும் தி.மு.க-வுக்கே சாதகமாக உள்ளன. தொகுதிக்கு தொடர்பே இல்லாத வேட்பாளர், புதுமுகம் ஆகியவை அவரைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. இரண்டு முறை இங்கு எம்.பி-யாக இருந்த ஜெகத்ரட்சகன் தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்ற மக்களின் கோபமும் தி.மு.க-வுக்கு எதிராக இருக்கின்றன. அதனால், தி.மு.க. பின்தங்குகிறது.

காங்கிரஸ் சார்பில் களம் இறங்கியுள்ள நாசே ராஜேஷ், பசையுள்ள பார்ட்டி. நாசே என்ற தொண்டு நிறுவனம் மூலம் தொகுதியில் ஓரளவு பரிச்சயமானவர். அதனால், கணிசமான வாக்குகளைப் பெற வாய்ப்பு உள்ளது. 

சாதி பலம், கூட்டணி பலம் ஆகியவை காரணமாக தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு டெல்லிக்குச் செல்ல ரயில் ஏறப்போவது அரங்க.வேலு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:57 pm

 கத்திரி வெயில் சூட்டைக் காட்டிலும் தேர்தல் சூட்டில் அனலாகக் கொதிக்கிறது வேலூர். பி.ஜே.பி. சார்பில் புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகம், தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக் அப்துல் ரஹ்மான், அ.தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் செங்குட்டுவன் ஆகியோர் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளராக விஜய் இளஞ்செழியன் களமிறங்கியுள்ளார்.

துரைமுருகன் தன் மகனுக்காக எதிர்பார்த்த தொகுதி இது. ஆனால், கட்சித் தலைமை, கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிட்டது. அந்தப் புகைச்சல் தி.மு.க. பிரசாரத்தில் எதிரொலிக்கிறது. துரைமுருகனின் ஆதரவாளர்கள் பலரும் ஏனோ தானோ என்றுதான் வேலை செய்கிறார்கள். தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் சிலரைக் கட்சியைவிட்டு நீக்கியது, தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அப்துல் ரஹ்மான் அதைப்பற்றிக் கவலைப்படாமல் சுற்றிச் சுழல்கிறார். ஜமாத் ஓட்டுகள் எப்படியும் தன்னைக் கரை சேர்த்துவிடும் என்பது அப்துல் ரஹ்மானின் நம்பிக்கை. ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகளில் பெருவாரியாக உள்ள முஸ்லிம் ஓட்டுக்கள் அப்துல் ரஹ்மானுக்குப் ப்ளஸ்.

செலவைப் பற்றி கவலையே படாமல் பலம்காட்டுகிறார் ஏ.சி.சண்முகம். பா.ம.க-வும், தே.மு.தி.க-வும் இங்கே சளைக்காமல் வேலை செய்கின்றனர். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சண்முகத்துக்காகத் தொகுதியில் ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள். இதனால், ஏறுமுகத்தில் நடைபோடுகிறார் சண்முகம். படித்தவர்கள், மத்தியத்தர வர்க்கத்தினர் வாக்குகளை மொத்தமாக அள்ள முடியும் என்று சண்முகம் நினைக்கிறார்.

போட்டி இவர்கள் இருவருக்குள் பலமாக இருக்க... திருவிழாவில் காணாமல்போன குழந்தையைப்போல தவிக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவன். மேயர் கார்த்தியாயினி மீதுள்ள அதிருப்தி, சர்ச்சைக்குரிய வேட்பாளர், பிரசாரத்தில் சுணக்கம், மின்வெட்டு பிரச்னை என அத்தனை பாரங்களும் அ.தி.மு.க. வேட்பாளர் மீது ஏறியுள்ளது. அதை சுமக்கவே முடியாமல் தடுமாறுகிறார் அவர்.
காங்கிரஸ் காட்சியோ இவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனி ரூட்டில் 'உங்கள் பொன்னான வாக்குகளை...’ என்றபடி சுற்றி வந்துகொண்டு இருக்கிறது. வேலூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் போட்டியிடாததால் ஆம் ஆத்மி வேட்பாளருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

கூட்டணி பலம், மோடியின் அலை, சண்முகத்தின் பண பலம், சுறுசுறுப்பான தேர்தல் வேலைகள் என அத்தனையும் சேர்ந்து வேலூர் தொகுதி சண்முகத்துக்கு சபாஷ் சொல்ல வைக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:57 pm

 
ஆந்திரா, கர்நாடகம் ஆகிய இரண்டு மாநில எல்லைகளைத் தொடும் தொகுதி கிருஷ்ணகிரி.

பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம.க. சார்பில் ஜி.கே.மணியும், அ.தி.மு.க-வில் அசோக்குமாரும், தி.மு.க-வில் சின்னபில்லப்பாவும் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் டாக்டர் செல்லக்குமார்.

பி.ஜே.பி. கூட்டணி அமைவதற்கு முன்பே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஜி.கே.மணி. அதனால் கடந்த நான்கு மாதங்களாக தொகுதியை நான்கு ரவுண்டு வந்துவிட்டார். மணி மாநிலத் தலைவராகவும் இருப்பதால் தொகுதி மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. மோடி, விஜயகாந்த்தின் பிரசாரம் மணிக்கு கூடுதல் பலம். 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சிதான் அமையும். பா.ம.க. இங்கே ஜெயித்தால் நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்!’ என்று கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்கிறது பா.ம.க. அதற்கும் நல்ல ரெஸ்பான்ஸ்.

அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் தொகுதி முழுக்க அறிமுகம் இல்லாதவர். அமைச்சர் கே.பி.முனுசாமியின் தீவிர ஆதரவாளர். அ.தி.மு.க-வுக்காக இருக்கும் வாக்கு வங்கி எப்படியும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை முனுசாமிக்கு. கிராமங்களில் ஆளுங்கட்சிக்கு எதிரான பிரச்னைகள் இங்கேயும் எதிரொலிக்கிறது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லாமல், அசோக்குமாரும் முனுசாமியும் கைகோத்தபடி தொகுதியை வலம் வருகிறார்கள்.

இங்கே சிட்டிங் எம்.பி-யாக இருந்தவர் தி.மு.க-வின் சுகவனம். ஸ்டாலினுக்கு செல்லப்பிள்ளை. ஆனாலும், தொகுதிக்குள் இவருக்கு நல்லபிள்ளை என்ற பெயர் இல்லை. அதனால்தான் மாநில அரசியலில் கவனம் செலுத்துவதாகச் சொல்லி ஒதுங்கிவிட்டார் சுகவனம். தற்போது வேட்பாளர் ஆகியிருக்கும் சின்னபில்லப்பா கட்சிக்காரர்களுக்கே அறிமுகம் இல்லாத புதுமுகம். சுகவனம் மீது இருக்கும் அதிருப்திகள் சின்னபில்லப்பாவுக்குத்தான் சிக்கலை உண்டாக்கும்.

ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் காங்கிரஸுக்கு கணிசமான வாக்கு வங்கி உண்டு. அதை நம்பித்தான் அந்தக் கட்சி செல்லக்குமாரை அங்கே நிறுத்தியிருக்கிறது. செல்லக்குமாரும் பிரசாரத்தைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறார். கௌரவமான வாக்குகளுடன் நிச்சயமாக டெபாஸிட் வாங்குவார் என்று அடித்துச் சொல்கிறார்கள் கதர் வேட்டிகள். அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இங்கே குறிப்பிட்ட செல்வாக்கு உண்டு. தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்​சந்திரன் மீது அ.தி.மு.க. ஆட்சியில் வழக்குகள் பாய்ந்தது. இதனால் கோபத்தில் இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள். கிருஷ்ணகிரியில் அசோக்குமார்தான் அசத்துகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:58 pm

தர்மபுரியில் நடக்கப் போவது சாதிப் போட்டி. இந்தத் தொகுதியில் வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களுமே அதிகம்.
 அ.தி.மு.க. சார்பில் மோகனும் தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.பி-யான தாமரைச்செல்வனும் பா.ம.க. சார்பில் அன்புமணியும் காங்கிரஸில் ராமசுகந்தனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் அனைவருமே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

ஓர் ஆண்டுக்கு முன்பே இங்கு அன்புமணியை நிறுத்துவது என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளை பா.ம.க-வினர் செய்து வந்தனர். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த அடுத்த நாளே தர்மபுரியின் ராஜா பேட்டையில் வீடு எடுத்து, பிரசாரம் செய்துவருகிறார் அன்புமணி. அவருக்கு ஆதரவாக அவரது தந்தை ராமதாஸ், சகோதரி கவிதா, மனைவி சௌம்யா எனக் குடும்ப உறுப்பினர்கள் தீவிரப் பிரசாரம் செய்கின்றனர். சாதி பலம், ராமதாஸின் மகன் என்ற அந்தஸ்து, முன்னாள் அமைச்சர் என்ற அறிமுகம் என்பவை ப்ளஸ். தாழ்த்தப்பட்டவர்களின் எதிர்ப்பு மைனஸ். தர்மபுரியில் அன்புமணி நிற்கிறார் என்பதைவிட, தர்மபுரியில் பா.ம.க. ஜெயிக்க வேண்டும் என்பது அக்கட்சியினரின் மானப் பிரச்னையாக மாறி உள்ளதால் பாட்டாளிகளின் தேர்தல் வேலைகள் பரபரப்பாக இருக்கின்றன.

அ.தி.மு.க. சார்பாகப் போட்டியிடும் மோகன், முதல்வரின் நலத்திட்டங்களைச் சொல்லி பிரசாரம் செய்கிறார். அரசு மீது வன்னியர்களிடம் இருக்கும் கோபம், குடிநீர் வசதி செய்து தராமல் இருப்பது ஆகியவை அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக இருக்கிறது.
தி.மு.க. சார்பாகப் போட்டியிடும் தாமரைச்செல்வனுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கலப்புத் திருமணம் செய்தவர். இவரது மனைவி கீதா தலித் பகுதிகளுக்குச் சென்று, 'உங்க வீட்டு மருமகனுக்குத்தான் நீங்கள் ஓட்டுப் போட வேண்டும்’ என்று பிரசாரம் செய்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதியில் தாமரைச்செல்வன் பெரிதாகத் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க-வினர் பிரசாரம் செய்கிறார்கள்.

காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ராமசுகந்தன், முன்னாள் அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்.  ''எங்க அப்பா இந்தத் தொகுதியில் போட்டியிட்டு உங்களுக்கெல்லாம் பாடுபட்டாரு. அவர் பையனான எனக்கு ஆதரவு தாங்க'' என்று அப்பா பெயரை வைத்தே வாக்குக் கேட்டு வருகிறார். இது ஒன்று மட்டுமே இவருக்கு ப்ளஸ்.
 
இறுதி நிலவரப்படி, பி.ஜே.பி. கூட்டணி பலம், சாதி செல்வாக்கு, பா.ம.க-வினரின் பலமான வேலைகள் என அன்புமணியின் கையே ஓங்கியிருக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:58 pm

 ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் இருந்துதான் தி.மு.க-வின் முதல் எம்.பி-யான இரா.தர்மலிங்கம் நாடாளுமன்றம் சென்றார். அது இன்னமும் தி.மு.க-வின் கோட்டையாகவே இருக்கிறது.

தி.மு.க. சார்பில் சி.என்.அண்ணாதுரை, அ.தி.மு.க. சார்பில் ஆர்.வனரோஜா, பா.ம.க. சார்பில் கோ.எதிரொலி மணியன், காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுப்ரமணியன் ஆகியோர் களத்தில் இருந்தாலும், போட்டி என்னவோ தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான்.
கடந்த ஆட்சிக் காலத்தில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைக் கொண்டுவந்தது, பல ஆரம்ப சுகாதார நிலையங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்தியது என திருவண்ணாமலை பகுதிக்கு பல நலத்திட்டங்கள் கொண்டுவந்ததைச் சொல்லி அண்ணாதுரைக்காக வாக்கு சேகரிக்கிறார் எ.வ.வேலு. திருவண்ணாமலை மற்றும் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் கணிசமான அளவில் இருக்கும் முஸ்லிம் வாக்குகள் தி.மு.க. வேட்பாளருக்கு பலம். 

பா.ம.க. வேட்பாளர் எதிரொலி மணியன், பெரணமல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், திருவண்ணாமலை மக்கள் மத்தியில் பரிச்சயம் இருக்கிறது. கூட்டணி முடிவாவதற்கு முன்பாக அறிவிக்கப்பட்ட பா.ம.க. வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.
வன்னியர்களின் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் இந்தத் தொகுதியில் ஆரம்பத்தில் இருந்தே கிராமம் கிராமமாக சென்று, 'வன்னியர் ஓட்டு வன்னியருக்கே’ என்று ஓட்டு வேட்டை நடத்தினார். கூட்டணி அமைந்த பிறகு, வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டதோ என்னவோ... பிரசார வேகம் ரொம்பவே குறைந்துவிட்டது. அதோடு பசையைக் கண்ணில் காட்டுவதே இல்லை என்ற குற்றச்சாட்டும் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்து கேட்கிறது.

தொகுதியில் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு அ.தி.மு.க. கையில் இருப்பதை அவர்கள் பலமாகக் கருதுகின்றனர். ஆனால், ஏரியாவுக்கு ஏரியா கோஷ்டி பிரிந்துகொண்டு கும்மியடிப்பது பெரிய மைனஸ். இருந்தாலும், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி உற்சாகமாக வாக்கு சேகரித்துவருகிறார் வனரோஜா.

மக்களை 'கவனிப்பது’ மூலமாக அ.தி.மு.க. வெற்றிக்கொடியைப் பறக்கவிட முயற்சி செய்தாலும்... தி.மு.க-வின் எ.வ.வேலு மட்டும் சளைத்தவர் அல்லவே? அவரது 'டீம் ஒர்க்’கால் திருவண்ணாமலையில் உதயசூரியன் உதிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 3:59 pm

 பட்டுக்குப் புகழ்பெற்ற ஆரணியில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருமே முன்னாள் மக்கள் பிரதிநிதிகள்.
தி.மு.க. வேட்பாளரான ஆர்.சிவானந்தம் (ஆரணி எக்ஸ். எம்.எல்.ஏ.), அ.தி.மு.க-வின் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை (செஞ்சி எக்ஸ். எம்.எல்.ஏ.), காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் (செய்யாறு எக்ஸ் எம்.எல்.ஏ.), பா.ம.க-வின் ஏ.கே.மூர்த்தி (பழைய செங்கல்பட்டு எக்ஸ் எம்.பி.) என போட்டியாளர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். நால்வருமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இன்னொரு ஒற்றுமை.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னரே அறிவிக்கப்பட்ட பா.ம.க. வேட்பாளர்களில் ஒருவர் ஏ.கே.மூர்த்தி. அதனால், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தொகுதி முழுக்க வலம் வந்துவிட்டார். ''வேலைக்காரனாகப் பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். வேலை செய்யக் காத்திருக்கிறேன். வேலை வாங்குவது உங்கள் கடமை'' என்ற ஏ.கே.மூர்த்தியின் பிரசாரத்துக்கு தொகுதியில் நல்ல ரெஸ்பான்ஸ். சாதிப் பாசத்தைக் காட்டி திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுவதால், தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் வாக்குகள், இவர் பக்கமே சாயும். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வினர் உற்சாகமாக வேலை செய்வது இவருக்கு கூடுதல் ப்ளஸ்.

தி.மு.க-வின் ஆர்.சிவானந்தம், 'சென்னையில் இருந்து ஆரணிக்கு மின்சார ரயில் கொண்டுவர ஏற்பாடு செய்வேன். வரியில்லா பட்டு கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வேன். நெல் கொள்முதல் மையம் அமைப்பேன்’ என்று ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து வாக்கு சேகரிக்கிறார். ஆனால், கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சப்போர்ட் இவருக்குப் போதுமானதாக இல்லை. சிவானந்தம் எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில், விடுதலைச் சிறுத்தை பிரமுகர்கள் சிலர் மீது வழக்குகள் பாய்ச்சப்பட்டதற்கு, இவர்தான் காரணம் என்று அதிருப்தியில் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வின் ஏழுமலை, தமிழக அரசின் சாதனைகளை உரக்கச் சொல்லி பிரசாரம் செய்துவருகிறார். செஞ்சி எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில் தொகுதிக்கு செய்த பல நல்ல விஷயங்கள், இவருக்கு நல்ல இமேஜைத் தருகிறது. கட்சிக்காரர்களையும் அரவணைத்து, பிரசாரத்தில் சத்தம் இல்லாமல் முன்னேறி வருகிறார். 

காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான கிருஷ்ணசாமியின் மகன். தொகுதிக்கு அப்பா பெரிதாக எதுவும் செய்யவில்லை என்ற வெறுப்பு மகன் மீது திரும்புகிறது. பாரம்பரிய காங்கிரஸ் வாக்குகள் மட்டும் இவருக்குக் கிடைக்கும்.

கூட்டணி பலம், சாதி பலம் ஆகியவை காரணமாக இலையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மாம்பழமே மணக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:00 pm

தென் மாவட்டத்தில் இருந்து வரும் எவரும் விழுப்புரம் நெடுஞ்சாலையைத் தொடாமல் சென்னைக்கு வர முடியாது.
 
அந்த நெடுஞ்சாலை தொகுதியின் களத்தில் அ.தி.மு.க. வேட்பாளராக ராஜேந்திரனும் தி.மு.க. சார்பில் முத்தையனும் தே.மு.தி.க-வில் உமாசங்கரும் காங்கிரஸில் ராணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆனந்தனும் மல்லுக்கட்டுகிறார்கள்.
விழுப்புரம், திண்டிவனம், வானூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் ஆளுங்கட்சி வசம் இருப்பது அ.தி.மு.க. வேட்பாளருக்கு ப்ளஸ். தொகுதிக்குப் பெரிய அளவில் திட்டங்கள் கொண்டுவராததால் சிட்டிங் எம்.பி-யான ஆனந்தன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் மீது இருக்கும் கோபம் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும். நகரங்களில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு குறைவுதான் என்றாலும் கிராமங்களில் கிராஃப் உயர்கிறது.

17 வருடங்களுக்குப் பிறகு விழுப்புரம் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. பொன்முடி ஆசியால் திடீர்  வேட்பாளராகிவிட்டார் டாக்டர் முத்தையன். அவரை வெற்றி பெறவைக்க வேண்டும் என்று வேட்டியை மடித்துக்கொண்டுக் களத்தில் குதித்த பொன்முடி, வேட்பாளரின் செலவு கணக்கு முதல், பிரசார பிளான் வரை எல்லாவற்றையும் தன் மேற்பார்வையிலே செய்து வருகிறார். கோஷ்டிப்பூசலில் ஒன்றியச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் முகத்தைத் திருப்பிக்கொண்டு இருப்பதால், முத்தையன் பிரசாரத்துக்கு ஆள் கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது. விழுப்புரம் நகரத்தில் தி.மு.க. பலமாகவும், திண்டிவனம், வானூர், கண்டமங்கலம், மரக்காணம் போன்ற பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் பலமாக இருந்தாலும், பொன்முடி மீது இருக்கும் அதிருப்தியால் அவர்களின் பங்களிப்பில் தொய்வு. விழுப்புரம் தொகுதியில் கணிசமாக இருக்கும் முஸ்லிம்களின் ஓட்டுகள் தி.மு.க-வுக்கு விழும்.

''விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இருக்கும் ஓட்டு சதவிகிதத்தையும் சேர்த்தால் எங்கள் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி'' என்று தே.மு.தி.க-வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், பா.ம.க-வின் மொத்த ஓட்டும் உமாசங்கருக்கு விழுமா என்பது சந்தேகமே.

விழுப்புரத்தின் அடிப்படை பிரச்னை​களுக்காகப் போராடிவரும் கம்யூனிஸ்ட்கள் கணிசமான ஓட்டைப் பிரிப்பார்கள். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி காங்கிரஸ் வேட்பாளராக நிற்பதால், உள்ளூர் காங்கிரஸார் ஏக கடுப்பில் உள்ளனர். வேட்பாளர் அறிமுகக் கூட்டமே அடிதடியுடன்தான் ஆரம்பித்தது.

மொத்தத்தில் வெற்றிவாய்ப்பு அ.தி.மு.க-வுக்குத்தான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:00 pm

 
தொகுதியைத் தக்கவைக்க தி.மு.க-வும் இலையைத் துளிர்க்கவைக்க அ.தி.மு.க-வும் படாதபாடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. வேட்பாளரான மணிமாறனுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜுக்கும்தான் கள்ளக்குறிச்சியில் நேரடி போட்டி. இவர்களுக்கு டஃப் கொடுப்பவர் தே.மு.தி.க வேட்பாளர் டாக்டர் ஈஸ்வரன்.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலும் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகியவை சேலம் மாவட்டத்திலும் என பரந்துவிரிந்துள்ளது கள்ளக்குறிச்சி தொகுதி.

தி.மு.க. வேட்பாளர் மணிமாறனின் அப்பா ராமகிருஷ்ணன் 1945 முதல் தியாகதுருவம் கிளைக் கழக செயலாளராக இருந்து வருகிறார். உடல்நிலை சீராக இல்லை என்றாலும், ஊர் ஊராகச் சென்று தன் வயது சீனியர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். மணிமாறன், தான் நடத்தும் மவுன்ட் பார்க் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். எல்லா தரப்பு வாக்காளர்களையும் கவர்வதற்கான தீவிரம் தெரிகிறது.

'20 வருடங்கள் அரசுப் பணியில் இருந்துள்ளேன். என் மீது ஒரு ஊழல் புகார்கூட இல்லை’ என்று தன்னைப் பற்றி மக்களிடம் எடுத்துரைத்து ஆதரவு கேட்கும் மணிமாறன், விவசாயத் துறையில் பணியாற்றியவர் என்பதால் தொகுதியில் உள்ள முக்கியப் பிரச்னையான தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவார் என்று விவசாயிகள் நம்புகின்றனர். இதுபோன்ற பாசிட்டிவான விஷயங்கள் மணிமாறனின் செல்வாக்கை வேகமாக உயர்த்துகிறது. தன் ஆதரவாளருக்கு சீட் தராததால் பொன்முடி ஆதரவாளர்கள் உள்ளடி வேலையில் இறங்கியிருப்பது தி.மு.க-வுக்கு  மைனஸ்.

அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ், அமைச்சர் மோகனின் உறவினர். காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், அவரை ஜீப்பில் ஏற்றி​கொண்டு கிராமம் கிராமமாகச்  சென்று வந்தார் மோகன். ஆனால், எதிர்பார்த்த  ரெஸ்பான்ஸ் இல்லை. தண்ணீர் பிரச்னை, பசுமை வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு, கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாகப் பிரிக்காதது போன்றவை ஆளுங்கட்சிக்குப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அமைச்சர் மோகன், தனது சாதியை மட்டுமே முன்னிலைப்படுத்துவதால் மற்ற சமூகத்தினர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் ஓட்டுக்கள் தி.மு.க-வுக்கு விழும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

தே.மு.தி.க வேட்பாளர் ஈஸ்வரன் சேலம் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் பணியாற்று​வதால் தொகுதியில் நல்ல பரிச்சயம். பா.ம.க., ஐ.ஜே.கே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஓட்டு கைகொடுக்கும் என்பது தே.மு.தி.க-வின் எதிர்பார்ப்பு. ஆனால், பா.ம.க-வினர் முழு ஈடுபாட்டுடன் வேலை பார்க்​காதது தே.மு.தி.க-வை திகிலடைய வைத்துள்ளது.

மணிமாறனுக்கு மகுடம் ரெடி என்பதுதான் மக்களின் குரலாக இருக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:01 pm

 
இரும்பு நகரமான சேலத்தில் தகதகக்கும் வெயிலையும் தாண்டி அனல் பறக்கிறது அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால்!
தி.மு.க. வேட்பாளராக உமாராணியும், அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வமும், தே.மு.தி.க-வில் சுதீஷும் களத்தில் சுழன்று வருகிறார்கள். இவர்கள் தவிர, காங்கிரஸில் மோகன் குமாரமங்கலம், ஆம் ஆத்மி சதீஷ்குமார் என களம் சூடுபறக்கிறது.

சேலம் தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வன்னியர் வாக்குகள் இருக்கிறது. பா.ம.க-வில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருள், தொகுதி முழுக்க பிரசாரத்தை முடித்துவிட்ட நிலையில், கூட்டணிக்கு தொகுதி கைமாறியது. ஆனாலும், பா.ம.க. தலைமையால் அருளை சமாதானப்படுத்த முடியவில்லை. அருளின் ஆதரவாளர்களும் சமாதானம் ஆகவில்லை. இந்தச் சூழ்நிலையால் தே.மு.தி.க. வேட்பாளரான சுதீஷ், பா.ம.க-வின் ஆதரவு முழுமையாகக் கிடைக்காமல் திண்டாடி வருகிறார். விஜயகாந்த்தின் மைத்துனர் என்பதால், தே.மு.தி.க-வினர் வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள். ஆடிட்டர் ரமேஷ் படுகொலைக்குப் பிறகுதான் பி.ஜே.பி. வேகம் பெற்றது. அந்தவகையில் அனுதாப ஓட்டுகள் விழும் என தே.மு.தி.க. நினைக்கிறது. சேலத்துக்கு மோடி வந்து சென்றதும் சுதீஷ§க்கு உற்சாகம் அளித்துள்ளது. வெளியூர்காரர் என்பது பெரிய மைனஸாகப் பார்க்கப்படுகிறது.

தி.மு.க. வேட்பாளர் உமாராணிக்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தது. பிரசாரம் தொடங்கிய பிறகு அது மெள்ளக் குறைந்தது. 'நான் உங்க வீட்டுப் பொண்ணு. இதே சேலத்துலதான் நான் இருக்கேன். எப்போ வேண்டுமானாலும் நீங்க வந்து என்னைப் பார்க்கலாம்’ என்ற உமாராணியின் பிரசாரத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு. அதே நேரத்தில் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இரட்டை மனதுடன் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவாளர்கள் வாக்குகள் உமாவுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். பா.ம.க. அருளின் ஆதரவாளர்கள் மறைமுகமாக உமாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது அவருக்கு இன்னொரு ப்ளஸ்.

கவுன்சிலர் தேர்தலில் நின்று தோற்றுப்போன பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க-வில் சீட் வழங்கப்பட்டுள்ளது. இவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான் ப்ளஸ். இவர், மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜின் தீவிர ஆதரவாளர். சேலம் அ.தி.மு.க-வுக்குள் இருக்கும் கோஷ்டிப்பூசல்களும், ஆளுங்கட்சிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் குடிநீர், மின்தடைப் பிரச்னைகளும் இவருக்கு மைனஸ்.

காங்கிரஸ் வேட்பாளரோ எப்படியாவது கணிசமான வாக்குகளை வாங்கிவிடத் துடிக்கிறார்.

இங்கு தி.மு.க. வேட்பாளர் உமாராணிக்கும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ§க்கும் தான் போட்டி. சுதீஷ§க்கு பா.ம.க. முழு ஒத்துழைப்பு தராததால் உதயசூரியனின் செல்வாக்கில் உமாராணி முன்னுக்கு வருகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:01 pm

கோழியும் லாரியும் நிறைந்திருக்கும் நாமக்கல்லில் சிட்டிங் எம்.பி-யான காந்திசெல்வனுக்கே தி.மு.க. மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ-வான பி.ஆர்.சுந்தரமும், தே.மு.தி.க-வில் வழக்கறிஞர் எஸ்.கே.வேலுவும் களமிறங்கியுள்ளனர். சுப்ரமணியன் என்பவர் காங்கிரஸ் வேட்பாளர்.
 
நாமக்கல் மாவட்டம் முழுக்கவே குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பி.ஆர்.சுந்தரம் ஓட்டுக் கேட்டு செல்லும் இடங்களில் ஆளுங்கட்சி மீது உள்ள கோபம் எதிரொலிக்கிறது. செலவுக் கணக்கு காரணமாக மேடையில் வேட்பாளர் இல்லாமல் ஜெயலலிதாவின் முதல் பிரசாரக் கூட்டம் நடந்தது நாமக்கல்லில்தான்! இதனால், வேட்பாளரின் முகம் பெரும்பாலோனோருக்குத் தெரியவே இல்லை. கட்சிக்குள் இருக்கும் சில கோஷ்டிப் பிரச்னைகளால் பிரசாரத்திலும் நிறையவே சுணக்கம் தெரிகிறது.

எல்லாவற்றையும் தாண்டி இரட்டை இலை என்ற செல்வாக்கு சுந்தரத்தை கரை சேர்க்கும் என்பது அ.தி.மு.க-வினரின் நம்பிக்கை.

தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான காந்திசெல்வனை யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்க முடியும். கட்சியில் மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், தொகுதி முழுக்கவே நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆனால், தொகுதிக்காக கடந்த ஐந்து வருடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் பெரிதாகக் கொண்டுவரவில்லை என்பது அவருக்கு மைனஸ். ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருக்கும் கோபம், காந்திசெல்வனுக்குப் ப்ளஸ் ஆக மாற வாய்ப்பு இருக்கிறது. ஸ்டாலின் பிரசாரத்துக்கு வந்துபோன பிறகு, இன்னும் கூடுதல் தெம்புடன் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் காந்தி. நாமக்கல் மாவட்டத்தில் கணிசமாக இருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது காந்தியின் கூடுதல் பலம்.

தே.மு.தி.க. வேட்பாளரான எஸ்.கே.வேலு, நாமக்கல்லில் நன்கு அறிமுகமானவர் என்றாலும், தொகுதி முழுக்க அறியப்படாதவராகவே இருக்கிறார். மோடி அலையால், இளைஞர்களின் வாக்குகளும், கூட்டணி கட்சி வாக்குகளும் தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் வேலு.

காங்கிரஸ் கட்சிக்குக் குறிப்பிடும்படியான வாக்கு வங்கி நாமக்கல்லில் இருக்கிறது. ஆனால், அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு இருக்கிறது. இருந்தாலும் கை சின்ன வாக்குகளை வைத்து எப்படியும் டெபாசிட் வாங்கிவிட முடியும் என்பது காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரமணியத்தின் கணக்கு.

க்ளைமாக்ஸில் காந்திசெல்வனை முந்தி டாப் கியர் போடுகிறார் சுந்தரம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:02 pm

 
டாலர் சிட்டியான திருப்பூர் ஐந்து முனைப் போட்டிகளால் திணறிக்கொண்டு இருக்கிறது.

அ.தி.மு.க. வேட்பாளரான சத்தியபாமா, கோபி யூனியன் சேர்மனாக இருந்தவர். இவரை வேட்பாளராக அறிவித்ததும் கட்சியில் நிறைய அதிருப்திகள் கிளம்பியது. தலைமைக்குப் புகார்களும் பறந்தது. கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை பகுதிகள் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கான ஏரியா என்பது சத்தியபாமாவின் ப்ளஸ். அதே நேரத்தில் உட்கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல் அவரது வெற்றிக்கு ஆப்பு வைத்துவிடுமோ என்ற பயமும் சத்தியபாமாவுக்கு நிறையவே இருக்கிறது. சோர்ந்து போயிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சத்தியபாமாவுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்ற குரலும் கோபி பகுதியில் உரக்கக் கேட்கிறது. திருப்பூரில் மின்வெட்டுப் பிரச்னையால் தொழில் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாக மாறும் வாய்ப்புள்ளது.

தி.மு.க. வேட்பாளர் டாக்டர் செந்தில்நாதன் வயதில் மூத்தவர். ஆனால், முதல் முறையாகத் தேர்தல் களத்தில் நிற்கிறார். உட்கட்சிப் பூசலால் டாக்டர் செய்வதறியாமல் குழப்பத்தில் இருக்கிறார். தி.மு.க-வின் வாக்கு வங்கியும், சிறுபான்மையினர், தலித் வாக்குகளும் தனக்கு சாதகமாக இருக்கும் என்பது டாக்டரின் எண்ணம்.

மோடி துதி பாடி முரசை பலமாகக் கொட்டுகிறது தே.மு.தி.க. மின்வெட்டு, தொழில் பிரச்னை, விவசாயப் பிரச்னைகளை முன்வைத்து, 'மோடி வந்தால் எல்லாம் சரியாகும்’ என வாக்கு கொடுத்து வாக்கு கேட்கிறார் தே.மு.தி.க. வேட்பாளர் தினேஷ்குமார். திருப்பூர் மாவட்டத்தில் நன்கு அறிமுகமானவர். மோடி அலையில் எப்படியும் கரையேறிவிடுவோம் என நம்புகிறார். பி.ஜே.பி.யின் வாக்குவங்கி இவருக்கு பலம் கொடுக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். கௌரவமான வாக்குகளைப் பெற்று டெபாசிட் வாங்கிவிட வேண்டும் என்பதுதான் இளங்கோவனின் தாகமாக இருக்கிறது. கோஷ்டிகளை மறந்து இளங்கோவனுக்காக காங்கிரஸ் கட்சியினர் ஒன்று சேர்ந்து வேலை பார்க்கின்றனர். தொழில் பிரச்னையில் மத்திய அரசு மீதான அதிருப்திதான் இளங்கோவனின் மைனஸ்.

இடதுசாரிகள் தரப்பில் கதிர் அரிவாள் கொடி பிடிக்கிறார் சுப்பராயன். மிக உற்சாகமாய் தேர்தல் வேலைகளை பார்க்கின்றனர் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும்.

காங்கிரஸும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கௌரவமான வாக்குகளுக்காகப் போராட, ஏகப்பட்ட சிக்கலில் தி.மு.க-வும் திணறுகிறது. வெற்றிக்கு முட்டி மோதுவது இரட்டை இலையும், முரசும்தான்! அதில் சக்ஸஸ் சத்தியபாமா என்ற குரல்தான் திருப்பூரில் ஓங்கி ஒலிக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:03 pm

 
மஞ்சள் மணக்கும் ஈரோட்டில் பி.ஜே.பி. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, அ.தி.மு.க. சார்பில் செல்வக்குமார சின்னையன், தி.மு.க. வேட்பாளராக பவித்திரவள்ளி, காங்கிரஸ் சார்பில் கோபி ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அ.தி.மு.க-வில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பிரசாரத்தைத் தொடங்கியவர் செல்வகுமார சின்னையன். கட்சியின் வழக்கறிஞர் பிரிவில் பொறுப்பு வகிப்பவர் என்பதைத் தவிர, கட்சி விவகாரங்களில் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர். வழக்கறிஞர் தயவிலேயே வென்றுவிடலாம் என்று அவரும் ஆரம்பத்தில் பிரசாரப் பணிகளை செய்தார். அதிருப்தி இருந்தாலும் கட்சி நிர்வாகிகள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் முதல்வருக்குப் பயந்து பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரத்தில் சுரத்து ஆரம்பத்தில் இருந்தே குறைவாக இருக்கிறது.

தொகுதியின் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்திக்கு ஏற்கெனவே பெரும்பான்மையான கிராமங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. எளிதாக சந்திக்கக்கூடிய பிரமுகர் என்பது பலம்.

சில நாட்களுக்கு முன் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக, அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் கிட்டுச்சாமி வங்கி அதிகாரிகளை மிரட்டினார். இதையடுத்து, இந்த விவகாரத்தை ம.தி.மு.க-வினர் கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்தனர். நமக்கு கிடைக்கும் வங்கிக் கடனை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்தான் தடுக்கிறார் என்றும் விவசாயிகள் நம்புவ‌தால், அ.தி.மு.க-வின் செல்வாக்கில் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிற‌து. 'கடந்த முறை அ.தி.மு.க. தயவு இருந்ததால்தான் கணேசமூர்த்தியால் ஜெயிக்க முடிந்தது’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். இந்த முறை ஈஸ்வரனின் கொங்கு கட்சி ஆதரவு உள்ளதால் ம.தி.மு.க-வினர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். மோடி வந்து சென்றதும் அவருக்கு கைகொடுக்கிறது.

அ.தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் கடும் போட்டியில் இருக்கும் சூழ்நிலையில், தி.மு.க-வின் வேட்பாளர் பவித்திரவள்ளி பகீரதப் பிரயத்தனம் செய்துவருகிறார். இவர் அரசியலுக்கும் புதுசு, தி.மு.க-வுக்கும் புதுசு, தொகுதிக்கும் புதுசு என்பதால் வெறுமனே உதயசூரியன் சின்னத்தை மட்டுமே நம்பி நிற்கிறார்.

டெபாசிட் தொகையைத் தக்கவைக்க முடியுமா என்பதே காங்கிரஸின் நிலை. இங்கு பிரபலமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருப்பூர் வேட்பாளராகப் போய்விட்டதால் தனிமையில் போராடிக்கொண்டு இருக்கிறார் கோபி.

பி.ஜே.பி. கூட்டணி பலமும் சிட்டிங் எம்.பி-யாக நற்பெயரும் இருப்பதால், ம.தி.மு.க. வேட்பாளருக்கே ஏறுமுகம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:03 pm

தமிழகத்தின் ஜில்ஜில் பிரதேசமான நீலகிரி இப்போது அரசியல் சூட்டில் அனல் பறக்கிறது.
 
தி.மு.க-வில் ஆ.ராசா. அ.தி.மு.க-வில் கோபாலகிருஷ்ணன், காங்கிரஸில் காந்தி ஆகியோர் களத்தில் நிற்கின்றனர். இதில் பி.ஜே.பி. வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்புமனு தள்ளுபடியாகிவிட்டது. அதனால் நீலகிரி மும்முனைப் போட்டியில் மூச்சு முட்டுகிறது.
ஜெயலலிதாவின் எஸ்டேட் கொடநாடு அமைந்திருக்கும் தொகுதி என்பதால் அ.தி.மு.க-வினர் கூடுதல் கவனத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். அதே நேரத்தில் கோஷ்டிகளுக்கும் இங்கே பஞ்சம் இல்லை. 'குன்னூர் நகராட்சியில் சர்ச்சைகளில் சிக்கிய கோபாலகிருஷ்ணனுக்கு குன்னூரிலேயே செல்வாக்கு இல்லை. இவரை வைத்துக்கொண்டு எப்படி ஜெயிப்பது?’ என வெளிப்படையாகவே அ.தி.மு.க-வினர் புலம்பினர். பி.ஜே.பி. வேட்பாளர் வேட்புமனு வாபஸ் ஆகிவிட்ட பின்னர்தான், அ.தி.மு.க-வினருக்கு நிம்மதி பிறந்துள்ளது. பி.ஜே.பி-க்கு ஆதரவான வாக்குகள் எப்படியும் தங்கள் பக்கம் சாய்ந்துவிடும் என்று உற்சாகத்தில் வலம்வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் முன்னிலை வகிக்கும் என்பதை உணர்ந்த தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா, போகும் இடங்களில் எல்லாம் அதற்கு விளக்கம் கொடுத்து வருகிறார். ஆனாலும், படித்தவர்கள் மத்தியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் மறையாது என்பது அ.தி.மு.க-வின் நம்பிக்கை. தி.மு.க-வுக்குள் இருக்கும் கோஷ்டிகானங்களை மறந்து அனைவரும் ராசாவுக்காக களமிறங்கியுள்ளனர். மலை மீது ராசாவுக்கு செல்வாக்கு இருந்தாலும், சமதளப் பகுதியில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு அமோகமாக இருக்கிறது. 

நீலகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கென தனி வாக்கு வங்கி உண்டு என சொல்லும் காங்கிரஸ் கட்சி, அதை நிரூபிக்க களமிறங்குகிறது. நீலகிரி தொகுதியில் எட்டு முறை போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றவர் பிரபு. அவர் இப்போது கோவையில் போட்டியிடுகிறார். அந்த செல்வாக்கை வைத்து காங்கிரஸ் வேட்பாளராக காந்தி நிற்கிறார். 'எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல... கௌரவமான வாக்குகளை வாங்கிக்காட்ட வேண்டும்’ என்று கைகளை உயர்த்திச் சொல்கிறார்கள் காங்கிரஸார்.

இறுதி நிலவரப்படி கோபாலகிருஷ்ணன் சிகரம் தொடுவார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:04 pm

 
வழக்கமான தேசியக் கட்சிகள் மோதும் கோவை நாடாளுமன்றத் தொகுதியில், இந்த முறை தேசியக் கட்சிகளோடு மாநிலக் கட்சிகளும் சேர்ந்து களமிறங்க... பரபரக்கிறது கோவை. 

அ.தி.மு.க. சார்பில் நாகராஜன், தி.மு.க. சார்பில் கணேஷ்குமார் என இருவர் புதுமுகங்கள். பி.ஜே.பி. சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன், காங்கிரஸில் ஆர்.பிரபு ஆகிய இருவரும் முன்னாள் எம்.பி-க்கள். மார்க்சிஸ்ட் சார்பில் சிட்டிங் எம்.பி. நடராஜனும் களத்தில்.
கட்சியில் அதிருப்தி காரணமாக வெளியேறியவர்களை ஒருங்கிணைப்பது, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களின் வாக்குகளைப் பெற கூடுதல் கவனம் செலுத்துவது, பிரசாரத் திட்டமிடல்கள் ஆகியவை நாகராஜனுக்கு கைகொடுக்கும் அம்சங்கள். ஆனால் அதிகரிக்கும் மின் தடை, தொழில்கள் நசிவு, சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டது, கோவை மாநகராட்சி பகுதிகளில் மேயர், கவுன்சிலர்கள் மீது குவிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் ஆகியவை அ.தி.மு.க-வுக்கு மைனஸ்.

மின் தடையை அ.தி.மு.க-வுக்கு எதிரானப் பிரதானமான ஆயுதமாக்கி தேர்தல் களத்தில் நிற்கும் தி.மு.க., கட்சியில் உள்ள கோஷ்டிப் பூசல்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறது. புறநகர் மாவட்டச் செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கும், மாநகர மாவட்டச் செயலாளர் வீரகோபாலுக்கும் உள்ள கோஷ்டிப் பூசல், தேர்தல் வேலைகளில் வெளிப்படையாகத் தெரிகிறது. 'கோவை தொகுதியில் சிறுபான்மையினர்கள், தலித் வாக்குகள் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சம். அதில் எப்படியும் கணிசமான வாக்குகள் நமக்குத்தான். கடந்த தேர்தலில் அ.தி.மு.க-விடம் இருந்த வாக்குகளை கம்யூனிஸ்ட்., ம.தி.மு.க. வாக்குகள் கணிசமாகப் பிரிக்கிறது. எனவே எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம்' என்பது தி.மு.க-வின் கணக்கு.

மோடியின் பிரசாரத்தையும், இளைஞர்களின் வாக்குகளையும் நம்பிக்கையோடு எதிர்பார்த்துள்ளது பி.ஜே.பி. கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கொங்கு கட்சியும், தே.மு.தி.க-வும் பெற்ற வாக்குகளைக் கணக்கிட்டு, மோடிக்கான வாக்குகளையும் சேர்த்துப் பார்த்தால் வெற்றி நிச்சயம் என மற்றொரு கணக்கும் சொல்கிறார்கள். தொழில் நகரம் என்பதால் தொழில் அதிபர்களது ஆதரவும் பி.ஜே.பி-க்கு இருக்கிறது.

காங்கிரஸ் வேட்பாளரான பிரபு எப்படியும் கௌரவமான வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்கிறார். சிட்டிங் தொகுதி என்பதால், கட்சியின் பலத்தைக் காட்ட வாய்ப்பாக நினைத்து இதுவரை இல்லாத அளவு உற்சாகத்தோடு பணியாற்றுகின்றனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

இறுதிகட்ட சூழ்நிலையில் போட்டி என்னவோ அ.தி.மு.க-வுக்கும் பி.ஜே.பி-க்​கும்தான்! அந்தப் போட்டியில் இலையை மறைக்கிறது தாமரை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:05 pm

அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, முதன்முதலில் களம் இறங்கிய தொகுதி திண்டுக்கல். இங்கு தே.மு.தி.க. சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி-யான சித்தன், சி.பி.எம். சார்பில் மாவட்டச் செயலாளர் பாண்டி, ஆம் ஆத்மி சார்பில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளஞ்செழியன் ஆகியோர் களத்தில் இருந்தாலும், போட்டி என்னவோ தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையில்தான்! 

 எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் இரட்டை இலைக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், நிலக்கோட்டை நகரச் செயலாளர் உதயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட... அ.தி.மு.க-வினர் சோர்ந்து போனார்கள். இவர் தொகுதி முழுவதும் அறிமுகம் இல்லாதவர் என்பதோடு, உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலராக நின்று தோல்வியைத் தழுவியவர் என்பதும் தொண்டர்களின் சோர்வுக்கு முக்கியக் காரணம்.

அதே நேரம் அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த முன்னாள் துணை சபாநாயகரான காந்திராஜனை வேட்பாளராகக் களமிறக்கியது தி.மு.க. தங்கள் வேட்பாளர் தொகுதி முழுக்க நன்கு அறிமுகமானவர் என்பதால், தி.மு.க-வினர் உற்சாகத்தோடு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். குடிநீர் வடிகால் வாரியத் தலைவராக இருந்தபோது திட்ட வரைவு தயார் செய்து திண்டுக்கல் நகருக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் அரசு மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனைக்கூடம் உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுத்தது, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்ய முயன்றபோது அதைப் போராடித் தடுத்தது... என தனது முந்தைய கால சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டு வருகிறார் காந்திராஜன்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லி வாக்கு கேட்டு வருகிறார்கள். கொடைக்கானல் மலையில் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் அ.தி.மு.க. வேட்பாளரை ஊருக்குள் விடவே இல்லை. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நேரடியாக அந்தக் கிராமங்களுக்குப் போய் பேச்சுவார்த்தை நடத்தியும், இன்னமும் மக்கள் சமாதானம் ஆனதாகத் தெரியவில்லை. திண்டுக்கல், பழநி பகுதிகளில் கணிசமான வாக்குகளை கம்யூனிஸ்ட் பிரிப்பதும் அ.தி.மு.க-வுக்குப் பாதகமாக இருக்கிறது. தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் பெயரளவுக்குதான் பிரசாரம் நடக்கிறது. காங்கிரஸ் களத்தில் இருந்தாலும், காட்சியில் இல்லை.

காந்திராஜன் பக்கமே காற்றடிப்பதால், வெற்றிக் கனியைப் பறிக்கும் வாய்ப்பு தி.மு.க-வுக்கே அதிகம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:05 pm

 
டெக்ஸ்டைல் நகரமான கரூர் தொகுதி... திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் வரை விரிந்துள்ளது. அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.பி. தம்பிதுரையும், தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் சின்னச்சாமியும், தே.மு.தி.க. சார்பில் என்.எஸ்.கிருஷ்ணனும், காங்கிரஸில் ஜோதிமணியும் களமிறங்கியுள்ளனர். ஆனாலும் போட்டி என்னவோ அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான்!

தம்பிதுரையை எப்படியாவது கரை சேர்த்துவிட வேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இங்கே வேட்பாளரது ஒரே பலம் இரட்டை இலை மட்டும்தான். ஓட்டு கேட்டுச் செல்லும் பல ஊர்களில் தம்பிதுரைக்கு எதிர்ப்பு பலமாகவே இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் தொகுதிப் பக்கமே எட்டிப் பார்க்காததும், தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யாததுமே அதற்குக் காரணம். குடிநீர் பிரச்னை, பவர் கட் என அத்தனையும் ஒன்று சேர்ந்திருப்பது ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பைக் கூட்டியிருக்கிறது.

தி.மு.க. வேட்பாளர் சின்னச்சாமி மூத்த அரசியல்வாதி. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-வுக்கு வந்தவர். இவருக்கு அ.தி.மு.க-விலும் நண்பர்கள் அதிகம். பதவியில் இல்லாத சமயத்திலும், தொகுதிக்குள் நடக்கும் எல்லா நல்லது கெட்டது​களுக்கும் தவறாமல் தலைகாட்டி வந்திருக்கிறார். கட்சியைத் தாண்டி நிறையவே நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். மாவட்டப் பொறுப்பாளரான நன்னியூர் ராஜேந்திரனும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வான கே.சி.பழனிசாமியும் வரிந்துகட்டிக்கொண்டு சின்னச்சாமிக்காக வேலை செய்கிறார்கள். அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலரே, 'சின்னச்சாமிக்காக ஓட்டுப் போடுவோம்’ என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள். மணப்பாறை, விராலிமலை சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் அ.தி.மு.க-வுக்கான செல்வாக்கு கூடுதலாக இருக்கிறது.

தே.மு.தி.க. வேட்பாளரான என்.எஸ்.கிருஷ்ணன் முன்பு அ.தி.மு.க-வில் இருந்தவர். இங்கே கூட்டணி கட்சிகளின் பலமும் இல்லாததால் கிருஷ்ணனின் பயணம் ஸ்லோவாகத்தான் இருக்கிறது. மோடி அலையை மட்டுமே கிருஷ்ணன் நம்பியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தொகுதி முழுக்க நன்கு அறிமுகமானவர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். 'என்னிடம் தேர்தல் செலவுக்குப் பணம் இல்லை. நீங்க கொடுத்தால் வாங்கிக்குவேன்...’ என்று கேட்டபடியே வாக்கு சேகரிக்கிறார் ஜோதிமணி. கதர் சட்டை அணிந்த பழுத்த காங்கிரஸ் பெரியவர்கள் நான்கு பேர் புடைசூழ பிரசாரத்துக்கு வருகிறார் ஜோதிமணி. டெபாசிட் வாங்கினால் போதும் என்பதே ஜோதிமணியின் எதிர்பார்ப்பு.

எப்படிப் பார்த்தாலும் சிக்குபுக்கு ரயில் ஏறி டெல்லிக்குக் கிளம்பத் தயா​ராகி​விட்டார் சின்னச்சாமி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:06 pm

 
ஆறு முனை போட்டியில் விழிபிதுங்கி நிற்கிறது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி.

அ.தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.பி-யான குமார், தி.மு.க. சார்பில் முன்னாள் திருச்சி துணை மேயர் அன்பழகன், காங்கிரஸ் சார்பாக முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், தே.மு.தி.க. சார்பில் மாநில மாணவர் அணி செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார், சி.பி.எம். சார்பில் ஸ்ரீதர் ஆகியோர் களம் காண்கிறார்கள்.

பரவலாக வாக்குகளைக்கொண்ட கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளன அரசியல் கட்சிகள்.

சிட்டிங் எம்.பி-யான குமார், கடந்த மூன்று வருட அ.தி.மு.க. ஆட்சியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்குத் திட்டங்கள் கொண்டுவரவில்லை என்பது மைனஸ். ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் இந்தத் தொகுதிக்குள் வருகிறது என்பது கூடுதல் பலம். அதனால், அமைச்சர்களின் ஒத்துழைப்பும் பலமாக இவருக்கு இருக்கிறது.

தி.மு.க. வேட்பாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர விசுவாசி. நேருவுக்கு எதிரணியாகச் செயல்படும் திருச்சி சிவா, செல்வேந்திரன் உள்ளிட்டவர்களை அன்பழகன் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை எனும் பேச்சு இருக்கிறது. தொகுதியில் உள்ள முத்தரையர் வாக்குகளைப் பெற நேரு முயற்சி எடுத்தார். இந்த நிலையில் முத்தரையர் சங்கத் தலைவர் ஆர்.விஸ்வநாதன் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது இவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மாநாடு நடத்தி சூட்டைக் கிளப்பிய நகரம் என்பதால், அதனைக் கைப்பற்றத் துடிக்கிறார் நேரு.

தே.மு.தி.க. வேட்பாளர் விஜயகுமாருக்கும் திருச்சி மாநகரச் செயலாளர் விஜயராஜனுக்கும் ஏழாம் பொருத்தம். பி.ஜே.பி. ஆதரவு, மோடி வந்து பேசியது ஆகியவற்றை அதிகமாக நம்பி நிற்கிறார் விஜயகுமார்.

காங்கிரஸ் நிர்வாகிகள் தனித்தனி அணியாக நீடிப்பது சாருபாலாவுக்கு சறுக்கல். திருச்சி மேயராக இருந்தவர். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். தனக்கு வெற்றிவாய்ப்பு குறைவுதான் எனத் தெரிந்துகொண்ட சாருபாலா, செயல்பாடுகளில் சுணக்கம் காட்டிவருகிறாராம்.

சி.பி.எம். வேட்பாளர் ஸ்ரீதரும் ஆம் ஆத்மி வேட்பாளர் ரவியும் ஓரளவுக்கு வாக்குகளைப் பிரிப்பார்கள்.

கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சி வந்த ஜெயலலிதா, 'திருச்சி நாடாளுமன்றத் தொகுதியும் எனது தொகுதிதான்’ என்று பேசிவிட்டுப் போனார். அதனால் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆக, கடைசி கட்டத்தில் சிட்டிங் எம்.பி-யான குமார் எல்லோரையும் ஓவர்டேக் செய்வார் என்பது தெரிகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:06 pm

அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்த பெரம்பலூர் தொகுதியை கடந்த மூன்று முறையாக வசப்படுத்தி வைத்திருக்கிறது தி.மு.க.
 
இந்த முறை இங்கு உதயசூரியன் சார்பில் சீமானூர் பிரபுவும் இரட்டை இலை சார்பில் மருதராஜாவும் தாமரை வேட்பாளராக இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்துவும் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ-வான ராஜசேகரனும் நிற்கின்றனர்.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தொகுதியில் பரவலாக உள்ள முத்தரையர் வாக்குகளைக் குறிவைக்கின்றன. ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர், உடையார் சமூக வாக்குகளைக் குறிவைத்துள்ளார். 

அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜா இருப்பில் இருந்தது எல்லாம் காலியாகி, பூர்வீக சொத்தையும் விற்று தேர்தல் செலவு பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பெரம்பலூரைத் தாண்டி இவர் பிரபலம் இல்லை என்றாலும் அவர் கணிசமான முத்தரையர் வாக்குகளைப் பெறுவார். பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் சிவபதி, திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான ரத்தினவேல் ஆகியோர் திடீர் திடீரென காணாமல் போய்விடுவதால் திணறுகிறார்  மருதராஜா.

தி.மு.க. சார்பில் சீமானூர் பிரபு போட்டியிடுகிறார். இவரை ஜெயிக்க வைக்க கே.என்.நேரு துடியாய் துடிக்கிறார். சிட்டிங் எம்.பி-யான நடிகர் நெப்போலியன் தொகுதிப் பக்கமே வராததால் அந்தக் கோபம் தி.மு.க. மீது இருக்கிறது. முத்தரையர் சமூக வாக்குகள் மூன்று வேட்பாளர்களுக்கும் பிரிந்தாலும் மற்ற சமுதாய ஓட்டுகள் கணிசமாகத் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் என கணக்கு போடுகிறார்கள். குரும்ப கவுண்டர்கள் சங்க ஆதரவு தி.மு.க-வுக்குக் கிடைத்துள்ளதால் கூடுதல் தெம்புடன் உள்ளது சூரியன் தரப்பு.

தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தாராளம் காட்டுகிறார் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர். தனது கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என பெரும்படை பெரம்பலூரில் முகாமிட்டு தேர்தல் வேலைகளைக் கவனித்து வருகிறது. தே.மு.தி.க. தவிர ம.தி.மு.க., பி.ஜே.பி., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி இல்லை. இது பாரிவேந்தருக்கு மைனஸ்.

காங்கிரஸ் சார்பில் நிற்கும் ராஜசேகர், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை வெளுத்து வாங்கினார். நாளடைவில் அவரது பிரசார வேகம் குறைந்துவிட்டது.

தி.மு.க-வுக்கும் ஐ.ஜே.கே., அ.தி.மு.க-வுக்​கும்​தான் கடுமையான போட்டி. அதில் வேந்தரை முந்துகிறார் பிரபு.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by சிவா on Tue Apr 22, 2014 4:07 pm

 
ஜெயலலிதா முதன்முதலில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஊர் கடலூர். இந்தத் தொகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் அருண்மொழிதேவன் அ.தி.மு.க. வேட்பாளர். இவரோடு மல்லுக்கட்ட தி.மு.க-வில் நந்தகோபால கிருஷ்ணன், தே.மு.தி.க-வில் ஜெயசங்கர், காங்கிரஸ் சிட்டிங் எம்.பி. கே.எஸ்.அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சி பாலசுப்ரமணியன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன், கடலூர் அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளர் என்பதால் கட்சி வட்டாரத்தில் அறிமுகமானவர். இவருக்கு பக்கபலமாக அமைச்சர் எம்.சி.சம்பத்தும் களமிறங்கிச் சுழன்று வருகிறார். கட்சியைத் தாண்டி மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பது அருண்மொழிதேவனுக்குப் ப்ளஸ்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் பலத்தை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார் தி.மு.க. வேட்பாளர் நந்தகோபாலகிருஷ்ணன். தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களையே தங்களது பிரசாரத்தில் பிரதானமாக வைக்கிறது தி.மு.க. மின்தடையும், குடிநீர் பிரச்னையும் தொகுதி முழுக்க விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அது தி.மு.க-வுக்கு சாதகமாக இருக்கும். தொகுதியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சி வேட்பாளர்களுமே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

பி.ஜே.பி. ஆதரவுடன் தே.மு.தி.க. வேட்பாளர் ஜெயசங்கர் தன்னுடைய கட்சி பலத்தையும், பண பலத்தையும் மட்டுமே நம்பி சுழல்கிறார். கூட்டணி கட்சியினருடன் அரவணைப்பு குறைவாக இருக்கிறது. வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர் இங்கே தங்கள் கூட்டணியில் போட்டியிடுவதால் பா.ம.க-வும் சுணக்கம் காட்டி வருகிறது. வன்னியர் அல்லாதவர்களின் ஓட்டுக்களும் தனக்குக் கிடைக்கும் என்பது ஜெயசங்கரின் நம்பிக்கை.

கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலசுப்ரமணியனும் தங்கள் பலத்தைத் தெரிந்துகொள்ள தோழர்களுடன் கிராமம் கிராமாகச் சுற்றுகிறார். கௌரவமான வாக்குகளை வாங்கியே தீர வேண்டும் என்பதே இவரது வேட்கையாக இருக்கிறது.

சிட்டிங் எம்.பி-யான காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.அழகிரி தொகுதிக்காகப் பெரிய அளவி​லான திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை என்ற கோபம் மக்களிடம் நிறையவே இருக்கிறது. அதனால் தொகுதிக்குள் அவர் சென்றாலும் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை.

களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள் ஐந்து பேராக இருந்தாலும் போட்டி என்னவோ தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும்தான். ஓட்டு வித்தியாசம் குறைவாக இருந்தாலும் கடலூர் அருண்மொழிதேவனுக்கு அடடே சொல்ல வைக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 40 தொகுதிகளின் நிலவரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum