ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம்

View previous topic View next topic Go down

600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம்

Post by சிவா on Fri Apr 18, 2014 10:29 pmஎத்தனையோ புது இயக்கங்கள், எழுச்சி, நிலையங்கள். ஆனால், காட்டாறு போல் ஓடி காளான்கள் போல் முளைத்து காணாமல் காலாவதியான இயக்கங்கள் பலப்பல... ஆனால் காலத்தையும் வென்று கலங்கா நிலையில் இருப்பது கடவுள் இயக்கங்களே என்பது நம் கண்கூடு.

அப்படி அறுநூறு ஆண்டுகளாக வளர்ந்து எழுந்து நிற்கும் ஒரு உன்னதமான ஆன்மீக இயக்கம் அஹோபில மடம். 'அஹோ' என்றால் குகை 'பிலம்' என்றால் சிங்கம். அதனால்தான் தமிழில் சிங்கவேள்குன்றம் என்றார்கள். ஆந்திர மாநிலத்தில் கடப்பா - கர்னூலுக்கு அருகில் உள்ளது இந்தச் சிங்கவேள்குன்றம்.

அன்று முதல் இன்று வரை உலகத்தின் தலையாய கேள்வி ''கடவுள் இருக்கிறானா? இருந்தால் அவன் எங்கே வாழ்கிறான்?'' என்பதே.

இந்தக் கேள்விக்கு நீங்களும் நானும் பதில் சொன்னால் பலனில்லை. நமக்கெல்லாம் மேலான மகாத்மாக்கள் வந்து சொன்னாலும் லாபம் இல்லை. இது கடவுளுடைய விஷயம். இதைக் கடவுள்தான் தீர்மானித்தாக வேண்டும்.

கடவுள் உண்டு. அவன் எங்கும் நிறைந்திருக்கிறான். தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான் என்று அரட்டிக் கேட்டவர்களுக்கு மார்தட்டிச் சொன்ன இடம் மனிதனும் மிருகமுமாய் நரசிங்கமாய் நவின்ற இடம் அஹோபிலம்.

கி.பி. 1389ம் ஆண்டு நரசிங்கப் பெருமாளால் துவக்கிக் கொடுக்கப்பட்ட இடமே அஹோபில மடம்.

கி.பி. 1379ம் ஆண்டு செப்டம்பர் புரட்டாசித் திங்களில் சுக்லபட்சம், பஞ்சமி, ஜோடா நட்சத்திரத்தில் வியாழக்கிழமையில் தனுர் இலக்கனத்தில் கர்நாடகாவில் அமைந்துள்ள திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையில் கிடாம்பி ஸ்ரீ கேசவாச்சாரி சுவாமிக்குத் தோன்றியவர் ஸ்ரீநிவாசன் என்னும் தவப்புதல்வன்.

இவ ர் தன் தந்தையாரிடம் திரு. லச்சினை பெற்றுக் கொண்டு வைணவ நூல்களிலும் பயிற்சி பெற்று வந்தார். பிறகு காஞ்சி மாநகரத்தில் ஸ்ரீவரதாச்சாரியார் என்பவரிடம் பயின்று வரும் வேளையில் கனவிலே இறைவன் தோன்றி அஹோபிலத்திற்கு வரும்படி அருளினார். தன் குருவின் இசைவோடு சென்றடைந்த இவருக்கு மடத்தினை நடத்தி வசிஷ்டாத்வைத சித்தாந்தத்தைத் தழைக்கும்படி இறைவன் அருளினார். இதுதான் அஹோபில மடம் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த கதை.

பல வைணவ ஆன்மீக சிந்தனையாளர்களை உருவாக்கி, உரமிட்டு, வளர்த்தி, வாழ்த்தி இருந்தாலும் உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கிளைகளைக் கொண்டிருந்தாலும் சென்ற நாற்பத்தி நான்காவது பட்டத்தைச் சார்ந்த அழகியசிங்கர் செய்த சாதனை கோபுரத்தில் இட்ட விளக்காய் அல்லவா இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது.

ஆம், திருவரங்கத்தின் நிறைவு பெறாத அந்தக் கோபுரத்தைக் கட்டி முடித்து ஆசியாவிலேயே இதற்கு இணையான கோபுரம் இல்லை என்னும் இணையிலாச் சாதனையை ஒரு முக்கோல் பகவரால்தானே முடிக்க முடிந்தது. அரசனால் முடியாததை, அரசாங்கத்தால் இயலாததை, ஒரு அரைத்துண்டு துறவியால்தானே சாதிக்க முடிந்தது.

அஹோபிலத்தில் இயற்கை எழில் இன்றைக்கும் நிலைத்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. திருமங்கை ஆழ்வாரால் பத்துப்பாடல்களால் அருளப்பட்ட புனிதத் தலம் அஹோபிலம். அவரே இந்த இடத்தை அடைவது கடினம் என்கிற சான்றுகளையும் அந்தக் காலத்திலேயே தந்திருக்கிறார். நவ நரசிம்ம மூர்த்திகள் ஆண்டிருக்கும் இடம் அஹோபிலம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 600 ஆண்டுகளாக அருள்பாலிக்கும் அஹோபிலம்

Post by சிவா on Fri Apr 18, 2014 10:30 pm

அஹோபில நரசிம்மன் : இவர் திருமங்கை ஆழ்வார், எம்பெருமானார், ஸ்ரீ மகா தேசிகன், அன்னமாச்சார்யா, சைதன்ய தேவா, சங்கராச்சாரியார் போன்றவர்களால் புகழ்ந்து போற்றப்பட்டவர். இவரே இரண்யனை வதம் செய்வதர் என்று வழிபடப்படுகிறது.

குரோதா நரசிம்மன் (வராக நரசிம்மமூர்த்தி) :
இவர் பவாணசிணி ஆற்றங்கரையில் சிறிய குகைக்குள் லட்சுமியுடன் வீற்றிருக்கிறார்.

ஜுவாலா நரசிம்மன்: இவரை அடைவதற்கு கடினமான மலைப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அழகான ஆகாச ஜோதிர்கங்கா எனும் நீர் வீழ்ச்சியும் காணலம்.

யோகானந்த நரசிம்மன் : இவர் பிரகலாதனுக்கு யோகப் பயிற்சி கற்றுத் தந்ததாக வரலாறு.

காரஞ்சு அல்லது சாரங்க நரசிம்மன் : சாரங்கம் என்னும் வில் இவரைச் சார்ந்திருப்பதால் இவருக்கு இந்தப் பெயர்.

மாலோல நரசிம்மன் : மாலோல என்பதற்கு லட்சுமியால் விரும்பப்படுபவன் என்பது பொருள். இந்தப் பெருமாளின் மடியில் லட்சுமி வீற்றிருக்கிறாள்.

இவரின் உற்சவமூர்த்திதான் அஹோபில மடத்து ஜீயர்கள் அனைவருக்கும் வழிபாடு தெய்வமாக விளங்குகிறார்.

பாவந நரசிம்மன் : இவர் பாவநை ஆற்றால் இப்பெயரால் விளங்கப்படுபவர்.

சத்ரவட நரசிம்மன் : சத்ரவட என்றால் குடையின் கீழ் இருப்பவர் என்பது பொருள்.

பார்கவ நரசிம்மன் : பிருகு மகரிஷி வம்சத்தில் வந்த லட்சுமியை மணந்ததால் பார்கவ நரசிம்மன் அல்லது லட்சுமி நரசிம்மன் என்றழைக்கப்படுகிறார். பார்க்கவ நரசிம்மசாமி இங்குள்ள தசாவதார சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும்.

நவநரசிம்மனை ஆராதிப்போம். நலம் பெறுவோம்.

அழியாப் புகழ் கொண்டு அஹோபில மடம் ஆட்சி ஆள அரங்கனை ஆராதிப்போம்.

வேணுரான்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum