ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 SK

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பக்திக் கதைகள்!

View previous topic View next topic Go down

பக்திக் கதைகள்!

Post by சாமி on Sat Apr 12, 2014 9:10 pm

1) கங்கையில் நீராடினால் பாவம் போய்விடுமா?

கைலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில் எல்லொரது பாவமும் போய்விடுமா? ….. என்பதுதான் அந்த கேள்வி.

அதற்க சிவபெருமானோ அதற்கான பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்தி காட்ட எண்ணி பார்வதி என்ன செய்யவேண்டும் என்று கூறினார். அதன்படி சிவன் வயதான ரிஷி போலவும், பார்வதி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள். கங்கையில் தீர்த்தமாடி வரும் வழியில் சிறு பள்ளம் தோன்றச் செய்து சிவன் அதில் விழ்ந்து தத்தளித்தபடியும், பார்வதிதேவி பள்ளத்தின் அருகே நின்று தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டு கத்தியபடி இருந்தார்.

கங்கையில் குளித்துவிட்டு வந்த பலர் பள்ளத்தில் கிடந்த சிவனை வெளியே தூக்க வந்தபோது பார்வதிதேவி தனது கணவர் ஒரு உத்தமமான ரிஷி என்றும் அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பலாகி விடுவார்கள் என்று கூறி எச்சரிக்கை செய்தார். இதனால் உதவ வந்த அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர்.

அப்பொழுது ஒருவன் துணிந்து வந்து பள்ளத்தில் இருந்தவரை தூக்க முனைந்தான். பார்வதி தேவியார் அவனையும் எச்சரிக்கை செய்தார். ஆனால் அவன் தான் இப்பொழுதுதான் கங்கையில் நீராடி வருவதாகவும் தன்னுடைய பாவமெல்லாம் கங்கையில் கரைந்து விட்டது என்று உரைத்து அவரைத் தூக்க பள்ளத்தில் இறங்கினான். அவனது பதிலைக் கேட்டு சிவனும், சக்தியும் மகிழ்ந்து அவனுக்கு சுய உருவில் காட்சி தந்து ஆசி கூறி மறைந்தனர்.

இதிலிருந்து நம்பிக்கையோடு கங்கையில் நீராடுபவர்களுக்குத்தான் அவர்களது பாவம் போகும் என்ற உண்மையை பார்வதி தேவியார் உணர்ந்து கொண்டார். கங்கையில் நீராடுவது மட்டுமல்ல, எந்த ஒரு செயலின் பலனும் அதைச் செய்வர் கொண்டிருக்கும் நம்பிக்கையை பொறுத்தே கிடைக்கும்.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: பக்திக் கதைகள்!

Post by ayyasamy ram on Sun Apr 13, 2014 5:10 am

 
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பக்திக் கதைகள்!

Post by சாமி on Mon Apr 14, 2014 8:48 am

2. இந்த குரூபிக்கு என் பெண்ணைத் தரமாட்டேன்!திருமண ஏற்பாடுகள் எல்லாம் பிரமாதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருத்தி மட்டும் மனதில் விருப்பமில்லாமல் நடப்புகளை கவனித்துக் கொண்டிருந்தாள். இந்தத் திருமணம் நிறைவேறாமல் நின்றுவிட்டாலே அவளுக்கு சந்தோஷம்தான். இத்தனைக்கும் அது அவளுடைய மகளின் திருமணம். அந்தத் தாய்க்கு இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லை. காரணம், மகளுக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை..!
அந்த மாப்பிள்ளை... பரமேசுவரன்.

சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு, பித்தனைப்போல் நடமாடும் ஓர் ஆண்டியா தனக்கு மருமகனாக வரவேண்டும்? தன் அழகிய மகளுக்கு சிறிதாவது ஒப்புவானா அவன்? அந்தத் தாயின் கண்களில் நீர் பெருகியது. மகள் எப்படி சம்மதித்தாள்? தாய் மேனைக்குப் புரியவேயில்லை. கணவர் பர்வதராஜனுக்கும் இதில் எப்படி சம்மதம் ஏற்பட்டது?

மேனை, பார்வதியை மகளாகப் பெற்றிருந்தாளே தவிர, மகளுடைய தெய்வீகமான பூர்வீகத்தை அறியாதவளாகவே இருந்தாள்.

ஈசனை அவமதிக்கும் எண்ணத்துடன், தான் நடத்தவிருக்கும் யாகத்திற்கு அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை தட்சன். இத்தனைக்கும் அவனுடைய மருமகன்தானே சிவன்? ஆனால் தட்சன் மகனும் ஈசனின் மனைவியுமான தாட்சாயணிக்குத்தான் பொறுக்கவில்லை. நேராக அந்த யாகத்திற்குப் போய், தந்தையை நாலு கேள்விகள் கேட்டு விட்டு வருவது என்று கோபத்தால் கொந்தளித்தாள். தன் கணவரை, தன் தந்தையேயானாலும், அவமதிப்பதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. உலகே தொழும் ஐயனை, தட்சன் புறக்கணிப்பதா?

அங்கு போனால் அவமானம் நேரிடும் என்று ஈசன் சொல்லித் தடுத்தும் கேளாமல் புறப்பட்டாள். யாகசாலைக்கு வந்த அவள், அங்கே தானும் கவனிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படுவதை உணர்ந்தாள். ஆமாம். தன் மகள் தாட்சாயணியிடம் தட்சன் முகம் கொடுத்துப் பேசவில்லை. ஏற்கனவே கணவன் தடுத்தும் கேளாமல் புறப்பட்டு வந்து அவருடைய கோபத்திற்கு ஆளாகியாயிற்று. இப்போது தந்தையின் உதாசீனமும் வேறு! வருத்தமும், கோபமும், ஏமாற்றமும் கொப்பளிக்க, ஆர்ப்பரித்த மனத்தை அடக்க இயலாதவளாக, தட்சன் வளர்த்த யாகக் குண்டத்திலேயே வீழ்ந்தாள் தாட்சாயணி.

தந்தை தட்சனின் அகம்பாவத்துக்குச் சரியான பாடம் கற்பித்த வகையிலும், கணவன் சொல்லை மீறி தட்சனின் யாககூடத்திற்கு வந்ததால் அதற்கு தண்டனை என்ற வகையிலும் யாக குண்டத்தில் வீழ்ந்து மறைந்து போனாள் தாட்சாயணி. இந்த அபசாரம் நீங்க, பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாக அவதரித்து, பார்வதி என்னும் பெயர் கொண்டாள்.

பருவ வயதை அடைந்த அவளுக்கு அபசார விமோசனம் கொடுப்பதற்காக, இமயத்திலிருந்து இறங்கி வந்தார் கயிலைநாதன். பர்வதராஜன் நாட்டில் ஒரு வனத்தில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார். அதே வனத்திலிருந்த நீரோடையில் நீராட வந்த பார்வதியை மோனத்தவத்தில் மூழ்கியிருந்த மகேசன் ஈர்த்தார். பூர்வ ஜன்ம பந்தத்தால், உணர்வு மேலிட, அவருக்குப் பணிவிடை செய்யும் கடமையை மேற்கொண்டாள், பார்வதி. இதற்கு தந்தையார் பர்வதராஜனின் சம்மதமும் அவளுக்குக் கிடைத்தது. ஈசனுடைய கருணை வடிவம் அவள் மனதுக்கு அமைதியைத் தந்தது. அவரோடு சேர்ந்து வாழும் இல்லறப் பேறினை எதிர்பார்த்து ஏங்கியிருந்தாள்.

ஆனால், பார்வதிக்கு முதல் எதிரி, அவளுடைய தாயார் மேனைதான். ‘‘நம் அந்தஸ்து என்ன, அரசகுல கௌரவம் என்ன? உன் அழகென்ன, தோற்றமென்ன.. அவன் உனக்குக் கொஞ்சமாவது பொருந்தி வருகிறானா? யோசித்துப் பார். இந்தத் திருமணத்தால் உனக்கு எந்த சுகமும் கிடைக்கப் போவதில்லை” என்று மகளிடம், தன் வெறுப்பையும், விருப்பமின்மையையும் காட்டினாள். ஈசனைப் பற்றி அறிந்திருந்த அவள், அவரை நேரில் பார்க்காததோடு, தான் கேள்விப்பட்ட தகவல்களை வைத்து, எதிர்மறையான எண்ணங்களையே வளர்த்துக் கொண்டிருந்தாள்.

மகள் தாய்க்கு பதில் எதுவும் சொல்லவில்லை என்றாலும், முகத்தில் மட்டும் மனத்தின் தீர்மானம் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. ‘‘எனக்கு மணாளர் என் ஈசன்தான்’’ என்ற வைராக்கியம் அவள் மனதில் இன்னும் ஆழமாக வேரூன்றியது. ஈசனை அடைய யார் உதவினாலும் உதவாவிட்டாலும், தன் முயற்சியாக அதற்காகக் கடுமையாகத் தவமிருந்து அந்தப் பேற்றினை அடைய முடிவு செய்தாள் பார்வதி. அதற்காக அதே கானகத்தில் ஒரு தவச்சாலையை உருவாக்கி, அங்கே அமர்ந்து தவம் மேற்கொண்டாள்.

இரண்டாவது எதிரியும் பார்வதிக்கு உருவானார். அவர் ஒரு முதிய வேதியர். பார்வதியின் தவச்சாலைக்கு வந்த அவர் அவளிடம் கனிவுடன், ‘‘அம்மா, இப்படி கொடிய விலங்குகள் சஞ்சரிக்கும் காட்டில் பர்ணசாலை அமைத்துக் கொண்டு கடுந்தவம் இயற்றி வருகிறாயே, இதன் நோக்கம்தான் என்ன?’’ என்று கேட்டார். அதை வெட்கத்துடன் எடுத்தியம்பினாள் பார்வதி.

‘‘அடக் கடவுளே!’’ இளக்காரமாக நகைத்தார் முதியவர். ‘‘அம்மா, ஒரு பெண்ணுக்கு வாய்க்கும் கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்? அவனுக்கு அழகு இருக்க வேண்டும், சொத்து இருக்க வேண்டும், அறிவு இருக்க வேண்டும். மூன்றுமே இல்லாதவனல்லவோ அந்த ஈசன்? அவனுக்கு ஏது அழகு? ஜடாமுடியும், சாம்பல் பூச்சும், விகாரத் தோற்றமும் உன்னுடைய பேரழகிற்குச் சமமாகுமா?” என்று கேட்டார். ‘‘அவனுக்கு ஏது சொத்து? சுடுகாட்டில் அலையும் ஆண்டியாயிற்றே அவன்! பாம்புகளைத்தானே ஆபரணமாக அணிந்திருக்கிறான்! சரி, அறிவாவது இருக்கிறதா! அதுவும் கிடையாது. யாரேனும் எதேனும் வரம் கேட்டால் போதும். உடனே கொடுத்துவிடுவான். கொஞ்சம் கூட யோசிக்காமல், பின் விளைவுகளை ஆராயாமல், அசுரர்களுக்கு அவன் கொடுத்த வரங்கள்தான் எத்தனை? இவனைப் போய் மணக்க விரும்புகிறாயே, உன் புத்தி பேதலித்து விட்டதா என்ன?’’

அவ்வளவுதான்! பார்வதி வெகுண்டாள். ‘‘பெரியவரே, வயது காரணமாக உம்மை சும்மா விடுகிறேன். உலகத்து அழகுக்கெல்லாம் சொந்தக்காரர் அவர். உலகத்து சொத்துக்களெல்லாம் அவருடையதே. அவருடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஈடுதான் ஏது? அவர் யாருக்கு என்ன வரம் கொடுத்தாலும், அது எதிர்காலம் மட்டுமல்ல, பின்னால் வரப்போகும் ஏழேழு ஜென்மங்களையும் உணர்ந்து அளிக்கப்பட்ட வரமாகத்தான் இருக்கும். ஈசனை இப்படி நிந்தனை செய்யும் உங்களை சபித்துக் கொட்ட, என் மனம் துடிக்கிறது. ஆனால் உங்கள் வயது காரணமாக நான் பொறுத்துப் போகிறேன்,’’ என்று படபடத்தாள். தெய்வீகமாகச் சிரித்த முதியவர், மாயமானார்.
‘ஓ! வந்தவர் ஈசனே! என் மனோதிடத்தை சோதிக்கவே வந்திருக்கிறார். ஆனாலும் என் மனநிலையை தெளிவாக்கிவிட்டேனே. அது போதும், வேறென்ன வேண்டும்?’ என்று மகிழ்ந்தாள் பார்வதி.

இப்போது எதிர்ப்பு தாயிடமிருந்து மட்டும்தான். ஆனால் தன் மனைவி புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாறுபவள். அகத்தை அறியாதவள் என்பதை உணர்ந்த பர்வதராஜன், அதை அவளே உணரும் காலம் வரும் என்பதைத் தீர்மானித்து, திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தான்.

மாப்பிள்ளையின் ஊரிலிருந்து, திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சீர் செனத்திகளுடன் ஓர் ஊர்வலம் புறப்பட்டு பர்வதராஜன் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தது. மேனையின் மன வருத்தத்தைப் போக்கும் வகையில், ஈசனின் ஆற்றலை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்தார் நாரதர். மாப்பிள்ளை வீட்டாரின் ஊர்வலத்தை தொலைதூரத்திலிருந்தே காண்பித்தார்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே கோலாகலம்தான். லட்சக்கணக்கானோர் ஊர்வலமாக வருவதைப் பார்த்து பிரமிப்பால் மிரண்டுதான் போனாள் மேனை. முன்னால் வந்து கொண்டிருந்த கந்தர்வ ராஜனான விசுவாவசுவைக் காட்டி, ‘இவர்தான் மாப்பிள்ளையா?’ என்று கேட்டாள் மேனை. பலமாகச் சிரித்தார் நாரதர், ‘இவர், ஈசன் சபையில் இசை பாடும் விசுவாவசு, கந்தர்வர்களின் அரசன்’ என்று அவளுக்கு பதிலளித்தார்.

அடுத்து சகல ஐஸ்வர்யங்களும் மின்ன குபேரன் வந்தான். ‘‘இவன் நவ நிதிகளுக்கும் அதிபதி. ஈசனுக்கு நெருங்கிய உறவினன்,’’ என்றார் நாரதர். தொடர்ந்து தர்மராஜன், வருணன், வாயு, சூரியன், சந்திரன், இந்திரன் முதலானோர் தத்தமது பரிவாரங்கள் புடைசூழ ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மட்டுமின்றி பிரம்மனும் விஷ்ணுவும் தமக்குள் பேசி சிரித்தபடி வந்தார்கள்.

அவரா, இவரா என்று ஒவ்வொருவரையும் சுட்டிக்காட்டிய மேனை, அவர்களில் யாருமே தனக்கு மாப்பிள்ளை இல்லை என்பதை அறிந்து வாட்டமுற்றாள். ஆனால், அவர்கள் எல்லோரையும் முன்னால் அனுப்பிவிட்டு, பின்னால் வந்து கொண்டிருப்பதாக ஈசனை, அவளுடைய மாப்பிள்ளையைப் பற்றி நாரதர் சொன்னதால், மேலும் எட்டிப் பார்த்தாள்.

அவ்வளவுதான். மாப்பிள்ளையைக் கண்ட அளவில் வேதனை பொங்கியது. விம்மல் வெடித்துச் சிதறியது. மாப்பிள்ளையின் தலையிலிருந்து அலங்கோலமாகப் பிரிந்து தொங்கும் சடை, நெற்றியில் பட்டையாகத் திருநீறு, காது மடலில் பாம்புகள் சுருண்டிருந்தன. கைகளிலும், தோள்களிலும் பாம்புகள். இடுப்பில் புலித்தோல். கழுத்தில் கபால மாலை. உடல் முழுதும் சாம்பல் பூச்சு. போதாக்குறைக்கு அவரைச் சுற்றிலும் பூதகணங்கள் வேறு ‘தையா, தக்கா’ என்று நடனம் ஆடிக் கொண்டு வந்தன.

‘‘மாட்டேன்...’’ ஓங்கிக் குரலெடுத்துக் கத்தினாள் மேனை. ‘‘மாட்டேன், இந்த குரூபிக்கு என் பெண்ணைத் தரமாட்டேன். எல்லோருமாகச் சேர்ந்து என் மகளுடைய வாழ்க்கையை வீணாக்கி விட்டீர்களே’’ என்று அரற்றினாள்.

கூட இருந்த அனைவரும் திடுக்கிட்டார்கள். சொந்தத் தாயின் ஆசீர்வாதம் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இல்லாமல் போய்விடுமோ என்று நாரதர் உட்பட அனைவரும் கலங்கித் தவித்தனர். உடனே நாரதர் ஈசனிடம் ஓடோடி வந்தார். ‘‘ஐயனே, பார்வதியின் தாயார் தங்களுடைய கோலத்தைக் கண்டு மிரண்டு போயிருக்கிறார். தங்கள் புறத்தோற்றத்தைக் கண்டு தன் மகளுக்கு இப்படி ஒரு கணவன் வாய்ப்பது பிடிக்காமல் அரற்றுகிறார். ஈசனே, தங்களது சௌந்தர்ய, சுந்தர சொரூபத்தைக் காட்டியருள வேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டார்.

அந்தக் கணமே, உலகத்தின் எந்த மூலையிலும் சிறிதும் இருள் சேரமுடியாதபடி, கோடி சூர்யப் பிரகாசம் தோன்றியது. தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் ஜொலிக்க, ஈசன் கல்யாண பரமேசுவரராகக் காட்சியளித்தார். அந்த முகத்திலிருந்து வீசிய தேஜஸில், உடல் நலம் குன்றியோர், ஊனமுற்றோர், பிணிகளால் வாடுவோர் அனைவரும் உடல் நலம் பெற்றனர். ஏழ்மையிலும் வறுமையிலும் வாடிக் கொண்டிருந்தவர்கள், வளம் கண்டு மகிழ்ந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த ஒளி, கோணலுற்ற மனங்களை எல்லாம் நேர்ப்படுத்தியது. அந்த மனங்களில் ஒன்றுக்குச் சொந்தக்காரி மேனை.

‘‘பரம்பொருளே, என்னை மன்னித்து விடுங்கள். பேதையாய், அறிவிலியாய், என் தங்க மகளின் வண்ணமயமான எதிர்காலம் வீணாகி விடுமோ என்ற அற்ப பயத்தில் பல தீய எண்ணங்களை என் மனத்துள் புகுத்திக் கொண்டு விட்டேன். அவற்றையெல்லாம் கழுவி, கறை நீக்கிய நல்மனம் தந்த ஈசனே, நீரே என் மகளின் கணவர்’’ என்று கண்களில் நீர் ஆறாகப் பெருகி ஓட, மண்டியிட்டு வணங்கினாள் மேனை. ஈசன் பார்வதியை மணந்தார். உலகம் உய்வுற்றது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: பக்திக் கதைகள்!

Post by சாமி on Mon May 12, 2014 10:04 pm

3. பார்வதி தேவி மயிலாகப் பிறந்து பூசித்த கதை:-முன்னொரு காலத்தில் சிவலோகத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்து கொண்டு முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது நந்தவனத்தில் மயில்கள் தோகை விரித்தாடியபடி வந்து அமர அதன் அழகில் மயங்கிய பார்வதி அந்த மயில்களையே பார்த்து இரசித்துக் கொண்டு இருந்தவாறு சிவபெருமான் கூறியவற்றை காது கொடுத்துக் கேட்காமல் இருந்ததைக் கவனித்து விட்ட சிவபெருமான் கோபமடைந்தார். அவளை பூமியில் சென்று மயிலாகப் பிறக்கக் கடவது என சபித்து விட பார்வதி மயிலாகப் பிறக்க வேண்டி இருந்ததாம்.

பார்வதி வருத்தம் அடைந்து அவரிடம் மன்னிப்புக் கேட்க அவர் அவளை தொண்டை மண்டலத்துக்கு சென்று மயிலாக தவமிருந்து தன்னை பூசித்தால் சாப விமோசனம் கிடைக்கும் எனக் கூறினார். ஆகவே பார்வதி மயிலாகப் பிறந்து இப்போது ஆலயம் உள்ள இடத்திற்கு வந்து ஒரு கற்பக மரத்தடியில் அமர்ந்து கொண்டு சிவபெருமானை துதித்து தவம் இருந்து பூசை செய்தாளாம்.

அவள் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவளுக்குக் காட்சி தந்து அவளுக்கு மீண்டும் கற்பகாம்பாள் என்ற பெயரில் பார்வதியாகப் பிறவி தந்து மணம் புரிந்து கொண்டாராம். பார்வதி தேவி மயிலாகப் பிறந்து பூசித்த இடம் என்பதினால் அந்த இடத்தின் பெயர் மயில் பூசித்த இடம் என்று ஆகி பின்னர் மயிலாப்பூராக மருவியது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: பக்திக் கதைகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum