ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

வணக்கம் அன்பு நண்பர்களே
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

View previous topic View next topic Go down

ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:17 am

 ஜய வருட பொது பலன்கள்:  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


Last edited by சிவா on Sun Apr 06, 2014 4:32 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:17 am


மேஷம்: கூடுதல் லாபம் கிடைக்கும்

எதையும் சாதிக்கும் ஆற்றலுடைய நீங்கள் காரணமில்லாமலேயே சினத்துக்கு ஆளாவீர்கள். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளை தரும் ஆண்டாக அமையும். வருடத்தின் தொடக்கத்தில் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு 6ல் சந்திரனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வது சிறிது உடல்நலக் குறைவை கொடுத்தாலும், மனதில் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். வருடத்தின் முதல் இரண்டு மாதங்கள் வரை ராசியாதிபதி செவ்வாயும், குருவும் கேந்திர சஞ்சாரம் செய்வதால் வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும்.

வருட ஆரம்பத்தில் மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு வைகாசி வரை ராசிக்கு 7ம் இடத்தை சுபபார்வை பார்ப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும். மேலும், குருவின் பார்வையால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளை பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னைகள் தீரும். சகோதர சகோதரிகள் வழியில் இருந்து வந்த பிரச்னைகள் சரியாகும். வைகாசி மாத குருப்பெயர்ச்சிக்கு பிறகு தொழிலிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையுள்ள காலகட்டத்தில் தொழில், உத்யோக மாற்றம் உண்டாகலாம். ராசிக்கு 7ல் சஞ்சாரம் செய்யும் சனியால் நண்பர்கள் மூலம் அடிக்கடி மனக்கவலை ஏற்படும். காதல் விவகாரங்களில் தகராறு உண்டாகும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி பகவான் வழக்குகளில் சுமுக முடிவைத் தருவார். வெளிநாட்டிற்கு வேலை,  கல்வி தொடர்பாக செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்னை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.

நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். ராகு - கேதுகளின் பெயர்ச்சி மனதில் தைரியத்தை தரும். நண்பர்கள் மற்றும் அன்னிய நபர்களால் உதவி கிடைக்கச் செய்யும். புதிய சொத்து வாங்கும்போதும் சொத்தை விற்கும்போதும் கவனம் தேவை.  தாய், தந்தையிடமும், பெரியோரிடமும் அனுசரித்து நடந்து கொள்வதும் நன்மை தரும். இந்த ஆண்டு பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். மேலும், பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளும் தீரும்.

மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள். வாகனம் ஓட்டி செல்லும்போதும் கவனம் தேவை.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். பாராட்டுகளும் பரிசுகளும் குவியும். வெளிநாடு செல்வதற்குண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும்.

அஸ்வினி : இந்த வருடம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடு வார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் சாதகமாக நடந்து முடியும்.

பரணி : இந்த வருடம் தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல் களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்னைகள் நீங்கி அமைதி ஏற்படும். குடும்பத்தில் இருந்த மனக் கசப்பு மாறும்.  

கார்த்திகை 1 பாதம்: இந்த வருடம் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். உத்யோகம் தொடர்பான கவலைகள்  நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

பரிகாரம் : செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

சிறப்பு பரிகாரம் : அரளிப்பூவை வாங்கி மாலையாக கட்டி அருகிலிருக்கும் முருகன் கோயிலிலுள்ள வேலுக்கு சார்த்தி அர்ச்சனை செய்து வணங்க வும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் இரண்டு, ஐந்து முக மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:  ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:20 am


ரிஷபம்: வெற்றி காண்பீர்கள்

ஆபத்தில் உதவக் கூடிய நண்பர்களை பெற்ற நீங்கள் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்று வீர்கள். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு பூமி மூலமும், வீடு வாகனங்கள் மூலமும் லாபம் தரும் ஆண்டாக  இருக்கும். ராசியாதிபதி சுக்கிரன் ராசிக்கு 10ல் சஞ்சாரம் செய்வது தடைபட்ட பணம் கைக்கு கிடைக்க வகை செய்யும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கோர்ட் வழக்கு சம்பந்தமான அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பத்தகாத ஆசைகள் உண்டாகலாம்.

கவனமாக இருப்பது நல்லது. வீடு, மனை,  நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். இந்த வருட தொடக்கத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குரு ஜூன் மாதம் 13ந் தேதி பெயர்ச்சியாவதால் தொழில் மாற்றம், உத்யோக மாற்றம் போன்றவை உண்டாகும். எல்லாவற்றுக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டியிருக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  அதே வேளையில் குரு எல்லா நற்பலன்களையும் தருவார். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

ராகு-கேது பெயர்ச்சியால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படலாம். குரு பார்வையின் பலனால் பணவரத்து அதிகரிக்கச் செய்யும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும்.  இந்த ஆண்டு டிசம்பரில் வரும் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு கண்டச்சனி ஆரம்பிக்கிறது. நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணையின் வழியில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தற்போது ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் கேது, நண்பர்கள், அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகளைச் செய்வார். 6ல் உள்ள ராகு நினைத்த காரியத்தை சாதிக்க எடுக்கும் முயற்சிகளில் தடை உண்டாகும். மனதில் வீண் பயத்தை உண்டாக்கும். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம்.  கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பெண்கள் இந்த ஆண்டின் இறுதி மூன்று  மாதங்கள் எதிலும் மிகவும் கவனமாகச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுக்களில் ஈடு படும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு போட்ட திட்டம் நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் : இந்த வருடம் மனதில் மகிழ்ச்சியான எண்ணங்களை தரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். நட்பு, உறவினர்களிடம்  சுமுகமான நிலை நீடிக்கும். உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

ரோகிணி : இந்த வருடம் செயல் திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான  பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.  

மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் : இந்த வருடம் தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறைந்து காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்னை நீங்கும். உறவினர் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.

சிறப்பு பரிகாரம்: மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் ஐந்து முக மண் அகல்விளக்கு ஒன்றில் நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெயை கலந்து ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.[/size]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:20 am

மிதுனம்: வருமானம் அதிகரிக்கும்

வாக்குவாதத்தில் திறமையுடன் ஈடுபட்டு எதிரில் இருப்பவர் களை தன்வசப் படுத்தும் நீங்கள், அடுத்த வருக்கு வலிய சென்று உதவி செய்வீர்கள்.  இந்த தமிழ்ப் புத்தாண்டில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், ஆண்டின் தொடக்கத்தில் ராசியாதிபதி புதனின் சஞ்சாரம் சுக சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை சூரியன் தருவார்.

ராசியின் 7க்கும், 10க்கும் உடையவரான குருவின் சஞ்சாரத்தால் தடைபட்ட பணம் கைக்கு வந்து சேர வழி செய்யும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். காரிய வெற்றி உண்டாகும். தொழில் தொடர்பான பிரச்னைகள் தீரும். வேலைப்பளு வீண் அலைச்சலை உண்டாகும். குருவின் பார்வையால் உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த சின்னச் சின்ன பிரச்னைகள் நீங்கி லகலப்பு உண்டாகும்.

பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். மனதில் உறுதி ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் சனி வரும் டிசம்பர் 12ந் தேதி வரை அங்கேயே சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபார போட்டிகள் நீங்கும். வியாபாரம் வளர்ச்சியடையும். வாகனங்கள் வாங்க அல்லது புதுப்பிக்க எடுக்கும் முயற்சிகள் கைகூடும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வை காண்பார்கள்.

ஆனால், டிசம்பர் 12ந் தேதி முதல் சனி ராசிக்கு 6ம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைந்து ஆயுள் ஸ்தானத்தை பார்க்க இருப்பதால் எதிலும் மிகவும் கவனம் தேவை. இந்த ஆண்டின் கடைசி  இரண்டரை மாதங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படலாம். செலவும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். தற்போது ராசிக்கு பதினொன்றில் சஞ்சரிக்கும் லாப கேது மற்றவர்களிடம் கடுமையாக பேசும்படிச் செய்வார். வேளைக்கு சாப்பிட முடியாமல் போகும்.

ராசிக்கு 5ல் உள்ள ராகு அடுத்தவர்களின் சூழ்ச்சியில் சிக்க நேரிடலாம்.  ஆனால், வரும் ஜூன் 21ந் தேதி அன்று ஏற்படும் ராகு - கேது பெயர்ச்சிக்கு பிறகு தொழில் ஸ்தானத்தில் கேது சஞ்சாரம் இருப்பதால் வீண் கவலையும், வேலைப் பளுவும் உண்டாகும். வாகனங்களில் செல்லும்போதும் தீ, ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும்போதும் கவனம் தேவை.  ராகுவின் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் உண்டாகலாம். கவனம் தேவை.

பெண்கள் இந்த ஆண்டின் இறுதியில் சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போதும், விளையாட்டின் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கிய வர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள் : இந்த வருடம் வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். வீடு, மனை வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும்.

திருவாதிரை : இந்த வருடம் நண்பர்கள் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய  பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் : இந்த வருடம் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று  தாமதமாகலாம்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் - தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.

சிறப்பு பரிகாரம்:
துளசியை பறித்து அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்கு அர்ப்பணித்து வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: புதன்கிழமைதோறும் ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி தேங்காயில் நெய் விளக்கு ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:  திங்கள், புதன், வெள்ளி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:21 am

கடகம்: முன்னேற்றங்கள் உண்டு

வாழ்க்கையில் எதையும் நன்கு அனுபவித்து ரசிக்கும் நீங்கள், நிலையற்ற தன்மை கொண்டவர். இந்தத் தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். வியாபாரத்தில் பங்கு தாரரோடு இருந்த பிரச்னைகள் தீர்ந்து வளர்ச்சி பெறும். இந்த வருடம் பணவரவு அதிகரிக்கும். முன்னேற்றங்கள் அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் பெறும். ஆனால், வாகனங்களில் செல்லும் போதும் எந்திரங்களை கையாளும் போதும் தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

குரு பெயர்ச்சிக்குப் பின் ராசியில் சஞ்சாரம் செய்வது திடீர் பணச் சிக்கலை ஏற்படுத்தும். பணம் இருந்தும் தேவையான நேரத்தில் கிடைக்காத நிலை உண்டாகும். வீண் அலைச்சல் திடீர் டென்ஷன் ஏற்படலாம். காரியங்களில் இழுபறியான நிலை ஏற்பட்டு பின்னர் முடியும். உடல் பலவீனம் உண்டாகலாம். இருப்பினும் கடக ராசியில் உச்சமாகும் குருவால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்ப வாழ்க்கையில் சுகமும், நிம்மதியும் கிடைக்கும். பதவி மாற்றம், இட மாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும்.

குருபார்வையின் பலனாக கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி நிம்மதியான தூக்கம் வரும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சனி ராசிக்கு நான்கில் சஞ்சாரம் செய்வதால் பேச்சில் கோபத்தையும், குடும்பத்தில் சிறு குழப்பங்களையும் ஏற்படுத்தி வருவார். அர்த்தாஷ்டம சனி டிசம்பர் 12ம் தேதியன்று ஐந்தாம் இடத்திற்கு பெயர்சியாவதால் உங்களுக்கு யோகம்தான். சனியின் பிடியிலிருந்து முற்றிலும் விடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம்  உண்டாகும். வேலை தேடி அலைபவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும்.

சிலருக்கு வசதியான வீடு அமையும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொழில் ராசியில் சஞ்சரிக்கும் கேதுவும், 4ல் சஞ்சரிக்கும் ராகுவும் உங்களுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருவார்கள். சாதாரணமான பேச்சே வீண் விரோதத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை இருக்கும். நெருங்கிய நண்பர்களின் பிரிவும் ஏற்படலாம். வீண் கவலைகளும் உண்டாகலாம். ஆனால், இவையெல்லாம் ஜூன் 21ந் தேதி வரக் கூடிய ராகு - கேது பெயர்ச்சி வரையிலும்தான். அதன்பிறகு எல்லா பிரச்னைகளும் நீங்கி சுமுகமான நிலை உண்டாகும்.

எதிரிகளின் தொல்லை குறையும். வியாபாரம், தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட தொய்வு நீங்கும். எங்கும் எதிலும் நன்மையே உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இந்த ஆண்டு பெண்களுக்கு பல நன்மைகளை தரும் ஆண்டாக இருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும்.  ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கல காரியங்கள் நடை பெறும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும். வருட பிற்பகுதியில் கல்வியில்  சிறந்து விளங்குவீர்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கில் வெற்றி அடைவதற்குண்டான வாய்ப்புகள் வந்து சேரும்.

புனர்பூசம் 4 பாதம் :
இந்த வருடம் தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். கணவன் -  மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.

பூசம் : இந்த வருடம் தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்குப் பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக  கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.

ஆயில்யம் :  இந்த வருடம் தம்பதிகளிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உதவிகள் செய்யும்போது ஆலோசித்துச் செய்வது  நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

சிறப்பு பரிகாரம்:
வேப்பிலையை அருகிலிருக்கும் புற்று அம்மன் கோயிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் ஸ்ரீ கர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் தாமரைத் திரியில், நான்கு ஒரு முக மண் அகல் விளக்கில் நெய் விட்டு ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7.

அதிர்ஷ்ட ஹோரைகள்:
சந்திரன், சுக்கிரன், குரு.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:  திங்கள், வியாழன், வெள்ளி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:21 am

சிம்மம்: சிறப்புப் பலன்கள் கிட்டும்

எவ்வளவு சிக்கலான ஒரு விஷயத்திலும் குழப்பம் இல்லாமல் சட் டென்று ஒரு முடிவு எடுப்பீர்கள். இந்தத் தமிழ் புத்தாண்டு உங்களுக்கு காரிய அனுகூலம் தரும் ஆண்டாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆண்டு தொடக்கத்தில் லாப குருவின் சஞ்சாரத்தால் பல சிறப்பு பலன்கள் கிடைக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள்.

குருப் பெயர்ச்சியால் புத்திரர்கள் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண் விவாதம் ஏற்படலாம். கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து நல்லநிலை உண்டாகும். பழைய பாக்கிகளும் வசூலாகும். வியாபாரம் தொடர்பான வெளிநாட்டுப் பயணம் உண்டாகலாம். குருபார்வையால் லாபம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும். மூன்றாம் இடத்தில் இருக்கும் சனியால் மனக்கஷ்டம் குறையும். ஆனால், செலவு அதிகரிக்கும்.

இடமாற்றம் உண்டாகலாம். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த ஆண்டு ராகு-கேது பெயர்ச்சியும் இருப்பதால் சற்று கவனமாக இருப்பது நல்லது. தற்போது 3ல் சஞ்சாரம் செய்யும் ராகுவும், ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்யும் கேதுவும் செல்வத்தை தருவார்கள். வேற்றுமொழி பேசுபவர்களின் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும். வரும் ஜூன் 21ம் தேதியன்று வரும் ராகு-கேது பெயர்ச்சி லாபத்தைத் தரும். வீட்டிற்குத் தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள்.  

வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அவர்களால் செலவு ஏற்படலாம். பெண்களுக்கு இந்த ஆண்டு முன்னேற்றங்களைத் தருவதாக அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். ஆனால், வீண் அலைச்சல் இருக்கும். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். அரசியலில் உள் ளவர்களுக்கு புதியதாக பதவிகள் வந்து சேரும். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.


மகம் : இந்த வருடம் உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசிப்பது  நல்லது. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.

பூரம் : இந்த வருடம் எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. வீண் விவகாரங்களில்  தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில்,  வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம்.
 
உத்திரம் 1 பாதம் : இந்த வருடம் உடல் ஆரோக்கியம் சிறக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கப் பெறும்.

சிறப்பு பரிகாரம்: வில்வ தளங்களை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீருத்ராய நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் ஐந்து ஒரு முக மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் விட்டு ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், புதன், குரு.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:  ஞாயிறு, செவ்வாய், புதன், வியாழன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:23 am

கன்னி: பதவி உயர்வு கிடைக்கும்

எப்பொழுதும் சுறுசுறுப் புடன் காணப்படும் நீங்கள், எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்த பின்னரே செய் வீர்கள். இந்தத் தமிழ்ப் புத்தாண்டில் எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். திடீர் பணத் தேவை உண்டாகலாம். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. ஜய வருடத் தொடக்கத்தில் ராசிக்கு 10ல் சஞ்சாரம் செய்யும் குரு ஜூன் மாதம் 13ம் தேதி முதல் உச்சம் பெற்று ராசிக்கு 11ல் சஞ்சாரம் செய்கிறார். எனவே, இடமாற்றம் உண்டாகலாம். வீண் விவாதங் களால் அடுத்தவர்களுடன் தகராறு உண்டாகலாம். எனவே கவனமாகப் பேசுவது நல்லது.  முயற்சிகளில் தடை உண்டாகலாம்.

பொழுதுபோக்கு, கலை நிகழ்ச்சிகளில் மனம் செல்லாமல் ஏதாவது கவலை இருக்கும். குருவின் பார்வையால் தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வெளியூர் தகவல்கள் நல்ல தகவலாக வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நல்லது. குரு உச்சத்தில் 11ல் சஞ்சரிப்பதால் சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்னைகள் தீரும். முக்கிய நபர்களின் நட்பு உண் டாகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தற்போது ராசிக்கு 2ல் சஞ்சாரம் செய்யும் சனியால் வீண் அலைச்சலும், எப்போதும் மனச் சங்கடமும் இருக்கும். காரியங்களில் தடை, தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்புகளையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வரும் டிசம்பர் 12ம் தேதி சனிபகவான் துலாம் ராசியை விட்டு உங்கள் தைரிய வீர்ய ஸ்தான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அப்போதைய காலகட்டத்தில் சகோதர சகோதரி வழிகளில் எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வீண்பகை வராமலும், உடல் ஆரோக்கியம் கெடாமலும் பார்த்துக் கொள்வது நல்லது.

எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். தற்போது 8ல் சஞ்சரிக்கும் கேதுவும் 2ல் சஞ்சரிக்கும் ராகுவாலும், பணவரத்து திருப்திகரமாக இருப்பதுடன் செல்வாக்கும் உயரும். தாய், தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. ஜூன் 21ந் தேதி வரக்கூடிய ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு நல்ல பலன்கள் ஏற்படும். அதேநேரத்தில் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். பெண்களுக்கு இந்தத் தமிழ் புத்தாண்டில் இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

கையிருப்பு கூடும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் கவனமுடன் படிப்பது நல்லது. வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை.  அரசியலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள் : இந்த வருடம் கடன் பிரச்னை தீரும். தொழில், வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். புதிய சொத்து வாங்கும்போதும், சொத்தை விற்கும் போதும் கவனம் தேவை.
 
ஹஸ்தம் : இந்த வருடம் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும். காரியங்களில் வெற்றிபெற ஆலோசனை செய்வது நல்லது.  பெரியோரின் ஆலோசனைகளை கேட்க எல்லா நன்மைகளையும் தரும்.

சித்திரை 1, 2 பாதங்கள் : இந்த வருடம் வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த் தெறிவீர்கள். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும்.


பரிகாரம்: புதன் கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

சிறப்பு பரிகாரம்: சர்க்கரைப் பொங்கல் செய்து புதன் கிழமைகளில் ஏதேனும் ஒரு ஆலயத்தில் விநியோகம் செய்யவும்.  

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீ சாஸ்தாய நம” என்ற மந்திரத்தை தினமும் 5 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: வீட்டில் பித்தளையிலான ஐந்து முக விளக்கில் நல்லெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயை கலந்து ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6, 9.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: 
திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:23 am

துலாம்: சாதகமான பலன்கள் சேரும்

நிர்வாகத் திறமையும் தெளிவான சிந்த னையும் கொண்ட நீங்கள், எதையும் எதிர்த்து நின்று சமாளிப் பீர்கள். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு நற்பலன் தரும் ஆண்டாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 3 மற்றும் 6 ஆம் அதிபதியான குரு உங்களின் ராசியைப் பார்ப்பதால் மனதில் துணிவு  அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மன வருத்தங்கள் குறையும். அதே நேரத்தில் எதிலும் அவசர முடிவு எடுக்கத் தோன்றும். ஜூன் 13ம் தேதி அன்று நடக்கும் குருப் பெயர்ச்சியால் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். புத்திரர்களுக்கு நன்மை உண்டாகும்.

பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னை குறையும். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ராசியில் உச்சமாக சஞ்சாரம் செய்து பல நல்ல பலன்களை தரும் சுக பஞ்சமாதிபதியான சனிபகவான் டிசம்பர் 12ந் தேதியன்று உங்கள் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குச் செல்கிறார். ராசிக்கு 2ல் சஞ்சாரம் செய்வது ஏழரைச் சனியின் கடைசி இரண்டரை ஆண்டு ஆகும். எனவே, எதிலும்  மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது. காரியங்களில் தடையும் தாமதமும் உண்டாகலாம்.

எதிலும் சரியான முடிவு எடுக்க  முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். திடீர் செலவுகள் உண்டாகும். செய்யும் தொழிலில் பின்னடைவு ஏற்படலாம். வேலைப்பளுவும் மேலதி  காரிகளுடன் கருத்து வேற்றுமையும் உண்டாகலாம். கவனமாகச் செயல்படுவது நல்லது. ஆனாலும், சமூக அந்தஸ்து உயரும். எந்த ஒரு பணியையும் விரைவாகவும், லாபகரமாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உடல்நலக் கோளாறு உண்டாகலாம். மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பயணங்களால் வீண் அலைச்சலும் இருக்கும். தேவையற்ற வழிகளில் வீண்செலவு உண்டாகும்.

ஆன்மிக பணிகளில் ஈடுபாடு இருக்கும். ராசியில் இருக்கும் ராகு திடீர் பணத் தேவையை ஏற்படுத்துவார். இடமாற்றம் ஏற்படலாம்.  உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. அடுத்தவர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. ஆனாலும்,  சொத்து விஷயத்தில் எதிலும் நன்மை உண்டாகும். வரும் ஜூன் 21ந் தேதி நடக்கும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு ராகு-கேதுவால் எல்லா நல்ல பலனும் உண்டாகும். தனவரவும் மனோ தைரியமும் இருக்கும்.

எதிர்பாலினரிடத்தில் பழகும்போது கவனமாகப் பழகுவது நல்லது. அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாமல் தவிர்ப்பதும் நன்மை தரும். பெண்களுக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் காரிய அனுகூலமும், பணவரத்தும் இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் வீண் அலைச்சலும் வேலைப் பளுவால் உடல் சோர்வும் உண்டாகலாம். மாணவர்கள் படிப்பில் தடை ஏற்படாமல் இருக்க நன்கு படிப்பது நல்லது. நண்பர்களுடன் நிதானமாகப் பழகுவதும் நன்மை தரும்.

அரசியல் மற்றும் சமூக சேவை செய்பவர்களுக்கு தேவையற்ற பிரச்னைகள் தலை தூக்கச் செய்யும். எனவே, சாதூர்யமாகப் பேசி எதையும் சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும்போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலுமே கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

சித்திரை 3, 4 : இந்த வருடம் பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நன்மை தரும். மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளும் தீரும்.

சுவாதி : இந்த வருடம் சொந்தம், நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கள் கிடைக்கும். கடன் பிரச்னைகள் குறையும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள் : இந்த வருடம் உத்யோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன் - மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு  நீங்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.


பரிகாரம்: குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

சிறப்பு பரிகாரம்: காக்கைக்கு தினமும் சாதம் வைத்து வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நம” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 9 ஒரு முக மண் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7, 9.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:24 am

விருச்சிகம்: யோகமான அமைப்பு ஏற்படும்

ஆன்மிகச் சிந்தனை மேலோங்கியிருக் கும். நீங்கள் துணிச்சலாக எதையும் செய்வீர்கள். இந்தத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கத்தில் ஏழரைச் சனியின் பிடி மற்றும் அஷ்டம குருவால் வீண்செலவு காரியத் தடையை தந்தாலும் ஆண்டின் பிற்பகுதியில் இந்த நிலை மாறி செல்வச் சேர்க்கையும் எதிலும் வெற்றியும் கிடைக்கும். ராசியாதிபதி செவ்வாய் ஆண்டின் தொடக்கத்தில் புதன் வீட்டில் குரு கேந்திரம் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் எதிலும் வேகம் காட்டுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு எட்டில் சஞ்சரிக்கும் குரு ஜூன் மாதம் 13ந் தேதி முதல் ராசிக்கு 9ல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும்.

வியாபாரம் தொடர்பான செலவும் இருக்கும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்கு வாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். திட்ட மிட்டு எதையும் செய்வது நன்மை தரும். குருவின் பார்வையால் தொழில் வியாபாரத்தில் முழு கவனத் துடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தற்போது சனியின் சஞ்சாரம் ராசிக்கு 12ல் இருப்ப தால் உத்யோகத்தில் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனதில் ஏதேனும் கவலை இருக்கும். உடல் உழைப்பு அதிகமாகும்.

ஆனால், டிசம்பர் 12ந் தேதி வரும் சனி பெயர்ச்சிக்குப் பிறகு ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகிறார். ஏழரைச் சனியில் ஜென்ம சனியாக இருந்தாலும் குரு பார்வை இருப்பதால் புதுத் தெம்பும் உற்சாகமும் உண்டாகும். புதிய பதவி தேடிவரும். பணக் கஷ்டம் நீங்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இந்த ஆண்டு யோகமான பலன்கள் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபார போட் டிகள் நீங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

தற்போது உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் ராகுவும், 6ல் சஞ்சரிக்கும் கேதுவும் பல நன்மைகளை தருவார்கள். சகோதர வழியில் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது நல்லது. ஜூன் 21ந் தேதி வரும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு திடீர் கோபம் உண்டாகலாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை தரும்.

வாழ்க்கைதுணை அனுகூலமாக இருப்பார்கள். பெண்களுக்கு இந்த புத்தாண்டு சில நற்பலன் களை தந்தாலும் மனக் கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப் படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளின் போதும் வாகனத்தில் செல்லும்போதும் கவனமாக இருப்பது நல்லது. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்கள் ஏற்படலாம். சிலருக்கு மேலிடம் பதவிகள் கொடுக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். இருந்த போதிலும் சுக்கிரனுடைய சாரம் சிறப்பாக இல்லாததால் பணிச்சுமை ஏற்படும்.  ஒரே நேரத்தில் அனைவருக்கும் வாக்கு கொடுப்பது என்பது கூடாது.

விசாகம் 4 பாதம் : இந்த வருடம் சொத்துகளில் எடுக்கும் முயற்சி கள் வெற்றி பெறும். தொழில் மாற்றம், உத்யோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். உடல்  ஆரோக்யத்தில் கவனம் தேவை.

அனுஷம் :
இந்த வருடம் சக ஊழியர்களிடம் பழகும்போது கவனம் தேவை. முன்னோர்களை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம்   உண்டாகும். புத்தி சாதூர்யமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும்.

கேட்டை : இந்த வருடம் எதிர்பார்த்த பணவரவு தாமதப் படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல் திட்டங்களைபற்றி கூறுவதை  தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்:
துர்க்கை அம்மனை செவ்வாய்க் கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.  தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

சிறப்பு பரிகாரம்: செவ்வரளி மாலையை அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீம் துர்க்காயை நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் இலுப்பை எண்ணெய் விட்டு ஒரு ஐந்து முக மண் அகல் விளக்கு ஏற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7, 9.

அதிர்ஷ்ட ஹோரைகள்: ஞாயிறு, செவ்வாய், குரு.

அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:  ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:25 am

தனுசு: மதிப்பு மரியாதை அதிகரிக்கும்

தன்னடக்கம் மிகுந்த நீங்கள், எதையுமே மறைத்துப் பேசமாட்டீர்கள்.  இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு பணவரத்து அதிகரிக்கச் செய்யும்.  ஆனால், அதே நேரத்தில் ஓயாத வேலையும் அலைச் சலும் இருக்கும். சிலருக்கு இடமாற்றம், உத்தியோக மாற்றம் உண்டாகலாம். வருடத்தின் பிற்பகுதியில் செலவு அதிகரிக்கும். ராசியாதிபதியான குரு ராசிக்கு ஏழில் இருக்கும் பொழுது வருடம் பிறந்தாலும் ஜூன் மாதம் 13ந் தேதி முதல் உங்கள் ராசியாதிபதி குரு ராசிக்கு  எட்டில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்வதால் உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம்.  

உறவினர், நண்பர்கள் உங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் உங்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடும். திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய வேண்டி இருக்கலாம். அதே வேளையில் குருவின் பார்வையால் பணவரத்து கூடும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆனாலும், எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. பண விஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதைத் தவிர்ப்பது நல்லது.  

குரு பார்வையால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரிக்கும் சனியால் இப்போது பூர்வீகச் சொத்துகள் மூலம் வரும் வருமானத்திற்கு தடை தாமதம் வந்தாலும் வரும் டிசம்பர் 12ல் வரும் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு அவை வந்து சேரும். பன்னிரெண்டாமிடத்துச் சனியால் தொழில், வியாபாரம் திட்டமிட்டபடி விரிவாக்கம் செய்வது சிரமமாக இருக்கும். அதிக உழைப்பும், குறைந்த வருவாயும் கிடைக்கும்.

நல்லது கெட்டத்தை நிர்ணயிப்பதில் தடுமாற்றம் உண்டாகும். சிலருக்கு குடும்பத்தை விட்டு உத்யோக நிமித்தமாக வெளியில் சென்று தங்க நேரிடும்.தற்போது ராசிக்கு 5ல் கேதுவும் 11ல் ராகுவும் சஞ்சரிப்பதால் அடிக்கடி கோபமாக பேச நேரிடும். சில காரியங்கள் சரிவர முடியாமல் போக பேச்சே ஒரு காரணமாகி விடக்கூடும். அன்னியர் மூலம் செலவும் உண்டாகும். சொத்துகள் வாங்குவதில் வில்லங்கம் ஏற்படலாம். ஆனால், வரும் ஜூன் 21ந் தேதி ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

தொழில் ஸ்தானத்தில் ராகுவும் 4ல் கேதுவும் ஏதாவது கஷ்டத்தை தரலாம். மனைவியின் உடல் நிலையில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாலினரோடு மிகவும் கவனமாக பழகுவது நல்லது, சுறுசுறுப்பு குறைந்து சோர்வு உண் டாகலாம். எனவே, வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.  பணப்பற்றாக்குறை ஏற்படலாம். சேமித்து வைப்பது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாகப் படிப்பது எதிர் காலத்திற்கு உதவும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு இந்த வருடம் அனுகூல மான வருடமாக இருந்தாலும் பற்பல சோதனைகளை சந்திக்க வேண்டி வரும். இருப்பினும் ராசிநாதனின் சஞ்சாரத்தால் அனைத்தையும் முறியடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பல்வேறு வகைகளில் அனுசரணையாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறிகள் நீங்கும். வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகளுக்கு சென்று வருவீர்கள்.

மூலம் : இந்த வருடம் உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்துச் செய்வது நல்லது. பணவர த்து திருப்தி தரும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்கவும்.

பூராடம் : இந்த வருடம் உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மனத்  தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

உத்திராடம் 1 பாதம் : இந்த வருடம் எதிர்காலம் தொடர்பாக திட்டமிடுவீர்கள். சொத்து சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர்  யோசனைகளைக் கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

சிறப்பு பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சார்த்தி வழிபடவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 5 ஒரு முக மண் அகல் விளக்கு நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை கலந்து ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:  ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:25 am

மகரம்: முயற்சிகள் கைகூடும்

தோற்றத்தில் நலிந்தவர் போல் காணப்பட்டாலும் உள்ளூர உடல் வலிமையும் உள்ள உறுதியும் பெற்ற நீங்கள், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு பொருள் சேர்க்கையும் உடல் ஆரோக்யத்தையும் தரும்.  கடன் பிரச்னைகள் தொல்லை தராமல் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் ஆறாம் ராசியில் அமர்ந்து காரியத் தடைகளையும் அலைச்சலையும் தரும் குருவால் ஒரு சில பிரச்னைகள் தலைதூக்கலாம். எனவே, எதிலும் நிதானமான போக்கை கடைப்பிடிப்பது நன்மையைத் தரும். இருக்கும் இடத்தைவிட்டு வேறு இடம் செல்ல நேரலாம்.

செய்த வேலைக்கு உரிய கூலி கிடைப்பது இழுபறியாக இருக்கும். குரு வரும் ஜூன் 13ம் தேதி முதல் உச்சம் பெற்று கடக ராசியில் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பது பலவகையிலும் உங்களுக்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும்.  தற்போது ராசிக்கு 10ல் அமர்ந்து தொழில் சனியாக இருக்கும் உங்கள் ராசியாதிபதியான சனி மற்ற ராசிக்காரர்களை விட உங்களுக்கு அதிக நன்மைகளைச் செய்கிறார்.

வீண் செலவுகள் குறையும். மன  சஞ்சலங்களை களைவார். உடல் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சனிபகவான் எல்லா விதமான காரியத் தடைகளையும் நீக்குவார்.  டிசம்பர் 12ம் தேதி உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்து 11ம் இடத்திற்கு முன்னேறிச் செல்லும் லாபச் சனி ராஜயோகத்தை தருவார் என்றே  சொல்ல வேண்டும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்ல முறையில் நடக்கும். தற்போது தொழில் ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும், சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் ஏதேனும் வீண் பிரச்னைகளை தருவார்கள்.

காரணம் கண்டுபிடிக்க முடியாத கவலைகள் ஏற்படலாம். வரும்  ஜூன் 21ந் தேதி அன்று வரும் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு உங்களுக்கு இந்தப் பிரச்னைகள் தீர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். அதன் பிறகு 9ல் சஞ்சாரம் செய்யும் ராகுவும் 3ல் இருக்கும் கேதுவும் எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி விடுவார்கள். வாக்கு வன்மை அதிகரிக்கும். உடன்  பிறப்புகளிடம் கவனமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு இந்த ஆண்டு காரிய அனுகூலம் தருவதுடன் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கச் செய்யும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் காண்பார்கள். படிக்கும் போதே சிலருக்கு வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் சமுதாயப் பணி செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள். இதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும்.  தொண்டர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள்.

உங்களின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கலைத்துறையினர் துறையிலுள்ள நுணுக் கங்களை அறிந்து வைத்துக் கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். இந்த ஆண்டு உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும்.  மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் : இந்த வருடம் அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.  வெளிநாடு செல்வதில் இருந்த சிக்கல்கள் விலகும்.

திருவோணம் : இந்த வருடம் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக  செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள் : இந்த வருடம் தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள்.  உத்யோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.  மனதில் தைரியம் அதிகரிக்கும்.

சிறப்பு பரிகாரம்: அறுகம்புல்லை அருகிலிருக்கும் விநாயகருக்கு சார்த்தி வழிபடவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீம் கணபதயே நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் ஒரு ஐந்து முக மண் அகல் விளக்கை நெய் விட்டு ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:26 am

கும்பம்: நல்ல தகவல்கள் வரும்

ஒரு பார்வையிலேயே மற்றவரை எடை போடும் திறமை உள்ள நீங்கள், எடுத்த காரியத்தில் எந்தத் தடை வந்தாலும் பின்வாங்க மாட்டீர்கள். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு முன்னேற்றங்களை தரும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வருடத்தின் ஆரம்பத்தில் குரு பார்வையின் பலனால் பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும்.  பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும்.

வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உ த்யோகத்தில் இருப்பவர்கள், எழுத்துத் துறையில் இருப்பவர்கள் திறமை வெளிப்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். குரு பெயர்ச்சிக்குப் பின் ராசிக்கு 6ல் சஞ்சாரம் செய்யும் குருவால் இப்போது பணவரத்து குறையலாம். வாகனம், வீடு மூலம் செலவுகளும் அவ்வப்போது ஏற்படலாம். எதையும் செய்யும் முன் தயக்கம் உண்டாகலாம். வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. சரக்கு களை அனுப்பும் போதும் சேமித்து வைக்கும்போதும் கவனமாக இருப்பது நன்மை தரும். எதிலும் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. தற்போது உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்யும் சனி, மனதில் அவ்வப்போது ஏதாவது கவலையை ஏற்படுத்தி வருவார். வீண் அலைச்சல், வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமை என்று ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று வந்து மனச்சோர்வை உண்டாக்கும்.

வரும் டிசம்பர் 21ல் ஏற்படும் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு தொழில் சனியாக உலா வருவதால் மிகவும் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் குறையும். பணத்தட்டுப்பாடு நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். ராசிக்கு 3ல் கேதும் 9ல் ராகுவும் சஞ்சரிப்பது உங்களுக்கு பல ஆறுதலான விஷயங்களை தரும். எவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் இருக்காது. தொழிலில் போட்டி இருக்காது. வரும் ஜூன் 21ந் தேதி ராகு, கேது பெயர்ச்சி வருவதால் அதன்பிறகு ராசிக்கு 2ல் கேதுவும் 8ல் ராகுவும் சஞ்சாரம் செய்வது எதுவும் லாபமாக நடக்கும்.

மனதுக்குப் பிடித்தமான காரியங்கள் நடக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஆன்மிக  நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு இந்த ஆண்டின் முற்பகுதியில் பல நன்மைகள் நடக்கும். ஆண்டின் பிற்பகுதியில் வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.

அரசியல் மற்றும் சமூகத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த வருடம் பரிபூரண நன்மைகள் கிடைக்கும் வருடமாக இருக்கும். பதவிகள் தேடி வரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகமான வருடமாக இருக்கும். அதிகமான வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.  மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

அவிட்டம்  3, 4 பாதங்கள் : இந்த வருடம் கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் எதிலும் மிகவும் கவனமாகச் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

சதயம் : இந்த வருடம் குடும்பத்தினரிடம் உறவு சிறக்க மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாகப் பேசுவது  நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் : இந்த வருடம் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

சிறப்பு பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஸ்ரீ கணபதிக்கு தேங்காய் மாலை சார்த்தி வழிபடவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸம் சனைச்சராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 4 ஒரு முக மண் அகல் விளக்கு இலுப்பை எண்ணெய் விட்டு ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6, 9.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், சுக்கிரன்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by சிவா on Sun Apr 06, 2014 4:27 am

மீனம்: சமூகத்தில் அந்தஸ்து உயரும்

எந்த ஒரு பிரச்னை களையும் சமாதான மாகப் பேசி முடிக்கும் சாமர்த்தியம் மிகுந்த நீங்கள், அனுபவ அறிவு மிக்கவர். இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை தருவதுடன் உடல் ஆரோக்யத்தையும், மன வலிமையையும் தரும். இதுவரை உங்கள் மனதை வாட்டி வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் ராசியாதிபதி குரு தற்போது ராசிக்கு 4ம் இடத்திலிருந்து பல லாபங்களைத் தருகிறார். அத்துடன் பணவர த்தும் திருப்தி தருவதாக உள்ளது. வரும் ஜூன் 13ம் தேதி குரு உச்ச குருவாக பெயர்ச்சியாவதால் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.  

தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்கலாம். துணிந்து புதிய முடிவுகள் எடுக்கலாம். பழைய பாக்கிகளை சீக்கிரமாக வசூலிப்பீர்கள். எதையும் செய்து முடிக்கும் நிலையை உருவாக்கும். பிள்ளைகள் வழியில் கல்வி மற்றும் திருமணச் செலவு உண்டாகலாம். முதலீடு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குருவின் பார்வையால் புதிய வீடு கட்டும் பணி அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெறும். வாகனங்களை மாற்றும் எண்ணம் தோன்றும். சுகானுபவம் உண்டாகும்.

கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.  வழக்குகளில் சாதகமான பலன் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த நோய் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரப் போட்டிகள் விலகும். மற்றவர்களால் ஏற்பட்ட பழிச்சொல் நீங்கும். உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்கிறார். இந்தச் சனியால் உங்களது சேமிப்பு குறையலாம். விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் உ ண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பணியாட்களால் பொருள் நஷ்டம் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.  

டிசம்பர் 12ம் தேதி பாக்கிய ஸ்தானத்தில் சனி பெயர்ச்சியாகிறார். பாக்கிய சனி பொன்னும், பொருளும் தருவார். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெயரும், புகழும் கிடைக்கும். தற்போது ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் கேதுவும் 8ல் சஞ்சரிக்கும் ராகுவும் பல நன்மைகளை செய்து வருவார்கள். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். பணவரத்து பலவழிகளிலும் இருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மனைவியின் உடல்நிலையில் கவனம் தேவை. ஜூன் 21ல் வரும் ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு ராசியில் கேதுவும், ஏழாம் ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வது பல்வேறு வகையிலும் புகழ் உண்டாகும். சொத்துகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு இந்த ஆண்டு பணவரத்தை அதிகப்படுத்தும். விருந்து, சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். மன மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள்.

கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். சக மாணவர்கள் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு இந்த வருடம் மிகவும் யோகமாக இருக்கும். மேல் பதவி பெறுவதற்கு ஏற்ற வருடமிது. சமூக வேலைகளில் இருப்பவர்களுக்கு புகழும் விருதும் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த ஏற்றங்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலமாக அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.

பூரட்டாதி 4 பாதம் : இந்த வருடம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும், சுக சௌக்கியத்தை தரும். உறவினர்களுடன் சுமுகநிலை காணப்படும்.  வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்.  

உத்திரட்டாதி : இந்த வருடம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை  உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும்.

ரேவதி : இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு  எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்னை தீரும்.

சிறப்பு பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது நன்மை.

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஷம் ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 3 ஐந்து முக மண் பித்தளை விளக்குகளை நல்லெண்ணெய் விட்டு ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:  திங்கள், செவ்வாய், வெள்ளி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by T.N.Balasubramanian on Sun Apr 06, 2014 6:11 am

குரு பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி எழுதிய பொது ஜாதக பலன்கள்.

நன்றி.

இந்த ஆண்டு டிசம்பரில் சனிப் பெயர்ச்சி வேறு வருகிறது.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஜய வருட பொது பலன்கள்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum