ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்!

View previous topic View next topic Go down

வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்!

Post by சிவா on Sat Mar 29, 2014 11:04 pm

கார்ப்பரேஷன் ஆபிஸில் தவமாய் தவம் கிடந்து, ஒரு வழியாக வீட்டிற்குத் தண்ணீரைக் கொண்டு வந்தே. குழாயில் அடைப்பை அறுத்தெறிந்து, உடைப்பிற்கு ஒட்டு போட்டு என்று இது பெரிய வேலையாகி விட்டது. ன்று பூமிக்குக் கங்கையைக் கொண்டு வர தவம் செய்த பகீரதனை, இன்று வீட்டிற்குக் கார்ப்பரேஷன் தண்ணீரைக் கொண்டு வர தவம் செய்யச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும் எந்தத் தவம் கடினம் என்று எனப் பேசினாள் பக்கத்து வீட்டு பார்வதி. பேச்சுக்குப் பேச்சு தவம், தவம் என்கிறாளே என்று மனம் தவம் என்ற பொருளிற்கு தாவியது.

தவம் என்றால் உருக்குதல், மாற்றுதல், பக்குவம் செய்தல், ஒரு குறிக்கோளைப் பெற வலியவே துன்பத்தை மேற்கொள்ளுதல் என்றெல்லாம் பொருள்படும். மணிவாசகர் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கித் தானே தவம் செய்தார். தென் தமிழ்நாட்டில் கோமதி அம்மனின் தவசு பற்றிப் பேசும் மக்கள், உணவைச் சமைத்துப் பக்குவப்படுத்துபவரையும் தவசி பிள்ளை என்பர். உடலும், மனமும் பக்குவமாவது போல், உணவும் உருகி, பெருகி கரைந்து, பக்குவமாகிறது என்பது பொருள். பொதுவாக நற்பண்புகளை அடைய நாம் செய்யும் அனைத்துச் சாதனைகளும் தவம் தான். காமம், குர÷ாதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலிய தீய பண்புகளை விடுத்து அன்பு, சத்தியம், தர்ம வாழ்க்கை, தானம் செய்தல், இன்முகத்தோடு இன்சொல் கூறல் முதலிய பல நற்குணங்களை முயற்சி செய்து கடைபிடித்தலே தவமாகும். லோபத்தை மாற்ற செய்யும் தவம் தானம். உடற்பயிற்சிகள் உடல் வலிமை பெற செய்யும் தவம். இன்சொல், மென்சொல், குறைந்த அளவான சொற்கள் கோபத்தைக் குறைக்க செய்யும் தவம். மௌனமும் ஒரு தவமே. கீதை படிப்பது, தோத்திரம் படிப்பது, நல்ல நூல்களை மறுபடி மறுபடி ஆழ்ந்து படித்தல் எல்லாமே மனதை மாற்றச் செய்யும், ஒருவரது அடிப்படைக் குணத்தைப் புடம் போடச் செய்யும் தவம் தான்.

துரியோதனன் கதையைப் படித்தாலே பொறாமை, பேராசை முதலிய தீயகுணங்களைத் தள்ள வேண்டும் எனப் புரியும். மகாபாரத துருபதனின் கோப வார்த்தைகளும், பழிவாங்கிய துரோணரின் வாழ்வும் கோபம், பழிவாங்குதல், மன்னிக்காத பான்மை இவற்றின் தீய விளைவுகளைப் படம் பிடித்துக் காட்டும். நம் மனதைப் புடம் போட்டு அறிவைத் தெளிவாக்கும். ஒரு முகப்பட்ட, கண்ணாடி போன்ற தெளிவான அறிவின் மேன்மையை விளக்குகின்றனர் துருவனும், ப்த பிரகலாதனும். தாங்கள் பெற்ற பெரும்பேற்றால் தூல சரீரத்தை உருக்கி, அந்தக் கொழுப்பை எரித்து அல்லது உருக்கி இளைப்பதே கடினமென்றால் சூக்சுமமாக உள்ள மனதை மாற்றுவது எத்தனை கடிய தவம். வள்ளுவர் ஓர் அழகிய விளக்கம் தருகிறார் தவத்திற்கு. உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. தனக்கு வந்த கஷ்டங்களை, நோய்களைப் பிறரைக் குறை கூறாமல், கிரகங்களின் மீது பழி ஏற்றாமல், விதிக்கு மதியில்லை என விசாரப்படாமல், ஏற்றுக் கொண்டு கர்மயோகமாக வாழ்வதே தவம். பிறரால் துன்பம் வந்தால் துன்பத்தைப் போக்க முயல வேண்டுமே ன்றிப் பழவாங்க நினைக்கக் கூடாது. அதே சமயம் பிறருக்குத் தீங்கு இழைக்கக் கூடாது. எனக்குப் பிறரால் வந்த கஷ்டங்களை நான் பொறுப்பேன். அவ்வாளே அவர்களுக்கு என்னால் வரும் கஷ்டங்களை ஏற்றுக் கொள்ளட்டும் என்று வாதம் செய்தால் நற்பண்புகள் வளரா. பாபமும், பழியும் தான் வரும்.

நம் மீது சுடுநீர், கொதி நிலையில் விழுந்தால் தீப்புண் ஏற்படுகிறது. காயத்தின் தீவிரம் அதிகம் ஆனால் மரணம் கூட நேரிட்டு விடும். அமிலமும் கொடிய புண்ணை உண்டாக்குகிறது. வெளிக்காயத்திற்கே இந்த கதி. வயிற்றில் உள்ளே சதா கோபத்தினால் ஓர் அமிலம் சுரக்கும், பொறாமையால் ஓர் ஊழித்தீயும் தோன்றிக் கொண்டே இருந்தால் உடல் நலனும், உள்ளப் பாங்கும், அமைதியான அறிவின் தெளிவும் கெட்டு விடாதா? அதனால் தான் நல்ல பண்புகளைத் தேடித் தேடி பயில வேண்டும். தாயுமானவர் பாடுகிறார். "உண்டோ நமைப் போல வஞ்சர்' என்று. ஒருவன் தன் பகைவனை அழிக்க நினைப்பான். நமது எண்ண ஓட்டமே பகையாகி நம்மையே அழித்தால் என்ன செய்வது? கவலைப்படாதே. என்னைப் போல் தவம் செய். நான் ஒரு நல்ல பாட்டைச் சொல்லித் தருகிறேன். எளிய சொல் - அரிய கருத்து. அருமையான வாழ்க்கை நெறி என்கிறார் பாரதியார். பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன். கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன். மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவும் என் வினையில் இடும்பை தீர்த்தே இன்பமுற்று அன்புடன் இணைந்து வாழ்ந்திடமே செய்தல் வேண்டும் தேவ தேவா என்று தவம் செய்ய வேண்டுமாம்.

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்கிறார் வள்ளுவர். ஒவ்வொருவருக்கும் தம் கருமம் என்பது என்ன? நமது முன்னோர்கள் வாழ்நாள்களை நான்கு வகையாகப் பிரித்தனர். பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் என்பவை அவை. மாணவ பருவம்தான் பிரம்மச்சரியம் என்பது. எளிய வாழ்க்கை, படிப்பில் கவனம் இவைதான் வாழ்க்கை நெறி. ஷேர் மார்க்கெட்டில் பணம் பண்ணுகிறேன் விலையுயர்ந்த கார், போன் எல்லாம் வாங்கப் போகிறேன் என்றெல்லாம் போய் வழி தவறிய மாணவர்கள் உண்டு. உணவில் விளக்கெண்ணெய் வாசம் வருகிறது என்று கூறிய மாணவனையே, உன் கவனம் படிப்பில் இருந்து திசை மாறிவிட்டது என்று குருகுலத்தை விட்டு வெளியேற்றிய ஆசான்களைக் கொண்ட நாடு நம் பாரதம். மாணவனுக்குக் கல்வியே கர்மயோகம். கல்வியும், தார்மிக நாட்டமுமே தவம். எளிய வாழ்க்கை உயர்ந்த நோக்கம் சிறிய தேவை சீரிய சிந்தனை என்பது தாரக மந்திரம்.

அடுத்து, கிரஹஸ்த நெறி திருமணமானவனுக்கு. வாழ்க்கை வசதிகளும் உண்டு. சமுதாய கடமைகளும் உண்டு. அவன் தர்ம நெறியில் பொருளீட்டுவான். மனைவி மக்களை காப்பது மட்டும் கடமையல்ல. துறவறத்தார்க்கு உணவளிப்பதும் அவனே. பெற்றோர், முதியோரைக் காப்பதும் அவனே. நீத்தார் கடனும் அவன் பொறுப்பே. தெய்வ வழிபாடும், பஞ்ச யக்ஞம் என்று சொல்லப்படுகிற கடமைகளும் அவன் பொறுப்பே. என்ன கஷ்டம் வந்தாலும் பொருட்படுத்தாமல், மேன்மக்களாக வாழ முயல வேண்டும். என்ன வறுமை வந்தாலும் தம் நெறி தவறக் கூடாது என்பதை நாலடியார் "நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர் குரம்பெழுந்து குற்றம் கொண் டேறார்' என்று புகழ்கிறது.

இவ்வாறு கடமை செய்வதே தவமா? வேறு தவம் கிடையாதா என்று கேட்கலாம். பின்னாளில் வைத்தியர் சொல்லித் தான் உணவைக் குறைக்க வேண்டுமா? இப்போதே வாரம் ஒரு நாள், ஒரு வேளை என்றெல்லாம் உபவாசம் இருந்து பழகலாம். மனக்கட்டுப்பாடு, புலனடக்கம் வரும். மாதம் ஒரு நாள் சில மணி நேரம் பேசாமல் இருந்து பழகலாம். இந்தக் காலத்தில் ஒரு நாள் முழுவதும் டி.வி. பார்க்கவில்லை, யாரையும் நானாக ஒரு நாள் முழுவதும் போனில் கூப்பிடவில்லை, வந்த அழைப்புகளுக்கு மட்டும், தேவை என்றால் பேசினேன் என்பதே பெரிய தவம் தான்.

பகவான் கிருஷ்ணர் உடலால், வாக்கினால், மனதினால் செய்யும் மூன்று வகை தவங்கள் எனவும், மனிதர்கள் அவரவர் குணத்திற்கு ஏற்ப செய்யும் சாத்விக தவம், சற்றுக் கடுமையான ராஜ தவம், கொடுமை நிறைந்த தாமச தவம் என்பதாக மூன்று தவங்கள் எனவும் வேறு பிரிக்கிறார்.

கிரஹஸ்த நிலைக்கு அடுத்த நிலை பொறுப்புகள் முடிந்து, வேலையில் ஓய்வு பெற்று குழந்தைகள் பெரியவர்கள் ஆனபின் வரும் வானப்ரஸ்தம் என்றால் காட்டிற்கு போக வேண்டாம். குழந்தைகள் கூட இருந்தாலும், இல்லாவிட்டாலும் பேச்சைக் குறைத்து, உணவைக் குறைத்து விவகார ஈடுபாடுகளைக் குறைத்துக் கொள்ளும் நிலை. அடுத்த தலைமுறைக்கு இடமளித்து ஓதுங்கும் நிலை. ஜபம், தீபங்களைக் காட்டி, நல்ல நூல்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். இவ்வாறு வாழ்வதே தவம். இதுநாள் வரை ஓடி உழைத்த சரீரமும், மனமும் தேவையின்றிப் பிறர் விஷயங்களில் ஈடுபட முயற்சிக்கும். வீணாகப் பேசி வம்பு செய்வதால் தான், எந்த வீட்டிலும் சிறியவர்கள் பெரியவர்களை ஒதுக்குகிறார்கள். இப்பொழுதே மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சியும், நாவடக்கம் அடுத்துப் புலனடக்கமும் வந்தால் அதுவே அடுத்த நிலையான சந்நியாசத்திற்கு வழி வகுக்கும். சந்நியாச நிலையில் தவம் செய்வதும், படிப்பதும் இவற்றிற்காகப் புலனடக்கம், மனவடக்கம் பயிற்சியில் நிற்றலும்தான் கடமை. இவ்வாறு தவம் செய்பவர்களைப் பாவம் அண்டாதாம். விளக்கு ஒளியில் இருள் ஓடுவது போல், தவத்தைக் கண்டு பாவங்கள் ஓடிவிடுமாம்.

விளக்கு புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்கு நெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்க நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது
என்பது நாவலடியார்.

ஆன்மிக வாழ்வில் நாட்டமே இல்லை. எங்களிடம் தவத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்று சிலர் கேட்கலாம். வாழ்வில் பணமா, புகழா எது அடைய வேண்டுமானாலும் கடும் முயற்சி தேவை. கடும் முயற்சியே நோன்புதான். தவம் தான். சிலருக்குத் தான் கடும் முயற்சி இருப்பதால் சிலர் தான் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.

செய்கதவம் செய்கதவம் நெஞ்சே தவம் செய்தால் எய்தவிரும்பியதை எய்தலாம் என்கிறாரே பாரதியார். இதை வள்ளுவரும் எதிர்மறையாக,

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிர்பலர் நோலா தவர்

என்கிறார். அதாவது பலர் தவம் இன்மையால் செல்வம் அற்றவர் ஆகினர். சிலர் தவத்தின் மேன்மையால் செல்வந்தர் ஆகினர் என்கிறார்.

வானபிரஸ்தமாகிய மூன்றாம் நிலையைக் காவல் காக்கும் நிலை என்கிறார் வேதாத்ரி மகரிஷி அவர்கள். அதாவது சொற்களில் கட்டுப்பாடு வேண்டும். நாவடக்கம் நாலும் அடங்கும். யோசித்துப் பேசுவதால் வம்பும் இல்லை. வார்த்தை தடிப்பும் இல்லை. எப்பொழுதும் அறிவு விழித்த நிலையில் இருக்கும். அடுத்துச் செயல்களையும் வள்ளுவர் கூறுவது பேல,

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

எனறபடி ஆராய்ந்து செய்ய வேண்டும். இந்தச் சொல் கட்டுப்பாடு, செயல்கட்டுப்பாடு அடுத்த நிலையான எண்ண கட்டுப்பாட்டை வளர்க்கும். மனம் ஒருமைப்படும். மனம் ஒருமுகப்பட, அது குணத்தில் பிரதிபலிக்கும். கடைசியாகச் சும்மாவே இருந்தால் போதுமா? இருதயத்தைக் கவனி. அன்பால் அதை நிரப்பு. அது நன்கு வேலை செய்ய அதற்கு உழைப்பையும் கொடு என்கிறார் ஞானி. இவ்வாறு வாழ்வதால் காவி உடுத்தினாலும், உடுத்தாவிட்டாலும் பற்றற்ற சந்நியாச மனம் வந்து விடும்.

இந்த மனம் வந்தால்தான் தவம் கைகூடும். தவம் செய்யச் செய்யத் தான் சித்த சுத்தி வரும். ஒரு போகத்தை அனுபவிக்க தவம் செய்ய வேண்டும் என்கிறோம். அனுபவித்து அனுபவித்துப் பழகிய போகங்களில் இருந்து விடுதலை பெற இன்னும் அதிக தவம் தேவை. மின்விசிறி வாங்க பணம் வேண்டும். தவமுடையார்க்குத் தான் அது முடியும் பணம் கிடைக்கும் என்றால், விசிறி காற்றிற்கு அடிமையான உடல், அந்தச் சுகத்தை விட இன்னும் அதிக முயற்சி, மனக்கட்டுப்பாடு, தவம் தேவை. அதனால் தான் வள்ளுவர் தவமும் தவமுடையார்க்கு ஆகும் என்கிறார்.

தவத்தினால் பெயர், புகழ் எல்லாம் வரும். சில சித்திகளும் கை கூடும். இந்த மாயாஜால சித்திகளில் மயங்கி அவற்றில் இறங்கினால், விசுவாமித்திரர் திரிசங்குவிற்குச் சொர்க்கம் படைத்த கதையாகி விடும். வித்யாரண்யரும், பஞ்சதசியில் இந்தச் சித்திகளில் மயங்காதே என எச்சரிக்கிறார். எண்ணெய் வேண்டும் என்று எண்ணெய் அரைப்பவன், எண்ணெயை விட்டு விட்டு, புண்ணாக்கை எடுத்த கதையாகக் கூடாதே என்பதே அருளாளர்களின் நினைப்பு.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குக் கர்மயோகமே, தார்மீக வாழ்வே முதல் தவம். வாழ்வின் எந்த நிலையையும் இறை அருளாகவும், வரும் நலம் தீங்கை இறைவனது அருட்கொடையாகவும், செய்யும் எல்லாச் செயலையுமு" இறைப் பணியாகவும் கொண்ட வாழ்வதே கர்மயோகம். இவ்வாறிருக்க மணிவாசகரைத் திருவிளையாடல் புராணம் தவத்தை சிறையிலிட்டு அவரே தவமாம், தவத்தின் உருவாம் என்று பாடி புகழ்கிறது. பாரதியார், இந்த நூற்றாண்டின் அத்துவைத ஞானி தவம் புரியும் வகையறியேன் என முடித்து விடுகிறார்.

தவமே புரியும் வகையறியேன்
சலியாது நெஞ்சறியாது
சிவமே நாடி பொழுதனைத்தும்
தேங்கி தேங்கி நிற்பேனே
நவமாமணிகள் புனைந்தமுடி
நாதா கருணாலயனே தத்
துவமாகிய தோர் பிரணவமே
அஞ்சேல் என்று சொல்லுதியே.

- கோமதி ராஜ்குமார்

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum