ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்?

View previous topic View next topic Go down

மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்?

Post by ராஜா on Wed Mar 19, 2014 11:11 am

ஆட்சி நடத்த தகுதி இருக்கிறது; ஆனால் நேர்மையில்லை. நேர்மை இருக்கிறது; ஆனால் தகுதியில்லை. இந்த இரண்டில் ஒன்றைத்தான் இந்திய வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சி ஆகிய இந்த மூன்றில் ஒன்றாகத்தான் மக்களின் தேர்வு இருக்க முடியும்.

திறமையான ஆனால் திருடும் டிரைவர்:

உங்களிடம் நிறைய கார்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்; நீங்கள் ஒரு டிரைவரை நியமிக்கிறீர்கள். அவர் கார் ஓட்டுவதில் குறை ஏதும் இல்லை; ஆனால் அவர் திருட ஆரம்பிக்கிறார். பெட்ரோல் போட பணம் கொடுத்தால், குறைந்த அளவே பெட்ரோல் போட்டுக் கொண்டு, மீதி பணத்தை தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்.காரை சர்வீசுக்கு அனுப்பினால், அதற்கான பில்லில் தொகையை கூடுதலாக காட்டுமாறு சர்வீஸ் மையத்தினரைக் கேட்டு, அதில் மீதித் தொகையைச் சுருட்டிக் கொள்கிறார். வீட்டு நிலவரப்படி, முக்கிய சாவிகள் டிரைவரிடமே உள்ளன. இதனால் கார்களுக்குத் தேவையென கூறி, விரும்பும் அளவுக்கு பணத்தை டிரைவர் எடுத்துக் கொள்கிறார். டிரைவர் திருடுவதென்பது அன்றாட நடவடிக்கையாகி விட்டது.
இதனால் மனம் நொந்த நீங்கள் டிரைவரை மாற்றுகிறீர்கள். இரண்டாவது டிரைவரும் திருட ஆரம்பிக்கிறார். திருடுவதென்பது அவ்வளவு எளிதாக உள்ளது. ஏனென்றால் புதிய டிரைவரை, நேர்மையானவரா என்று விசாரித்து நியமிக்கவில்லை; அவருடைய நிறம், ஜாதி அல்லது மதத்தைப் பார்த்து நியமித்தீர்கள்; எனவே திருட்டும் தொடர்கிறது.

நேர்மையானவர்; ஆனால் கார் ஓட்டத் தெரியவில்லை:

இரண்டு டிரைவர்களை மாற்றியும், திருட்டு ஓயவில்லை. இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்கிறார். அவர் மிகவும் நேர்மையானவர்; ஆனால் உணர்ச்சி வசப்படுபவர்; அனுபவம் இல்லாதவர். இருப்பினும் அவரிடம் ஒரு காரை கொடுத்து ஓட்டச் சொல்கிறீர்கள். இந்த புதிய டிரைவர் பணத்தை திருடவில்லை. ஆனால் முதல்நாளே காரை பின்புறமாக செலுத்தும்போது, மோதி பின்புற விளக்கை உடைத்து விட்டார். மறுநாள் சிக்னலில் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விட்டார். மூன்றாவது நாள் பெட்ரோல் போட மறந்து விடவே, நீங்கள் நடுரோட்டில் தத்தளிக்க வேண்டியதாயிற்று.நான்காவது நாள் அவர் நடுரோட்டில் நின்று கொண்டு, தனக்கு வேலை தர மறுத்ததற்காக, அவ்வழியே சென்ற இதர கார் உரிமையாளர்களை திருடர்கள் என திட்டிக் கொண்டிருந்தார். ஐந்தாவது நாள் அவர் அனைத்து டிரைவர்களும் தெருவில் கூட வேண்டும்; சிக்னல் விளக்குகளைப் பின்பற்றக்கூடாது என கூறிக் கொண்டிருந்தார். அந்த டிரைவரின் அடாவடி போக்கையும் அவருடைய திறமையின்மையையும் நீங்கள் சுட்டிக்கட்டியபோது, அவர் உங்களையே குறை கூற ஆரம்பித்தார். ஒரு நேர்மையான டிரைவரை எப்படி கேள்வி கேட்க முடியும்? அப்படியானால் நீங்கள் திருடர்களை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம், என கத்த ஆரம்பித்தார்.
இதனால் பயம் அடைந்த நீங்கள் அமைதியாகி விட்டீர்கள். அடுத்து அந்த டிரைவர் ஒவ்வொன்றையும் மாற்ற ஆரம்பித்தார்; ஒவ்வொரு காரையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். என்ன செய்வதென்று புரியாமல் நீங்கள் தவித்தபோது, திடீரென அவர் வேலையை விட்டு விட்டார்.

யார் இந்த டிரைவர்கள்?

முதல் இரு டிரைவர்களும் காங்கிரசையும் பாரதிய ஜனதாவையும்தான் குறிக்கின்றன என்று கண்டறிவதற்கு பெரிய அறிவு ஏதும் தேவையில்லை; மூன்றாவது டிரைவர் ஆம் ஆத்மி கட்சி. இதுதான் இந்தியர்களின் இன்றைய நிலை. முந்தைய டிரைவர்கள் நம்மை ஏமாற்றினர்; புதிய டிரைவரோ திறமையற்றவராக அடாவடியாக இருந்தார். அனைவர் மீதும் அவதூறுகளை அள்ளி வீசி, தன்னைக் குறை கூறுபவர்களைத் தாக்கி பேசி நியாயம் கற்பித்து வருகிறார்.

ஆம் ஆத்மியின் குறைபாடுகள்:

ஆம் ஆத்மி நேர்மையான கட்சி என்பதில் மாறுபாடு இல்லை. அவர்கள் நோக்கமும் நல்ல நோக்கமே. இருப்பினும் அவர்கள் செயல்பாடுகளில் 4 குறைகள் உள்ளன.
முதலாவதாக அவர்களுடைய கொள்கைகள் பைத்தியக்காரத்தனமாக உள்ளன. முதலாளித்துவத்தை சங்கடப்படுத்தும் வகையில் அவர்கள் பேசுவதைப் பற்றி கவலையில்லை; ஆனால் மன ரீதியாக அவர்கள், வர்த்தகத்திற்கு எதிரானவர்களாக, வேலைவாய்ப்புகளுக்கு எதிரானவர்களாக, சொத்து சேர்ப்பதற்கு எதிரானவர்களாக காட்சி அளிக்கின்றனர்; மேலும் அரசை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்தனர். இந்த கொள்கைகள்தான் எதிர்காலத்தில், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டவும், ஊழலுக்கும் வித்திடுவதாக அமையும்.
இரண்டாவதாக அவர்களுடைய முன்னுரிமைகள் தவறானவை. அவர்களுடைய டில்லி அரசு, எவ்வித எதிர்ப்பும் இன்றி, நூற்றுக்கணக்கான நல்ல பணிகளைச் செய்திருக்கலாம்; ஆனால் அவர்கள் செய்யவில்லை; மாறாக குறைந்த காலத்தில் அதிக கைதட்டல் பெறுவதற்காக, செய்தி ( விளம்பர நோக்கு) நோக்கு செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர்; அதே வேகத்தில் பதவியை விட்டும் சென்றனர். மேலும் தாங்கள் கிளப்பிய பிரச்னைகளுக்கு ஊடகங்கள், அறிவாளிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் எதிர்பார்த்தனர்; அவ்வாறு முக்கியத்துவம் தராதவர்களை பாரபட்சமானவர்கள் என வர்ணித்தனர். அம்பானி தொடர்பாக கோர்ட்டில் நிலுவையில் உள்ள ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, அது குறித்து உலகே பேச வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அவர்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால், நீங்கள் அம்பானியிடம் ச(கி)ம்பளம் வாங்குவது நிச்சயம் என்பார்கள்.

ஒத்துப் போகாதவர்கள்:

மூன்றாவதாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேராத எவருடனும் அவர்களால் ஒத்துப்போக முடியவில்லை. தங்களுடைய நோக்த்திற்கு ஏற்ப செயல்படாத அனைத்து அரசியல் கட்சியினர், போலீஸ் மற்றும் ஊடகங்களை வெறுத்தனர். இதனால், இந்தியா போன்ற பல்வேறு முகம் கொண்ட நாட்டில், ஒரு பொதுக் கருத்தை உருவாக்க ஆம் ஆத்மி கட்சியினர் தகுதியற்றவர் ஆயினர்.
நான்காவதாக, ஆம் ஆத்மி கட்சியினரின் போலி நடிப்பு ஏற்கனவே அம்பலமாகி விட்டது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மென்மையான போக்கை கையாண்டதிலிருந்து, நிர்வாக அமைப்பை, அரசியல் ஆதாயம் பெறுவதற்காக மட்டும் பயன்படுத்தி கொண்டு, தங்களுக்கு ஒத்து வராதபோது, அந்த நிர்வாக அமைப்பை பின்பற்றாமல் இருந்தது வரை பார்க்கும்போது, அவர்களை நல்லது செய்பவர்கள் என்பதை விட சந்தர்ப்பவாதிகள் என்றே கூறத் கோன்றுகிறது.

யாருக்கு உங்ள் ஓட்டு?

இவை அனைத்தும் மாறக் கூடும். இந்த மூன்றாவது டிரைவர், காரை எப்படி ஓட்டுவது என கற்றுக் கொள்ளலாம்; அதேபோல் முதல் இரு டிரைவர்களும் திருடுவதை நிறுத்தக் கற்றுக் கொள்ளலாம். நேர்மையானவர், தகுதியானவராக மாறுவதற்கும், தகுதியானவர் நேர்மையானவராக மாறுவதற்கும், பணிவும் அடக்கமும் தேவை; ஆனால் இவை அனைத்து தரப்பிலும் காணாமல் போய் விட்டது. இத்தகைய சூழ்நிலையில் இந்திய வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த கேள்விக்கு எளிதி்ல பதில் கூற முடியாது. இப்போதுள்ள எந்த கட்சியுமே முழுமையாக நிறைவானவை அல்ல. இதற்காக யாரும் வருந்த தேவையில்லை. ஆம் ஆத்மி கட்சியை நீங்கள் தேர்வு செய்தால், ஊழல் குறையலாம்; ( ஊழல் அவ்வளவு விரைவில் போய்விடாது) ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாத கொள்கைகளை, தோல்வி அடைந்த பரிசோதனைகள், செயலை விட கூடுதலாக கோமாளித்தனம் ஆகியவற்றைச் சகித்துக் கொள்ள வேண்டி வரும். நாட்டை ஒரு பரிசோதனை கூடமாக ஆம் ஆத்மி கட்சி கருதுவதால், பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் அபாயமும், ஒரு சில வேலை வாய்ப்புகளுமே உருவாகும் நிலை ஏற்படலாம்.
தற்போதைய ஆளும், ஆண்ட ( காங்கிரஸ், பாரதிய ஜனதா) கட்சிகளைத் தேர்வு செய்தால், நிலையான ஆட்சி இருக்கும்; வளர்ச்சி விகிதம் சீராகும்; கூடுதல் வேலை வாய்ப்புகள் பெருகும். ஆனால் நீங்கள் எதிர்பார்ககும் அளவுக்கு ஊழலற்ற நிர்வாகத்திற்கு முன்னுரிமை இருக்காது. எனவே யார் பணிவானவர்களோ, யார் தங்களை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறார்களோ அவர்களைத் தேர்வு செய்யுங்கள்; இதுவே தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்று. நேர்மையும் திறமையும் கொண்ட தலைவர்கள் நமக்கு கிடைக்க சிறிது காலம் பிடிக்கலாம். அது தாமதமின்றி விரைவில் நிகழும் என்று நம்புவோமாக.
- டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி-dinamalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்?

Post by ராஜா on Wed Mar 19, 2014 11:12 am

இந்த செய்திக்கு வந்த பின்னூட்டங்களில் இவரின் கருத்து நன்றாக இருந்தது


A.SIVALINGAM - clementi,சிங்கப்பூர்

நாடு ஏற்கெனவே அதல பாதாளத்தில் உள்ளது..இப்போது விஷப்பரீட்சை செய்து ஆம் ஆத்மிகிட்ட நாட்டை ஒப்படைப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்..அவர்கள் இன்னும் கொஞ்ச நாள் அனுபவப்பட்டு கற்றுக்கொண்டு பின்னர் முயற்சி செய்யட்டும்...அடுத்து காங்கிரஸ்....நாட்டோட இந்த நிலைமைக்கு காரணமே இவங்கதான்...இனியும் இவர்களுக்கு ஒட்டு போடுவது விஷத்தை குடிப்பதை விட மோசமானது....இப்போதைக்கு மோடியால பிஜேபி க்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்பதுதான் புத்திசாலித்தனம்...அந்த கச்சிலயும் விஷ செடிகள் இருக்கு...மோதிய எந்த அளவுக்கு நல்லது செய்ய விடுவாங்கன்றது போக போகத்தான் தெரியும்...எவ்வளவோ பரிட்சை எழுதி பெயிலாயிட்டோம் இன்னும் ஒருதரம் இந்த பரிச்சையும் எழுதிதான் பாக்கலாமே...நல்லது நடக்குமுன்னு நம்புவோம்....ஜெய்ஹிந்த்...
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்?

Post by பாலாஜி on Wed Mar 19, 2014 11:49 am

@ராஜா wrote:இந்த செய்திக்கு வந்த பின்னூட்டங்களில் இவரின் கருத்து நன்றாக இருந்தது


A.SIVALINGAM - clementi,சிங்கப்பூர்

நாடு ஏற்கெனவே அதல பாதாளத்தில் உள்ளது..இப்போது விஷப்பரீட்சை செய்து ஆம் ஆத்மிகிட்ட நாட்டை ஒப்படைப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்..அவர்கள் இன்னும் கொஞ்ச நாள் அனுபவப்பட்டு கற்றுக்கொண்டு பின்னர் முயற்சி செய்யட்டும்...அடுத்து காங்கிரஸ்....நாட்டோட இந்த நிலைமைக்கு காரணமே இவங்கதான்...இனியும் இவர்களுக்கு ஒட்டு போடுவது விஷத்தை குடிப்பதை விட மோசமானது....இப்போதைக்கு மோடியால பிஜேபி க்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்பதுதான் புத்திசாலித்தனம்...அந்த கச்சிலயும் விஷ செடிகள் இருக்கு...மோதிய எந்த அளவுக்கு நல்லது செய்ய விடுவாங்கன்றது போக போகத்தான் தெரியும்...எவ்வளவோ பரிட்சை எழுதி பெயிலாயிட்டோம் இன்னும் ஒருதரம் இந்த பரிச்சையும் எழுதிதான் பாக்கலாமே...நல்லது நடக்குமுன்னு நம்புவோம்....ஜெய்ஹிந்த்...

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்?

Post by யினியவன் on Wed Mar 19, 2014 12:30 pm

அம்மா, வங்காளம்மா, மாயம்மா, சோனியாம்மா - இவங்க கையில் சிக்கி சின்னாபின்னமா ஆறதுக்கு பதில் மோதியே மேல்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்?

Post by AMMAIYAPPAN on Wed Mar 19, 2014 1:41 pm

மோதி தான் வேற வழியே இல்லை ... அப்படி இல்லை என்றால் நாமே கண்ணை திறந்து கொண்டு கண்ணில் அமிலத்தை ஊற்றுவது போல ....
avatar
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்?

Post by ayyasamy ram on Thu Mar 20, 2014 8:00 pm

தொங்கு பார்லிமென்ட் அமையக்கூடாது
என
பிரார்த்திப்போம்..!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum