ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

239 பயணிகளோடு மாயமான விமானம்

Post by பாலாஜி on Sat Mar 08, 2014 12:16 pm

First topic message reminder :

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.

மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.

MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


--வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down


Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Mon Mar 10, 2014 5:38 pm

இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்டது இன்னமும் செல் ஃபோன் வேலைசெய்துகொண்டு இருக்கிறதா ?!! நம்பவே முடியவில்லை  அதிர்ச்சி அதிர்ச்சி 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by பாலாஜி on Mon Mar 10, 2014 5:40 pm

அந்த பயணிக்கு டயல் செய்யும் காட்சி பீஜிங் தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது. எனவே, செல்போன் சிக்னல்களை வைத்து விமானத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இதற்காக செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பயணிகளின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். wrote:

இது நிச்சயம் விமானத்தை கண்டுபிடிக்க உதவும் என்று நினைக்கின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Mon Mar 10, 2014 5:54 pm

.

மேலே உள்ள செய்தி வதந்தி தான் ..!!

மொத்தம் இதோடு மூன்று திரிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது ..நிர்வாகிகள் மூன்றையும் ஒன்றில் இணைத்தால் படிப்பதற்கும் விரிவாகவும் அலசவும் எதுவாக இருக்கும்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by டார்வின் on Mon Mar 10, 2014 6:01 pm

செல்போனை வீட்டில் வைத்துவிட்டு பயணித்திருக்கலாம்,,,,,
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Mon Mar 10, 2014 8:13 pm

விமானம் விழுந்து சுமார் 3 நாட்கள் ஆகி விட்டது

# சுமார் 40 கப்பல்கள் 60 விமானங்கள் , 60 ஹெலிகாப்ட்டர் தேடுதல் பணியில்  உள்ளன

# அமெரிக்கா தனது செயற்கைக்கோள் மூலமாக  மிக உண்ணிப்பாக கவனித்து விட்டது ..குறிப்பிடும்படியாக எந்த மாற்றமும் இல்லை

# தனது 6th fleet முகாமில் உள்ள P 3 மற்றும் P 8 மூலமாகவும் கண்காணித்து வருகிறது ..இவை கடலின் 500 மீட்டர் ஆழம் வரை ஊடுருவிப் பார்க்கும் வசதி படைத்தவை

#விமானம் விழுவதற்கு முன் எந்த வித உதவியும்  கோரப் படவில்லை ..

#விமானம் வேறு எங்கும் தரை இறங்கியதாகவும் தெரியவில்லை

என்ன நடக்க வாய்ப்பு உள்ளது# ஏதேனும் பெரிய விண்கல் அதன் மேல் விழுந்திருக்கலாம் ..

# ஏலியன்ஸ் அந்த விமானத்தை கடத்தி சென்றிருக்கலாம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Mon Mar 10, 2014 9:09 pm

@SajeevJino wrote:.

மேலே உள்ள செய்தி வதந்தி தான் ..!!

மொத்தம் இதோடு மூன்று திரிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது ..நிர்வாகிகள் மூன்றையும் ஒன்றில் இணைத்தால் படிப்பதற்கும் விரிவாகவும் அலசவும் எதுவாக இருக்கும்

ஆமோதிக்கிறேன்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ayyasamy ram on Tue Mar 11, 2014 8:26 am

ஆமோதிக்கிறேன்...!
-
பொதுவாக அனைவராலும் படிக்கப்பட கூடிய
விவரங்களை ஊடகங்களிலிருந்து எடுத்து இங்கு
பதியும் முன், முகப்பில் இருக்கும் தேடு பொறியில்
அது குறித்த தலைப்பை கொடுத்து தேடினால், ஏற்கனவே
பதிவு இருப்பின் அது விபரம் தெரிய வரும்....
-
அந்த திரியிலேயே தொடர வாய்ப்பாகும்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Tue Mar 11, 2014 4:40 pm


MH370: தேடும் முயற்சிகளை அதிகப்படுத்தும்படி மலேசியாவுக்கு சீனா கோரிக்கை!

கடந்த சனிக்கிழமை காணாமல் போன MH370 மாஸ் விமானத்தைத் தேடும் பணியில் முயற்சிகளை அதிகப்படுத்துமாறு மலேசியா அரசாங்கத்தை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

தாங்கள் தேடுகின்ற இடங்களின் அளவை விரிவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என மலேசிய அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டாலும், சீனாவின் குறைகூறலுக்கு மலேசியா ஆளாகியுள்ளது.

ஏறத்தாழ 9 நாடுகளிலிருந்து கப்பல்களும், விமானங்களும் மலாக்கா நீரிணை முதல் தென் சீனக்கடல் பகுதி வரை 239 பயணிகளுடன் காணாமல் போன விமானத்தைத் தேடுகின்ற பணிகளில் ஈடுபட்டுள்ளன.

சீனாவின் வெளியுறவுத் துறையின் பேச்சாளரான குயின் காங் “மலேசியா தனது தேடுதல் முயற்சிகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் அதே வேளையில் முழுமையான புலன் விசாரணைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளும் கடமை எங்களுக்கு உண்டு. தேவைப்படும் தகவல்களை சீனாவுக்கு உடனுக்குடன் தரவும் மலேசியா முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மலேசியா அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் மீது சீனத் தரப்பினர் நம்பிக்கை இழந்து வருவதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் சீனத்தரப்பினருக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக, காணாமல் போன விமானத்தின் பயணிகளின் குடும்பத்தினர் விரும்பினால் அவர்களை கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்று தேடுதல் முயற்சிகளை நேரடியாகக் கண்டு தெரிந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க மலேசியா அரசாங்கம் முன்வந்துள்ளது.

காணாமல் போன விமானத்தின் பயணிகளில் ஒருவரது உறவினர் “நாங்கள் மலேசியா போனாலும் அங்கேயும் நாங்கள் காத்திருக்கத்தான் போகிறோம். அதற்கு பெய்ஜிங்கிலேயே நாங்கள் காத்திருக்கலாம். எங்களுக்கு அங்கு யாரையும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது” என்று தகவல் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Tue Mar 11, 2014 4:41 pm

கடைசியாக ‘புலாவ் பேராக்’ அருகே விமானம் பறந்ததாக கண்டறியப்பட்டுள்ளது!

மாயமான MH370 விமானம் கடைசியாக புலாவ் பேராக் அருகே சென்றதாக இராணுவ ரேடாரில் பதிவாகியுள்ளதால் மலாக்கா கடற்பகுதிக்கு வடக்கே தேடும் படலம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

பட்டர்வொர்த்தில் உள்ள இராணுவ ரேடார் கண்காணிப்பு மையத்தில் பதிவாகியுள்ள ரேடார் பதிவின் அடிப்படையில், MH370 விமானம் கோத்தா பாருவிற்குப் பிறகு மேற்கே திரும்பி கிழக்கு கடற்கரை மற்றும் கெடாவை கடந்து சென்றுள்ளது என விமானப் படை தலைவர் ரோட்ஸாலி டாவுட் தெரிவித்துள்ளார்.

கடைசியாக அதிகாலை 2.40 மணியளவில் புலாவ் பேராக் அருகே விமானம் பறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் ரோட்ஸாலி குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், விமானம் திரும்புகையில் அதன் வழக்கத்திற்கு மாறாக 10,000 மீட்டர் உயரத்தில் இருந்து தாழ்ந்து 1,000 மீட்டரில் அந்த பகுதியை கடந்து சென்றுள்ளதாகவும் இராணுவ ரேடாரில் கண்டறியப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Tue Mar 11, 2014 4:43 pm

மாஸ் MH370: மந்திரவாதியின் உதவியை நாடிய உயர்மட்டத் தலைவர்!

மாயமான மாஸ் MH370 விமானத்தை தேடி மீட்பு படை விமானங்களும், கப்பல்களும் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், உலக மக்கள் அனைவரும் அதிலுள்ள பயணிகள் நலமுடன் இருக்க பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மலேசிய மக்கள் முகநூல் வழியாகவும், மெழுகுவர்த்திகள் ஏந்தியும், ஆலயங்களில் வழிபாடுகள் செய்தும் பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்திருக்க பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த பிரபல மந்திரவாதி (shaman) இப்ராகிம் மாட் ஸின் (ராஜா போமோ செடுனியா நுஜும் விஐபி), விமானத்தை கண்டுபிடிப்பதற்கு தேவையான பிரார்த்தனைகள் செய்ய தன்னை மலேசியாவின் உயர் பதவியில் இருக்கும் தலைவர்களுள் ஒருவர் அழைத்ததாகத் தெரிவித்தார்.

அவர் தனது பிரார்த்தனைகளை விமான நிலையத்தின் முகப்பில் செய்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் மீன் பிடிக்கும் தூண்டிலையும், மூங்கில் தூர நோக்கிகளையும் ( bamboo binoculars) வைத்து விமானத்தை தேடினோம். பிரார்த்தனை செய்யும் போது எனது கண்கள் காயப்பட்டன. பார்வை இருட்டானது. ஒருவேளை விமானம் இன்னும் வானில் இருக்கலாம் அல்லது கடலில் விழுந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இன்னும் 2 நாட்களில் சிறப்பு பிரார்த்தனைகள் முடிந்து மீண்டும் விமான நிலைத்திற்கு வருவதாகவும், அப்போது நிச்சயம் தகவலை கொண்டு வருவதாகவும் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், பயணிகள் மீண்டும் நலமுடன் திரும்ப அனைவரையும் பிரார்த்தனை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Tue Mar 11, 2014 4:49 pm

யாவரும் நலமுடன் திரும்பி வர பிரார்த்திப்போம்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Tue Mar 11, 2014 5:52 pm

அநியாயம் அநியாயம் விண்வெளியையே அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேயுற காலத்தில் இப்படி ஒரு புதிர் நமது பூமியிலேயே நடந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் இன்னும் என்ன ஆனது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை .

ஆச்சரியமாக உள்ளது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Tue Mar 11, 2014 6:33 pm

@ராஜா wrote:அநியாயம் அநியாயம் விண்வெளியையே அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேயுற காலத்தில் இப்படி ஒரு புதிர் நமது பூமியிலேயே நடந்திருக்கிறது. இத்தனை தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் இன்னும் என்ன ஆனது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை .

ஆச்சரியமாக  உள்ளது

Code:
இது குறித்த சந்தேகங்கள் நிறைய உள்ளது தல!

நேற்று முகநூலில் இந்த விமானம் காணாமல் போனதா அல்லது நாட்டில் ஏற்படவிருந்த (எதிர்க்கட்சித் தலைவர் அன்வாருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது) குழப்பத்தை திசை திருப்ப விமானக் கடத்தல் நடந்துள்ளதா? என எழுதிய அரை மணி நேரத்தில் ஈகரை முகநூல் பக்கம் முடக்கப்பட்டிருந்தது.

இந்தக் கருத்தை எழுதியதால் முடக்கினார்களா அல்லது வேறு ஏதும் காரணமா எனத் தெரியவில்லை!

விமானம் உண்மையிலேயே கிளம்பியதா அல்லது மலேசிய ஏர்போர்ட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா?

இன்னும் நிறைய எழுதினேன், ஆனால் நம் தளத்தையும் முடக்குவார்கள் என்பதால் நீக்கிவிட்டேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Tue Mar 11, 2014 7:37 pm

@சிவா wrote:கடைசியாக ‘புலாவ் பேராக்’ அருகே விமானம் பறந்ததாக கண்டறியப்பட்டுள்ளது!

எனக்கு தெரிந்தவரை விமானம் திசை மாறி வேறு பாதையில் செல்வது ராணுவ ராடாரில் பதிவாகி இருந்தால் அடுத்த நொடியே அதை இடைமறிக்க போர் விமானத்தையே எல்லா ராணுவமும் அனுப்பும் ..

ஆனால் இங்கு வேடிக்கையாக உள்ளது ..அதை பதிவு மட்டும் செய்தார்களாம் .
எனக்கு தெரிந்தவரை விமானம் திசை மாறி வேறு பாதையில் செல்வது ராணுவ ராடாரில் பதிவாகி இருந்தால் அடுத்த நொடியே அதை இடைமறிக்க போர் விமானத்தையே எல்லா ராணுவமும் அனுப்பும் ..

ஆனால் இங்கு வேடிக்கையாக உள்ளது ..அதை பதிவு மட்டும் செய்தார்களாம் .

அதே போல் 1000 மீட்டர் தாழ்வாக பறக்கிறது என்றால் உடனடியாக அது தரை இறங்கப் போகிறது என்றே அர்த்தம் ..மேலும் அதனால் வெகு தூரம் போய் இருக்கவும் முடியாது ஏனெனில் அதில் எரி பொருள் மிக வேகமாகத் தீர்ந்து விடும்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Tue Mar 11, 2014 7:46 pm

@சிவா wrote:

Code:
இது குறித்த சந்தேகங்கள் நிறைய உள்ளது தல!

நேற்று முகநூலில் இந்த விமானம் காணாமல் போனதா அல்லது நாட்டில் ஏற்படவிருந்த (எதிர்க்கட்சித் தலைவர் அன்வாருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது) குழப்பத்தை திசை திருப்ப விமானக் கடத்தல் நடந்துள்ளதா? என எழுதிய அரை மணி நேரத்தில் ஈகரை முகநூல் பக்கம் முடக்கப்பட்டிருந்தது.

இந்தக் கருத்தை எழுதியதால் முடக்கினார்களா அல்லது வேறு ஏதும் காரணமா எனத் தெரியவில்லை!

விமானம் உண்மையிலேயே கிளம்பியதா அல்லது மலேசிய ஏர்போர்ட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா?

இன்னும் நிறைய எழுதினேன், ஆனால் நம் தளத்தையும் முடக்குவார்கள் என்பதால் நீக்கிவிட்டேன்!

விமானம் கிளம்பியதை பல தனியார் கண்காணிப்பு நிறுவனகள் உறுதி செய்துள்ளன ..குறிப்பாக Flight Radar 24 இதை பதிவு செய்துள்ளது ..

சில சமயம் அவர்கள் உள்ளுடனேயே விமானத்தை வேறு எங்காவது கடத்தி சென்றிருக்கலாம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Tue Mar 11, 2014 7:59 pm

.

Chinese Martyrs' Brigade என்னும் சீனாவை சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்று உள்ளதாக சில சீன செய்தி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியதாக சில ஆங்கில பத்திரிக்கைகள் செய்து வெளியிட்டுள்ளன
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Tue Mar 11, 2014 8:24 pm

படிக்கும் போது ஏதோ தெகிடி போல் தெரிகிறது.
(தெகிடி என்றால் வஞ்சம், சூது, ஏமாற்றுதல்)
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Tue Mar 11, 2014 8:48 pm

மலேசிய விமானம் மாயமானதை நேரில் பாரத்தவர்கள் விளக்கம், 11 பயணிகளின் போன் பயன்பாட்டில் இருக்கிறது


239 பயணிகளுடன் கடந்த 8-ம் தேதி அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாம் கடல் எல்லைக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, திடீரென மாயமானது.

மலேசியாவின் கம்பங் கொடாக் பகுதியில் வசிக்கும் அலிஃப் ஃபாத்தி அப்துல் ஹாதி என்பவர் சம்பவத்தன்று அதிகாலை 1.45 மணியளவில் வானத்தில் பெரிய ஒளிப்பிழம்பு தோன்றியதாக தெரிவித்துள்ளார். இவர் கூறியதாவது, "சாதாரணமாக விமானத்தின் முகப்பு விளக்குகள் வானத்தில் உள்ள சிறிய நட்சத்திரங்கள் போல் காட்சியளிக்கும்.
ஆனால், நான் பார்த்த பிரமாண்டமான தீப்பிழம்பு, சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது. சில வினாடிகளுக்குள் தாய்லாந்து கடல் எல்லை நோக்கி நகர்ந்து சென்று, திடீரென்று மறைந்து விட்டது. " இவரது வீட்டில் இருந்து தெற்கே சுமார் 100 மைல் தொலைவில் வாழும் மீனவரான ஆஸித் இப்ராகிம் என்பவரும் அப்துல் ஹாதியின் வீடு இருக்கும் திசையை சுட்டிக்காட்டி, தீப்பற்றி எரிந்தபடி பறந்த ஒரு விமானம் தென்னந்தோப்பின் பின்புறமாக மறைந்து போனதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த விமானத்தில் சென்ற 11 பேரின் அலைபேசி இன்னும் இயங்கிக் கொண்டுள்ளன என அவர்களின் உறவினர்கள் பேட்டியளித்துள்ளனர்.

நன்றி சற்றுமுன் செய்திகள் at 05:30

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Wed Mar 12, 2014 11:07 am

அநியாயம் அநியாயம் 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ayyasamy ram on Wed Mar 12, 2014 11:13 am


மாயமான விமானத்தை தேடும் பணியில் மலேசியா,
பிலிப்பைன்ஸ் , சீனா உள்ளிட்ட ஒன்பது நாடுகளை
சேர்ந்த விமானங்களும் 24 கப்பல்களும் ஈடுபட்டு
வருகி்ன்றன.

இந்நாடுகளை தவிர இந்தியாவி்ன் கப்பல்படைக்கு
சொந்தமான செயற்கைகோளான ருக்மணி
உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகின்றன
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by பாலாஜி on Wed Mar 12, 2014 1:56 pm

என்ன நடந்தது என்றே இதுவரை தெரியவில்லை .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Wed Mar 12, 2014 3:10 pm

மாஸ் விமானம் வானில் மறைந்தது --
ஹை லெவல் விஷயம் என்பது இதுதான்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22131
மதிப்பீடுகள் : 8262

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Thu Mar 13, 2014 4:23 pm

.

ஊடகங்களில் வந்த பல செய்திகள் பொய் ..சீனாவின் சாட்டிலைட் கண்டுபிடித்து கூட உண்மை இல்லை ..நேரில் சென்று பார்த்தபோது அங்கு எதுவுமே இல்லை ..

புதிய நம்பகமான தகவல் கிடைத்தால் கண்டிப்பாக பகிருவேன்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Thu Mar 13, 2014 5:38 pm

கேலிக் கூத்தாகியுள்ள ராஜா ‘போமோ’வின் மாந்திரீக பூஜை!விமானம் மாயமானது தொடர்பாக உலக நாடுகளின் கவனம் அனைத்தும் மலேசியாவின் மீது இருக்கும் வேளையில், கேஎல்ஐஏ விமான நிலையத்தில் ‘போமோ’ (shaman) நடத்திய மாந்திரீக பூஜை பெரும் கேலிக் கூத்தாகி விட்டது.

முகநூல் தொடங்கி யூடியூப், டுவிட்டர் வரை அனைத்து நட்பு ஊடகங்களிலும், பலரும் போமோவின் படங்களை பகிர்ந்து, மலேசியாவின் நிலைமையை மேலும் கிழி கிழி என கிழித்து வருகின்றனர்.குறிப்பாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, போமோவின் செயல்களை பார்ப்பது போல் வெளியாகியிருக்கும் புகைப்படம் தற்போது முகநூலில் பரபரப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை, கேஎல்ஐஏ அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த பிரபல போமோ (shaman) இப்ராகிம் மாட் ஸின் (ராஜா போமோ செடுனியா நுஜும் விஐபி), விமானத்தை கண்டுபிடிப்பதற்கு தேவையான மாந்திரீக பூஜைகளை செய்ய தன்னை மலேசியாவின் உயர் பதவியில் இருக்கும் தலைவர்களுள் ஒருவர் அழைத்ததாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் விமான நிலையத்திற்கு தனது சீடர்கள் சகிதமாக வந்த போமோ, கையில் இரண்டு இளநீர், மூங்கில் தொலைநோக்கிகள், விரிப்பு என சிலவற்றை வதைத்து கொண்டு நடத்தியுள்ள இந்த பூஜையை அங்கிருந்த ஒட்டுமொத்த ஊடகங்களும் பதிவு செய்துள்ளன.

இந்த மாந்திரீக பூஜையை செய்வதால், விமானத்தை அண்டியிருக்கும் தீய சக்திகள் அனைத்தும் விலகி காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க உதவும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Thu Mar 13, 2014 5:38 pm

யார் உங்களை அழைத்தார்கள்?

போமோவின் இந்த மாதிரீக பூஜை குறித்து மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதை செய்ய உங்களை அழைத்த அந்த அம்னோ உயர்மட்டத் தலைவர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் துறை அமைச்சரான ஜமீல் கிர் பாரோம் தான் அழைத்தார் என்று கூறப்படுவதை தாங்கள் விசாரணை செய்ததாகவும், அவர் போமோவை அழைக்கவில்லை என்றும் சின் தெரிவித்துள்ளார்.

போமோவை பூஜை செய்ய அழைத்த தலைவர் யார் என்று பொதுமக்களுக்கு தெரிய வேண்டும் என்றும் சின் குறிப்பிட்டார்.

“காணாமல் போன விமானம் குறித்து நல்ல எண்ணங்களுடன் செய்யப்படும் எல்லா விதமான பிரார்த்தனைகளுக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆனால் மிது போன்ற சுய விளம்பரங்களுக்காக செய்யப்படும் பூஜைகள் உலக நாடுகளின் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் உள்ளாகியுள்ளது” என்று சின் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum