ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 ராஜா

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

239 பயணிகளோடு மாயமான விமானம்

Post by பாலாஜி on Sat Mar 08, 2014 12:16 pm

First topic message reminder :

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.

மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.

MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


--வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down


Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by கோ. செந்தில்குமார் on Sun May 11, 2014 3:36 pm

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 அல்ல...! மர்ம ஏர்லயன்ஸ் MH370...!!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 332
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Wed May 14, 2014 2:38 am

மாயமான மலேசிய விமான தேடுதல் பணிக்கு ஆஸ்திரேலிய பட்ஜெட்டில் ரூ.501.88 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு


மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நகர் நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானம் நடுவானில் மாயமானது.  இதில், பயணம் செய்த 239 பேரின் நிலைமை தெரியவில்லை.  விமானத்தை தேடும் பணி தொடர்ந்து 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

ரூ.501.88 கோடி நிதி ஒதுக்கீடு

விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியா நாடும் ஈடுபட்டுள்ளது.  நீண்ட நாட்களாக தொடரும் தேடுதல் பணிக்காக கூடுதல் நிதியை ஒதுக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்காக ஆஸ்திரேலிய பட்ஜெட்டில் ரூ.501.88 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் நடைபெறும் தேடுதல் பணி தொடரும் நிலையில், அடுத்த 2 வருடங்களில் ரூ.334.96 கோடி நிதி ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு துறையிடம் வழங்கப்படும்.

கூட்டு கழக ஒருங்கிணைப்பு மையம்

கடந்த மார்ச் 30ந்தேதி அமைக்கப்பட்ட கூட்டு கழக ஒருங்கிணைப்பு மையம் அடுத்த இரு வருடங்களில் ரூ.11.16 கோடி விமான தேடுதல் பணிக்காக செலவிடும்.  இதேபோன்று விமான விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஆகியவற்றை அனுப்பி தேடுதல் பணி மேற்கொண்ட பாதுகாப்பு துறை ரூ.155.75 கோடி நிதியை அடுத்த இரு வருடங்களில் பெறும்.

விமான தேடுதல் பணிக்கான மொத்த செலவு தொகையானது எவ்வளவு காலம் அந்த பணி நடைபெறும் மற்றும் பிற நாடுகளால் எவ்வளவு பணம் வழங்கப்படும் என்ற அடிப்படையில் அமையும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by கிருஷ்ணா on Wed May 14, 2014 11:34 am

மாஸ் ஏர்லைன்ஸ் மர்ம ஏர்லைன்ஸ்   புன்னகை 
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Sun May 18, 2014 10:45 pm


“யாரோ எதையோ மறைக்கிறார்கள்” – போயிங் மீதும் சந்தேகத்தை எழுப்புகின்றார் மகாதீர்!

காணாமல் போன எம்.எச். 370 விமானம் குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது பிரத்தியேக இணையப் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில், போயிங் நிறுவனத்திடமும் சி.ஐ.ஏ. எனப்படும் அமெரிக்க மத்திய உளவுத் துறையிடமும் கேள்வி எழுப்பப்பட வேண்டுமென்று அவர் கூறியுள்ளார்.

“யாரோ எதையோ மறைக்கிறார்கள். மாஸ் எனப்படும் மலேசிய ஏர் லைன்சின் மீதும் மலேசியா மீதும் மட்டும் பழிபோடுவது நியாயமல்ல. மாறாக, போயிங் மீதும் சிஐஏ மீதும் சந்தேகம் எழுகின்றது” என்ற தோரணையில் அவர் தனது இணையப் பக்கத்தில் எழுதியுள்ளார்.

போயிங் நிறுவனத்திற்கு தெரிந்திருக்கலாம்

“விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகலாம். ஆனால், விமானங்கள் காணாமல் போவதில்லை. தற்போது மிகவும் சக்திபடைத்த தொடர்புத் துறை தொழில் நுட்பங்கள் மூலம் விமானங்களால் தடையின்றி செயல்பட முடியும்” என்று கூறியிருக்கும் மகாதீர்,

“விமானத்தின் தொடர்பு செயல்பாடுகள் வேண்டுமென்றே செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளது. துணைக் கோளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய விமானப் பயண பதிவுகள் எங்கே” என்றும் எழுப்பியுள்ளார்.

போயிங் நிறுவனம் காரணமா?

“எம்.எச்.370 விமானம் போயிங் 777 விமானமாகும். அதனைத் தயாரித்தது போயிங். ஆகவே விமானத்தின் தொடர்புத்துறை மற்றும் ஜி.பி.எஸ். எனப்படும் பயணப் பாதையைக் காட்டும் கருவிகளை விமானத்தில் பொருத்தியதும் போயிங்தான். அவற்றை செயல் இழக்கச் செய்தால் செய்தால் போயிங்கிற்கு நிச்சயம் அதுகுறித்து தெரியும். அவற்றை சுலபமாக செயல் இழக்கச் செய்யவும் முடியாது. விமானத்தை விமானியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து தானாக இயங்கச் செய்யும் தொழில் நுட்ப சாதனத்துக்கான உரிமத்தை போயிங் நிறுவனம் 2006ஆம் ஆண்டு பெற்றுள்ளது” என்றும் மகாதீர் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“அதன்படி பார்த்தால் எம்.எச்.370 விமானக் கட்டுப்பாட்டை போயிங்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் வெளியில் இருந்தவாறு தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ள முடியும். இந்த சூழ்நிலையில் விமான பாகங்களையும், எண்ணெய் கசிவுகளையும் கண்டுபிடிப்பது என்பது பண விரயம்தான்” என்றும் மகாதீர் சாடியுள்ளார்.

“பயங்கரவாத முறியடிப்புக்காக நிலத்தில் இருந்தவாறு விமானத்தைத் தானாக இயங்கச் செய்வதாக கூறப்படும் முறையை போயிங் விளக்க முன்வர வேண்டும். விமானிகள் கொந்தளிப்பான கடலில் தரையிறங்கினார்கள் என்பதை தம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரத்தில் யாரோ எதையோ மறைக்கின்றார்கள். போயிங் அல்லது சி.ஐ.ஏ. பற்றி ஊடகங்கள் எதனையும் எழுத மாட்டார்கள் என்பதால், எனது இணையப் பக்கத்தில் இதைப்பற்றி எழுதியிருக்கின்றேன்” என்றும் மகாதீர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by soplangi on Mon May 19, 2014 11:53 amலண்டன்,

'இராணுவ பயிற்சியின்போது மாயமான மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது' புத்தகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8–ந்தேதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை.

இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், ‘புளுபின்–21’ என்ற நீர்மூழ்கி ‘ரோபோ’வை கொண்டு நடந்துவரும் தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லை. மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டது. இதில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தாய்லாந்து - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியின் போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் பின்னர் இந்த தகவல் மூடிமறைக்கப்பட்டுள்ளது என்றும் மாயமான விமானம் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த உறவினர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது குறித்து புத்தகம் வெளி வந்துள்ளது.

"விமானம் MH370: மர்மம்" என்ற புத்தகம் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வருகிறது என்று இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனை சேர்ந்த ஆங்கிலோ அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் நைஜல் கவ்தோர்னெ இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று கிட்டத்தட்ட நிச்சயமாக எதுவும் தெரிந்திருக்காது என்று கவ்தோர்னெ தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தை சேர்ந்த ஆயில் ரிக் தொழிலாளி மைக் மெக்கே நேரடியாக நடந்த சம்பவத்தை பார்த்ததாக குறிப்பிட்டு இந்த புத்தகத்தில் நைஜல் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். மாயமான மலேசிய விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததை அடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மாயமானபோது தெற்கு சீன கடலில் தாய்லாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மற்ற பணியாளர்கள் இணைந்து போர் பயற்சி நடத்தினர். அப்போது விமானம் ஒன்று எரிந்து தாய்லாந்து வளைகுடா பகுதியில் விழுந்ததை மைக் மெக்கே பார்த்துள்ளார் என்று இரண்டையும் ஒப்பிட்டு கவ்தோர்னெ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பயிற்சியின் துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


-- dinathanthi
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Mon May 19, 2014 12:25 pm

மாயமான மலேசிய விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததை அடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது

விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதால் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Mon May 19, 2014 1:36 pm

@சிவா wrote:எம்எச் 370இல், 4,566 டன் மங்குஸ்தீன் பழங்கள் ஏற்றப்பட்டன என அறிக்கையோடு இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பட்டியல் தெரிவிக்கின்றது.

அந்த மங்குஸ்தீன், சரக்கு விவரப் பட்டியலின்படி அதன் மதிப்பு வெ.51,367.50 என்றும் அதை மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் பெய்ஜிங்கிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் பதிவு செய்திருந்தார் என்றும் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

ஆனால், மங்குஸ்தீன் பழங்களோ நீண்ட நாட்களாக வைக்க முடியாத தன்மை கொண்டவை. பருவ காலப் பழமான இந்தப் பழம் மார்ச் மாதத்தில் மலேசியாவில் கிடைக்காது – அதுவும் டன் கணக்கில் கிடைக்காது என்பதுதான் அனைவருக்கும் எழுந்துள்ள முதல் சந்தேகம்.

அத்துடன் கல்லியம் மின்மயத் துகள் (Lithium ion) மின்கலங்கள் (பேட்டரிகள்) 200 ஏற்றப்பட்டிருந்தன என்றும் சரக்குப் பட்டியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் எடை 2,453 டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 200 மின்கலங்கள் அவ்வளவு எடையைக் கொண்டிருக்காது என்றும் தகவல் ஊடகங்கள் சந்தேகம் கிளப்பியுள்ளன. இதனால் இவற்றோடு வேறு பொருட்கள் ஏதும் சேர்க்கப்பட்டிருந்ததா, என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

அந்த கல்லியம் மின்மயத்துகள் மின்கலங்களின் மதிப்பு வெ.32,082,48 என்றும் அவை சீக்கிரம் தீப்பிடிக்கக் கூடிய அபாயமுள்ள பொருள் என்பதால் அவை கவனமாக கையாளப்பட வேண்டும் எனும் எச்சரிக்கை வாசகங்களோடு அவை ஏற்றப்பட்டன என்றும் சரக்குப் பட்டியல் விவரம் தெரிவித்துள்ளது.

இதனால், சரக்குப் பட்டியலில் குறிப்பிடப்பட்டபடி உண்மையிலேயே மங்குஸ்தீன் பழங்களும் கல்லியம் மின்கலங்களும் ஏற்றப்பட்டனவா, அல்லது வேறு பொருட்கள் மறைமுகமாக ஏற்றப்பட்டனவா –

அப்படி ஏற்றப்பட்டிருந்தால் அந்த மர்மப் பொருட்கள் என்ன –

அந்த பொருட்களுக்கும், விமானம் காணாமல் போனதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா –

என்பது போன்ற சந்தேகங்களும், சர்ச்சைகளும் இன்னும் தொடர்கின்றன.


boeing தளத்தில் அவர்களின் விமானங்கள் அதிகபட்சமாக எவ்வளவு எடையை தூக்கி செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கும் இவர்கள் சொல்லியுள்ள மங்குஸ்தான் கணக்குக்கும் கொஞ்சம் கூட ஒத்துவரவில்லையே புன்னகை


எனக்கு முன்பே இந்த பதிவை பார்த்தவுடன் சந்தேகம் வந்தது .... இதில் பல நாட்டு ராணுவ ரகசியங்கள் புதைந்துள்ளது.


அவர்கள் என்ன எழவை வேண்டுமானாலும் எடுத்து செல்லட்டும் , அதற்கு அப்பாவி பிரயாணிகள் பயன்படுத்தும் விமானத்தை எதற்கு காவு கொடுத்தார்கள்.

@சிவா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30923
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Mon May 19, 2014 7:19 pm

@ராஜா wrote:[link="/t108708p180-mh370#1064679"]boeing தளத்தில் அவர்களின் விமானங்கள் அதிகபட்சமாக எவ்வளவு எடையை தூக்கி செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கும் இவர்கள் சொல்லியுள்ள மங்குஸ்தான் கணக்குக்கும் கொஞ்சம் கூட ஒத்துவரவில்லையே புன்னகை


எனக்கு முன்பே இந்த பதிவை பார்த்தவுடன் சந்தேகம் வந்தது .... இதில் பல நாட்டு ராணுவ ரகசியங்கள் புதைந்துள்ளது.


அவர்கள் என்ன எழவை வேண்டுமானாலும் எடுத்து செல்லட்டும் , அதற்கு அப்பாவி பிரயாணிகள் பயன்படுத்தும் விமானத்தை எதற்கு காவு கொடுத்தார்கள்.

@சிவா

.

@ராஜா

அவர்களே நீங்கள் இங்கு சுட்டிக் காட்டியது போயிங் 777 Freighter version .MAS MH 370 விமானம் போயிங் 777-200 ER version அதன் தகவல்களை சென்று பாருங்கள் ...அதன் கார்கோ லிமிட் என்ன என்பது தெரியும்.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by கிருஷ்ணா on Tue May 20, 2014 8:54 am

சோகம் 
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Tue May 20, 2014 12:05 pm

@SajeevJino wrote:@ராஜா
அவர்களே நீங்கள் இங்கு சுட்டிக் காட்டியது போயிங் 777 Freighter version .MAS MH 370 விமானம் போயிங் 777-200 ER version அதன் தகவல்களை சென்று பாருங்கள் ...அதன் கார்கோ லிமிட் என்ன என்பது தெரியும்.
http://www.boeing.com/boeing/commercial/777family/pf/pf_200product.page

@SajeevJino இதிலும் ஏறக்குறைய ஒரே அளவு தான கொடுத்துள்ளார்கள் சஜீவ்

Maximum Takeoff Weight 656,000 lbs (297,550 kg)
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30923
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Tue May 20, 2014 6:47 pm

@ராஜா wrote:
boeing தளத்தில் அவர்களின் விமானங்கள் அதிகபட்சமாக எவ்வளவு எடையை தூக்கி செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கும் இவர்கள் சொல்லியுள்ள மங்குஸ்தான் கணக்குக்கும் கொஞ்சம் கூட ஒத்துவரவில்லையே புன்னகை

இவர்கள் மங்குஸ்தீன் பழங்களை ஏற்றியதாகக் கூறியுள்ள நேரத்தில் மலேசியாவில் மங்குஸ்தீன் பழங்களே இல்லை என்பதுதான் குறிப்பிடத் தக்க செய்தி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Tue May 20, 2014 8:33 pm

@ராஜா அவர்களே


MH 370-யின் கார்கோ விபரங்கள்
1. மங்குஸ்தீன் பழங்கள் - 4 முதல் 5 டன்கள்
2. லித்தியம் ion மின் காலங்கள் - 250 கிலோ கிராம்
3. மேலும் மூன்று சரக்குகள் சாதாரண கார்கோ வகைகள் Airway Bill மூலம் - 2.5 டன்கள்

ஆக மொத்தம் சரக்குகள் 7 டன்களுக்கும் குறைவு

விமானத்தின் MTOW 297 டன்கள் .. மீதம் ஒரு 200 டன்னில் பயணிகளும் விமானத்தின் மற்ற பொருள்களும் கணக்கிடப்பட்டுள்ளது...ஆக விமானத்தின் அளவுக்கு தான் சரக்குகள் அதில் ஏற்றப்பட்டுள்ளது.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Tue May 20, 2014 8:43 pm

@ராஜா wrote:
boeing தளத்தில் அவர்களின் விமானங்கள் அதிகபட்சமாக எவ்வளவு எடையை தூக்கி செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்கள். அதற்கும் இவர்கள் சொல்லியுள்ள மங்குஸ்தான் கணக்குக்கும் கொஞ்சம் கூட ஒத்துவரவில்லையே புன்னகை

விமானத்தால் அவ்வளவு எடையை தூக்கிச் செல்ல முடியும் ..மேலே உள்ள பதிவை பாருங்கள்

@சிவா wrote:[link="/t108708p180-mh370#1064941"]இவர்கள் மங்குஸ்தீன் பழங்களை ஏற்றியதாகக் கூறியுள்ள நேரத்தில் மலேசியாவில் மங்குஸ்தீன் பழங்களே இல்லை என்பதுதான் குறிப்பிடத் தக்க செய்தி!

trading இனைய தளங்களுக்கு சென்று பார்த்ததில் மலேசியாவிலிருந்து 2010ம் ஆண்டில் 5482 டன் மங்குஸ்தீன் மற்றும் கோவாஸ் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ..2011இல் 6109 டன்னாகவும் 2012இல் அது 6839 டன்னாகவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது ..இது தொடர்ச்சியாக எல்லா மாதமும் ஏற்றுமதி ஆகிக் கொண்டே இருக்கிறது

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Wed May 21, 2014 12:57 pm

@SajeevJino wrote:[link="/t108708p180-mh370#1064944"]@ராஜா அவர்களே


MH 370-யின் கார்கோ விபரங்கள்
1. மங்குஸ்தீன் பழங்கள் - 4 முதல் 5 டன்கள்
2. லித்தியம் ion மின் காலங்கள் - 250 கிலோ கிராம்
3. மேலும் மூன்று சரக்குகள் சாதாரண கார்கோ வகைகள் Airway Bill மூலம் - 2.5 டன்கள்

ஆக மொத்தம் சரக்குகள் 7 டன்களுக்கும் குறைவு

விமானத்தின் MTOW 297 டன்கள் .. மீதம் ஒரு 200 டன்னில் பயணிகளும் விமானத்தின் மற்ற பொருள்களும் கணக்கிடப்பட்டுள்ளது...ஆக விமானத்தின் அளவுக்கு தான் சரக்குகள் அதில் ஏற்றப்பட்டுள்ளது.


ஓகே ஓகே ... இது typing மிஸ்டேக் ஆக இருந்துருக்கும் ,

@சிவா wrote:எம்எச் 370இல், 4,566 டன் மங்குஸ்தீன் பழங்கள் ஏற்றப்பட்டன என அறிக்கையோடு இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பட்டியல் தெரிவிக்கின்றது.
அத்துடன் கல்லியம் மின்மயத் துகள் (Lithium ion) மின்கலங்கள் (பேட்டரிகள்) 200 ஏற்றப்பட்டிருந்தன என்றும் சரக்குப் பட்டியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் எடை 2,453 டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் இதை படித்தவுடன் தான் confuse ஆகிட்டேன் என்னடா இது டன் கணக்கில் வருகிறதே என்று புன்னகை
@SajeevJino

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30923
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Wed May 21, 2014 2:49 pm

@ராஜா wrote:[link="/t108708p180-mh370#1065005"]


ஓகே ஓகே ... இது typing மிஸ்டேக் ஆக இருந்துருக்கும் ,நான் இதை படித்தவுடன் தான் confuse ஆகிட்டேன் என்னடா இது டன் கணக்கில் வருகிறதே என்று புன்னகை
@SajeevJino


,
ஹ்ம்ம் சரிதான் ..கிலோவிற்கு பதில் டன் என எழுதி இருக்கிறார்

...
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by கிருஷ்ணா on Thu May 22, 2014 8:20 am

விமான குழுவில் ஒருவரான முகம்மத் ஹஸ்ரின் ஹஸ்னனுக்கு இரண்டாவது குழந்தை மகன் பிறந்துள்ளார்.மகளுக்கு தந்தையின் நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை. பாவம். அவரின் மனைவியும் குழந்தைகளும் சோகம் 
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 539
மதிப்பீடுகள் : 223

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Fri May 30, 2014 10:23 am

எம்எச் 370: தேடும் பகுதியை மாற்றிக் கொள்ளப்போவதில்லை – நஜிப் அறிவிப்பு

இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில், சமிஞைகள் கிடைத்த திசையில், மாயமான மலேசிய விமானத்தை தேடித்தேடி ஓய்ந்து போன ஆஸ்திரேலியா, விமானம் இந்தியப் பெருங்கடலில் விழவே இல்லை என நேற்று அறிக்கை விடுத்தது.

இருப்பினும், மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் அதை ஒப்புக் கொள்வதாய் இல்லை.

குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் தேடுதல் பணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என நேற்று சீனாவில் பெய்ஜிங் நகரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நஜிப் தெரிவித்துள்ளார்.

மலேசியா – சீனா இடையிலான 40 ஆண்டு கால நல்லுறவையொட்டி, 6 நாட்கள் சீனாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நஜிப்பிடம், ஆஸ்திரேலியா கூட்டு முகமை ஒருங்கிணைப்பு மையம் (Joint Agency Coordination Centre) வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நேற்று அங்குள்ள செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த நஜிப், “தேடுதல் பணியில் மலேசியாவின் நிலைப்பாடு மாறாது” என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவருடன் இருந்த இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கருவிகள் தங்கள் பணிகளை நிறுத்திக் கொண்டதை உறுதிப்படுத்தினார்.

“நாம் அடுத்தக் கட்ட ஆழ்கடல் தேடுதல் பணிக்கு போக வேண்டி இருப்பதால், தற்போது இந்த கருவிகள் தங்கள் பணிகளை நிறைவு செய்கின்றன” என்று ஹிஷாமுடின் தெரிவித்தார்.

இந்த புதிய தேடுதல் பணிக்குத் தேவையான கருவிகளை பயன்படுத்த பெட்ரோனாஸ் மற்றும் டெஃப்டெக் ஆகிய நிறுவனங்கள் நிதியுதவி செய்யவுள்ளதாகவும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 8 -ம் தேதி, 239 பயணிகளுடன் மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (The Australian Transport Safety) நேற்று வெளியிட்ட அறிக்கையில், இதுவரை விமானத்தின் ஒலி சமிஞைகள் கிடைப்பதாக கூறப்பட்டு வந்த தென் இந்தியப் பெருங்கடல் பகுதியில் விமானம் விழவே இல்லை என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Wed Jun 04, 2014 5:10 pm

எம்எச்370: “எரிந்த நிலையில் விமானம் பறந்தது – பின்னால் இரண்டு விமானங்கள் சென்றன” – அதிர்ச்சி தகவல்

மாயமான எம்எச்370 விமானம் பற்றிய பலவிதமான ஆரூடங்களும், வதந்திகளும், தகவல்களும் சற்றே தணிந்திருந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் விமானம் எரிந்த நிலையில் இந்தியப் பெருங்கடலின் மேலே பறந்ததைப் பார்த்ததாக புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளது தற்போது ஊடகங்களில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

கேத்ரினா டீ (வயது 41) என்ற அந்த பெண் தன் கணவருடன் மார்ச் மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தாராம். விமானம் காணாமல் போன நாளான மார்ச் 8 -ம் தேதி அவர், அதிகாலையில் கொச்சியில் இருந்து தாய்லாந்து புக்கெட் தீவுக்கு கடல் வழிப் பயணத்தை அவர் மேற்கொண்டிருந்த போது விமானம் ஒன்று எரிந்து நிலையில் போனதைக் கண்டுள்ளார்.

அந்த விமானத்தின் பின்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியதையும் அவர் கண்டுள்ளார். அந்த நேரத்தில் தன்னுடன் பயணம் செய்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் என்றும் கேத்ரினா கூறியுள்ளார்.

இது குறித்து கேத்ரினா மேலும் கூறுகையில், “விமானம் ஒன்று எரிந்த நிலையில் பறந்ததைப் பார்த்தேன். பின்னர் அப்படி இருக்காது என்று நினைத்துக் கொண்டேன். இருந்தாலும், அது என் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருந்தது. இதற்கு முன்பு ஆரஞ்சு வண்ணத்தில் விமானத்தில் விளக்குகள் இருந்ததாகக் கண்டதில்லை.” என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த விமானத்தின் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்தது என்றும், அந்த விமானத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு விமானங்களை தான் கண்டதாகவும் கூறியுள்ளார்.

முன்னே சென்ற விமானத்தில் இருந்து வித்தியாசமாக ஆரஞ்சு வண்ணத்திலான வெளிச்சமும், அதன் பின்னால் கண்ட இரண்டு விமானங்களில் வழக்கமான வெளிச்சமும் இருந்ததாக கேத்ரினா தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அந்த இரண்டு விமானங்களும் எரிந்த விமானத்திற்கு உதவ வந்திருக்கலாம் என்று தான் நினைத்துக் கொண்டதாகவும் கேத்ரினா கூறியுள்ளார்.

தான் பார்த்தது எரிகற்களாகக் கூட இருக்கலாம் என்ற காரணத்தால் அப்போது அது பற்றி தனது கணவரிடம் பேசவில்லை என்றும், பின்னர் விமானம் காணாமல் போன செய்தி அறிந்த பின்னர் மார்ச் 10 -ம் தேதி தான் கணவரிடம் கூறியதாகவும் கேத்ரினா கூறியுள்ளார்.

கேத்ரினாவின் இந்த தகவல் தற்போது ஊடகங்கள் அனைத்திலும் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கண்ட செய்தியை லண்டனைச் சேர்ந்த பிரபல ‘தி டெலிகிராப்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் பார்த்தது Non-Stop படத்தின் காட்சி என நினைக்கிறேன்! அதில் தான் இதுபோன்ற காட்சி வருகிறது!  நக்கல் நாயகம் 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Wed Jun 04, 2014 7:04 pm

விபத்தோ அல்லது தவறாக சுடப்பட்ட விமானமோ ---மர்மம் விலகிய பாடில்லை .
உறவினர்கள் ஒரு விதமாக தங்களை சமாதானப் படுத்திக் கொண்டு இருப்பார்கள் .
மீண்டு வந்தால் உலகமே சந்தோஷப்படும் .
நிற்க ,
நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டு விட்டதா ? அல்லது இன்னும் இழுக்கடிக்கிறார்களா?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Wed Jun 04, 2014 7:52 pm

.

அருமை @சிவா அவர்களே ..!!

நீங்களும் இப்போது புலனாய்வில் கலக்குகிறீர்கள் ...அதே படம் தான் Non-Stop

எப்படியெல்லாம் கதை உருவாக்குகிறார்கள் ..!!!

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Thu Jun 05, 2014 3:58 am

@T.N.Balasubramanian wrote:விபத்தோ அல்லது தவறாக சுடப்பட்ட விமானமோ ---மர்மம் விலகிய பாடில்லை .
உறவினர்கள் ஒரு விதமாக தங்களை சமாதானப் படுத்திக் கொண்டு இருப்பார்கள் .
மீண்டு வந்தால் உலகமே சந்தோஷப்படும் .
நிற்க ,
நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டு விட்டதா ? அல்லது இன்னும் இழுக்கடிக்கிறார்களா?
ரமணியன்

இன்னும் நஷ்ட ஈடு கொடுக்கப்படவில்லை! விமானம் கிடைக்காத பட்சத்தில் காப்பிட்டுப் பணம் பல கோடிகள் கொடுக்க வேண்டி வருமாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Thu Jun 05, 2014 3:59 am

@SajeevJino wrote:.

அருமை @சிவா அவர்களே ..!!

நீங்களும் இப்போது புலனாய்வில் கலக்குகிறீர்கள் ...அதே படம் தான் Non-Stop

எப்படியெல்லாம் கதை உருவாக்குகிறார்கள் ..!!!

அனைத்தும் தங்களிடம் கற்றுக் கொண்டதுதான் சஜீவ்! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Mon Jun 09, 2014 4:46 pm

மாயமான எம்.எச் 370 விமானம் குறித்து தகவல் கொடுத்தால் 50 லட்சம் டாலர்கள் சன்மானம்

மாயமான மலேஷிய விமானம் எம்.எச் 370 குறித்து தகவல் தருபவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட மலேஷிய விமானம் எம்.எச் 370, 239 பேருடன் மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடுவானில் மாயமானது. பல நாடுகளின் ஒருங்கிணைந்த தேடுதலுக்கு பின்னரும் கூட மாயமான இந்த விமானம் குறித்து எந்த உறுதியான தகவும் இல்லை.

இந்நிலையில், விமானம் குறித்த உண்மையான தகவல் மறைக்கப்படுவதாக கருதும் விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள், உண்மை நிலையை  அறியும் பொருட்டு, அவ்விமானம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர்கள்  சன்மானமாக வழங்கப்படுமென அறிவித்துள்ளனர்.
 
இதற்கான செலவு தொகையை இணையதளம் மூலமாக வசூலிப்பதற்கும், அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
இதுகுறித்து கூறிய  பயணியின் உறவினர் ஒருவர், விமானத்தை பற்றிய தகவல்கள் சில மறைக்கப்படுவதாக தெரிகிறது. சன்மானம் அறிவித்திருப்பதன் மூலம் தகவல்களை கொடுக்க யாராவது முன்வருவார்கள் என்று நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Thu Jun 12, 2014 3:47 pm

எம்எச்370: பயணிகளின் உறவினர்களுக்கு காப்பீட்டுத் தொகையாக தலா 50,000 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது!

மாயமான மாஸ் MH370 விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் உறவினர்களிடம் விமானக் காப்பீட்டு முன்பணமாக தலா 50,000 அமெரிக்க டாலர்கள் (160,700 ரிங்கிட்) அளிக்கப்பட்டுள்ளது.

விமானத்தைத் தேடும் பணி நிறைவடைந்த பின்னர், மீதமுள்ள மொத்த பணமும் வழங்கப்படும் என்று வெளியுறவுத்துறை துணையமைச்சர் டத்தோ ஹம்ஸா ஸைனுதீன் தெரிவித்தார்.

இந்த காப்பீட்டுப் தொகையைப் பெறும் பயணிகளின் உறவினர்களில் 6 பேர் மலேசியர்கள் மற்றும் ஒருவர் சீனாவைச் சேர்ந்தவர். இது தவிர, இன்னும் 40 பேரிடம் காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு சீன அரசாங்கம் அவர்களது விபரங்களை சரிபார்த்து வருகின்றது.

விமானத்தில் பயணம் செய்த பணியாளர்கள் உட்பட 239 பேரும் இந்த காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஹம்ஸா, “காப்பீட்டுத் தொகையைப் பெறுபவர்களில் பலர் சொந்தமாக வழக்கறிஞர்களை நியமித்து இந்த விவகாரத்தை கவனித்து வருகின்றார்கள். எனவே பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இந்த தொகையை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

கடந்த மார்ச் 8 -ம் தேதி அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து பெய்ஜிங் நோக்கி சென்ற மாஸ் MH370 விமானம் தாய்லாந்து எல்லையைத் தொட்டதும் ரேடார் தொடர்பில் இருந்து விலகியது.

தற்போது 3 மாதங்கள் ஆகியும் விமானம் பற்றிய எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Mon Jun 23, 2014 6:41 pm

மாயமான மலேசிய விமானம்: தலைமை விமானிதான் முக்கிய குற்றவாளியாக இருக்கலாம் என சந்தேகம்

மலேசிய விமானம் மாயமான வழக்கில் அதன் தலைமை விமானியின் சதியே காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு, கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானம், நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, மர்மமான முறையில் மாயமானது.அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து, கடல் பகுதியில் தீவிரமாகத் தேடியபோதும், அதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அந்த விமானத்தை வேண்டுமென்றே சிலர் வேறுபாதையில் திருப்பியிருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது.இந்நிலையில், அந்த விமானம் கடத்தப்பட்டதா? அதில் விமானிக்கு தொடர்பு உள்ளதா? தீவிரவாதிகளின் நாசவேலையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், விசராணையில் மனித தவறுகளே விமானம் மாயமானதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அப்படி மனித தவறுகள்தான் சம்பவத்திற்கு காரணமாக இருந்தால் அது விமானத்தின் தலைமையை விமானியே காரணாம இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இந்த தகவலை சண்டே டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum