ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

239 பயணிகளோடு மாயமான விமானம்

Post by பாலாஜி on Sat Mar 08, 2014 1:46 pm

First topic message reminder :

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.

மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.

MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


--வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down


Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Mon Mar 31, 2014 7:29 pm

@ராஜா wrote:விமானம் ராடார் திரையில் இருந்து மறைந்தபிறகு 8 மணிநேரம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இஞ்ஜின் இயங்கியுள்ளதாக (ping மெசேஜ்ஐ மேற்கோள் காட்டி) குறிப்பிடபட்டுள்ளது அப்படியென்றால் அடுத்த 8 மணிநேரத்தில் அந்த இடங்கள் பகல் நேரத்திற்கு வந்திருக்குமே , இவனுங்க என்ன நிபுணர்கள்இது தான் சாட்டிலைட் ping பண்ணிய Location ..அதன் அச்சில் சிறு புள்ளி மட்டும் தான் தோன்றும் . இது நெடுக்காக சென்றிருப்பதால் அது டைம் zone மாறும் சாத்தியம் இல்லை ..அது நெடுக்காக சென்றிருந்தால் கூட போக போக வெளிச்சம் தான் அதிகரிக்குமே தவிர இருட்டாது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Thu Apr 03, 2014 3:59 am

 மாயமான விமான வழக்கில், இனி தீர்வு இல்லை: மலேசிய போலீஸ் அறிவிப்பு

239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, கடந்த 8-ந் தேதி மலேசிய விமானம் மாயமானது. இது தொடர்பாக உலகளாவிய அளவில் தேடுதல் வேட்டை நடந்தும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதி கடலில் விழுந்து நொறுங்கி இருக்க வேண்டும், அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மலேசியா அறிவித்தது.

இந்த வழக்கில், விமானம் மாயமான பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு இனி வழியே இல்லை என கோலாலம்பூர் போலீஸ் ஐ.ஜி. கலித் அபுபக்கர் அறிவித்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில்,  மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில், விசாரணை நடக்கிறது. நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால் விமானம் மாயமாகப்போனதின் உண்மையான காரணம் தெரியவில்லை என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Sat Apr 05, 2014 7:23 am

மலேசிய விமானம்: சென்சார் தொழில்நுட்பம் மூலம் கருப்பு பெட்டியை தேடும் 2 கப்பல்கள்

கடந்த மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் (எம்.ஹெச். 370) இந்திய பெருங்கடலுக்குள் (தெற்கு) விழுந்துவிட்டது என்று மலேசியா அறிவித்தது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

விமானத்தின் கறுப்புப் பெட்டி பாட்டரியின் மூலம் இயங்குவதால் அதன் பாட்டரிகள் 30 நாட்களுக்கு மட்டுமே இயங்கக்கூடிய சக்தி பெற்றவை. இதையடுத்து, பேட்டரியின் ஆயுள் முடிவதற்குள் அதை கண்டுபிடிக்க தேடும் குழுக்களுக்கு இன்னும் ஒரு சில நாட்களே மீதமுள்ளதால் தேடல் பணியில் புதிய சென்சார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மலேசிய விமானத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் கடலுக்கடியில் தேடும் முயற்சி நேற்று துவங்கியது.
இதற்காக, ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் 'ஓஷன் ஷீல்ட்' மற்றும் எச்.எம்.எஸ் 'எக்கோ' என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

விமானத்தின் விமானிகள் அறையில் நடந்திருக்கூடிய உரையாடல்கள் மற்றும் பிற தரவுகளை ஒலிப்பதிவு செய்திருக்கும் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் சென்சார் கருவிகளை இந்த கப்பல்கள் இழுத்துச் செல்கின்றன.

இந்த இரண்டு கப்பல்களை தவிர, 10 மிலிட்டரி விமானங்கள், 4 சிவிலியன் ஜெட் விமானங்கள், மற்றும் ஒன்பது கப்பல்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளன. தேடல் முயற்சி நடக்கும் பகுதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கு சுமார் 1,700 கி.மீ. வட மேற்கே அமைந்துள்ளது.

இதுவரை கிடைத்துள்ள செயற்கைகோள் தகவல்களை வைத்தே இந்த தேடும் பகுதி வரையறுக்கப்பட்டு உள்ளதாகவும், எனினும் மிகவும் நம்பகமான தகவல்களின் அடிப்படையிலேயே தற்போதைய தேடுதல் பணி துவங்கியிருப்பதாக தேடுதல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Sat Apr 05, 2014 1:18 pm

இன்னும் ஓரிரு நாட்கள் தான் அதன் பிறகு அப்படியே மறந்துடுவார்கள். ஆனால் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகரித்துக்கொண்டே உள்ளது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Sun Apr 06, 2014 6:14 pm

மாயமான மலேசிய விமானம்; சீனாவின் புதிய தகவல்களை அடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் பணி தீவிரம்

229 பயணிகளுடன், சீன தலை நகர் பெய்ஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த மாதம் 8ந் தேதி மாயமானது. அந்த விமானம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று மலேசிய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தை தேடும் முயற்சியும் தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டியின் சிக்னல்களை கொண்டு விமானம் குறித்தான தகவல்களை பெறலாம் என்ற நிலையில் அதனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த சீன கப்பலான ஹைக்சன் 01 கருப்பு பெட்டியில் இருந்து நேற்று முதன்முறையாக சிக்னல் ஒன்றை கண்டறிந்தது. இது மாயமான மலேசிய விமானத்திற்குரிய கருப்பு பெட்டியில் இருந்து கிடைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மாயமான மலேசிய விமானத்தில் இருந்துதான் சிக்னல் கிடைக்கப்பட்டுள்ளது என்று சீனா உறுதிபடுத்தவில்லை. அதனை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

மேலும், சீனாவின் விமானப்படை விமானங்கள் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பகுதியில் வெள்ளை நிறம் போன்ற பொருட்களை படம் பிடித்துள்ளது என்று செய்திநிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. வெவ்வேறு விதமான தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் தொடர்ந்து அங்கு விமானத்தை தேடும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தெளிவான வானிலை நிலவிய சூழ்நிலையில் 10 இராணுவ விமானங்கள், 2 பயணிகள் விமானங்கள் மற்றும் 13 கப்பல்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by அருண் on Mon Apr 07, 2014 12:49 am

விமானத்தைக் கடத்தியது அமெரிக்க ராணுவம்.......?

மலேசிய விமானத்தை கடத்தியது அமெரிக்க ராணுவம் தான் என்பதாக் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இச்செய்தியும் வெளியாகியுள்ளது. யூத ஊடகங்களிலும், அதனை வாந்தி எடுக்கும் ஊடகங்களிலும் கற்பனை செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இது போன்ற செய்திகளை யூத ஊடகங்களும் அதனை வாந்தி எடுக்கும் ஊடகங்களும் ஐம்புலன்களையும் பொத்திக் கொண்டுள்ளதால் மக்களிடம் செய்திகள் சேராமல் உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

மலேசிய விமானம் அமெரிக்க இராணுவ தளத்தில் நிற்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தின் பெயரும் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

அதில் பயணம் செய்த பிலிப் வூட் அனுப்பிய எஸ் எம் எஸ் தகவலில் தனது ஊடக நண்பரான இஸ்டோமுக்கு ஐ போன் -5 மூலம் அவர் அனுப்பிய எஸ் எம் எஸ்ஸில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு சில விஷயங்கள் தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். என்று அவர் தெரிவித்துள்ளதை வீடியோவில் காணலாம்.அந்த எஸ் எம் எஸ் எங்கிருந்து வந்தது என்பதை டிராக் செய்கையில் இராணுவ விமானம் நிற்கும் இடத்தை அது காட்டியுள்ளது.

விமானப்பயணிகளை ஆறு குழுக்களாக பிரித்து தனி தனி வீடுகள் போல் உள்ள இடங்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு கூட சரிவர கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது,

சில பயணிகளை வேறு இடங்களுக்கு கடத்தப்பட்டு இருப்பதாக செய்தி வெளியானவுடன் மேலும் பிற இடங்களுக்கு கடத்தப்ப்டிருக்கலாம் என் தெரியவருகிறது.

அத்துடன் விமானத்தின் ஒரு இறக்கை உடைந்துள்ளதா கவும் ரஷ்ய இதழ் குறிப்பிட்டுள்ளது._ http://www.importmirror.com* கடந்த மாதம் யூத ஊடகங்களில் இந்தியாவை தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என்ற செய்தி மிகவும் பரபரப்பாக வெளியிட்டதை நம் லோக்கல் ஊடகங்கள் வாந்தி எடுத்தது நினைவிருக்கலாம். 

இது போன்ற யூத ஊடகங்கள் செய்திகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்ட பின்பு தான் இரட்டை கோபுரங்கள் யூத பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு உலகில் இன்னொரு முஸ்லிம் நாடாக தாலிபான்களால் உருவாகிய ஆப்கான் நிர்முலமாக்கப்பட்ட்டு அவர்களை தீவிரவா திகள் என்று உலகை நம்பவைத்தது குறிப்பிட த்தக்கத்து.

விமானத்தைக் கடத்தி இன்னும் என்ன பயங்கரவாதம் செய்யப் போகிறார்களோ....? 

இது முக நூலில் பகிரப்பட்டது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Mon Apr 07, 2014 1:00 am

இதற்கு மேலும் விமானம் உள்ளது என்பதெல்லாம் கட்டுக்கதை அருண்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Mon Apr 07, 2014 9:41 am

இது போன்ற யூத ஊடகங்கள் செய்திகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்ட பின்பு தான் இரட்டை கோபுரங்கள் யூத பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு உலகில் இன்னொரு முஸ்லிம் நாடாக தாலிபான்களால் உருவாகிய ஆப்கான் நிர்முலமாக்கப்பட்ட்டு அவர்களை தீவிரவா திகள் என்று உலகை நம்பவைத்தது குறிப்பிட த்தக்கத்து.


இது முக நூலில் பகிரப்பட்டது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.இதிலிருந்தே தெரிந்திருக்கும் இதன் உண்மைத் தன்மை ..9/11 க்கு முக்கிய காரணம் ஒசாமா அவன் ஒரு முஸ்லிம் பயங்கரவாதி ..தாலிபான்கள் அவர்களைப் போல கொடூரமானவர்கள் .

இணையத்தில் இப்படி ஒரு குரூப் சுத்துகிறது ..உலகில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் அதில் எப்படியாவது யூதர்களை இணைத்து அவர்களை குற்றவாளி ஆக்கி விடுவார்கள்

இன்னும் சொல்லப் போனால் உங்கள் வீட்டில் உள்ள மிளகாய்ப் பொடி காணவில்லை என்று இவர்களிடம் சொல்லிப் பாருங்கள் ..அதை கூட ஒரு யூதன் தான் செய்தான் என்று உங்களை நம்ப வைத்து விடுவார்கள்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Mon Apr 07, 2014 10:53 am

@சிவா wrote:[link="/t108708p120-mh370#1056700"]இதற்கு மேலும் விமானம் உள்ளது என்பதெல்லாம் கட்டுக்கதை அருண்!

இது போல் நீண்ட நாட்கள் , நேதாஜி சுபாஷ் போஸ் உயிருடன் இருப்பதாக கூறிக்கொண்டு இருந்தவர்களும் உண்டு.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22153
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Mon Apr 07, 2014 12:29 pm

இது போன்ற யூத ஊடகங்கள் செய்திகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்ட பின்பு தான் இரட்டை கோபுரங்கள் யூத பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு உலகில் இன்னொரு முஸ்லிம் நாடாக தாலிபான்களால் உருவாகிய ஆப்கான் நிர்முலமாக்கப்பட்ட்டு அவர்களை தீவிரவா திகள் என்று உலகை நம்பவைத்தது குறிப்பிட த்தக்கத்து.

விமானத்தைக் கடத்தி இன்னும் என்ன பயங்கரவாதம் செய்யப் போகிறார்களோ....?
 சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Tue Apr 08, 2014 7:59 pm

 MH370: எரிபொருள் தீர்ந்த நிலையில் விமானம் கடலில் விழுந்துள்ளது – இன்மார்சட் தகவல்

ஏப்ரல் 8 – மாயமான மாஸ் MH370 விமானத்தில் இருந்து கடைசியாக துணைக்கோளுக்குக் கிடைத்த முற்றுப்பெறாத சிக்னலை (Partial Ping) ஆராய்ந்ததில், விமானத்தின் எரிபொருள் முழுவதுமாக தீர்ந்த நிலையில் தான் அது கடலில் விழுந்திருக்கிறது என பிரிட்டிஷ் நாட்டின் துணைக்கோள் நிறுவனமான இன்மார்சட் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இன்மார்சட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான க்ரிஸ் மெக்லாக்லின் கூறுகையில், “இந்த முற்றுபெறாத சிக்னல் விமானம் அதன் எரிபொருள் தீர்ந்த நிலையில், அதன் இயக்கங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு கடைசியாக துணைக்கோளுடன் தொடர்பு கொண்டது போல் உள்ளது. காரில் எப்படி எரிபொருள் தீர்ந்த நிலையில் அதன் கடைசி இயக்கங்கள் இருக்குமோ அதே போல் தான் இந்த விமானத்திலும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் நிறுத்திக் கொண்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

கடைசியாக இந்த முற்றுப் பெறாத சிக்னல் கிடைத்த இடத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள கடந்த மார்ச் 28 ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலில் ஏற்கனவே தேடுதல் நடத்திக் கொண்டிருந்த இடத்திலிருந்து 1,100 கிலோ மீட்டர் வடக்கு நோக்கி மீட்புப் படையினர் சென்றனர்.

விமானத்தில் இருந்து முற்றுப் பெறாத சிக்னல் கிடைத்துள்ளது என்ற தகவலை விசாரணை அதிகாரிகள் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியிட்டதைத் தொடர்ந்து தேடுதல் பணியில் இந்த உடனடி மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

[offtopic]எப்பூடி, கடைசியில முடிவை சொல்லிட்டாங்கல்ல..[/offtopic]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Tue Apr 08, 2014 11:36 pm

“இந்த முற்றுபெறாத சிக்னல் விமானம் அதன் எரிபொருள் தீர்ந்த நிலையில், அதன் இயக்கங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு கடைசியாக துணைக்கோளுடன் தொடர்பு கொண்டது போல் உள்ளது. காரில் எப்படி எரிபொருள் தீர்ந்த நிலையில் அதன் கடைசி இயக்கங்கள் இருக்குமோ அதே போல் தான் இந்த விமானத்திலும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் நிறுத்திக் கொண்டுள்ளன”


இது என்ன சைக்கிள் டைனமோவா .சக்கரம் சுத்துவது நின்றவுடன் ..ஹெட் லைட் எரியாமல் இருப்பது போல

 ராடார் மற்றும் பலவகை தொடர்பியல் சார்ந்த உபகரணங்கள் அனைத்துமே அதெற்கென தனிதனி பேட்டரியில் தான் இயங்கும் ..எரிபொருள் விமானத்தில் தீர்ந்தால் கூட இவை செயல்படும் ..காரணம் இவை பேட்டரி மூலம் இயங்குபவை ..

நல்லா விடுறீங்கடா..!!!!

எப்பூடி, கடைசியில முடிவை சொல்லிட்டாங்கல்ல..


ஒரு சரியான உறுதியான முடிவு கிடைக்கும் வரை  நாங்க விட மாட்டோம்...
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Thu Apr 10, 2014 3:52 am


MH370: உண்மையைக் கண்டறிய வேண்டும் – ஹிஷாமுடின்


காணாமல் போன எம்எச்370 விமான விவகாரத்தில் அதன் பயணிகள் சம்பந்தப்பட்டதற்கான எந்தவொரு தகவலும் இல்லாவிட்டாலும் புதிய தகவல்கள் கிடைத்தால் விசாரணை மறு ஆய்வு செய்யப்படும் என்று இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் விசாரணை எங்கு நடைபெறுகிறது என்பது முக்கியமல்ல, காணாமல் போன விமானத்திற்கு என்ன ஆனது என்ற உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் செய்தியாளர்கள் கேள்விக்கு ஹிஷாமுடின் பதிலளித்துள்ளார்.

எம்எச்370 தேடும் பணி இரண்டாவது மாதத்திற்கு சென்று விட்டது. இன்னும் விமானம் பற்றி எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. தற்போது ஆஸ்திரேலிய கடற்படையினர் தீவர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

புதிதாக இரண்டு சமிக்ஞைகள் கிடைக்கப் பெற்றதாகவும் நீர்மூழ்கிக் கப்பலும் முக்குளிப்போரும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரையில் கறுப்புப் பெட்டி கிடைக்கப் பெறவில்லை. கறுப்புப் பெட்டி கிடைத்தவுடன் உண்மை நிலவரங்கள் கண்டறியப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமானி, துணை விமானி மற்றும் இதர விமான ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்ந்து தீவிரபடுத்தப்பட்டு வருவதாகவும் ஹிசாமுடின் கூறினார்.

இதனிடையே, காணாமல் போன விமானம் குறித்து எந்தவொரு ஆருடங்களையும் கூற வேண்டாம் என பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Fri Apr 11, 2014 12:49 am

'சிக்னல்' கிடைத்த பகுதியை நெருங்கிய பன்னாட்டு கப்பல்கள்

பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின், கருப்பு பெட்டியிலிருந்து, சிக்னல் வெளியாவதாக கருதப்படும் இடத்தை, ஆஸ்திரேலிய கப்பல்கள் நெருங்கியுள்ளன.

மலேசியாவின், கோலாலம்பூரிலிருந்து, கடந்த மாதம், 8ம் தேதி, சீனாவை நோக்கி, 239 பயணிகளுடன் சென்ற விமானம் மாயமானது. இதில், சென்னையைச் சேர்ந்த, ஒரு பெண் உட்பட, ஐந்து இந்தியர்களும் பயணித்தனர். மாயமான விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பல நாடுகளைச் சேர்ந்த, 14 விமானங்களும், 13 கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளன.

ஆஸ்திரேலியா அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, 'ஹாய்சுன்' என்ற சீன கப்பலில், கருப்பு பெட்டியின் சிக்னல் கிடைத்தது. இதையடுத்து விமானங்களும், கப்பல்களும், இரவு பகலாக, மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளன. ஒரு லட்சம் சதுர கி.மீ.,க்கும் அதிகமான பரப்பளவில், விமானம் தேடப்பட்டது.

தற்போது, சிக்னல் கிடைக்கும் இடத்தை நெருங்கி விட்டதாக, ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கருப்பு பெட்டியை கண்டறியக்கூடிய, 'ஓஷன் ஷீல்டு' என்ற சாதனம், கடலுக்கு அடியில் செலுத்தப்பட்டு, தேடப்பட்டு வருகிறது. இதன்மூலம், மாயமான விமானம் இருக்கும் இடம், விரைவில் தெரிய வரும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by valluvanraja on Fri Apr 11, 2014 3:26 am

நல்லா இருக்கு இந்த சிறுவயது கண்ணாமூச்சி விளையாட்டு

avatar
valluvanraja
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 164
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Fri Apr 11, 2014 7:11 am

 விமானத்தை தேடும் முயற்சியில் உச்சக்கட்டம்: ஒரு சில நாளில் முடிவு தெரியும்

239 பேருடன் பீஜிங் சென்றபோது நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு சில நாளில் முடிவு தெரிந்துவிடும் என நம்பப்படுகிறது.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ‘எம்எச் 370’ பீஜிங் சென்றபோது நடுவானில் கடந்த 8-ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு மாயமானது. விமான போக்குவரத்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதிக பணச்செலவில் அந்த விமானத்தை தேடும் வேட்டை நடந்து வருகிறது.

அந்த விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து திட்டவட்டமான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் குடும்பங்கள் இன்று வரை கண்ணீரில் தவித்து வருகின்றன.

அந்த விமானம், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அந்த விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்து என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்து வைத்துள்ள கறுப்பு பெட்டியை தேடும் வேட்டை நடந்து வருகிறது.

கறுப்பு பெட்டியில் இருந்து வருகிற ஒலியைக்கேட்டு, அது இருக்கிற இடத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும் ‘டோவ்டு பிங்கர் லொக்கேட்டர்’ என்னும் கருவிகளை ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ’ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் இழுத்துச்சென்று தேடுகின்றன. மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியானது என கருதப்படுகிற ‘பிங்’ சமிக்ஞைகள் கடந்த 5-ந்தேதி 2 முறை கிடைத்தது. தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையும் இரு முறை கிடைத்துள்ளது. இந்த 4 சமிக்ஞைகளுமே மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

மாயமான விமானத்தை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவுக்கு தலைமை தாங்குகிற ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் பெர்த் நகரில் நேற்று கூறுகையில், “எனக்கு இப்போது திடமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒன்று, மாயமான மலேசிய விமானத்தை நாங்கள் கண்டுபிடிப்போம் அல்லது அந்த விமானத்துக்கு நேர்ந்தது என்ன என்பதை கண்டறிவோம். இதற்கு அதிக காலம் ஆகாது. ஒரு சில நாட்களில் இது தெரிந்துவிடும். மாயமான விமானம், கடலுக்கு அடியில் கடைசியாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் உறுதி செய்ய முடியும்” என கூறினார்.

இதேபோன்று ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமை கமிஷனர் மார்டின் தோலன் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் இன்னும் நெடிய தூரம் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் விமானத்தை தேடும் வேட்டையில் இதற்கு முன்பு இருந்ததை விட இப்போது சாதகமான அம்சங்கள் உள்ளன” என கூறினார்.

இந்த நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் 75 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் தேடுதல் வேட்டை நடந்தது. நேற்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடமேற்கில் 2,280 கி.மீ. பகுதியை மையப்பகுதியாகக் கொண்டு, 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவில் தேடப்படுகிறது.

இந்த குறுகிய பிரதேசத்தில் மாயமான விமானத்தை தேடும் பணியில் 10 ராணுவ விமானங்கள், 4 பயணிகள் விமானங்கள், 13 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. எனவே ஒரு சில தினங்களில் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வரும், விமானத்தின் கதி உலகுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Fri Apr 11, 2014 9:18 am

.


தேடுதலில் ஈடுபட்டுள்ள Ocean Sheild கப்பல் மற்றும் ஆஸ்திரேலியாவின் P3 Orion ASW விமானம்Ocean Sheild கப்பலில் இருந்து AUV (Autonomous Underwater Vehicle ) மூலம் தேடும் பணிநன்றி bd Popeye
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

மலேசிய விமானம் பயங்கரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது.

Post by டார்வின் on Fri Apr 11, 2014 10:33 pm

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி சீனாவின் பெய்ஜிங் நகருக்கு mh370 விமானம் 239 பேருடன் சென்றது. இந்நிலையில் பயணித்த ஒரு மணிநேரத்தில் விமானத்தின் தகவல் தொடர்பு அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து காணாமல் போன விமானத்தை தேடி பல்வேறு நாட்டு விமானபடை விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடிவந்தன. விமானம் எங்கும் கிடைக்காததால் யாராவதுவிமானத்தை கடத்திவைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதனைதொடர்ந்து இது தொடர்பாக மலேசிய தீவிர விசாரணை நடத்தியது. இந்த சூழலில் கடத்தப்பட்டது குறித்து உறுதியான தகவல் கிடைக்காததால் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 2500 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில். விமானத்தின் பாகங்கள் போன்ற 20 பொருட்கள் மிதப்பது செயற்கைகோள் புகைப்படத்தில் தெரியவந்தது.

இதனைதொடர்ந்து தீவிர தேடலில் அப்படி ஒன்றும் இல்லை என்று தெரியவந்தது. இவ்வாறு கடந்த மாதம் முழுவதும் தேடியும் விமானம் கிடைக்காத நிலையில், விமானம் கடலில் விழுந்துருக்கும் என்றும், அதில் பயணித்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனா, மலேசிய அரசு விமானம்  குறித்து தகவல்களை மறைப்பதாக குற்றம் சாட்டியது. இதேபோல் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் குற்றம்சாட்டினார். இதனைதொடர்ந்து கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் முயற்சி தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாகவும், அங்கு விமானம் முற்றிலும் பிரிக்கப்பட்டு, அதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக  ரஷ்ய உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. .இது குறித்து ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:

மலேசிய விமானம் பயங்கரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக கழற்றிய பயங்கரவாதிகள், பயணிகள் அனைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு வேறு இடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.  எந்தவிததொலைதொடர்பு வசதியும் இல்லாத பாழடைந்த வீடுகளில் பயணிகளை பயங்கரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் குடிநீர், உணவு உட்பட எந்த வசதியும் இன்றி பரிதவித்து வருகினறனர்.

மேலும் அந்த விமானத்தில் பயணித்த விஐபிகள் 20 பேரை ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் பிணைக் கைதிகளாக பயங்கரவாதிகள் அடைத்துவைத்துள்ளனர் என்று ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
thinamani
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Sat Apr 12, 2014 5:28 pm


MH370: பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளனர் – ரஷ்ய உளவுத் துறை அதிர்ச்சித் தகவல்!

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மாஸ் MH370 விமானம் மாயமாய் மறைந்து போனதைத் தொடர்ந்து தீவிர தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

இவ்வேளையில், விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டு தனி தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது எனவும், இதில் பயணம் செய்த 239 பயணிகளும் பிணையக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.

கடலுக்கு அடியில் புதிய சமிக்ஞைகள் கிடைத்த இடத்தைக் குறி வைத்து ஆஸ்திரேலிய மீட்புப் படையினர் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஏறக்குறைய அந்த இடத்தை நெருங்கிவிட்டதாக நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், விமானம் கடத்தப்பட்டதாக ரஷ்ய உளவுத் துறை வெளியிட்டுள்ள இந்த தகவல் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகையில் கூறியிருப்பதாவது,

“மலேசிய விமானம் தீவிரவாதிகளால் திசை திருப்பப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் ஆப்கானிஸ்தான் பகுதியில் மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு வேறு இடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.”

“மண் குடிசைகளில் எந்த தொலைதொடர்பு வசதியும் இல்லாத இடத்தில் பயணிகளை தீவிரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.மேலும் விமானத்தில் சென்றவர்களில் ஆசிய நாடுகளை சேர்ந்த பல்துறை நிபுணர்கள் 20 பேரை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

பயணிகள் அனைவரும் உயிருடன் இருப்பதாக ரஷ்ய உளவு துறை கூறியிருப்பது தற்போது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by சிவா on Sat Apr 12, 2014 5:34 pm

எம்.எச்-370 துணை விமானியின் கடைசி அழைப்பு: அவசர உதவிக்காக அழைத்தாரா?

மலேசிய விமானம் பீஜிங் நோக்கி பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு மேற்கொண்டார் என்றும். அதன் பின்னரே ராடர் பதிவிலிருந்து விமானம் மாயமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.

துணை விமானியின் அழைப்பு

இது குறித்து மலேசிய நாளிதழ் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ” விமானம் ராடார் பதிவிலிருந்து மாயமாவதற்கு முன்னர் அதன் துணை விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு ஒன்றை முயற்சித்தார். ஆனால் விமானம் அதிக வேகத்தில் பயணித்ததால், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. துணை விமானி மேற்கொண்ட அழைப்பு உதவிக்காக மேற்கொள்ளப் பட்டிருக்கலாம்.” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டி காலாவதி ஆனதா?

கடந்த சில நாட்களாக 'சோனார்' நீர்முழ்கி இயந்திரத்தில் சில இடைவேளிகளில் பதிவான சிக்னல்கள் தற்போது நின்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கருப்புப் பெட்டியின் பேட்டரி காலவதி ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்தது என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்யும் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலுக்கு அடியிலிருந்து பதிவான சிக்னல்கள் மலேசிய விமானத்துடையது தான் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்தார்.

விமானத்தின் கருப்புப் பெட்டி இந்திய பெருங்கடலின் 15 ஆயிரம் அடி ஆழத்தி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினர். கடந்த 5 வார தேடலில் கிடைக்கப்பட்ட ஒரே உறுதியான தகவல் என்ற அடிப்படையில், விமான தேடலில் நம்பிக்கை பிறந்தது. இதனை அடுத்து தேடல் பகுதி 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவாக குறைக்கப்பட்டது. சிகனல் பதிவை வைத்து கருப்புப் பெட்டியை கண்டுபிடுக்கும் பணியில் ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க் கப்பலும், 'எச்.எம்.எஸ். எக்கோ' என்னும் இங்கிலாந்தின் நீரமூழ்கி கப்பலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது சிக்னல் பதிவு ஏதும் இல்லாமல் போனது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சம்பவ கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

அந்த விமானத்தின் நிலை குறித்து தற்போது வரை தகவல்கள் இல்லாத நிலையில், பல்வேறு நாடுகளின் உளவுத்துறையினர் முரணான தகவல்களை வெளியிட்டு வருகின.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Sat Apr 12, 2014 6:08 pm

மலேஷியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்லவேண்டுமென்றால் எப்படி இருந்தாலும் இந்திய / சீன வான் வழியை தான் பயன்படுத்தியிருக்கவேண்டும் இந்த இரு நாடுகளுமே ராடார் தொழில்நுட்பத்தில் சிறந்தவை. 5000 அடிக்குமும் குறைவாக பறந்தாலும் கண்டுபிடிக்கும் ரேடார் தொழில்நுட்பம் இந்த இருநாடுகளிடமும் இருக்குமென நினைக்கிறேன்.

நம்ம சஜீவ் வந்தால் விபரம் கிடைக்கும் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Sat Apr 12, 2014 6:52 pm

@ராஜா wrote:[link="/t108708p135-mh370#1058098"]மலேஷியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்லவேண்டுமென்றால் எப்படி இருந்தாலும் இந்திய / சீன வான் வழியை தான் பயன்படுத்தியிருக்கவேண்டும் இந்த இரு நாடுகளுமே ராடார் தொழில்நுட்பத்தில் சிறந்தவை. 5000 அடிக்குமும் குறைவாக பறந்தாலும் கண்டுபிடிக்கும் ரேடார் தொழில்நுட்பம் இந்த இருநாடுகளிடமும் இருக்குமென நினைக்கிறேன்.

நம்ம சஜீவ் வந்தால் விபரம் கிடைக்கும் புன்னகை

ஆமாம், சஜீவ் அவர்களே ,
சீக்கிரம் ஈகரை ராடார் தொடர்பு எல்லைக்குள் வரவும்.
ரோஜர். ரோஜர்

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22153
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Sat Apr 12, 2014 10:00 pm

தெற்காசிய பிராந்தியத்தில் மிக அதிக அளவில் வானத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க அதிக அளவில் ராடார்களையும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் நிறுவி உள்ள நாடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ..குறுகிய battlefield ராடார் முதல் Long Range Search and Track with 3 D Optimization வரையிலும் இந்தியாவிடம் உள்ளது ...

மலேசிய விமானம் இந்திய எல்லைக்குள் வருமுன் அது இந்தியாவின் அந்தமான் Naval Base சென்டர்- ஐ தாண்ட வேண்டும் .. கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 அடி முதல் அதிக பட்ச உயரமாக 80000 அடி உயரம் வரை அது ஸ்கேன் செய்யும் வசதிகள் உள்ளன ..விமானம் பொதுவாக 100 அடி உயரத்திலிருந்து சுமார் 60000 அடி உயரம் வரை தான் பறக்கும் ..அதற்க்கு மேலோ அல்லாது கீழேயோ பறக்க முடியாது ..விமானம் இந்திய எல்லைக்குள் வர வேண்டுமானால் அது பல ராடார் நெட்வொர்க் ஐ தாண்ட வேண்டும் ..

1..அந்தமான் Naval Base
2..அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் பல கப்பல்களில் உள்ள ராடார்
3..TRVM ATC
4..சென்னை ATC
5..SFC ராடார் நெட்வொர்க்
6.. IAF Network Oriented ராடார் Coverage

இதை எல்லாம் மீறி ஒரு துரும்பு கூட உள்ளே நுழைய முடியாது

இதில் சந்தேகமே வேண்டாம் ..

இரு மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் எல்லையில் இரு முறை இந்திய விமானங்கள் பறக்கும் பலூன்களை தவறாக பாகிஸ்தான் விமானங்கள் என்று நினைத்து அதை சுட்டு வீழ்த்த சென்றன

இன்னும் கடந்த காலங்களில் இது போல பல சம்பவங்கள் அருணாச்சல் பெங்களூர் மும்பை ladakh போன்ற பிராந்தியங்களில் நடைபெற்றுள்ளன..
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Sat Apr 12, 2014 10:07 pm

மேலே வந்த பல தகவல்கள் எல்லாமே எவனோ ஒருவன் பரப்பும் செய்தி தான் ..

ரஷ்யன் FSB இதை பற்றி வாய் திறக்க வில்லை
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வான் வெளிகள் அமெரிக்கா மற்றும் நாடோ நாடுகள் மூலம் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளது ..

இவற்றை மீறி அங்கு விமானம் செல்லாது

=========================================

@ராஜா , @T.N.Balasubramanian

tag வசதியை பயன்படுத்தினால் எளிதாக என்னை அழைப்பதை தெரிந்து கொள்ள முடியும்

and Thanks for the Call
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Sun Apr 13, 2014 3:20 pm

@SajeevJino wrote:tag வசதியை பயன்படுத்தினால் எளிதாக என்னை அழைப்பதை தெரிந்து கொள்ள முடியும் and Thanks for the Call
தகவல்களுக்கு மிக்க நன்றி சஜீவ் @SajeevJino
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum