ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

View previous topic View next topic Go down

திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by pon.sellamuththu on Sat Mar 01, 2014 3:55 pm

. . . .
உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம்.
சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள்.

ஐயம் - 1

படம்:- வா கண்ணா வா
பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி

இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா?

( ஐயம் தொடரும் )  அன்புத் தமிழ் நெஞ்சம்  .  . பொன்.செல்லமுத்து
avatar
pon.sellamuththu
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by veeyaar on Sat Mar 01, 2014 4:48 pm

]தமிழுக்கே சந்தேகமா..

செல்லமுத்து சார், எங்களுக்கு தமிழில் சந்தேகம் வந்தால் தங்களிடம் வருவோம். தாங்களே சந்தேகம் கேட்டால்...

அடியேனுடைய எளிய அறிவிற்கெட்டிய வரை விடை சொல்ல முயல்கிறேன்.

தவறிருந்தால் மன்னிக்கவும்.

பொதுவாக திரைப்படப் பாடல்கள் என்றாலே ஒரு இளப்பமாக இருந்த காலம் உண்டு. என்றாலும் அவற்றில் பல இலக்கண இலக்கிய அம்சங்களோடு எக்காலத்திலும் அமைந்துள்ளன. இலக்கணப் பிழை பல பாடல்களில் இடம் பெற்றதும் உண்மையே. ஓசை நயத்தை முக்கியமாக வைக்கும் போது சில கவிஞர்கள் அல்லது பாடலாசிரியர்கள் இலக்கணத்தை இரண்டாம் பட்சமாக வைத்து எழுதி பாடல்கள் இடம் பெற்றதும் உண்டு. அதில் ஒரு வகைதான் தாங்கள் குறிப்பிட்டுள்ள கண்ணிரண்டில் பாடல். இது போல எண்ணற்ற பாடல்கள் தங்கள் ஐயத்தில் தவறாமல் இடம் பெறும் என்பது திண்ணம். இது தங்களுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக் கூடியது. இருந்தாலும் அத்தி பூத்தாற் போல சிலவற்றில் இலக்கணப் பிழை போல் காட்சியளித்தாலும் அதிலும் அர்த்தம் உள்ளடங்கி மறைமுகமாக சொல்லப் பட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் Interpretation என்று சொல்வார்களே அது போல் அவரவர் தங்களுக்கேற்றார்போல் அதனைப் பிழையாகவும் கொள்ளலாம் அல்லது அதைக்கவிஞர் வேண்டுமென்றே எழுதியிருக்கிறார் என அவருக்கு பரிந்துரைக்கவும் செய்யலாம்.

இந்த அடிப்படையில் பார்த்தால் இந்த கண்ணிரண்டில் மையெழுதி என்பதை, ஒவ்வொரு கண்ணுக்கும் தனித்தனியாக குறிப்பிட்டு கவிஞர் எழுதியிருக்கலாம் என்றும் ஒரு வாதம் கூறலாம் அல்லவா. ஒரு கண்ணுக்கு மை எழுதிய பிறகு அடுத்த கண்ணுக்கு எழுதுவதை கண்ணிரண்டில் எனக் கவிஞர் கூறியதாகவும் பொருள் கொள்ளலாமே..

ராகவேந்திரன்
avatar
veeyaar
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by ayyasamy ram on Sat Mar 01, 2014 6:55 pm

இளமை காலங்கள் என்ற படத்தில் வைரமுத்து
எழுதியுள்ளார்:
-
...

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by pon.sellamuththu on Sun Mar 02, 2014 12:27 pm

.  .  .  .
தங்கள் கருத்துக்களை பதிவு செய்த ஈகரை நட்புகள் திரு.இராகவேந்தர்,
திரு அய்யாசாமி ராம் - ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி.

avatar
pon.sellamuththu
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by pon.sellamuththu on Sun Mar 02, 2014 12:39 pm

.  .  .  .
ஐயம் - 2

படம்:- அமுதவல்லி
பாடல்:- கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று

படம்;- ஆண்டவன் கட்டளை
பாடல்:- கண்ணிரண்டும் மின்ன மின்ன

படம்:- யாருக்கும் வெட்கமில்லை
பாடல்:- கண்ணிரண்டும் செய்த பாவம்

படம்:- மாடப் புறா
பாடல்:- கண்ணிரண்டும் தேவையில்லை

(ஐயம் தொடரும் ) அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து
avatar
pon.sellamuththu
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by pon.sellamuththu on Sun Mar 02, 2014 1:44 pm

.  .  .  .
ஐயம் - 3

ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் "பொம்பளைய மதிக்க வேணும்" என்ற பாடலின் இடையில்  "புள்ளைய வளப்பதிலே தூக்கம் பசியை இழந்துபுட்டா" என்ற வரியை கவனிப்போம். தன் குழந்தையை வளர்ப்பதில் அளவு மிகுந்த அக்கரையுள்ள தாய் தூக்கத்தை இழந்தாள். அதாவது தூக்கத்தை இழந்து ( தூக்கமே இல்லாமல் விழித்திருந்து ) தன் குழந்தையை வளர்த்தாள். பசியை இழந்தாள் என்றால் உணவு உட்கொண்டதாகவே பொருள் வருகிறது. "புள்ளைய வளப்பதிலே தூக்கம் உணவை இழந்துபுட்டா" என்று இருப்பதே பொருத்தம் என எண்ணுகின்றோம்.

( ஐயம் தொடரும் )அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து
avatar
pon.sellamuththu
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by சின்னக் கண்ணன் on Sun Mar 02, 2014 3:18 pm

கண்களிரண்டும், கண்ணிரண்டும் என்று வருவதில் தவறில்லை என நினைக்கிறேன்..கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது..

ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 410
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by ayyasamy ram on Mon Mar 03, 2014 4:36 pm

இல்லறத்தில் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில்
ஒவ்வொரு பெண்ணும் தன் தேவைகளனைத்தையும்
தியாகம் செய்கிறாள்.

குடும்பத்தின் பிற அங்கத்தினர்கள் அனைவரும்
உணவருந்திய பின்னர் உணவில் மிச்சமிருந்தாலேயே
தான் உணவருந்துகிறாள்.

அவர்களின் நலனைப் பேணுவதில் தன் தூக்கத்தையும்
இழக்கிறாள்.
-
தூக்கம் பசியை இழந்துபுட்டா ...ருசித்து உண்ணவில்லை
என பொருள் கொள்ளலாம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by T.N.Balasubramanian on Mon Mar 03, 2014 9:14 pm

@pon.sellamuththu wrote:. . . .
உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம்.
சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள்.

ஐயம் - 1

படம்:- வா கண்ணா வா
பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி

இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா?

( ஐயம் தொடரும் )  அன்புத் தமிழ் நெஞ்சம்  .  . பொன்.செல்லமுத்து

கண்ணிரெண்டில் மையெழுதி .............
ஒரு கண்ணில் மட்டும் மைஎழுதாதே
இரு கண்கள் உள்ளன , இரு கண்ணிலும் மையெழுது , ஒரு கண்ணில் மை எழுதி அதன் அழகில் மயங்கி மறு கண்ணை மறந்து விடாதே...........இப்படிதான் நான் அர்த்தம் கொள்கிறேன்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by T.N.Balasubramanian on Mon Mar 03, 2014 9:49 pm

@சின்னக் கண்ணன் wrote:கண்களிரண்டும், கண்ணிரண்டும் என்று வருவதில் தவறில்லை என நினைக்கிறேன்..கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது..

ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..

ரோஜா பூக்கள் சொல்லுகிறதே. ( நீ அழகி என்று --------)
மல்லிகைபூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஜாதிப்பூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஒவ்வொரு பூக்களும் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
நிரடுகின்றமாதிரி தெரியவில்லையே.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by T.N.Balasubramanian on Mon Mar 03, 2014 9:54 pm

@pon.sellamuththu wrote:.  .  .  .
ஐயம் - 3

ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் "பொம்பளைய மதிக்க வேணும்" என்ற பாடலின் இடையில்  "புள்ளைய வளப்பதிலே தூக்கம் பசியை இழந்துபுட்டா" என்ற வரியை கவனிப்போம். தன் குழந்தையை வளர்ப்பதில் அளவு மிகுந்த அக்கரையுள்ள தாய் தூக்கத்தை இழந்தாள். அதாவது தூக்கத்தை இழந்து ( தூக்கமே இல்லாமல் விழித்திருந்து ) தன் குழந்தையை வளர்த்தாள். பசியை இழந்தாள் என்றால் உணவு உட்கொண்டதாகவே பொருள் வருகிறது. "புள்ளைய வளப்பதிலே தூக்கம் உணவை இழந்துபுட்டா" என்று இருப்பதே பொருத்தம் என எண்ணுகின்றோம்.

( ஐயம் தொடரும் )அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து

பசியை இழந்தாள்-------பசி என்ற உணர்வை மறந்தாள்/ இழந்தாள் . என்றே கொள்ளவேண்டும்

உங்களுக்கு தெரியாததா?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by T.N.Balasubramanian on Mon Mar 03, 2014 10:05 pm

கண்கள் இரெண்டாக இருந்தாலும் காணும் காட்சி ஒன்றுதான்.
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
அன்பு தமிழ் நெஞ்சம் --பொன்.செல்லமுத்து ----இருவர் அல்ல ----ஒருவர்தான் அது போல்தான் கண்கள் இரெண்டும் ---ஒன்றுதான்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by balakarthik on Tue Mar 04, 2014 11:42 am

@T.N.Balasubramanian wrote:கண்கள் இரெண்டாக இருந்தாலும் காணும் காட்சி ஒன்றுதான்.
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
அன்பு தமிழ் நெஞ்சம் --பொன்.செல்லமுத்து ----இருவர் அல்ல ----ஒருவர்தான் அது போல்தான் கண்கள் இரெண்டும் ---ஒன்றுதான்.
ரமணியன்

அப்போ சுப்ரமணியபுரம் படத்தில் வரும் பாடல் கண்களிரண்டால் பாட்டு பிழையோ

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by venugobal on Tue Mar 04, 2014 2:33 pm

கண்ணிரண்டால் என்று எழுதுவதில் தவறில்லை. மரபுவழியாக உடல் உறுப்புக்களுக்கு இந்த விலக்கு உண்டு. 'கண்ணு தெரியுதா?' 'காது கேட்குதா?' 'கால் வலிக்குதா?' 'கைக்கு எட்டுமா?' என்றுதான் சொல்வார்கள்; அப்படித்தான் எழுதவேண்டும். இந்த நுட்பம் அறியாமல் சிலர் எழுதப்போக, மரபுவழக்கே சரிதானா என்ற ஐயம் வந்துவிட்டது.
avatar
venugobal
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by சின்னக் கண்ணன் on Tue Mar 04, 2014 2:52 pm

ரமணி ஐயா..ஒவ்வொரு என்றால் சிங்குலர் தானே..ஒவ்வொரு பூவுமே என்று தானே வரவேண்டும்..

@T.N.Balasubramanian wrote:
@சின்னக் கண்ணன் wrote:கண்களிரண்டும், கண்ணிரண்டும் என்று வருவதில் தவறில்லை என நினைக்கிறேன்..கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது..

ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..

ரோஜா பூக்கள் சொல்லுகிறதே. ( நீ அழகி என்று --------)
மல்லிகைபூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஜாதிப்பூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஒவ்வொரு பூக்களும் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
நிரடுகின்றமாதிரி தெரியவில்லையே.
ரமணியன்
avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 410
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Mar 04, 2014 2:54 pm

@venugobal wrote:கண்ணிரண்டால் என்று எழுதுவதில் தவறில்லை. மரபுவழியாக உடல் உறுப்புக்களுக்கு இந்த விலக்கு உண்டு. 'கண்ணு தெரியுதா?' 'காது கேட்குதா?' 'கால் வலிக்குதா?' 'கைக்கு எட்டுமா?' என்றுதான் சொல்வார்கள்; அப்படித்தான் எழுதவேண்டும். இந்த நுட்பம் அறியாமல் சிலர் எழுதப்போக, மரபுவழக்கே சரிதானா என்ற ஐயம் வந்துவிட்டது.

 மகிழ்ச்சி avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum