ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்!

View previous topic View next topic Go down

தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்!

Post by DERAR BABU on Tue Feb 25, 2014 4:25 pm

இந்த Facebook-ல பொண்ணுங்க ஒரு Good Morning சொன்னாக்கூட 100, 200-ன்னு LIKE-ம் COMMENT-ம் விழுது. ஆனா, பசங்க என்னதான் Status போட்டாலும் 5, 10 Like-க்கு மேல தாண்டமாட்டேங்குது அப்படின்னு ஒரு பெருங்கூட்டம் புலம்பிகிட்டு இருக்கு.

இதனால வெறுத்துப்போன FB User ஒருத்தர் தன்னோட Account-ஐ Deactivate செய்துடலாம்னு முடிவெடுக்கிறார். இதைப்பத்தி Facebook Owner Mark-ம், FB User-ம் பேசிகிட்டா எப்படி இருக்கும்?

'தேவர் மகன்' படத்தில வர்ற Famous Dialouge-ஐ Use பண்ணி ஒரு Sentimental கற்பனை CHAT.

Mark: தம்பி!!! நாந்தேன்...

FB User: சொல்லுங்க Mark ஐயா..

Mark: Facebook-ல ரெகுலரா Status போடறீகளா தம்பி?

FB User: ஆமாங்கய்யா...

Mark: Facebook-ல நல்ல கருத்து யாரு போட்டாலும் Likes நெறைய விழும்னு ஆரம்பத்துல நெனச்சிட்டு இருந்தீகளே... இப்போ இந்த Facebook-கோட நெலமை புரிஞ்சுதா?

FB User: நல்லாவே புரியுதுங்கய்யா... நான் செஞ்ச தப்பும் புரியுது... அதனால இந்த Facebook-அ விட்டே போயிரலாம்னு இருக்கேன்.

Mark: (அதிர்ந்து) Facebook... Facebook-அ விட்டு போறீகளா..? ஹ... இங்க இருக்கவங்கள கவர்ற மாதிரி Status போட்டு Likes வாங்க வழி தேடாம... Facebook-அ விட்டு போறேன்னு சொல்லுறது கோழைத்தனம் இல்லை?

FB User: (உடனே) அதுக்காக....

Mark: அதுக்காக???

FB User: அதுக்காக... பொண்ணுங்க பேர்ல ப்ரொபைல் இருந்தா, அது Fake Idயா இருந்தாக்கூட, நெறய Likes-ம் Comments-ம் போட்டு ஜொள்ளுவிடுற ஆளுங்க நெறைய இருக்குற இந்த Facebookல, இன்னும் Status போடணும்னு நெனைச்சுகிட்டு இருக்கறது முட்டாள்தனம்.

Mark: இந்த கூட்டத்துல நானும் இருக்கேன்றத நீ மறந்துறாதீகப்பூ...

FB User: ஆனா ஐயா... அதை நெனச்சு பெருமைப்பட முடியலைங்கய்யா. பல ஜொள்ளருங்க இருக்கற இந்த Facebookல நான் Status போட்டு என் நேரத்தையும், அறிவையும் வீணாக்க விரும்பலைங்க ஐயா...

Mark: நெறைய ஜொள்ளரருங்க Facebookல இருக்காங்க... ஒத்துக்கறேன்... பல Websites Use பண்ணிப்பார்த்தும், பொண்ணுங்கள Contact பண்ண வழி தெரியாம பலபேர் Netல பல வருஷமா சுத்திட்டு இருந்திருக்காங்க. நா Facebook ஆரம்பிச்சதிலேயிருந்து அதை அதிகமா Use பண்றது உங்க நாட்டு பயகதேன். திடீர்னு அவன எல்லாத்தையும் விட்டுட்டு நல்ல Statusக்கு Like-ம் Comment-ம் போட வாடான்னா எப்படி வருவான்? நீ படிச்சவனாச்சே... கூட்டிகிட்டு வா... அவன அங்கே கூட்டிகிட்டு வா... ஆனா அந்தப்பய மெதுவாதான்பா வருவான்... மெதுவாதான் வருவான்.

FB User: மெதுவான்னா எம்புட்டு மெதுவா ஐயா? அதுக்குள்ள எனக்கு வயசாகி, நான் கடுப்பாகி Account-அ Deactivate செய்துருவேன் போல இருக்கே!

Mark: போ... Deactivate செஞ்சுட்டுப்போ... நான் தடுக்க முடியுமா? எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் Deactivate செய்ய வேண்டியதுதேன். Facebook-ல் Active-ஆ இருக்கறது முக்கியம் தான். இல்லைன்னு சொல்லல. ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள Status நெறைய போட்டுட்டு Deactivate செஞ்சுட்டு போனா தான் அந்த Facebook Account-க்கே பெருமை. Status போட்டவுடனே எல்லாரும் படிக்கணும்னு நெனைக்க முடியுமோ... இன்னைக்கு நீ status போடறே. நாளைக்கு உன் பையன் படிப்பான்... அதுக்கப்புறம் அவன் பையன் படிப்பான்... அதெல்லாம் பாக்குறதுக்கு நீ இருக்க மாட்டே. ஆனா Status நீ எழுதுனது... அது இருக்கும். இதெல்லாம் என்ன பெருமையா? கடமை... ஒவ்வொரு FB User-ரோட கடமை!

FB User: ஆனா இந்த Facebookல என்னை மாதிரி ஆளுங்க எதப்பத்தி Status போட்டாலும் யாரும் படிக்கமாட்டேங்கறாங்களே. ஒரு நல்ல Status போடணும்னாக்கூட பொண்ணு பேர்ல Fake Id Create பண்ணி, அதுல எழுதவேண்டியதா இருக்குதே. அப்போதானே நம்ம மக்கள் உடனே படிக்கறாங்க. இப்படிப்பட்ட Facebookல எதபத்தி எழுதுனாலும் படிக்க மாட்டாங்கய்யா... என்ன விட்ருங்கய்யா... நான் போயிர்றேன்.

(Mark ஆவேசமாகிறார்)

Mark: இவ்ளோ நாள் Facebook use பண்ணிட்டு இப்போ இப்படிப் பேசற இல்ல...

FB User: இல்ல... அப்படி இல்லீங்கய்யா...

Mark: வேற எப்படி? வேற எப்படின்னு கேக்கறேன். யாருன்னே தெரியாத பல பொண்ணுங்களுக்கு பலதடவை Message அனுப்பியும், Friend Request கொடுத்தும் Torture பண்ணுனியே, இது வரைக்கும் ஒருதடவையாச்சும் உன்னை நான் பிளாக் பண்ணியிருக்கேனா? என்ன..? நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன், நீ உன் கடமைய செஞ்சியா? நெறைய Girlfriends கூட இங்க மணிக்கணக்குல Chat பண்ணி ஜாலியா இருக்க விட்டேனே. எனக்கு என்ன செஞ்ச நீயி!!?? ஏதாவது பண்ணு... அதுக்கப்புறம் Facebook-அ விட்டு போ... Twitterல போயி பொண்ணுங்களை Follow பண்ணு... Life-அ என்ஜாய் பண்ணு... இல்லன்னா, கூகுள் பிளஸ்சுக்கு போயி குண்டு சட்டியில கும்மியடி... என்ன இப்போ... போயேன்...

FB User: நல்ல Status-அ Facebook-லதான் எழுதணும்னு இல்லை Mark ஐயா.. வெளியிருந்தும் எழுதலாம்... நான் போறேங்க Mark.

Mark: Facebookலே இருந்து எழுதறேன்னு சொல்லுங்களேன். அந்த நம்பிக்கைதான் இங்க உள்ளவங்களுக்கு முக்கியம்... இந்தா! எங்கேய்யா Admin? எலே யார்ரா அவன்... எங்கே Admin? (Admin-ஐ கூப்பிடுகிறார்)

Admin ஓடி வந்து பணிவாக: ஐயா..

Mark: இங்கே தான் இருக்கியா... இந்த FB User status போட வேற website போறாங்களாம்... ரொம்ப நாள் இங்கே இருக்க மாட்டாங்களாம்... அவரோட Account-அ Deactivate பண்ணிரு.

Admin: ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு Deactivate பண்ணட்டுமா?

Mark: ஏண்டாப்பு... ரெண்டு வருஷம் தங்க மாட்டீங்களா...?

Admin-ஐ அனுப்பி விட்டு FB User-ஐ கிட்டே அழைக்கிறார்.

Mark: ரெண்டு வருஷம் இருக்க மாட்டீகளா? (குரல் உடைந்து) உங்கள இங்க பல நல்ல Status எழுதவச்சு பாக்கணும், நெறைய பணம் சம்பாதிக்கணும்ங்கற ஆசை எனக்கு இருக்காதா? (ஃபீல் பண்றாரு) நீங்க Net எல்லாம் சுத்தி பல Website-ல Status எழுதி, Famous ஆகி வரும்போது Facebook இல்லாம போயிட்டா என்ன பண்ணுவீகப்பு..? (கண்ணீரை ரகசியமாகத் துடைத்துக் கொள்கிறார்)

FB User: ஐயா.. Mark ஐயா.. நான்.. உங்கள விட்டுட்டு போலீங்க.. வேற Website போய் பல Status எழுதி, Popular ஆனதும்.. உங்களையும்... கூட்டிட்டு போறேங்க...

Mark: என்னையா..? இந்தக் கட்டை இங்கேயே வெந்து எரிஞ்சு சாம்பலாகி இந்த Facebookக்கு ஒரமாகுமே தவிர வெளியே வராது. இந்த மரத்தை வேரோட சாய்ச்சிடாதப்பு அம்புட்டுதான் சொல்லுவேன்... புரியுதா?

FB User: (உணர்ச்சிவசப்பட்டு) ஐயா... நான் இந்த உலகத்துக்கு நல்ல Status நிறைய எழுதுவேன்... என்ன நம்புங்க...

Mark: உங்களத்தானே நம்பணும்! இந்த உலகத்துல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு... (நாக்கு தழுதழுக்கிறது) போ...

FB User: போகட்டுமா Mark?

Mark: போ...

(FB User தடுமாறி விழப்போக, Mark பதறி Power Fluctuation வந்த UPS-ஆக வெலவெலத்து) பாத்து.. பாத்து..

FB User: ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்ல...

Mark: பாத்து போங்கப்பு...

(FB User பலத்த emoticons-சோடு போகிறார்.)

பின்னணி இசை.

(FB விட்டு போனான் மானமுள்ள ஆசாமி... ஏங்குதய்யா பாவம் Netizens-ன் சாமி...)

வெ.பூபதி

the hindu
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்!

Post by ஜாஹீதாபானு on Tue Feb 25, 2014 4:37 pm

ஹா ஹா ஹா சூப்பர்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்!

Post by krishnaamma on Tue Feb 25, 2014 5:08 pm

mmmm................. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு sorry !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum