ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அந்த பறவைகளிடம் சொல்லுங்கள் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
 sree priya

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மகா சிவனிரவு

View previous topic View next topic Go down

மகா சிவனிரவு

Post by சாமி on Sun Feb 23, 2014 3:10 pmநிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2045, கும்பம் (மாசி) மாதம் 15 ஆம் நாள் (27 பிப்ரவரி 2014), வியாழக்கிழமை இரவு மகாசிவனிரவாக கொண்டாடப்படுகிறது.

இறையனாராக, தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவனாக இருந்த தமிழ்க் கடவுள். பிட்டுக்கு மண் சுமந்து, நரியைப் பரியாக்கி, கல்யானைக்கு கரும்பு கொடுத்து பல்வேறு திருவிளையாடல்கள் நிகழ்த்திய பெம்மான். உலகத்தை ஆட்டுவிக்கும் ஆடல்வல்லான். இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட தனிப்பெருங் கடவுளான ஈசனை வணங்க மிகவும் உகந்த நாள் மகா சிவனிரவு.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பதினான்மை திதி (சதுர்த்தசி) இரவு மாத சிவனிரவாக போற்றப்படுகிறது. ஆனால் கும்பம் (மாசி) மாதத்தில் வரும் தேய்பிறை பதினான்மை திதி இரவு மகா சிவனிரவாகப் போற்றப்படுகிறது. எத்தனையோ இரவுகள் இருக்க கும்பம் (மாசி) மாதத்து அந்த ஓர் இரவு மட்டும் மிகவும் சிறப்பாகப் பேசப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

பரம்பொருள் சிவபெருமான் செய்யும் தொழில்கள் ஐந்து. அவை, படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல் மற்றும் அருளல் ஆகும். இவை ஒவ்வொன்றையும் செய்வதற்கு பரம்பொருள் சிவபெருமான் ஐந்து பணியாளர்களை அமர்த்தியுள்ளார். அவர்கள் முறையே நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன் மற்றும் சதாசிவன் ஆவர்.

படைத்தல் தொழில் செய்யும் நான்முகனுக்கு (பிரம்மா) "நான் தானே இந்த உலகைப் படைப்பவன், நான் இல்லாவிட்டால் இந்த உலகில் உயிர்கள் ஏது, இயக்கம் ஏது ஏன் இந்த உலகமே ஏது? ஆகவே காக்கும் தொழில் செய்யும் திருமாலை (விட்டுணு) விடவும், ஒடுக்கும் தொழில் செய்யும் உருத்திரனை விடவும், மறைக்கும் தொழில் செய்யும் மகேசுவரனை விடவும் அருளல் தொழில் செய்யும் சதாசிவனை விடவும் நானே உயர்ந்தவன்'' என்ற தலைக் கனம் ஏற்பட்டது.

அறிதுயிலில் ஆழ்ந்திருந்த திருமாலிடம் சென்றவர், "நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டு எனக்கு ஏவல் செய்வாயாக?'' என்றார்.

அதைக் கேட்டதும் திருமாலுக்கு அளவற்ற சீற்றம் உண்டானது. "நான் காக்கும் தொழிலைச் செய்யாவிட்டால் இந்த உலகம் என்றோ அழிந்து விட்டிருக்கும். ஆகவே, நானே உன்னை விட உயர்ந்தவன்'' என்றார்.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றியது. இறுதியில் அதுபெரும் போராக மாறியது. ஒருவரை விட ஒருவர் தாங்களே உயர்ந்தவர் என்று கூறி மிகக் கடுமையாகப் போர் புரிந்தனர். அதனால் அண்ட சராசரம் நடுங்கியது. மகா பிரளயம் உண்டானது. இந்திரன், முனிவர்கள், சித்தர்கள், யோகிகள் அனைவரும் அஞ்சினர். ஈசனிடம் சென்று உலகைக் காக்குமாறு கெஞ்சினர். ஈசனும் அதற்கு இசைந்தார்.

போர் புரிந்து கொண்டிருந்த நான்முகன், திருமாலின் அருகே மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றிற்று. இந்த ஒளியின் அடியையும், முடியையும் எவர் கண்டறிகிறாரோ அவரே பெரியவர் என்ற வானொலி (அசரீரி) ஒலித்தது. உடனே தாம் தான் பெரியவர் என மற்றவருக்கு நிரூபிக்க வேண்டிய ஆவலில் நான்முகன் அன்னப் பறவையாகி வானில் உயர்ந்தார். திருமாலோ பன்றி உரு எடுத்து பூமியைக் குடைந்தார்.

நான்முகன் மேலே மேலே சென்றார். அன்னமாகிய நான்முகனின் சிறகுகள் அழலின் வெப்பத்தால் கருகின. உருகின. உதிர்ந்தன. இருந்தும் அவரால் திருமுடியைக் காண இயலவில்லை. திருமாலோ பூமியைக் குடைந்தார். பாதாளம் வரை கடைந்தார், ஆயினும் திருவடியைக் காண இயலவில்லை. ஆணவம் ஒழிந்த திருமால், அண்ணல் சிவபெருமானின் சரண் புகுந்தார்.

மேலே செல்ல முடியாமல் திகைத்த நான்முகன், இறைவனின் திருமுடியிலிருந்து தவறி விழுந்து கொண்டிருக்கும் தாழம்பூவைக் கண்டார். தான் திருமுடியைக் கண்டதாகவும், அதை தாழம்பூ பார்த்ததாகவும் பொய் சாட்சி கூற வலியுறுத்தினார். படைப்பு தொழில் செய்யும் நான்முகனே சாதாரண மலரான தன்னிடம் கெஞ்சுகிறானே என்ற எண்ணத்தில் தாழம்பூவும் உடன்பட்டது. அதை சாட்சியாக வைத்து, தான் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்றும் பொய் சாட்சி கூறினார் நான்முகன்.

பேரொளி வெடித்துச் சிதற ஈசன் அதிலிருந்து வெளிப்பட்டார். "நான்முகனே என் திருமுடியைக் காணாமலேயே கண்டு விட்டதாகப் பொய் புகன்ற உனக்கு இனி இவ்வுலகில் திருக்கோயில்களும், வழிபாடும் இல்லாமல் போகட்டும்'' என்றார். பொய் சாட்சி கூறிய தாழம்பூவிடம், "நீதி தவறிய உன்னை இனி என் பக்தர்கள் யாரும் வழிபாட்டிற்குப் பயன்படுத்த மாட்டார்கள்'' என்றார். சீற்றம் அடங்காத சிவன் அக்னிப் பிழம்பாய்த் தகித்தார். அஞ்சிய நான்முகனும், திருமாலும் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டினர். தேவர்கள் பாடித் துதிக்க, முனிவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு முதலான நான்கு வேதங்களை ஓத, ஈசன் குளிர்ந்தார். அண்ணாமலையாய் இலிங்கமாய் அமர்ந்தார்.

இவ்வாறு ஈசன் சோதிப் பிழம்பாய்த் தோன்றி நான்முகன் திருமாலின் ஆணவம் அகற்றி மண்ணுயிர்களை மாபெரும் அழிவிலிருந்து காத்த அந்த இரவுதான் மகா சிவனிரவாகக் கொண்டாடப்படுகிறது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மகா சிவனிரவு

Post by சாமி on Mon Feb 24, 2014 7:28 am

24 / கும்பம் மாதம் (மாசி) / வாகை ஆண்டு 2045


சிவனிரவில் சிந்திக்க சிவநாம மகிமை

(செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ.ச அவர்கள் எழுதி ‘தெய்வமுரசு’ ஆன்மிக இதழில் வெளியிடப்பட்டது.)
இதோ வந்துவிட்டது! சிவராத்திரி என்கிற சிவனிரவு. இது மாதச் சிவனிரவல்ல. ஆண்டுச் சிவனிரவு; மாசிவனிரவு. இதன் சிறப்பும் உண்மைப் பொருளும் ஏற்கனவே தெய்வமுரசு இதழில் பலமுறை வெளிவந்துவிட்டது என்பதை வாசகர்கள் அறிவர். எனவே, அவற்றை மனத்தில் இருத்தி சிவனிரவில் செய்யவேண்டிய ஒன்றை இங்கே சிந்திப்போம்!

மாசிவனிரவு பெரும் பேரொடுக்கத்தை, லயத்தைக் குறித்தது. அங்கே செய்யவேண்டியது சிவநாம செபம் அன்றி வேறு ஒன்றும் கிடையாது. இதை நன்கு சிந்தித்து கற்பனைக் களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நூல் சிவநாம மகிமை. வடிவில் சிறியது; முடிவில் பெரியது. பத்தே பாடல்கள்.
இதனை அன்பர்கள் ஆர அமர ஓதி சிவனிரவை வழிபட உதவியாக பொருளுடன் அந்நூல் கீழே தரப்படுகிறது.

இந்த சிவநாம மகிமையை 16 முறை ஓதி மலர்தூவி சிவலிங்க வழிபாட்டினைச் சிவனிரவில் செய்வோர்க்கு பாடலில் சொல்லப்பட்ட எல்லா நற்பலன்களும் வழாமல் வாய்ப்பதோடு பேரா இயற்கைப் பேரின்பமும் பிறவி முடிவில் வாய்க்கும்.
(தொடரும்)


Last edited by சாமி on Mon Feb 24, 2014 7:40 am; edited 1 time in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மகா சிவனிரவு

Post by ayyasamy ram on Mon Feb 24, 2014 7:39 am

 
-
தொடருங்கள்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மகா சிவனிரவு

Post by சிவா on Mon Feb 24, 2014 3:51 pm

தொடருங்கள் திரு சாமி, படிக்கக் காத்திருக்கிறோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மகா சிவனிரவு

Post by சாமி on Tue Feb 25, 2014 11:08 pm

பாடலும் விளக்கமும்:-
வேதம் ஆகமம் வேறும் பலப்பல
ஓதி நாளும் உளந்தடு மாறன்மின்
சோதி காணிருள் போலத் தொலைந்திடும்
தீதெலாமும் சிவசிவ என்மினே. 1


(இ-ன்) வேதம் ஆகமம் என்றும் வேறுள்ள புராணம், உபநிடதம் என்று நாளும் ஓதி, ஐயோ! இவற்றின் கரை காணுவது எந்நாள் என்று உள்ளத்திலே தடுமாற்றம் கொள்ளுதல் வேண்டாம். சிவ சிவ என்று இருமுறை செபியுங்கள். அதுவே அதிசூக்கும ஐந்தெழுத்து. அதை ஓதினால் ஒளியைக் கண்ட இருள் அக்கணமே தொலைந்தோடுவது போல உமக்கு வரும் தீமையெல்லாம் ஓடிப்போகும்.

புல்ல ராயினும் போதக ராயினும்
சொல்வ ராயிற் சுருதி விதித்திடும்
நல்ல வாகும் நவையென் றகற்றியும்
செல்லல் தீரும் சிவசிவ என்மினே. 2


(இ-ன்) புன்மையே வடிவெடுத்தவரானாலும் பிறர்க்கு உபதேசம் செய்து தான் கடைப்பிடிக்காத பேதையாயினும் சிவசிவ என்று சொல்லிவிட்டால் தமிழ் வேதங்கள் கூறும் நல்லன எல்லாம் கூடும்; குற்றங்கள் என்பனவற்றை அகற்றி துன்பங்களை எல்லாம் ஓடச் செய்துவிடும்.

நாக்கி னானும் நயனங்க ளானுமிவ்
வாக்கை யானும் அருஞ்செவி யானுநம்
மூக்கி னானும் முயங்கிய தீவினை
தீர்க்க லாகும் சிவசிவ என்மினே. 3


(இ-ன்) நாக்கினால், கண்களால், இந்த உடம்பால், செவியால், மூக்கினால் இவ்வாறு பலவகையாலும் தீவினையை திளைத்துச் செய்திட அத்தீவினைப் பயன் சிவசிவ என்று செபிப்பதால் ஒழியும்.
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மகா சிவனிரவு

Post by சாமி on Wed Feb 26, 2014 7:08 am

சாந்தி ராயணம் ஆதி தவத்தி னால்
வாய்ந்த மேனி வருந்த இறந்திடாப்
போந்த பாதக மேனும் பொருக்கெனத்
தீந்து போகும் சிவசிவ என்மினே 4


(இ-ன்) சாந்திராயனம் முதலிய தவச் செயல்களால் சரீரத்தை வாட்டினாலும், அழியாது தொடரும் பாதகம் எதுவாயினும் சிவசிவ என்று செபிப்பதால் பொருக்கென்று உடனே தீர்ந்து போகும்.

வில்லி தென்ன விளங்குந் திருநுதல்
வல்லி பங்கன் மலரடி காணிய
கல்வி நல்கும் கருத்து மகிழ்வுறும்
செல்வம் நல்கும் சிவசிவ என்மினே 5


(இ-ன்) புருவம் ஒருவில் என்பது போல விளங்கும் நெற்றியை உடைய உமையம்மையின் கூறு இடப்பக்கத்தில் உள்ள சிவபெருமானின் திருவடிகளைக் கண்டவனுக்கு எப்படி எல்லாம் வந்து சேருமோ அது போல, சிவசிவ என்று செபித்தவனுக்கு மிகச் சீரிய கல்வியும் கருதியதைக் கருதியவாறே அளித்து மகிழ்ச்சியைத் தவறாது நல்கும் செல்வமும் வந்து சேரும். எனவே சிவசிவ என்று செபியுங்கள்!

தீய நாளொடு கோளின் செயிர்தபும்
நோய கன்றிடும் நூறெனக் கூறிய
ஆயுள் பல்கும் அறம்வளர்ந் தோங்குறும்
தீய தீரும் சிவசிவ என்மினே. 6


(இ-ன்) சிவசிவ என்று செபித்தால் தீமையைத் தரும் நட்சத்திரங்களோடு தீமையைத் தரும் கோள்களும் ஆகிய இவ்விரண்டும் தரும் தீங்குகள் அகலும்; பிறவி என்னும் பெருநோய் உட்பட எல்லா நோயும் அகன்று போகும்; நூறு வயது என்று கூறும் வண்ணம் ஆயுளும் பெருகும்; அறம் வளர்ந்து அதன் நற்பலன்கள் ஓங்கும். எவ்வகையில் தீங்குகள் வந்தாலும் அவை உடனே தொலைந்து போகும். எனவே சிவசிவ என்று செபியுங்கள்!
(தொடரும்)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மகா சிவனிரவு

Post by அனுராகவன் on Wed Feb 26, 2014 8:09 am

மிக அருமையான பதிவு..
avatar
அனுராகவன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 224
மதிப்பீடுகள் : 68

View user profile

Back to top Go down

Re: மகா சிவனிரவு

Post by சாமி on Wed Feb 26, 2014 5:56 pm

வருந்தி ஆற்றி வளர்த்த கதிர்த்தனை
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே
விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின்
திரிந்து காப்பன் சிவசிவ என்மினே. 7


(இ-ன்) ஒரு வறிய உழவன் மிக வருந்தி முயற்சிகள் எடுத்து வேளாண்மை செய்து பயிர் வளர்த்து அது முதிர்ந்து கதிர் விடும்போது அதனை நாடோறும் பின்தொடர்ந்து எப்படி அக்கதிர்களுக்கு ஒரு தீங்கும் வராமல் காப்பாற்றுவானோ அது போல சிவசிவ என்று ஒருவன் செபித்துவிட்டால் விரிந்த சடைமுடியில் வெண்திங்களை சூடிய சிவபெருமான் அவனைப் பின்தொடர்ந்து திரிந்து திரிந்து காப்பாற்றுவான். எனவே சிவசிவ என்று செபியுங்கள்.

முந்தையோர் சொல்மொழிந்து சிவனென
நிந்தை தானச் சிவனை நிகழ்த்திலும்
வந்த தீவினை மாற்றுவன் ஆதலால்
சிந்தை யோடு சிவசிவ என்மினே 8


(இ-ன்) முன்னால் ஓர் கொடிய சொல்லாகச் சிவன் என்ற சொல்லை (சிசினதேவன்) என்று நிந்தையாகச் சொன்னாலும் அதனால் வரும் தீவினைப் பலன்களை அடைந்து ஆற்றாது அவதியுற்றாலும் ஒருமுறை சிவசிவ என்று செபித்தால் அத்துன்பத்தை மாற்றி அருள்புரிவான். எனவே சிவசிவ என்று செபியுங்கள்.

நீச ரேனும் ஈசன் நிகழ்த்தில் வான்
ஈச ரேனும் சிவசிவ என்கிலார்
நீசரே என்று இயம்புறு நின்றுஉப
தேச நூல்கள் சிவசிவ என்மினே. 9


(இ-ன்) புலையராயினும் சிவசிவ என்று செபிப்பவர் சிவபெருமானால் தேவாதியர் ஆவர். தேவாதிபராயினும் சிவசிவ என்று செபியாதவர் புலையராவர். இவ்வாறு உபதேச நூல்கள் இயம்புகின்றன. இதனை உணர்ந்தாயினும் சிவசிவ என்று செபியுங்கள்.

எண்ணி நெஞ்சிற் சிவசிவ என்பவர்
வண்ண மென்பதம் கிட்டி வணங்கவும்
உண்ண டுங்குவன் ஒண்திறல் கூற்றுவன்
திண்ணம் ஈது சிவசிவ என்மினே. 10


(இ-ன்) யார் உண்மையான உருக்கத்தைக் கொண்டு நெஞ்சம் உருகி சிவசிவ என்று செபிக்கிறார்களோ, அவர்களைக் கிட்ட நெருங்கி – தாக்கிப் பிடிக்க அல்ல – அவர்களின் பதத்தைத் தொட்டு வணங்கக் கூட இயமன் உள்ளம் நடுங்குவன். எனவே அவர்க்கு என்றும் எமபயம் இல்லை என்பது திண்ணம். ஆகவே சிவசிவ என்று செபியுங்கள்.

-சிவசிவ-
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மகா சிவனிரவு

Post by சாமி on Fri Feb 24, 2017 12:42 pm

வணக்கம்! உறவுகளுக்கு மாசிவனிரவு வாழ்த்துக்கள்! - சாமி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: மகா சிவனிரவு

Post by T.N.Balasubramanian on Fri Feb 24, 2017 1:41 pm

அருமையான தகவல்கள் .
நன்றி சாமி அவர்களே.

ரமணியன்.


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22171
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: மகா சிவனிரவு

Post by M.Jagadeesan on Fri Feb 24, 2017 1:53 pm

சாமி அடிக்கடி வருவதில்லை .

எனக்கு " சாமி வந்தால் " ரொம்பவும் பிடிக்கும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: மகா சிவனிரவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum